What pastor Russel Said
கேள்வி (1916) -1- பஸ்காவானது முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதி மாலையிலும், வருடாந்தர பாவநிவாரண நாளானது ஏழாம் மாதத்தினுடைய 10-ஆம் தேதியிலும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது? பதில்: ஏனெனில் தேவன் அவைகள் வெவ்வேறானவைகளாக இருப்பதற்கு விரும்பிட்டார். இந்த இரண்டு காரியங்களும் ஒன்றோடொன்று நேரடியான தொடர்பு இல்லாதவையாகும். ஒன்று முதற்பேறானவர்களின் சபையைக் கடந்துபோகுதலுக்கு நிழலாய் இருக்கின்றது; மற்றொன்றோ ஆயிரவருட யுகத்தின்போது பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்கு ஆயத்தமாகவும், அடிப்படையாகவும் காணப்படத்தக்கதாகச் சுவிசேஷயுகத்தில் கிறிஸ்துவும், சபையும் பாடுபடுகிறதற்கு நிழலாய் இருக்கின்றது. பஸ்கா ஆட்டுக்குட்டியானது, இயேசுவினுடைய மரணத்தையும், இந்த யுகத்தில் அவரது ஜனங்களைக் கடந்துபோகுதலையும் மாத்திரமே அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் இதன் காரணமாக இயேசு மற்றும் சபையின் மரணத்தையும், வரவிருக்கும் யுகத்தில் உலகம் ஆசீர்வதிக்கப்படுவதையும் அடையாளப்படுத்தும் இன்னொரு மற்றும் வேறொரு நிழல் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டும் தனித்தனியாகக் காணப்பட தேவன் விரும்பிட்டார். ஒன்று இயேசுவின் மரணத்தினைக் குறிப்பிட்டது மற்றும் இன்னொன்று, வேறொரு நிழலாய்க் காணப்படத்தக்கதாகக் கொடுக்கப்பட்டது.