R3879 (page 333)
மத்தேயு 26:17-30
நமது கர்த்தர் தமது கடைசி பஸ்காவை அனுசரித்த வியாழன் அன்று இரவில், நினைவுகூருதலுக்கான இராப்போஜனத்தை நிறுவினார் என்றும், அடுத்த நாளாகிய வெள்ளிக்கிழமையன்று அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றுமுள்ள கருத்தை, பெரும்பான்மையானவர்கள்போல் நாமும் கொண்டிருந்தாலும், இந்த நிகழ்வானது வாரத்தினுடைய மற்ற நாட்களில் சம்பவித்தன என்று எண்ணுபவர்களுடன் நாம் வாதாடுவதில்லை. அங்கு நிறைவேறின காரியங்கள்மீதும் மற்றும் மோசேயினால் நிறுவப்பட்டதான பஸ்காவினுடைய நிஜம் என்ற விதத்திலும் மற்றும் பாவங்களுக்கான, அதாவது முழு உலகத்தினுடைய பாவங்களுக்கான நமது கர்த்தருடைய மாபெரும் பலியின் நிறைவேறுதல் என்ற விதத்திலுமுள்ள அதன் முக்கியத்துவத்தின் மீதும்தான் நாம் மிகுந்த முக்கியத்துவம் செலுத்துகின்றோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகளுக்காகவே நாம் உண்மையாய்ப் போராட/வாதாட விரும்புகின்றோம்; ஏனெனில் இவைகள் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தினுடைய” ஒரு பாகமாய் இருக்கின்றது; ஆனால் வாரத்தினுடைய எந்தக் குறிப்பிட்ட நாட்களில் இந்நிகழ்வுகள் சம்பவித்தன என்பது தொடர்புடைய விஷயத்தைக் குறித்து நாம் போராடுவதில்லை/வாதாடுவதில்லை; ஏனெனில் எங்களைப் பொறுத்தமட்டில் அவை முக்கியத்துவம் அற்றவைகளாகவும், அற்ப விஷயமாகவும், பின்விளைவுகள் உண்டுபண்ணாத விஷயமாகவும் காணப்படுகின்றன என்பதினால் அவை எந்த விதத்திலும் கர்த்தருடைய ஜனங்களின் மனம் (அ) இருதய ஐக்கியத்தினைக் குலைத்திடக்கூடாது.
நம்முடைய இந்தப் பாடமானது, சீஷர்களுக்கான நமது கர்த்தருடைய கட்டளையுடன் ஆரம்பமாகுகின்றது; கர்த்தராகிய இயேசுவைத் தேவ ஆட்டுக்குட்டியெனச் சுட்டிக்காட்டின பஸ்காவை, ஒரு விசேஷித்த மற்றும் சிறந்த யூத குடும்பமாகக் காணப்பட்ட இயேசுவும், சீஷர்களும், அந்நிழல் குறித்து நியாயப்பிரமாணம் கூறுவதுபோன்று ஆசரிப்பதற்கென ஓர் இடத்தை ஆயத்தம் பண்ணுவதற்கு நமது கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். இந்த ஓர் இராவிருந்தைக் குறித்துதான் நமது கர்த்தர்: “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்று கூறினார். அவர் நீசான் மாதம் பதினைந்தாம் தேதி துவங்கி, ஒரு வாரக்காலம் நீடிக்கின்றதான பிரதானப் பண்டிகையைக்குறித்துக் குறிப்பிடவில்லை. பொதுவானப் பண்டிகைக்கு முன்னதாக இடம்பெறுகிறதும், எகிப்திலிருந்துள்ள தங்களது விடுதலையை ஜனங்களுக்கு நினைப்பூட்டுகிறதும், விடுதலையாக்கப்பட்ட ஜனங்களென அவர்களது சந்தோஷத்திற்கு அடிப்படையாய்க் காணப்பட்டதுமான கசப்பான கீரைகளுடனான, சுடப்பட்ட ஆட்டுக்குட்டியுடைய இராப்போஜனத்தையே அவர் குறிப்பிட்டார். மேல்வீட்டறையானது, இந்த இராப்போஜனத்திற்காக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. அனைத்தும் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது மற்றும் சாயங்காலத்தில், சூரியன் மறைந்து, ஆறு மணிக்குப் பிற்பாடு நமது கர்த்தரும், பன்னிரண்டு பேரும் கூடினார்கள். இராப்போஜனத்தின்போது மிகுந்த கனமிக்க ஸ்தானங்கள் குறித்துச் சீஷர்கள் மத்தியில் வாக்குவாதம் உண்டாயிற்று என்றும், அவர்களது பாதங்களை இயேசு கழுவினதின் மூலமாக, இந்தப் பேராசையினுடைய ஆவியை இயேசு கடிந்துகொண்டு, இப்படியாகத் தம்முடைய தாழ்மையான இருதயத்தையும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றும் அனைவருக்கும் பணிவிடைப் புரிவதற்கான தம்முடைய ஆயத்தத்தையும் விளக்கினார் என்றும் பதிவுகளில் ஒன்று நமக்குத் தெரிவிக்கின்றது. இப்படியாக அவர்கள் மத்தியில் பெரியவராய் மதிக்கப்படுகின்றதான தாம், எவருக்கும் மற்றும் அனைவருக்கும் பணிவிடைப் புரிந்திடுவதற்கு விருப்பமுடையவராகவும், ஆயத்தத்துடன் காணப்படுபவராகவும் இருக்கும் அவர்களுக்கான பிரதானப் பணிவிடைக்காரராய் இருக்கின்றார் என்ற மாதிரியை அவர்களுக்கு முன்வைத்தார்.
அவர்கள் புசித்துக்கொண்டிருக்கையில், அவர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு குறிப்பிட்டார் மற்றும் உடனடியாக அங்கிருந்தவர்கள் மத்தியில் துக்கம் பரவ, இப்படியான ஒரு குற்றச்சாட்டினின்று தன்னைக் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதை ஒவ்வொருவரும் உணர்ந்து, ஆண்டவரே, நானோ, நானோ? என்று கேட்டார்கள். மற்றவர்களோடுகூட யூதாசும் இக்கேள்வியைக் கேட்டான்; ஒருவேளை தானும் இப்படியாகக் கேட்கவில்லையெனில், தான்தான் அந்நபர் என்று தான் ஒப்புக்கொள்வதாகிவிடும் என்று உணர்ந்தவராக யூதாஸ் இக்கேள்வியைக் கேட்க, இவரது கேள்விக்கு இயேசு: “நீ சொன்னபடிதான்,” அதாவது “ஆம், உன்னைத்தான் நான் குறிப்பிட்டேன்” என்ற விதத்தில் பதிலளித்தார். இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, தாம் யாருக்குத் துணிக்கையைத் தோய்த்துக் கொடுக்கின்றாரோ, அவன்தான் காட்டிக்கொடுப்பவன் என்று கூறி, (ஒரு துண்டு ஆட்டுக்குட்டியின் மாம்சமும், ஒரு துண்டு புளிப்பில்லாத அப்பமுமாகிய) துணிக்கையைத் தோய்த்து, இயேசு யூதாசுக்குக் கொடுத்து, இப்படியாக நேரடியாய் அவரது பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சுட்டிக்காட்டினார் என்று வேறொரு பதிவு நமக்குத் தெரிவிக்கின்றது. இதுவரையிலும் மற்றச் சீஷர்கள் யூதாசை அறிந்துகொள்ளவில்லை என்றும், பிற்பாடே யூதாஸ் திருடன் என்று கண்டுபிடிக்கின்றனர் என்றும் தோன்றுகின்றது.
யூதர்கள் மற்றும் அரேபியர்கள் மத்தியில் ஏமாற்றுதலும், காட்டிக்கொடுத்தலும் பரிட்சயமற்ற ஒன்றல்ல, ஆனாலும் அவர்களால் அங்கீகரிக்கப்படுகின்றதான கண்ணியத்திற்கான/நேர்மைக்கான சட்டத்தொகுதியின்படி ஒருவன் இன்னொரு நபருக்கு எவ்விதத்திலாகிலும் தீங்கிழைக்கப்போகின்றவனாய் இருந்தால் அவன் அந்த நபருடைய உணவைப் புசிப்பதில்லை. உணவானது உப்பிடப்பட்டிருக்கின்றபடியால், இந்த வழக்கமே அநேகமாக மாறாத/முறிவுறாத உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சத்துருவானவனை உங்கள் போஜனப்பந்தியிலிருந்து புசிக்கச் செய்வது அல்லது உப்பிடப்பட்ட உங்கள் உணவை எடுத்துப் புசிக்கச் செய்வது என்பது, அக்காலக்கட்டத்தின் போதான ஜனங்களின் மத்தியில், சத்துருவானவனின் நட்பு நீடிக்கும் என்பதற்கான, அதாவது அவன் இனி ஒருபோதும் உங்களுக்குத் தீங்கு செய்வதில்லை என்பதற்கான உறுதிமொழிக்குச் சமமாய் இருப்பதாகக் கருதப்பட்டது. அக்காலக்கட்டத்தில் காணப்பட்டதான இந்த வழக்கத்திற்கு யூதாஸ் கீழ்ப்படியாமலும், ஒப்புக்கொள்ளாமலும் காணப்படுமளவுக்கு, அதாவது தான் யாருடைய அப்பத்தைப் புசித்தானோ, தான் யாருடைய உப்பில் பங்கெடுத்தானோ, அவருக்கு உண்மையாயும், நேர்மையாயும் இருப்பதை எதிர்ப்பார்க்கும் இந்த வழக்கத்திற்குக் கீழ்ப்படியாமலும், ஒப்புக்கொள்ளாமலும் காணப்படுமளவுக்கு, யூதாஸ் சரியான சிந்தையில்/ஆவியில் மிகவும் குறைவுப்பட்டவனாயிருந்தான். ஆகையால்தான் நமது கர்த்தர், “என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்று கூறினார்.
எனினும் தம்முடைய மரணம் என்பது, தம்முடைய சத்துருக்கள் மற்றும் தம்மைக் காட்டிக் கொடுத்தவன் சார்பிலுமான வெற்றியைக் குறிக்கின்றதாயிராமல், மாறாக தம்மைக்குறித்துத் தீர்க்கத்தரிசிகளினால் எழுதப்பட்டவைகளுக்கு இசைவாக நடந்த ஒன்றாகும் என்றும் இயேசு விளக்கினார். இன்னுமாக இந்த விஷயததில் யூதாஸ் தன்னுடைய பொறுப்பிற்கோ, இக்காரியத்தில் தன்னுடைய துணிகரத்திற்கோ பொறுப்பு வகிக்காதவராய் மற்றும் தீர்க்கத்தரிசனத்தை மாத்திரமே நிறைவேற்றினவராய்க் காணப்பட்டார் என்றும் நாம் எண்ணிவிடக்கூடாது; இம்மாதிரியான (அவன் பொறுப்பு வகிக்கவில்லை என்ற) சிந்தையானது, “எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாய் இருக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகளினால் மறுக்கப்படுகின்றது. (இயேசுவின்) இவ்வார்த்தைகளானது, சத்தியத்தினைப்பற்றின தெளிவான அறிவிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் மூலம் யூதாஸ் ஏற்கெனவே மாபெரும் ஒப்புரவாகும் வேலையிலும் மற்றும் இதன் காரணமான பொறுப்புகளிலும் தனக்கான பங்கினை அனுபவித்துள்ளார் என்று நாம் எண்ணுவதற்கு ஏதுவாயிருக்கிறது. யூதாசினுடைய பாவம், மரணத்திற்கு அதாவது இரண்டாம் மரணத்திற்கு ஏதுவான பாவமாய்க் காணப்படுகின்றது என்பது உறுதியே. ஆகையால் அவரது தற்கால ஜீவியத்தைப்பார்க்கும்போது, அவரது வாழ்க்கைப் பயனற்ற, வீணடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது என்றும், அவர் வாழ்க்கையின் துக்கங்கள், கடுந்துயரங்கள் மற்றும் பின்னர் வந்ததான நம்பிக்கையின்மை மற்றும் தற்கொலை ஆகியவற்றைவிட, அதன் சந்தோஷங்களானது மிகுதியாய்க் காணப்படவில்லை என்றும் நாம் கருத வேண்டியுள்ளது.
பஸ்கா இராப்போஜனத்தைப் புசித்தப்பிற்பாடு, அதாவது கசப்பான கீரைகள் மற்றும் புளிப்பில்லாத அப்பம் முதலானவைகளுடன் ஆட்டுக்குட்டியைப் புசித்தப்பிற்பாடு, இயேசுவினால் நிறுவப்பட்டதான நினைவுகூருதலின் இராப்போஜனமானது, அவரது கட்டளையின் பேரில், அவரது பின்னடியார்கள் அனைவருக்கும், யூதர்களுக்கான பஸ்கா இராப்போஜனத்தினுடைய இடத்தை எடுக்கின்றதாய் இருக்கின்றது. இது ஒரு புதிய காரியமாகும் மற்றும் அவர் புளிப்பில்லாத அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரித்து, பின்னர் அதைப்பிட்டு, துண்டுகளை தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவரிடத்திலும் கொடுத்து, “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று கூறினபோது, அப்போஸ்தலர்கள் அவரது வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டார்கள். அவர் என்ன அர்த்தத்தில் கூறினார்? அவரோடுகூட அவர்கள் செலவழித்ததான [R3879 : page 334] மூன்று வருடக்காலப்பகுதிகளில், அவர் உவமைகளாகவும், மறைப்பொருளாகவும்தான் பேசுவார் என்று அவர்கள் தெரிந்துகொண்டார்கள். வேறொரு தருணத்தின்போது அவர்களும் காணப்படுகையில் தம்மை வானத்திலிருந்து இறங்கின அப்பம் என்றும், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றும் பிழைப்பான் என்றும் அவர் கூறியிருந்தார். இப்பொழுதோ அவர் புளிப்பில்லா அப்பம் சிலவற்றை அவர்களிடத்தில் கொடுத்து, அது தம்முடைய சரீரம் என்று கூறுகின்றார். இந்த அப்பமானது, அவருடைய சரீரத்திற்கு அடையாளமாய் இருக்கின்றதென அவர் குறிப்பிடுகின்றார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்; ஏனெனில் இந்த ஒரு தருணத்தின்போது, அவர்கள் இதுமுதல் அவரை நினைவுகூரும்படிக்கு இதைச் செய்ய வேண்டும், அதாவது அவரை அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியென அவர்கள் இதுமுதல் நினைவுகூர்ந்து, அவரது மாம்சத்தை அடையாளப்படுத்துவதற்குப் புளிப்பில்லா அப்பத்தைப் பயன்படுத்தி, முன்பு அவர்கள் புசித்தச் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டிக்குப்பதிலாக, இந்தப் புளிப்பில்லாத அப்பத்தில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர்களிடத்தில் கூறினார்.
ரோமன் கத்தோலிக்கன்மார்களும், சில புராட்டஸ்டண்டினர்களும் நம்புவது போன்று, அவர் ஸ்தோத்திரித்ததின் காரணமாக, அப்பமானது, அவரது நிஜமான மாம்சமாக மாறியது என்ற அர்த்தத்தில் அவர் கூறவில்லை; ஏனெனில் அவர் அவ்வேளையில் இன்னமும் தமது மாம்சத்தைப் பெற்றவராய் இருந்தார்; சுமார் பதினைந்து மணி நேரங்களாக அவர் கொல்லப்படவில்லை. ஆகையால் இப்படியான வாதங்கள் அனைத்தும் சொற்புரட்டும், அறிவீனமுமாகும். அவர், “இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று அவர் சொன்னபோது, அவர் பிற்பாடு “நானே திராட்சச்செடி” என்றும், “நானே வாசல்” என்றும், “நானே நல்ல மேய்ப்பன்” என்றும், “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்றும் அவர் கூறினபோது எப்படி அடையாளமான விதத்தில் பேசினாரோ, அப்படியாகவே பேசினார். ஆண்டவருடைய வார்த்தைகளின் சரியான, தெளிந்த கண்ணோட்டமானது வெளிப்படையாய்த்தெரிகின்றது; அவர் இப்படியாய்ப் பல்வேறு விதங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். நாம் பார்த்துக்கொண்டிருக்கிற வசனத்தில், சுவிசேஷயுகம் முழுவதிலுமுள்ள அவரது பின்னடியார்கள் அனைவருக்கும் மற்றும் அப்போஸ்தலர்களுக்கும் அப்பமானது – அவரை, அவரது மாம்சத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கும்.
அப்பமானது, உணவு அனைத்திற்குமான அடையாளமாய் இருப்பதுபோல (ஆம் கோதுமையில் அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் சரியான விதத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது உண்மையே), இந்த அடையாளம் போதிப்பது என்னவெனில், கிறிஸ்து கொடுக்கப்போகின்றதான ஜீவனை ஒருவன் பெறவேண்டுமெனில், அது அவரது பலியின் விளைவானதென அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். நாம் ஜீவிக்கத்தக்கதாக அவர் மரித்தார். அவர் மனமுவந்து, விரும்பி கையளித்ததான உரிமைகளும், சிலாக்கியங்களும், அவரில் விசுவாசம் வைத்து மற்றும் அவரையும், அவரது போதனைகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவராலும் புசிக்கப்பட வேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும், சொந்தமாக்கிக்கொள்ளப்பட வேண்டும்; இப்படியானவர்கள் ஆதாமினால் இழந்துபோகப்பட்டதும், கிறிஸ்துவினால் மீட்கப்பட்டதுமான உரிமைகளுடனும், சிலாக்கியங்களுடனுமுள்ள பரிபூரண மனுஷீகச் சுபாவத்தினால் தரிப்பிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். வானத்திலிருந்திறங்கின இந்த அப்பத்தைப் புசித்தால் மாத்திரமேயொழிய மற்றபடி, எவரும் நித்திய ஜீவன் பெறமுடியாது. இது தற்காலத்தினுடைய விசுவாசிகளுக்கு மாத்திரமல்லாமல், இனிவரும் யுகத்திலுள்ளவர்களுக்கும்கூடப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. அவர்களுக்கான ஜீவிக்கும் உரிமைகளும், சிலாக்கியங்களும், அவரது பலியின் மூலமாக வந்ததென அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நமது கர்த்தருடைய சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதான அப்பமானது, அவரது பலியை ஏற்றுக்கொள்வதன் மூலமான நம்முடைய நீதிமானாக்கப்படுதலை விளக்குகின்றதாய் இருக்கின்றது.
அடுத்து திராட்சப்பழரசமுள்ள பாத்திரத்தைக் கர்த்தர் எடுத்தார். அது புளிப்பேற்றப்பட்ட திராட்சரசம் (wine) என்பதாக நமக்குக் குறிப்பிடப்படவில்லை; ஆகவே அது புளிப்பேற்றப்பட்ட ஒன்றா (அ) புளிப்பேற்றப்படாத ஒன்றா என்பது கருத்து வேற்றுமைகள்கொண்ட காரியமாகும்; மற்றும் நம்முடைய காலக்கட்டத்தினுடைய சூழ்நிலைகள் மற்றும் கர்த்தருடைய வார்த்தைகளானது கட்டளையிடுபவைகள் யாவற்றையும் பார்க்கும்போது, புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாறு (அ) உலர்ந்த திராட்சரசமானது, அவரது கட்டளைகளின் காரியங்களை நிறைவேற்றுகின்றதாய் இருக்குமென நாம் நம்புகின்றோம். அது ஒருபோதும் புளிப்பேற்றப்பட்ட திராட்சரசமென (wine) குறிப்பிடப்படாமல், (fruit of the vine) திராட்சப்பழரசமுள்ள பாத்திரம் என்று மாத்திரம் [R3880 : page 334] குறிப்பிடப்படுகின்றபடியால், கர்த்தருடைய பின்னடியார்கள் மத்தியில் வாக்குவாதத்திற்கு இடமில்லை. எவ்வகையான திராட்சப்பழரசத்தைப் பயன்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில் ஒவ்வொருவனும் தன் மனசாட்சியின்படி நடந்து கொள்வதற்குச் சுதந்திரம் உடையவனாய் இருக்கின்றான்; ஆனால் புளிப்பற்ற இரசமே, கர்த்தருடைய பின்னடியார்களிடத்தில், குடிப்பழக்கம் தொடர்புடைய விஷயத்தில் அடங்கியிருக்கின்றதான விருப்பங்களைத் தட்டியெழுப்பும் அபாயமற்ற ஒன்று என்று நாம் விரும்பித் தேர்ந்தெடுக்கின்றோம்.
பாத்திரம் தொடர்புடைய விஷயத்தில், “இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று கர்த்தர் கூறினார். (பழமைமிக்க கிரேக்க மூலப் பிரதிகளாகிய Sinaitic மற்றும் Vatican மூலப்பிரதிகளில் “புதிய” எனும் வார்த்தையானது தவிர்க்கப்பட்டுள்ளது) உண்மைதான் புதிய உடன்படிக்கையானது, செயலாக்கத்தில் வருவதற்கு முன்னதாக, கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் முத்திரையிடப்பட வேண்டும் மற்றும் ஆயிரவருட யுகம் ஆரம்பிப்பது வரையிலும் அது செயலாக்கத்திலும் வரமுடியாது. ஆனால் நமது கர்த்தருடைய மரணத்தினால் முத்திரையிடப்பட்ட இன்னொரு உடன்படிக்கையும் இருக்கின்றது; அது உடன்படிக்கைகள் அனைத்திற்கும் அஸ்திபார உடன்படிக்கையான பழைய உடன்படிக்கையாகிய, ஆபிரகாமின் உடன்படிக்கையாகும். இப்படியாக இது முத்திரிக்கப்படும் என்பது ஆபிரகாமினுடைய கரங்களினாலான ஈசாக்கின் உருவகமான மரணத்திலும், மரணத்திலிருந்துள்ள ஈசாக்கின் உருவகமான உயிர்த்தெழுதலிலும், நிழலான விதத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஈசாக்கு நமது கர்த்தராகிய இயேசுவை அடையாளப்படுத்துகின்றார் என்று அப்போஸ்தலன் நமக்கு உறுதிப்படுத்தி, “சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்து – வாக்குத்தத்த உடன்படிக்கையின் பிள்ளைகளாய் இருக்கிறோம்” என்றும் கூறுகின்றார் (கலாத்தியர் 4:28).
இப்படியாக நமது கர்த்தருடைய வார்த்தைகளை, அவர் முத்திரிக்கின்றதான (அ) உறுதிப்படுத்துகின்றதான ஆபிரகாமின் உடன்படிக்கைக்குப் பொருத்திப் பார்க்கும்போது, அவரது மரணத்தின் மூலமாகவே அவர் அந்த உடன்படிக்கைக்கு, மற்றும் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதற்கான அதன் மகிமையான ஏற்பாடுகள் அனைத்திற்கும் சுதந்திரவாளியானார் என்று நாம் காண்கின்றோம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, தம்முடைய பின்னடியார்களிடத்தில், “இது என்னுடைய பாத்திரமாயிருக்கிறது; நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகளுக்கு விசேஷித்த அர்த்தமும், அழுத்தமும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படியாகக் கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கான அழைப்பு என்பது, இந்தச் சுவிசேஷயுகத்தின் தெரிந்துகொள்ளப்பட்டதான சபையானது, பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படுதல் என்பதான ஆபிரகாமின் வாக்குத்தத்தத்தினுடைய நிறைவேறுதலுக்குரிய தெய்வீக வழிவகையாகிய இராஜ்யத்தின் வரவிருக்கும் மகிமைகளில் அவரோடுகூடப் பங்கடையத்தக்கதாக, அவரோடுகூட அவரது பாடு மற்றும் மரணம் எனும் பாத்திரத்தில் பங்கெடுப்பதற்கு, அவரோடுகூடத் தங்கள் ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்கு அவர்களுக்கான அழைப்பைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
அப்பம் புசித்தலும், மற்றும் நமது கர்த்தருடைய மரணத்தின் மூலமாகவும், அதை ஏற்றுக்கொள்வதின் மூலமாகவுமுள்ள நீதிமானாக்கப்படுதலில் பங்கெடுத்தலும், முழு உலகத்திற்கும் அவசியமாகக் காணப்பட்டாலும், அதாவது நமது கர்த்தருடைய பலியினால் வாங்கப்பட்டதான திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களை முழு உலகமும் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானதாகக் காணப்பட்டாலும், பாத்திரமானது உலகத்திற்கானதாயிராமல், மாறாக சபைக்கு மாத்திரமானதாக, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமானதாய் இருக்கின்றது. “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” – நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள் என்பது மாத்திரமல்லாமல், நீங்களெல்லாரும், முழுவதையும் பானம் பண்ணுங்கள் – மீதி வைக்க வேண்டாம். இனிவரும் யுகத்திற்கென்று கிறிஸ்துவின் பாடுகளில் எதுவும் மீதி வைத்து வைக்கப்பட்டிருப்பதில்லை; நீதியினிமித்தமாகப் பாடுபடுதல்கள் எதுவும் அக்காலத்தில் உலகம் அனுபவிப்பதில்லை; அக்காலத்தில் பொல்லாப்புச் செய்கைக்காரர்கள் மாத்திரமே பாடுபடுவார்கள். இக்காலத்திலேயே தேவபக்தியாய் நடப்பவர்கள் யாவரும் துன்புறுத்தப்படுவார்கள்; மற்றும் இக்காலத்திலேயே கர்த்தருக்கு உண்மையாய் இருப்பவர்களும், அவருடைய இராஜ்யத்தின் மகிமைகளில் பங்கடைவதற்குப் பாத்திரவான்களாகக் கருதப்படுபவர்களுமாகிய அவரது பின்னடியார்கள், அவரது பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். ஆகையால்தான் இவ்விரு சிந்தனைகளையும் சேர்த்து, “நீங்கள் மனுஷக்குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” என்று கர்த்தர் கூறினார். கர்த்தருடைய சீஷர்களெனவும், அவரது அடிச்சுவடுகளில் நடப்பதற்கெனவும் தற்காலத்தில் அர்ப்பணம் பண்ணுபவர்கள், விசுவாசத்தின் மூலமான நீதிமானாக்கப்படுதலில் மாத்திரமாகப் பங்கெடுக்காமல், அவரது சீஷர்களாயிருப்பதற்கென அனைத்தையும் விட்டுவிடுபவர்களாகிய தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதான நித்திய ஜீவனை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பலியின் மூலமாகப் பாத்திரத்திலும் பங்கெடுக்க வேண்டும்.
“இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் இராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை” என்பதினால் நமது கர்த்தர் வேறான சூழ்நிலைகளின் கீழ், நீண்டதொரு காலத்திற்குப் பின்னர் உள்ள ஒரு புதிய திராட்ச ரசத்தைக் குறிப்பிடுகின்றவராய் இருக்கின்றார். இப்படியாக அவர் முன்பு சில வாரங்களாக அவர்களுக்குப் போதித்து வந்தவைகளை, அவர்களது மனங்களில் நிலைநாட்டினார்; அதாவது அவர் தற்போது தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கமாட்டார் என்றும், மாறாக தாம் பாடுபடுவார், சிலுவையில் அறையப்படுவார் என்றும், அவர்களும் தம்மோடு பாடுபடுவார்கள் என்றும், பிற்பாடு இராஜ்யமானது ஸ்தாபிக்கப்பட்டு, தாம் மகிமையில் [R3880 : page 335] காணப்படுகையில், தம்முடைய சீஷர்களும், தம்மோடுகூடத் தமது சிங்காசனத்தில் காணப்படுவார்கள் என்றும் தாம் போதித்து வந்தவைகளை, அவர்களது மனங்களில் உறுதிப்படுத்தினார். அத்தருணத்தின்போது கொடுக்கப்பட்டதானப் பாடங்கள் மூலமாக, இப்புதிய சிந்தனைகளானது அவர்களது மனங்களில் நன்கு பதியவைக்கப்பட்டது.
தற்காலத்தில் பாத்திரமானது, அவர்களுக்குத் திராட்சப்பழங்களின் நசுக்கப்படுதலை, திராட்சப்பழங்களின் இரசத்தினை, அவர்களது ஆண்டவரின் இரத்தத்தினை, ஜீவன் பலியாக்கப்படுவதை, ஊற்றப்படுவதையும், அவருக்கான ஊழியங்களிலும், அவரது காரணங்களிலும் அவரோடுகூடத் தங்கள் ஜீவியங்களும் பலியாக்கப்படுவதையும்குறித்துப் பேசுகின்றதாய் இருக்கும். ஆனால் பாடுகள், அவமானம் மற்றும் மரணம் எனும் தற்காலத்தினுடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகின்றவர்கள் அனைவரும், இராஜ்யத்தில் கனம், மகிமை, ஆசீர்வாதம் மற்றும் சந்தோஷம் எனும் அவரது பாத்திரத்திலும் பானம்பண்ணுவார்கள் என்ற கருத்தின் மூலமாக இந்தத் தற்காலத்தின் பாடுகளானது, பின்வரும் மகிமையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இதே சிந்தனையானது, நம்முடைய மனங்களுக்கு முன்பாகவும் காணப்பட வேண்டும் மற்றும் முற்காலத்திலுள்ள அப்போஸ்தலர்களுக்கு இருந்ததுபோலவே, இந்தச் சிந்தனையானது, இராஜ்யத்தைக் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தமான பாடுகளானது நிறைவு பெறுவதற்கான ஒரு காலப்பகுதியாகவும், மகிமைகள் வருவதற்கும், பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படுவதற்குமான காலப்பகுதியாகவும் அதிகமதிகமாய் நோக்கிடுவதற்கு நமக்கு உதவுகின்றதாய் இருக்கின்றது. இங்கு நமது கர்த்தர் தம்முடைய இராஜ்யத்தை, தம்முடைய இரண்டாம் வருகையுடன் தொடர்புபடுத்துகின்றார் மற்றும் இந்த நவமான திராட்சரசத்தைச் சீஷர்கள் பெந்தெகொஸ்தே நாளிலோ, எருசலேமினுடைய அழிவின் காலத்திலோ, பானம்பண்ணுவார்கள் என்று அவர் எந்தவிதத்திலும் குறிப்பிடவில்லை; “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தில், குறிப்பிட்டிருப்பதான காலத்திலேயல்லாமல், வேறெந்த காலத்திலும் பானம் பண்ணுவார்கள் என்று அவர் எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை.
இந்த ஒரு சிந்தையே நம்முடைய மனங்களுக்கு முன்பாகவும் காணப்பட வேண்டும்; இராஜ்யத்திற்காகக் காத்திருக்கையில், நாம் நமது கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காகவும், அவர் வந்து இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகவும், அதாவது அவரோடுகூடக் காணப்பட்டு, அவரது மகிமையில் பங்கடைய வேண்டியவர்களாகிய அவரது உண்மையுள்ளவர்களினுடைய உயிர்த்தெழுதலின் மாற்றமடைதலுக்காகவும், மகிமையடைதலுக்காகவும் காத்திருக்கின்றவர்களாய் இருப்போம். “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3) என்று அப்போஸ்தலர் கூறியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராஜ்யத்தில் நவமானதாய்ப் பானம்பண்ணுதல்குறித்த இந்த நம்பிக்கையை உடையவன், அதாவது மனுக்குலத்தின் உலகத்தைத் தூக்கிவிடுவதற்கான அந்தப் பாக்கியமான வாய்ப்புகளிலும், கனங்களிலும், மகிமைகளிலும் தன் ஆண்டவருடன் பங்கெடுத்தல்குறித்த இந்த நம்பிக்கையை உடையவன், இந்தத் தற்காலத்தினுடைய பலிகளை/தியாகங்களை, சோதனைகளை, பாடுகளை இலேசானதாக, ஆம் சந்தோஷமாய் எடுத்துக்கொள்வான்; ஆம், தான் ஆண்டவரோடுகூட மகிமையடையத்தக்கதாக, ஆண்டவரோடுகூடப் பாடுபடுவதற்கு மகிழ்ச்சியுடன் காணப்படுவான்.
தேவன் யாருக்குமே தண்டனை வழங்காமல், பாவங்களை மன்னிப்பார் என்று மனிதர்கள் போதிப்பது என்பது எங்களைப் பொறுத்தமட்டில் வீணானதேயாகும். கிறிஸ்து பாவிகளுக்கான மீட்கும் பொருள் இல்லையென்றும், தேவன் நீதியுள்ளவராகவும், பாவிகளை நீதிமானாக்குகிறவருமாகவும் இருக்கும்படிக்கும், நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கும் அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய்க் கிறிஸ்து மரிப்பதற்கு அவசியமில்லை என்றும் மனிதர்கள் வலியுறுத்திக் கூறுவதும் வீணானதேயாகும். உலகத்தை இரட்சிப்பதற்கான வார்த்தைகளை உடையவரான இயேசு, ஒரு மாரும் போதகராக இருப்பது போதுமானது என்று மனிதர்கள் வலியுறுத்திக் கூறுவதும் வீணானதேயாகும். இவ்விடத்திலும், மற்ற இடங்களிலும் இடம் பெறுகின்றதான ஆண்டவருடைய வார்த்தைகளுக்கும், அப்போஸ்தலர்கள் அனைவரின் சாட்சியங்களுக்கும் இசைவான நம்முடைய பதில் என்னவெனில்: கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரிப்பது என்பது அவசியமாகும் மற்றும் தெய்வீக ஏற்பாட்டின் மூலமாக அவர் நம்முடைய தண்டனையை ஏற்றுக்கொண்டதன் வாயிலாகவே அல்லாமல், மற்றபடி தெய்வீக நீதியினால் நம்முடைய பாவங்களானது ஒருபோதும் மன்னிக்கப்பட்டிருந்திருக்காது. ஆகையால் அநேகருக்குப் பாவமன்னிப்பு உண்டாகும்படிக்கு நமது கர்த்தருடைய இரத்தம் சிந்தப்பட்டது என்பது நமக்கு மிகவும் விலையேறப்பெற்றக் கருத்தாய் இருக்கிறது. இன்னுமாக அவரோடுகூட அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களென அவரோடு மிகவும் நெருங்கிக் காணப்படுவதற்கான சிலாக்கியம் நம்முடையதாய் இருக்கின்றது என்பதும், அவரது புண்ணியத்தினால் மூடப்படுகின்றதான நம்முடைய சிறு பலிகளானது, தேவனுடைய பார்வையில், உலகத்திற்குரியதான மாபெரும் பாவத்திற்கான பலியின் பாகமாகக் கருதப்படுகின்றது என்பதும், கிறிஸ்துவோடுகூடப் பாடுபடுபவர்களென, நாம் அவரது பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கும், மரணத்திற்குள்ளான அவரது ஞானஸ்நானத்தில் மூழ்குவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும் நமக்கு விலையேறப்பெற்ற சிந்தனைகளாக இருக்கின்றன.
மனிதன் தேவனுடைய சாயலிலிருந்து, பாவம் மற்றும் மரணத்திற்குள்ளாக விழுந்துவிட்டான் என்று சொல்வதற்குப்பதிலாக, அவன் மிருக நிலையிலிருந்து, இப்போது அவன் காணப்படுகின்றதான நிலைமைக்குப் படிப்படியாய்ப் பரிணாம வளர்ச்சியடைந்துக்கொண்டிருக்கின்றான் என்று நம்மிடம் பரிணாமக் கொள்கைக் காரர்களும், விமர்சகர்களும் கூறுவதும் வீணானதே. இவர்களை நாம் நம்புவதில்லை. விழுகை சம்பவித்தது என்பதும், இதன் காரணமாக மீட்பின் வேலை அவசியமானது என்பதும், முழு உலகத்திற்கான பாவங்களுக்கான நிவாரணமாகுவதற்குரிய சிலாக்கியம் பெற்றவரும், அதிகாரம் கொடுக்கப்பட்டவருமான தேவனுடைய கனம்பொருந்திய ஊழியக்காரன் கிறிஸ்து ஆவார் என்பதும், தம்மைப் பலிச்செலுத்தினதில் அவர் இந்தப் பாவநிவாரண வேலையை ஆரம்பித்தார் என்பதும், அவரது சரீரத்தினுடைய அங்கத்தினர்களுடைய பலிச்செலுத்துதலின் மூலமாக இந்தச் சுவிசேஷயுகத்தில் அவ்வேலையை அவர் நடத்தி வருகின்றார் என்பதும், அவர் சீக்கிரமாய் அந்த வேலையை முடித்துவிட்டு, அவரது மகிமைப்படுத்தப்பட்ட அங்கத்தினர்கள் அனைவருடன் ஆயிரவருட யுகத்தின்போது, அந்த மீட்பின் வேலையினுடைய ஆசீர்வாதங்களை உலகத்திற்குப் பகிர்ந்துகொடுத்து, அனைவரும் சத்தியம் மற்றும் தேவனுடைய அன்புகுறித்த அறிவிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்பதும், நம்மை அன்புகூர்ந்து, நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கினதின் மூலம் நிறைவேற்றப்படுபவைகளின் உயரமும், ஆழமும், நீளமும், அகலமும் அளவிடமுடியாதவைகளாய் இருக்கும் என்பதுமான தெய்வீக ஏவுதலினால் உண்டான சாட்சிகளையே நாம் பற்றிக்கொண்டவர்களாய் இருக்கின்றோம்.
இந்த நினைவுகூருதலின் இராப்போஜனத்தை அப்போஸ்தலர் குறிப்பிடுகையில், அவர் ஆண்டவருடைய வார்த்தைகளாகிய, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்பதைக் குறிப்பிட்டு, பின்னர் “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம், கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்றும் குறிப்பிடுகின்றார் (1 கொரிந்தியர் 11:24-26). நம்மை அன்புகூர்ந்து, நம்மை வாங்கினவரோடுகூட நாம் பங்கடையப் போகின்றதான கனங்கள், மகிமை மற்றும் சந்தோஷம் எனும் நவமான திராட்சரசத்துடன் நாம் கொண்டாடப்போகின்றதான இராஜ்யத்தின் காலம் வருவதுவரையிலும் இந்த மாபெரும் செய்கையை நாம் நினைவுகூர வேண்டும் என்பதே இவ்வசனத்தில் இடம்பெறும் கருத்தாகும். அப்போஸ்தலன் (parousia) பரோஷியாவரை, அதாவது தம்முடைய ஊழியக்காரர்களைச் சேர்த்துக்கொள்வதற்கும், அவர்களுக்குப் பலனளிக்கிறதற்குமெனக் கர்த்தர் பிரசன்னமாகும் காலம்வரை என்ற அர்த்தத்தில் குறிப்பிடாமல், மாறாக அனைவரும் சேர்க்கப்பட்டு, இப்படியாக இராஜ்ய வகுப்பார் அனைவரும் நிறுவப்பட்டு, மகிமைப்படுத்தப்படுவதுவரை என்ற அர்த்தத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
அதே அப்போஸ்தலன், அதே நிருபத்தில், சபை ஒருவரோடொருவரும், கர்த்தரோடும் கொண்டிருக்கும் ஐக்கியம், ஒருமைக்குறித்த கருத்தினை வலியுறுத்துகின்றார். அவர் கூறியுள்ளதாவது: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்;” “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம். உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்” (1 கொரிந்தியர் 10:16,17; 12:12; KJV & திருவிவிலியம்). தேவனுடைய கண்ணோட்டத்தில், தெரிந்துகொள்ளப்பட்ட தலை மற்றும் அவரது சரீரத்தின் தெரிந்துகொள்ளப்பட்ட அங்கத்தினர்களை உள்ளடக்கின ஒரு மாபெரும் மேசியா காணப்படுகின்றார் என்பதே கருத்தாய் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ஒரே அப்பமென, தேவனுடைய கண்ணோட்டத்தில் உலகம் நித்திய ஜீவன் பெறுவதற்கான அப்பமாய்க் காணப்படுகின்றனர் மற்றும் இந்த அடையாளம் நிறைவேற வேண்டுமெனில் அவரது மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக ஒவ்வொருவரும் மற்றும் [R3881 : page 335] அனைவரும் பிட்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொருவரும், அனைவரும் கிறிஸ்துவின் பாடு மற்றும் மரணம் எனும் அவரது பாத்திரத்தில் பங்கெடுக்க வேண்டும். இந்தப் பாடுகள் அனைத்தும் நிறைவேறின பிற்பாடே உலகத்தின் விஷயத்திலுள்ள புதிய யுகத்திற்கான, புதிய நாளுக்கான, சபிக்கப்படுதலுக்குப் பதிலான ஆசீர்வாதத்தின் நாளுக்கான, மரிப்பதற்குப்பதிலான திரும்பக்கொடுத்தலின் நாளுக்கான, விழுகைக்குப் பதிலான தூக்கிவிடுதலின் நாளுக்கான, காலம்/வேளை வருகின்றதாய் இருக்கும்.