R5538 – இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5538 (page 279)

இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்

THE BLESSING OF THE CUP OF SALVATION

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.” சங்கீதம் 116:12-14

இந்த வார்த்தைகளானது, தீர்க்கத்தரிசியாகிய தாவீதுக்கு இல்லாதளவுக்கு ஆவிக்குரிய இஸ்ரயேலனுக்கு விசேஷித்த அர்த்தமுடையதாய்க் காணப்படுகின்றது. எனினும் இந்த வார்த்தைகளில் அடங்கும் உணர்வினைக் குறித்த சரியான கருத்தினைத் தீர்க்கத்தரிசி அதிகமாகவே கொண்டிருந்திருப்பார் என்று நாங்கள் எண்ணுகின்றோம். தேவனுடைய காருண்யம் குறித்து இராஜாவாகிய தாவீது உணர்ந்தவராகவே இருந்தார் என்பதில் ஐயமில்லை. கர்த்தரிடமிருந்து தனக்கு வந்திட்டதான ஆசீர்வாதங்களுக்காக, மிகவும் நன்றியுள்ள மற்றும் உணர்வுமிக்க இருதயத்தைத் தாவீது கொண்டிருந்ததை அவரது சங்கீதங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவரது இருதயமானது, “நான் கர்த்தருக்காக என்னத்தைச் செலுத்துவேன்? அவரது கிருபைகள் அனைத்திற்குமாக நான் என்னத்தைச் செலுத்துவேன்?” என்று சரியாகத்தான் கூறியுள்ளது.

ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்டதான தேவனுடைய வாக்குத்தத்தத்தைத் தாவீது அறிந்திருந்தார்; ஒரு காலக்கட்டத்தில் தேவன் பூமியின் குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார் என்றும், இந்த ஆசீர்வாதமானது ஆபிரகாமின் சந்ததி வாயிலாகக் கடந்துவரும் என்றும் தாவீது அறிந்திருந்தார். தாங்கள்தான் ஆபிரகாமின் சந்ததி என்பதை இஸ்ரயேல் ஜனங்கள் அறிந்திருந்தார்கள். இவர்களில் ஒருவர் தாவீதுமாவார் மற்றும் ஏதோ ஒருவிதத்தில் தனக்கும் இவ்வாக்குத்தத்தத்தில் பங்குண்டு என்பதாக அவர் உணர்ந்திருந்தார். காரியம் அவருக்குத் தெளிவாய்த் தெரியவில்லை; எனினும் ஆபிரகாமின் சந்ததியே உலகத்தை ஆசீர்வதிக்கும் என்பதை அறிந்திருந்தார்.

“இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு” என்று தெரிவித்ததின் மூலம், தான் அந்த இரட்சிப்பில் பங்கடையத்தக்கதாக, கர்த்தர் தனக்கு அனுமதிக்கும் அனுபவங்கள் எதுவாயினும் அதை, தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சங்கீதக்காரன் மனதில் எண்ணம் கொண்டிருந்தார் என்று நாம் எண்ணுகின்றோம். தானும் அத்தகையதொரு பங்கை அடையத்தக்கதாக, அவர் கர்த்தருடைய நாமத்தைத் தொடர்ந்து தொழுதுகொண்டார்; தான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை “அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்” செலுத்துபவரானார். அவர் மனப்பூர்வமான பொருத்தனைகளைப் பண்ணியிருந்தார் மற்றும் அதை அவர் நிறைவேற்றப்போகின்றார்; இதை அவர் ஒரு சிலாக்கியமாகக் கருதுபவரானார்; தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் அவர் மகிழ்ச்சிக்கொள்பவராய்க் காணப்படுபவரானார்.

[R5538 : page 280]

ஆவிக்குரிய இஸ்ரயேலனுக்கு ஆழமான அர்த்தம் கொண்டுள்ளது

கிறிஸ்தவனுக்கு, இவைகள் அனைத்தும் மிகவும் ஆழமான அர்த்தமுடையவையாகும். நமது கர்த்தர் இயேசு துவங்கி, சபையினுடைய மாபெரும் தலையான வருடன் உடன் சுதந்திரர்களாகுவதற்கு அழைக்கப்பட்டதான தேவனுடைய புத்திரர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வார்த்தைகளானது விசேஷித்த அர்த்தமுடையவையாகும். பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, புத்திரத்துவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இவர்கள், தேவனுடைய இரக்கங்கள் அனைத்திற்குமாக விசேஷித்த விதத்தில் திரும்பிச் செய்திடுவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இவர்கள் தாவீதைப் போன்றில்லாமல், தங்களுடைய பாவங்களுக்கான நிஜமான மன்னிப்பைப் பெற்றுக்கொண்டவர்களானார்கள். தாவீதினுடைய பாவங்கள் நிழலான விதத்தில் மாத்திரமே மூடப்பட்டன மற்றும் இவரே: “நான் என்னத்தைச் செலுத்துவேன்?” என்று கூறுவாரானால், இதைக் காட்டிலும் மிக அதிகமாகவே நம்மால்: “நான் கர்த்தருக்காக என்னத்தைச் செலுத்துவேன்?” என்று கூறிட முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு நமக்குப் புத்திக்கூறியுள்ளார்: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1). இதையே நாம் மகிழ்ச்சியுடன் செலுத்துகின்றோம்; அதாவது நம்முடைய சரீரங்களை ஜீவப்பலிகளாகச் செலுத்துகின்றோம். ஒவ்வொரு உண்மையும், பெருந்தன்மையுமான இருதயத்தில், அன்பிற்கும், இரக்கத்திற்கும் கைமாறாக, நன்றியறிதலே காணப்படும் மற்றும் இவைகளைக் காட்டிலும் இனிமையான பொருத்தம் எதுவுமில்லை மற்றும் இவைகளே உயர்க் குணங்களைப் பெற்றிடுவதற்கும், சிறந்தவைகளைச் செய்திடுவதற்கும் அதிகம் ஏவுகின்றதாய் இருக்கும். தம்முடைய பிள்ளைகள் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் உண்மையான பெருந்தன்மையின் மற்றும் மிகுந்த நன்னெறியின் பண்புகள் அனைத்தையும் வளர்த்தி விருத்திச் செய்திடுவதற்குத் தேவன் விரும்புகின்றவராய்க் காணப்படுகின்றார். ஆகையால் நமக்குப் பாராட்டப்பட்ட அன்பு மற்றும் இரக்கத்தினுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் கவனிப்பதும், அதற்கே உரிய நன்றியையும், (போற்றுதலையும்) உணர்ந்துகொள்ளுதலையும் கைமாறாய்க் காண்பித்திடுவதற்குக் கவனமாய் இருப்பதும் மிகவும் ஏற்றக்காரியமாய் இருக்கின்றது. சுயநலமோ (அ) கவனமற்ற தன்மையோ ஆத்துமாவினுடைய சிறந்த இயல்புகளை நெருக்கிப் போடும்போது, எத்தனைதரம் (நமக்குப் பாராட்டப்பட்ட) அன்பானது, கைம்மாறு பெற்றுக்கொள்ளாமல் கடந்துபோக வேண்டியுள்ளதாய் இருக்கின்றது.

மனிதனுடைய அன்பும், இரக்கத்தின் செயல்பாடுகளுமே, நன்றியறிதல் மற்றும் (பாராட்டுதல்) உணர்ந்துகொள்ளுதல் எனும் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு நம்மை அதிகமாய், பெரும்பாலும் தூண்டுகிறதானால், நமது பரம பிதாவினுடைய தொடர்ச்சியான கிருபையும், உருக்கமான இரக்கமும், நம்முடைய ஆத்துமா நன்றியோடு ஒப்புக்கொள்ளுதலையும், துதிச் சாற்றுதலையும் கைம்மாறாக வெளிப்படுத்தத்தக்கதாக (நம் ஆத்துமாவை) தூண்டிவிடுவது பொருத்தமானதாகவே உள்ளது! நாம் பெற்றிருக்கின்றதான ஒவ்வொரு நன்மைக்கும், நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கின்றோம். இவைகளின் அர்த்தத்தை, அவருடைய அன்பினால், உன்னதமானவரின் மறைவிடத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களும், நமது பிதாவினுடைய பொக்கிஷசாலையினுடைய ஐசுவரியங்களையும், “உச்சிதமான கோதுமைகளையும்” அனுபவிக்கிறவர்களுமாய் இருப்பவர்கள் மாத்திரமே அறிந்துகொள்வார்கள். அவரது கிருபைக்குரியவர்களாய் நாம் விசேஷமாய்க் காணப்படுகின்றோம்.

அவரது கிருபை, ஓ! எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

நமக்கான விசேஷித்த ஏற்பாடுகள் அடங்கிய நீண்டதொரு பட்டியலை, நம்மில் யாராகிலும் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடக்கூடுமோ? நம்முடைய ஜீவியங்களின் கடந்தகால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பார்க்கையில், நம்மில் யாரால்தான், கீழே கவிஞன் ஆச்சரியத்துடன் கூறுவது போன்று, கூறாமல் காணப்பட முடியும்:

“நான் திரும்பிப்பார்த்து, நாளுக்குநாள் தேவன்
என்னை வழிநடத்தி வந்த பாதையின் நிமித்தம்
துதி ஏறெடுக்கிறேன்.”

கர்த்தர் தம்முடைய ஜனங்களை எத்தனை ஆச்சரியமாய் வழிநடத்தியுள்ளார்! அவரது பிள்ளைகள் என்றென்றும், அவரது தொடர்ச்சியான பராமரிப்பின் கீழ்க் காணப்படுகின்றவர்களாக இருக்கின்றனர். நன்மையான எதையும், அவர்களுக்கு அவர் விலக்கி வைக்கவில்லை மற்றும் அவருக்கு அவர்கள் கீழ்ப்படிதலோடு காணப்படும் பட்சத்தில், அனைத்தும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாய் நடைப்பெறுகின்றதாய் இருக்கின்றது. வெயிலிலும், நிழலிலும், மகிழ்ச்சிகளிலும், கண்ணீர்களிலும், அமைதியான சூழ்நிலைகளிலும், புயலும் சீற்றமுமான வேளைகளிலும் பல வருடங்களாகக் கர்த்தரை நம்பி கடந்து வந்தவர்களில் எவர்தான், அவரது விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களுடைய உண்மையையும், அவரது உறுதியான உண்மையையும் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும்! நிச்சயமாய், “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை!” (யோசுவா 23:14). நம்முடைய வாழ்க்கையின் சிறிய மற்றும் பெரிய காரியங்களில், அவர் எப்போதும் நமக்கான நன்மைக்கடுத்த காரியங்களைக் கவனிக்கிறவராகவே இருந்துள்ளார். துன்பகாலம் ஒவ்வொன்றிலும் நம்பிக்கையூட்டும் ஓர் அம்சம் இருந்துள்ளது!

கர்த்தர் செய்துள்ளதான உபகாரங்கள் அனைத்திற்குமாக, நாம் அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடிகின்ற எதையாகிலும், நாம் பெற்றிருக்கின்றோமா? எதுவுமே இல்லை. பிள்ளைகளுக்குத் தாங்கள் பாராட்டியுள்ள தயவுகளின் மதிப்பைப் பிள்ளைகள் உணர்ந்து ஏற்றுக்கொள்வதைக் காண்பதற்கு அன்புள்ள பெற்றோர்கள் விரும்புவது போன்றே, நமது பரம பிதாவும், அவரிடத்திலான நமது மனப்பான்மையையும், நம்மிடத்திலான அவரது கிருபைகளின் மற்றும் அன்பின் மதிப்பினை நாம் உணர்ந்துள்ளதை, நாம் வெளிப்படுத்துவதையும் கூர்ந்து கவனிக்கின்றவராய்க் – காணப்படுகின்றார். நமக்கு அருளப்பட்டதான அவரது சொல்லிமுடியாத ஈவுகளானது, அவரது இருதயத்தினால் மிகுந்த விலை செலுத்தப்பட்டு அருளப்பட்டவையாகும். ஆகவே நமது மீட்பரிடத்திலான விசுவாசத்தின் மூலமாக, நாம் நன்றியோடு இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருக்கான நமது பொருத்தனைகளைச் செலுத்திடுவோமாக. பாடுகள் மற்றும் சந்தோஷத்தின் இந்தப் பாத்திரத்தை, நாம் நமது அருமை ஆண்டவரோடுகூடப் பானம்பண்ணிடுவோமாக. “நாம் பயப்படாமல், நம்பிக்கையாயிருப்போம்” (ஏசாயா 12:2).

தம்மிடத்தில் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்துள்ளவர்களுக்காக, பிதா ஒரு விசேஷித்த ஏற்பாடு பண்ணியுள்ளார். அவர்களுக்காக அவர் ஏற்படுத்தியுள்ளதான அனுபவங்களானது, “இரட்சிப்பின் பாத்திரமாய்க்” காணப்படுகின்றது. இந்தப் பாத்திரத்தை நாம் கர்த்தரிடமிருந்து ஏற்றுக்கொள்வது என்பது, அவரது ஏற்பாட்டின்படி நமக்குக் கடந்து வருகின்றதான அனுபவங்களானது எப்படிப்பட்டவைகளாக இருப்பினும் துக்கமாகவோ (அ) சந்தோஷமாகவோ, வலியானதாகவோ (அ) இன்பமானதாகவோ இருப்பினும், அவ்வனுபவங்கள் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளுவதாகக் காணப்படும். “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?” என்று இயேசு தெரிவித்தது போலவே, நம்முடைய இருதயங்களுடைய வார்த்தைகளும் காணப்பட வேண்டும். மோசே வனாந்தரத்தில் சர்ப்பத்தை உயர்த்தினதுபோன்று, கர்த்தர் உயர்த்தப்பட வேண்டுமென்று நிழலில் கர்த்தரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டுள்ளது. நிஜமான மாபெரும் பாவநிவாரண பலியாக தாம் காணப்படுவார் என்பதையும், விழுந்துபோன மனிதனுக்காக தாம் “பாவமாக்கப்படுவார்” என்பதையும் அவர் அறிந்திருந்தார். தமக்காக பிதா ஊற்றியுள்ளதான பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்குத் தாம் மிகவும் விருப்பத்துடன் காணப்படுவதாகக் கர்த்தர் குறிப்பிட்டார். மேலும் அந்தப் பாத்திரத்தையே, அவர் நமக்குக் கொடுத்துள்ளார்.

இராஜ்யத்தில் தம்மருகில் உட்காருவதற்கு விரும்பிட்டதான தமது சீஷர்களை நோக்கி, நமது இரட்சகர்: “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க உங்களால் கூடுமா?” என்றார். அவர் கடைசி வரைக்கும் அந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணினார் – அதன் அடிமண்டி வரைக்கும் அவர் பானம் பண்ணினார். இப்படியாகவே அவரது பின்னடியார்களின் விஷயத்திலும் காணப்பட வேண்டும். நாமும் அதே பாத்திரத்தில் பானம் பண்ணிட வேண்டும். அது நமக்கான தனிப்பட்ட பாத்திரந்தான், எனினும் அது அவருடைய பாத்திரமாகும். நாம் உண்மையிலேயே நேர்மையாய்க் காணப்படுவோமானால், பாத்திரத்திலுள்ள நமக்கான பங்கை நாம் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்போம். இன்னுமாக நாம் அதைப் பானம் பண்ணுகையில், அவர் நம்மோடுகூட இருப்பார் என்பதையும், நாம் தனிமையில் காணப்படுவதில்லை என்பதையும் நாம் அறிவோம். அவரது அங்கத்தினர்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களையும் அவர் மேற்பார்வையிடுகின்றார் மற்றும் ஒவ்வொரு சோதனை மற்றும் பரீட்சையிலும், ஒருவேளை பரீட்சை நமக்கு மிகவும் கடுமையாகிப்போகும் வேளையில், தப்பித்துக்கொள்வதற்கான ஏதோ ஒரு போக்கையும் அவர் அருளுவார்.

இராஜ்யத்தில் சந்தோஷத்தின் பாத்திரம்

தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலை நிறுவின தருணத்தின்போது, ஆண்டவர் அப்போஸ்தலர்களுடனான தம்முடைய சம்பாஷணையில் கூறினதாவது: “இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 26:29). இங்கு நமது கர்த்தர் இரண்டு மகா நாட்களை – பாடுபடுகிற நாளையும் மற்றும் மகிமையின் நாளையும் வித்தியாசப்படுத்துகின்றார். இந்தச் சுவிசேஷயுகமானது பாடுபடுகிற நாளாய்க் காணப்படுகின்றது. ஆயிர வருட நாளானது, மகிமையின் நாளாகக் காணப்படும் மற்றும் இது விசேஷமாக “கிறிஸ்துவினுடைய நாள்” என்று பேசப்படுகின்றது.

திராட்சப்பழரசமானது, சொல்லர்த்தமான பாத்திரமானது, இரண்டு கருத்துக்களைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. திராட்சரச பாத்திரமானது, திராட்சப்பழமானது அதன் ஜீவனை இழந்துபோவதன் காரணமாக உண்டாகுகின்றது. திராட்சப்பழமானது, அதன் தனித்துவத்தை இழந்துபோகின்றதாய் இருக்கின்றது; சாறுபிழிந்தெடுக்கப்படுகின்றது மற்றும் இப்படியாகத் திராட்சப்பழ ரசமானது பயன்பாட்டிற்கென ஆயத்தம் பண்ணப்படுகின்றது. திராட்சரச பாத்திரமானது திராட்சச்சாறானது திராட்சப்பழம் பிழியப்படுவதை மாத்திரமல்லாமல், ரசத்தின் காரணமாக உண்டாகும் மகிழ்ச்சியையும்கூட அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இப்படியாகவே அடையாளமான பாத்திரத்தில், நாம் பானம் பண்ணும் விஷயத்திலும் காணப்படும். நமக்கு அது நமது இரட்சகருடைய பாடுகளையும், மரணத்தையும் மற்றும் இந்தப் பாடுகளில் அவரோடுகூட நாம் பங்கடைவதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆனால் திராட்சரசமானது, சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையுங்கூட அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் இப்படியான அர்த்தத்தில் வேதவாக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் முந்தின பத்தியில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டதான வார்த்தைகளாகிய திராட்சப்பழரசத்தின் விஷயத்தில், பாத்திரமானது இராஜ்யத்தின் சந்தோஷங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

நமது கர்த்தர் இயேசுவுக்கான பூமிக்குரிய அனுபவங்களினுடைய விஷயத்தில், பிதா அவருக்கு ஒரு குறிப்பிட்ட பாதையை அமைத்து வைத்திருந்தார். இந்தப் பாதையானது, பாடுகள் மற்றும் மரணம் எனும் அவருடைய பாத்திரமாகக் காணப்பட்டது. ஆனால் அவர் இந்தப் பாத்திரத்தில் உண்மையாய்ப் பானம் பண்ணிட்ட பிற்பாடு, அவருக்கு வித்தியாசமான/வேறே பாத்திரம், வேறே அனுபவம், அதாவது கனம், மகிமை மற்றும் அழியாமை கொடுக்கப்படும் என்று பிதா அவருக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். மேலும் அவருடைய பின்னடியாளர்களாகுவதற்கு விரும்புகிறவர்களுக்கும் இதே செய்தியை, அதாவது அவரோடுகூடப் பாடுபட்டார்களானால், அவரோடுகூட மரணம் எனும் அவரது பாத்திரத்தில் பானம் பண்ணினார்களானால், அப்போது அவர்கள் சந்தோஷமாகிய அவரது வருங்கால பாத்திரத்திலும் பங்கடைவார்கள் என்று இரட்சகர் முன்வைக்கத்தக்கதாக, பிதா அவருக்கு அதிகாரம் அளித்தவரானார்.

இப்பொழுதுதான் அநுக்கிரகக்காலம்

நம்முடைய பாத்திரமானது, சந்தோஷத்தின் பாத்திரமாகவும், கசப்பின் பாத்திரமாகவும் காணப்படுகின்றது. கசப்பான காடியைக் குடிப்பதற்கென நாம் அழைக்கப்படும்போது, பிதாவின் சித்தத்தைச் செய்வதில் களிகூர்ந்தவராக, இந்தக் கசப்பில் தைரியமாயும், உண்மையாயும் பங்கெடுத்தவரான அவரை நாம் நினைவுகூருவோமாக; மற்றும் நாமும் தைரியங்கொண்டு, [R5539 : page 281] நம்முடைய அருமை கர்த்தருடன் இந்தப் பாத்திரத்தில் பங்குபெறுவதற்குப் பாத்திரமாய் நாம் கருதப்பட்டதற்கு நாமும் களிகூருவோமாக. பரிபூரணராய்க் காணப்பட்ட அவருக்கே, பாத்திரத்தில் பானம் பண்ணுதல் தொடர்புடையதான அவரது அனுபவங்கள் பற்றிய விஷயத்தில் தெய்வீகப் பலமும், உதவியும் அவசியமாயிருந்து; தேவையான உதவிக்காக அவர் உண்மையாய் பிதாவை ஜெபத்தில் நாடினது போலவே, நாமும் காணப்பட வேண்டும். நாம் சோதனைக்குள் பிரவேசிக்காதபடிக்கும், நமக்கான உதவி கடந்துவருகிறதான ஒரே ஒருவராகிய அவரிடத்திலிருந்து, நாம் வேறு பக்கமாய்த்திரும்பிவிடாதபடிக்கும், நாம் தொடர்ந்து விழிப்புடன் காணப்பட வேண்டும்.

“இப்பொழுதே உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்” என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார் (சங்கீதம் 116:14,18; திருவிவிலியம்). சபைக்கு “இப்பொழுதே அநுக்கிரக்காலம், இப்பொழுதே இரட்சணிய நாளாய்” இருக்கின்றது. இப்பொழுதே, பலிகள் ஏறெடுக்கப்படுவதற்குரிய காலமாய் இருக்கின்றதே ஒழிய, எதிர்காலத்தில் அல்ல. நம்மால் மேற்கொள்ளப்பட்டதான இந்தப் பொருத்தனையை, பலியினாலான இந்த உடன்படிக்கையை, நாம் நிறைவேற்றி முடிக்கத்தக்கதாக கர்த்தர் இப்படியாக ஏற்பாடு பண்ணியுள்ளார். நாம் அர்ப்பணித்துள்ளதான மாம்சமானது, பட்சிக்கப்பட வேண்டும். பலிப்பீடத்திலிருந்து ஒருவேளை நாம் பலியை எடுத்துப்போடுவதற்கு நாடுவோமானால், மாம்சத்தை அழித்துப்போடத்தக்கதாக நாம் கையாளப்படுவோம்; இப்படியாக இல்லையேல் நாமே அழிந்துபோக நேரிடும். நமக்காக பிதா ஆயத்தம் பண்ணியுள்ளதான பாத்திரத்தை நாம் உண்மையாய்ப் பானம் பண்ணுவோமானால், இப்படியாக பானம் பண்ணுகிறவர்களுக்கு அவர் வாக்களித்துள்ளதான ஆசீர்வாதங்களை நாம் பிற்பாடு பெற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்போம். ஆகையால் இப்பொழுது தற்கால ஜீவியத்தில், அவர் நமக்கு அளித்துள்ளதான இந்தப் பாத்திரத்தில் நாம் பானம் பண்ணுகின்றோம்; ஏனெனில் இப்பொழுது இதைச் செய்யவில்லையெனில், வரவிருக்கின்றதான இராஜ்யத்தினுடைய ஆசீர்வாதங்களின் காலப்பகுதியில் நாம் எந்தப் பங்கையும் பெற்றிராதவர்களாகக் காணப்படுவோம்.

நமது கர்த்தருடைய விஷயத்தில், சொல்லர்த்தமாகச் சிலுவையில் அறையப்படுதலானது அவசியமாய் இருந்தது. நியாயப்பிரமாணத்தினுடைய கோரிக்கையை அவர் முழுமையாய்ச் சுமக்க வேண்டியிருந்தது; நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பயங்கரமான குற்றவாளியாகக் காணப்படுகிறவரின் விஷயத்தில் காணப்படுவதுபோலவே, நியாயப்பிரமாணத்தினுடைய ஒவ்வொரு மீறுதலுக்கான தண்டனையை அவர் சுமக்க வேண்டியிருந்தது; இல்லையேல் அவரால் அனைத்து/ஒவ்வொரு யூதனையும் மீட்டிருக்க முடியாது. அவர் நியாயப்பிரமாணத்தினுடைய சாபத்தைச் சுமக்க வேண்டியிருந்தது; அவர் மரத்தில் தொங்க வேண்டியிருந்தது. ஆனால் நமது அனுபவங்கள் தொடர்புடைய விஷயத்தில், சிலுவை என்பது, மரத்தினாலான சொல்லர்த்தமான சிலுவையாகக் காணப்படுவதில்லை; ஆணிகள் என்பது சொல்லர்த்தமான ஆணிகளாகக் காணப்படுவதில்லை; கசப்பான வார்த்தைகளும், தூஷணங்களும், திரித்துக்கூறப்படுதல்களும்தான் நமக்கான பங்காய் இருக்கின்றது; இன்னுமாகச் சரீரத்தினுடைய கடைசி அங்கத்தினர்கள் சிலருக்கு, சில விதங்களில் சரீர ரீதியிலான கொடுமைகளும் செய்யப்படலாம்; நாம் அதை அறியோம்.

சிலுவையின் பாதையில்

“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன், அதை இழந்துபோவான்.” திராட்சரச ஆலைகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றதான சோதனையான அனுபவங்கள் வாயிலாக நாம் அனைவரும் கடந்து போக வேண்டும். தெய்வீக ஊழியத்தில், நாம் நமது ஜீவியங்களை ஒப்புக்கொடுத்திட வேண்டும். மனிதன் எனும் விதத்தில் நாம் தடையம் இல்லாமல் போவதற்கும் மற்றும் புதிய சிருஷ்டிகளாகுவதற்கும் வேண்டி, நாம் நம்மை நொறுக்கும் அனுபவங்களுக்குள் ஒப்புக்கொடுத்திட வேண்டும். “அவரோடேகூட பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோமே” ஒழிய, மற்றப்படியல்ல. ஆகையால் அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கான அழைப்பை நாம் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். பாத்திரமானது அதன் கடைசிவரை குடித்து முடிக்கப்படாதது வரையிலும், நாம் அடுத்த பாத்திரத்தை, அதாவது இராஜ்யத்தினுடைய சந்தோஷங்களாகிய பாத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. நமது கர்த்தர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தபோது, அது அவருக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொணர்ந்ததாய் இருப்பினும், அது அவருக்கு இறுதி தருணம் வரையிலும், அதாவது “முடிந்தது” என்று சத்தமிட்டது வரையிலும், சோதனையான/துயரம் நிறைந்த வேளை போன்றதாகவே இருந்தது. இப்படியாகச் சபையின் விஷயத்திலும் காணப்படும். நாம் பாத்திரத்திலுள்ள அனைத்தையும் பானம் பண்ணிட வேண்டும்; பாத்திரத்திலுள்ள எதுவும் மீதியாய் வைக்கப்படக்கூடாது. நாம் அனைத்து அனுபவங்களையும் சகித்துச் சந்தித்தாக வேண்டும்.

கிறிஸ்துவினுடைய சரீரமானது, அவர்களுடைய ஓட்டத்தை நிறைவுபண்ணும் போது, கிறிஸ்துவினுடைய பாடுகள் அனைத்துமே நிறைவடைந்துவிடும். நமது கர்த்தர் மகிமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அவருக்குச் சந்தோஷத்தினுடைய புதிய பாத்திரமானது கொடுக்கப்பட்டது. அப்போது தேவனுடைய தூதர்கள் அனைவரும் அவரைத் தொழுது கொண்டார்கள். சீக்கிரத்தில் நமக்கான சந்தோஷத்தின் பாத்திரமானது, நமக்குக் கொடுக்கப்படும். நித்திரையிலிருந்த பரிசுத்தவான்கள் 1878 -ஆம் வருடம் வசந்த/இளவேனிற் காலத்தில் விழித்தெழுந்து, தங்களுடைய பலனுக்குள் பிரவேசித்து, ஆசீர்வாதத்தின் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டபோது, அது மகிமையானதொரு வேளையாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், ஆண்டவருடைய வருகையின்போது, உயிரோடிருப்பவர்களாய்க் காணப்பட்டவர்கள் ஒவ்வொருவராய், வீட்டிற்குள் சேர்க்கப்படுகின்றார்கள். நாமும் உண்மையுள்ளவர்களாய்க் காணப்பட்டால், சீக்கிரத்தில் அவர்களோடுகூட இந்தச் சந்தோஷத்தின் பாத்திரத்தில் பங்குபெறுகின்றவர்களாய் இருப்போம் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவினுடைய அங்கத்தினர்கள் அனைவரும் திரைக்குப் பின்னாக வருவது வரையிலும், பூரண ஆனந்தம் அடையப்படாது என்று நாம் நம்புகின்றோம். அப்போது அவரது சிங்காசனத்தில் நாம் பங்கடைந்து, அவரது மகிமையிலும் பங்குபெறுவோம். அப்போது நமது அருமை கர்த்தருடன் இராஜ்யத்தில், புதிய ரசத்தை நாம் பானம்பண்ணுவோம்; ஏனெனில் இதுவே அவரது உண்மையுள்ள பரிசுத்தவான்கள் அனைவருக்குமான வாக்குத்தத்தமாக இருக்கின்றது.

நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யேகோவா சொல்லுகிறார்

நம்முடைய ஆதார வசனத்தினுடைய இறுதியில் சங்கீதக்காரன் தான் செய்த பொருத்தனைகளை, “அவருடைய (தேவனுடைய) ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்” செலுத்துவேன் என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய இருதயங்களில் நாம் உண்மையாய்/நேர்மையாய்க் காணப்படுவது மாத்திரம் போதாது; மனுஷர் முன்னிலையில் ஒரு சாட்சியையும், வெளிப்படையான அறிக்கையையும் கர்த்தர் விரும்புகிறவராய்க் காணப்படுகின்றார். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). சத்தியத்தின் சாட்சியாளர்கள் அனைவரும், சத்தியத்திற்கு இரத்த சாட்சிகளாய்க் காணப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் சத்தியத்திற்காகப் பாடுபடுவதற்கு விருப்பமுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும். இப்படியாகவே சத்தியத்தின் கொடிதனை உண்மையாயும், தைரியமாயும் உயர்த்திப் பிடித்திருப்பவர்களுக்கும், அதிகமாய்க் காணப்பட வேண்டும். இவர்களே எதிராளியானவனின் குறி இலக்காகக் காணப்படுவார்கள்.

தம்மை மனுஷர் முன்னிலையில் அறிக்கைப் பண்ணாதவர்களைத் தாமும் பிதாவின் முன்னிலையிலும், பரிசுத்த தேவதூதர்கள் முன்னிலையிலும் அறிக்கைப்பண்ணுவதில்லை என்று நமது ஆண்டவர் கூறியுள்ளார். முற்றும் முழுமையாய் உண்மையுடன் காணப்படுபவர்களே, நமது கர்த்தரைத் தலையாகப் பெற்றுக் கொண்டவர்களும், சீக்கிரத்தில் இப்பொழுது பரலோகக் களஞ்சியத்தில் சேர்க்கப்படுபவர்களுமாகிய இந்த உண்மையுள்ளவர்களின் வகுப்பாரில் அடங்குவார்கள்.

ஆகவே நமது அருமை ஆண்டவருடன், நாம் பருகத்தக்கதாக, நமக்குச் சிலாக்கியமாயுள்ளதான இந்த “ஆசீர்வாதத்தினுடைய பாத்திரத்தின்” மதிப்பை நாம் அதிகமதிகமாய் உணர்ந்துகொள்வோமாக; மற்றும் தேவையான நேரங்களில், உதவிக்கான கிருபையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, “கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவோமாக.” தினந்தோறும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு கண நேரமும் அவர் நமக்குத் தேவையாய் இருக்கின்றார். நமக்கான மாபெரும் பரிந்துபேசுபவரின் நாமத்தில், நாம் எந்நேரத்திலும் கிருபையின் சிங்காசனத் தினிடத்தில் வரலாம்.

நமது பிதாவின் செவிகளானது, எப்போதும், அவரது பிள்ளைகளுடைய கூப்பிடுதலுக்குத் திறந்தே உள்ளது. “அவரது கண்ணின் கருமணி போன்ற” அவர்கள் அவருக்குப் பிரியமானவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களை “அவர் தமது உள்ளங் கைகளில் வரைந்திருக்கின்றார்.” “ஒருவனை அவன் தாய்த் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்” என்பது, அவருக்குச் சொந்தமானவர்களுக்கான அவரது வாக்குத்தத்தமாக இருக்கின்றது. நாம் செலுத்தும் அனைத்துமே, அவரது நன்மைகள் அனைத்திற்கும் மற்றும் அவர் நமக்குப் பாராட்டியுள்ளதான ஈடு இணையற்றதான கிருபைகள் அனைத்திற்கும், திரும்பச் செலுத்தப்படும் மிக மிகச் சிறு கைம்மாறாகவே இருக்கின்றது. ஆனால் நம்முடைய சிறிய கைம்மாறுடன்கூடக் காணப்படும் அன்பு மற்றும் வைராக்கியத்தின் அளவானது நமது பரலோக பிதாவிடத்திலும் மற்றும் நமது மாபெரும் மீட்பரிடத்திலுமான நமது நன்றியுணர்வின் அளவினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

“ஆண்டவரே, நான் உமக்கு என்னத்தைச் செலுத்துவேன்?
என்னால் எண்ணிப்பார்ப்பதற்கு மிஞ்சி காணப்படுதே உம் அன்பு!
எந்தன் பாவப்பட்ட ஜீவனை வாங்கினவருக்கு
எந்தப் புகழுரைதான் பொருத்தமாயிருக்கும்?

தாழ்வில் இருந்த என்னையே
திவ்விய தயவின் உயர் தளத்திற்கு உயர்த்தினீரே!
எந்த வார்த்தைகள்தான் உம்மைத் துதிப்பதற்குப் பொருத்தமாயிருக்கும்?
எந்த வார்த்தைகள்தான் உம் அன்பைபோன்ற
அன்பினை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமாயிருக்கும்?

ஆண்டவரே, நான் உமக்கு என்னத்தைச் செலுத்துவேன்?
எந்தன் இருதயத்தை, எந்தன் பலத்தை,
எந்தன் ஜீவனை நான் கொண்டுவருகின்றேனே!
எந்தன் கரங்களை, எந்தன் குரலை, மகிழ்ச்சியாய்
உமக்கு, எந்தன் இரட்சகருக்கு, எந்தன் இராஜாவுக்கு
சேவையில் அர்ப்பணிக்கின்றேனே!”