R5577 – தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5577 (page 344)

தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்

SMITTEN OF GOD, AFFLICTED

மாற்கு 15:22-37

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.” ஏசாயா 53:4

இயேசு சிலுவையில் அறையப்பட்டது தொடர்புடையதான உண்மைகளின் விஷயத்தில் வாக்குவாதம் பண்ணுவதற்கு இடமில்லை. சிலுவையில் அறையப்படுதலுக்கான காரணம் மற்றும் தெய்வீக வரம்பு தொடர்புடைய விஷயத்தில் மாத்திரமே வாதம் செய்வதற்கு இடமுள்ளது. ஏசாயா தீர்க்கத்தரிசி நமக்குத் தெய்வீக விளக்கத்தை அளிக்கின்றார்.
பாடுகள் நிறைந்த பாதை!

ஜனங்களுடைய வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவதில் தம்முடைய சத்துவத்தை அவர் இலவசமாய்க் கொடுத்து வந்ததான, அவரது மூன்று வருட ஊழியத்தினால் இரட்சகர் மிகவும் பெலவீனமடைந்து காணப்பட்டார். இது தவிர பஸ்காவை ஆயத்தம் பண்ணும்படிக்கு அவர் தம்முடைய சீஷர்களை அனுப்பிவைத்தது முதல், தூக்கம் இல்லாதவராகவும், தொடர்ச்சியாக அழுத்தத்துடன் இருந்தவராகவும் காணப்பட்டார். இந்த ஒரு வேளையில்தான் பஸ்கா தொடர்புடையதான துயரமான அனுபவங்களும், நினைவுகூருதலின் இராப்போஜனம் நிறுவப்படுதலும், கெத்செமனேக்கு நேரான பிரயாணமும், அங்கு வியாகுலமும், பெலவீனம் அடைதலும், பிரதான ஆசாரியனால் நடத்தப்பட்ட ஆலோசனை சங்க விசாரணையும், ஏரோதின் முன்னிலையிலும், பிலாத்துவின் முன்னிலையிலும் நடைப்பெற்றதான விசாரணைகளும், சவுக்கடிகள் முதலானவைகளும் நடைப்பெற்றன; இவைகள் அனைத்துமே அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவே இருந்தது. யாருக்காக அவர் பரலோக வீட்டையும், மகிமையையும் தியாகம் பண்ணினாரோ, அவர்களாலேயே அவர் சிலுவையில் அறையப்படும்படிக்கு இப்பொழுது தீர்க்கப்பட்டிருக்க, அவர் தம்முடைய சிலுவையையும் இப்பொழுது சுமந்துச் செல்ல வேண்டியவராய் இருந்தார். அவரது பெலவீனம் காரணமாக, சிலுவையின் பாரத்தைச் சுமக்க முடியாமல் போகும் கட்டம் வருவது வரையிலும், அவர் சுமந்துக்கொண்டுவந்தார் மற்றும் அவருக்கு உதவிச் செய்யத் தக்கதாக வழிப்போக்கனான ஒரு விவசாயி வற்புறுத்தப்பட்டார்; வழிப்போக்கன் முழுச் சிலுவையையும் சுமந்து வந்தாரா அல்லது சிலுவையின் ஒரு பாகத்தைச் சுமந்து, இயேசுவுக்குப் பின் நடந்துவந்தாரா என்பது வேதவாக்கியத்தில் மிகத் தெளிவாய்க் கொடுக்கப்படவில்லை.

இயேசுவுக்கு உதவி அளிப்பதற்குப் பதிலாக, பேதுருவும், யோவானும், யாக்கோபும், தோமாவும், மற்ற அப்போஸ்தலர்களும் எங்கே போனார்கள்? அவர்கள் பயத்தினால் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தோ, எத்துணையான ஓர் ஆசீர்வாதத்தை அவர்கள் இழந்துபோனார்கள்! பலவந்தத்தின் காரணமாகச் சிலுவையைச் சுமந்த சிரேனே ஊர் விவசாயியானவன், அந்த ஒரு வேளையின் போதான அனுபவங்களின் வாயிலாக, இரட்சகருடைய செய்தியினுடைய உண்மையைத் தனது இருதயத்தில் பதியப் பெற்றுக்கொண்டதன் மூலம், நசரேயனின் பின்னடியார்களில் ஒருவராகப் பிற்பாடு ஆனார் என்று பாரம்பரியமானது தெரிவிக்கின்றது.

அழுதுகொண்டிருந்த ஸ்திரீகள் சுற்றிக்கூட்டம் கூடி நின்றார்கள் மற்றும் அவர்களில் எவரும், உதவிக்கரம் நீட்டவில்லை என்று நாம் எண்ணுகின்றோம். அவர்களை நோக்கி இயேசு: “நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்றார். அவர்கள் மறைவிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மலைகளையும் குன்றுகளையும் நாடுவார்கள் என்பது தொடர்புடையதான போதகருடைய வார்த்தைகளானது, 37-வருடங்களுக்குப் பிற்பாடு எருசலேமின் அழிவின்போது, யூத ஜனங்கள் மீது வந்ததான மாபெரும் உபத்திரவத்தின் ஒரு பாகம் பற்றியதாகும் என்று வேதத்தினுடைய சில மாணவர்கள் எண்ணுகின்றனர். இன்னுமாக எருசலேமுடைய அழிவும் மற்றும் இந்த உபத்திரவமும், இந்த யுகத்தினுடைய முடிவின் காலங்களில் நடைபெறவிருக்கும் மாபெரும் துன்பங்களை எடுத்துக்காட்டுகின்ற நிழல்களாய் இருக்கின்றது என்றும் எண்ணப்படுகின்றது.

மலைகள் மற்றும் குன்றுகள் தொடர்புடையதாகப் பயன்படுத்தப்பட்ட இதே வார்த்தைகளே, இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய முடிவு தொடர்புடைய விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது நிச்சயமே. கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையின்போது, ஜூவாலித்து எரிகின்ற அக்கினியாகிய நியாயத்தீர்ப்புகளோடு வெளிப்படுகையில், அக்கினியானது தற்போதுள்ள ஒழுங்குகளைப் பட்சித்துப்போட்டு, புதிய இராஜாவுக்காக வழியை ஏற்படுத்துகின்றதாக இருக்கும். ஒருவன் தன்னுடைய ஜீவனை மாய்த்துக்கொள்வதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றது; ஆகையால் ஒருவன் மலைகள் தன்மேல் விழும்படிக்கு ஜெபம் ஏறெடுப்பான் என்று நாம் எண்ணி விடக்கூடாது. மாறாக சீறுகின்ற உபத்திரவங்களுக்கு எதிராக, அநேகர் பாதுகாப்பையும், மறைவையும் நாடுவார்கள் மற்றும் விரும்புவார்கள் மற்றும் இதற்காக ஜெபம் ஏறெடுப்பார்கள் என்பதே கருத்தாகும். சமுதாயம் எனும் பாறைகள், சமுகத்திற்காக சமுக அமைப்புகளாய் இருக்கின்றன மற்றும் இவை ஒவ்வொன்றும் அதன் சொந்த அங்கத்துவத்தைப் பாதுகாத்திட நாடுகின்றது (லூக்கா 23:28-30).

“பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்?” என்று இயேசு கூறினார் (லூக்கா 23:31). இங்கு அவர் யூத தேசத்தை, தமது சாபத்தினால் (அ) தீர்ப்பினால் உடனடியாகப் பட்டுப்போன அத்திமரத்திற்கு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக, எருசலேமுக்குக் கழுதையின் மீது ஏறிவந்து, எருசலேமுக்காகக் கண்ணீர்விட்டு, “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்” என்று கூறினார். அத்திமரமானது பச்சையாக இருக்கக்கூடிய கொஞ்சக்காலத்திலேயே, அதன் அதிகாரிகள், அவரைச் சிலுவையில் அறைந்துபோடத்தக்கதாக, அனைத்து நியாயப்பிரமாணங்களை மீறிடுவதற்கும், மனசாட்சி அனைத்தையும் உதறித் தள்ளுவதற்கும் விரும்பும் அளவுக்குத் துணிச்சலான/மூர்க்கத்தனமான நிலைக்கு வந்து விட்டார்கள்.

இவ்வளவுக்கு விரைவாகப் பொல்லாப்பானது மிகவும் கொடிய விதத்தில் நீதியின் வரம்பைக் கடந்து செயல்பட்டுள்ளதானால், பிற்காலங்களில் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கப்படலாம்; அதாவது யூத தேசமாகிய அத்திமரமானது, முற்றிலும் பட்டுப்போய்விடும்போதும் மற்றும் அதனிடத்தினின்று உயிர்ச்சாறு (தேவனிடத்திலான பக்தி) அனைத்தும் இல்லாமல் போய்விடும்போதும் என்னவெல்லாம் எதிர்ப்பார்த்திடலாம். இதுபோலவே இந்த யுகத்தினுடைய முடிவிலும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது, பரிசுத்தவான்களானவர்கள் கொடுமைக்கு ஆளாகுவார்கள் மற்றும் இப்படியாகப் பூமியின் உப்பானது எடுத்துவிடப்படும் மற்றும் உடனடியாகப் பரவலாய்ச் சீர்கேடாகிய ஒழுங்கின்மை தொடங்கும்.

மனுஷக்குமாரன் உயர்த்தப்பட்டார்

இயேசு தாம் சிலுவையில் அறையப்படப்போவதை முன்னமே குறிப்பிட்டுள்ளார்; அதாவது “வெண்கல சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல, மனுஷக்குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியாக வெண்கல சர்ப்பமானது, இயேசுவுக்கு ஒரு நிழலாகப் பயன்படுத்தப்பட்டது. அவர் உண்மையில் பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும் ஆவார்; ஆனால் அவர் பாவியின் ஸ்தானத்தை எடுத்தார். அவர் பாவிபோன்று நடத்தப்பட்டார். நியாயப்பிரமாணத்தின் கீழ்க்கடுமையானதொரு தண்டனையாகக் காணப்படுவது, சிலுவையில் அறையப்படுதலாகும் “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” ஆவான். ஆகையால், இயேசு நமக்காக சாபத்திற்குள்ளானார் என்று அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளார் (கலாத்தியர் 3:13). அவர் பாவம் அறியாதவராக இருந்தபோதிலும், அவர் பாவியினுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். வேத வாக்கியங்களின்படி இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்.

“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றதான வார்த்தைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டாம்; ஏனெனில் இவைகள் பழைய கிரேக்க மூலப்பிரதிகளில் இடம்பெறுவதில்லை. இன்னுமாக, யூதர்களுடைய பாவங்களானது தண்டனையைக் கொண்டுவரும் என்பதையும் இயேசு அறிந்திருக்க வேண்டும். தேவன் அவர்களைத் தண்டிப்பார் என்றும், அவர்களது பட்டணத்தைச் சுட்டெரித்துப் போடுவார் என்றும் இயேசு தம்முடைய உவமையில் முன்னுரைத்துள்ளார் (லூக்கா 20:14-16). “உங்களுக்காக அழுங்கள்” என்ற வார்த்தையானது, யூதர்கள் தங்கள் பாவங்களுக்காக தண்டனைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதையும், இந்தப் பாவமானது அவர்களுக்கு முழுமையாய் மன்னித்துவிடப்படுவதில்லை என்பதையும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. யூதர்கள் தெய்வீகத் தயவினின்று இப்பொழுதுவரைக்கும் 18-நூற்றாண்டுகளாகத் துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தப் பிரகாரமான தெய்வீக ஏற்பாடுகள் தொடர்புடைய அனைத்திலும் பிதாவுடன் இயேசு முழு இசைவுடன் காணப்பட்டார் என்றும், தெய்வீகச் சித்தத்திற்கு எதிராக எதையும் இயேசு வேண்டிக்கொள்ளவில்லை என்றும் நாம் எடுத்துக்கொள்வது சரியே.

இயேசுவை யூதர்கள் புறக்கணித்தக் காலத்தில், அவர்கள்மீது வந்த உபத்திரவம் பற்றியதான மேற்கூறிய காரியத்தைப் பரிசுத்தவானாகிய பவுலும் குறிப்பிட்டுள்ளார்; அதாவது அவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ளதான அனைத்தும் நிறைவேறித் தீரத்தக்கதாக “அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது” என்பதாகும் (1 தெசலோனிக்கேயர் 2:14-16).

இன்னொரு பக்கம், யூதர்களுக்காகவும் இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுத்தவராகக் காணப்படுவதினால், தேவனுடைய பிரதிநிதியென, அவரது குமாரரென யூதர்களிடத்தில் அனுப்பி வைக்கப்பட்டவரைக் கொன்றுப்போட்டதான மாபெரும் பாவத்தின் காரணமான தண்டனையினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாம் என்று இயேசு விரும்பமாட்டார் என்பதில் நமக்கு நிச்சயமே. இப்படிப்பட்டதான துணிகரமான பாவத்திற்குரிய நீதியான தண்டனை என்பது, முற்றிலுமாய் அழிக்கப்படுவதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்போஸ்தலனோ நீதியைக் குறித்து இல்லாமல், மாறாக “நன்மையானவைகளை இயேசுவின் இரத்தம் பேசுகின்றதெனச்” சுட்டிக்காட்டுகின்றார் (எபிரெயர் 12:24). இயேசுவின் இரத்தமானது உலகத்தாருக்காக மாத்திரமல்லாமல், யூதர்களுக்காகவும் பாவங்களுக்கான மன்னிப்பைப் பேசுகின்றது. அந்த இரத்தமானது, ஆயிர வருட இராஜ்யத்தின்போது, தேவனுடன் ஒப்புரவாகிக்கொள்வதற்கான முழு வாய்ப்பைக் குறித்துப் பேசுகின்றது.

கொஞ்சம் அறியாமையின் காரணமாக, யூதர்கள் தங்கள் நடத்தைக்கு முழுப் பொறுப்பாளிகளாய் இருக்கவில்லை என்ற கருத்தைப் பரிசுத்தவானாகிய பேதுரு உறுதிப்படுத்துகின்றார். யூதர்கள் சிலரை நோக்கி, அவர் கூறினதாவது: “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 3:17); ஏனெனில் அறிந்தார்களானால் “ஜீவாதிபதியை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே” (அப்போஸ்தலர் 3:15-17). தேவனுடைய ஏற்றவேளையில் முழு உலகத்தின் [R5578 : page 345] புரிந்துகொள்ளுதலுடைய கண்கள் திறக்கப்படும் என்று சகரியா தீர்க்கத்தரிசி நமக்குக் காட்டுகின்றார். அனைவரும் காரியங்களை வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள் மற்றும் யூதர்கள் குறித்தும் விசேஷமாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது; அதாவது “அவர்கள் தாங்கள் குத்தினவரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, தங்கள் சிறந்த நண்பனை, தங்கள் மீட்பரை தாங்கள் மோசமாய் நடத்தியுள்ளனர் என்று உணர்ந்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.” (சகரியா 12:10)

என் வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள்

இயேசு மரித்துக்கொண்டிருக்க, நெய்யப்பட்டிருந்ததான அவருடைய வஸ்திரத்திற்காக சீட்டுப்போட்டும், இன்னுமாக அவரது மற்ற உடைகளைத் தங்களுக்குள்ளாகப் பங்கிட்டுக் கொண்டதுமான உண்மையின் வாயிலாக, ரோம போர்ச்சேவகர்களுடைய கல்லான இருதய தன்மை சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. ஆயிர வருட இராஜ்யத்தின் விளைவாகக் கல்லான இருதயங்கள் மாற்றப்பட்டு, உருக்கமான இருதயங்கள் கொடுக்கப்படும் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் பெற்றிருக்கின்றோம். ஆதாமினிடத்தில் ஆதியில் காணப்பட்டதும், பிற்பாடு மனிதனாகிய இயேசுவினிடத்தில் காணப்பட்டதுமான தேவசாயலுக்கும், ரூபத்துக்கும் மனுக்குலம் அனைத்தும் முழுமையாய்ச் சீர்ப்பொருந்தப்படுவது ஓ! எத்துணை அவசியமானதாய்க் காணப்படுகின்றது!

இயேசுவோடுகூட, அவரது இரண்டு பக்கங்களிலும், அதேவேளையில் தண்டனை நிறைவேற்றப்பெற்ற இரண்டு குற்றவாளிகளிலும், உலகத்தினுடைய மனப்பான்மையானது வெளிப்படுத்தப்படுகிறது; இயேசுவினுடைய சிலுவையின்மேல், யூதர்களுடைய இராஜா என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. துன்பத்தில் காணப்பட்டு ஒரு குற்றவாளி, இயேசுவை வஞ்சகன் என்று தூஷித்து, இயேசு தம்மையும் மற்றும் தங்களையும் இரட்சித்துக்கொள்வதின் மூலம் தம்முடைய வல்லமை எதையாகிலும் வெளிப்படுத்திட வேண்டும் என்று கூறி நகைத்தான். இயேசு தம்மை இரட்சித்துக்கொள்வாரானால், அவர் உலகத்தினுடைய இரட்சகராக முடியாது என்பதை அந்தக் கள்வன் கொஞ்மும் அறியாதிருந்தான்!

மற்றக் கள்வனோ இயேசு தவறு எதுவும் செய்யவில்லை என்றும், அவர் அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்றும் கூறி இயேசுவுக்கு ஆதரவு கொடுத்தான். பின்னர் இயேசுவை நோக்கி தான் பேசின இரக்கமான வார்த்தைகளுக்காக, கைமாறு ஒன்றை கேட்டுக்கொண்டதின் வாயிலாக, அவர் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினான். “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்” (லூக்கா 23:42). அந்தப் பாவப்பட்ட கள்வனானவன், இயேசு தம்மை இராஜா என்று சொன்னதை அறிந்திருந்தான். இயேசுவிடம், “நீர் இராஜாவோ?” என்று கேள்விக் கேட்கப்பட்டபோது, கள்வன் அவர் அருகில் நின்றுகொண்டிருந்தான் மற்றும் “என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று அவர் பதில் கூறினதையும் கள்வன் கேட்டான். இயேசு தோற்றத்திலும், பண்புகளிலும் மிகவும் சிறந்தவராகக் காணப்பட்டபடியால், அவர் இராஜாவாய் இருப்பதற்குப் பாத்திரமானவர் என்று கள்வன் அடையாளங்கண்டுகொண்டான். இயேசு சொல்லுகிறபடி, அவர் உண்மையிலேயே இராஜாவாக இருப்பாரோ? இவர்தான் மேசியா என்று இறுதியில் நிரூபணமாகுமோ? ஆகையால் உண்மையையாகிலும் சொல்லுவோம் மற்றும் இவர் சார்பில் ஒரு வார்த்தையையாகிலும் சொல்லுவோம் மற்றும் இவர் தமது இராஜ வல்லமையை அடையும்போது, என்னைத் தயவாய் நினைவுகூருங்கள் என்று வேண்டுதலாவது செய்வோம் என்று கள்வன் எண்ணிச்செய்தான்.

இயேசுவின் பதிலானது கடந்த காலங்களில் நம் அனைவராலும் பொதுவாக மிகத் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. அன்றைய தினமே கள்வன் இராஜ்யத்தில் தம்மோடுகூடக் காணப்படுவான் என்று அவர் வாக்களித்ததாக நாம் எண்ணினோம். ஆனால் மற்ற வேத வாக்கியங்களையும் பார்க்கும்போது, இயேசு அன்றைய தினம் இராஜ்யத்தில் இல்லாமல், மாறாக யோசேப்பினுடைய புதிய கல்லறையில் காணப்பட்டார் என்றும், மூன்றாவது நாள் வரையிலும் அவர் மரணத்திலிருந்து, சியோலிலிருந்து, ஹேடிசிலிருந்து, கல்லறையிலிருந்து உயிருடன் எழுந்திருக்க வில்லை என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடுங்கூட அவர் மரியாளிடம்: “நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும் ஏறப்போகிறேன்” என்று கூறினார் என்றும் நாம் அறிவோம். அப்படியானால் தாமும், கள்வனும் அன்றைய தினமே பரதீசில் காணப்படுவார்கள் என்று இயேசு சொல்லியிருந்திருக்க முடியாது.

இதோ, உண்மையான விளக்கம்: விழுகையின் காரணமாக 6000 வருடங்களுக்கு முன்னதாகத் தொலைந்துபோனதான பரதீசானது, மேசியாவினால் அவரது மகிமையான இராஜ்யத்தில் திரும்பக்கொடுக்கப்படும். அப்போதுதான் அதாவது, “நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது” கள்வன் தன்னை – நினைத்தருளும்படிக்கு வேண்டிக்கொண்டான். மரித்தது முதல் கள்வன் மேசியாவின் இராஜ்யம் வரும் காலத்திற்காக, மரணத்தில் நித்திரைப்பண்ணி, காத்துக் கொண்டிருக்கின்றான். இயேசு கொடுத்தப் பதிலானது, முழு இசைவுடனே காணப்படுகின்றது; ஆமென், அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்தார். “இன்றைக்கு (எனக்கு ஒரு நண்பன் இல்லாத இந்த நாளில் மற்றும் எனக்கு ஓர் இராஜ்யம் இருக்கும் என்று தோன்றுவதற்கு அநுகூலமாய் எதுவும் இராததுபோன்று காணப்படும் இன்றைக்கு நான் உன்னிடம் கூறுகின்றேன்), நான் உனக்கு மெய்யாகவே சொல்லுகின்றேன் நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43, சரியான மொழியாக்கம்).

உலகை பரதீசாக மாற்றும் பணியை, இயேசுவின் இராஜ்யமானது விரைவில் ஆரம்பித்து விடும். மரணத்தில் நித்திரைப் பண்ணிக்கொண்டிருக்கின்றதானவர்களின் உயிர்த்தெழுதலின் போது, அந்தக் கள்வனும் ஆண்டவரினால் நினைவுகூரப்படுவான். சந்தேகத்திற்கிடமின்றி அந்தக் கள்வன் பரதீசில் பெரும் ஆசீர்வாதத்தை அடைகிறவனாய் இருப்பான், காரணம் அவன் சிலுவையில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசினதினாலும் மற்றும் அவனுடைய வார்த்தைகளானது, அவன் உருக்கமான மற்றும் தவறுக்காக மனம் வருந்துகிற இருதயம் உடையவன் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதாய் விசேஷமாய் இருப்பதாலும் ஆகும்; இப்படிப்பட்ட இருதய நிலைமை உடையவர்களே இராஜ்யத்தில் ஆசீர்வாதங்களை முதன்மையாய்ப் பெற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்பார்கள்.

இயேசு தமது தாயாரை, தமது சீஷனாகிய யோவானிடத்தில் ஒப்படைத்த காரியமானது, மரியாளுடைய கணவனாகிய யோசேப்பு உயிரோடில்லை என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இப்படியாக அவர் ஒப்படைத்த காரியமானது, அவரது உச்சக்கட்டமான பாடுகளுடைய வேளையின்போது அவரது அன்புக்குரியவர்களின் நலன் குறித்த போதகருடைய ஆழ்ந்த கவனத்தை நமக்குக் காண்பித்துத் தருகின்றது.

போதகர் மரிக்கும்போது, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” என்பதான அவரது வார்த்தைகளானது, அவர் தம்மைப் பரம பிதா என்று சொல்லாமல், மாறாக தேவனுடைய குமாரன் என்று சொல்வதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இது போதகர் எந்த அளவுக்கு முழுமையாய்ப் பாவியினுடைய தண்டனையை அனுபவித்திட்டார் என்பதையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பாவத்திற்கான தண்டனை என்பது, மரித்துப்போவதாக மாத்திரம் காணப்படாமல், இன்னுமாகத் தேவனுடனான ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப் படுதலையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. பாவியினுடைய ஸ்தானத்தை எடுக்கும் இயேசு, ஒரு கணமாகிலும் பாவியினுடைய (உறவு துண்டிக்கப்பட்ட) அந்நியனாக்கப்பட்ட நிலையினை முழுமையாக அனுபவித்தாக வேண்டும்.

“முடிந்தது” என்று போதகர் கூறின வார்த்தைகளானது, முந்தின நாளன்று அவர் கூறி இருந்த வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. அதென்னவெனில் “ஆகிலும் நான் முழுக வேண்டிய (மரணத்திற்குள்ளான) ஒரு ஸ்நானம் உண்டு, அது முடியுமளவும் (முடிவது வரையிலும்) எவ்வளவோ சிரமப்பட்டு) நெருக்கப்படுகிறேன்” (லூக்கா 12:50).
“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்ற வார்த்தைகளானது, இயேசு தம்முடைய ஜீவனை ஒப்புவிக்கின்றார் என்றும், அவர் பெற்றிருந்ததான ஜீவனுக்கான ஆவி என்பது அவரது முந்தின நிலைமையிலிருந்து (இப்போதுள்ள மனித நிலைக்கு) மாற்றப்பட்ட ஒன்று என்றுமுள்ள உண்மைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆதாம் போன்று ஜீவனுக்கான அவரது உரிமையை, அவர் இழந்து காணப்படவில்லை. ஆகையால் அவரால் அந்த ஜீவனை தமது சொந்த ஆவி என்று சொல்ல முடிந்தது; அதை ஜீவனுக்கான அவரது உரிமை என்றும் அவரால் சொல்ல முடிந்தது. உயிர்த்தெழுதலில் அது அவருக்கு மீண்டுமாகக் கொடுக்கப்படும் என்ற தெய்வீக வாக்குத்தத்தத்தின் காரணமாக, அவர் கொஞ்சம் காலம் அதை ஒப்புவித்தவராகவும், சரணடையப்பண்ணினவராகவும் மாத்திரம் காணப்பட்டார்.