R5869 – நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5869 (Page 83)

நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்

THOUGHTS ON THE MEMORIAL SEASON

“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” 1 கொரிந்தியர் 11:26

யூதர்களால் ஆசரிக்கப்படுகின்றதான பஸ்கா காலமானது சமீபித்திருக்கின்றது; இந்த வருடத்தினுடைய ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி துவங்குகின்றது. ஆனால் இந்த ஒரு காலப்பகுதிகளில் கிறிஸ்தவர்களுடைய கவனமானது, பஸ்கா பண்டிகைக்கு முன்பு இடம்பெறுகின்றதும், தேவ ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து இயேசுவை அடையாளப்படுத்துகின்றதுமாகிய, ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதல் மீதே விசேஷமாய் மையம் கொண்டுள்ளது. ஆகையால் நாம் ஆசரிக்கின்றதான இந்தப் பஸ்கா காலமானது, மாபெரும் நிஜம் தொடர்புடையதாகும். இந்த ஒரு காலப்பகுதியில், கிறிஸ்தவர்களாகிய நாம் சரித்திரம் அனைத்திலும் பெரியதொரு நிகழ்வாகிய உலகத்தினுடைய இரட்சகரின் தியாக மரணத்தை நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றோம்.

ஆயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்கின்றவர்களும் இந்த ஒரு காலக்கட்டத்தில், இந்த மிகவும் முக்கியமான நிகழ்வைக் கடமையான விதத்திலும், சடங்காச்சாரமான சம்பிரதாயங்கள் சிலவற்றினாலும் ஆசரித்தாலும், இவ்விரண்டு மதத்தாரிலும், எவருமே இவ்வாசரிப்பினுடைய உண்மையான அர்த்தத்தினை உணராதவர்களாகவே இருக்கின்றனர் என்பதின் நிமித்தம் நாம் மிகுந்த மனவருத்தம் அடைகின்றோம். இவர்களுடைய மனங்களானது, அதன் உண்மையான அர்த்தத்தின் விஷயத்தில் விழித்துக்கொள்ளுமானால், உலகம் அறிந்திராத அளவுக்கான ஒரு மத மறுமலர்ச்சி ஏற்படக்கூடும். ஆனால் பரிசுத்த பவுல் குறிப்பிடுவதுபோல, “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அநேகருடைய மனதைக் குருடாக்கினான்” மற்றும் பகுதி திறக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலின் கண்களை உடைய சிலரும் குருடர்களாகவும், தொலைவில் பார்க்கமுடியாதவர்களாகவும் இருக்கின்றனர் என்று பரிசுத்த பேதுரு விவரிக்கின்றார். இவர்கள் 3000 வருடங்களுக்கும்மேலாக, நிழலிலும், நிஜத்திலும் ஆசரிக்கப்பட்டதான இந்த அனுசரிப்புச் சார்ந்த தேவ ஆழங்களைப் பார்க்கமுடியாதவர்களாய் இருக்கின்றனர்.

இஸ்ரயேலர்கள் பஸ்காவை நியாயப்பிரமாணத்தினுடைய முதலாவது அம்சமாகவும், தங்கள் ஜாதிக்கான மாபெரும் நினைவுகூருதல்களில் ஒன்றாகவும் ஆசரிப்பதற்குக் கட்டளையிடப்பட்டிருந்தனர். ஆகையால் உலகமெங்குமுள்ள யூதர்களாலும் மற்றும் கடவுளைக் கண்டறிவது அசாத்தியம் எனும் கொள்கை உடையவர்களாலும் (agnostics) கூடப் பஸ்காவானது ஓரளவுக்கு ஆசரிக்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்றோம். இவர்கள் இன்னமும் பஸ்காவை, முற்காலத்து வழக்கமெனக் கொஞ்சம் மதிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அறிவுகூர்மையுள்ள மனங்களை உடையவர்களான நமது யூத நண்பர்கள், இந்த அனுசரிப்பினுடைய அர்த்தமென்ன என்று ஒருபோதும் விசாரியாதது விநோதமாய்க் காணப்படுகின்றதல்லவா?

பஸ்கா ஆட்டுக்குட்டியானது ஏன் அடிக்கப்பட்டு, புசிக்கப்படுகின்றது? ஏன் இரத்தமானது வீட்டுவாசலினுடைய நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்கப்படுகின்றது? இப்படிச் செய்வதற்குத் தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பது உண்மைதான்; ஆனாலும் தெய்வீகக் கட்டளைக்குப் பின்னாக உள்ள காரணம், நோக்கம் என்ன? என்ன பாடம், என்ன அர்த்தம் உள்ளது? விவேகமுள்ள தேவன், விவேகமான கட்டளைகளைத்தான் கொடுப்பார் என்பது உண்மையே; ஏற்றக்காலத்தில் யேகோவா தேவன் தம்முடைய உண்மையுள்ள ஜனங்கள் அனைத்துக் காரியங்களினுடைய அர்த்தங்களைப் புரிந்துகொள்ளச் செய்வார். யூதனால் தனக்கான ஓய்வுநாள் என்பது இளைப்பாறுதலுக்கான, ஆசீர்வாதத்திற்கான, மற்றும் வேலைகளிலிருந்து, கவலைகளிலிருந்து, மரணத்திலிருந்து விடுதலைக்கான வரவிருக்கிற காலப்பகுதிக்கு நிழலாய் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள முடியுமானால், இதுபோலவே மோசேயின் வாயிலாகக் கொடுக்கப்பட்ட அம்சங்கள் அனைத்தும், “ஏற்றக்காலத்தில்” அருளப்படப்போகின்றதான பல்வேறு ஆசீர்வாதங்களுக்கு நிழலாய்க் காணப்படத்தக்கதாகக் கர்த்தரினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவனால் ஏன் காண முடியவில்லை?

முதற்பலன்கள் மற்றும் பிற்பலன்கள்

இயேசுவே “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக” இருக்கின்றார் என்றும், மனுக்குலத்தார் யாவருடைய பாவங்களுக்காக ஏற்றவேளையில் இயேசுவினுடைய பலியின் புண்ணியம் செயல்படுத்தப்படுவதின் வாயிலாக, மனிதனுக்கான தண்டனை சந்திக்கப்படுதலின் மூலம் உலகத்தின் பாவம் தள்ளுபடியாவது சாத்தியமாகும் என்றும் காண்கிற கண்களை உடையவர்கள் பாக்கியவான்களாவர். இதுவரையிலும் சபை மாத்திரமே இயேசுவினுடைய மரணத்தினாலான புண்ணியத்தினைப் பெற்றிருக்கின்றனர். முழு உலகமும் தெய்வீகத் தயவை இழந்து, துன்பம், வலி ஆகியவற்றுடனுள்ள மரணம் எனும் தெய்வீகத் தீர்ப்பின் கீழ் வந்துள்ளபடியால், இந்தத் தண்டனைத் தீர்ப்பானது (அ) சாபமானது மாற்றிப்போடப்படுவதற்கு முன்னதாக, நீதியானது திருப்திப்படுத்தப்படுவது அவசியம் என்றும், அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோன்று *கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக” நம்மைத் தேவனிடத்தில் – சேர்க்கும்படி, “அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரித்தார்” என்றும் காண முடிந்தவர்கள் மிகுந்த தயவு பெற்றவர்களாய் இருக்கின்றனர். இப்படியாக அவர் ஒரு புதிய வழியை, நித்திய ஜீவனுக்கான ஒரு வழியைத் திறந்து வைத்தார்.

[R5870 : page 83]

வேதவாக்கியங்களானது கிறிஸ்துவின் சபையை, “முதற்பேறானவர்களின் சபை” என்றும், “தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்கள்” என்றும், தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்கள்” என்றும் அழைக்கின்றது (எபிரெயர் 12:23; யாக்கோபு 1:18; வெளிப்படுத்தல் 14:4). இவ்வார்த்தைகளானது இறுதியில் தேவனுடைய குடும்பத்தில் பிற்பிறப்புகள் என்ற மற்றவர்கள் இருப்பார்கள் என்று, சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; பிற்பலன்கள் இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றது. பொதுவாய்க் கிறிஸ்தவ ஜனங்கள் இந்த வேதவாக்கியங்களைக் கவனிக்கத் தவறிப்போனவர்களாக, அதுவும் இவைகளுக்கு அர்த்தம் பொருத்தும் விஷயத்தில் தவறிப்போனவர்களாக இருந்து, வேதாகமத்தில் முதற்பலன்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள் என்றும், பிற்பலன்கள் இல்லை என்றும் நம்புகிறவர்களானார்கள்.

ஆனால் பஸ்கா நிழலானது, இஸ்ரயேலர்கள் அனைவரையும் இரட்சிப்பதே என்று தேவ நோக்கமாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக இஸ்ரயேல் ஜாதியானது, தேவனுடன் இசைவிற்குள் வந்து, வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நித்திய ஜீவனை அருளப்பெறுகின்றவர்களாகிய மனுக்குலம் யாவருக்கும் அடையாளமாய் இருக்கின்றார்கள் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இரண்டு கடந்துபோகுதல்கள் இருப்பதை நாம் கவனிப்போமாக முதற்பேறானவர்களை மாத்திரமே கடந்துபோகுதல் என்பது முதலாவதாகும்; தெய்வீக வல்லமையின் மூலமாக ஒட்டுமொத்த இஸ்ரயேல் ஜாதியும் அற்புதகரமாக விடுவிக்கப்பட்டு, செங்கடலின் வழியே நடத்திச்செல்லப்பட்டபோது, மற்றொன்று நிகழ்ந்தது; செங்கடலில் வழியானது காற்று மற்றும் அலைகளின் அழுத்தம் காரணமாக அவர்களுக்கென்று விசேஷமாக ஆயத்தப்படுத்தப்பட்டது. அவர்கள் வெட்டாந்தரையில் நடந்து, கடந்துசென்றனர் மற்றும் இரட்சிக்கப்பட்டனர்; ஆனால் இரண்டாம் மரணத்திற்குள் இறுதியில் போகப்போகிறவர்களுக்கு அடையாளமாக பார்வோனின் சேனைகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். செங்கடலில் நடந்த கடந்துபோகுதலானது, கர்த்தருடன் இசைவிற்குள் வருவதற்கும், அவரைத் தொழுதுகொள்வதற்கும் விரும்புகிற ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும், அதாவது இஸ்ரயேலின் பாகமாகும் அனைவரும், பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையினின்று இறுதியில் விடுவிக்கப்படுவதைச் சித்தரிக்கின்றதாயிருக்கின்றது; ஏனெனில் இஸ்ரயேலரில் ஒருவர்கூட, எகிப்திய அடிமைத்தனத்தில் விட்டுவரப்படவில்லை.

[R5870 : page 84]

முதற்பேறானவர்களின் பொறுப்பு

இந்த (இரண்டாவது) கடந்துபோகுதலை நாம் ஆசரிக்கப்போவதில்லை. எகிப்து தேசத்தில் இஸ்ரயேலின் முதற்பேறானவர்களை தூதன் கடந்துபோனதின் நிஜத்தையே நாம் ஆசரிக்கின்றோம். முழு [இஸ்ரயேல்) ஜாதியின் விடுதலையானது இந்த முதற்பேறானவர்களின் கடந்துபோகுதலை, இரட்சிப்பைச் சார்ந்திருந்தாலும், எகிப்தில் அந்த இரவின்போது இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மாத்திரமே அபாயத்தில் காணப்பட்டனர். ஆகையால் சுவிசேஷயுகமாகிய இந்த இரவில், மனித தளத்திலுள்ள தேவ புத்திரர்களிலுள்ள முதற்பேறானவர்கள் மாத்திரமே இப்பொழுது கடந்து போகப்படுகிறவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் மாத்திரமே சங்காரத்தூதனால் அழிக்கப்படுவதற்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் தெளிக்கப்பட்ட இரத்தத்தின் கீழ்க் காணப்படுகின்றனர்.

வேதவாக்கியங்கள் அனைத்தும் சொல்லுகிறபடி “சிறு மந்தையினர்,” “தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்கள்,” “முதற்பேறானவர்களாகிய சபை” மாத்திரமே தற்கால யுகத்தில் தப்புவிக்கப்படுகின்றனர், கடந்து போகப்படுகின்றனர் என்று நாம் பார்க்கின்றோம். இந்த யுகத்தைத் தொடர்ந்துவரும் யுகத்தில், மீதமான மனுக்குலமானது, மாபெரும் நிஜமான மோசேயைப் பின்தொடர விரும்புகையில், அவர் ஜனங்களைப் பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்திலிருந்து வெளியே நடத்திடுவார்; ஆனால் அவர்கள் இப்பொழுது நித்தியமான அழிவுக்கான அபாயத்தில் இல்லை; முதற்பேறானவர்கள் மாத்திரமே அபாயத்தில் இப்பொழுது காணப்படுகின்றனர்.

மனுக்குலத்திலிருந்த முதற்பேறானவர்களாகிய சபை, சந்ததியிலுள்ள மீதமானவர்களுக்கு முன்னதாகவே தங்கள் அடிமை நிலைமைக்குறித்தும், விடுதலைக்கான தங்களுக்குள்ள அவசியத்தைக்குறித்தும், தேவன் தமது நல்வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் தங்களுக்கு நிறைவேற்ற விருப்பமுள்ளவராய் இருக்கின்றார் என்பது குறித்துமான உணர்ந்துகொள்ளுதலின் விஷயங்களில், தங்களது புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப் பெற்றவர்களாய் இருக்கின்றனர். இன்னுமாக இவர்கள் தேவ கிருபைக்கு இணங்கி, அவருக்கும், அவரது ஊழியத்திற்குமெனத் தங்களையே முழுமையாய் அர்ப்பணம் பண்ணி, இதன் பலனாகப் பரிசுத்த ஆவியினால் ஜெநிபிக்கப்படுகின்றார்கள். இவர்கள் விஷயத்தில் ஜீவனா (அ) மரணமா அல்லது விசுவாச வீட்டிற்குள்ளாக, அதாவது தெளிக்கப்பட்ட இரத்தத்திற்குப் பின்னபாக இருப்பதா (அ) இல்லையா என்பதுதான் காரியமாய் உள்ளது.

இந்த வகுப்பார் இரத்தத்தின் கீழிருந்து வெளியேறுவது என்பது, தெய்வீக இரக்கத்தினை அவமதிப்பதைக் குறிக்கின்றதாயிருக்கும். அது இவர்கள் தெய்வீகக் காருண்யத்தினை வெறுப்பதை/இகழ்வதைக் குறிக்கின்றதாயிருக்கும்; இன்னுமாக ஆட்டுக்குட்டியினுடைய இரத்தம் அடையாளப்படுத்துகின்றதான தேவனுடைய இரக்கத்தில் தங்கள் பங்கினை அனுபவித்தப்பிற்பாடு, அதை இவர்கள் மதிக்காததையும் குறிக்கின்றதாயிருக்கும். இப்படியாய்ச் செய்கிறவர்களைக்குறித்து வேதவாக்கியங்களானது, “பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்” என்றும், “கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று” என்றும் குறிப்பிடுகின்றது (ரோமர் 6:9; எபிரெயர் 10:26). இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய எதிராளிகளாகக் கருதப்படுவர் மற்றும் இவர்களது அழிவுக்கு, எகிப்தினுடைய முதற்பேறானவர்களின் அழிவானது அடையாளமாய்க் காணப்படுகின்றது. முதற்பேறானவர்களாகிய சபையானது, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதினாலும், எல்லா விதத்திலும் அதிகமான அறிவையும், சிலாக்கியங்களையும் அனுபவிப்பதாலும் இவர்கள் உலகத்தைக் காட்டிலும் மிகவும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றனர்; ஏனெனில் இவர்கள் மாத்திரமே இப்பொழுது இரண்டாம் மரணத்திற்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். இதுவே பஸ்கா நிழலினுடைய படிப்பினையாக இருக்கின்றது மற்றும் இது உண்மை கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமே பொருந்துகின்றதாய் இருக்கின்றது.

பாவம் மற்றும் மரணத்தின் இரவு கடந்துபோய், விடுதலைக்கான மகிமையான காலை வருகையில், கிறிஸ்துவாகிய நிஜமான மோசே, தேவனுடைய ஜனங்கள் அனைவரையும், அதாவது தேவசித்தத்தை அறியவரும்போது, அதற்குக் கீழ்ப்படிய, அதைக் கனப்படுத்த, அதை மதித்திட மகிழ்கிற யாவரையும் வழிநடத்திடுவார், இரட்சித்திடுவார். அந்த விடுதலையின் நாளானது, முழு ஆயிரவருட யுகமாகக் காணப்படும் மற்றும் ஆயிரவருட யுகத்தின் முடிவில் எகிப்தின் சேனைகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றதான பொல்லாத செய்கைக்காரர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அழிவிற்குள்ளாக அறுப்புண்டுப் போவார்கள்.

நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசு

அப்போஸ்தலனாகிய பவுல், “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று கூறி, நமது கர்த்தர் இயேசுதான் பஸ்கா ஆட்டுக்குட்டி என்று தெளிவாயும், உறுதியாயும் அடையாளம் கண்டுகொண்டார். நமது வீடுகளின்மீதல்ல, மாறாக நமது இருதயங்கள் மீது இரத்தம் தெளிக்கப்படுவது நம் அனைவருக்கும் அவசியமென அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கின்றார். நாம் ஆட்டுக்குட்டியில் பங்குகொள்ள வேண்டும்; கிறிஸ்துவினுடைய புண்ணியத்தினை, அவரது பலியின் புண்ணியத்தினை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும்; புதிய யுகமாகிய காலையின் போதான விடுதலைக்கு நாம் பலத்துடனும், ஆயத்தத்துடனும் காணப்பட வேண்டுமானால், நாம் புளிப்பில்லாத அப்பமாகிய சத்தியத்தைப் புசிக்க வேண்டும். இப்படியாக நாம் கிறிஸ்துவை விசுவாசத்தினால் மாத்திரம் தரித்துக்கொள்ளாமல் மாறாக நாம் அதிகமதிகமாக அவரது குணலட்சணத்தைத் தரித்து, நமது இருதயங்களிலும், ஜீவியங்களிலும் அவரது மகிமையான சாயலுக்கு மறுரூபமடைகின்றோம்.

யூதர்கள் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினைப் புசித்ததுபோன்று, நாம் கிறிஸ்துவைப் புசிக்க வேண்டும். யூதர்களுடைய பசியினைத் தூண்டினதும், பசிக்கு உதவினதுமான கசப்பான கீரைகளுக்குப்பதிலாக, நமக்குக் கர்த்தர் ஆயத்தம் பண்ணினதும், பூமிக்குரியவைகள் மீதான நமது விருப்பங்களை மறந்துபோவதற்கு உதவுவதும், ஆட்டுக்குட்டி மற்றும் புளிப்பில்லாத அப்பமாகிய சத்தியத்தைப் புசிப்பதற்கான தீவிரப் பசியை நமக்குக் கொடுக்கிறதுமான கசப்பான அனுபவங்களையும், சோதனைகளையும் நாம் பெற்றிருக்கின்றோம். நமக்கு எந்த நிரந்தரமான தேசமும் இல்லை என்று நாமும் நினைவில்கொள்ள வேண்டும்; பரதேசிகள் போலவும், யாத்திரிகர்கள்போலவும், கையில் தடி பிடித்துக்கொண்டவர்களாகவும், பரம கானானுக்கும், நமது மீட்பரோடுகூட, தேவனுக்கான இராஜாக்களாக, ஆசாரியர்களாக, இருக்கப்போகிற முதற்பேறானவர்களாகிய சபைக்குத் தேவன் வைத்து வைத்துள்ளதான மகிமையானவைகள் அனைத்தினிடத்திற்குமான நமது பிரயாணத்திற்காக, நாம் அரைக்கட்டிக்கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும்.

நமது கர்த்தராகிய இயேசுவும் தாம்தான் பஸ்கா ஆட்டுக்குட்டி என்று அடையாளம் கண்டுகொண்டார். அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக, அவர் தம்முடைய சீஷர்களுடன் மேல்வீட்டறையில் கூடி, “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்றார். யூதர்களாக அவர்கள் காணப்பட்டப்படியால், அந்த இரவில் அவர்கள் பஸ்கா இராப்போஜனத்தைப் புசிப்பது அவசியமாயிருந்தது; அதாவது எகிப்தில் பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதற்கும், நிழலான பார்வோனிடமிருந்து (இவ்வுலகத்தின் அதிபதியிடமிருந்து) நிழலான முதற்பேறானவர்கள் காப்பாற்றப்பட்டதற்குமான ஆண்டுநிறைவு நாளினுடைய இரவில் மற்றும் உண்மையான பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படப்போகிறதுமான அதே நாளில் அவர்கள் பஸ்கா இராப்போஜனத்தைப் புசிப்பது அவசியமாயிருந்தது. மேலும் நிழலின் விஷயங்கள் நிறைவடைந்தவுடன், நமது கர்த்தர் இயேசு, பழையவைகளின்மீதே புதிய நினைவுகூருதலை ஏற்படுத்தி, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.

அப்பம் மற்றும் பாத்திரத்திற்கான அடிப்டையான அர்த்தம்

முதலாம் நினைவுகூருதலின் சந்தர்ப்பங்களை நாம் மீண்டும் நினைவுகூருகின்றோம் அப்பம் மற்றும் திராட்சரசமுள்ள பாத்திரம் ஸ்தோத்திரிக்கப்பட்டது; இவைகள் அவரது பிட்கப்படுகிற சரீரத்தையும், சிந்தப்படுகிற இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றது என்றும், அவரது பின்னடியார்கள் அனைவரும் அவரைப் புசிப்பதன் மூலம் மாத்திரமல்ல, அவரோடுகூடப் பிட்கப்படுவதன் மூலம் பங்குகொள்ள வேண்டும் என்றும், அவரது இரத்தத்தின், பலியின் புண்ணியத்தில் பங்கெடுப்பது மாத்திரமல்லாமல், தாங்கள் பிற்பாடு இராஜ்யத்தில் அவரது கனத்திலும், மகிமையிலும் பங்கடையத்தக்கதாகத் தங்களது ஜீவியங்களை அவரது ஊழியத்திலும், எல்லா விதத்திலும் அவரோடு ஒத்துழைப்பதிலும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் பங்குகொள்ள வேண்டும் என்றும் நமது கர்த்தர் கூறினார். இந்தக் கருத்துக்களானது, நமது கர்த்தருடன் ஒத்து இசைந்திருப்பவர்களுக்கு எத்துணை விலையேறப்பெற்றதாய்க் காணப்படும்!

நினைவுகூருதலாகப் புளிப்பில்லாத அப்பத்தினை சீஷர்களுக்கு முன்வைக்கையில் இயேசு, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றார். அவரது வார்த்தைகளினுடைய அர்த்தமாவது, “இது என் சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது” என்பதாகும். அப்பமானது உண்மையில் அவரது சரீரமாக இருக்கவில்லை; ஏனெனில் அவரது சரீரம் எந்த விதத்திலும், அதுவரையிலும் பிட்கப்படவில்லை. பலி இன்னமும் நிறைவேறி முடியாததினால், அவர்களாலும், எந்த விதத்திலும், அவரில் நிஜத்தில் (அ) உண்மையில் பங்கெடுக்க முடியாது. எனினும் (தூய்மையான, புளிப்பற்ற) புளிப்பில்லாத அப்பமானது, நமது கர்த்தருடைய பாவமற்ற மாம்சத்தைக் குறிக்கின்றதென நாம் அடையாளம் கண்டுகொள்ளும்போதும் அடையாளம் முழுமையாய் உள்ளது; புளிப்பானது, நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பாவத்திற்கான அடையாளமாகவும், பஸ்கா காலங்களில் புறம்பாக்கிப்போடுவதற்கு விசேஷமாய்க் கட்டளையிடப்பட்டுள்ளதாயும் காணப்படுகின்றது. வேறொரு தருணத்தின்போது, இயேசு கொடுத்திட்ட பாடமானது, இந்த அடையாள சின்னத்தினை நமக்கு விளக்குகின்றதாய் இருக்கின்றது. அவர் “வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்;” “ஜீவ அப்பம் நானே;” “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.” (யோவான் 6:33,35,51)

இந்த ஜீவ அப்பத்தை நாம் எவ்வாறு புசிக்க வேண்டும் (அ) சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அப்பம் எதைக் குறிக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு அவசியமாய் இருக்கின்றது. இக்காரியம் தொடர்பான நமது கர்த்தருடைய விளக்கத்தின்படி, அது அவர் நமக்காகப் பலிச்செலுத்தின அவரது மாம்சத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் நமது மனித சுபாவத்தில் வரத்தக்கதாக, தாம் மனிதனாகுவதற்கு முன்னதாகக் காணப்பட்ட ஆவிக்குரிய ஜீவியின் நிலையினையும், அதன் மகிமையினையும் துறந்து [R5870 : page 85] வந்திருந்தாலும், அவர் மனிதனாகுவதற்கு முன்பாகக் காணப்பட்ட ஆவிக்குரிய ஜீவி நிலையானது, பலிச் செலுத்தப்படவில்லை. நமது கர்த்தராகிய இயேசு பரிசுத்தராகவும், மாசில்லாதவராகவும், குற்றமற்றவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும், அதாவது தகப்பனாகிய ஆதாமினால் கறைப்படுத்தப்படாதவராகவும், மற்றும் இதனால் பாவமற்றவராகவும் காணப்பட்டக் காரியமே, அவரை ஆதாம் மற்றும் இவர் சந்ததிக்கான மீட்பராக்கிற்று மற்றும் “ஏற்றக்காலங்களில் விளங்கிவந்ததான, அனைவருக்குமான மீட்கும் பொருளாக” அவர் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கும் அனுமதித்தது (1 தீமோத்தேயு 2:3-6).

பாவிகளுக்காக நமது கர்த்தராகிய இயேசுவின் தூய, கறையற்ற சுபாவமே கொடுக்கப்பட்டது என்று நாம் காண்கையில், நாம் எதைச் சொந்தமாக்கிடுவதற்கான சிலாக்கியம் பெற்றிருக்கின்றோம் என்று நாம் காண்கின்றோம். அவர் எதை நமக்காக ஒப்புக்கொடுத்தாரோ, அதையே நாம் “புசிக்க” வேண்டும், சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்; அவரது பரிபூரண மனுஷீக ஜீவனானது, மனுக்குலம் முழுவதையும் மரணத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகவும், அவர்கள் இணங்குகையில் அவர்களை மனித பூரணத்திற்கும், நித்திய ஜீவனிடத்திற்கும் திருப்புவதற்காகவும் கொடுக்கப்பட்டது; நாம் இதை [R5871 : page 85] உணர்ந்துகொண்டு, மரணத்திலிருந்து நம்மை இரட்சிப்பவராக, அவரை ஏற்றுக்கொண்டிட வேண்டும். நம்முடைய கடந்தக்கால பாவங்கள் யாவற்றையும் இரத்துச் செய்ததாக ஒருவேளை தேவன் கருதினாலும், மனித பூரணத்தினை அடைந்திடுவதற்கான உரிமையை நாம் உடையவர்களாக இருக்கின்றோமெனத் தேவன் ஒருவேளை கண்டுகொண்டாலும், இது நம்மைப் பூரணமும் படுத்தாது, நித்திய ஜீவனுக்கான உரிமையையும் தராது என்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஆதாமின் சந்ததியிலுள்ள எவரேனும் இயேசுவின் பலியில் நன்மையடைய வேண்டுமானால், அவர் பிதாவின் சந்நிதியில் பிரவேசித்து, நீதியின் கரத்தில் தம்முடைய மரணத்தினால் உண்டான தியாகப் புண்ணியத்தினை வைத்து, பிதாவிடமிருந்து, “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரத்தினைப்” பெற்றுக்கொள்ளத்தக்கதாக, கல்லறையினின்று, ஜீவனுக்கான திவ்விய தளத்திற்கு எழும்புவது அவசியமாகும். உலகம் தொடர்புடைய விஷயத்தில், பிதாவின் ஏற்றக்காலங்களில் முழு உலகத்திற்கான மத்தியஸ்தராக, தீர்க்கத்தரிசியாக, ஆசாரியனாக, இராஜாவாக கர்த்தர் இயேசு இருந்து, அக்காலத்தில் அருளப்படுகின்றதான அருமையான சிலாக்கியங்களைப் பயன்படுத்துகின்றதான அனைவரையும் பரிபூரணத்திற்கும், தேவனுடன் இசைவான நிலைக்கும் திருப்புவதற்கு உதவத்தக்கதாக – ஏற்றக்காலங்களில் கர்த்தர் இயேசு மகிமைப்பொருந்தின திவ்விய ஜீவியாக மீண்டும் திரும்புவதும் அவசியமாய் இருக்கின்றது.

இதே ஆசீர்வாதத்தை இந்த யுகத்தின் சுவிசேஷசபையானது, தங்கள் மீட்பரிலான விசுவாசத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கின்றனர்; அதாவது விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றுக்கொள்கின்றனர்; நாம் ஒருபோதும் பெற்றிராததும், ஒருபோதும் இழந்துபோகாததும், கிறிஸ்து மீட்டுக்கொள்ளாததுமான, ஆவிக்குரிய சுபாவத்திற்கு நீதிமானாக்கப்படவில்லை; மாறாக தந்தையாகிய ஆதாம் பெற்றிருந்ததும், அவரால் இழந்துபோகப்பட்டதும், கிறிஸ்து தம்முடைய பாவமற்ற சொந்த மாம்சத்தை, தமது பரிபூரண மனுஷீக ஜீவனை நமக்கான மீட்கும் பொருள் பலியாகக் கொடுத்து, அவர் மீட்டுக்கொண்டதுமான மனுஷீக சுபாவத்திற்கு நீதிமானாக்கப்பட்டுள்ளோம். ஆகையால் நினைவுகூருதலின்போது புளிப்பில்லாத அப்பத்தில் பங்கெடுத்தல் என்பது விசுவாசத்தினால் மாம்சத்தின் ஜீவிக்கும் உரிமைக்கான – மனுஷன் ஜீவிக்கும் உரிமையும் மற்றும் கர்த்தர் தம்மைக் கொடுத்துப் பெற்றுத் தந்ததான், அதனோடுகூட உள்ள சிலாக்கியங்கள் அனைத்திற்குமான நீதிமானாக்கப்படுதலை நமதாக்கிக்கொள்ளுதலை நமக்கு முதலாவது குறிக்கின்றதாய் இருக்கின்றது. இதுபோலவே திராட்சப்பழரசமானது நமக்காகக் கொடுக்கப்பட்டதான நமது இரட்சகரின் ஜீவன் – அவரது மனுஷீக ஜீவன், அவரது ஆத்துமா நம் பொருட்டாக மரணத்திற்குள் ஊற்றப்பட்டதை முதன்மையாகக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இதை நாம் நமதாக்கிக் கொள்ளுதல் என்பதும், நமது கர்த்தருடைய பலியானது பெற்றுத் தந்ததான திரும்பக்கொடுத்தலுக்கான உரிமைகளையும், சிலாக்கியங்களையும் நாம் ஏற்றுக்கொள்வதை முதன்மையாகக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. –

அப்பம் மற்றும் பாத்திரத்திற்கான ஆழமான அர்த்தம்

ஆயிரவருட யுகத்தின்போது உலகமானது கிரியையினாலும், கீழ்ப்படிதலினாலும் நீதிமானாக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தச் சுவிசேஷயுகத்தின்போது சபையை விசுவாசத்தினால் நீதிமான்களாக்குவதிலுள்ள தேவனுடைய நோக்கமானது – இப்பொழுது காண்கிறவர்களும், கேட்கிறவர்களும், மனிதனுக்காக அன்பானது ஏறெடுத்துள்ளதான மாபெரும் பலியை இப்பொழுது உணர்ந்துகொள்பவர்களுமான இந்த வகுப்பார், தங்கள் சரீரங்களை ஜீவப்பலியாக ஒப்புக்கொடுப்பதற்கும், மற்றும் இவ்விதமாய்க் கர்த்தர் இயேசுவோடுகூட, அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரது பலியில் பங்கடைவதற்கும் அனுமதிக்கப்படுவதற்கேயாகும் என்பதை இப்பொழுது நாம் கவனிப்போமாக. நினைவுகூருதலுக்கான இந்த ஆழமான அர்த்தத்தினை அவர் வெளிப்படையாய்க் குறிப்பிடவில்லை. இது “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்று அவர் குறிப்பிட்டவைகளில் ஒன்றாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. (யோவான் 16:12, 13) கிறிஸ்து வாயிலாக அருளப்பட்டதான பிதாவின் இந்த வல்லமையானது, செல்வாக்கானது, சத்தியத்தின் ஆவியானது அப்போஸ்தலனாகிய பவுல் வாயிலாகப் பேசி, நினைவுகூருதலின் மிக உயர்வான அர்த்தத்தினைத் தெளிவாய் விவரிக்கின்றது; ஏனெனில் அர்ப்பணித்துள்ள சபைக்கு அவர் எழுதுகையில் அவர், “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!”; அதாவது கிறிஸ்து தம்முடைய உண்மைக்கான பலனாகப் பெற்றுக் கொண்டதான மகிமையில், நாமும் அவரோடுகூடப் பங்காளிகளாகக் கருதப்படத்தக்கதாக, உடன் பலிச் செலுத்துபவர்களெனக் கிறிஸ்துவோடுகூட உள்ள மரணம்வரையிலுமான நம்முடைய பங்குகொள்ளுதலாய் இருக்கிறதல்லவா? – “ஏனெனில் அநேகரான நாம் ஒரே அப்பமும், ஒரே சரீரமுமாய் இருக்கிறோம்” என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 10:16, 17).

இந்த அடையாளமான கட்டளையினுடைய இரண்டு கண்ணோட்டங்களும் மிகவும் முக்கியமானவைகளாகும். நமது கர்த்தருடைய பலியின் மூலமான நமது நீதிமானாக்கப்படுதலை, நாம் முதலாவதாகப்பார்ப்பது அவசியமாயிருக்கின்றது. முழுக்கிறிஸ்து, அபிஷேகம் பண்ணப்பட்ட முழுக்கூட்டத்தாரும் தெய்வீக கண்ணோட்டத்தின்படி இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ளதான, அநேக அங்கத்தினர்களை உடைய ஒரு சரீரமாக இருக்கின்றது என்றும், இந்தச் சபை, இந்தச் சரீரம் முழுவதும் பிட்கப்பட வேண்டுமென்றும், அதன் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் கர்த்தர் இயேசுவின் சாயலாக வேண்டும் மற்றும் அவரது பலியின் அடிச்சுவடுகளில் நடக்க வேண்டுமென்றும் நாம் உணர்ந்துகொள்வதும் ஏற்றக் காரியமாயிருக்கின்றது (1 கொரிந்தியர் 12:12-14). இதை நாம் நம்முடைய ஜீவியங்களைச் சகோதர சகோதரிகளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் செய்கின்றோம்; அதாவது இயேசு தம்முடைய ஜீவியத்தை நேரடியாய்த் தமது யூத சகோதரர்களுக்காய், ஆனால் உண்மையில் பிதாவின் நோக்கத்தின்படி முழு உலகத்திற்காய் ஒப்புக்கொடுத்ததுபோல், நாமும் செய்வதின் மூலம் செய்கின்றோம். இயேசு தம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை ஒப்புக்கொடுக்காததுபோன்று, நாமும் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை ஒப்புக்கொடுப்பதில்லை. அவர் தம்முடைய உண்மையான பூரண மாம்சத்தை, தம்முடைய மனுஷீகத்தைப் பலிச் செலுத்தினதுபோன்று, நாமும் உண்மையாய்ப் பூரணமாய் இராததும், ஆனால் இயேசுவினுடைய புண்ணியத்தினால், பூரணமானதாகக் கருதப்படுகிறதுமான நீதிமானாக்கப்பட்ட நம்மைப் பலிச்செலுத்திட வேண்டும். இதுபோலவே அப்பமும், பாத்திரமும் பாடுகளை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. கோதுமை மணிகளானது, மனிதனுக்கான அப்பமாகுவதற்கு முன்னதாக நொறுக்கப்பட்டு, மாவாக்கப்பட வேண்டும்; அவைகளால் அதன் ஜீவனையோ, மணியாக அதன் தனித்தன்மையையோ தக்கவைத்துக்கொள்ளமுடியாது. திராட்சப்பழங்களானது, உலகத்திற்கு ஜீவனளிக்கும் மருந்தாக வேண்டுமானால் அதன் சாறு அனைத்தையும் பிழிந்தெடுக்கப்படுகிறதான அழுத்தத்திற்கு அது அதனை கீழ்ப்படுத்தி, ஒப்புக்கொடுத்திட வேண்டும் மற்றும் திராட்சப்பழங்கள் எனும் அதன் அடையாளத்தை இழந்துபோய்விட வேண்டும். இப்படியாகவே கிறிஸ்துவாகிய தலை மற்றும் சரீரம் எனும் கூட்டத்தாரின் விஷயத்திலும் ஆகும். இப்படியாகக் கர்த்தருடைய ஜனங்கள் ஒரே அப்பத்திலும், ஒரே பாத்திரத்திலும் பங்கெடுப்பவர்களாய் இருக்கின்றார்கள் என்ற பரிசுத்த பவுல் அவர்களுடைய வார்த்தையினுடைய அருமையையும், அழுத்தத்தையும் நாம் பார்க்கின்றோம். அவரது இரத்தமே, அவரது பலியினுடைய புண்ணியமே முக்கியமானதாகும்; அவரது புண்ணியமானது நமக்குச் சாற்றப்படுவதினாலும் மாத்திரமே, நாம் அவரது சரீரத்தின் அங்கங்களாகக் காணப்படுவதினால் மாத்திரமே, நமது இரத்தத்திற்குத் தகுதி உள்ளது.

பாத்திரமானது, திராட்சப்பழரசமானது, இரத்தத்தை அதாவது ஜீவனைக் குறிப்பதாக நமது கர்த்தர் குறிப்பாய்த் தெரிவித்துள்ளார்; அது தக்கவைக்கப்பட்ட ஜீவனை அல்ல, மாறாக சிந்தப்பட்ட, விட்டுக்கொடுக்கப்பட்ட, ஒப்புக்கொடுக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட ஜீவனைக் குறிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். ஊற்றப்பட்டதான இந்த ஜீவனானது, பாவ மன்னிப்புண்டாகும்படிக்கு என்றும், அவருடையவர்கள் அனைவரும் அதைப் பருக வேண்டும் மற்றும் அவரது பலியினை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தினால் தங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் நம்மிடம் கூறுகின்றார். அவர்கள் ஜீவனை இந்த ஆதாரத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவிற்குப் புறம்பே அழியாமையைப் பெறமுடியுமென யார் ஒருவராலும் கூறப்படுவது ஏற்றதாயிருக்காது. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதன் விளைவாக ஜீவன் கிடைக்குமெனக் கூறுவதும் ஏற்றதாயிருக்காது. ஏதோ ஒரு மாபெரும் போதகர் மீதான விசுவாசமும், அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிவதும் நித்திய ஜீவனைக் கொண்டுவருமென்று கூறுவதும் ஏற்றதாயிருக்காது. முழு உலகத்திற்கான மீட்கும்பொருளாக ஒருமுறை சிந்தப்பட்டதான இரத்தத்தின் மூலமே அல்லாமல், மற்றப்படி வேறெந்த வழியிலும் நித்திய ஜீவனை அடையமுடியாது. “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12). இதுபோல அவரது பாத்திரத்தில் பானம்பண்ணிடுவதற்கும், ஒரே அப்பத்தின் அங்கத்தினர்களென அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும், அவரது மரணத்திற்குள்ளான ஸ்தானத்தில் அவரோடுகூட அடக்கம் பண்ணப்படுவதற்கும் மற்றும் இப்படியாக மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் நேரான அவரது உயிர்த்தெழுதலில் அவரோடுகூடக் காணப்படுவதற்குமான கர்த்தருடைய அழைப்பினை ஏற்றுக்கொள்வதின் மூலமாக மாத்திரமே ஒழிய மற்றப்படி புதிய சுபாவத்தினை அடைவதற்கு வேறு வழியில்லை (ரோமர் 6:3-5; 8:17).

இராஜ்யத்தில் கொண்டாடுதல்

நினைவுகூருதலுக்கான இராப்போஜனம் நிறுவப்பட்ட தருணத்தின்போது, நமது அருமை கர்த்தர் எப்போதும்போல், அவரது போதனைகள் அனைத்தினுடைய முக்கிய அம்சமாகிய இராஜ்யம்குறித்துச் சிலவற்றைப் பேசவேண்டும் என்றிருந்தார். உண்மையுள்ளவர்களாகக் [R5871 : page 86] காணப்படும் பட்சத்தில், இராஜ்யத்தில் ஒரு பங்கினை அடைவார்களென அவர் வாக்களித்தவர்களிடம், தாம் ஓர் இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதற்கெனப் புறப்பட்டுப்போக வேண்டும் என்றும், தாம் திரும்பிவந்து, அந்த இராஜ்யத்தில் அவர்கள் பங்கடையத்தக்கதாக, தம்மோடுகூட அவர்களை ஏற்றுக்கொள்ளவார் என்றுமாக தாம் கூறியிருந்தவைகளை, அவர்களுக்கு நினைப்பூட்டினார். இன்னுமாக தம்மால் நிறுவப்படுகின்றதான இந்த நினைவுகூருதலானது, இராஜ்யத்தில் அதன் நிறைவேறுதலைக் காணும் என்றும், அவர்களோடுகூடப் பிதாவின் இராஜ்யத்தில் திராட்சப்பழரசத்தை நவமானதாய்ப் பானம் பண்ணும் நாள்வரைக்கும், அதைத் தாம் பானம்பண்ணுவதில்லை என்றும் இப்பொழுது கூறுகின்றார்.

என்ன அர்த்தத்தில் இவ்வாக்கியத்தினைக் கர்த்தர் கூறினார் என்பதைத் துல்லியமாய்த் தீர்மானிப்பது சிரமமானக் காரியமாக இருப்பினும், அவரது பாத்திரம் அடையாளப்படுத்துகின்றதான பாடுகள் மற்றும் சோதனைகளின் விளைவாக, இராஜ்யத்தில் பெருமகிழ்ச்சிக் காணப்படும் என்று அர்த்தப்படும் வகையில் அவர் பேசியுள்ளார் என்று புரிந்து கொள்வது முரண்பாடாய்க் காணப்படாது. “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.” பிதாவினுடைய சித்தத்திற்கான உண்மையானக் கீழ்ப்படிதலின் காரணமாகச் சகிக்கப்பட்ட சோதனைகளையும், கஷ்டங்களையும் அவர் திரும்பி நோக்கிப்பார்த்து, இவைகளின் பிரம்மாண்டமான பலனை, அதாவது மனுக்குலம் அனைத்தின்மீது கடந்துவரும் ஆசீர்வாதங்களை அவர் காண்கையில், இவைகளில் களிகூருவார். முதலாவது நீதிமானாக்கப்பட்டதிலும், பின்னர் அர்ப்பணிப்பிலும், அவரோடுகூடப் பலியிலும் இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணினவர்களாகிய அவரது சீஷர்கள் அனைவரும் இந்தப் பெரு மகிழ்ச்சியில் பங்கடைவார்கள். இவர்கள், அவரோடுகூட ஆளுகைச் செய்வதற்கான, அவரது வாக்குத்தத்தத்தினைப் பெற்றிருக்கின்றனர், மற்றும் ஆளுகை ஆரம்பித்து, இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கையில், இவர்கள் தங்கள் பூமிக்குரிய ஓட்டம் நிறைவடைவதுவரையிலும் நாளுக்குநாள் தேவன் தங்களை வழிநடத்தின வழியினை, அது “இடுக்கமான வழியாக,” சுயத்தைப் பலிச்செலுத்தும் வழியாக, சுயத்தை வெறுக்கும் வழியாக இருப்பினும், அவ்வழியினைத் திரும்பி நோக்கிப்பார்த்து, துதிப்பார்கள்.

தாம் கைது செய்யப்படுவதற்கும், மரிப்பதற்குமான வேளை அருகாமையில் இருப்பதை அறிந்திருந்த நமது அருமை ஆண்டவரின் விசுவாசமானது, அந்தத் துயரமான வேளைகளினுடைய பரீட்சைகளில் நிலைநின்றது. அப்பத்திற்கும், பாத்திரத்திற்கும் அவர் பிதாவுக்கு ஸ்தோத்திரம் ஏறெடுத்ததானக் காரியமானது, அப்பம் பிட்கப்படுதலும், திராட்சப்பழம் நசுக்கப்படுதலும் குறிக்கின்றதான பாடுகள் யாவற்றிலும், சந்தோஷத்தோடே உடன்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஏற்கெனவே அவர் பிதாவின் ஏற்பாட்டில் திருப்தியடைந்தவராய் இருந்தார். இந்த ஒரு மனநிலைக்கு இசைவாகவே, அவர்கள் புறப்படுகையில், பாட்டுப்பாடினார்கள் … சந்தேகத்திற்கிடமின்றி பூமியில் அவரது ஓட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்ததற்காகவும், இதுவரையிலும் தமக்குத் தேவையான கிருபை போதுமானதாய் இருந்ததற்காகவும் துதி மற்றும் ஸ்தோத்திரப்பாட்டு ஏறெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

நினைவுகூருதலின் இராப்போஜனத்தைப் பின்தொடர்ந்ததான துக்கம் நிறைந்த வேளையுள்ள சம்பவங்களைக் கவனிக்கத்தக்கதாக, நாம் மீட்பரைக் கெத்செமனேவுக்குப் பின்தொடர்ந்துபோய், “அவர் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லவரை நோக்கி பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணுவதை” பார்க்கின்றோம். பிதாவின் திட்டத்தினை நிறைவேற்றுவதில், ஏதாகிலும் விஷயத்தில் தவறிப்போய் மற்றும் அதன் நிமித்தமாக உயிர்த்தெழுப்பப்படுவதற்குப் பாத்திரமற்றவராகக் கருதப்பட்டு விடுவாரோ என்று நமது ஆண்டவர் மரணப் பயத்தை வெளிப்படுத்துவதைப்பார்க்கின்றோம். நமது கர்த்தர் தமது அர்ப்பணிப்பின் உடன்படிக்கையை உண்மையாய்க் காத்துக்கொண்டுள்ளார் என்றும், வாக்களிக்கப்பட்டுள்ளதுபோல உயிர்த்தெழுதலை அடைவார் என்றுமுள்ள வாக்குறுதியினால் அவர் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதல்படுத்தப்பட்டதாக நாம் கவனிக்கின்றோம்.

இதற்குப் பிற்பாடு அவர் பிரதான ஆசாரியன் மற்றும் பிலாத்து மற்றும் ஏரோது மற்றும் மீண்டுமாகப் பிலாத்துவின் முன்னிலையில் எவ்வளவு அமைதியுடன் காணப்பட்டார் என்று நாம் கவனிக்கின்றோம். “தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்திமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தற்காத்துக்கொள்வதற்கெனத் – தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” அவர் முடிவுபரியந்தம் உண்மையாயும், தைரியமாகவும் இருந்ததாகப் பார்க்கின்றோம்; தம்முடைய பாதுகாப்பிற்கெனத் தம்மால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமானத் தூதரைப் பிதாவிடம் கேட்டிருக்கவும், பெற்றிருக்கவும் முடியும் என்றுமுள்ள அவரது நம்பிக்கையையும் நாம் பார்க்கின்றோம். ஆனால் தம்முடைய பலியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு உதவி வேண்டி விண்ணப்பிப்பதற்குப்பதிலாக, அவர் அவைகளை உண்மையாய்ச் சகிப்பதற்கு வேண்டிய உதவியையே விண்ணப்பித்தார். இங்கு அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்களுக்கு எத்தகையதொரு படிப்பினைக் காணப்படுகின்றது!

இன்னொரு பக்கத்தில், அவரது உண்மையுள்ள சீஷர்கள் மத்தியில், மிகுந்த தைரியமானவர்கள்கூட, ஆண்டவரைவிட்டு, ஓடிப்போனார்கள் என்றும், அவர்களில் ஒருவர் தனது [R5872 : page 86] துணிவின்மையினால், தனது க ர்த்தரையே மறுதலித்தார்! என்றும் நினைவுகூருகின்றோம். நம்மை மீட்டுக்கொண்டவருடன் பாடுபடுவதற்கான நமது விருப்பத்தின், நமது தைரியத்தின், நமது விசுவாசத்தின் அளவுத் தொடர்புடைய விஷயத்தில், நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்ப்பதற்கான எத்தகையதொரு தருணமாய் இது காணப்படுகிறது! எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் (அ) சூழ்நிலையிலும் நமது ஆண்டவரை மறுதலிக்கமாட்டோம் என்றும், நம்முடைய உதடுகளினால் மாத்திரமல்லாமல், நம்முடைய நடத்தையினாலும் அவரை அறிக்கைப்பண்ணுவோம் என்றுமுள்ளதான தீர்மானங்களினால் மனதைத் தாங்கி ஆதரிப்பதற்கு எத்தகையதொரு சிலாக்கியம் இப்படியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

நமக்கு எதிர்ப்பு மத உலகத்திலிருந்தே வரும்

யேகோவா தேவனுடைய ஜனங்களெனத் தங்களைக்குறித்து அறிக்கைப் பண்ணினவர்களே ஜீவாதிபதியைச் சிலுவையில் அறைந்துப்போட்டார்கள் என்ற எண்ணத்தினால் நாம் அதிர்ச்சியடைகின்றோம்! இது மாத்திரமல்லாமல் இவர்களது மதத் தலைவர்கள், இவர்களது பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள் மற்றும் நியாயசாஸ்திரிகளே இந்தப் பயங்கரமான செய்கைக்குப் பொறுப்பாளிகளாய் இருக்கின்றனர். “உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்; அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவுகூருகின்றோம். அவர் மத உலகத்தைக் குறிப்பிட்டார் என்று பார்க்கின்றோம் மற்றும் இதை உணர்ந்துகொள்ளுகையில், மத உலகமே, அவரது பின்னடியார்களாகிய நம்மையும் பகைக்கும் என்று அறிந்துகொள்கின்றோம். சத்தியத்திற்கான எதிர்ப்பும், ஒளியைச் சுமப்பவர்களுக்கான துன்புறுத்தலும் இன்று கிறிஸ்தவம் என்று அழைக்கப்படும் உலகத்தின் மிக முக்கியமான பிரதிநிதிகளிடமிருந்து வருவதைக் காண்கையில், நாம் ஆச்சரியமுற வேண்டாம். இந்த உண்மையானது நம்மை எதிர்ப்பவர்களையோ (அ) நமது கர்த்தரை மரணத்திற்கு ஏதுவாய்த் துன்புறுத்தினவர்களையோ பகைப்பதற்கு நம்மை வழிநடத்திடக்கூடாது. இக்காரியம் தொடர்புடையதான அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளாகிய “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்” (அப்போஸ்தலர் 3:17) என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

ஆ, ஆம்! (மத உலகத்தாரின்) இருதயம் மற்றும் மனதின் குருட்டுத்தன்மையும், அறியாமையுந்தான் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவினுடைய பாடுகள் அனைத்திற்குமான அடிப்படையாகக் காணப்படுகின்றது. இவைகள் தங்களினுடைய தலையானவருடைய உபத்திரவங்களில் குறைவானதை, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் நிறைவேற்றுவதுவரையிலும், இப்பொழுது காணப்படுவதற்குப் பிதா அனுமதித்துள்ளார் (கொலோசெயர் 1:24). சீக்கிரமாகவே நமது அருமை கர்த்தர் கூறியுள்ள பிரகாரமாகவே, இப்பொழுது அவரது பிட்கப்பட்ட சரீரத்தில் பங்கெடுத்து, அவரோடுகூடச் சத்தியத்தின் ஊழியத்தில் பிட்கப்படுகிறவர்களும், இப்பொழுது பாடுகள் மற்றும் சுயத்தை வெறுத்தல் எனும் அவரது பாத்திரத்தில் பங்கெடுப்பவர்களும், திரைக்கு அப்பால், இராஜ்யத்தில் அவரோடுகூடச் சந்தோஷத்தின் புதிய திராட்சரசத்தைப் பருகுவார்கள். அந்த மகிமையான காலையில், உலகைப் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கும் மாபெரும் வேலை ஆரம்பமாகும்; சீர்த்தூக்குதலின் மாபெரும் வேலை, “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் திரும்பக்கொடுத்தலின் காலங்கள்” ஆரம்பமாகும் (அப்போஸ்தலர் 3:21).

நினைவுகூருதலின் அனுசரிப்பில் பங்கெடுப்பவர்கள் ஒவ்வொருவரின் மனதிற்கு முன்பாகக் காணப்பட வேண்டிய சிந்தையானது, பரிசுத்த பவுல் அடிகளாரின் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதாவது, “அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;” “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;” “ஏனெனில் அவை அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவமாய் இருக்கின்றது;” “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோமர் 8:1-8) என்பதேயாகும். விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய புண்ணியத்தினால் முதற்பேறானவர்களான நம்முடைய பாவங்களைக் கடந்துபோகுதல் குறித்தும், நமது பாக்கியமான கர்த்தருடன், அவரது பாடுகளின், மகிமையின் அனுபவங்களில் நாம் பங்கடைவது குறித்துமான இந்தச் சிந்தனைகளுடன், சோதனைகளும், கஷ்டங்களும் இருந்தாலுங்கூடச் சந்தோஷத்தோடே பஸ்கா பண்டிகையை ஆசரிப்போம். இப்படியாக அவரது பின்னடியார்களென உண்மையாய்த் தொடர்ந்து செய்துவருவோமானால், வெகு சீக்கிரத்தில் கர்த்தரால் ஆதரிக்கப்படுபவர்களை, அதாவது இறுதியில் மகா இராஜாவுக்குச் செவிக்கொடுத்து, அவரை அறிந்துகொண்டு, அவருக்குக் கீழ்ப்படியும் யாவரையும், பாவம் மற்றும் மரணத்தினுடைய ஆளுகையிலிருந்து, எகிப்திலிருந்து, கானானுக்கு நேராய் வழிநடத்திடும் மாபெரும் சிலாக்கியத்தினை நாம் பெற்றுக்கொள்வோம்.

வரவிருக்கிற நினைவுகூருதலின் நாள்

வழக்கத்தின்படியே நியூயார்க் (New York) மற்றும் புரூக்கிலின் (Brooklyn) சபையார் இந்த வருஷமும், தற்காலச் சத்தியத்தினை உணர்ந்துள்ள பரிசுத்தவான்கள் அனைவருக்கும் விலையேறப்பெற்ற அர்த்தங்கள் நிரம்பப்பெற்றுள்ளதான இந்த மகா பெரும் நிகழ்வை ஆசரிப்பதற்கு ஒன்றுகூடுவார்கள். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றதான அருமையான நண்பர்கள் இந்தப் பாக்கியமான நினைவுகூருதலை அலட்சியப்படுத்திட வேண்டாம் என்று நாம் பரிந்துரைக்கின்றோம். சிறு கூட்டத்தாராய் இருப்பவர்கள், பெரிய கூட்டத்தாருடன் இணைந்து ஆசரிக்கத்தக்கதாகச் செல்லுங்கள் என்று நாம் அறிவுரைக் கூறுவதில்லை, மாறாக ஒவ்வொரு சிறு கூட்டத்தாரும் தங்கள் வழக்கத்தின்படி ஒன்றுகூடிட அறிவுறுத்துகின்றோம்; ஏனெனில் இப்படியாகச் செய்வதே ஆதித் திருச்சபையின் வழிமுறையாக இருந்தது. சந்தோஷமான இருதயத்தோடு, நாம் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்; அதுவும் நமக்கான நமது கர்த்தருடைய பலித் தொடர்புடையது மாத்திரமல்லாமல், அவரோடுகூட மரிப்பதற்கான நமது உடன்படிக்கைத் தொடர்புடையதுமான [R5872 : page 87] அதற்கே உரிய பயபக்தியுடன் ஆசரிக்கக்கடவோம். ஒவ்வொரு சபை கூட்டத்தாரிலுமுள்ள வழிநடத்துபவர்கள் புளிப்பில்லாத அப்பத்தையும், ஒன்றில் புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றை/grape juice (அ) உலர்ந்த திராட்ச ரசத்தை/raisinjuice (அ) திராட்சப்பழரசத்தைப்/fruit of the vine பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தங்கள் பண்ணிடவேண்டும். (wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராகவே நம்முடைய பரிந்துரை காணப்படுகின்றது; ஏனெனில் இது மாம்சத்தில் பெலவீனமாய்க் காணப்படும் சிலருக்குச் சோதனையாக அமையலாம்; எனினும் புளிப்பேற்றப்பட்ட திராட்சரசமே (wine) பயன்படுத்தப்படும்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்று யார் மனசாட்சியில் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு ஏற்பாடுகள் பண்ணப்படலாம்.

இந்தச் சிறு கூடுகைகளானது ஆரவாரமில்லாமல் காணப்படுவதற்குப் பரிந்துரைக்கின்றோம். ஒழுக்கமாயும், கிரமமாயும், அமைதியாயும், நாம் ஆசரிக்கப்போகின்றதான மாபெரும் செய்கை தொடர்புடையதான விலையேறப்பெற்ற நினைவுகளினால் நிரம்பினவர்களாக, ஒன்றுகூடுவோமாக. ஆசரிப்புகளிலும், சடங்குகளிலும், நம்முடைய கவனம் அதிகமாய்க் காணப்படாதிருப்பதாக. மற்ற விஷயங்களில் செய்வதுபோல, இதிலும் நமது கர்த்தரைப் பிரியப்படுத்துபவைகளைச் செய்திடுவதற்கு நாடுவோமாக; மற்றும் இப்படியாகச் செய்யப்படும் பட்சத்தில் பங்கெடுக்கும் யாவருக்கும், இவ்வனுசரிப்பு நன்மை பயக்கின்றதாயிருக்கும் என்பதில் நமக்கு நிச்சயமே.

விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தை அறிக்கைப் பண்ணுகிறவர்களும், கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்பும் பண்ணியுள்ளவர்களுமான எவருமே இந்த அடையாளங்களில் பங்கெடுப்பதற்குத் தடைப்பண்ணப்படக்கூடாது என்று இதற்கு முன்பும் நாம் கருத்துத் தெரிவித்திருக்கின்றோம். உண்மையான இருதயமற்றோர், இந்த ஐக்கியத்தின் சிலாக்கியத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் “கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்” என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைக் குறித்தத் தவறான கண்ணோட்டங்களின் காரணமாக, சிலர் உற்சாகப்படுத்தப்பட வேண்டியுமுள்ளது (1 கொரிந்தியர் 11:29). இந்த மாபெரும் செய்கையை, நினைவுகூருதலை ஆசரிப்பதான சிலாக்கியத்தினை கைவிடமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றதான இந்தப் பயப்படுகிறவர்களுக்காக, அப்போஸ்தலனால் இங்குக் குறிப்பிடப்படும் வகுப்பாரைக்குறித்து நாம் இங்கு விவரிக்கின்றோம்; பலியினுடைய உண்மையான முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ள தவறுகின்றவர்களும், இந்த ஆசரிப்பை வெறுமனே சடங்காச்சாரமாகக் கண்டுகொள்பவர்களும்தான் அப்போஸ்தலனால் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பாரில் இடம்பெறுவார்கள் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது. இவ்வாசரிப்பானது குறிப்பிடுபவைகளை ஆராய்வதற்கும், தெரிந்துகொள்வதற்கும் தவறுவது என்பது ஆக்கினைத்தீர்ப்பை, கண்டனத்தைக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது.

இவ்வருஷத்தில் இந்நிகழ்வானது, பரிசுத்தவான்கள் அனைவருக்கும் மிகவும் விலையேறப்பெற்றதாகவும், நன்மை பயக்கின்றதாகவும் இருக்குமென நாம் நம்புகின்றோம். நம்முடைய ஓட்டத்தின் முடிவை நாம் நெருங்குகையில், நம்முடைய அழைப்பு, அதன் பொறுப்புகள் மற்றும் சிலாக்கியங்களின் மகா முக்கியத்துவமானது, நம்முடைய இருதயங்களிலும், மனங்களிலும் அதிகமதிகமாகப் பதிய பெற்றிருக்க வேண்டும். நாம் அருமையான காலப்பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் என்னென்ன வரப்போகின்றது என்பதை நாம் அறியோம். ஆகையால் மிகுந்த ஜாக்கிரதையுடனும், மிகுந்த தெளிந்த நிலையிலும், அதேவேளையில் நம்முடைய இரட்சிப்புச் சமீபமாயிற்று என்றும், நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்போமானால், சீக்கிரத்தில் நம்முடைய நேச மணவாளனுடன், அவரது இராஜ்யத்தினுடைய சந்தோஷதிராட்சரசத்தில் பங்கெடுத்து, என்றென்றும் அவரோடு காணப்படுவோம் என்றும் அறிந்து சந்தோஷத்தோடே, களிகூருதலோடே நடப்போமாக.

இரத்தம் உங்களுக்கு அடையாளம்

எகிப்தில் அந்த இருளான இரவில், தேவன் இஸ்ரயேல் புத்திரர்களிடத்தில், இரத்தம் அவர்களுக்கு அடையாளமாய்க் காணப்படும் என்றும், தாம் இரத்தத்தைப் பார்க்கையில், அவர்களைக் கடந்துபோவார் என்றும் கூறினார்.

எகிப்திலுள்ள வீடுகள் அனைத்திலும் முதற்பேறானவர்கள் கொல்லப்படப்போகின்றார்கள், ஆனால் இரத்தத்தை நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் பெற்றிருக்கின்றதான ஒவ்வொரு வீடுகளைத் தேவன் கடந்துபோகப் போகின்றார் என்று நீங்கள் நினைவுகூருவீர்கள். எந்த இரத்தம்? அது ஆட்டுக்குட்டியின் இரத்தமாகும். இரத்தம் காணப்படுமானால், அவர்கள் நன்கு பாதுகாப்புடன் காணப்படுவார்கள், காரணம் தேவன் இப்படியாகக் கூறியிருக்கின்றார். (யாத்திராகமம் 12-ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் பதிவைக் கவனமாய் வாசியுங்கள்). ஆட்டுக்குட்டியின் இரத்தமானது, பல வருடங்களுக்குப் பின்னர் சிந்தப்படப் போகின்றதான இயேசுவின் இரத்தத்தினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது மற்றும் அந்த இருளான இரவில் ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தின் கீழ் எப்படி இஸ்ரயேலின் பிள்ளைகளானவர்கள் நன்கு பாதுகாப்பாய்க் காணப்பட்டார்களோ, அதுபோலவே தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய இயேசுவினுடைய இரத்தத்தின் கீழ்க்காணப்படுகின்றதான அனைவரும், தேவனுடைய பிரசன்னத்திற்குள் காணப்படுவது போன்று நன்கு பாதுகாப்பாய்க் காணப்படுகின்றனர். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை (இயேசுவை) ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

– Selected (R572)