R5272 – இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5272 (page 205)

இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது

ISRAEL SPARED, OR PASSED OVER

யாத்திராகமம் 12:21-31

“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” மத்தேயு 20:28

யூதருடைய பஸ்கா என்பது ஓர் ஏற்பாடு என்றும், அது கடந்த காலங்களிலுள்ள ஒரு நினைவுகூருதல் என்றும், அதில் தங்களுக்கு எவ்விதமான விசேஷித்த கவனமும் இல்லை என்றும் கிறிஸ்தவ ஜனங்கள் கூறுவதுண்டு. பஸ்காவின் அர்த்தம் பொதுவாய்ப் புரிந்துகொள்ளப்படாததே, இப்படிப் பார்க்கப்படுவதற்கான காரணமாய் இருக்கின்றது. யூதனைக் காட்டிலும் உண்மையில் கிறிஸ்தவனே பஸ்காவின்மீது மிகுந்த ஆழமான கவனம் கொண்டவனாய் இருக்கின்றான். ஆனால் ஒருவிதத்தில் முழு உலகமே, அதன்மீது கவனம் கொண்டிருக்கின்றது மற்றும் அதை நாம் நம்முடைய இந்தப் பாடத்தில் பார்ப்போம்.

எபிரெயர்களுக்குப் பண்ணப்பட்டதான விடாப்பிடியான துன்புறுத்தல்களின் நிமித்தமாக எகிப்தியர்கள் மீது தண்டனையாக வந்த பத்தாவது வாதையானது, அவர்களது முதற்பேறானவர்களுடைய மரணத்தைக்கொண்டுவந்ததாய் இருந்தது. எகிப்தினுடைய ஒவ்வொரு வீட்டிலும் மரணம் வந்தது; அவர்களது குடும்பங்களினுடைய மலராகிய முதற்பேறான புத்திரன் (அ) புத்திரி மீது மரணம் வந்ததாய் இருந்தது. அந்த இரவினுடைய பீதி குறித்து விளக்குவதைக்காட்டிலும், நன்கு கற்பனை செய்து பார்க்கப்படலாம்.

மரணமானது எப்போதும் வேதவாக்கியங்களில் மனிதனுடைய சத்துரு என்றும், பாவத்திற்கான தண்டனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாவத்தின் காரணமாக மரணத்தீர்ப்பானது நம்முடைய முதலாம் பெற்றோர்கள்மீது கடந்துவந்ததாய் இருந்தது மற்றும் அவர்கள் மூலம், முன்னோர் வழிவரும் பிரமாணங்கள் வாயிலாக, அது அவர்களது பிள்ளைகள் அனைவரின்மீது, மனுக்குலம்மீது கடந்துவந்ததாய் இருந்தது. நாம் அனைவரும் மரித்துக்கொண்டிருக்கின்றோம் மற்றும் மரணத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கான ஒரே நம்பிக்கையானது, தேவன் நாம் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றார் என்றும், “அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்” உள்ள இயேசுவினுடைய மரணத்தின் மூலமாக, அவர் தம் நீதி திருப்திப்படுத்தப்படுவதற்கு ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றுமுள்ள உண்மைகளில் அடங்கியுள்ளது என்று வேதாகமம் தெரிவிக்கின்றது. பாவம் மற்றும் மரணத்திற்கான மாபெரும் தீர்வானது சீக்கிரத்தில் மனுக்குலத்திற்காகச் செயல்படுத்தப்படும் என்றும் வேதாகமம் கூறுகின்றதாய் இருக்கின்றது. மேசியாவினுடைய ஆளுகையின்போது, மரணத்தண்டனையானது இரத்துச் செய்யப்படும்; சாபமானது மாற்றிப்போடப்படும் மற்றும் அழுகையோ (அ) சஞ்சலமோ (அ) மரித்தலோ இருக்காது.

சாபம், மரணம் மாற்றிப்போடப்படுவது என்பது மகிமையடைந்த மீட்பர் வாயிலாக ஜீவனுடைய ஆசீர்வாதம் கடந்துவருவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். அப்போது முழுமையாய் வெளிச்சமூட்டப்பட்டு, அவரது கரங்களினின்று தெய்வீகத் தயவினை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அவர் ஜீவன் அளிப்பவராக இருப்பார். மனுக்குலத்தில் விருப்பமும், கீழ்ப்படிதலுமுள்ளவர்கள் அனைவரும் தகப்பனாகிய ஆதாமினுடைய மகிமையான பூரணத்திடத்திற்கும், நித்திய ஜீவனுக்கான சிலாக்கியத்திடத்திற்கும், முழுமையாய்ச் சீர்ப்பொருந்துவதற்கான உயிர்த்தெழுதலின் பணி ஆரம்பமாகும். எகிப்தியர்கள்மீது தேவன் அந்த இரவில் வர அனுமதித்ததானது, ஆறாயிரம் வருடங்களாக மனுக்குலம் அனைத்திற்கும் எதிராக காணப்பட்டு வருகின்றதான அதே தண்டனை மாத்திரமேயாகும். தண்டனை மரணமாக மாத்திரமாய்க் காணப்படாமல், சடுதியான மரணமாய்க் காணப்பட்டது. நல் ஆரோக்கியமான நிலையிலிருந்த முதற்பேறானவர்கள் ஓய்வு எடுக்கப்போனபோது, காலைக்கு முன்னதாக அவர்கள் பிணங்களானார்கள்; அவர்கள் சாதாரணமாய் மரிப்பதுபோல் இல்லாமல், மரணத்தண்டனையானது அவர்கள்மீது சடுதியாய் வந்தது. அவர்கள் நித்திரையடைந்தனர்.

இந்த வாதையானது இஸ்ரயேலின் வீடுகளைத் தீண்டவில்லை. இவர்களது முதற்பேறானவர்கள் சர்வ வல்லமையுள்ளவரால் தப்புவிக்கப்பட்டனர், கடந்து போகப்பட்டனர், பாதுகாக்கப்பட்டனர்; ஆகையால்தான் பஸ்கா/கடந்துபோகுதல் என்ற இந்தப் பெயர் வழங்கப்பட்டது. தெய்வீகக் கட்டளையின் பேரில் இஸ்ரயேலர்கள் இந்தச் சரித்திர நிகழ்வினுடைய ஆண்டு நிறைவு நாளினைத் தொடர்ந்து ஆசரித்தனர். ஒவ்வொரு இஸ்ரயேலனும் பஸ்காவினை ஆசரிக்கும்போது, தனது முற்பிதாக்களினுடைய இந்தத் தெய்வீக விடுதலைப்பற்றின இந்தப் பதிவின் மீதான தனது நம்பிக்கையையும், தேவனிடத்திலான விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின்றவனாய் இருக்கின்றான் இப்படியில்லையெனில் அவன் வஞ்சகம் பண்ணுகிறவனாய் இருப்பான்; ஏனெனில் இதற்கு வேறெந்த அர்த்தமும் இல்லை.

பஸ்காவினுடைய உண்மையான அர்த்தம்

இஸ்ரயேல் கடந்துபோகப்பட்டதான அனுபவமானது ஓர் உருவகமாகும். நிழலில் இவைகள் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய ஆவிக்குரிய இஸ்ரயேலுடைய அனுபவங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அனைத்து ஜாதிகளிலிருந்தும், பிரிவுகளிலிருந்தும் – யூதர்கள், ரோமர்கள், பிரஞ்சு மக்கள், பிரிட்டிஷ் மக்கள் முதலானவர்களிடமிருந்தும் – சகல ஜாதிகளிலிருந்தும், கோத்திரத்தாரிடமிருந்தும், பாஷைக்காரரிடமிருந்தும் கூட்டிச்சேர்க்கப்படுகின்ற பரிசுத்தவான்களாகிய தேவ ஜனங்கள் அடங்கிய கூட்டத்தாரே இந்த ஆவிக்குரிய இஸ்ரயேலர் என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆவிக்குரிய இஸ்ரயேலின் பிரதான அங்கத்தினர்கள் மாம்சீக இஸ்ரயேலர்களிடமிருந்து வந்தனர். எனினும் எந்த ஜாதியாரும் தள்ளிவைக்கப்படுவதில்லை. இது ஒரு தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் வகுப்பாராகும்; இவர்கள் ஜாதியின் அடிப்படையிலோ அல்லது குணலட்சணத்தைத் தவிர மற்றபடி வேறெந்த முன்னுரிமைகளின் அடிப்படையிலோ தெரிந்தெடுக்கப்படுவதில்லை.

[R5273 : page 205]

ஆவிக்குரிய இஸ்ரயேலின் இந்த வகுப்பார், அந்த இரவில் கடந்துபோகப்பட்டவர்களாகிய இஸ்ரயேலின், அதாவது மாம்சீக இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அடுத்தநாள் காலையில் இஸ்ரயேல் அனைத்தும் முதற்பேறானவர்களுடைய தலைமையின்கீழ் வெளியேறினார்கள்; இந்த முதற்பேறானவர்கள் பிற்பாடு ஆசாரியக்கோத்திரத்தில் அடையாளப்படுத்தப்பட்டனர்; இந்த ஆசாரியக்கோத்திரத்தார் மகிமையடைந்த மேசியாவை, இராஜரிக பிரதான ஆசாரியனாகப் பெற்றிருக்கும் இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாரை அடையாளப்படுத்துபவர்களானார்கள். அவரும், அவரது “முதற்பேறானவர்களின் சபையும்,” அவரது உயிர்த்தெழுதலில், அதாவது முதலாவது (அ) பிரதான உயிர்த்தெழுதலில் பங்கடைவதன் மூலமாக சீக்கிரத்தில் மகிமையடைந்து, தேவனுடன் இசைவிற்குள் திரும்ப விரும்புகின்ற அனைவரையும் ஆசீர்வதிக்கின்றதான மேசியாவின் இராஜ்யத்தில், வல்லமையிலும், மகிமையிலும் நிறுத்தப்படுவார்கள். (எபிரெயர் 12:23)

கடந்த காலங்களில், வேதத்தின் மாணவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில் குறைவான வேகத்திலேயே காணப்பட்டனர். படிப்படியாக, தற்போதுள்ள சிலாக்கியங்களினுடைய வெளிச்சத்தில், தெய்வீக அன்பினுடைய, ஞானத்தினுடைய, [R5273 : page 206] வல்லமையினுடைய நீளங்களையும், அகலங்களையும், உயரங்களையும், அவர்கள் கற்பனைக்கூடப்பண்ணிப்பார்க்காத அளவுக்குத் தேவனுடைய வார்த்தைகளானது முன்வைக்கின்றது என்ற உண்மையினை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலைக்கு வருகின்றனர். தேவன் முதற்பேறானவர்களின் சபை என்று பேசும்போது, அவர் மற்றக் குமாரர்களையும் கொண்டிருக்க நோக்கம் கொண்டுள்ளார் என்றும், இவர்கள் முதலாவது குமாரர்கள் மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டுவதாக இப்பொழுது வேதத்தின் மாணவர்கள் பார்த்து வருகின்றனர். கடந்துபோகப்பட்டவர்களாகிய இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மாத்திரம் எகிப்தினுடைய அடிமைத்தனத்தினின்று தப்புவிக்கப்படாததுபோன்று, எகிப்தின் அடிமைத்தனமானது அடையாளப்படுத்துகின்றதான பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்திலிருந்து முதற்பேறானவர்களின் சபை மாத்திரமே காப்பாற்றப்படுவதில்லை. முதற்பேறானவர்கள் காப்பாற்றப்படுவது என்பது, மீதியானவர்களுடைய விடுதலையையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

இரவு மற்றும் காலைக்கும்கூட நிஜங்கள் காணப்படுகின்றன. தேவனுக்குள் இசைவிற்கு வரவிரும்பின அநேகரைப் பாவம் மற்றும் மரணம் அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்திக்கொண்டிருந்ததான ஆறாயிரம் ஆண்டுகள் காலத்தை, இரவுவேளை என்று வேதாகமம் குறிப்பிடுகின்றது. இந்த இரவுவேளையில், தேவனுடைய ஜனங்கள் அதிகமதிகமாய்ப் பார்வோன் மற்றும் எகிப்தியர்கள் அடையாளப்படுத்துகின்ற சாத்தான் மற்றும் அவனது ஊழியர்களினால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இது ஆறாயிரம் வருடங்களுள்ள நீண்ட இரவுவேளையாகும் மற்றும் இது குறித்துத் தீர்க்கத்தரிசி, “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” என்று குறிப்பிடுகின்றார். (சங்கீதம் 30:5)

காலை என்பது மாபெரும் நிஜமான ஓய்வுநாளாகிய, ஏழாம் ஆயிரவருட நாளினுடைய விடியலை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அப்போது தெய்வீக வல்லமையினால் மரணத்திலிருந்து, ஜீவனுக்குக் கடந்துபோகப்பட்டவர்களாகிய முதற்பேறானவர்களின் சபையும், மேசியாவும் இராஜ்யத்தின் மகிமையில் நிறுத்தப்படுவார்கள் மற்றும் தேவனுடன் இசைவிற்குள் வரவிரும்புகின்றவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கும் மாபெரும் பணி ஆரம்பமாகும்.

தற்போதுள்ள யுகத்திலிருந்து, புதிய யுகமானது முற்றிலும் வேறுபட்டதாய்க் காணப்படும் என்பதினால், அடையாளத்தில் புதிய யுகமானது, இரவு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதான தற்கால யுகத்தினுடைய இருளுக்கு எதிர்மாறான, காலை வேளையினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேசியாவின் இராஜ்யமாகிய காலையில், அவரே மாபெரும் இராஜாவாக ஒளியின் அதிபதியாகக் காணப்படுவார். அப்போது இருளின் அதிபதி கட்டப்பட்டிருப்பான். ஆயிரவருட காலங்களைக் கொண்டதான அந்த மகிமையான யுகத்தின்போது, தேவனுடன் இசைவிற்குள் வரவிரும்புகிறவர்கள் அனைவரும், இஸ்ரயேலர்கள் ஆகுவார்கள் மற்றும் படிப்படியாக மோசேக்கு நிஜமானவரால் சீர்ப்பொருந்தப்பட்டதான பரதீசின் பூரணத்திற்கு நேராக வழிநடத்தப்படுவார்கள். ஏதேனில் ஆதாமினால் கீழ்ப்படியாமையின் காரணமாக இழந்துபோகப்பட்டதும், கல்வாரியில் இயேசுவின் மரணத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்டதுமான அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் விருப்பமற்றவர்களும், கீழ்ப்படியாதவர்களுந்தான் தவறிப்போவார்கள்.

என் முதற்பிறப்பாகிய இஸ்ரயேல்

எந்த ஓர் ஆசீர்வாதமும், பாவம் மற்றும் மரணத்திலிருந்ததான எந்த ஒரு விடுதலையும் தேவனுடைய கிருபையினால் உண்டானதாக இருக்கின்றதாலும், நீதியினுடைய கட்டாயத்தின் பேரில் உண்டானதாக இராததினாலும், தாம் நோக்கம் கொண்டுள்ளதான ஆசீர்வாதங்களானது, ஆபிரகாமின் சந்ததி (அ) பிள்ளைகள் வாயிலாக மனுக்குலத்தை அடைய வேண்டுமென்று நீண்ட காலத்திற்கு முன்னதாகவே தேவன் தீர்மானித்திடுவதற்கு முழு உரிமையையும் கொண்டவராய் இருந்தார். இதைக் குறித்து அவர் தெளிவாய், ஆனால் மறைமுகமான விதத்தில் தெரிவித்துள்ளார். ஆபிரகாமுக்கு இரண்டு வெவ்வேறு சந்ததியினர் காணப்பட்டார்கள் என்றும், ஒன்று பரலோக சந்ததியினர், மற்றொன்று பூமிக்குரிய சந்ததியினர் என்றும் கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளார்; ஆனால் யூதர்கள் இதைக் கவனிக்கவில்லை. அவர் “உன் சந்ததி (1) வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், (2) கடற்கரை மணலைப்போலவும்” காணப்படும் என்றும் கூறினார்.

தேவன் இப்படியாக ஆபிரகாமிடம் விவரித்துக்கூறவில்லை, ஆனால் வாக்குத்தத்தத்தினுடைய இவ்வம்சத்தினை நாம் இப்பொழுது பார்க்கின்றோம். நட்சத்திரங்களானது ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததியாரை – மேசியா மற்றும் அவரது மணவாட்டி என்று அடையாளமாய் அழைக்கப்படுகின்றதான சபையை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. எண்ணமுடியாத கடற்கரை மணலானது, இறுதியில் பாவம் மற்றும் மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுபவர்களும், “முதற்பேறானவர்களின் சபையை” ஆவிக்குரிய சந்ததியாகப் பெற்றிருக்கின்றதான மேசியாவின் இராஜ்யத்தில் தெய்வீகத் தயவினிடத்திற்கும், நித்திய ஜீவனிடத்திற்கும் சீர்ப்பொருந்தப்படுபவர்களுமான ஜனங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆவிக்குரிய சந்ததியாரைத் தெரிந்தெடுக்கும் விஷயத்தில், தேவன் ஆபிரகாமினுடைய மாம்சீக சந்ததியினரை மறந்துபோகவுமில்லை, தம்முடைய தயவை விலக்கிக்கொள்ளவுமில்லை; ஏனெனில் அவர்களுக்கே முதலாம் சிலாக்கியம் அல்லது வாய்ப்புக் கிடைத்ததாய் இருந்தது மற்றும் இவர்களிடமிருந்தே இந்த ஆவிக்குரிய இஸ்ரயேலரின் ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததியின் முதலாம் அங்கத்தினர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டனர். இவர்களைக் குறித்துப் பரிசுத்த பவுல், “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” என்றார். (கலாத்தியர் 3:29) அதாவது ஆபிரகாமின் இந்த ஆவிக்குரிய சந்ததியார் வாயிலாக மனுக்குலம் அனைத்தும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் பாவம் மற்றும் மரணத்தினுடைய சாபம் நீக்கப்படும் என்று ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்டதான “வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” என்றார். (வெளிப்படுத்தல் 21:4,5; 22:3)

இன்னுமாக ஆவிக்குரிய இஸ்ரயேலர் பூமிக்குரிய சுபாவத்தினின்று, பரலோக சுபாவத்திற்கு மறுரூபமடைந்து, நிறைவடையும் போது, தேவனுடைய ஆசீர்வாதங்களானது, மீண்டுமாக ஆபிரகாமுடைய மாம்சீக சந்ததியினிடத்திற்குக் கடந்துவர ஆரம்பிக்கும் என்றும் வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இப்படியாக ஆவிக்குரிய சிலாக்கியங்கள் தொடர்புடைய விஷயத்தில், தேவனுடைய ஏற்பாடுகள் யூதர்களுக்கென்று முதலாவதாகக் காணப்பட்டது மற்றும் பூமிக்குரிய சிலாக்கியங்கள் தொடர்புடைய விஷயத்திலும், அதாவது மனிதப் பூரணத்திற்குச் சீர்ப்பொருந்தும் விஷயத்திலும் யூதர்களுக்கே தேவனுடைய ஏற்பாடுகளானது முதலாவதாகக் காணப்படும். (ரோமர் 11:25-33; அப்போஸ்தலர் 3:19-21)

முதற்பேறானவர்கள் இரத்தத்தினால் பாதுகாக்கப்பட்டனர்

இஸ்ரயேலின் முதற்பேறானவர்களிடத்தில் பாராட்டப்பட்டத் தெய்வீகக்கிருபையானது, இரத்தத்தினாலேயே ஆயிற்று என்பதைக் கவனிக்க நாம் தவறிடவேண்டாம். ஆம் பரிசுத்த பவுல் சுட்டிக்காட்டுவதுபோன்று, பழைய ஏற்பாட்டினுடைய வேதவாக்கியங்களுடைய முழுப் பாடமுமே, “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” என்பதேயாகும். தெய்வீகக் கட்டளையின் பேரில் இஸ்ரயேலர்கள் ஒரு வயதுள்ள பழுதற்ற ஆட்டுக்குட்டியினைத் தெரிந்துகொண்டு, அதை அடித்து, அதன் இரத்தத்தினைத் தங்கள் வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும், தெளித்து, உள்ளிருந்து அதன் மாம்சத்தைப் புசிப்பதன்வாயிலாக, கர்த்தரிடத்தில் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றவர்களாய்க் காணப்பட்டனர்.

பஸ்கா எப்படி நிழலாகக் காணப்படுகின்றதோ, அப்படியே ஆட்டுக்குட்டியும், இரத்தம் தெளிக்கப்படுதலும்கூட நிழலாய்க் காணப்படுகின்றது. ஆட்டுக்குட்டியானது, தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை கறைதிறையற்றவரும், மாசில்லாதவரும், பரிசுத்தரும், குற்றமற்றவருமான இயேசுவை அடையாளப்படுத்துகின்றது. அவரது மரணம் என்பது அவருடைய சொந்த பாவங்களுக்கென்று இல்லாமல், மாறாக மனுக்குலத்தினுடைய பாவத்திற்காகவேயாகும். இன்னுமாகக் கிறிஸ்து சபைக்காக மாத்திரம் மரியாமல், வேதவாக்கியங்கள் தெரிவிப்பதுபோன்று முழு உலகத்தினுடைய பாவத்திற்காகவும் மரித்தார் என்பதையும் கவனிப்பது அவசியமாயுள்ளது. சபை என்பவர்கள், உலகத்தில் ஒரு சிறு எண்ணிக்கையினரே; அதாவது முதற்பேறானவர்களின் எண்ணிக்கையினரேயாகும். பரிசுத்த யாக்கோபு சொல்வதுபோன்று நாம், தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்களாய் இருக்கின்றோம். (யாக்கோபு 1:18) சபையோ இரவில் கடந்துபோகப்படுகின்றனர் மற்றும் மற்றவர்களுக்கெல்லாம் முன்னதாக விசேஷமாய் இரட்சிக்கப்படுகின்றனர்; ஆனால் இரத்தத்தினுடைய புண்ணியத்தின் மூலமே தப்பித்துக்கொள்கிறார்களே ஒழிய மற்றப்படியல்ல. முதற்பேறானவர்களை மாத்திரம் இரத்தம் மூடுகிறதில்லை எனும் காரியமானது நிழலில் இரத்தமானது முதற்பேறானவர்களுக்கென்று மாத்திரம் தெளிக்கப்படாமல், விசுவாச வீட்டாரைக் குறிக்கின்றதான வீட்டின்மீதும் தெளிக்கப்படும் காரியத்தின்மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றது.