R4605 – இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4605 (page 147)

இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்

COUNTING THE BLOOD COMMON

“தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி (சாதாரணமானதென்று எண்ணி), கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாய் இருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்.” எபிரெயர் 10:29

அப்போஸ்தலன் இங்கு மோசே மற்றும் அவரது பிரமாணத்தை, நிஜமான மோசே மற்றும் மேலான பிரமாணத்தோடு ஒப்பிட்டுக்காட்டுகின்றார். மோசேயின் பிரமாணத்தையும், நிழலான நியாயப்பிரமாண உடன்படிக்கையின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட மற்றும் நிறுவப்பட்டதான ஏற்பாடுகளையும் இழிவாகக் கருதுபவன், மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகின்றான்; இந்தத் தீர்ப்பினின்று அவன் கிறிஸ்துவினுடைய புண்ணியத்தின் வாயிலாக விடுவிக்கப்படுவான். இந்த மரண ஆக்கினையானது தற்காலிகமான தன்மையில் காணப்படுவதினால், இது அவனது நித்தியத்திற்கடுத்த நலன்களைப் பாதிப்பதில்லை.

இந்த இரண்டு ஆக்கினைகளுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது; ஒருவன் நிஜமான மோசேயினால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவானானால், அவனது தண்டனையானது மிகவும் அதிகக் கடினமானதாய் இருக்கும். இந்தக் கடுமையான (அ) “கொடிதான ஆக்கினை” என்பது “இரண்டாம் மரணம்,” அதாவது முற்றிலுமான அழிவைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது என்று நாம் புரிந்திருக்கின்றோம். ஒருவன் கிறிஸ்து மூலமான மற்றும் புதிய உடன்படிக்கையின் ஏற்பாட்டினுடைய தேவனுடைய பிரமாணங்கள் எதையேனும் அசட்டைப்பண்ணுவானானால், அவன் இரண்டாம் மரணத்திற்குப் பாத்திரமாக இருப்பான். இந்தக் கொள்கையானது, ஆயிரவருட யுகம் முழுவதும்கூடப் பொருந்தும்; அதாவது கிறிஸ்து மூலமாய்த் தேவன் அருளியுள்ளதான கிருபைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த அறிவிற்குள் ஒருவன் வந்த பிற்பாடு, அவன் அவைகளைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமலும், அன்பைப் பரிமாறத் தவறியும், தனக்கு உதவிபுரியும் அந்த ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய தவறியும் இருப்பானானால், அவன் தொடர்ந்து இனிமேலும் தேவதயவைப் பெற்றுக் கொள்வதற்கு அபாத்திரமானவனாய்க் கருதப்பட்டு, இரண்டாம் மரணத்திற்குள் கடந்துசெல்லுவான். ஆனால் இங்கு அப்போஸ்தலன், ஆயிரவருட யுகத்தின் முடிவில் நடக்கப்போவதைக் குறித்துக் குறிப்பிடவில்லை என்பது நிச்சயமே மற்றும் மோசேக்கும், கிறிஸ்துவுக்கும் இடையிலான அநேகமான ஒப்புமைகளைக் காண்பிப்பதற்கு மாத்திரமே, இவைகளை இங்குக் குறிப்பிட்டோம்.

இந்த ஆதார வசனத்தை அப்போஸ்தலன் உலகத்திற்கும் பொருத்தாமல், சபைக்கே பொருத்திக் குறிப்பிடுகின்றார். வசனத்தின் முன் பின் மாறாக வசனங்களும்கூட, அப்போஸ்தலன் சபைக்கே, அதாவது பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களுக்கே, கிறிஸ்துவினுடைய நீதி தரிப்பிக்கப்பட்டதன் வாயிலாக தங்கள் பாவங்களை மூடப்பெற்றவர்களுக்கே, இந்த மூடுதலின் பெலத்தில் நீதிமானாக்கப்பட்டு, தங்கள் சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுத்தவர்களுக்கே பேசிக்கொண்டிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. நாம் என்ன நோக்கத்திற்காக இப்படி அர்ப்பணம் பண்ணுகின்றோம்? கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணிடுவதற்கும், அவரது மரணத்திற்குள்ளான ஸ்நானம் கொள்ளுவதற்கும், நாம் அவரோடுகூட ஆளுகை செய்யத்தக்கதாகவும், மகிமையின் தளத்தில் அவரது அங்கத்தினர்களாகக் காணப்படத்தக்கதாகவும், மாம்சீக இஸ்ரயேலை ஆசிர்வதிப்பதும் மற்றும் இவர்கள் வாயிலாக பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதுமான மாபெரும் வேலையைச் செய்யும் ஆபிரகாமின் சந்ததியில், ஆவிக்குரிய இஸ்ரயேலில் அங்கத்தினர்களாகக் காணப்படத்தக்கதாகவும், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களெனப் பாடுபடுவதற்குமான நமது கர்த்தருடைய அழைப்பின் காரணமாகவே அர்ப்பணம் பண்ணினோம்.

ஆகையால் அப்போஸ்தலன் இக்காரியத்தை நம் கவனத்திற்குக் கொண்டுவருவதன் மூலமாக, நம்மில் எவரேனும், அதாவது பாவத்திலிருந்து திரும்பி, கிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கான மாபெரும் பாவநிவிர்த்தி என்று மாத்திரம் உணர்ந்துள்ளவர்களாகிய எவருக்கேனும் சம்பவிப்பதைப்பற்றிக் குறிப்பிடவில்லை; இல்லை; மாறாக அவரது இரத்தத்தின்மீதான விசவாசத்தின் வாயிலாக நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகிய நம்மில் எவரேனும், விழுந்துபோவோமானால், சம்பவிப்பவைப் பற்றியே சபையிடம் குறிப்பிடுகின்றார்.

நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், கடைசி இராப்போஜனத்தை அவர் நிறுவின இரவில், அவர் பாத்திரத்தை எடுத்து, “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று கூறினதை நாம் நினைவில்கொள்கின்றோம். (மத்தேயு 26:28) இந்த இரத்தத்தை, புது உடன்படிக்கையை முத்திரிக்கும் இரத்தம் என்று கருதுவதிலுள்ள தேவனுடைய நோக்கம் என்னவெனில், அது ஆதாம் மற்றும் அவரது பிள்ளைகளினுடைய பாவங்கள் அனைத்திற்கும் பாவமன்னிப்பைச் சாத்தியமாக்க வேண்டும் என்பதேயாகும். இந்த ஒரு நோக்கத்திற்காகவே நமது கர்த்தருடைய இரத்தம் சிந்தப்பட்டது. “இது என்னுடைய இரத்தமாயிருக்கிறது” – உங்களுடைய இரத்தமல்ல. நான் ஜெநிப்பிக்கப்பட்டபோது, நான் அர்ப்பணித்ததுமான இரத்தத்தை (அ) ஜீவனை நான் கொடுக்கப்போகின்றேன்; இன்று சிலுவையில் அதை நான் கொடுத்துவிடப் போகின்றேன் (ஏனெனில் அவர் ஒரே நாளினுடைய ஒரு பகுதியில்தான் சிலுவையில் அறையப்பட்டார்). இன்று என்னுடையதாய் இருக்கும் இதில் தேவனுக்கும், மனுஷனுக்கும் இடையிலான புது உடன்படிக்கையினை முத்திரிக்கின்றதான இரத்தத்தில் நீங்கள் பங்கெடுக்க நான் உங்களை அழைக்கின்றேன். “நீங்கள் – எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்.” நீங்கள் எல்லாரும் இதில் பானம் பண்ணிடுங்கள் மற்றும் அனைத்தையுமே பானம்பண்ணிடுங்கள். மீதி வைக்காதிருங்கள். இந்த இரத்தத்தில், இந்தப் பாத்திரத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பானது, வேறெந்த ஜனங்களுக்கோ (அ) வகுப்பாருக்கோ கொடுக்கப்படப்போவதில்லை; உங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்களே இந்த நோக்கத்திற்காக விசேஷமாய் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். நான் பேசிக்கொண்டிருக்கின்றதான அப்போஸ்தலர்களாகிய உங்களுக்கு மாத்திரம் இல்லாமல் உங்கள் வார்த்தைகள் வாயிலாக என்மேல் விசுவாசம் வைத்து, இதுபோன்று அர்ப்பணம்பண்ணி, என்னுடைய மரணத்திற்குள்ளாக ஸ்நானம் எடுப்பவர்களையும், என் பாத்திரத்தில் பானம் பண்ணிடுவதற்கு நான் அழைக்கின்றேன் என்ற விதத்தில் கர்த்தர் பேசியுள்ளார்.

இராப்போஜனத்தில் நாம் பங்கெடுப்பதான இந்தப் பாத்திரம் தொடர்பாகவே அப்போஸ்தலன், “திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குக்கொள்ளுதல் அல்லவா?” என்று கேட்கின்றார். (1 கொரிந்தியர் 10:16; திருவிவிலியம்) ஆம், என்று நாம் பதிலளிக்கின்றோம். கிறிஸ்துவினுடைய இரத்தமானது, புது உடன்படிக்கையின் இரத்தமாய் இருக்கிறதல்லவா? ஆகையால் புதிய உடன்படிக்கையின் இரத்தத்தில் நாம் பங்குகொள்கின்றோம் அல்லவா? நமது கர்த்தருடைய அழைப்பிற்கேற்ப, நாம் அந்த இரத்தத்தில் பங்குகொள்வதினால், நாம் அவரது “பாத்திரத்திலும்,” அது தொடர்புடையதான அனைத்திலும் பங்காளிகளாக இருக்கிறோம் அல்லவா? ஆம். இது எத்தகைய தாக்கத்தினை நம்மிடத்தில் ஏற்படுத்திடக்கூடும்? அதிக அளவிலாகும்; அவரது “பாத்திரத்தில்” பங்கடைவதற்கும், “அவரது மரணத்திற்குள்ளான ஸ்நானம் கொள்வதற்கும்” என்று நமக்கு அருளப்பட்டிருக்கின்றதான மாபெரும் சிலாக்கியத்திற்கென்று நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய்க்காணப்பட வேண்டும். [R4605 : page 148] பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தினுடைய மூன்றாம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல், தான் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ளவும், அவருடைய பாடுகளில் ஐக்கியம் கொள்ளவும், அவரது மரணத்திற்குள்ளான ஸ்நானம்கொள்ளவும், அவரது பாடுகளின் “பாத்திரத்தில்” பங்கடையவும் வேண்டி, தான் மற்ற அனைத்தையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்; நாமும் இப்படியாகவே எண்ணிக்கொள்ள வேண்டும். நமக்கு சுவிசேஷ யுகத்தில் அருளப்பட்டிருக்கின்றதான இந்த மாபெரும் சிலாக்கியத்திற்கு முன்பாக, மற்ற நலன்களும், நோக்கங்களும் ஒரு பொருட்டானவைகள் அல்லவென்று பவுல் அடிகளார் கருதினார்கள்.

இந்த அருமையான சிலாக்கியத்தின் விஷயத்திற்கு ஒருவேளை நாம் எப்போதாகிலும் குருடர்களாய்ப்போவோமானால், நமது கர்த்தருடைய “பாத்திரத்தில்” பங்கடைவதற்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், புது உடன்படிக்கையினை முத்திரையிடுகிற (அ) உறுதிச்செய்கிறதுமான இந்த இரத்தத்தில், அதாவது புது உடன்படிக்கைக்கான இரத்தத்தில், அவரோடுகூடப் பங்கெடுப்பதற்கும் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதுமான உண்மைகளின் மதிப்பினை உணர்ந்துகொள்வதில் குறைவுபடும் நிலைக்குள் ஒருவேளை எப்போதாகிலும் நாம் வருவோமானால், இது நமக்கு விசேஷமாய்க் கொடுக்கப்பட்டதும், உலகத்திலுள்ள வேறெந்த ஜனங்களுக்கு ஒருபோதும் கொடுக்கப்படாததும், மீண்டும் ஒருபோதும் கொடுக்கப்படாததும், தேவதூதர்களுக்கும் ஒருபோதும் கொடுக்கப்படாததும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், இந்த யுகத்தில், அவரது ஆவியை உடையவர்களுக்கும் மாத்திரம் அருளப்பட்டதுமான இந்தச் சிலாக்கியங்கள் மற்றும் தயவுகள் அனைத்தையும் அசட்டைப்பண்ணுகிறதாய் இருக்கும்.

ஒருவேளை “பாத்திரத்தினுடைய” மதிப்புக் குறித்த உணர்ந்துகொள்ளுதலில் நாம் குறைவுபட்டு, பெயரளவிலான கிறிஸ்தவர்கள் அனைவரும் எண்ணியிருக்கின்றது போன்று, அது வெறுமனே சாதாரணமானதுதான் என்று சொல்லுவோமானால்; பாவத்திலிருந்து மாத்திரம் திரும்பி, நேர்த்தியான ஜீவியம் ஜீவிக்க முற்படுவோமானால்; இது விசேஷித்த பலியல்ல, இது கிறிஸ்துவினுடைய இரத்தத்தில் பங்குகொள்ளுவதாகவோ, அவரது “பாத்திரத்தில்” பானம்பண்ணுவதாகவோ இராது என்போமானால்; அப்படியானால் நாம் மற்ற ஜனங்கள் அனைவருக்கும் மேலாக, நமக்கு விசேஷமாய் அருளப்பட்டதான சிலாக்கியங்கள் அனைத்தையும் அசட்டைப்பண்ணுகிறவர்களாகவும், புறக்கணிக்கிறவர்களாகவும் இருந்துவிடுவோம். இது முழு ஏற்பாட்டினையும் நாம் அசட்டைப்பண்ணுகிறதைக் குறிக்கின்றதாகவும், நம்முடைய இருதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கின்றதைக் குறிக்கின்றதாகவும் இருக்கும்; நாம் இதைப் பலிசெலுத்துவதற்கான சிலாக்கியம் என்று கண்டுகொண்ட பிற்பாடே, “நாம் அவரோடுகூட ஆளுகை செய்யத்தக்கதாக, அவரோடுகூடப் பாடுபடுவதற்கென,” கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம் என்பதை நாம் அறிந்துகொண்டபிற்பாடே நாம் மனப்பூர்வமாய், விரும்பி மற்றும் அறிந்து இப்படியாய்ச் செய்திருப்போம்.

இப்படியாய்த் தெளிவான அறிவையும், உணர்ந்து /புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொண்டு, திரும்பிச் செல்பவர்கள், “உடன்படிக்கையின் இந்த இரத்தத்தினை” உதறித்தள்ளுபவர்களாகவும், அதை அசட்டைப்பண்ணுகிறவர்களாகவும், அருளப்பட்ட சிலாக்கியங்களைப் பயன்படுத்த தவறுபவர்களாகவும் இருப்பார்கள். இந்தச் சிலாக்கியங்களைப் பயன்படுத்துவதற்கு, இவர்கள் முதலாவதாக பூமிக்குரிய சுபாவத்தினை பலிசெலுத்துவது அவசியமாய் இருந்தது. ஆகையால் இப்பொழுது இவர்களிடத்தில் எதுவும் மிஞ்சியிருப்பதில்லை; ஏனெனில் இவர்கள் புதிய சுபாவத்தையும், கிறிஸ்துவின் பலியில் பங்கெடுப்பதன் வாயிலாக மாத்திரம் அடையப்பெறுகின்றதான கர்த்தருடைய ஏற்பாடுகளையும் இகழ்ந்து ஒதுக்கினவர்களானார்கள். சீர்ப்பொருந்துதலுக்கான எந்த வாய்ப்பும் இவர்களுக்கு இருப்பதில்லை. ஆகையால் இவர்களுக்கு தேவனுடைய ஏற்பாடுகளைக் குறித்து ஒருமுறை – புரிந்துகொண்ட பிற்பாடு, அதை அசட்டைப்பண்ணுகிறவர்களுக்கு எது பொருந்துகின்றதோ, அது மாத்திரமே பொருந்துகின்றதாய் இருக்கின்றது; அது இரண்டாம் மரணமாகும்.

அப்போஸ்தலனால் “கொடிதான ஆக்கினை” என்று குறிப்பிடப்படுவது, “மரணத்துக்கு ஏதுவான பாவமாகும்.” (எபிரெயர் 10:29) யார் இந்தப் பாவத்தைச் செய்திருக்கின்றனர் என்று சுட்டிக்காண்பிக்க நமக்குத் தகுதியுள்ளதா? இந்த விஷயத்தில் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இருப்பதற்கும், இப்படியாக நியாயந்தீர்ப்பது கர்த்தருக்கு உரியது என்று மாத்திரம் கூறிடுவதற்கும் நாம் விரும்புகின்றோம். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை நாம் காண்பது வரையிலும், நாம் எந்தத் தீர்மானமும் எடுப்பதில்லை.

நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கக்கூடாது என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். உதாரணத்திற்கு ஒருவேளை நீங்கள் “இயேசு மரித்தார் என்றும், அவர் நம்முடைய மீட்பர் என்றும் நான் நம்புகிறவன்; ஆனால் ஒரு காலத்தில் நான் அவரோடுகூட மரிப்பதற்கும், தற்காலத்தில் அவரோடுகூட அவரது பாடுகளில் பங்கடைவதற்கும், பின்வரும் மகிமையில் பின்னர் பங்கடைவதற்குமாய் அழைக்கப்பட்டேன் என்று அறிந்திருந்த கருத்தை நான் தொலைத்துப் போனவனானேன்” என்று கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு நாங்கள் உங்களிடம்: “ஓ! நீங்கள் மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்துள்ளீர்கள்; உங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தினை நீங்கள் அசட்டைப் பண்ணியுள்ளீர்கள்; இதனால் சீர்ப்பொருந்துவதற்கான சிலாக்கியங்கள் உங்களுக்கு இல்லாததினால், நீங்கள் இரண்டாம் மரண நிலைக்குள்ளாகக் கடந்துபோய் விட்டீர்கள்” என்று நாங்கள் சொல்ல வேண்டுமோ? இல்லை என்று நாம் பதிலளிக்கின்றோம். உங்களை நியாயந்தீர்ப்பதோ (அ) உங்களைக் குறித்துத் தீர்மானிப்பதோ எங்களுக்கடுத்தது என்று நாங்கள் எண்ணுகிறதில்லை, ஏனெனில் உங்களது முந்தின அறிக்கைகளானது எந்தளவுக்கு உண்மையானது என்பதை நாங்கள் அறியோம். நீங்கள் முழு அர்ப்பணம் பண்ணியுள்ளதாக, நீங்கள் எண்ணினபோது, நீங்கள் செய்வது என்ன என்பதை நீங்கள் புரிந்திருந்தீர்களா என்பதை நாங்கள் அறியோம். ஒருவேளை நீங்கள் உங்களையே புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆகையால் இந்தக் காரியத்தில் எதுவும் எங்களுக்கு நிச்சயமாய்த் தெரியாததினால், நியாயந்தீர்ப்பது எங்களுக்கடுத்தக் காரியமல்ல என்று சொல்லிடுவதற்கே நாங்கள் விரும்புகின்றோம். இது தொடர்பாக வேதவாக்கியங்களானது, “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரிப்பார்” என்று கூறுவதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆகையால் ஒருவேளை உங்களைப் பரிசுத்தஞ்செய்த அல்லது சரீரத்தின் அங்கத்தினன் என்று, பலி என்று உங்களை விசேஷமாய்ப் பிரித்தெடுத்த உடன்படிக்கையின் இரத்தத்தினை நீங்கள் புறக்கணித்துத் தள்ளின பிற்பாடு, தேவனும் உங்களை வெளிப்படையாய்ப் புறம்பே தள்ளி, உங்களிடமிருந்து வெளிச்சம் அனைத்தையும் பின்வாங்கப்பண்ணி, நாங்கள் காணும் அளவுக்கு அவருடைய தயவினின்று உங்களை வெளியேற்றி விடுவதை நாங்கள் காண்போமானால், கர்த்தர் உங்களிடத்தில் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்று மற்றவர்களிடத்தில் குறிப்பிடுகிறோமோ, இல்லையோ, நாங்கள் எங்களுக்குள்ளாகிலும் சொல்லிடுவதில் தவறு இருக்காது.

எந்த ஒரு விதத்திலாகிலும் கர்த்தரைப் புறக்கணிக்கிற எவனும், தொடர்ந்து சத்தியத்தின் [R4606 : page 148] வெளிச்சத்தில் காணப்படுவான் என்று எங்களால் கற்பனைப்பண்ணிட முடியாது. ஒருவன் கர்த்தரைப் புறக்கணிப்பானானால், சத்திய வெளிச்சமானது, அவனிடமிருந்து படிப்படியாய் வெளியேறும் என்றும், அவன் அநேகர் காண்பதற்கு மேலாக – சபைக்குச் செல்லுகிற பெயரளவிலான நபர் (அ) எந்த உலகப்பிரகாரமான மனிதன் காண்பதைக்காட்டிலும் மேலாக – காணமாட்டான் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானவர்கள் புறம்பான இருளுக்குள் கடந்து செல்வது என்பது இவர்கள் கர்த்தருடைய தயவை இழந்துவிட்டார்கள் என்பதற்கான அடையாளமாய் இருக்கின்றது. எந்தளவுக்கு இழந்துள்ளார்கள் என்பதைத் தீர்மானிக்க நாம் விரும்புவதில்லை; ஆனால் ஒருவேளை இந்த அடையாளத்தோடுகூட, எதிராளியானவனின் சுபாவமான, சாத்தானின் ஆவி – கோபம், துர்க்குணம், பகைமை, பொறாமை, விரோதம் போன்றவையும் வெளிப்படுகின்றதானால், கர்த்தருடைய ஆவியானது கடந்துபோய்விட்டது என்றும், இழந்தவர் மரித்துவிட்டார் – “இரண்டுதரஞ் செத்து, வேரற்றுப்போனவர்களாகிவிட்டனர்” என்றுமுள்ள முடிவிற்கு நாம் வரலாம். (யூதா 12)

இப்படியானவருக்கு, நம்மால் முடிந்தது அனைத்தையும் நாம் விசேஷமாய்ச் செய்து முடித்தப் பிற்பாடு, இவர்களுக்கு நாம் தொடர்ந்து ஜெபிப்பதில் பிரயோஜனமில்லை. செய்ய முடிந்த அனைத்தையும் செய்திடுவதற்குத் தேவன் விருப்பமுள்ளவராய் இருக்கின்றார்; ஆனால் அவர் சில மாறாத சட்டங்களையும், கொள்கைகளையும் கொண்டிருக்கின்றார் மற்றும் ஒருவன் இவைகளையெல்லாம் ஒரு காலத்தில் அனுபவித்துவிட்டு, பிற்பாடு இவற்றை அசட்டைப்பண்ணுவானானால், எந்த ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டாலும், அக்கறையுடன் கண்ணீரோடுகூட ஏறெடுக்கப்பட்டாலும், இதற்காகக் கர்த்தர் தம்முடைய கொள்கைகளை மாற்றுவதில்லை.