Over Land Monthly / ஆங்கிலத்தில் பக்கம் 93
இஸ்ரயேலர்களால் ஆசரிக்கப்பட்டதான முதன்மையான நினைவுகூருதல் என்பது பஸ்கா ஆகும். பஸ்கா என்பது இஸ்ரயேலர்களினுடைய சரித்திரத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றிற்கான ஆசரிப்பாகும். பாவநிவாரண நாளானது அவர்களது சிவில்/மதச்சார்பற்ற ஆண்டினுடைய துவக்கத்தில் இடம் பெறுவது போன்று, இந்தப் பஸ்காவானது அவர்களது மதச்சார்புடைய ஆண்டின் துவக்கத்தில் இடம்பெறுகின்றதாய் இருக்கின்றது. இந்தப் பஸ்கா என்பது, அவர்களது தேசத்தினுடைய பிறப்புத் தொடர்புடையதாய் இருக்கின்றது. அந்தக் குறிப்பிட்டக் காலப்பகுதியில் தேவன், எகிப்தின் அரியணையில் அடிப்பணியாத மனமுடைய பார்வோனைக் கொண்டுவந்தார் என்பதாக வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. அரியணையை அடைவதற்கு மற்ற நபர்கள் வரிசையில் காணப்பட்டிருந்தாலுங்கூட இந்த மனிதன் அரியணையை அடையத்தக்கதாக, தேவன் விசேஷமாய் உதவினார் என்று – இம்மனுஷனுடைய இயல்பான வணங்கா கழுத்துத் தன்மையின் மூலமாகவும், வீண் பிடிவாதத்தின் மூலமாகவும், இவரது நடத்தையானது அவசியமாக்கிவிடும் மற்றும் ஏற்றதாக்கிடும் வாதைகள் ஒவ்வொன்றிலும் தெய்வீக வல்லமையானது வெளிப்படத்தக்கதாக, இம்மனுஷன் அரியணையை அடைவதற்கு, தேவன் இவருக்கு விசேஷமாய் உதவினார் என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்திராகமம் 9:16) என்று நாம் வாசிக்கின்றோம். எகிப்தியர்கள்மீது அனுப்பப்பட்டதான பத்து வாதைகளானது, இவர்கள் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை அநியாயமாய் நடத்தினதற்கு எதிரான தெய்வீக நீதியினுடைய வெளிப்படுத்துதல்களாயிருந்தன. பத்து வாதைகளில், இறுதியான வாதையானது, பஸ்கா/கடந்துபோகுதல் எனும் நமது பாடத்தோடு தொடர்புடையதாய் இருக்கின்றது. எகிப்தியர்களின் முதற்பேறானவர்கள் அனைவரும் மரிக்க வேண்டும் என்பதாகவும், இஸ்ரயேலர்களின் முதற்பேறானவர்கள் மரிக்கக்கூடாது என்பதாகவும் ஆணை அனுப்பிவைக்கப்பட்டது. எகிப்தில் தங்கியிருக்கின்றதான தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களோ, தங்களை எகிப்தியர்களிடமிருந்து வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்திக் காண்பிக்கத்தக்கதாக விசேஷமான ஏற்பாடுகளைச் செய்திடுவதற்குக் கட்டளையிடப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கென்று பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டியினைத் தெரிந்துகொண்டு, அதை முதலாம் மாதத்தினுடைய பத்தாம் தேதியன்று வீட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அதை அவர்கள் பதினான்காம் தேதிவரை பேணி, பராமரித்து, பின்னர் அதை அடிக்க வேண்டும். அதன் இரத்தமானது வெளி வீட்டுவாசலினுடைய நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்கப்பட வேண்டும் மற்றும் அதன் எலும்புகள் எதுவும் முறிக்கப்படாத நிலையில், அதன் மாம்சமானது நெருப்பில் சுடப்பட வேண்டும். அது பதினான்காம் தேதி இரவிலேயே கசப்பான கீரைகளுடனும், புளிப்பில்லாத அப்பங்களுடனும் புசிக்கப்பட வேண்டும். அடுத்தநாள் காலையில் இந்த உணவினுடைய பலத்தினால், அவர்கள் எகிப்திலிருந்து, ஆபிரகாமோடு பண்ணப்பட்டதான உடன்படிக்கையின்கீழ்ச் சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாக வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குப்புறப்பட வேண்டும்.
மோசேயின் வாயிலாக கர்த்தர் முன்னுரைத்திருந்தவைகள் போலவே விளைவுகள் நிகழ்ந்தது. எகிப்தியர்களின் முதற்பேறானவர்கள் அந்த இரவில் மரித்தார்கள் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களின் முதற்பேறானவர்களோ கடந்துபோகப்பட்டார்கள் (அ) தப்புவிக்கப்பட்டனர். குறிப்பிடத்தக்கதான இந்த அற்புதமானது, தெய்வீகக் கட்டளையின் பேரில் நினைவுகூரப்பட்டது மற்றும் ஒவ்வொரு வருடமும், இதற்கான காலப்பகுதியில், ஒரு குடும்பத்திற்கு (அ) கூட்டத்தாருக்கு ஓர் ஆட்டுக்குட்டியென, இஸ்ரயேலர்களின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பத்தாம் தேதி அன்று ஓர் ஆட்டுக்குட்டி கொண்டுவரப்படுகின்றது. அவர்கள் குடியிருக்கும் இடங்களிலிருந்து புளிப்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படுகின்றன. சீர்க்கேட்டினை அடையாளப்படுத்துகின்றதான அனைத்தும் சுட்டெரித்துப்போடப்பட்டது மற்றும் புளிப்பில்லாத அப்பம் மாத்திரமே, ஆட்டுக்குட்டியின் மாம்சத்தோடு புசிக்கப்பட்டது. வருடந்தோறும் பஸ்காவானது, எட்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது மற்றும் முதலாம் நாளும், எட்டாம் நாளும் பிரதான நாட்களாக இருக்கின்றன (அ) விசேஷமாய் ஆசரிக்கப்பட வேண்டிய நாட்களாய் இருக்கின்றன. சமீபத்தில் நாங்கள் எருசலேமுக்குச் சென்றபோது, பஸ்காவானது பழமையான யூத முறைமையாக மாத்திரம் காணப்படாமல், அந்தத் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களுடைய மிகுந்த சந்தோஷகரமான பண்டிகையாகவும் காணப்படுகின்றது என்பதை நாங்கள் அறிந்திருந்தபடியால், எருசலேமில் பஸ்கா காலத்தின்போது காணப்படத்தக்கதாக காலத்தினைத் திட்டமிட்டுச் செயல்பட்டோம். இஸ்ரயேலானது அவர்களுக்கு ஆதிக்காலங்களில் பாராட்டப்பட்டதான தெய்வீகத் தயவுகளில் ஒன்றினைக் கொண்டாடுகின்றது மற்றும் இவ்வாசரிப்பானது, வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி இன்னும் எதிர்க்காலத்தில் தேவன் இன்னும் குறிப்பிடத்தக்க விதத்தில் தம்மை வெளிப்படுத்துவது குறித்த தீர்க்கத்தரிசனங்களை அவர்களுக்கு நினைப்பூட்டுகின்றது; “ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரயேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், இஸ்ரயேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 16:14,15). மீண்டுமாக “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 31:31,32) என்பவைகளை நினைப்பூட்டுகின்றது. இங்கு, பஸ்கா காலத்தின்போது எகிப்திலிருந்துள்ள இந்த விடுதலையானது, அதாவது தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடைய கடந்தகால சரித்திரத்தின் மிகவும் சிறப்புமிக்க இந்நிகழ்வானது, இஸ்ரயேலுடன் புதிய உடன்படிக்கையானது ஏற்படுத்தப்படுவதற்கு ஏற்றக்காலம் வருகையில் முழுமையாய்த் திரைக்குள் மறைந்துபோய்விடும் என்பதாக மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது; புதிய உடன்படிக்கையானது பிரமாணம் மற்றும் திவ்விய கோரிக்கைகள் தொடர்புடைய விஷயத்தில் பழையது, ஆனாலும் மேன்மையான பலிகளின் காரணமாகவும், மேலான மத்தியஸ்தரின் காரணமாகவும் புதியதாயுள்ளது; சீனாயின் உடன்படிக்கையினுடைய மத்தியஸ்தராகிய மோசே, ஜனங்களுக்கு அவர்களுடைய மத்தியஸ்தராகப் பணிபுரிந்திடுவதற்கான தனது பிரயாசங்கள் அனைத்திலும் உண்மையாயிருந்து செய்தவைகளைக்காட்டிலும், இந்த மேலான மத்தியஸ்தர் இஸ்ரயேலுக்கு மேன்மையானவைகளைச் செய்வார். இந்த மேலான மத்தியஸ்தர் மற்றும் இவராலான மேன்மையான உடன்படிக்கைக்குறித்தே மோசே, “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல (ஆனால் பெரியவர் … என்னுடைய நிஜமானவர்) ஒரு தீர்க்கத்தரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிக்கொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்” என்று கூறினார் (உபாகமம் 18:15; அப்போஸ்தலர் 3:22,23).
பஸ்கா அன்று மாலையில், ஒவ்வொரு யூத குடும்பமும், அதற்கு ஆயத்தமான நிலைமையில் காணப்பட்டனர். யூத ஆண்டு குறிப்பேட்டின்படியான (calendar) முதலாம் மாதத்தினுடைய பத்தாம் தேதியைத் தாண்டி நாங்கள் எருசலேமுக்கு வந்தபடியால், குடும்பங்கள் ஆட்டுக்குட்டிகளைத் தெரிந்தெடுப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. ஆட்டுக்குட்டிகள் ஏற்கெனவே வீடுகளுக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. ஆசரிப்பிற்கான பல்வேறு ஆயத்தங்கள் பண்ணப்பட்டதான காலப்பகுதியில் நாங்கள் அங்குக் காணப்பட்டதால், அவைகளை நாங்கள் பார்த்தோம். ஒவ்வொரு வீட்டாரும் அவ்வாசிரிப்பிற்காக வீட்டைச் சுத்தம் செய்தனர் மற்றும் பழைய எலும்புகளும் (அ) அழுகினதும், துர்நாற்றம் வீசுகிறதுமான எந்த ஒரு பொருளும் மற்றும் அழுகின நிலையிலுள்ள எந்த ஓர் உணவும் காணப்படுகின்றதாவென மூலை முடுக்கெல்லாம் தேடப்பட்டது மற்றும் கழிவுப்பொருட்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்டன. இவைகள் மாத்திரமல்ல, இப்படிச் சுத்தம்பண்ணின பிற்பாடு, ஓர் ஆச்சாரமான முறைமையும் செய்யப்படுகின்றது. வீட்டின் தலைவர், எரியும் மெழுகுவர்த்தியுடன், வீட்டார் பின்தொடர்ந்துவர, முழு வீட்டையும் சோதனையிடுகின்றார். ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதும், சுடப்படுவதும் ஒருவிதமான முறையில் செய்யப்படுகின்றது. ஆட்டுக்குட்டியினுடைய சரீரத்திற்குள் நீளவாக்கில் ஒரு கம்பு விடப்படுகின்றது மற்றும் சிலரால் குறுக்காகவும் ஒரு கம்பு விடப்படுகின்றது மற்றும் இப்படியாக திட்டமிடாமலேயே சிலுவையின் கருத்தானது கொடுக்கப்படுகின்றது; தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் மனங்களிலும், தங்களது ஆட்டுக்குட்டியானது சிலுவையில் அறையப்பட்டதான இயேசுவையே குறிக்கின்றதாகவே இருக்கின்றது.
குடும்ப அங்கத்தினர்கள் உணவைச்சுற்றிக் கூடிக்கொள்கின்றனர் மற்றும் அநேகர் இன்று கத்திகளையும், முள் கரண்டிகளையும் (forks), கரண்டிகளையும் (spoons) பயன்படுத்தினாலும், ஜனங்களில் சிலர் ஆதிக்காலங்களினுடைய வழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, தங்கள் விரல்களையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் நவீன கால மெல்லிய, முறுகலான புளிப்பில்லாத அப்பங்களைப் (matzo) பயன்படுத்துகின்றனர்; ஆனால் அநேகர் தடிமனான அப்பம் போன்றதான பழைய வழக்கத்தின்படியான புளிப்பில்லாத அப்பத்தையே பயன்படுத்தினார்கள். இந்த அப்பங்களானது கடினமானவைகளாகவும், எளிதில் மடக்கத்தக்கவைகளாகவும் இருந்தன. அப்பங்களில் ஒன்றினை மடக்கும்போது, அது கரண்டிபோல் பயன்படுத்தப்பட்டு, உண்ணப்படுகின்றது மற்றும் சிலசமயங்களில் விசேஷித்த சுவைக்காக அவைகள் இரசங்களில் தோய்த்து உட்கொள்ளப்படுகின்றன. முதல் பஸ்கா நிகழ்வின்போது, இஸ்ரயேலர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தரித்தவர்களாகவும், வாக்களிக்கப்பட்டத் தேசத்திற்கு உடனடியாகப் புறப்படும் வண்ணம் ஆயத்தத்துடன் காணப்பட்டவர்களாகவும் இருந்ததுபோல, இதை நினைப்பூட்டும் வண்ணமாகவே புசித்தல் விஷயங்கள் அனுசரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், மோசேயால் கட்டளையிட்டதுபோல குடும்பத் தலைவர் குடும்பத்தாருக்கு இவ்வாசரிப்பிற்கான அர்த்தத்தினையும், யூத ஜாதியினுடைய ஆரம்பம் தொடர்புடையதான அதன் துவக்கத்தையும் விவரிக்கின்றார். இந்த ஆட்டுக்குட்டியினைப் புசித்தலானது, பிரமாணத்தின்படி, முதலாம் மாதத்தினுடைய பதினான்காம் தேதிக்குரியதாகும். பின்வரும் பதினைந்தாம் தேதி அன்று, பார்வோன் மற்றும் செங்கடலின் வல்லமையிலிருந்ததான மாபெரும் விடுதலையின் நிமித்தமான சந்தோஷத்தின் பண்டிகை ஆரம்பமாகுகின்றது. அந்த எட்டு நாட்கள் அளவும் எருசலேமில் தங்கும் சிலாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பண்டிகையினுடைய முதலாம் மகா நாளில் பரிசுத்த நகரமானது, அதன் உச்சப்பட்சமான மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது.
அங்குக் காணப்பட்டதான ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்களாய்க் காணப்பட்ட யூதர்களுக்கு மாத்திரமாக இந்தக் காலப்பகுதி விசேஷமானதாய்க் காணப்படாமல், ஜனத்தொகையில் அதிகளவு வகிப்பவர்களான கிரேக்க மற்றும் அர்மேனியன் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அக்காலமானது ஜெபிப்பதற்கான தருணமாகவும், விடுமுறைக்காலமாகவும் காணப்படுகின்றது. பழமை வாய்ந்த கிறிஸ்தவ சமுதாயத்தினர்கள் இன்னும் யூத காலக்கணக்கீட்டின்படியான, ஆதித் திருச்சபையின் பாணியிலேயே நமது கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் தேதிகளை ஆசரிக்கின்றனர்; யூதக் காலக்கணக்கீட்டின்படியான ஆதித் திருச்சபையின் பாணியிலிருந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாவே ரோம கத்தோலிக்கச் சபையும், அதன் மகள்கள் அமைப்பும் கொஞ்சம் வேறுபட்டு போய்விட்டது. இதனால்தான் இந்த வருடம் (இப்பாடம் எழுதப்பட்ட வருடம்) ரோம கத்தோலிக்கன், எபிஸ்கோப்பலியன், லூதரன் சபைகள் புனித வெள்ளியையும், ஈஸ்டர் ஞாயிறையும் மார்ச் 25 மற்றும் 27-ஆம் தேதிகளில் கொண்டாடினார்கள்; ஆனால் நாங்கள் எருசலேமில் பார்த்ததான ஆசரிப்பானது ஒரு மாதம் தாண்டி, அதாவது ஏப்ரல் 22-24- ஆம் தேதிகளில் ஆசரிக்கப்பட்டன. ஆகையால் கிரேக்க மற்றும் அர்மேனியன் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியையும், ஈஸ்டர் ஞாயிறையும் கொண்டாடினதையும் நாங்கள் காண முடிந்தது.
முப்பத்தைந்து நூற்றாண்டுகள் காலமாக, தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக “பஸ்கா நினைவுகூருதலை, அதன் வெளித்தோற்றமான முக்கியத்துவத்தை மாத்திரம் நோக்கினவர்களாகவும், ஆனால் ஒரு கணம்கூடத் தாங்கள் ஆசரிக்கின்றதான காரியத்தினுடைய உண்மையான அர்த்தத்தைச் சிந்தித்துப்பார்க்காதவர்களாக, அதாவது தங்களுக்கும், மனுக்குலம் யாவற்றிற்கும் மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் தெய்வீகத் திட்டத்தினுடைய ஒரு பிரம்மாண்டமான அம்சத்திற்குப் பஸ்கா நிழலாய்க் காணப்படுகின்றது என்பதைச் சிந்தித்துப்பார்க்காதவர்களாக ஆசரித்து வந்தார்கள். அவர்கள் அடித்த ஆட்டுக்குட்டியானது, இயேசுவாகிய “தேவ ஆட்டுக்குட்டிக்கு” நிழலாய் இருக்கின்றது; இயேசுவின் மரணமனாது, முழு உலகத்தினுடைய பாவங்களுக்கான மீட்கும் பொருள் விலைக்கிரயமாகக் காணப்படுகின்றது. ஆபிரகாமுக்கும் மற்றும் இவர் மூலமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குமான வாக்குத்தத்தமானது, நிறைவேறுவதற்கு முன்னதாக, இயேசுவின் மரணம் சம்பவிப்பது அவசியமாய் இருந்தது. பாவத்திலிருந்ததான ஒரு மீட்பானது, நித்தியமான பயனை உடையதாகக் காணப்படுவதற்கு, வருடந்தோறும் பலிச்செலுத்தப்பட்டுவரும் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினுடைய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலி அவசியமாயுள்ளது. (ஆதாம் மற்றும் அவரது சந்ததியாகிய) மனுக்குலத்திற்கான பலியாக, தமது ஜீவனை அளிக்கத்தக்கதாக இயேசு மனிதனாகுவது மாத்திரம் அவசியமாயிராமல், இன்னுமாக பலியின் வேலையை முடித்தப் பிற்பாடு அவர் யேகோவா தேவனின் வலது பாரிசத்தில் ஆவிக்குரிய மேசியாவாகக் காணப்படத்தக்கதாகப் பரத்திற்கு ஏறவும் வேண்டியிருந்தது; தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் நம்புகிறதும் மற்றும் தாங்கள் மேசியாவின் ஆசீர்வாதங்களைச் சகல ஜாதிகளுக்கும், ஜனங்களுக்கும் பாஷைக்காரர்களுக்கும் வழங்குவதற்கெனப் பயன்படுத்தப்படுவார்கள் என்பதாகவுமுள்ள ஆபிரகாமுடனான உடன்படிக்கையில் தங்களுக்குப் பண்ணப்பட்டதான கிருபையான வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் இவர்களுக்காக இந்த ஆவிக்குரிய மேசியா ஏற்றக்காலத்தில் நிறைவேற்றிடுவார். பாவத்தின் நிமித்தமான ஓர் ஆக்கினைத் தீர்ப்பு உலகத்தின்மீது காணப்பட்டது; “பாவத்தின் சம்பளம் மரணம்.” இந்த மரணத் தண்டனைத் தீர்ப்பானது முழுமையாகவும், என்றென்றுமாகவும் புறம்பாக்கிப்போடப்படுவதற்கு முன்னதாக, மனிதன் முற்றிலுமாகவும், என்றென்றுமாகவும் மரண நிலைமைகளிலிருந்து நித்திய ஜீவனுக்கும், அவனது சிருஷ்டிகருக்கு இசைவான நிலைக்கும் உயர்த்தப்படுவதற்கு முன்னதாக, மனிதனுக்கான தண்டனை சந்திக்கப்பட வேண்டும். தெய்வீக ஏற்பாட்டிற்கு இசைவாக இயேசு முதலாவதாக தம்மை இஸ்ரயேலுக்கு, அவர்களது இராஜாவென முன்வைத்தார். ஆனால் அவரிடம் ஐசுவரியமோ, படைகளோ, செல்வாக்குமிக்க நண்பர்களோ இல்லாததினால், அவர்களால் அவரைத் தங்களது மேசியாவெனப் பார்க்கமுடியவில்லை; அவரை வஞ்சகன் என்று அலட்சியப்படுத்தினார்கள். அவர் தம்மைத் தேவகுமாரன் என்றும், அவர்களது இரட்சகர் என்றும் கூறினபோது, அவரைப் போலியானவர் என்றும், தேவனைத் தூஷிக்கிறவர் என்றும், மரணத்திற்குப் பாத்திரமானவர் என்றும் எண்ணினார்கள். அவருக்குத் தங்களது ஆலோசனை சங்கத்திற்கு முன்னதாகத் தீர்ப்பளித்தப் பிற்பாடு, அவருக்கு மரணத்தீர்ப்பை நிறைவேற்றிடுவதற்கு அவர்கள் அதிகாரம் பெற்றிராததால், ரோம தேசாதிபதியினால் செவிக்கொடுக்கப்படுகின்றதான ஒரே குற்றச்சாட்டினை, அதாவது ரோம சக்கிரவர்த்திக்கு எதிரான துரோகம் எனும் குற்றச்சாட்டினை, அவர்மேல் சுமத்தினார்கள். இராஜ துரோக விஷயத்தில் இயேசுவோடுகூடப் பிலாத்துவையும் சம்மந்தப்படுத்திவிடுவார்கள் என்று பிலாத்துவை அச்சுறுத்தி, நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியினை இறுதியில் சிலுவையில் அறைந்துபோட்டார்கள். அவர்கள் தங்களது பஸ்கா ஆட்டுக்குட்டியினைச் சுடுவதற்கெனக் குத்திக்கொல்வதுபோன்றவிதத்தில், அவர் சிலுவையின்மீது அகல கிடத்தப்பட்டார்.
முதலாம் மாதத்தின் பத்தாம் தேதியாகிய ஏற்றவேளையில் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் பஸ்காவிற்கான தங்களது ஆட்டுக்குட்டியினை எடுத்துக்கொள்வது போன்று, இயேசு தம்மைத் தேவ ஆட்டுக்குட்டியாக முன்வைத்தார் மற்றும் அவர் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டார் என்பதையும் நாம் கவனிப்போமாக. அவர் தம்மை முன்வைத்ததானது, துல்லியமாக அதே நாளிலும் மற்றும் சகரியா தீர்க்கத்தரிசியினால் குறிப்பிடப்பட்டுள்ள அதே விதத்திலும் துல்லியமாகக் காணப்பட்டது; “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சகரியா 9:9,10). நாம் ஏற்கெனவே பார்த்துள்ளப்படி இந்தத் தீர்க்கத்தரிசனமானது அப்படியே நிறைவேறினது. தீர்க்கத்தரிசி முன்னுரைத்ததுபோலவே இஸ்ரயேலுக்கான “இரட்டிப்பான” அனுபவங்களானது ஆரம்பித்த அதே நாளில்தானே நிறைவேறினது. சுயதிருப்தியின் காரணமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் குருடாக்கப்பட்டனர் மற்றும் தாழ்மையாய் வந்த இராஜாவினை ஏற்க மறுத்துவிட்டனர் மற்றும் அவரைத் தங்களது பஸ்கா ஆட்டுக்குட்டியாக ஏற்றுக்கொள்வதற்கும் மற்றும் அவரைத் தங்களது இருதயங்களுக்குள்ளும், இல்லங்களுக்குள்ளும் ஏற்றுக்கொள்வதற்கும் மறுத்துவிட்டனர். எனினும் அவர் இந்த அருமையான நிழலினை நிறைவேற்றிடுவதற்குத் தொடர்ந்தார். நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியென அவர் நிழலுக்கு இசைவாக, பதினான்காம் தேதி அன்று மரித்தார்.
தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களில் சிலர், அவர் வாயிலாக ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொண்டனர்; அதாவது தாழ்மையான, கீழ்ப்படிதலான, உண்மையான இருதய நிலையினைப் பெற்றிருந்தவர்களான இயேசுவின் அப்போஸ்தலர்களும், ஜனங்களில் சிலரும் மாபெரும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் இயேசுவின் மூலமான தேவனுடைய கிருபையாகிய ஆட்டுக்குட்டியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் புசித்தார்கள். இவர்கள் இயேசுவினுடைய இரத்தம், “விசுவாச வீட்டாருடைய” இருதயங்களின் நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்கப்படுவதை அடையாளம் கண்டுகொண்டனர். பிற்பாடு இவர்கள் தேவ ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தினை, தங்களது நம்பிக்கைகள், சந்தோஷங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் அனைத்திற்குமான அஸ்திபாரமென ஆசரிப்பதற்கு முடிகின்றவர்களானார்கள் மற்றும் இன்னும் ஆசரித்தும் வருகின்றனர். இவர்கள் தரித்திரராகவோ, ஐசுவரியவான்களாகவோ காணப்பட்டாலும் சரி, பூமிக்குரிய விஷயங்கள் சார்ந்த இவர்களது கனங்கள் அதிகமாகவோ (அ) கொஞ்சமாகவோ காணப்பட்டாலும் சரி, இவர்கள் ஆண்டவருடைய தயவில் தொடர்ந்து வலிமையூட்டுதலை அடைந்தவர்களாக இருந்தனர். உயிர்த்தெழுதலின் மூலமாக இயேசு முதற்பலன் கதிர்க்கட்டான பிற்பாடு, பெந்தெகொஸ்தே நாளின்போது, ஐம்பதாம் நாளின்போது இவர்கள் பிதாவினால் அங்கீகரிக்கப்பட்டார்கள். பிதா இவர்களை உயர்த்தளத்தில் ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பித்து மற்றும் இவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டால், இவர்கள் தேவ ஆட்டுக்குட்டியானவரின் மாபெரும் வெற்றியிலும், பூமிக்குரிய ஆசீர்வாதங்களானது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகிய இஸ்ரயேலுக்கு சீக்கிரத்தில் வரவிருக்கின்றதான ஆவிக்குரிய இராஜ்யத்திலும் பங்காளிகளாகக்காணப்படலாம் என்று இவர்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றார். மேசியா யூதர்களின் இராஜாவாக மாத்திரம் காணப்படாமல், சகரியா தீர்க்கத்தரிசனம் குறிப்பிடுவது போன்று, “அவருடைய இராஜ்யம் ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும் (உலகளாவ) செல்லும்,” ஜாதிகள் அனைத்தும் அவரது வல்லமையையும், மகிமையையும் அடையாளங்கண்டுகொள்ளும் மற்றும் அவருக்கு முன் முழங்கால் யாவும் முழங்கிடும் மற்றும் யேகோவா தேவனுக்கு மகிமையாய் அனைத்து நாவும் அறிக்கையிடும். இந்த யுகத்தின் முடிவில் மேசியா வல்லமையிலும், மகா மகிமையிலும் வெளிப்படும்போது, இஸ்ரயேல் தங்களுக்கு வாக்களிக்கப்பட்டவரான மகிமையான மேசியாவை ஏற்றுக்கொள்வார்கள். இதற்கிடையில் (ஏசாயா 10:21-23-இல் இடம்பெறும் மீதமானவர்களைத் தவிர மற்றபடியுள்ள) இஸ்ரயேல், அவரது ஆவிக்குரிய மணவாட்டியாகுவதற்குத் தங்களுக்கு முதலாவது அளிக்கப்பட்டதான வாய்ப்பினை தவறவிட்டவர்களாய் இருப்பார்கள் (சங்கீதம் 45:9-14). தேவன் இதை முன்னறிந்தவராக, தீர்க்கத்தரிசிகள்மூலம் முன்னுரைத்தும் உள்ளார் (ஏசாயா 10:22; ஏசாயா 1:9). யேகோவா தேவன் மேசியாவின் இராஜ்யமானது, ஆவிக்குரிய ஒன்றாக இருக்கும் என்ற உண்மையினை மறைத்து வைத்தவராய்க் காணப்பட்டார். நியாயப்பிரமாணத்திலோ, தீர்க்கத்தரிசிகள் வாயிலாகவோ ஆவிக்குரிய மேசியா குறித்த எந்த ஒரு வாக்குத்தத்தமும் கொடுக்கப்படவில்லை. ஆதியாகமம் துவங்கி மல்கியா வரையிலுமான வாக்குத்தத்தம் அனைத்தும் பூமிக்குரியவையாகும். ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்டதான வாக்குத்தத்தம்கூட “நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன்” (ஆதியாகமம் 13:15) என்பதாக நாம் வாசிக்கின்றோம். இஸ்ரயேல் இந்த வாக்குத்தத்தத்தினை இழந்துபோகவில்லை. ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததியில் மாத்திரம் மிகவும் முதன்மையான நிலையில் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் குறிப்பிடப்படாமல், விரைவில் ஆபிரகாமும், அவர்களது உண்மையுள்ள தீர்க்கத்தரிசிகள் அனைவரும் “பூமியெங்கும் பிரபுக்களாக (ஆளுபவர்களாக) வைக்கப்படுவார்கள்” (சங்கீதம் 45:16); அப்போது ஆபிரகாமின் சந்ததி மேன்மைப்படுத்தப்பட்டு, சகல ஜனங்களுக்குமான திவ்விய ஆசீர்வாதங்களின் கால்வாயாகக் காணப்படுவார்கள். “தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை.” அவர் தமது புதிய உடன்படிக்கையின்கீழ் மற்றும் மெல்கிசெதேக் என்பதினால் அடையாளப்படுத்தப்படும் அதன் மாபெரும் மத்தியஸ்தர் மற்றும் பிரம்மாண்டமான நிஜமான ஆசாரியக்கூட்டத்தின்கீழ் நல்வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் நிறைவேற்றிடப்போகின்றார் மற்றும் மல்கியா 3:1-3-ஆம் வசனங்களில் முன்னுரைக்கப்பட்டதுபோலவும் செய்யவும் போகின்றார்.
யேகோவா தேவனுடைய திட்டத்தின்படி மேசியாவாகிய இராஜா, தேவனுக்கும், இஸ்ரயேலுக்கும் நடுவில் மத்தியஸ்தராக – மோசேயின் நிஜமானவராக, நீண்டகாலமாய் வாக்களிக்கப்பட்டிருந்த நிஜமான ஆசாரியனாக, இராஜாவாக, மேசியாவாக நிற்பார். அவர் மாம்சத்தில் காணப்படாமல், ஆவிக்குரிய மேசியாவாகக் காணப்படுவார் என்ற உண்மையானது அவரது மகிமையையும், வல்லமையையும் குறைத்துப்போடுவதற்குப் பதிலாக, அதிகமாக்கவே செய்யும். பூமிக்குரிய மகிமையை இஸ்ரயேலர்கள் பெற்றுக்கொள்வார்கள்; அவர்கள் கற்பனைக்கூடப் பண்ணிப்பார்க்கமுடியாத பூமிக்குரிய ஆசீர்வாதங்களை, யேகோவா தேவனால் “இஸ்ரயேலின் இராஜாவாகிய, தாவீதின் குமாரனாக” மிகவும் உயர்த்தப்பட்டவரின் கரங்களினின்று பெற்றுக் கொள்வார்கள். இப்படியாக இஸ்ரயேலிடமிருந்து, புதிய உடன்படிக்கையின்கீழ், இஸ்ரயேலின் மத்தியஸ்தர் வாயிலாக, தேவனை அணுகுவதற்கான ஒரு வழி புறஜாதியார்கள் அனைவருக்கும் திறக்கப்படும். ஆகையால்தான் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து; நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் (இராஜ்யத்துக்கும்) யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் “சீயோனிலிருந்து (ஆவிக்குரிய இராஜ்யத்திலிருந்து) வேதமும், எருசலேமிலிருந்து (சீர்ப்பொருந்தப்பட்ட இஸ்ரயேலின் பூமிக்குரிய இராஜ்யத்திலிருந்து) கர்த்தரின் வசனமும் வெளிப்படும்” (ஏசாயா 2:3) அக்காலத்தில் எருசலேமில் தேவனுடைய இராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென அடையாளம் கண்டுகொள்ளாத ஜாதிகளுக்கு (விசேஷித்த ஆசீர்வாதம்) மழை இருப்பதில்லை.
புறஜாதிகளை ஆசீர்வதித்தல் தொடர்புடையதாக சகரியா தீர்க்கத்தரிசி குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். “அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்” (KJV); “வேற்றினத்தாருக்கு அமைதியை அறிவிப்பார்” (திருவிவிலியம் சகரியா 9:10) என்று வாசிக்கின்றோம். ஆனால் சமாதானத்தின் இந்த ஆசீர்வாதமானது, முதலாவதாக தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குக் கடந்துவந்து மற்றும் இவர்கள் வாயிலாகப் புறஜாதிகளுக்குக் கடந்துசெல்லும். இது மாத்திரமல்லாமல், இதே விஷயங்கள் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் தெரிந்து கொள்ளுதலிலும் பொருந்துகின்றதாய் இருக்கும். தீர்க்கத்தரிசி குறிப்பிட்டிருப்பது போல தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் “மீதியானவர்கள்” மேசியாவிற்காக ஆயத்தமாய் இருந்தார்கள் என்றும், இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்றும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.
இவர்களே நாம் பார்த்திருக்கிறபடி கிறிஸ்தவ சபையின் அப்போஸ்தலர்களாகவும், கிறிஸ்தவ சபையின் ஆதி பிரதிநிதிகளாகவும் காணப்பட்டனர்; ஆனால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கான முதல் வாய்ப்பினைத் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குக் கொடுத்தப் பிற்பாடு, ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததி தொடர்புடைய விஷயத்தில், மேசியா புறஜாதியார்களுக்குத் தயவு பாராட்டினார் மற்றும் சமாதானம் கூறினார். ஆகையால் கிருபையின் சுவிசேஷமானது, அதாவது ஆவிக்குரிய தளத்தில் மேசியாவுடன் பங்காளிகள் (அ) அங்கத்தினர்கள் ஆகுவதற்கான அழைப்பானது, தேவனுடைய வழிநடத்துதலின்படி புறஜாதிகளுக்கு இந்தச் சுவிசேஷயுகம் முழுவதும் கடந்துச் சென்றது கேட்கும் செவிகளை உடையவர்களுக்கும், புரிந்துகொண்டு, கீழ்ப்படியும் இருதயம் உடையவர்களுக்கும் கடந்துசென்றது. இப்படியாக யூதர்கள் மற்றும் புறஜாதிகளிலிருந்து, யேகோவா தேவன், தமது குமாரனாகிய மீட்பருடன் பங்காளிகளாய் இருப்பதற்குப் பாத்திரவான்களாய் இருப்பவர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு வருகின்றார். இவர்களே பல்லாயிரமான பெயர்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் “சிறுமந்தையினராகக்” காணப்படுகின்றனர். இந்தச் சிறு மந்தையினரிடமே மீட்பர், “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32) என்று கூறினார்; அது இஸ்ரயேலை ஆசீர்வதிக்கப்போகின்றதும், இஸ்ரயேல் வாயிலாகச் சகல புறஜாதியாருக்கும், ஆதாமினுடைய இனத்தின் ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் சமாதானம் பேசுகின்றதும், பாவம் மற்றும் மரணத்தின் நிலைமைகளிலிருந்து தேவனுடன் இசைவான நிலைமைக்கும், நித்திய ஜீவனுக்கும் திரும்பிடுவதற்கான முழு வாய்ப்பினை அருளுகின்றதுமான இராஜ்யமாகும்.
ஆ! ஆம், பஸ்காவின் நிழலிலும், நிஜத்திலும் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, தேவனுடைய ஏற்றவேளை வரும்போது விலையேறப்பெற்ற படிப்பினைகளும், ஆசீர்வாதங்களும் காணப்படுகின்றது. தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியில் 18 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவும் குருடான நிலைமையும், தயவினின்று தள்ளப்பட்ட நிலைமையும் என்றென்றுமாகக் காணப்படாமல், முதலாவதாக இஸ்ரயேலிருந்தும், பின்னர் புறஜாதிகளிலிருந்தும், ஆவிக்குரிய தளத்தில், அவரது “தெரிந்துகொள்ளப்பட்ட” பங்காளிகளாக இருக்கப் போகிறவர்களைக் கூட்டிச்சேர்ப்பதுவரை மாத்திரமே நிலவுகின்றதாய் இருக்கும். பின்னர் இஸ்ரயேல், அதன் குருட்டுத் தன்மையினின்று விடுதலையடையும் மற்றும் அவர்கள்மீது ஆசீர்வாதங்கள் திரளாய்க் கடந்துவரும். அவர்கள் ஒரு ஜாதியாக குருடாக்கப்பட்டதும், புறம்பாக்கப்பட்டதுமானவைகள், அவர்கள் ஜாதிக்கே ஆசீர்வாதத்தை உண்டுபண்ணுவதற்குத் தேவனால் நோக்கம் கொண்டிருக்கப்பட்டது. அவர்கள் ஒட்டுமொத்தமாக இரக்கம் பெற்றுக்கொள்ளத்தக்கதாகக் கஷ்டமான நிலைமைகளின்கீழ் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தண்டிக்கப்பட்ட ஜனங்களென ஒன்று சேர வைக்கப்பட்டிருந்தனர் (ரோமர் 25:30-32).
பஸ்கா ஆட்டுக்குட்டியானது புசிக்கப்பட்ட அந்த இரவில் இஸ்ரயேலர்கள் அனைவரும் அபாயத்தில் காணப்படாமல், தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களில் முதற்பேறானவர்கள் மாத்திரமே கடந்துபோகப்பட்டார்கள் என்பது நினைவில் வைக்கப்பட வேண்டும். கொஞ்சம் காலத்திற்குப் பின்னர், அனைத்துக் குடும்பங்களிலுமுள்ள முதற்பேறானவர்களுக்குப்பதிலாக ஒரு கோத்திரத்தை முழுமையாக, அதாவது லேவி கோத்திரத்தைத் தேவன் எடுத்துக்கொண்டார். அப்போதிலிருந்து சங்காரத் தூதனினால் கடந்து போகப்பட்டதன் மூலம் காப்பாற்றப்பட்டவர்களும், ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தினாலும், அதன் மாம்சத்தைக் கசப்பான கீரைகளுடனும், புளிப்பில்லா அப்பத்துடனும் புசித்ததினாலும் காப்பாற்றப்பட்டவர்களுமானவர்கள் இந்த ஒரு கோத்திரத்தினால் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இரண்டு நிழல்கள் இதில் கலந்து காணப்படுகின்றன; அவை:
(1) நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் பற்றியதாக முதல் நிழல் உள்ளது; இவர்களில் மகிமையடைந்த மேசியா, பலிச்செலுத்தின ஆரோனுக்கும் மற்றும் ஆசாரியனாக தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்த மெல்கிசெதேக்குக்கும் நிஜமான மாபெரும் பிரதான ஆசாரியனாய் இருப்பார். ஆரோனின் குமாரர்கள் நற்கீர்த்தியின் மத்தியிலும், துர்க்கீர்த்தியின் மத்தியிலும் தங்கள் ஆண்டவரை மரணம் வரையிலும் பலியில் உண்மையாய்ப் பின்தொடர்ந்த சொற்பமான பரிசுத்தமானவர்களுக்கு அடையாளமாய் இருக்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறபடி இவர்கள் விஷயத்தில் முதலாவதாக தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களே அழைக்கப்பட்டனர். தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிலிருந்து போதுமான எண்ணிக்கையானவர்கள் ஆயத்தமாகாதபோது, மீதமானவர்கள் புறஜாதிகளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டனர், ஏனெனில் இவர்கள் ஆபிரகாமினுடைய விசுவாசத்தினாலும், கீழ்ப்படிதலினாலும் இயக்கப்பட்டவர்களாய்க் காணப்பட்டனர்.
(2) இன்னுமாக உண்மையுள்ள, ஆனால் குறைவான வைராக்கியம் கொண்டிருக்கும் இயேசுவினுடைய பின்னடியார்களாகிய ஒரு வகுப்பார் இருக்கின்றனர்; இவர்கள் நற்கிரியைகள் செய்திருக்கின்றனர், ஆனால் நேர்த்தியாய்ப் பலிச்செலுத்தும் ஆவியில் கொஞ்சம் குறைவுபட்டுப் போனவர்களாகக் காணப்படுகின்றனர். லேவியர்களுக்கு ஒத்திருக்கும் இவர்களும், யூதர்கள் மற்றும் புறஜாதியார்களிடமிருந்து அழைக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.
ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றதான இந்த இரண்டு வகுப்பினரும் ஒன்றாக, “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையில்” அடங்குகின்றனர். இவர்கள் “தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்களாக” இருக்கின்றனர். (யாக்கோபு 1:18) முதலாவது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிலிருந்தும், இரண்டாவது புறஜாதிகளிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய இந்த இரண்டு வகுப்பாரும், எகிப்தின் முதற்பிறப்புகள் சங்கரிக்கப்பட்ட இரவின்போது, கடந்து போகப்பட்டவர்களாகிய இஸ்ரயேலின் முதற்பிறப்புகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆகையால் இயேசுவின் முதலாம் வருகை முதற்கொண்டு, மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதுவரையிலுமான காலப்பகுதியாகிய இந்தச் சுவிசேஷயுகமானது, இருள் (நாகரிகமடைந்த பூமியை) பூமியையும், காரிருள் புறஜாதியரையும் மூடியிருக்கும் இரவுவேளையாய் இருக்கின்றது என்று நாம் பார்க்கின்றோம். பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய (1 கொரிந்தியர் 5:7) இயேசுவின் இரத்தமானது, விசுவாச வீட்டாரினால் வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்படுகின்றது மற்றும் அதன் பாதுகாப்பின்கீழ் அவர்கள் காணப்படுகின்றனர் மற்றும் சத்தியமாகிய புளிப்பில்லாத அப்பத்திலும், விசுவாசியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், தன்னை இணைத்துக் கொண்டதுமான பலியினாலான பலத்திலும், இலவசமான ஆசீர்வாதத்திலும் பங்குகொள்ளலாம்.
இந்தச் சுவிசேஷயுகமாகிய இரவில் தெய்வாதீனமாக மரணத்திலிருந்து, ஜீவனுக்குள் வந்ததான, அதாவது கடந்துபோகப்பட்டவர்களாகிய முதற்பிறப்புகள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்களென எண்ணினதில், நம்மில் அநேகர் பெரிய தவறிழைத்துள்ளோம். தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் மூலம், அவர்களது பஸ்காவில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான நிழலை (அ) காட்சியைப் பார்க்கும்போது, வேறு கருத்து வெளிப்படுகின்றது. இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்பட்டார்கள் என்பதற்குப்பதிலாக, சம்பவப்பதிவானது அந்த இருளான இரவைத் தொடர்ந்து, முதற்பேறானவர்களுக்கு மாத்திரமல்லாமல், இஸ்ரயேலர்கள் அனைவருக்கும் அடிமைத்தனத்தினின்று வெளியேறுவதற்கும், சந்தோஷத்திற்கும், ஆசீர்வாதத்திற்குமுரிய காலை வந்தது. நிழலில் முதற்பேறானவர்கள், இருளிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், வெளிச்சத்திற்கும் மற்றும் விடுதலைக்கும் ஜனங்களை வழிநடத்தும் மதத் தலைவர்களாகிய ஆசாரியர்களாகவும், லேவியர்களாகவுமானதுபோல, யூதர்கள் மற்றும் புறஜாதிகளிலிருந்து இந்தச் சுவிசேஷ யுகத்தில் தெரிந்தெடுக்கப்பட்டதான மேசியாவின் சபையும் இஸ்ரயேலை, அதாவது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் கோத்திரங்கள் அனைத்தையும், பாவம் மற்றும் மரணத்தினுடைய வல்லமையிலிருந்து, ஏற்றக்காலத்தில், அதாவது மேசியாவின் இராஜ்யமாகிய, புதிய யுகத்தினுடைய காலையில் வெளியே கொண்டு வருவார்கள். நிழலில் தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை வெளியே வழிநடத்தின மோசே, ஆவிக்குரிய தளத்திலுள்ள இந்த மாபெரும் மேசியாவிற்கு நிழலாய்க் காணப்படுகின்றார்; இந்த மாபெரும் மேசியா சீக்கிரத்தில் தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரயேலை வெளியே கொண்டுவந்து, நாம் இதுவரையிலும் உணர்ந்திருக்கின்றதான ஆபிரகாமின் வாக்குத்தத்தத்தில் அடங்கும் ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள் மற்றும் தயவுகள் அனைத்தையும் அவர்களுக்கு அருளுவார்.
தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மாத்திரமே எகிப்திய அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்பட்டார்கள் என்பதும், இவர்கள் மாத்திரமே செங்கடலின் வெட்டாந்தரையில் கடந்துசென்றார்கள் என்பதும், மற்றும் இவர்களுக்கு மாத்திரமே வனாந்தரத்தில் விசேஷமான தெய்வீக ஏற்பாடுகள் காணப்பட்டன என்பதுமான உண்மைகளின் நிமித்தமாக, மேசியா ஆபிரகாமின் மாம்சீக சந்ததியாரை மாத்திரமே ஆசீர்வதிப்பார் என்று புரிந்துகொள்ளப்படக்கூடாது. பிதாக்களின் நிமித்தமாக இன்னமும் பிரியமானவர்களாகக் காணப்படுகின்றவர்களும், தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள் கொண்டுவரப்பட்டவர்களுமான தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கே முதலாவதாக ஆசீர்வாதம் கடந்துவரும். மற்ற ஜாதிகள் நிழலில் குறிப்பிடப்படவில்லை, காரணம் மாபெரும் மத்தியஸ்தராகிய மேசியாவின் வாயிலாக, தேவனுடன் உறவிற்குள், ஐக்கியத்திற்குள் அவர்கள் வரவேண்டுமெனில், அவர்கள் சீயோனின் குடிமக்களாகி, அதாவது தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களில் அங்கத்தினர்களாகிட வேண்டும்.
இது சில நல்ல கிறிஸ்தவ ஜனங்களுக்கும், நல்திறமிக்க வேதத்தின் மாணாக்கர்களுக்கும் ஆச்சரியமாய் இருக்கும்; ஏனெனில் இவர்களில் அநேகர் புதிய உடன்படிக்கைத் தொடர்புடையதான தெய்வீக வாக்குத்தத்தங்களினுடைய குறிப்பிட்ட சில அம்சங்களைக் கவனிக்கத் தவறிவிட்டனர். இந்த உடன்படிக்கையானது, தேவனுக்கும், அவரது தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கும் இடையில் பண்ணப்படுமே ஒழிய, வேறெந்த ஜாதியாரோடும் பண்ணப்படுவதில்லை என்று நமக்குத் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆபிரகாமுக்கான தேவனுடைய உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத்தத்திற்கு ஏற்ப இஸ்ரயேல் வாயிலாக, “பூமியிலுள்ள வசம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.” இஸ்ரயேலுடன் புதிய (நியாயப்பிரமாண) உடன்படிக்கைப் பண்ணப்படுதலானது, மற்ற ஜாதியார்களை ஆசீர்வதித்திடும்; காரணம் மோசேயிலும் பெரியவரால் மத்தியஸ்தம் பண்ணப்படுகின்றதான புதிய (நியாயப்பிரமாண) உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின்கீழ் வருவதற்கான வாய்ப்பானது, சகல ஜனங்களுக்கும், ஜாதிகளுக்கும் அருளப்பட்டிருக்கும். அந்த உடன்படிக்கையின்கீழ் வருவது என்பது, மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதும், அதனிலும் மேலான விளக்கம் கொண்டுள்ளதும், நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலுமான அன்பு எனும் தெய்வீகப் பிரமாணத்திற்கு முழுமையாய்க் கீழ்ப்பட்டிருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும். தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை இப்படி முதலாவது ஆசீர்வதிக்கும் மாபெரும் மேசியா, தம்முடைய தயவுகளை ஏற்றுக்கொள்வதற்கும், திவ்வியப் பிரமாணங்களுக்கு இணங்கிடுவதற்கும் விரும்புகின்ற ஜாதிகள் மற்றும் ஜனங்கள் அனைவருக்கும் ஊழியம் புரிந்திட சித்தமாயிருப்பார். இப்படியாகச் சகல ஜாதிகளும் மேசியாவினுடைய ஆளுகையின்போது, படிப்படியாக ஆபிரகாமின் சந்ததியாராகுவார்கள். மேசியாவினுடைய ஆளுகையின் முடிவில் இப்படியாக ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமானது, நிறைவேறும். “உன் சந்ததி வானத்து நட்சத்திரங்கள்போலவும். கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகுவார்கள்.” இங்கு இரண்டு சந்ததிகளும் தெளிவாய்க் குறிப்பிடப்பட்டுள்ளனர்; அவை: (1) ஆவிக்குரிய தளத்திலுள்ள ஆவிக்குரிய (அ) மேசியா சந்ததி, அதாவது நிஜமான ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் நட்சத்திரத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். (2) புதிய உடன்படிக்கையினுடைய மேசியாவின் மத்தியஸ்தம் மூலமாக, பூமியின் சகல ஜாதிகளினுடைய கீழ்ப்படிதலைத் தனக்குள் எடுத்துக்கொள்ளும் இஸ்ரயேலின் நிமித்தமாக, ஆபிரகாமினுடைய சந்ததி பெருகிவரும் மற்றும் மேசியாவினுடைய இராஜ்யத்தின் முடிவில் மனுக்குலம் முழுவதும், தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குள்ளும், தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகவும் காணப்படுவார்கள்; ஏனெனில் மோசேயைக்காட்டிலும் பெரிய இராஜாவுக்கும், ஆசாரியனுக்கும், தீர்க்கத்தரிசிக்கும் செவிக்கொடுக்கவும், கீழ்ப்படியவும் மறுப்பவர்கள், ஜீவனிலிருந்து இரண்டாம் மரணத்திற்குள் – நித்தியமான அழிவிற்குள் அறுப்புண்டுபோவார்கள்.
சபையானது, “பஸ்கா பலியில்” ஒரு பங்கு கொண்டுள்ளதாக நாம் வலியுறுத்துகின்றோம் என்று எண்ணிக்கொண்டதில் விமர்சகர் தவறிழைத்துள்ளார். பஸ்கா ஆட்டுக்குட்டிக்கான நிஜம் நமது கர்த்தர் மாத்திரமே ஆவார் என்றே நாம் வலியுறுத்துகின்றோம். இது “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்ற வார்த்தைகளுக்கு இசைவாய்க் காணப்படுகின்றது. (1 கொரிந்தியர் 5:7, 8) பஸ்கா ஆட்டுக்குட்டியானது, எலும்புகள் எதுவும் முறிக்கப்படாத நிலையில் சுடப்பட்டு, ஆயத்தம்பண்ணப்பட வேண்டும். இது இப்படியாக நமது கர்த்தரை மாத்திரமே அடையாளப்படுத்துகின்றதே ஒழிய, அவரது “அங்கத்தினர்களை,” சபையை அடையாளப்படுத்துகிறதில்லை. ஆனால் பாவநிவாரண பலிகளில் ஒன்றில், தகனப்பலிக்கான ஆட்டுக்கடாவானது சந்துசந்தாக துண்டிக்கப்பட்டது மற்றும் துண்டுகள் கழுவப்பட்டு, தலையோடுகூடப் பலிபீடத்தில் வைக்கப்பட்டது; தனித்தனியாக, ஆனால் ஒன்றாய்த் தேவனுக்குச் செலுத்தப்படுகின்ற கிறிஸ்துவையும், அவரது அங்கத்தினர்களையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது – அங்கத்தினர்கள் தலையினுடைய புண்ணியத்தின்கீழ்க் காணப்படுகின்றனர்.
பஸ்காவானது அனைத்து ஜனங்களுக்கானதல்ல, மாறாக முதற்பேறானவர்களுக்கு மாத்திரமானதேயாகும். இது இந்தச் சுவிசேஷயுகத்தின் சபைக்கான, அதாவது “முதற்பேறானவர்களின் சபை” என்று அழைக்கப்படுகின்றவர்களுக்கான கிறிஸ்துவினுடைய வேலையை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. சபை தனது சொந்த விடுதலையை அவளாகவே கொண்டுவந்துவிடவில்லை; அது கிருபையினாலும், தெய்வீக அன்பினாலும் உண்டானதாகும். இஸ்ரயேலின் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் என்பது, சீனாய் மலையில் இஸ்ரயேலோடு, நியாயப்பிரமாண உடன்படிக்கையானது பண்ணப்படுவதற்கு வழிநடத்தினதுபோல, இந்தச் சுவிசேஷ யுகத்தில் முதற்பேறானவர்களின் சபை கடந்துபோகுதல் என்பது, மாம்சீக இஸ்ரயேலர்களையும், உலகத்தையும் ஆசீர்வதிப்பதற்கான புதிய உடன்படிக்கையின் நிறுவுதலுக்கு வழிநடத்துகின்றதாய் இருக்கின்றது; தலையும், (இந்தச் சுவிசேஷ யுகத்தின்போது, மனுக்குலத்தின் மத்தியிலிருந்து தேவனால் தெரிந்துகொள்ளப்படுகின்றதான) சரீரமுமாகிய கிறிஸ்துவுக்கு அடையாளமான மோசே நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு மத்தியஸ்தரானார். காளை மற்றும் ஆட்டினுடைய இரத்தத்தை மோசே எடுத்து தேவன் (அ) தெய்வீக நீதியை அடையாளப்படுத்துகின்றதான நியாயப்பிரமாண புத்தகத்தின்மீது தெளித்தார் மற்றும் அடுத்து ஜனங்கள் மீது தெளித்து, இப்படியாக அந்த உடன்படிக்கையின் மூலமாக தேவனையும், ஜனங்களையும் ஒப்புரவாக்கினார். நிஜமான காளையின் (இயேசுவின்) மற்றும் நிஜமான வெள்ளாடாகிய சபையின் இரத்தமானது புதிய (நியாயப்பிரமாண) உடன்படிக்கையினைச் சேர்த்து முத்திரையிடும். நிஜம் சீக்கிரத்தில் நிகழும். நிஜமான மோசேயின், நிஜமான மத்தியஸ்தரின் உருவாக்குதலானது சீக்கிரத்தில் நிறைவேறித் தீரும்.
-ரீபிரிண்ட்ஸ், பக்கம், 4335.