R3525 – நம்முடைய “பஸ்காவின்” நினைவுகூருதல்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3525 (page 86)

நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்

OUR "PASSOVER" MEMORIAL

ஒவ்வொரு வருடமும், நம்முடைய மீட்பரின் மரணம் குறித்ததான இந்த ஆசரிப்பானது, மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. தியதியினுடைய மாற்றங்களும், தியதியானது யூதருடைய கணக்கிடுதல் முறைமையின்படியாகக் கணக்கிடப்பட வேண்டும் என்பதுமான உண்மைகளானது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாகவும், பஸ்கா நிழலின் பல்வேறு அம்சங்களையும், தேவனுடைய ஆட்டுக்குட்டியின் மரணத்தில் அவைகளின் நிறைவேறுதலையும் – “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றாரே” என்பதையும் நம்முடைய மனங்களுக்கு நினைப்பூட்டுகின்றதாகவும் காணப்படுகின்றது. (1 கொரிந்தியர் 5:7)

எகிப்தினுடைய தேவன் (அ) அதிபதியான பார்வோனின் கீழ்க்காணப்பட்டதான இஸ்ரயேலின் கடுமையான அடிமைத்தனமானது, பாவம் மற்றும் மரணத்தினுடைய ஆளுகையின் பாரத்தின்கீழ், சர்வ சிருஷ்டியும் தவித்துக்கொண்டிருக்கும் சீர்க்கேட்டின் அடிமைத்தனத்தை நம்முடைய மனங்களுக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது; மற்றும் பார்வோன், “இவ்வுலகத்தின் தேவனான” சாத்தானுக்குப் பொருத்தமான அடையாளமாய்க் காணப்படுகின்றார். மோசேயின் தலைமையின் கீழான இஸ்ரயேல் அனைத்தினுடைய விடுதலையில், மோசேயிலும் பெரியவரான தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவின் தலைமையின்கீழ், ஆயிரவருட யுகத்தின்போது, தேவனுக்கும், அவரது பிரமாணத்திற்கும் பயபக்திகொள்ளும் அனைவருடைய விடுதலையை, நம்மால் பார்க்க முடிகின்றது. பார்வோனும், அவனுடைய சேனைகளும் வீழ்த்தப்படுதலில், சாத்தானும், அவனது நடக்கையைப் பின்பற்றினவர்களும் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவதற்கான நிழலைப் பார்க்கின்றோம். இந்த நிஜமான ஆசீர்வாதங்கள் அனைத்தும், கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள நிஜமான கடந்துபோகுதலின் பலன்களாக இருக்கின்றது.

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

உலகத்தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக நமது கர்த்தரைக் குறிப்பிடும் வேதவாக்கியமானது, இந்தப் பஸ்காவின் அம்சங்கள் அனைத்தும், ஆதாம் மரணத் தண்டனைத் தீர்ப்பிற்குள்ளாக விழுந்தபோது மாத்திரமல்லாமல், ஆதாம் சிருஷ்டிக்கப்படுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தேவனுடைய மனதிலும், திட்டத்திலும் தெளிவாய்க் காணப்பட்டுள்ளது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இப்படியாகப் பார்க்கும்போது தேவனுடைய நீதியானது பல நூற்றாண்டு காலமாக வெளிப்பட்டிருப்பினும், திவ்விய அன்பானது இயேசுவின் முதலாம் வருகைவரையிலும் “வெளிப்படுத்தப்படவில்லை” என்றாலும், ஆதிமுதற்கொண்டே தேவனுடைய இருதயத்தில் தமது சிருஷ்டிகளிடத்திலான அன்பு காணப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ்கா விடுதலையானது ஆயிரவருட ஆசீர்வாதங்களை அடையாளப் படுத்துகின்றதுபோல, பஸ்கா இரவானது, இந்தச் சுவிசேஷ யுகத்தை அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது; இந்தச் சுவிசேஷ யுகத்தின்போது – தேவனில் விசுவாசம் கொண்டிருக்கும் அனைவரும் அவர் அளிக்கும் இரட்சிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். “விசுவாச வீட்டார்” அனைவரும் சோதனைகள் மற்றும் பரீட்சைகள் எனும் கசப்பான கீரைகளுடன், சத்தியம் எனும் புளிப்பில்லாத அப்பத்தைப் புசிக்கின்றவர்களாக, விடியலுக்காய்க் காத்திருக்கின்றனர் – “முதற்பேறானவர்களின்” சபையானது, “ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தின்’ பாதுகாப்பின் கீழ் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்ட நிலையினின்று நீதிமானாக்கப்பட்ட நிலைக்குள், மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்துபோகப்படுகின்றனர். ஆ! இதற்காகவே! இதன் காரணமாகவே நாம் கர்த்தரில் தொடர்ந்து களிகூர்ந்து, நம்முடைய ஆட்டுக்குட்டியுடன், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரைகளையும் தொடர்ந்து புசிக்கின்றவர்களாய் இருக்கின்றோம்; இதன் காரணமாகவே இவையனைத்திற்குமான வருடாந்தர நினைவுகூருதலை ஆசரிக்கின்றோம்; “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” (1 கொரிந்தியர் 5:7,8)

இதையே நமது எஜமான் தம்முடைய சீஷர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கூறிக் கட்டளையிட்டார்: “… புசித்து, பானம்பண்ணும்போதெல்லாம் (என்னுடைய இரண்டாம் வருகைக்கு முன்புவரை, வருடாவருடம் நீங்கள் இதைச் செய்யும்போதெல்லாம்) என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் – நிழலான ஆட்டுக்குட்டி மற்றும் நிழலான இஸ்ரயேலினுடைய நிழலான முதற்பேறானவர்களுக்குச் சம்பவித்த நிழலான கடந்துபோகுதலுக்கான நினைவாக அல்ல.”

பல நூற்றாண்டுகள் காலமாக, ஆதிக்கால திருச்சபையினுடைய இந்த எளிமையான வழக்கத்திற்கு எதிராளியானவன், கர்த்தருடைய ஜனங்களைக் குருடாக்கி உள்ளான்; முதலாவதாக ரோம திருப்பலியும்/பூசைபலியும், நினைவுகூருதலும் ஒன்றுதான் என்று கர்த்தருடைய ஜனங்களை நம்ப வைத்துள்ளான் மற்றும் பின்னர் காலாண்டுதோறும், மாதந்தோறும், வாரந்தோறும் என்ற புராட்டஸ்டண்டினர்களின் ஆசரிப்பு விதத்தைக் கொண்டுவந்தான். இப்பொழுது நாம் [R3526 : page 86] கிருபையால் “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கின்றாரே” என்ற சத்தியத்தை அறிய வந்தபோதே எவ்வளவு நாம் இழப்பிற்குள்ளாகக் காணப்பட்டோம் என்பதை அறிந்தவர்களானோம்; அவராலேயே “முதற்பேறானவர்களாகிய” நாம் நினைவுகூருதலை ஆசரிக்கின்றோம்.

நமக்காக நமது ஆண்டவரினால் திட்டமிடப்பட்டுள்ளதான ஆசீர்வாதங்கள் விஷயத்தில் இனிமேலும் நாம் ஏமாறப்போவதில்லை. நாம் “பண்டிகையை ஆசரிப்போம்.” இந்த யுகத்தினுடைய அர்ப்பணிக்கப்பட்டுள்ள விசுவாசிகள், “முதற்பேறானவர்களாகிய சபையாக” இருப்பதுபோல, நிழலில் காணப்பட்டுள்ளபடி வீட்டாரிலுள்ள யாவருக்கும் முதற்பேறானவர்களின் (கிறிஸ்துவின்) தலைமையின் கீழ் விடுதலைக் காணப்படும். மோசேயினால் விடுவிக்கப்படுகின்றதான பிற்பிறப்புகளில், அப்போஸ்தலன் தெளிவாய்ச் சுட்டிக்காண்பிப்பதுபோன்று, இறுதியில் கீழ்ப்படிதலுள்ளவர்கள் மாத்திரமே அடங்குவார்கள். (அப்போஸ்தலர் 3:23)

அன்று இராத்திரியில்

ஒரு முக்கியமானக் காரியத்தை, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிப்பது என்பதும், கல்வாரியில் 18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நடைப்பெற்றதான (நாடகங்கள் அனைத்திலும்) மகா நாடகத்தில் இடம்பெறும் பிரதான பாத்திரங்களுடன்கூட நாம் காணப்பட்டு, அங்குக் காணப்பட்டதான செய்கைகளையும், பேசப்பட்ட வார்த்தைகளையும், பார்க்கப்பட்ட பார்வைகளையும் நாம் நினைவுக்குக் கொண்டுவருவது என்பதும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாகவும், உற்சாகமூட்டுகின்றதாகவும் இருக்கின்றது. முன்பெல்லாம் அவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க யூதர்கள் நாடினபோதிலும், “அவரது வேளை இன்னும் வராததினால்,” அவர்மேல் கைப்போட அவர்களால் கூடாமற்போயிற்று என்று காணப்பட்டப்போதிலும், இந்த ஒரு சோக நிகழ்வுக்காக அந்த [R3526 : page 87] ஒரு வருடத்தை, அந்த ஒருநாளை, அந்த ஒரு மணிவேளையை, தேவன் முன்கூட்டியே தீர்மானித்துள்ளார் என்பதிலுள்ள தெய்வச் செயலை நாம் கவனிக்கையில், அது நம்முடைய பொதுவான விசுவாசத்தையும் பெலப்படுத்துகின்றதாக இருக்கின்றது. இந்த ஒரு மாபெரும் நிகழ்விற்கான துல்லியமான வேளை எந்த நாளில் நிகழ வேண்டும் என்று கவனமாய் நிழலில் பல நூற்றாண்டுகள் காலம் கொடுக்கப்பட்டது மாத்திரமல்லாமல், நமது கர்த்தரும்கூடத் துல்லியமாகவே “என்னுடைய வேளை வந்துள்ளது” என்று குறிப்பிடுகின்றார் மற்றும் நிஜமான ஆட்டுக்குட்டியெனத் தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலை அப்பம் மற்றும் திராட்சரசம் கொண்டு நிறுவும் தருணத்திற்கு அவர் காத்திருந்து, “வேளை வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்றார். (லூக்கா 22:14,15)

பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்

நமது கர்த்தரும், அவரது அப்போஸ்தலர்களும் எப்படிக் கவனமாய் இருந்தார்களோ, அப்படியாகவே நாமும் அவரது மரணத்திற்கான நினைவுகூருதலை, பண்டிகையைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரகாரம் ஆசரிப்போமாக – ஏதோ ஒருவேளையில், காலையில், மதியத்தில் (அ) இரவில் இல்லாமல், மாறாக இராப்போஜனமாக – ஏதோ ஒருநாளில் இல்லாமல், மாறாக அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிப்போமாக; வேறு எதையோ ஒன்றை, வேறெதோ நாளில் ஆசரிப்பதற்குப் பதிலாக, ‘இதை’ அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிப்போமாக.

காலை 9 மணிமுதல் கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு அவர் “முடிந்தது” என்று சத்தமிட்டு மரித்த பிற்பகல் 3 மணிவரையிலான நாளுக்கு, இணையான இவ்வருடத்திற்குரிய நாள் ஏப்ரல் 17-ஆம் தேதி, திங்கட்கிழமையாகக் காணப்படுகின்றது. அவர் மாலை 6 மணிக்கு முன்னதாக யோசேப்பின் புதிய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார் மற்றும் (அந்நேரமுதல் ஆரம்பித்த) அடுத்தநாளானது யூதர்களால் கொண்டாடப்படும் பஸ்கா பண்டிகை வாரத்தினுடைய, முதல் நாளாகக் காணப்பட்டது மற்றும் இது இவ்வருடத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி, செவ்வாய்க் கிழமையாகக் காணப்படுகின்றது. நாம் நமது எபிரெய நண்பர்களுடன் பொதுவாய் எதையும் ஆசரிப்பதில்லை, மாறாக எந்த நாளில் நமது கர்த்தருடைய மரணம் சம்பவித்தது என்று அடையாளங்கண்டுகொள்வதன் மூலம் அதற்கு முந்தின மாலையானது, அதன் நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தருணம் என்பதை தெளிவுப்படுத்திடவே, நாம் அவர்களுடைய தியதிகளைக் குறிப்பிடுகின்றோம்.

நமது கர்த்தர் நினைவுகூருதல் இராப்போஜனத்தை நிறுவினவராக, தாம் சிலுவையில் அறையப்படுவதற்கான முந்தின மாலையில், “தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே இரவில்,” மாலை 6 மணிக்குமேல் அதை ஆசரித்திடும்படிக்கு, தம்முடைய பின்னடியார்களிடத்தில் கேட்டுக்கொண்டார். இது நாம் ஏற்கெனவே காண்பித்துள்ளதுபோல நீசான் 14-ஆம் தேதியாக இருக்கின்றது – அவர் மரித்த அதே நாளாக இருக்கின்றது; ஒரு சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய அஸ்தமனம்வரை, மாலை 6 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணி வரைக்குமாக, தங்கள் நாட்களைக் கணக்கிடும் வழக்கத்தினை தேவன் யூதர்களுக்குக் கொடுத்துள்ளார்.

ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவுதல்

இயேசுவும், அவரது சீஷர்களும் யூதர்களாய் இருந்தபடியால், அவர்கள் யூதருடைய பஸ்கா இராப்போஜனத்தை ஆசரிக்கும் கடமையில் காணப்பட்டனர் மற்றும் அவர்கள் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியை, கீரைகளுடனும், புளிப்பில்லாத அப்பங்களுடனும் மற்றும் திராட்சரசத்துடனும் ஒன்றுகூடிச் சேர்ந்துப் புசித்தனர். கிறிஸ்துவில் நிறைவேறியுள்ளதான அந்த நிழலான அம்சங்கள் மீது நமக்கு இனிக் கவனம் இருப்பதில்லை. யூதருடைய பஸ்கா இராப்போஜனத்தைப் புசித்தப்பிற்பாடு, நமது கர்த்தர் முதற்பேறானவர்களுக்கான தம்முடைய பலியின் நினைவாகவும் மற்றும் அவரோடுகூட உள்ள அவர்களது உடன்பலிக்கான நினைவாகவும் காணப்படும் புதிய நினைவுகூருதல் இராப்போஜனத்தை நிறுவினார்.

நமது கர்த்தர், தம்முடைய சீஷர்களுடைய பாதங்களைக் கழுவினதானது, பஸ்கா இராப்போஜனத்திற்குப் பின்பும், நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கு முன்னதாகவும் இடம்பெற்றதா அல்லது நினைவுகூருதல் இராப்போஜனத்திற்குப் பின்பாக இடம்பெற்றதா என்பதில் நமக்கு நன்கு தெளிவில்லை என்றாலும், அநேகமாக இரண்டாம் யூகத்தின்படியாகவே காணப்பட வேண்டும் (மத்தேயு 26:26) மற்றும் அது முதன்மை நிலைக்கான போட்டிமனப்பான்மையின் ஆவி அப்போஸ்தலர்களிடம் இன்னமும் காணப்பட்டதின் காரணமாக படிப்பினையாகவும், தாழ்மைக்கான மாதிரியாகவும் விளங்கும்படியாகவும் கொடுக்கப்பட்டது. எப்படியாக இருப்பினும் பாதம் கழுவுதலானது நினைவுகூருதலின் ஒரு பாகமல்ல மற்றும் இது கர்த்தருடைய சீஷர்கள் மத்தியில் வழக்கமாகக் காணப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாக நாம் புரிந்துகொள்வதுமில்லை; இப்படியாகச் சிந்திக்காமல், வேறுபட்டுச் சிந்திக்கிறவர்களிடத்திலும், சொல்லர்த்தமாகவே ஒருவருக்கொருவர் பாதங்களைக்கழுவிக்கொள்ளும் முறைமையைக் கைக்கொள்ளுகிறவர்களிடத்திலும் நாம் சண்டைப்பண்ணுகிறதில்லை. ஒருவருக்கொருவர் உதவியோ அல்லது ஆறுதலோ அளிக்கும் விஷயத்தில் அது எவ்வளவு கனம் குறைந்த பணிவிடையால் ஏற்படுவதாக இருப்பினும், அதைச் செய்வதிலிருந்து நமது கர்த்தருடைய பின்னடியார்கள் தவிர்த்துக்கொள்ளக்கூடாது என்பதே அதன் படிப்பினையாகக் காணப்படுகின்றது என்பது நமது புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது. இப்படியாகச் சொல்லர்த்தமாகவே பாதங்களை இப்பொழுது கழுவுவது என்பது, சௌகரியத்திற்குத் தொலைதூரமானதாகவும், ஆறுதலளிக்கும் மற்றப் பணிவிடைகளை எப்போதும் புறக்கணித்து விடுவதாகவும் காணப்படும்.

இது என்னுடைய சரீரமாயிருக்கிறது

வழக்கமான யூதருடைய பஸ்கா இராப்போஜனம் முடிவடைந்த பிற்பாடே, மீதியிருந்த புளிப்பில்லாத அப்பத்தில் சிலவற்றை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்துக் கூறினதாவது: “வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (மத்தேயு 26:26; மாற்கு 14:22; லூக்கா 22:19)

“இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்ற இந்த வார்த்தைகளானது, பல நூற்றாண்டுகள் காலமாய்க் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் விடைக்கிடைக்காத விவாதத்திற்குள்ளாய் உள்ளது; இந்த விவாதத்திற்கான அடிப்படை, பூசைபலி குறித்ததான ரோமன் கத்தோலிக்க உபதேசமாகும்; இந்தப் பூசைபலியினுடைய உபதேசமானது, பாதிரியாரின் ஆசீர்வாதத்தினால், அப்பம் இயேசுவின் உண்மையான மாம்சமாகிவிடுகின்றது என்றும், அதற்குப் பாதிரியார் போற்றினவராக, யாருக்காக பூசைபலியானது ஏறெடுக்கப்படுகின்றதோ, அவருடைய பாவங்களுக்காக அதை (புதிதான பலியென) பிட்கின்றார் என்றும் கூறுகின்றது. இந்தப் பூசைபலியினுடைய முறைமையானது, நமது கர்த்தருடைய நினைவுகூருதலை ஒத்திருக்கத்தக்கதாக, “இது என்னுடைய சரீரமாயிருக்கின்றது” என்ற வார்த்தைகளுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்படுகின்றது மற்றும் இப்படியாக அப்பம்தான் சரீரம் என்பதும், அதைப் பலிச் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்பதும் நிரூபிக்கப்படுகின்றது. ஆனால் இந்த வார்த்தைகளைக் கர்த்தர் கூறினபோது, அவர் இன்னமும் மரிக்கவில்லை என்பது நினைவில் கொள்ளப்படும்போது, அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும். ஆகையால் அவர் “இந்த அப்பம் என்னுடைய சரீரத்தை அடையாளப்படுத்துகின்றது” என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும்; ஏனெனில் வேறு ஏதேனும் அர்த்தத்தில் சொல்லியிருந்திருப்பாரானால் அது உண்மையாக இருக்க முடியாது – காரணம் அவர் அப்போது அதைச் சொல்லும்போது மாம்சத்தில்தான் காணப்பட்டார் மற்றும் அவருக்கு அதுவரையிலும் எந்த விதத்திலும் மறுரூபம் ஏற்படவில்லை.

நமது கர்த்தருடைய வார்த்தைகளை அதற்கே உரிய எளிமையிலும், தெளிவிலும் பார்க்கும்போது, அதன் பாடங்கள் எத்துணை அருமையாயிருக்கின்றது. புளிப்பில்லாத (தூய) அப்பமானது, இந்த நினைவுகூருதலின்போது – நாம் புசித்து, நித்தியமான ஜீவனை அடைவதற்கு ஏதுவாக, பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததான அப்பத்தை, நமது கர்த்தரை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அடுத்த கருத்தென்னவெனில், பரலோகத்திலிருந்து அருளப்பட்டதான இந்த “அப்பமானது,” நம்முடையதாக்கிக்கொள்ளப்படுவதற்கெனப் “பிட்கப்பட” வேண்டும். ஆகையால் நமது கர்த்தர் பரலோகத்திலிருந்து “அப்பமாக” இறங்கிவருவது மாத்திரமல்லாமல், அவர் மரணத்தில் பிட்கப்பட வேண்டியதும் – நம்முடைய பாவங்களுக்காகப் பலிச் செலுத்தப்படுவதும் அவசியமாய் உள்ளது என்று நாம் பார்க்கின்றோம் – அவர் பிட்கப்பட்டால்தான், நாம் அவரது புண்ணியத்தினை நம்முடையதாக்கிக் கொண்டு, நித்தியமான ஜீவனை அனுபவிக்கமுடியும்.

புது உடன்படிக்கைக்குரிய இரத்தம்

நமது கர்த்தருடைய அன்பான பலிக்கான இந்த நினைவுகூருதலின் ஒரு பாகமாக, “திராட்சப்பழரசம்” (fruit of the vine) அடுத்து அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது தம்முடைய இரத்தத்தை – “பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தத்தை” அடையாளப்படுத்துகின்றது என்று விவரித்தார். (மத்தேயு 26:28) இது அவசியமான ஈடுபலி விலைக்கிரயத்திற்கும், உலகத்தின் பாவங்களுக்காகக் கொடுக்கப்பட்டதான ஈடுபலி விலைக்கிரயத்திற்கும் எத்தகையதொரு நினைவுகூருதலாய் உள்ளது. பிட்கப்பட்ட அப்பமானது ஒருபகுதி பாடத்தினைக் கற்று தந்தது; “பாத்திரமானது” மீதியான பாடத்தினைக் கற்றுத்தந்தது. தேவனிடத்திற்கும், அவருடைய தயவினிடத்திற்கும் திரும்பிடுவதற்கு நமக்குப் போஷாக்கும், பலமும், உதவியும் மாத்திரம் அவசியமாயிராமல், நமக்கு விலையேறப்பெற்ற இரத்தமும் அவசியமாயுள்ளது – நீதியினுடைய ஆக்கினைத் தீர்ப்பினின்று நம்மை விடுவிக்கத்தக்கதாக நமக்கான மீட்பின் கிரயமாக நமது கர்த்தருடைய ஜீவன் அவசியமாயுள்ளது.

கர்த்தருடைய சீஷர்கள் விசுவாசத்தினால் “அப்பத்திலும்,” “பாத்திரத்திலும்” பங்குகொள்ள வேண்டும் (தங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டும்) இல்லையேல் அவர்களால் அவரோடுகூட ஒன்றாய்க் காணப்படமுடியாது. இதற்கும்மேலாக, இந்த நினைவுகூருதலுக்கு இன்னும் ஒரு கண்ணோட்டம் காணப்படுகின்றது என்று அப்போஸ்தலன் காண்பிக்கின்றார். இப்படியாகப் புசித்து, பானம்பண்ணும் நாம் – [R3526 : page 88] இப்படியாக நமது இரட்சகருடைய புண்ணியங்களில் பங்கெடுக்கும் நாம் – அவரோடுகூட அவரது “அங்கத்தினர்களென,” அவரது “சரீரமெனப்” பிட்கப்படுபவர்களாகக் கருதப்படுகின்றோம் மற்றும் அவருடைய வழிகாட்டுதலின் பேரில், அவரது ஊழியத்தில் பலியாக்கப்படும் நம்முடைய ஜீவியங்களானது, அவரது பலியின் பாகமாகக்கருதப்படுகின்றது. அப்போஸ்தலனின் வார்த்தைகளானது பின் வருமாறு: “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் (கிறிஸ்துவில்) பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17 திருவிவிலியம்)

ஆ, ஆம்! கர்த்தருடைய பாடங்கள் எத்துணை ஆழமாய் உள்ளது மற்றும் அவைகளை நாம் ஆழமாய்ப்பார்க்கையில், அதிகமான அழகை நாம் காண்கின்றோம் மற்றும் அவைகளை நாம் உணர்ந்து, மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியும்போது நம்முடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் அதிகமதிகமாய்த் திறக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இரண்டு விதத்தில் “நாம் பண்டிகையை ஆசரிக்கக்கடவோமாக”: (1) நமது மீட்பரினால் நமக்காகச் செய்யப்பட்டதான மாபெரும் வேலையையும், அவர் வாயிலாக நமக்கு அருளப்பட்டதான கிருபையின் ஐசுவரியங்களையும் உணர்ந்துகொண்டு ஆசரிப்போமாக; மற்றும் (2) நமது மீட்பரோடுகூட உடன்பலிச் செலுத்துவதற்கான – அவரது ஊழியங்களில் நம்முடைய ஜீவனைச் சகோதரருக்காக ஒப்புக்கொடுப்பதற்கும் மற்றும் இப்படியாக “கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிடுவதற்கும்” உரிய நமக்கான சிலாக்கியத்தினை உணர்ந்து ஆசரிப்போமாக. (கொலோசெயர் 1:24)

“கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை” என்று சொல்லும்போது, அது அனைவருக்கும் போதுமானதாய் நமது கர்த்தரினால் பாடுபட முடியவில்லை என்பதையோ, அவர் பட்டப்பாடுகள் அனைவருக்கும் போதுமானதாய் இல்லை என்பதையோ குறிக்காமல், மாறாக நாம் அவரது சுபாவத்திலும், அவரது மகிமையிலும் பங்கடைய வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டுள்ளதையே குறிக்கின்றதாய் இருக்கின்றது; அவரோடுகூடப் பாடுபடுவதின் மூலம் மாத்திரமே, அவரது அங்கத்தினர்களென நாம் அவரது மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் பங்கடைவதற்கு அனுமதிக்கப்பட முடியும்.

கர்த்தருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்

அனைத்து இடங்களிலுமுள்ள கர்த்தருடைய சகோதர சகோதரிகள் அனைவரும், எங்களோடுகூடக் கர்த்தரின் நினைவுகூருதலை அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கும் விஷயத்தில் இணைந்துகொள்ளும்படிக்குப் புத்திமதிக் கூறுகின்றோம். விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் அறிக்கைப்பண்ணுகிறவர்கள் கூடிக்கொள்ளுங்கள்; இப்படியில்லாத மற்றவர்களை வற்புறுத்தாதீர்கள். வாய்ப்பிற்கேற்ப நாம் இரண்டுபேராக மற்றும் மூன்று பேராக மற்றும் திரளான கூட்டங்களாகக் கூடிக்கொள்வோமாக. உங்கள் அருகாமையிலுள்ள சகோதரர்களுடன் கூடிக்கொள்ளத்தக்கதாக, தேவைப்படும் பட்சத்தில் ஒன்று (அ) இரண்டு தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். பணத்தின் மீதான கவனங்களானது, அனைத்தையும் தீர்மானம் செய்வதற்கு அனுமதித்துவிடாதீர்கள். கர்த்தரோடும், நேர்மையாய் அவரது நினைவுகூருதலை ஆசரிப்பவர்களோடும் காணப்படுகின்ற அந்த ஒருநாள் விருந்தானது, சாதாரணமான பல உணவுகளைக்காட்டிலும் நமக்கு விலையேறப் பெற்றதாகும். மனுஷன் பூமிக்குரிய அப்பத்தினால் மாத்திரமல்லாமல் விசேஷமாகப் பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததான அப்பத்தினால் பிழைக்கின்றவனாய் இருப்பான்.

ஒருவர்கூடத் துணைக்கு இல்லாமல் தனிமையாய்க் காணப்படுகிறவர்களும் கூட இந்த நினைவுகூருதலை ஆசரிப்பார்களாக. சோடா ரொட்டிகளானது/பிஸ்கோத் துகளானது, புளிப்பில்லாத அப்பங்களாகத்தான் காணப்படுகின்றது மற்றும் இதையே பயன்படுத்திக்கொள்ளலாம்; ஒருவேளை நீங்கள் ஏதேனும் எபிரெய குடும்பத்தினருக்கு அருகாமையில் வாழ்கின்றீர்களானால், அவர்களிடமிருந்து புளிப்பில்லாத அப்பத்தை (ரொட்டியை) ஒன்று (அ) இரண்டு, சென்ட் கொடுத்து, வாங்கிக்கொள்ளப்படலாம். “திராட்சப்பழரசத்தை” (fruit of the vine) பொறுத்தமட்டில், நீங்கள் ஒரு குப்பி திராட்சப் பழச்சாறை ஒவ்வொரு கோடைக்காலத்தின்போதும் சேமித்து வைத்திருக்கலாம்; ஒருவேளை இப்படியாக நீங்கள் வைத்துக்கொள்ளவில்லையெனில், நீங்கள் உலர் திராட்சைகளை வேகவைத்து, அந்த இரசத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; அது திராட்சப்பழரசமாகக் (fruit of the vine) காணப்படும்.

நினைவுகூருதலுக்கான இந்த ஆயத்தங்கள் அடையாளச் சின்னங்களினுடைய உண்மையான அர்த்தம் மறந்துபோகுமளவுக்கு, நம்முடைய நினைவுகளை ஆக்கிரமித்துக்கொள்ளத்தக்கதாய் நாம் அனுமதிக்காமல் இருப்போமாக. நினைவுகூருதலுக்கு [R3527 : page 88] முந்தின நாட்களிலும், அடுத்துவரும் நாட்களிலும், முடிந்தமட்டும் ஜெபம் செய்வதற்கும், நினைவுகூர வேண்டிய அந்த மாபெரும் நிகழ்வுகளைத் தியானிப்பதற்கும் மற்றும் நன்றியுடன்கூடிய சந்தோஷத்துடன் நம்முடைய இருதயங்களில் ஜீவ அப்பத்தினைப் புசிப்பதற்கும் இடம் கொடுப்போமாக.

நினைவுகூருதலுக்குப் பின்னர் – அடையாளமான பாத்திரம் மற்றும் அப்பத்தில் பங்கெடுத்தப் பின்னர், நமது கர்த்தர் செய்த மாதிரியின்படியே, நாமும் கூட்டத்தை நிறைவு செய்வதற்கு மீண்டுமாக பரிந்துரைக்கின்றோம். “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு புறப்பட்டுப்போனார்கள்.” (மத்தேயு 26:30) நாமும் இப்படியே செய்வோமாக. பொதுவாக நாம் சொல்லும் வாழ்த்துதல்களைத் தவிர்த்திடலாம்; கர்த்தர் கெத்செமனேக்குச் சென்றதும் – பிரதான ஆசாரியனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் – பிலாத்துவின் முன்னிலையிலும், ஏரோதின் முன்னிலையிலும், மீண்டுமாகப் பிலாத்துவின் முன்னிலையிலும் அழைத்துச் செல்லப்பட்டதும் – அவர் அடிக்கப்பட்டதும் – ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதும் – தம்முடைய சிலுவையைச் சுமந்து சென்றதும் – நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டதுமான நிகழ்வுகளின்மீது நம்முடைய நினைவுகள் கடந்துபோவதாக. இந்த நினைவுகளானது நம்மை அதிகமதிகமாய்க் கர்த்தரை மதிக்கச் செய்திடும் மற்றும் அதிகமதிகமாய்ப் பாவத்தை நாம் வெறுத்திடச் செய்திடும் மற்றும் இப்படியாக நாம் “எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும், தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்” என்று நம்மை நன்கு உணர்ந்துகொள்ளச் செய்திடும்.