THE PHOTO-DRAMA OF CREATION / ஆங்கிலத்தில் பக்கம் 67
இயேசு கழுதையின்மேல் ஏறிவந்து, தம்மை இஸ்ரயேலின் இராஜாவென முன்வைத்த ஐந்து நாளைக்குப் பின்னர், முதற்பேறானவர்களின் சபையைக் கடந்துபோகுதலுக்கான நிழலான பஸ்கா வந்தது. இயேசுவே உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார். அவர் இதைச் செய்ய வேண்டுமானால், அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியாக வேண்டும். “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று பரிசுத்த பவுல் அவர்கள் கூறுகின்றார். இயேசு தம்முடைய சீஷர்களோடுகூட நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியினைப் புசித்தார். பின்னர்த் தம்முடைய சொந்த மாம்சத்திற்கும், தம்முடைய சொந்த இரத்தத்திற்கும் அடையாளமான புளிப்பில்லாத அப்பத்தையும், திராட்சப்பழரசத்தையும் அவர் எடுத்து, நிஜமான பஸ்கா இராப்போஜனத்தை நிறுவினார். நிஜமான ஆட்டுக்குட்டியென அவரது மரணத்திற்கான நினைவுகூருதலாக, இயேசுவின் பின்னடியார்கள் இதைச் செய்ய வேண்டும். “இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 6:53). உண்மைதான் இது இருதயத்தினுடைய அனுபவங்களை அடையாளப்படுத்தவில்லையெனில், வெளிப்புறமான அனுசரிப்பில் ஒரு பயனுமில்லை. இயேசுவின் பின்னடியார்கள் தங்கள் இருதயங்களில் அவரது மரணம்தான் முழு உலகத்தினுடைய பாவங்களுக்கான மீட்கும்பொருள் விலைக்கிரயம் என்றும், இது இல்லாமல், நித்திய ஜீவன் ஏதும் இருப்பதில்லை என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய விசுவாசிகளே, உலகத்தாருக்கு முன்னதாகவே, முதலாம் உயிர்த்தெழுதலின் மூலம் ஜீவனுக்குள் கடந்துபோகிறவர்களாகிய முதற்பேறான சபையில் அடங்குபவர்களாய் இருப்பார்கள். (வெளிப்படுத்தல் 20:6) பரிசுத்த பவுல் அடிகளார் நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான இன்னும் ஆழமான அர்த்தத்தினை எடுத்துக்காட்டுகின்றார். இயேசுவின் பின்னடியார்கள் அனைவரும், பிட்கப்படுகின்றதான ஒரே அப்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்; பாடுகளின், அவமானத்தின், நிந்தனையின் மற்றும் மரணத்தின் ஒரே பாத்திரத்தில் பங்கடைபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். (1 கொரிந்தியர் 10:16,17) இப்படியானவர்கள் மாத்திரமே “மோசே போன்ற உலகத்தின் தீர்க்கத்தரிசியின்,” அவரது மகிமையடைந்த “சரீரத்தின்” அங்கத்தினர்களாகவும் காணப்படுவார்கள். (அப்போஸ்தலர் 3:19-23) சீஷர்கள் ஒருவர் ஒருவருடைய பாதங்களையும், ஆண்டவருடைய பாதங்களையும்கூடக் கழுவிடுவதைப் புறக்கணித்தனர். இயேசு சடங்காக இல்லாமல், தாழ்மைக்கான பாடம் புகட்டும் வண்ணமாக, அப்பணிவிடையைச் செய்தார். அப்பாடத்தினுடைய அர்த்தம் நாம் “கிறிஸ்துவின் அங்கத்தினர்களென” நம்மால் முடிந்த எந்தப் பணிவிடையையும் ஒருவருக்கொருவர் புரிந்திட வேண்டும் என்பதாகும். (அப்போஸ்தலர் 9:5; 1 கொரிந்தியர் 12:27) இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, இயேசு பதினொரு பேருடன்கூட, யூதாஸ் அவரை முத்தத்தினால் அதிகாரிகளுக்குக் காட்டிக்கொடுத்த இடமாகிய கெத்செமனேக்குப் போனார். பின்னர்த் தொடர்ந்தது. நமது கர்த்தருடைய ஜீவியத்தின், நாம் நினைவில் வைக்கப்படத்தக்கதான இறுதி முடிவு நிகழ்வுகள்.