R4712 – ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4712 (page 360)

ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்

THE PRINCE OF LIFE CRUCIFIED

மத்தேயு 27:33-50

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” ஏசாயா 53:5

இயேசு கைது செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அவருடைய விசாரணை ஆரம்பித்தது. ஆனால், நியாயப்பிரமாணத்தின்படி மரணத்தீர்ப்பானது காலை வேளையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்றிருப்பதினால், காலையில் ஆலோசனை சங்கத்தார் கடமைக்காகக் கூட்டங்கூடி, முந்தின இரவில் பிரதான ஆசாரியனால் கொடுக்கப்பட்டத் தீர்ப்பை உறுதிப்படுத்தினார்கள்; அதாவது, சிருஷ்டிகரினால் நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டிருந்த திட்டத்தின்படி இயேசு தாம் பூமிக்கு வந்ததாகவும், தாம் உலகத்தையும், இஸ்ரயேலர்களையும் மரணத் தண்டனையினின்று மீட்கப்போகிறதாகவும், பின்னர்த் தேவனுடைய ஏற்றவேளையில் பூமியின் குடிகள் மற்றும் இஸ்ரயேலர்களுக்கான ஆசீர்வாதத்திற்கென, தாம் மேசியாவின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போவதாகவும் அறிவித்தபடியால் இயேசு சிருஷ்டிகருக்கு எதிராக தூஷணம் பேசியுள்ளார் என்று பிரதான ஆசாரியனால் கொடுக்கப்பட்டத் தீர்ப்பை ஆலோசனை சங்கத்தார் உறுதிப்படுத்தினார்கள். இயேசு ஐந்து நாளுக்கு முன்பு கழுதையின் மீது ஏறிவந்தபோது, “ஓசன்னா, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று ஆரவாரித்த ஜனங்கள் மீண்டுமாக இயேசுவை இராஜாவாக அறிவிக்க/நியமிக்க பிரயாசம் எடுப்பதற்கு முன்பாக எல்லாம் முடிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசாரியர்கள் மற்றும் சங்கத்தார் வேகமாகச் செயல்பட்டார்கள். பஸ்கா வாரத்தில் எந்த மரணத்தண்டனையும் நிறைவேற்ற முடியாது. ஒருவேளை இயேசு கொல்லப்படாமல் (பஸ்கா வாரம் முடியும்வரை) கைதியாக வைக்கப்பட்டிருப்பாரானால், அடுத்த கட்டமாக இயேசுவுக்கோ அல்லது தங்களுக்கோ என்ன சம்பவிக்கும் என்பதை அவர்கள் தெரியமுடியாத நிலையில் காணப்பட்டார்கள். ஆகவே, அவர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்குச் சில மணி நேரங்களையே பெற்றிருந்தார்கள். மேலும் தங்களுடைய இந்தத் திட்டத்தின் வாயிலாக அவர்களால் வஞ்சகன்போல் பார்க்கப்படுபவரும், தங்களுக்கும் ரோம அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சனை உண்டாக்குவதற்கு ஏதுவாய் இருப்பவருமாகிய இயேசுவைத் தங்கள் நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டிவிடலாம் என்று நம்பினார்கள்.

ஆலோசனை சங்கத்தார் தங்களுடைய மத சம்பந்தமான விஷயங்களில் ஜனங்களை நியாயந்தீர்க்க அதிகாரம் பெற்றிருந்தாலும், அவர்கள் மரணத் தண்டனை விதிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தனர். ஆகவே, இயேசுவை ஆலோசனை சங்கத்தார் முன்பு குற்றவாளி என நிரூபித்த பிற்பாடு, அவரை ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவுக்கு முன்பு அழைத்துச்சென்று நிறுத்துவது அவசியமாய் இருந்தது. மரணத் தண்டனை வழங்குவதற்குப் பிலாத்துத் தேவதூஷணம் எனும் குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்று அறிந்திருந்த அவர்கள், பிலாத்துவுக்கு முன்பு முற்றிலும் மாறான குற்றச்சாட்டை இயேசுவுக்கு எதிராக வைத்தார்கள். அதாவது, இயேசு ஒரு கலகவாதி என்றும், பிரச்சனைகளைத் தூண்டிவிடுபவர் என்றும், இயேசு தம்மை இராஜாவாக அறிவித்தார் என்றும், இயேசுவைச் சுதந்திரமாய் விட்டுவைப்பது என்பது ரோம சாம்ராஜ்யத்தின் நலனுக்கடுத்த விஷயங்களுக்கு தீமை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் [R4712 : page 361] என்றுமுள்ளக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவர்களுடைய இந்தக் குற்றச்சாட்டில் காணப்படும் மாய்மாலமும், முட்டாள்தனமும் மிகவும் வெட்ட வெளிச்சமாய் இருந்தபடியினால் அக்குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிலாத்துவுக்கு அவசியமில்லாமல் போயிற்று. பொறாமையினிமித்தமாகவே இயேசுவை அவர்கள் தன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கின்றார்கள் எனப் பிலாத்து புரிந்துகொண்டார். ஏனெனில், பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்கள் பொது ஜனங்கள் மத்தியில் கொண்டிருக்கும் செல்வாக்கைக் காட்டிலும் இயேசுவுக்கும், அவருடைய போதனைகளுக்கும் அதிக செல்வாக்குக் காணப்பட்டது எனப் பிலாத்து உணர்ந்துகொண்டார். இயேசுவின் ஊர் கலிலேயாவாக இருந்தபடியினால், இயேசுவின் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ள விரும்பின பிலாத்து, இயேசுவின் வழக்கானது கலிலேயா தேசாதிபதியான ஏரோது இராஜாவிற்கு உட்பட்டது என்று அறிவித்து, இயேசுவின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

ஏரோது இராஜாவுக்கு முன்பு இயேசு

இப்படி இயேசுவை ஏரோதினிடத்தில் ஒப்புக்கொடுத்த காரியம் அவர்களுக்கு எதிர்பாராத அசௌகரியத்தைக் கொடுத்தது. ஆனால், ஏரோதின் அரமனை அவ்வளவாகத் தொலைவில் இல்லை. ஏரோது, இயேசுவினுடைய அற்புதங்களைக் குறித்து அநேக காரியங்களைக் கேட்டிருந்தபடியால் அவரைச் சந்திக்கும் இவ்வாய்ப்பிற்கு மிகவும் சந்தோஷமடைந்தார். ஏரோது போதகரின் கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து அவரில் தூய்மையையும், சாந்தத்தையும், பெருந்தன்மையையும் கண்டு உணர்ந்தபோது, இப்படிப்பட்ட ஒரு நபர் கலகவாதி என்றும், தேசத்தின் சமாதானத்தினுடைய நலனுக்கடுத்த விஷயங்களுக்கு ஆபத்தான மனுஷன் என்றும், குற்றஞ்சாட்டப்படுவது ஏரோதுக்குக் கொஞ்சம் கேலியாகவே தோன்றியிருந்திருக்கும். கொஞ்சம் நேரம் இயேசுவை வசைமொழிக் கூறியும், கேலியாகப் பேசி சிரித்த பிற்பாடு, இயேசுவை மரியாதையின்றி நடத்தின ஏரோதோடு, அவரது அரமனை சேவகர்களும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அவரை எள்ளி நகையாடினார்கள். அவர்கள் அவருக்கு இரத்தாம்பர வஸ்திரத்தையும், முள்ளினால் உண்டுபண்ணின கிரீடத்தையும் தரிப்பித்து, இராஜா போன்றில்லாத அவரது தோற்றத்தை எள்ளி நகையாடினார்கள். பின்னர், ஏரோது அவ்வழக்கை விசாரிக்க மறுத்து, கைதியை மீண்டுமாகப் பிலாத்துவினிடத்தில் அனுப்பி வைத்தார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு முன்னதாக யோவான்ஸ்நானனை சிரைச் சேதம் பண்ணின விஷயம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகளே தனக்குப் போதுமென ஏரோது எண்ணிதான், கைதியைப் பிலாத்துவிடம் அநேகமாக திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். இயேசுவின் வழக்கானது, ஏரோதுக்கும் பிலாத்துவுக்கும் இடையில் ஒரு நகைச்சுவைப் போன்று காணப்பட்டது. அதாவது, இயேசு தூய்மையும், [R4713 : page 361] அப்பாவியாகவும் ஏரோதின் கண்களுக்குக் காணப்படும்போது, பிரதான ஆசாரியர்களோ அவர் மிகவும் ஆபத்தானவர், அவரை மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்துவிட வேண்டும் என்று முன்வைத்த இப்படிப்பட்ட ஒரு வழக்கை கையாளுவது ஏரோதுக்குக் கேலியாக இருந்தபடியால், பாவப்பட்ட இயேசு பிலாத்துவினிடத்தில் இருந்தால் பாதுகாப்பாய் இருப்பார் என்று எண்ணி ஏரோது பிலாத்துவினிடத்தில் அனுப்பி வைத்தார்.

பிலாத்துவின் சிக்கல் பெருகியது

இயேசு மீண்டுமாகப் பிலாத்துவின் அரமனைக்குக் கொண்டுவரப்பட்ட போது, அது பிலாத்துவுக்கு மனமடிவை உண்டாக்கிற்று. அவ்வழக்கைத் தீர்த்துவைப்பது சுலபமானதல்ல. கைதியிடம் எவ்வித குற்றத்திற்கான அறிகுறியும் இல்லை. ஆனால், அவர் மேல் குற்றம் சுமத்துபவர்கள் பிலாத்துப் பொறுப்பேற்றுள்ள பட்டணத்திலுள்ள மிக முக்கியமான நபர்களாய்க் காணப்படுகின்றனர். மதத்தலைவர்கள் தாங்கள் நல்நோக்கத்துடன் இவைகளைச் செய்கின்றார்கள் என்ற தங்கள் நற்சாட்சியைக் கூடுமானமட்டும் காக்கவும் வேண்டியிருந்தது மற்றும் நீதியின் போர்வையின் கீழ்க் குற்றமற்ற தங்களுடைய கைதியைக் கொலை செய்யவேண்டுமென்றிருந்தார்கள். மதம் அவளுடைய ஆதரவாளர்களால் உலகத்தில் எல்லாக் காலக்கட்டங்களிலும் தவறாய்க் காட்டப்படுவது எத்துணை பரிதாபத்திற்குரியதாய்க் காணப்படுகின்றது! இங்கு நமக்கு ஒரு படிப்பினை உள்ளது. அதென்னவெனில், நாம் பொல்லாப்பிற்குரிய தவறுகளில் விழுந்துவிடாதபடிக்கு அதாவது, மற்றவருடைய உரிமைகளை எதிர்ப்பதின் மூலம் தேவனுக்கு எதிராக நிற்காதபடிக்கு நாம் நம்முடைய இருதயத்தின் நோக்கங்களையும், எண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதேயாகும்.

பிலாத்துக் குற்றச்சாட்டுக்களைக் கேட்ட பிற்பாடு, அவைகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று உணர்ந்துகொண்டு, தன்னுடைய முடிவைக்குறித்துக் கூறினதாவது: “இயேசுவினிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும்காணேன், ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள அமைதியின்மையை நான் காண்கையில், இங்குச் சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிட்டு, இங்குக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களின் அநீதியான கோரிக்கையைத் திருப்தி செய்வது அவசியமென நான் எண்ணுகின்றேன். இக்கைதி தண்டனைக்குப் பாத்திரவான் அல்ல என்று நான் ஒப்புக்கொள்கின்ற போதிலும், இக்கைதியை வாரினால் அடிக்க நான் உத்தரவு இடுகின்றேன். இக்கைதியின் நலன் கருதியும், பட்டணத்தின் சமாதானத்தினுடைய நலன் கருதியுமேதான், இக்கைதியை வாரினால் அடிக்க நான் ஒப்புக்கொடுக்கின்றேன்”. ஏனெனில் ஜனங்கள் திருப்திபடுத்தப்படும்போது, இயேசுவின் ஜீவனும் தப்புவிக்கப்படும். அரசியல் தீர்ப்புகளைப் பொறுத்தமட்டில் இது மிகவும் நியாயமான தீர்ப்பாகும். பூரணமற்ற சூழ்நிலைகளில் மெய்யான/முழுமையான நீதி வழங்கப்படுவது கூடாத காரியம் என்று நீதிமன்றத்தின் நீதிபதிகள் கூட அங்கீகரிக்கின்றனர். ஆனால், இயேசுவுக்கு மரணத் தண்டனையில்லாமல் வேறெந்த தண்டனை அளிக்கப்பட்டாலும், அதில் மத அதிகாரிகள் திருப்தியடைவதாக இல்லை. “அவரை சிலுவையில் அறையும்!” “அவரை சிலுவையில் அறையும்!” என்று கூக்குரல் இடும்படிக்கு மக்கள் கூட்டத்தார் தூண்டிவிடப்பட்டனர். இப்படிப்பட்ட ஒரு குற்றமற்ற மனுஷனுக்கு எதிராக இப்படியானதொரு வெறி எழும்பியிருப்பதைப் பிலாத்துவுக்குப் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. ஆகவேதான், “ஏன், என்ன பொல்லாப்புச் செய்தார்” என்று பிலாத்து வினவினார். ஆனால், “அவரை சிலுவையில் அறையும்!” என்பதே பதிலாக வந்தது. அந்தோ பரிதாபம், மனிதனுடைய சீற்றம் எவ்வளவாக அவனுடைய கண்களிலிருந்து நீதியின் கொள்கை அனைத்தையும் மறைத்து விடுகின்றது. மேலும், பிலாத்துவின் குழப்பத்தை இன்னும் பெருகப்பண்ணும் விதமாக, அவருடைய மனைவி இயேசுவாகிய நீதிமானுக்கு ஒன்றும் பொல்லாப்புச் செய்யக்கூடாது என்றும், இயேசு தொடர்பான ஒரு பயங்கரமான சொப்பனத்தைக் கண்டேன் என்றும் கூறி செய்தி அனுப்பி வைத்தாள்.

கடைசி பிரயாசமாக, ஜனக்கூட்டம் அனைவரும் இயேசுவைக் காணத்தக்கதாக இயேசுவை ஓர் உயரமான இடத்தில் கொண்டுவந்து பிலாத்து நிறுத்தி, அவர்களை நோக்கி, “இதோ இந்த மனுஷன்” என்று உரத்த சத்தத்தில் கூறினார்… அதாவது, “நீங்கள் சிலுவையில் அறைய வேண்டும் என்று விரும்புகின்ற இம்மனுஷனுடைய அம்சங்களைப் பாருங்கள். உங்கள் இனத்திலும் சரி, வேறு எந்த இனத்திலும் சரி, எவரிடத்திலும் காணப்படாத இராஜாவுக்குரிய அம்சங்களை இவரிடத்தில் அதிகமாய்க் காணப்படுவதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். உங்கள் இனத்திலேயே காணப்படும் மிகச் சிறந்த அம்சங்களுடைய இவரை நீங்கள் சிலுவையில் அறையப்போகின்றீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நியாயமாய் நடந்து கொள்ளுங்கள், “இதோ இந்த மனுஷன்!” இந்த ஒரு காலக்கட்டத்தில் அரசாங்கமானது, உங்களுக்கு ஒரு கைதியை விடுதலைப்பண்ணுவது வருடந்தோறும் உங்களுக்குக் காணப்படுகின்ற வழக்கமாயிருக்கின்றது. ஆகவே, நீங்கள் இப்பொழுது இயேசுவை ஒரு குற்றவாளியாக எண்ணிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் நீதி எனக் கருதி கொண்டிருக்கும் விஷயங்கள், அவர் குற்றவாளி என்று அழைக்கப்படுவதன் மூலம் திருப்தியடைந்து விட்டது என்றும் எண்ணிக்கொள்ளுங்கள். மேலும், (குற்றவாளி என்று அழைக்கப்படும்) இயேசுவை நான் இப்பொழுது (வருடத்திற்கு ஒருமுறை இக்காலத்தில் ஒரு குற்றவாளியை விடுவிக்கிற பிரகாரமாய்) விடுவிக்கின்றேன்” என்றார். ஆனால், மக்கள் கூட்டமோ, “அவரைச் சிலுவையில் அறையும்!”, (திருடனும், ஆபத்தான பண்பை உடையவனுமான) பரபாஸை எங்களுக்கு விடுதலைப்பண்ணும் என்று இன்னும் அதிகமாகக் கூக்குரலிட்டார்கள்.

விழுந்துபோன மனுக்குலத்திடம் விளங்கும் இந்த விநோதமான தவறான நடத்தையை/விபரீதத்தை யாரால் விளக்கக்கூடும்?… அதாவது, ஒரு பரிசுத்தவானுக்குப் பதிலாக ஒரு பாதகன் பரிந்துரைக்கப்படும் காரியத்தை யாரால் விளக்கக்கூடும்? சில வருடங்களுக்கு முன்னதாக வியட்னா பட்டணத்தில் சிறைச்சாலையிலிருந்த தனது தண்டனைக் காலம் முடிந்த பிற்பாடு வெளிவந்த ஒரு மனுஷன், வெளிவந்த மாத்திரத்தில் ஒரு சொற்பொழிவாற்றினான். அதில் அனைத்து யூதர்களும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று அவன் கூறினான். ஜனங்கள் மத்தியில் ஒரு வெறி உண்டாயிற்று. சிறையிலிருந்து வெளிவந்த அந்தக் கெட்ட மனுஷன், வெறி கொண்ட அந்த ஜனக்கூட்டத்திற்குத் தலைவனானான். மேலும், அவனுடைய இந்த வீர பேச்சுகளினிமித்தம் அவன் அப்பட்டணத்திற்கான மாநகர தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டான். வெட்கம்! இப்படிப்பட்ட விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு, இவைகள் நமக்குப் பயங்கரமாய் தோற்றம் தந்துகொண்டிருக்கும்போது, உலகம் விடுதலை அடைவதற்கான நிலையை எட்டிவிட்டது என்று நம்மால் எப்படிதான் கூறமுடியும்? உலகம் விடுதலைப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஏதுவான நிலையில் இராமல், உலகத்திற்குத் தேவன் அருளுவேன் என்று சொல்லியுள்ள ஒரு பலமுள்ள, ஏகாதிபத்திய அரசாங்கம் தேவைப்படுகின்றது. அதாவது, எல்லாத் தவறுகளைக் கீழாக்கிப் போடுவதற்கும்/ கீழ்ப்படுத்துவதற்கும் பலமுள்ளதாகவும், ஒவ்வொரு சரியான காரியங்களைச் சீர்த்தூக்குவதற்குப் பலமுள்ளதாகவும் காணப்படும் தேவனுடைய அருமையான குமாரனுடைய இராஜ்யத்தை அருளுவேன் என்று தேவன் கூறும் அரசாங்கமே, உலகத்திற்கு அவசியமாய் உள்ளது.

நீர் இராயனுக்கு நண்பனல்ல

யூத மத தலைவர்கள் மதிநுட்பம் உடையவர்களாகக் காணப்பட்டார்கள். ரோமுக்கு எதிரான துரோகம் என்பது மிகப் பயங்கரமான குற்றச்சாட்டுகளில் ஒன்று என அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மேலும், இயேசு தம்மை இராஜாவாக அறிவித்துள்ள காரியமானது, அவரைச் சிலுவையில் அறைந்து போடுவதற்கு வற்புறுத்தத்தக்கதாக அவர்கள் கையில் ஆயுதமாக விளங்கிற்று. இவ்வாயுதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். மேலும், பிலாத்துக் கைதியை விடுதலைப் பண்ணினால் தாங்கள் பிலாத்துவைக் குறித்துச் சக்கரவர்த்தியிடம் சென்று புகார் செய்ய நேரிடும் என்று வலியுறுத்தினார்கள். இப்படியான காரியங்களை ரோம அரசாங்கத்திடம் விவரிப்பது கடினமாயிருக்கும் என்றும், ரோம அரசாங்கம் தாங்கள் ஆளுகை செய்யும் பகுதியில் கலகம் வெடிக்க அனுமதிப்பதைவிட ஒரு மனுஷன் சாவது நலமாயிருக்கும் என்று ரோம அரசாங்கமும், காய்பாவினுடைய முடிவை ஒப்புக்கொள்ளும் என்றும், பிலாத்து நன்கு அறிந்திருந்தார். இப்படியான நிர்பந்தத்தின் கீழ் வற்புறுத்தப்பட்ட பிலாத்து, இறுதியில் சம்மதித்து, மரணத் தண்டனைக்கான காரியங்களை எழுதினான். ஆனால், இப்படி எழுதுவதற்கு முன்பு பிலாத்துத் தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் காரணமல்ல” என்று கூறிய வண்ணம் ஜனங்களுடைய பார்வைக்கு முன் தனது கைகளைக் கழுவினான்.

தண்டனை தீர்ப்பு நிறைவேற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. போர்ச்சேவகர்களுக்கு ஏற்கெனவே இரண்டு கள்வர்களைச் சிலுவையில் அறைய வேண்டியிருந்தபடியினால், இப்பொழுது இன்னும் ஒரு சிலுவையை எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டார்கள். ஊர்வலம், மண்டை ஓட்டின் வடிவிலிருக்கும் மலைப்பகுதியாகிய கொல்கொதாவை நோக்கி பயணத்தைத் தொடங்கினது. கொல்கொதா என்பது மண்டை ஓட்டுஸ்தலம் எனும் அர்த்தத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது பட்டணத்திற்கு வடக்கில், மதிலுக்கு வெளியே காணப்படுகின்றது. சமீபத்தில் அங்குக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றதான புதிய கட்டிடங்களும், மதிலும், பார்வையாளர்களுக்கு முன்பிருந்த மண்டையோட்டுத் தோற்றத்தைப் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. சட்டத்தின்படி ஒவ்வொரு குற்றவாளியினுடைய குற்றச்சாட்டுகள் பலகையில் பொறிக்கப்பட்டு, சிலுவையில் கைதியின் தலைக்கு மேல் தொங்க விடப்பட்டிருந்தது. போதகரின் தலையின் மேல், “இயேசு, யூதர்களுடைய இராஜா” என்ற அவருடைய குற்றச்சாட்டு எழுதப்பட்டிருந்தது.

சாத்தானும், அவனால் வஞ்சிக்கப்பட்டவர்களும், ஒருவழியாக இயேசுவை ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று எண்ணியிருந்திருப்பார்கள் என்பதில் உறுதியே. இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று அறிவித்த விஷயங்கள் குறித்து ஆசாரியர்களும், மூப்பர்களும் இகழ்ந்து பேசினார்கள். மேலும், ஒருவேளை இயேசு உண்மையாகவே தேவனுடைய குமாரனாக இருப்பாரானால், சிலுவையிலிருந்து கீழே இறங்கிவருவதன் மூலம் அதை நிரூபித்துக் காட்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உண்மை எதுவும் தெரியவில்லை. அதாவது, இயேசு மத்தியஸ்தராகக் காணப்படப்போகும் புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனையின்கீழ் மனுக்குலம் முழுவதையும், முழுமையான பூரணத்திற்கும், ஜீவனுக்கும் திரும்பிக் கொண்டுவரத்தக்கதாக தம்முடைய மகிமையான இராஜ்யத்தில் அதிகாரத்தைப் [R4713 : page 362] பெற்றுக்கொள்வதற்கு, தாம் மனுஷனுடைய பாவத்திற்காக மரிக்க வேண்டும் என்பதின் அவசியம் குறித்துள்ள உண்மை எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை (எரேமியா 31:31). ஆறாம் மணி வேளையாய் இருந்த மதிய நேரத்தின் போது, காரிருள் மூன்று மணி நேரம் பூமியை நிரப்பிக் கொண்டது. அப்போது, இயேசு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூறி மரித்தார். பாவிக்குச் சொந்தமான தெய்வீக நீதியின் பாரத்தை/பளுவை இயேசு முழுமையாக அனுபவிக்க வேண்டியதற்காக, பிதா இயேசுவை ஒரு பாவியைப் போல கருதி தமது முகத்தை அவரிடமிருந்து மறைக்க வேண்டியிருந்தது. பிதாவிடமிருந்து இயேசுவுக்கு ஏற்பட்ட இந்தத் தற்காலிகமான பிரிவு, போதகருக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்களிலுமே கடுமையான அடியாக இருந்திருக்கும் என்பது நிச்சயமே.