R1815 (page 122)
மாற்கு 15:22-37; மத்தேயு 27:31-66; லூக்கா 23:26-56; யோவான் 19:16-42.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8
மாற்கு 15:22-ஆம் வசனம். சிலுவையில் அறையப்படுவதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், சைத்தான்தனமான வைராக்கியத்தினால் காணப்பட்டிருந்த ஜனக்கூட்டத்தார் உற்சாகமடைந்து, சிலுவையில் அறையப்படும் இடத்தினிடத்திற்குக் கைதியுடன் விரைந்து, வெள்ளிக்கிழமைக் காலை ஒன்பது மணியளவில் வந்து சேர்ந்தனர். எத்துணை பயங்கரமானதொரு இரவைக் கர்த்தர் கடந்து வந்துள்ளார்; கவலைக்கிடமான நிகழ்வுகள் அவருடைய சீஷர்களுடன் அவர் கடைசி இராப்போஜனத்தை அநுசரித்த போது ஆரம்பித்தது; பின்னர் கெத்செமனேயில், அவர் மனவேதனை அடைந்திட்டார்; பின்னர் அன்னாவிடம் அவர் வேகவேகமாய் அழைத்துக்கொண்டு போகப்பட்டார், பின்னர் காய்பாவினிடத்திற்கும், பிலாத்துவினிடத்திற்கும், ஏரோதினிடத்திற்கும், மீண்டும் பிலாத்துவினிடத்திற்கும் கொண்டுபோகப்பட்டார்; அவர் இரவு முழுவதும் மிகவும் அவமானமாய் நடத்தப்பட்டார், பரியாசம் பண்ணப்பட்டார், முகத்தில் துப்பப்பட்டார், குட்டப்பட்டார், தூஷிக்கப்பட்டார், ஏளனப்படுத்தப்பட்டார், தவறாய்க் குற்றஞ்சாட்டப்பட்டார், இறுதியில் கூர்மையான முட்களினால் முடிச் சூட்டப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்டார்.
இப்படியான அனுபவங்களுக்குப் பிற்பாடும், சிலுவையில் அறையப்படுவதற்கு அவருக்குள் இன்னமும் ஜீவன் இருந்தது ஆச்சரியமாய்த் தோன்றலாம். கடுமையானதாகவும், நீண்ட நேரமும் காணப்பட்ட, சரீரப்பிரகாரமான பாடுகளும், களைப்பும், அசதியும், அனைத்து உடல்சக்தியையும் செலவாக்கி முடித்திருக்குமே என்று நமக்குத் தோன்றலாம்; ஆனால், நமது கர்த்தர் தம்முடைய ஊழியத்தின் வேலைகளுக்காக தம்முடைய சரீரப் பலத்தைப் பெருமளவில் விரும்பி பலிச் செலுத்தியிருந்தாலுங்கூட, அவர் ஒரு பரிபூரண மனிதனாகக் காணப்பட்டப்படியினால், அவர் அசாதாரணமான சகிக்கும் திறனை/வல்லமையைக் கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்படுவதற்குரிய இடத்திற்கு, இயேசு தம்முடைய சிலுவையைச் சுமந்துச் செல்லும் விஷயத்தில், சிலுவையைச் சுமக்கும் காரியமானது இன்னொருவர்மேல் சுமத்தப்படுவதை வைத்துப்பார்க்கும்போது, இயேசு மிகவும் களைப்படைந்துள்ளார் என்பது தெரிகின்றது (லூக்கா 23:36).
மாற்கு 15:23-ஆம் வசனம். திராட்சரசமானது, வெள்ளைப்போளத்துடன் கலக்கப்பெற்று, வலி தெரியாமல் இருக்கத்தக்கதாக மயக்க மருந்தாகக் கொடுக்கப்பட்டது. ரோமர்களுடைய இந்தக் கொடூரமான முறையினால் தண்டனை தீர்ப்பை அடையும் குற்றவாளிகளுக்காக, இப்படிப்பட்டதான இரக்கத்தின் பணியானது, எருசலேமிலுள்ள சில ஸ்தீரிகளினால் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழங்கப்பட்ட இரசத்தை ருசி பார்த்ததின் மூலமாக, இயேசு அவர்களது இரக்கத்தை அங்கீகரித்தார்; எனினும், இறுதி வரையிலும் தம்முடைய மனம் தெளிவுடனும், விழிப்புடனும் காணப்பட வேண்டுமென இயேசு விரும்பினபடியால், ருசிப்பார்ப்பதற்கு மேலாக, ரசத்தைப் பருகவில்லை. ஒருவேளை இயேசு அந்த ரசத்தைப் பருகியிருந்திருப்பாரானால், இயேசு தமது தாயை யோவானின் பராமரிப்பில் விட்டபோது வெளிப்படுத்தின அன்பையும்/பரிவையும் மற்றும் நமக்கு மிகவும் அர்த்தமுள்ளவைகளாக இருக்கும் அந்தக் கடைசி வார்த்தைகளாகிய, “எல்லாம் முடிந்தது” என்பதையும் நம்மால் உணர முடியாமலும், கேட்க முடியாமலும் போயிருந்திருக்கும். இன்னுமாகப் பேதுருவை உடனடியாக மனம் வருந்துவதற்கு நேராக வழிநடத்தத்தக்கதாக, பேதுருவுக்குக் கர்த்தருடைய அன்பையும், பேதுருவிடத்தில் அவர் அடைந்திட்ட ஏமாற்றத்தையும், வெளிப்படுத்தின கர்த்தருடைய கவலை நிறைந்த பார்வையையும், பேதுரு இழந்திருக்கக்கூடும்; இன்னுமாக, இப்படிப்பட்டதான கொடூரமான மரணத்தினுடைய துயரங்கள் மத்தியிலும், கர்த்தருடைய எண்ணங்கள் மற்றவர்கள் மீது எவ்வளவாய்க் காணப்பட்டது என்பதை நம்மால் உணர முடியாமலும் போயிருந்திருக்கும்.
மாற்கு 15:25-28 வரையிலான வசனங்கள். சிலுவையில் அறையப்படுதலானது, காலையில் ஒன்பது மணியளவுக்கு நடந்தது; மற்றும் மரணம் மாலை மூன்று மணியளவுக்குச் சம்பவித்தது. “அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்” எனும் வாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அவர் இரண்டு கள்வர்களுக்கு இடையே சிலுவையில் அறையப்பட்டார் (ஏசாயா 53:12).
பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், “மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை” என்று பரியாசம் பண்ணின வார்த்தைகளின் விஷயத்தில், அவர்கள் உணர்ந்து பேசினவைகளுக்கும் மேலாக, ஆழமான அர்த்தம் காணப்படுகின்றது. அவரால் மற்றவர்களையும் இரட்சித்து, தம்மையும் இரட்சித்துக் கொள்ளமுடியாது, ஏனெனில் அவர் தம்மைப் பலியாகக் கொடுக்கும்போது மாத்திரமே, அவரால் மற்றவர்களை இரட்சித்துக்கொள்ள முடியும்; ஆகையால், அவரே நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை, சிலுவை மரத்தில் தொங்கின அவருடைய சொந்த சரீரத்தில் ஏற்றுக்கொண்டார்; அவர் அனுமதித்ததாலேயே ஒழிய மற்றபடி எந்த மனுஷனாலும் அவரிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியாத தம்முடைய ஜீவனை, அவரே விரும்பி ஒப்புக்கொடுத்தார்; மேலும், அவர் தாமே விரும்பி வந்து தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பது, அவரது நடக்கையிலேயே வெளிப்படுகின்றது; அதாவது அவர் எல்லாவற்றையும் அறிந்தவராகவே கெத்செமனேயில் காட்டிக்கொடுப்பதற்கெனக் கொடுக்கப்பட்ட முத்தத்தை ஏற்றுக்கொண்டதிலும், தம்மை ரோம சேவகர்களிடம் எளிமையாகக் கையளித்ததிலும், தம்மைக் [R1815 : page 123] குற்றம் சாட்டுபவர்கள் முன்னிலையில் அமைதிக் காத்துக்கொண்டதிலும், தாம் மேசியா என்பதை ஒளிவுமறைவில்லாமல் அறிக்கைப் பண்ணிக்கொண்டதிலும் (இதை அவர்கள் தேவதூஷணமாய்க் கருதிக்கொண்டார்கள்), தம்மைத் தற்காத்துக்கொள்ள முற்படாமல், சிலுவையில் அறையப்படுதல் எனும் தண்டனை தீர்ப்பை ஏற்றுக்கொண்டதிலும் வெளிப்படுகின்றது. உண்மைதான் அவர், “மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” ஏன்? ஏனெனில், அவர் மற்றவர்களை இரட்சிக்க விரும்பினார்; மற்றும், மற்றவர்களை இரட்சிப்பதற்கு தாம் பலியாக வேண்டும் என்பதையும் அறிந்தவராக இருந்தார்.
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் [R1816 : page 123] அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டார்” (ஏசாயா 53:12). ஓ, எத்துணை அன்பும், சகிப்புத்தன்மையும் இங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது! எனினும் மனிதர்களோ, “அவர் தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டவரென்று” எண்ணினார்கள். மேலும் இது, நமது கர்த்தருக்கு இருந்த கடுமையான பரீட்சைகளில் ஒன்றாக இருந்தது; அதாவது அவர் தேவனுக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர் என்றும், அவர் தெய்வீகக் கோபாக்கினையின் கீழ்க் காணப்படுகின்றார் என்றும் கருதப்படுவதுதான் கர்த்தருக்கு இருந்த கடுமையான பரீட்சைகளில் ஒன்றாகக் காணப்பட்டது.
இதுபோலவே கர்த்தருடைய ஜனங்களுக்கு வரும் சிறுமைப்படுத்துதல்களானது, உலகத்தாராலும் மற்றும் தங்களைக் கிறிஸ்தவர்களாக அறிக்கைப் பண்ணிக்கொண்டும், ஆழ்ந்து சிந்திக்கிறவர்களாய் இல்லாதவர்களினாலும் தவறாய்க் கருதப்படுகின்றது. ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் சிறுமைப்படுத்தப்படும்போது, அவர்கள் “சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல” (மத்தேயு 10:24) என்ற வசனத்தின் வார்த்தைகளையும், தேவபக்தியாய் நடப்பவர்கள் அனைவரும் துன்பப்படுவார்கள் என்பதையும், இந்த யுகத்தில் தீமை மோலோங்குவதினால், நீதிமான்கள் துன்புறுவார்கள் என்பதையும், சாத்தானே இவ்வுலகத்தின் அதிபதியாய் இருக்கின்றான் என்பதையும், அவன் கட்டப்படுவது வரையிலும், நீதிமான் உயர்த்தப்படான் என்பதையும் நினைவில் கொள்வார்களாக. நீதிமான்கள் அதாவது, கரு நிலையிலுள்ள பரலோக இராஜ்யமானது, கொடுமையை அனுபவிப்பதற்கான காலம் இதுவே; மேலும், பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிற காலமும் இதுவே. நமது கர்த்தரும், தலையுமானவராகிய கிறிஸ்துவே பாடுப்பட்டாரானல், அவருக்காவும், நீதிக்காகவும், சத்தியத்திற்காகவும் பாடுபடுபவர்கள் அனைவரும் அவரை ஆறுதல்படுத்தின அதே தெய்வீக வாக்குத்தத்தத்தினால் ஆறுதல்படுத்தப்படுவார்களாக. “உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும்,உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு” (சங்கீதம் 37:6,7).
தங்கள் அன்பையும், அனுதாபத்தையும் தெரிவித்த நமது கர்த்தருடைய சில நண்பர்களுங்கூட இத்தருணத்தில் காணப்பட்டனர்; இயேசுவின் தாயாகிய மரியாளும், மகதலேனா மரியாளும், கிலெயேப்பாவின் மனைவியாகிய மரியாளும், மற்ற ஸ்திரீகளும், இயேசுவுக்கு வெள்ளைப்போளமும், திராட்சரசமும் அளித்திட்ட ஸ்தீரிகளும் காணப்பட்டார்கள். “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்;” தம்மீது காண்பிக்கப்பட்ட இதே பொல்லாத ஆவியானது, இஸ்ரயேல் தேசத்தைக் கவிழ்த்துப் போட்டு, எருசலேமை அழித்துப் போடும் கொடூரமானவர்களிடத்திலும் விளங்கும் என்பதையே லூக்கா 23:27-31 வரையிலான வசனங்களின் வார்த்தைகள் மூலம் கர்த்தர் குறிப்பிட்டார். அப்படியாகவே நடக்கவும் செய்தது; ஏனெனில், இஸ்ரயேல் ஜனங்களுக்கு, அவர்களுடைய வெளிச் சத்துருக்கள் மூலமாய் மாத்திரம் உபத்திரவம் ஏற்படாமல், அரசியல் கலகத்தினாலும் ஏற்பட்டது; ஏனெனில் ஒவ்வொரு மனுஷனுடைய கரமும், அவனுடைய அயலானுக்கு விரோதமாக இருந்தது. எருசலேம் கைப்பற்றப்பட்டபோது, பல நூற்றுக்கணக்கான யூதர்கள் உடனடியாகச் சிலுவையில் அறையப்பட்டு, பட்டணத்தின் சுவர்களில் தொங்கவிடப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாற்கு 15:33,34-ஆம் வசனங்கள். ஆறாம் மணி வேளையிலிருந்து, ஒன்பதாம் மணி வேளை வரையிலும், தேசத்தை மூடியிருந்த இருளானது, இயற்கைக்கு அப்பாற்பட்ட இருளாகும்; ஏனெனில் பஸ்கா காலங்களில் காணப்படும் பௌர்ணமி அன்று, சூரியக் கிரகணம் ஏற்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி, தெய்வீகக் கோபத்திற்கான வெளிப்பாடாக இருந்தது; அதாவது, இப்படியான கிரியைகளை நடப்பிப்பதன் மூலமாக, நீண்ட காலமாக தயவு பெற்றிருந்த தேசமானது, தேவனிடமிருந்து அந்நியராய்த் தள்ளுண்டுபோகும் காரியத்திற்கு இந்த இருளானது நிழலாய்க் காணப்பட்டது.
மாற்கு 15:34-ஆம் வசனமானது, நேரிட போகிற மரணத்தைக் குறித்த அச்சத்துடன்கூடிய உணர்ந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்துகின்றது. பலியை நிறைவேற்றி முடிப்பதற்குப் பிதாவினுடைய தாங்கிப்பிடிக்கும்/ஆதரிக்கும் வல்லமையானது (இயேசுவிடமிருந்து) பின்வாங்க வேண்டுவதும், பாடுகளின் பாத்திரத்திலுள்ள கடைசி கசப்பான வண்டல்களும்/அடிமண்டியும் (இயேசுவினால்) குடித்துக் காலியாக்கப்படுவதும் அவசியமானதாகும். ஆனால் இதன் முக்கியத்துவமோ, இருதயமும், மாம்சமும் தளர்வடையும் போது, உணர்ந்துக்கொள்ள சிரமப்படுகின்றது; ஆகையால்தான் திகைப்படைந்து இருதயமானது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்டது. அவருடைய பாடுகள் அனைத்திலும், அதுவரைக்கும் தெய்வீகக் கிருபையானது அவரைத் தாங்கி ஆதரித்து வந்தது; ஆனால் அவருடைய தழும்புகளினால் நாம் குணம் அடையத்தக்கதாக, அவர் இப்பொழுது கோலின் கீழ் மூழ்கவும், ஜீவனை உடைய பிதாவின் கிருபையினின்று துண்டிக்கப்படவும் வேண்டியிருந்தது.
மாற்கு 15:37-ஆம் வசனம். மீதி இருந்த பலத்தையும், பயன்படுத்தி முடித்திட்ட இந்தக் கடைசிக் கூக்குரலானது, ஜெயங்கொள்ளும் விசுவாசத்தினுடைய இறுதி ஜெயமாகும். தம்மை எப்போதும் மற்றும் இதுவரையிலும் தாங்கி வந்ததான தெய்வீகக் கிருபையானது, தாம் பாவியின் ஸ்தானத்தில் பாவத்திற்கான ஈடுபலியாக நிற்கத்தக்கதாக, தம்மைவிட்டு அகல வேண்டுமென்று அவர் உணர்ந்தபோதிலும், திரைக்கு அப்பால் உணரப்படக்கூடிய தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மீது அவரது விசுவாசமானது உறுதியாய் நின்று, பிதாவிடம் தம்முடைய ஜீவனை நம்பிக்கையுடனும், விருப்பத்துடனும் கையளித்தது. இதை அப்போஸ்தலனாகிய பேதுரு நீதியின் நிமித்தம் பாடுபடுபவர்கள் அனைவரும் செய்யும்படிக்குக் கூறுகின்றார். “ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்” (1 பேதுரு 4:19).