R3548 – நினைவுகூருதல் ஆசரிப்பு

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3548

நினைவுகூருதல் ஆசரிப்பு

THE MEMORIAL CELEBRATION

நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆசரிப்பானது, அடிக்கடி ஆசரிக்கப் படுவதைக்காட்டிலும், வருடாந்தர ஆசரிப்பாய்க் காணப்படுவதே ஏற்றது என்று கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொரு வருடமும் அறிந்துகொண்டு வருகின்றனர். அலிகெனியில் (Allegheny) இவ்வருடம் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, முன்பிருந்த எண்ணிக்கையைக்காட்டிலும் மிக அதிகமாக இருந்தது. அதிக எண்ணிக்கைக் காணப்படும் என்று எதிர்ப்பார்த்த வண்ணமாகத்தான், ஞானஸ்நானத்திற்குத் தூது மதியவேளையின்போது கொடுப்பதற்கும், ஏப்ரல் 16-ஆம் தேதி, மாலையன்று நினைவுகூருதல் ஆராதனைக்கென்றும், கார்நீஜீ அரங்கை ஏற்பாடு பண்ணியிருந்தோம். பத்துச் சகோதரர்களும், 31 சகோதரிகளும், கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற பலியினால் சாத்தியமான மீட்பின் மீதான விசுவாசத்தையும், தாங்கள் பாவத்தைத் துறந்ததையும், மரணம் வரையிலுமாக சுயத்தைப் பலிச்செலுத்தி இயேசுவின் அடிச்சுவடுகளில் நடந்திடுவதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பையும் வெளிப்படையாய் அறிக்கைப்பண்ணின பிற்பாடு, பைபிள் ஹவுஸ் பேப்பிஸ்டிரியில் (Bible House Baptistry) வைத்து, மரண – ஞானஸ்நானத்தைத் தண்ணீரில் அடையாளப்படுத்தினார்கள்.

அந்நிகழ்வும், அந்நாளும்

நினைவுகூருதல் ஆராதனையின்போது, சரித்திரத்தினுடைய இந்த மாபெரும் நிகழ்வானது ஏன் வாரந்தோறும், மாதந்தோறும், காலாண்டுதோறும் என்றில்லாமல் வருடந்தோறும் ஆசரிக்கப்படுகின்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த ஒருநாளோ (அ) மணி நேரமோ (அ) வேளையோ விசேஷித்த முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக அது வருடாந்தர ஆசரிப்பாகவே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இப்படியாக ஆசரிக்கப்படும்போதே, அது உரிய தாக்கத்தினை மனதில் பதியப்பெற்றிருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி, அது உலகமெங்கும் அதேவேளையில் (அ) மணி நேரத்தில் அல்லது அதேநாளில்கூட ஆசரிக்கப்பட முடிகிறதில்லை; நேரத்தின் வித்தியாசம், அவ்வளவுக்குக் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு நாம் அலிகெனியில் (Allegheny) ஆசரிக்கும்போது லண்டனிலுள்ள சகோதரர்கள் ஆசரித்து முடிந்து, நடுராத்திரி தாண்டி, அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். மேலும் நாம் அவர்களோடுகூட ஒரேவேளையில் இங்கு ஆசரிப்பது என்பது, மிகவும் நேரமே ஆசரிப்பதாகக் காணப்படும். இதேமாதிரியான பிரச்சனை, பஸ்காவை ஆசரிக்கும் விஷயத்தில் யூதர்களுக்கும் இருந்துள்ளது. வரலாறானது ஆதித் திருச்சபையாரும் இதே பிரச்சனையைச் சந்தித்தார்கள் என்றும், இதைச் சரிப்படுத்துவதற்காக நமது கர்த்தருடைய மரணத்தைப் பஸ்கா நாளுக்கு அருகாமையிலுள்ள வாரத்தினுடைய ஒரு நாளில் – புனித வெள்ளியன்று ஆசரிப்பதாக முடிவு செய்யப்பட்டது என்றும் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த ஏற்பாட்டின் நிமித்தம் மூன்று நன்மைகள் உள்ளது; அவை:

(1) இது அந்தச் சிறப்புமிக்க வாரத்தினுடைய நிகழ்வுகள் அனைத்தையும் மனதிற்கு முன்பாக ஒன்று சேர்க்கின்றது; அந்நிகழ்வுகள் பின்வருமாறு: குருத்தோலை ஞாயிறன்று, யூதர்களின் இராஜாவென நமது கர்த்தர் கழுதையின்மீது ஏறிவந்தார்; திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆலயத்தில் போதித்தல்; வியாழனன்று பஸ்காவிற்கு ஆயத்தம்பண்ணப்படுதல்; இரவன்று பஸ்கா இராப்போஜனம் புசிக்கப்படுதல், பின்னர் நமது நினைவுகூருதல் இராப்போஜனமானது ஏற்படுத்தப்படுதல், பின்னர் யோவான் 14 -17வரையிலான அதிகாரங்களில் இடம்பெறும் படிப்பினைகள் கொடுக்கப்படுதல் மற்றும் ஜெபம் ஏறெடுக்கப்படுதல், பின்னர் கெத்செமனே அனுபவங்கள், காய்பாவின் அரண்மனையில் அனுபவங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை காலையில் ஆலோசனை சங்கத்தினர் முன்பாக மற்றும் பிலாத்துவின் அரண்மனையிலும் மற்றும் ஏரோதின் அரண்மனையிலும் ஏற்பட்ட அனுபவங்கள், பின்னர் கல்வாரியின் காட்சிகள் மற்றும் யோசேப்பின் புதிய கல்லறைக் காட்சி; சனிக்கிழமையன்று நமது கர்த்தர், நம்பிக்கை அவருக்குள் புதைக்கப்பட்ட நிலையில், அவர் மரித்துக் காணப்பட்டார். ஞாயிறு புதிய நம்பிக்கைகளுள்ள உயிர்த்தெழுதலின் நாளாய்க் காணப்பட்டது; அது புதிய நம்பிக்கைகளும், உணர்வுகளுமுள்ள ஈஸ்டர் நாளாகும்.

(2) இது புனித வெள்ளியையும், ஈஸ்டர் ஞாயிறையும் ஆசரிப்பவர்களுடன் நம்மை நெருக்கமான உறவிற்கும், இணக்கத்திற்கும் கொண்டுவருகின்றது; மற்றும் நினைவுகூருதலை வியாழன் மாலையன்று நாம் ஆசரிப்பதானது, அவர்களுக்கு அந்தத் தேதியினுடைய சரியான தன்மையைக் குறித்து யோசனையை/கருத்தினை எழுப்புகின்றதாகவும் மற்றும் அடிக்கடி ஆசரிக்கப்படுவதற்கான அதிகாரம் மற்றும் ஞானம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பிடவும் செய்கின்றது.

(3) நாகரிகமடைந்துள்ள தேசங்களில், புனித வெள்ளி என்பது பொதுவாய்ச் சட்டப்பூர்வமான விடுமுறையாய்க் காணப்படுகின்றது மற்றும் நமது கர்த்தருடைய மரணநாள் தொடர்புடையதான விலையேறப்பெற்ற ஞாபகார்த்தங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தின்மீதும் நம் மனங்களைப் பிரயோகித்திட நல்ல வாய்ப்புக் கிடைக்கின்றது.
அனைவராலும் அதே இரவிலும், வேளையிலும் ஆசரிக்கமுடியாது என்பதினால், சபையார் ஈஸ்டர் ஞாயிறுக்கு முன்புவரும் வியாழன் இரவில் இனிமேல் ஆசரிப்பைக் கொண்டிருப்பதற்கு மேற்கூறிய வாதங்களைக் கருத்தில்கொள்ளும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்பொழுது அதே கருத்துதான் எங்கும் சிதறிக் காணப்படும் அருமை நண்பர்கள் அனைவருக்கும் முன்வைக்கப்படுகின்றது.

இதை என்னை நினைவுகூரும்படிச் செய்யுங்கள்

அத்தருணமானது வழக்கம்போலவே, நமது கர்த்தர் “வானத்திலிருந்து இறங்கிவந்த அப்பம்” நமக்காகப் பிட்கப்பட்டது என்று உணர்ந்து பங்கெடுக்கப்பட்ட போது பயபக்திக்குரியதாகவே காணப்பட்டது. அது “அன்பனைத்திலும் உயர்ந்ததான தெய்வீக அன்பினுடைய” சான்றாய் இருக்கின்றது என்று நாங்கள் அடையாளங்கண்டபோது, நாங்கள் களிகூர்ந்தோம். நாம் பாவிகளாகவே காணப்பட்டபோதே, தேவன் இவ்வளவாய் நம்மை அன்புகூர்ந்துள்ளார் என்றால், நாம் “மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிறதை” இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு நாம் – தினந்தோறும் நாடிடுவதை அவர் காண்கையில், அவர் இப்பொழுது எவ்வளவாய் நம்மை அன்புகூர்ந்திடுவார் என்று எங்கள் இருதயங்களில் உறுதியடைந்தபோது, நாங்கள் மீண்டுமாய்க் களிகூர்ந்திட்டோம்.

அப்பமானது, நமக்காக இயேசுவினால் பலிச்செலுத்தப்பட்டுள்ளதான மனித உரிமைகளை நமக்குக் குறிப்பிடுகின்றதாய் இருந்தது; இதை விசுவாசிக்கிறவர்களாகிய நாம் புசித்து – விசுவாசத்தின் மூலமாய் நம்முடையதாக்கிக்கொள்கின்றோம் மற்றும் ஆதாமினால் ஆதியில் பெற்றிருக்கப்பட்டதான உரிமைகள் அனைத்திற்கும் நீதிமானாக்கப்பட்டவர்களாய்க் கருதப்படுகின்றோம். பின்னர் அப்போஸ்தலனின் வார்த்தைகளிலிருந்தும், இன்னும் படிப்பினையைப் பெற்றுக்கொண்டோம் “நாம் – பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17)

“பாத்திரமானது” நமது கர்த்தருடைய இரத்தத்திற்கு – அவரது மூன்றரை வருடக்கால ஊழியத்தின்போது ஊற்றப்பட்டதும், கல்வாரியில் எஞ்சியதும் ஊற்றப்பட்டதுமான அவரது ஜீவனிற்கு அடையாளமாய் இருக்கின்றதென நாங்கள் அடையாளம் கண்டுகொண்டோம். அது நமக்காகச் சிந்தப்பட்டது; ஆம் “பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்பட்டது.” அது நமது மீட்பருடைய விலாவில் சேவகனால் ஈட்டியினால் குத்தப்பட்டபோது, வழிந்திட்டதான இரத்தமல்ல. இல்லை, இதற்கு முன்பே, அவர் ஏற்கெனவே மரித்துவிட்டார். இரத்தம் என்பது ஜீவனை அடையாளப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும் மற்றும் ஈட்டி குத்தப்படுவதற்கு முன்னதாகவே நமது கர்த்தருடைய ஜீவனானது (அ) ஆன்மாவானது மரணத்திற்குள் ஊற்றப்பட்டுவிட்டது. இதற்கான அவசியத்தினை நாம் தேவனுடைய பிரமாணத்தின்கீழ்ப் பார்த்திட்டோம்; அதாவது, “இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது” என்பதில் பார்த்திட்டோம். நாங்கள் துக்கமடைந்திட்டாலும், மீண்டும் களிகூர்ந்து, கர்த்தருக்கு எங்களுடைய இருதயங்களில்:

“அவரது இரத்தம் அழுக்குகளைச் சுத்திகரிக்குமே.
அவரது இரத்தம் எந்தனுக்குப் பயன்படுத்தப்பட்டதே” என்று பாடினோம்.

“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?” எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளின் மூலமான பரிசுத்த ஆவியினுடைய போதித்தலின் வாயிலாக, “பாத்திரத்திற்கு” இன்னும் ஆழமான அர்த்தத்தினைப் பெற்றுக்கொண்டோம்; (1 கொரிந்தியர் 10:16) இப்படியாகப் பார்க்கும்போது, “நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்” எனும் நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு ஆழமான அர்த்தமிருக்கும் என்று உணர்ந்தோம்; “என்னுடைய அவமானத்திலும், மரணத்திலும் பங்கெடுங்கள்; என்னுடைய அடிச்சுவடுகளில் நடவுங்கள்; இப்படிச் செய்வீர்களானால் நீங்கள் மெய்யாகவே என் சீஷர்களாய் இருப்பீர்கள் மற்றும் நான் இருக்கும் இடத்தில், என் சீஷனும் இருப்பான்” எனும் அர்த்தத்தில் நமது கர்த்தருடைய வார்த்தைகள் காணப்படுகின்றது என்று உணர்ந்தோம்.

மாபெரும் அப்பத்தின் ஒரு பாகமாக, அவரோடுகூடப் பிட்கப்படுவதற்குமான சிலாக்கியத்திற்காகவும் மற்றும் அவரது பாத்திரத்தில் பானம்பண்ணி, கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிடுவதற்குமான சிலாக்கியத்திற்காகவும் மற்றும் “அவரோடுகூடப் பாடுகள் பட்டோமானால், அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்” என்ற வாக்குறுதியுடன்கூட உள்ள இச்சிலாக்கியங்களுக்காகவும் நாம் தேவனுக்கு நன்றி செலுத்தினோம்.

சுமார் 550 பேர் அங்குக் காணப்பட்டார்கள் மற்றும் இதில் அநேகமாக 525 பேர் பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குமான அடையாளங்களில் பங்கெடுத்தார்கள். பின்னர் துதிப்பாடல் ஒன்றைப் பாடிவிட்டு, அன்று இரவில் காட்டிக்கொடுக்கப்படுதலின், அடுத்த நாளில் பின்தொடர்ந்திட்ட பாடுகளின் காட்சிகளை நினைவுகூர்ந்திட வெளியேறினோம்/கலைந்துசென்றோம்.