R3537 – உன்னதத்திலே ஓசன்னா

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3537 (page 108)

உன்னதத்திலே ஓசன்னா

HOSANNA, IN THE HIGHEST!

யோவான் 12:12-26

“கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.” மத்தேயு 21:9

பாலஸ்தீனியாவிலிருந்து மாத்திரமல்லாமல், பாபிலோனிலிருந்தும், எகிப்திலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும் மற்றும் கிரீசிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் எருசலேமில் கூடிவந்திருந்தார்கள். இந்தப் பஸ்கா பண்டிகையின் காலங்களில் சிலசமயம் எருசலேமுக்குள்ளும், எருசலேமைச் சுற்றியும் 2 மில்லியன் ஜனங்கள் கூடிவந்ததாகக் கணக்குத் தெரிவிக்கப்படுகின்றது. பஸ்கா பண்டிகையை அனுசரிப்பது தொடர்புடைய தெய்வீகக் கட்டளையின் காரணமாகவே ஜனங்கள் இப்படிக் கூடிவந்தார்கள். அநேக நாட்களைச் செலவழித்து, இவ்வளவு தூரம் கடந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள், பயபக்தியுடையவர்கள் இல்லையென்றாலும், இன்னுமாக சிலர் சுற்றுலா பயணம் வந்ததுபோல வந்தவர்களாக இருப்பினும், மதத்தின் மீது ஈர்ப்புடையவர்களாய் இருப்பார்கள் என்றும் அனுமானிப்பது நியாயமானதேயாகும். ஆனால் வியாபார நோக்கத்தில் வருபவர்களுக்கு அங்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதில்லை. காரணம் வியாபாரம் மற்றும் பணமாற்றத்தின் மூலம் பணம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்புகளானது எருசலேமில் ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

நமது கர்த்தரும், அவருடைய சீஷர்களும், பரிசுத்த நகரத்தை நோக்கிப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்த இந்தப் பிரயாணிகள் மத்தியில் காணப்பட்டனர் மற்றும் இவர்கள் பெத்தானியாவிலே தங்கினார்கள். நமது கர்த்தர் நளத தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்ட விருந்தைத் தொடர்ந்து வந்த காலை வேளையில், கழுதையைக் கொண்டுவரும்படிக்கு, அப்போஸ்தலர்களில் இருவரைக் கர்த்தர் அனுப்பினார். கழுதை வந்தவுடன், சேணமாக அதன்மேல் வஸ்திரங்கள் விரிக்கப்பட்டன; பின்னர் அதன்மேல் கர்த்தர் ஏறி, தம்முடைய சீஷர்கள் மற்றும் லாசரு கல்லறையினின்று வெளியே அழைக்கப்பட்டதற்குச் சாட்சியாளர்களாகக் காணப்பட்டவர்களும், லாசருவின் குடும்பத்தினுடைய நண்பர்களும் சூழ, ஒரு சிறிய ஊர்வலமாகப் பட்டணத்தை நோக்கிச் சென்றனர். இப்படியாகப் போய்க்கொண்டிருக்கையில், கர்த்தர் பெத்தானியாவில் இருக்கின்றார் என்று கேள்விப்பட்டதினாலும், கர்த்தர் அற்புதம் செய்கிறவர் என்றும், லாசருவை மரணத்தினின்று எழுப்பினார் என்றும் கேள்விப்பட்டபடியினால், அவரைக் காணவேண்டுமென விரும்பியதினாலும், எருசலேமிலிருந்து, பெத்தானியாவுக்கு வந்த திரளான ஜனக்கூட்டத்தினர் இந்த ஊர்வலத்தைச் சந்தித்தனர்.

குருத்தோலைகள்

நமது கர்த்தருடைய கீர்த்திப் பரவிக்கிடந்தது மற்றும் தெய்வீக வழிநடத்துதலே இந்த அனைத்து ஏற்பாடுகளுக்கும், ஊர்வலம் வந்தவர்களும், இயேசுவைக் காண பெத்தானியாவுக்கு வந்த ஜனங்களும் சந்திப்பதற்குமான காரணமாய் இருந்தது என்பது உறுதியே. ஜனங்களில் அநேகர், அப்பகுதியில் வளர்ந்திருந்த பேரீசசமரங்களிலுள்ள இறகு வடிவமும், சில சமயம் பத்தடி நீளமுள்ளதுமான குருத்தோலைகளை உடைத்தார்கள். இவைகள் அனைத்தும் களிகூருதல் மற்றும் [R3538 : page 108] கனப்படுத்துவதுக்குரிய சின்னங்களாகும் மற்றும் இந்தச் சின்னங்களானது, நமது கர்த்தரே அவ்வேளைக்கான கதாநாயகன் (Hero), அதாவது தாங்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் மகிழ்ச்சிக்கொள்ளும் கதாநாயகன் என்பதை இத்தருணத்தின்போது அடையாளப்படுத்துகின்றதாய் இருந்தது. மேலும் இந்த ஊர்வலத்தில் தேவனுக்குத் துதியும், நன்றியும் ஏறெடுக்கும் சந்தோஷ ஆரவாரம் காணப்பட்டது; ஜனங்கள் அத்தருணத்தினுடைய ஆர்வத்தில் மிதந்தனர். நமது கர்த்தர் ஏறி வந்த மிருகத்தின் முன்பாக ஜனங்கள் குருத்தோலைகளைப் பரப்பினார்கள் மற்றும் குருத்தோலை இல்லாதவர்கள், இப்படி ஆரவாரத்துடன் கழுதையின் மீது வருகிறவருக்குக் கனம் செலுத்தும்விதமாக, தங்களது மேல்வஸ்திரத்தைக் கீழே விரித்தனர்; மேலும் தங்கள் குருத்தோலைகள் மீதும், வஸ்திரங்கள் மீதும், நமது கர்த்தர் ஏறிவந்த விலங்கானது நடந்துபோன பிற்பாடு, குருத்தோலைகளையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, அவர் பின் சென்றார்கள்; இப்படியாக தேவனால் குறிப்பிடத்தக்க விதத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தவரை அனைத்து விதங்களிலும் கனப்படுத்துவதற்கு நாடினார்கள். இப்படியாகவெல்லாம் செய்வதன் மூலம், ஜனங்கள் தங்களுடைய இருதயங்களில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாக இருந்தனர்.

பதினாறு நூற்றாண்டுகளுக்கு மேலாகவும், அவர்கள் கானானுக்கு வந்தது முதற்கொண்டும், அவர்கள் மேசியாவிற்காகவும், ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்டதும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும், இவர்களுடைய சந்ததியாருக்கும் உறுதியளிக்கப்பட்டதுமான, ஆணையிட்டுக் கொடுக்கப்பட்டதுமான உடன்படிக்கையின் மகிமையான நிறைவேறுதலுக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள். நமது கர்த்தருடைய கெம்பீரமான தோற்றமானது, அவர்கள் இம்மானுயேலைக் குறித்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான கருத்துக்களுக்குப் பொருத்தமானதாய் இருந்தது மற்றும் இதற்குக் கூடுதல் சாட்சியாக, அவர் செய்ததாக அவர்கள் கேள்விப்பட்டிருந்த அற்புதகரமான அற்புதங்களும் காணப்பட்டன; அவர் பண்ணிட்ட அற்புதங்களிலேயே மிகப்பெரியதான அற்புதத்திற்கு லாசருவும், அவர் மரித்து நான்கு நாட்களுக்குப் பின்னர், கல்லறையினின்று வெளியே கொண்டுவரப்பட்டச் சம்பவத்திற்குச் சாட்சியாளர்களாய்க் காணப்பட்டவர்களும், இந்த ஜனங்களுக்குச் சாட்சியாகக் காணப்பட்டனர். அவர்களுடைய இருதயங்கள் சரியாகத்தான் இருந்தது; மனித ஞானத்தினுடைய பயங்களினாலும், சந்தேகங்களினாலும், அவர்கள் இன்னமும் சீரழிக்கப்படவில்லை; மனித ஞானமோ, ஒருவரை ரோம நுகத்தடியினின்று விடுவிக்கும் மேசியாவென நம்புவதற்கு (அ) ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக, அந்நபரிடம் பணமும், போர் வீரர்களும், செல்வாக்கும் இருக்கின்றதாவெனப் பார் என்று உலக ஞானியினிடத்தில் வலியுறுத்துவதாய் இருக்கின்றது. இப்படியாகவே இன்றும் கர்த்தருடைய ஜனங்களின் விஷயத்திலும் சில சமயம் காணப்படுகின்றது. நம்முடைய எளிமையான இருதயங்களில் நாம் அவருடைய வார்த்தைகளிலுள்ள விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களைக் காண்கிறோம் மற்றும் அவற்றை விசுவாசிக்கவும் ஆயத்தமாய்க் காணப்படுகின்றோம்; எதிராளியானவனோ மறுப்புகளையும், பயங்களையும், சந்தேகங்களையும் மற்றும் எப்படி நடக்கும் என்பதான கேள்விகளையும் கூடவே கொண்டுவருகின்றான்; விசுவாசமானது நலிவடைந்துபோய், நம்முடைய ஜீவியங்கள் மற்றும் நடத்தைகள் மீதான கட்டுப்பாட்டிற்கான அதன் வல்லமையை இழந்துவிடுகின்றது. ஆகவே தம்முடைய பின்னடியார்கள், சிறு பிள்ளைகளைப் போன்று விசுவாசமும், கீழ்ப்படிதலும் கொண்டிருக்க வேண்டும் என்றும், உலக ஞானிகள் போன்று காணப்படக்கூடாது என்றும் நமது கர்த்தர் வலியுறுத்துகின்றார். உலக ஞானமானது தேவனுக்குப் பைத்தியமாய் இருக்கின்றது என்றும், தேவனுடைய ஞானமும், தேவனுடைய திட்டமும் உலகத்திற்குப் பைத்தியமாய் இருக்கின்றது என்றும் அவருடைய வார்த்தைகளானது நமக்கு உறுதிப்படுத்துகின்றது. உலக ஞானம் மற்றும் தெய்வீக ஞானத்திற்கிடையே நமது தெரிந்துகொள்ளுதலானது காணப்படுகின்றது. தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடந்து, தெய்வீக வார்த்தைகளுடைய ஞானத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பாக்கியவான்களாக இருக்கின்றனர். தெய்வீகத் திட்டத்தினுடைய முடிவானது, இவர்களது நம்பிக்கையை முழுமையாய் மெய்பித்து, இவர்கள் கற்பனைப் பண்ணிப்பார்க்காத மேலானவைகளை இவர்களுக்கு அதிகமாய் நடப்பிக்கும்.

உன்னதத்திலே ஓசன்னா

ஓசன்னா என்ற வார்த்தையானது துதியின், நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் ஆரவாரமாகவும், அல்லேலூயா எனும் வார்த்தையினுடைய கருத்திற்கு மிக ஒத்தக் கருத்தைக்கொண்டதாகவும் காணப்படுகின்றது. அனைத்துச் சுவிசேஷபுத்தகங்களிலிருந்தும் ஜனங்கள் உரைத்திட்ட பல்வேறு ஆரவாரங்களை நாம் சேகரித்துப்பார்க்கும் போது, பின்வருமாறு காணப்படுகின்றது; அவை, “ஓசன்னா,” “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா,” “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,’ “உன்னதத்திலே ஓசன்னா,” “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரயேலின் இராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,” “கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் இராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக,” “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,” “பரலோகத்திலே சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்பவைகளாகும். நமது கர்த்தர் முழுச் சூழ்நிலையையும் புரிந்துகொண்டார்; “மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தார்.” (யோவான் 2:25) இந்த ஆரவாரங்களுக்கும், பயபக்தியான கிரியைகளுக்கும் பின்னான உண்மையின் ஆழத்தைக் கர்த்தர் அறிந்திருந்தார்; தீமையின் சக்திகளையும், வெளிச்சத்தை இருளாகவும், இருளை வெளிச்சமாகவும் காட்டுவதற்குரிய தீயச் சக்திகளின் வல்லமையையுங்கூடக் கர்த்தர் அறிந்திருந்தார்.

தாம் பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருக்கப்போகின்றார் என்றும், இன்னும் ஐந்து [R3538 : page 109] நாட்களுக்குள்ளாக, மதத் தலைவர்களினால் வழிநடத்தப்படும் மற்றொரு ஜனக்கூட்டத்தார், ” அவரைச் சிலுவையில் அறையும்! அவரைச் சிலுவையில் அறையும்!” என்று கூக்குரலிடுவார்கள் என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். தம்மைச் சுற்றி, தம்மை உடன்படிக்கையினுடைய தூதுவர் என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தும் இந்தக் கெம்பீரிப்புச் சத்தங்களானது ஓநாய்களினால் குழப்பி, அலங்கோலப்படுத்தப்படும் என்றும், இப்படிக் கெம்பீரிப்புப்பண்ணுபவர்கள், அதிகாரிகளுடைய அதிகாரத்தையும், இவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்படும் கலகக் கும்பலையும் உணர்கையில், தங்களது ஜீவனுக்கும், காரியங்களுக்கும் ஆபத்துள்ளது என்று அச்சமடைவார்கள் என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். இன்னுமாக இப்படிக் கெம்பீரிப்புப்பண்ணும் ஜனங்கள் தங்களுக்கு இருக்கும் கொஞ்சமான அறிவில், தங்களுடைய மதத் தலைவர்களுக்கு நேர்மாறாய்க் காணப்படும், தங்களுடைய கணிப்பின்படி நம்பிக்கைக்கொள்வதற்குத் துணிவு கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். மேய்ப்பன் வெட்டப்படப் போகின்றார் என்றும், ஆடுகள் பயந்து, சிதறடிக்கப்படப்போகின்றது என்றும் அவர் அறிந்திருந்தார், எனினும் அவர் எதுவும் கூறவில்லை; தெய்வீகத் திட்டம் நடந்தேறத்தக்கதாக கர்த்தர் அனுமதித்தார்; அவர் அடிக்கப்படும்படிக்குக் கொண்டுபோகப்படும் ஆடு போன்று போய்க்கொண்டிருந்தார்; அவர் உதவிக்காகவோ, தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கோ, உண்மையான நிலவரத்தை விவரிப்பதற்கோ தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். தம்முடைய ஜீவனை நாடினவர்களின் கரங்களிலிருந்து, தம்மை விடுவித்துக்கொள்ள அவரால் முடியும், ஆனால் அவர் அப்படியாகச் செய்யவில்லை; ஏனெனில் மரிப்பதற்காகவே, அதாவது பாவங்களுக்காக பலிச் செலுத்தப்படுவதற்காகவே அவர் உலகத்திற்கு வந்தார்.

கல்லுகளே கூப்பிடும்

அநேகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் (curiosity) அல்லது அநேகமாக ஒற்றர்களாகச் செயல்படுவதற்கெனப் பரிசேயர்களில் சிலர் அங்கு ஊர்வலத்தில் காணப்பட்டனர், அதாவது யூதாசுடன் கலந்து ஆலோசனைப் பண்ணிக்கொண்டிருப்பவர்களும், அவருடைய வேளை வராதது வரையிலும், தங்களுடைய வல்லமையைக்கொண்டு, தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறியாதவர்களாக, எப்பொழுது மற்றும் எப்படிக் கர்த்தரைக் கைது செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு முயன்று கொண்டிருப்பவர்களுமாகிய பரிசேயர்களில் சிலர்கூட அங்கு ஊர்வலத்தில் காணப்பட்டனர். ஜனங்கள் கூறும் வார்த்தைகளை இயேசுவினுடைய கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும், அவரை மேசியா மற்றும் இராஜாவென ஜனங்கள் பிரகடனம் பண்ணுவதற்கு அவர் அனுமதிப்பது என்பது, இயேசுவுக்குத் தகுதியான காரியமல்ல என்று யோசனைக் கூறும்படிக்கும், இந்தப் பரிசேயர்கள் சீஷர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்கள். ஏமாற்றுக்காரர்கள் கொண்டிருக்கும் வழக்கத்தின்படி, இயேசு தம்மை மேசியாவென அறிவிப்பதற்கு, தம்முன் தாரை ஊதிக்கொண்டு செல்லவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். மூன்று வருடங்களாக இயேசு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டும், தம்முடைய சீஷர்களைக் கூட்டிச் சேர்த்தும், அற்புதங்களை நிகழ்த்தியும் கொண்டிருந்தார், ஆனால் தாம்தான் மேசியாவென்று அவர் எதுவும் சொல்லவில்லை. தம்முடைய சீஷர்கள் யோசித்துக்கொள்வதற்கும், பொது ஜனங்கள் யோசித்துக் கொள்வதற்கும் கர்த்தர் அனுமதித்திருந்தார்.

சிலர் அவரை ஒரு தீர்க்கத்தரிசி என்றார்கள்; வேறு சிலர் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துள்ள தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றார்கள்; வேறு சிலர் அவரை எலியா என்றார்கள்; ஆனால் இப்பாடத்தின் சம்பவம் நிகழ்வதற்குச் சில மாதங்கள் முன்னர், தம்மைச் சீஷர்கள் யார் என்று எண்ணுவதாக இயேசு சீஷர்களிடம் கேட்க, அதற்குச் சீமோன் பேதுரு தெய்வீக ஏவுதலின் (அ) வழிக்காட்டுதலின் கீழ், இயேசுவை மேசியாவென்று அறிவித்த சம்பவம் தவிர மற்றபடி இயேசு எதுவும் கூறவில்லை. அதுமுதல் தாம் மேசியாவாக இருப்பினும், தாம் பாடுபட வேண்டுமென்று இயேசு, சீஷர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார் மற்றும் அதைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. சீஷர்களைப் பொறுத்தமட்டில் அவரது மரணம் சம்பவிப்பது அருகாமையில் இருப்பதைக் காட்டிலும், அவர் உயர்த்தப்படும் காரியமே அருகாமையில் இருப்பதாகத் தோன்றியது. ஜனங்களில் சிலர் அவரது மகத்துவம், வல்லமை குறித்த அறிவிற்கு விழித்தெழுந்து கொண்டிருந்தார்கள் மற்றும் மற்றவர்களோ மேசியா உண்மையில் வந்துள்ளதாக அப்போதுதான் கண்டுபிடித்தவர்களாய்க் காணப்பட்டார்கள், ஆகையால் தங்களது எஜமான் சிலுவையில் அறையப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று சீஷர்கள் எண்ணினார்கள். இயேசு தம்முடைய மரணம் குறித்துப் பேசும் வார்த்தைகளை, அவருடைய மறைபொருள்களில் ஒன்று என்றே சீஷர்கள் கருதினார்கள்.

ஆனால் இயேசு ஜனக்கூட்டத்தாரை அமைதிப்படுத்தும்படிக்கு உத்தரவிடப் போவதில்லை. மாறாக ஜனங்களுடைய கெம்பீரிப்புகளானது, சகரியாவினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக உரைக்கப்பட்டத் தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலாக இருக்கின்றது என்று கர்த்தர் விளக்கம் கொடுத்தார்; “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.” (சகரியா 9:9) இன்னும் காரியத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், தம்மைக் குறித்தே தீர்க்கத்தரிசி குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சீஷர்களுக்கு மெய்ப்பித்துக் காண்பிப்பதற்கும் என்று, ஒருவேளை ஜனங்கள் இப்படியாகக் கெம்பீரிக்கவில்லை என்றால், கல்லுகளே கூப்பிட்டிருக்கும், ஏனெனில் இப்படியாகவே கெம்பீரிக்கப்படும் என்று தேவன் தீர்க்கத்தரிசனம் எழுதி வைத்துள்ளார் மற்றும் தெய்வீக வார்த்தைகளில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோவதில்லை எனக் கர்த்தர் கூறினார். கொஞ்சம் நேரம் கழிந்து, நமது கர்த்தரும், அவருடைய பின்னடியார்களும் ஆலயத்தை அடைந்தவுடன், “ஓசன்னா” எனும் கெம்பீரிப்புகளானது இன்னும் உற்சாகமடைந்தது; இங்கு “குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” என்ற வேதவாக்கியத்திற்கு இசைவாகப் பிள்ளைகளும்கூட சேர்ந்து கெம்பீரித்தார்கள். (மத்தேயு 21:16; சங்கீதம் 8:2)

அவர்களது சந்திப்பின் / விசாரிப்பின் நாள்

இந்தக் காட்சி எவ்வளவாய் வழக்கத்திற்கு மாறானதாய்க் காணப்படுகின்றது! பல நூற்றாண்டுகளாக மேசியாவிற்காகக் காத்திருப்பவர்களும், அவருடைய விசேஷித்த ஜனங்கள் ஆகுவதற்கும், அவருடைய இராஜ்யத்தின் வேலையிலும் சகல ஜனங்களை ஆசீர்வதிக்கும் வேலையிலும் இணைவதற்கும், ஆயத்தமாகுவதற்கு நாடுபவர்களுமாகிய இஸ்ரயேல் ஜனங்களும் மற்றும் அகலமான காப்பு நாடாக்களையும், நியாயப்பிரமாணம் மற்றும் ஓய்வுநாளுக்குமான பக்திக்கும், வைராக்கியத்திற்கும் அநேக வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருந்து, மேசியாவிற்காகக் காத்திருப்பதாகக் கூறிக்கொண்டிருந்த அவர்களின் மதத் தலைவர்களும், ஆயத்தமற்ற நிலைமையிலும், மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்குரிய இருதயமற்ற நிலைமையிலும், குருடான நிலைமையிலும், இவர்களை மிகவும் நம்பிக்கொண்டிருந்த குருடான ஜனங்களை வழிநடத்துபவர்களாகக் காணப்படுகின்ற நிலைமையிலும் இருப்பது எவ்வளவு வழக்கத்திற்கு மாறானதொரு காட்சியாகக் காணப்படுகின்றது.

ஆனால் இன்னொரு பக்கத்தில் படிப்பறிவு இல்லாதவர்களும், பேதமையுள்ளவர்களும், யூதேயாவின் அனுகூலங்களுக்கு மிகவும் தொலைவில் இருப்பவர்களுமாகிய கலிலேயாவின் மனுஷர்களாகிய அப்போஸ்தலர்கள் மேசியாவிற்கான பிரதான ஆதரவாளர்களாகவும், மேசியாவை ஆதரிப்பவர்களாகவும் காணப்பட்டனர். இயேசுவைச்சுற்றிக் காணப்பட்டவர்களும், அவருக்கு ஆதரவு அளித்தவர்களும், அவரை அடையாளம் கண்டுகொண்டவர்களும், அவருக்குத் துதியைக் கெம்பீரித்தவர்களுமாக இருந்தவர்கள் சாதாரண ஜனங்களாக இருந்தனர்; இவர்களில் அநேகர் அவ்விடத்திற்குப் புதியவர்களாகவும், மதம் தொடர்புடைய விஷயங்களில் எருசலேமில் இருந்திட்ட ஜனங்களைக்காட்டிலும் குறைவான அனுகூலங்களை உடையவர்களாகவும் காணப்பட்டனர். கர்த்தருக்குத் துதியைச் சாற்றினவர்களில், சிறியவர்களும், போதிக்கப்படாதவர்களுமாகிய பிள்ளைகளும் காணப்பட்டனர். இந்தக் காட்சி எத்துணை விநோதமாகக் காணப்படுகின்றது; எனினும் இன்றும் இப்படியான விநோதமான நிலைமையே நிலவுகின்றது. நாம் மீண்டுமாக இப்பொழுது மனுஷகுமாரனுடைய நாட்களில் காணப்படுகின்றோம்; கர்த்தருக்குத் தாங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்று அறிக்கைப்பண்ணியும், “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலேயே செய்யப்படுவதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று தொடர்ந்து ஜெபம்பண்ணியும் கொண்டிருக்கின்ற நியாயசாஸ்திரிகளும், வேதசாஸ்திரிகளும், பிரதான ஆசாரியர்களும், வேதபாரகரும், கல்வியறிவுள்ள ஆசாரியர்களும், முன்னிலை வகிக்கும் சபை ஜனங்களும், மீண்டுமாக நமது கர்த்தருடைய இரண்டாம் வருகைப்பற்றின உண்மைக்கும், நாம் மனுஷ குமாரனுடைய நாட்களில் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற உண்மைக்கும், குருடர்களாகவே காணப்படுகின்றனர். (மத்தேயு 24:37-39)

வெகு சிலரே இன்று சூழ்நிலைகளை உணர்ந்துள்ளனர் மற்றும் இப்படியாக என்று உணர்ந்துள்ளவர்கள் மனுஷர் மத்தியிலும், மதச் சம்பந்தமான வட்டாரங்களிலும் உயர்வாய் மதிக்கப்பட்டவர்களாய் இராமல், விநோதமானவர்கள் கருதப்படுபவர்களும், நாசரேத் மற்றும் கலிலேயா வகுப்பாரைப் பிரதானமாய்ச் சார்ந்தவர்களுமாகக் காணப்படுகின்றனர். இவர்கள் மாத்திரமே இன்று, இம்மானுயேலுக்கு வாழ்த்துதல் கூறுபவர்களாகவும், துதிகளை கெம்பீரிப்பவர்களாகவும், அவரது பாதங்களுக்கு முன்னதாக தங்கள் துதியின் வஸ்திரத்தை விரிக்கின்றவர்களாகவும், சத்தியத்தினிமித்தமாக, உலகம், மாம்சம் மற்றும் பிசாசிற்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் அடைந்திட்ட வெற்றிகளாகிய குருத்தோலைகளை அவரது பாதங்களுக்கு முன்னதாகப் பரப்புகிறவர்களாகவும் காணப்படுகின்றனர்.

உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்

அந்தச் சிறு ஊர்வலமானது, பெத்தானியாவிலிருந்து, எருசலேமை தூரத்திலிருந்து பார்க்கமுடிகின்ற ஒலிவமலையின் உச்சியை அடைந்தது. இங்கு போதகரும், ஜனக்கூட்டத்தாரும் சற்று நின்றார்கள்; அவர்களது கவனம் பட்டணத்தின் மீதும், இராஜாவின் மீதும் திரும்பியது. அத்தருணத்தினுடைய முக்கியத்துவத்தை அவர்கள் அறியாதிருந்தார்கள்; ஒரு புதிய யுகமாற்றம் நடைபெறுகின்றது என்றும், இஸ்ரயேல் ஜனங்களுக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் பெற்றுக்கொள்வதற்கான இருதய ஆயத்த நிலையில் அவர்கள் காணப்படாத காரணத்தினால், அவர்கள் மீது பல நூற்றாண்டுகளாகத் தங்கியிருந்த, தேவன் அருளின் தயவானது/கிருபையானது, அவர்களிடமிருந்து கடந்து போகப்போகிறது என்றும் அண்டசராசரத்தின் மாபெரும் கடிகாரம் சுட்டிக்காட்டுவதை அவர்கள் உணர்ந்துகொள்ளாமல் இருந்தார்கள்.

இஸ்ரயேல் ஜனங்கள் ஆயத்தமாய்க் காணப்படவில்லையெனத் துக்கிப்பது நமக்கடுத்தக் காரியமல்ல, மாறாக அவர்கள் ஆயத்தமற்று இருந்ததினால், தேவனுடைய திட்டமானது குறுக்கிடப்படவோ (அ) தடைப்பண்ணப்படவோ இல்லை என்பதை உணர்ந்துகொள்வதே, நமக்கடுத்தக் காரியமாக இருக்கின்றது; தேவன் முன்னறிந்திருந்தபடியும் மற்றும் முன்னறிவித்திருந்தபடியும், தேவனுடைய வழிநடத்துதலின்படி, மாம்சீக இஸ்ரயேலர்கள் தெய்வீகக் கிருபையினின்று விழுந்துபோகும் காரியமானது, ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்கும், தெய்வீகக் தயவுக்குள் [R3539 : page 110] வருவதற்கும், ஆவிக்குரிய இஸ்ரயேலின் அங்கத்தினர்கள் ஆகுவதற்கும், புறஜாதியாரில் ஆயத்தமாய் இருப்பவர்கள் அனைவருக்கும் வழியைத் திறக்கிறதாகவும் இருந்தது. ஆண்டவர் இவை அனைத்தையும் கண்ணோக்கினார் மற்றும் இதுவே திட்டவட்டமான தெய்வீகத் திட்டமாக இருப்பதினால், கர்த்தர் முறுமுறுக்கவில்லை; எனினும் அவர் பட்டணத்தைப் பார்த்தபோது, இஸ்ரயேல் ஜனங்களிடமிருந்து எடுக்கப்பட்டுப்போகும் சிலாக்கியங்கள் குறித்தும் மற்றும் அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளைப் புறக்கணித்ததின் காரணமாக, ஆசீர்வாதத்திற்குப் பதிலாக, அவர்கள் மீது எவ்வாறு “மகா உபத்திரவம்,” அதாவது பயங்கரமான உபத்திரவம் வரும் என்பது குறித்ததுமான காரியங்களை அவர் சிந்தித்தபோது, கண்ணீர்விட்டார். இறுதியில் அவர் கல்வாரிக்கு நேராக பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், அவருக்காகக் கண்ணீர் விட்டவர்களிடம் அவர், “எனக்காக அழாமல், உங்களுக்காக அழுங்கள்” என்று கூறினவைகளே, இத்தருணத்தின்போது, அவருடைய மனதில் காணப்பட்டது.

மற்ற நிகழ்வுகளையும், அந்நாளில் நடந்திட்ட நிகழ்வுகளையும், தம்முடைய பின்னடியார்களின் மனதில் தொகுத்துக்கொண்டுவரும் வண்ணமாக நமது கர்த்தர், “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சத்தமாய்க் கூறினார் (மத்தேயு 23:37-39).

தீர்ப்பு எவைகளைச் சுட்டிக்காட்டுகின்றது

நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளானது ஐந்து காரியங்களை வலியுறுத்துகின்றதாய் இருக்கின்றது; அவை பின்வருமாறு:

(1) தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகுவதற்கும், அதாவது மணவாட்டி ஆகுவதற்கும், அதாவது ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி ஆகுவதற்கும் தெய்வீக ஏற்பாடுகளின் கீழ் ஆபிரகாமின் மாம்சீக சந்ததியினராக யூதர்களே முதலாம் வாய்ப்பை அடைந்தவர்களாய் இருந்தனர். ஆனால் கொஞ்சம் பேர் மாத்திரமே பாத்திரமான நிலைமையில் காணப்பட்டனர், ஏனெனில் கொஞ்சம் பேர் மாத்திரமே கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களுக்கான இருதய நிலைமையில் காணப்பட்டனர். பெரும்பாலானவர்கள் இயேசு குறிப்பிட்டதுபோலவே, தங்களுடைய உதடுகளினால் மாத்திரமே கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணுகிறவர்களாய் இருந்தனர், ஆனால் அவர்களுடைய இருதயமோ கர்த்தரிடமிருந்து தூர விலகிக் காணப்பட்டது.

(2) இஸ்ரயேல் ஜனங்கள் மீதான தயவு முடிவு பெறுவதற்குரிய காலம் வந்துள்ளது. இக்காலம் வரையிலும் தேவன் கொடுக்க சித்தமாய் இருந்த தயவுகள்/அனுகூலங்கள் அனைத்தையும், மாம்சத்தின்படியான இந்த “இஸ்ரயேலின் வீட்டார்” பெற்றுக்கொண்டார்கள்; ஆனால் இப்பொழுதும் அவர்கள் பாத்திரமற்றவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டபோதோ, அவர்கள் புறம்பாக்கப்பட்டார்கள்; அதாவது “உங்கள் வீடு, உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்பதாகும்.

(3) நிழலான பணிவிடைக்காரர் வீடானது, பாழாக்கிவிடப்பட்டபோது, இதனால் நிஜமான புத்திரர் வீடு நிறுவப்படுவதற்கான வாய்ப்பு உண்டாயிற்று. இதைக்குறித்தே அப்போஸ்தலர் “மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு (புத்திரர் வீட்டாருக்கு) மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்” என்று குறிப்பிடுகின்றார். (எபிரேயர் 3:5-6)

(4) ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் தெரிந்தெடுக்கப்படும் காலப்பகுதியில் நமது கர்த்தர் இல்லாமல் இருக்கும் காரியமானது, “சொல்லுங்காலம் வருமளவும்” மாம்சீக இஸ்ரயேலர்கள் தம்மைக் காணாதிருப்பார்கள் என்று கர்த்தர் கூறின வார்த்தைகள் மூலம் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. மேலும் “இன்னுங் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்” என்று நமது கர்த்தர் குறிப்பிட்டிருக்கின்ற பிரகாரம், ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அவரைக் காண்பார்கள்; அதாவது விசுவாசக் கண்களினால் மாத்திரமே அவரைக் காண்பார்கள். (யோவான் 14:19; லூக்கா 13:35)

(5) நமது கர்த்தருடைய வார்த்தைகளானது இன்னுமாக, அந்தக் காலங்கள் வரும்போது, மாம்சீக இஸ்ரயேலர்களின் குருட்டுத்தன்மை மாற்றப்படும் என்றும், அவர்களுடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும் என்றும், அவர்களிடத்தில் இந்தச் சுவிசேஷயுகத்தின்போது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டிருந்த இருள் மற்றும் தெளிவின்மை நீங்கப்பெற்று, தெளிவாய்ப் பார்ப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தக் கருத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணமாக, ஆவிக்குரிய இஸ்ரயேல் வகுப்பார் நிறைவடைந்து, மகிமையடையும்போது, பிற்பாடு உடனே கிருபையானது மீண்டும் மாம்சீக இஸ்ரயேலர்களிடத்திற்குக் கடந்துவரும் மற்றும் மேசியாவை அவர்கள் புறக்கணித்ததின் காரணமாகவும், அவர்களது வீடானது, கர்த்தருடைய தயவினின்று தள்ளிவிடப்பட்டதின் காரணமாகவும், அவர்கள் மீது வந்த இருளானது, கடந்துபோகும் என்றும், “இஸ்ரயேலர்கள் அனைவரும் – தங்களுடைய குருட்டுத்தன்மையிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள்” என்றும் அப்போஸ்தலர் நமக்குக் கூறுகின்றார். இதே காரியத்தை, கர்த்தர் தம்முடைய தீர்க்கத்தரிசிகள் வாயிலாகவும் கூறி, நமக்கு உறுதிப்படுத்துகின்றார்; “நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.” (சகரியா 12:10)

ஆபிரகாமினுடைய மாம்சீக சந்ததியினரைத் தேவன் நிரந்தரமாய்த் தள்ளிவிடவில்லை என்பதினால் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்; வாக்குத்தத்தத்திற்கு உரியவர்களாயிருந்த இவர்கள், பிரதான பங்கை அடைவதற்குரிய தங்களுக்கானச் சிலாக்கியங்களை இழந்துபோனபோதிலும், இவர்கள் நிச்சயமாய் அந்த வாக்குத்தத்தங்களில் பங்கடைவார்கள் என்று தேவன் முன்னறிந்திருந்தார்; இவர்கள் இழந்துபோன காரியத்தைக்குறித்து, “இஸ்ரயேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய தினம் வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். (ரோமர் 11:7) ஆகவே நாம் இஸ்ரயேலர்கள் இழந்துபோனதினிமித்தம் அவர்களுக்கு அனுதாபங்கொள்ளும் அதேவேளையில், தேவனுடைய வழிநடத்துதலினால் நம்முடைய கண்கள் காண்கிறதினாலும், இராஜாவைக்குறித்தும், அவருடைய இராஜ்யம் குறித்தும் நம்முடைய காதுகள் கேட்பதினாலும், நாம் அவருடைய ஆவிக்குரிய இஸ்ரயேலாகி உள்ளதினாலும், பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கப்போகும் ஆபிரகாமின் சந்ததியில், அவரோடுகூட நாம் காணப்படப்போவதினாலும் நாம் களிகூரவும் செய்கின்றோம்; பூமியின் குடிகள் ஆசீர்வதிக்கப்படுகையில் மாம்ச இஸ்ரயேலே, தெய்வீகத் தயவை முதலாவது பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள்.

“ஓ! கர்த்தாவே வெற்றி பிரவேசம் செய்திடுமே,
பெருமைதனையும், பேராசைதனையும் உந்தன் பாதங்கள் கீழ்
ஒப்புக்கொடுத்துவிடுகின்றோமே.
எங்கள் கண்கள் திறக்கின்றதே; உம் வார்த்தைகள் எங்களுக்குக் கேட்கின்றதே;
நாங்கள் உம் அடியார்; வழிநடத்திடுமே,
நாங்கள் பாவம், மரணம் மற்றும் கல்லறை மீதினில் ஜெயம் அடையவே.”

ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கான நிஜம்

மாம்சீக இஸ்ரயேலருடைய நிஜமாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள், இதேபோன்றதான ஒரு மாபெரும் பரீட்சையை, இந்த யுகத்தினுடைய முடிவின்போது அடைவார்கள் என்று வேத வாக்கியங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன; இன்னுமாகக் கோதுமையைச் சேகரிப்பதற்கான ஓர் அறுவடைக்காலமே, யூத யுகத்திற்கும், சுவிசேஷயுகத்திற்குமான முடிவாக இருக்கும் என்று வேதவாக்கியங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன; இன்னுமாக யூத யுகத்தினுடைய பதர் மீது வரும் அக்கினியும், சுவிசேஷ யுகத்தின் முடிவில் களைகள் மீது வரும் அக்கினியும் அடையாளப்படுத்தும் கடுமையான உபத்திரவத்தின் காலமானது, மேசியாவின் மகிமையான ஆளுகைக்குரிய பிரமாண்டமான யுகத்திற்குரிய வழியை ஆயத்தம் பண்ணுகிறதாய் இருக்குமென்றும் வேதவாக்கியங்கள் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றன. நமது கர்த்தர், தம்முடைய முதலாம் வருகையின்போது, பெருந்திரளான, பெயரளவிலான மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு இடறுதலின் கல்லாய்க் காணப்பட்டதுபோன்று, அவரது இரண்டாம் வருகையின்போதும், அவர் தம்முடைய இரண்டாம் வீட்டாராகிய ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அநேகருக்கும்கூட இடறலின் கல்லாய்க் காணப்படுவார் என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே யூத யுகத்தினுடைய முடிவிலுள்ள அறுவடையின்போது காணப்பட்டதுபோலவே, இப்பொழுதுள்ள இந்த அறுவடையின்போதும், கர்த்தருடைய ஜனங்களெனத் தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணிக்கொண்டிருக்கும் பெருந்திரளானவர்கள் ஆயத்தமற்ற நிலைமையிலும், இடறிப்போயும், இந்த யுகத்தினை நிறைவு செய்திடும் மகா உபத்திரவக் காலத்திற்குள் பிரவேசிக்கின்றவர்களாய் இருப்பார்கள் என்றே நாம் எதிர்பார்க்க வேண்டும். இந்த நிலவரங்களைக் கண்டு, நாம் அனுதாபம் கொள்கின்ற அதே வேளையில், மாம்சீக இஸ்ரயேலர்களுக்காக நமது அருமை மீட்பர் கண்ணீர் விட்டதுபோன்று, நாமும் கண்ணீர் விடுகின்ற அதே வேளையில், “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று கர்த்தர் அன்று கூறினதுபோல, “பாபிலோன் விழுந்தது” என்று இன்று கூறப்படுகின்ற அதே வேளையில், இப்படியாகத் தெய்வீகத் திட்டமானது நடைப்பெறுவதே, நீதி, ஞானம் மற்றும் அன்பின் உருவமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து, இப்படியாக நடைப்பெறுவதில் களிகூருவதற்கு நாம் கற்றுக்கொள்ளவும் வேண்டும். நாம் அதிகமதிகமாய்க் கர்த்தருடைய வார்த்தைகளை ஆழமாய்த் தியானிக்கையில், அவருடைய அன்பானது, புத்திரர் வீட்டாருக்குத் தகுதியற்றுபோன நிலையிலும், அதே வேளையில் ஆயிரவருட யுகத்தில் கீழ்த் தளத்தில் தெய்வீகத் தயவிற்குள் கடந்துவருபவர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் ஆச்சரியமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது.

கர்த்தரை அவருடைய முதலாம் வருகையின்போது ஏற்றுக்கொண்டவர்கள், அதாவது கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களாய் இருந்தவர்கள், கர்த்தரில் இடறிப்போகாதப்படிக்குக் காத்துக் கொள்ளப்பட்டதோடுகூட, இவர்களுக்குக் கர்த்தர் இடறலின் கல்லாய் இருப்பதற்குப் பதிலாக, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய மேலான மற்றும் பிரமாண்டமான காரியங்களினிடத்திற்கும், பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு ஆரம்பமான மாபெரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினிடத்திற்கும் இவர்கள் ஏறிவரத்தக்கதாக, தேவனுடைய கிருபையினால் கர்த்தர் [R3539 : page 111] இவர்களுக்குப் படிக்கல்லுமானார். ஆகவே இப்பொழுது பெருந்திரளான பெயர்க்கிறிஸ்தவர்களாகிய கிறிஸ்தவ மண்டலம், இரண்டாம் பிரசன்னத்தினுடைய காலத்தின்போது இடறிப் போய்க்கொண்டிருக்கையில், இப்பொழுது உத்தம ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாய் இருப்பவர்கள் அனைவரும் கர்த்தரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, அவருடைய களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதில் நாம் ஐயங்கொள்ள வேண்டியதில்லை; கிறிஸ்தவர்களெனத் தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்ளும் திரளானவர்கள் இடறிப் போய்க்கொண்டிருக்கையில், இந்த உத்தம இஸ்ரயேலர்களானவர்கள், இன்னும் மேலானதும், இன்னும் உயர்வானதுமான புதிய யுகத்தினிடத்திற்கு ஏறிச்செல்வதற்குரிய படிக்கல்லாகக் கர்த்தரையும், தற்கால சத்தியத்தையும் கண்டடைவார்கள்; இந்த உயர்வான மற்றும் மேம்பட்டதுமான புதிய யுகத்தினிடத்திற்கு நாம் இன்னுமொரு பெந்தெகொஸ்தே மூலமாய் உள்ளே கொண்டுவரப்படாமல், மாறாக கர்த்தரைப்போன்று நம்மை ஆவிக்குரிய ஜீவிகளாகவும், திவ்விய சுபாவத்தினுடைய பங்காளிகளாகவுமாக்கும், முதலாம் உயிர்த்தெழுதலுடைய மகிமையான மாற்றத்தின் வாயிலாக, உள்ளே நாம் கொண்டுவரப்படுகின்றவர்களாய் இருப்போம்.

இன்று இந்த ஆசீர்வாதத்திற்கும், உயர்த்தப்படுதலுக்கும் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வகுப்பார், முதலாம் வருகையின்போது காணப்பட்டிருந்த வகுப்பாரைப்போன்றே, ஞானிகள் அநேகரையும், பிரபுக்கள் அநேகரையும், கல்விமான்கள் அநேகரையும் பெற்றிருக்கவில்லை, மாறாக உத்தம இஸ்ரயேலர்களையும், சத்தியத்தை உண்மையாய் நேசிப்பவர்களையும், கர்த்தருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் தங்களது ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதற்கென இருதயத்திலாகிலும் விருப்பம் கொண்டிருப்பவர்களையும் உள்ளடக்கியுள்ளது. (இன்றுள்ள) இவர்களுக்கும்கூட, “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்” (மத்தேயு 13:16) என்ற கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகள் கடந்து வருகின்றன. (முதலாம் உயிர்த்தெழுதலில்) மறுரூபமடைவதற்கு முன்பு, தற்காலத்திலும்கூட இவர்கள் ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பார்கள்.

யூதர்கள் அடையாளங்களையும், கிரேக்கர்கள் ஞானத்தையும் நாடித்தேடினார்கள்

ஆலயத்திற்குள் பிரவேசித்ததைக்குறித்து, யோவானுடைய பதிவுகளானது அனைத்து விவரங்களையும், கொடுக்காமல், சிலவற்றைக் கொடுத்துவிட்டு, நமது கர்த்தர் ஆலயத்தில் ஒன்று (அ) இரண்டு நாட்கள் பிரசங்கித்துவந்த பிற்பாடு அநேகமாக நடந்திட்ட ஒரு சம்பவத்தை விவரிக்கின்றது. நமது கர்த்தர் பேசினவைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், கர்த்தரைக் குறித்து உணர்ந்துகொள்ளவில்லை என்பதைச் சில கிரேக்கர் உணர்ந்தவர்களாக, அவருடைய மகா பலி தொடர்புடைய தேவனுடைய திட்டத்தை அறிந்திடாத நிலையில், கர்த்தர் தங்களுடைய தேசத்திற்குத் தங்களோடு வரும்படிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்தக் கிரேக்கர்கள் இயேசுவைச் சந்திக்கும்படிக்கு, பிலிப்பு மற்றும் அந்திரேயாவினிடத்திற்குச் சென்றார்கள் ; பிலிப்பு மற்றும் அந்திரேயாவின் பெயர்கள் கிரேக்க பெயர்களாய் இருந்தபடியினால், இது இவர்கள் கிரேக்க மொழியை அறிந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இவர்கள் இருவரும் இயேசுவிடம் காரியத்தைத் தெரிவித்தார்கள்; ஆனால் இயேசுவோ இந்த நிகழ்வை, தாம் மகிமைப்படுவதற்குரிய, அதாவது தமது சீஷர்களோ, நண்பர்களோ எதிர்ப்பார்த்திட்ட விதத்தில் இல்லாமல், மாறாக தம்மால் உணர்ந்துகொள்ளப்பட்டிருந்த மேலானவிதத்தில், தாம் மகிமைப்படுவதற்குரிய வேளை வந்துள்ளது என்னும் அவ்வேளைக்கான பாடத்தை மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக மாத்திரம் பயன்படுத்தினார். தாம் சிலுவையில் அறையப்படப்போவதற்கான தம்முடைய வேளை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதையும், மரணம் வரையிலான அதாவது சிலுவையின் மரணபரியந்தமான தம்முடைய கீழ்ப்படிதல் எனும் நிபந்தனைகள் மீதே தெய்வீகத் திட்டத்திலுள்ள தம்முடைய உயர்த்தப்படுதல் சார்ந்துள்ளது என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். தாம் செய்யும்படிக்குப் பிதா கொடுத்திருக்கும் வேலையை நிறைவேற்றிடுவதற்கான வாய்ப்பிற்காக, முழுமையாய் அர்ப்பணம் பண்ணப்பட்டிருந்த அவருடைய இருதயமானது காத்துக்கொண்டு மாத்திரம் இருந்தது.

கோதுமை மணி செத்தால்…

நமது கர்த்தர் “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்” என்ற வார்த்தைகளை மறைப்பொருளாக, உவமையாகப் பதிலளித்தார். (யோவான் 12:24) இப்படியான பதிலானது, அப்போஸ்தலர்களுக்கும், யூதர்களுக்கும் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பெந்தெகொஸ்தே நாள் வருவதுவரையிலும், அதாவது புத்திரசுவிகாரத்தின் ஆவியானது சீஷர்களின் புரிந்துகொள்ளுதல்களை வெளிச்சமூட்டுவது வரையிலும், பெரும்பான்மையான நமது கர்த்தருடையப் போதனைகளானது புரிந்துகொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படவில்லை (அ) நோக்கம் கொள்ளப்படவில்லை என்று நாம் மற்ற வேதவாக்கியங்களிலிருந்து அறிந்து கொள்கின்றோம். இப்பொழுதோ இந்த வெளிச்சமூட்டுதலின் காரணமாக, நாம் நமது கர்த்தருடைய வார்த்தைகளின் ஐசுவரியமான ஆழங்களைப் புரிந்துகொள்வதற்குரிய சிலாக்கியங்களை உடையவர்களாய் இருக்கின்றோம்.
[R3540 : page 111]

ஒருவேளை இயேசு தம்முடைய ஜீவனைக் காத்துக்கொண்டாரானால், ஒருவேளை அதை அவர் பலிச்செலுத்தவில்லை என்றாலும், அவர் அந்த ஜீவனை என்றென்றும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் சபைக்கும், உலகத்திற்கும் ஜீவன் அளிப்பதற்குரிய சிலாக்கியமற்றவராய் இருந்திருப்பார். அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராக அவர் மரித்திட்ட மரணமானது, அவருடைய விசுவாசிக்கின்ற சீஷர்களுக்குச் செயல்படுத்தப்படும்போது, “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே,” சீஷர்கள் ஜீவனுக்கு ஏதுவாய் நீதிமானாக்கப்பட்டனர். இப்படியாக அவருடைய மரணமானது, அவருடைய சபையில், அவருடைய மணவாட்டியில், அவருடைய அங்கத்தினர்களிடத்தில் சிறந்த பலனைக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. இன்னுமாக மறைமுகமான பலனானது, இன்னும் பெரியதாய்க் காணப்படும்; ஏனெனில் அவரது இரத்தத்தைப் பற்றும் விசுவாசம் காரணமாக நீதிமானாக்கப்பட்ட சீஷர்கள், அவரோடுகூடத் தங்கள் ஜீவன்களை ஒப்புக்கொடுப்பதற்கும், அவரோடுகூட மரிப்பதற்குமான சிலாக்கியத்தினையும், இதற்கான அழைப்பையும் பெற்றுள்ளனர். அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் விஷயத்தில், இவர்கள் மூலம் உண்டாகும் பலனானது, இனிவரும் யுகத்தில், இன்னும் பெரியதொரு அறுவடையாக இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஒரு கோதுமை மணியான நமது கர்த்தர், 1,44,000 பேரை மற்றும் இது தவிர எண்ணிலடங்கா திரளான கூட்டத்தாரைப் பெரும்பலனாகக் கொடுத்தார். மேலும் அவருடைய பிரதிநிதிகளும், அவருடைய அங்கத்தினர்களுமாகிய இந்த 1,44,000 பேர் மூலமான பலனானது, பூமியின் குடிகள் அனைவரும் பிதாவுடன் ஒப்புரவாகுவதற்கும், தெய்வீக நிபந்தனைகளின் கீழ் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குமான முழுமையான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்கையில், இறுதியில் இன்னும் பெரியதொரு பலனாகக்காணப்படும்.

சீஷத்துவத்திற்கான நிபந்தனைகள்

தம்மைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் பேசின பிற்பாடு, தம்முடைய பின்னடியார்கள் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிற்பாடு, அதாவது ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடு புரிந்துகொள்ளும் விதத்தில் விவரங்கள் கொடுக்கும் வண்ணமாக, “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்” (யோவான் 12:25) என்று கூறினார்; அதாவது தற்கால பூரணமற்ற சூழ்நிலைகளின் கீழான, நமது தற்கால ஜீவனை நாம் உயர்வானதாய்க் கருதுவோமானால், விசுவாச கண்களினால் மாத்திரமே பார்க்க முடிகின்ற எதிர்கால ஜீவியம் பற்றின நம்பிக்கையில், நாம் கர்த்தருடைய ஊழியத்தில், நம்முடைய ஜீவியங்களை ஒப்படைப்பதற்கு மனமற்றவர்களாய் இருப்போம் என்ற விதத்தில் கூறினார்.

சிறப்பான சூழ்நிலைகளின் கீழ்க் காணப்படப்போகின்ற நித்திய ஜீவனுடைய மதிப்பை உணர வேண்டுமெனில், நாம் தற்கால பூரணமற்ற சூழ்நிலைகளின் கீழ்க்காணப்படும் தற்கால ஜீவியத்தை அதிகம் அன்புகூரக்கூடாது. தற்கால ஜீவியத்தினுடைய பாவமுள்ள மற்றும் பூரணமற்ற நிலைமையில் திருப்தியடைபவர்கள், கர்த்தருடைய சீஷர்கள் ஆகுவதற்குரிய மனநிலையில் இல்லாதவர்கள் ஆவர். இப்படிப்பட்டவர்கள் தற்கால சூழ்நிலைகளில் திருப்திக்கொண்டிருப்பதினால், இவர்கள் கர்த்தர் முன்வைக்கும் சிறந்தவைகளுக்காக, தற்கால ஜீவியத்தைப் பலியாக்கிட விருப்பமற்றவர்களாய்க் காணப்படுவார்கள். கர்த்தருடைய இந்த வார்த்தைகளானது சுவிசேஷயுகத்தையும்தாண்டி ஆயிரவருட யுகத்திற்கும் பொருந்தும் என்று சொல்வதற்கு எந்த காரணங்களும் இல்லை; ஆயிரவருட யுகத்தில் காரியங்கள் பெரிதும் வேறுபட்டதாயும், சூழ்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டதாயும் காணப்படும். “இந்த உலகத்தில்” எனும் வார்த்தைகளைக் குறிப்பிடுவதன் வாயிலாக, கர்த்தர் எல்லையைக் குறிப்பிடுகின்றார்; “இந்த உலகத்தில்” – அதாவது இந்தக் காஸ்மோஸ் (kosmos) அல்லது இந்தத் தற்காலத்தின் ஒழுங்குமுறை என்பதேயாகும்.

இன்னும் சீஷத்துவத்திற்கான நிபந்தனைகளைத் தொடர்ந்து விவரிக்கும் வண்ணமாக, நமது கர்த்தர் “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்” (யோவான் 12:26) என்று கூறினார். இவ்வார்த்தைகளின் மூலமாக நமது கர்த்தர் தமது உண்மையுள்ள பின்னடியார்கள், ஆவிக்குரிய வட்டாரத்தில், தம்முடைய திவ்விய சுபாவத்தில் இறுதியில் பங்கடைவார்கள் என்று எடுத்துக் காண்பிக்கின்றார். இதே காரியங்களைக் கொஞ்சம் வேறுவிதமாக, “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” என்று கர்த்தர் கூறுகின்றார். (யோவான் 12:26) மரணம் வரையிலான குமாரனுடைய உண்மையினிமித்தம், பிதா குமாரனைக் கனப்படுத்தினார்; குமாரனுடைய இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டுள்ள குமாரனுடைய பின்னடியார்களை, பிதா குமாரர்களாக ஏற்றுக்கொள்கின்றார்; மேலும் குமாரனுடைய அடிச்சுவடுகளில் உண்மையாய் நடக்கின்றவர்களை, பிதா நிச்சயமாய் இயேசுவைக் கனப்படுத்தினதுபோன்று கனப்படுத்துவார்; முதற்பலனாகிய இந்த இயேசுவைப் பிதாவானவர், மரணத்திலிருந்து தூதர்களுக்கும், அதிகாரிகளுக்கும், வல்லமைகளுக்கும் மேலாகவும், எல்லா நாமத்திற்கும் மேலாகவும் கனத்திற்கும், மகிமைக்கும் மற்றும் அழியாமைக்கும் உயர்த்தினார். நாம் அனைவரும் உண்மையுள்ள பின்னடியார்களாகக் காணப்படுவோமாக.