R3749 (page 99)
லூக்கா 22:7
பஸ்கா என்ற வார்த்தையானது, யூதர்கள் மத்தியில் பண்டிகை வாரத்திற்கென்று, அதாவது நீசான் மாதம் பதினைந்தாம் தேதி துவங்கும் பஸ்கா பண்டிகைக்கென்று வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பெயராய்க் காணப்படுகின்றது. ஆனால் இதையும் மற்றும் பண்டிகை என்ற வார்த்தை இடம்பெறாத நிலையில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியானது, பஸ்கா என்று பொதுவாய்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றதுமான வேதவாக்கியங்களில் இடம்பெறும் பஸ்கா என்ற வார்த்தையையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியானது பஸ்கா என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்கு உதாரணமாக, “பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது” என்று நாம் வாசிக்கின்றோம். இன்னுமாக நண்பர் ஒருவரிடத்தில் கேட்கும்படிக்காக நமது கர்த்தர் சீஷர்களை அனுப்பினபோது, “அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்” என்பதாக நாம் வாசிக்கின்றோம். மீண்டுமாக “பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள்” என்று வாசிக்கின்றோம். ஆட்டுக்குட்டியைப் புசிப்பதற்கென நமது கர்த்தர் சீஷர்களோடு அமர்ந்தபோது, “நான் பாடுபடுவதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய இராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இதைப் புசிப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் (லூக்கா 22:7, 11, 13, 15, 16).
பஸ்கா ஆட்டுக்குட்டியைப்பார்க்கிலும், யூதர்களானவர்கள் இன்னமும் பஸ்கா வாரத்தைக்குறித்தே அதிகம் கவனிக்கிறவர்களாக இருப்பினும், நாமோ நமது கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களுடைய மாதிரிக்கு இசைவாக, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிக்கு” நிழலான மற்றும் உலகத்திற்கு முன்னதாகவே கடந்துபோகப்படுகின்றவர்களாகிய (அ) தப்புவிக்கப்படுபவர்களாகிய “முதற்பேறானவர்களின் சபையாகிய,” இப்பொழுது விசுவாசிக்கின்ற நாம், யாருடைய தெளிக்கப்பட்ட இரத்தத்தின் கீழ்க் காணப்படுகின்றோமோ, அவருக்கு நிழலான ஆட்டுக்குட்டியின் மீதே விசேஷித்தக் கவனத்தைக் கொண்டிருக்கின்றோம்.
யூதர்களுக்கான தேவனுடைய ஏற்பாடுகளானது நிழலானவைகளாகவும், நிஜமான அல்லது ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நமக்கு விலையேறப்பெற்ற பாடங்கள் நிரம்பினவைகளாகவும் காணப்படுகின்றன. நிழலில் கர்த்தர் தம்முடைய ஜனங்கள் மத்தியில் இரண்டு மாபெரும் மதம் சார்ந்த நிகழ்வுகளை அருளியிருந்தார்; ஒன்று மதச் சார்பற்ற ஆண்டினுடைய துவக்கத்திலும், மற்றொன்று மதச் சார்புடைய ஆண்டினுடைய துவக்கத்திலும் கொடுத்திருந்தார். மதச் சார்புடைய ஆண்டானது வசந்த/இளவேனிற் காலத்தில், இளவேனிற் சம இரவு பகல் நாளை (vernal equinox) தொடர்ந்துவரும் முதல் அமாவாசையிலிருந்து எண்ணப்படுகின்றது; கிட்டத்தட்ட ஏப்ரல் 1-ஆம் தேதியாகும்; ஆனால் சூரிய மற்றும் சந்திரக்காலத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றதாய் இருக்கும். இது தொடர்புடையதாகவே, அதாவது அவர்களது மதச் சார்புடைய ஆண்டினுடைய துவக்கக்காலத்தில், கர்த்தர் பஸ்காவை நியமித்தார்; அதாவது பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்படுதலும், புசிக்கப்படுதலும் பதினான்காம் தேதியில் இடம்பெற வேண்டும் என்றும், இதைப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையினுடைய பஸ்கா வாரமானது தொடர வேண்டும் என்றும் நியமித்தார். யூதர்களுக்கான மதச் சார்பற்ற ஆண்டானது ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு, ஏழாம் மாதத்தில், கிட்டத்தட்ட அக்டோபர் 1-ஆம் தேதியில் துவங்குகின்றது; இந்த மதச்சார்பற்ற ஆண்டு தொடர்புடையதாகவே கூடாரப் பண்டிகைத் தொடர்பாகப் பாவநிவாரண பலிகள் நியமிக்கப்பட்டன; இத்தருணத்தின்போது, இஸ்ரயேலர்கள் எகிப்தைவிட்டு, கானானுக்குப் போகும் வழியிலான தங்களது வனாந்தரப் பிரயாணத்தை நினைவுகூர்ந்தார்கள்.
இந்த இரண்டு மாபெரும் மதம் சார்ந்த ஆசரிப்புகளும் ஒரே பாடத்தினை வெவ்வேறு கோணங்களில் அடையாளப்படுத்துகின்றன; முதலாவது ஆசரிப்பானது மிகவும் குறிப்பாக முதற்பேறானவர்களின் கடந்துபோகுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; இந்த முதற்பேறானவர்கள், பின்னர் ஆசாரியத்துவப் பொறுப்பினைப் பெற்றுக்கொண்டதான லேவி கோத்திரத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்நிழலானது மோசேயை உள்ளடக்கினதான இந்த ஆசாரிய கோத்திரத்தின் வாயிலான இஸ்ரயேல் அனைத்திற்குமான விடுதலையையும்கூட அடையாளப்படுத்துகின்றது என்றாலும், இந்நிழலானது விசேஷமாக, குறிப்பாக, முழுமையாக முதற்பேறானவர்களாகிய, ஆசாரிய கோத்திரத்தினுடைய விடுதலையை, ஆசீர்வாதத்தை மாத்திரமே கையாளுகின்றதாய் இருக்கின்றது. ஏழாம் மாதத்தின் நிழலானது, மிகக் குறிப்பாக முழு உலகத்தினுடைய பாவங்களுக்கான நிவாரணத்தை, மன்னிப்பை மற்றும் தேவனுடன் ஒப்புரவாக விரும்பும் மனுக்குலம் யாவருடைய ஒப்புரவாகுதலைத் தெரிவிக்கின்றதாய் இருப்பினும், இந்தப் பாவநிவாரண நாளினுடைய பலியில், சபையினுடைய பாவங்களுக்கான பாவநிவர்த்தியானது, பாவநிவாரண நாளினுடைய முதலாம் பலியினால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாலும், பொதுவான உலகத்தினுடைய பாவங்களுக்கான பலியானது, இரண்டாம் பலியினால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாலும், உலகத்தின் மீது ஆசீர்வாதம் கடந்துவருவதற்கு முன்னதாக, சபையினிடத்தில் தேவனுடைய விசேஷித்த தேவதயவானது கடந்துவருவது தெரிவிக்கப்படுகின்றது.
“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளில் பொதுவாய் உணர்ந்துகொள்ளப்படாத ஆற்றலும், அர்த்தமும் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 5:7). நம்முடைய கர்த்தர் உலகத்தினுடைய பஸ்காவாயிராமல், சபையினுடைய பஸ்காவாகக் காணப்படுகின்றார். இஸ்ரயேல் அனைத்தும் மனுக்குலத்தின் உலகத்திற்கு அடையாளமாய்க் காணப்படுகின்றனர் மற்றும் ஜனங்கள் அனைவருடைய அடிமைத்தனமானது, மனுக்குலம் முழுவதும் பாவம், மரணம் மற்றும் நிழலில் பார்வோன் எனும் – [R3749 : page 100] நிஜத்தில் சாத்தான் எனும் மாபெரும் விசாரணைக்காரன் கீழ் அடிமைப்பட்டிருப்பதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அனைவருமே விடுவிக்கப்பட வேண்டுமென்பதே விருப்பமாகக் காணப்பட்டது மற்றும் கர்த்தருடைய ஏற்பாடானது, அனைவரையும் இறுதியில் விடுவிக்கப்போகின்றது. இதையே அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதுகையில் விவரிக்கின்றார்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.”
ஆனால் அப்போஸ்தலன் தவிப்பவர்களை இரண்டு வகுப்பார்களாக பிரிக்கும் வண்ணமாக, “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குக் காத்துக்கொண்டிருந்து…. இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:19, 20, 22) என்று கூறுகின்றார். இங்கு அவர் சாத்தானுடைய அடிமைத்தனம், பாவத்தின் வல்லமை மற்றும் மரணத்தின் வல்லமையினின்று மனுக்குலத்தின் உலகத்தினுடைய விடுதலையானது, உலகத்தினை ஆளுகைச் செய்யும் தேவனுடைய இராஜ்யம் என மகிமையிலும், வல்லமையிலும் கிறிஸ்து, மகிமையடைந்த சபையினுடைய வெளிப்படுதல் மூலமாக மாத்திரமே வருமென்று குறிப்பிடுகின்றார். முதற்பேறான சபையானவளின் தற்காலத்தினுடைய நிலையினைக் குறித்தும் அப்போஸ்தலன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்” (ரோமர் 8:23). இரண்டு வகுப்பாருக்கும் தவிக்கும் அனுபவம் காணப்படுகின்றது மற்றும் இரண்டு வகுப்பாருக்கும், காத்திருக்கும் அனுபவங்களும் காணப்படுகின்றன; ஆனால் அவர்கள் வெவ்வேறு காரியங்களுக்காகவும் காத்திருக்கின்றனர். முதற்பேறான சபையானவள், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கெடுப்பதின் வாயிலாக, கிறிஸ்துவின் சரீரமென, அவளது விடுதலைக்காகக் காத்திருக்கின்றாள். பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாகவும், தெய்வீக நிபந்தனைகளின்படி தெய்வீகத் தயவை விரும்பும் யாவரையும் தூக்கிவிடத்தக்கதாகவும், சபை வகுப்பார் பூரணமடைந்து, மகிமையடைந்து, அதிகாரம் பெற்றுக்கொண்டு, தங்கள் பிதாவினுடைய இராஜ்யத்தில் சூரியனைப்போல் பிரகாசிப்பதற்காக, தெய்வீக வாக்குத்தத்தத்தின்படி உலகமோ காத்துக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது நிழலைப்பார்க்கலாம்; இஸ்ரயேலர் அனைவரும் சங்காரத் தூதனால் ஆபத்தில் காணப்படாமல், மாறாக முதற்பேறானவர்கள் மாத்திரமே காணப்பட்டார்கள் என்பதைக் கவனியுங்கள். எகிப்தியர்களின் முதற்பேறானவர்கள் மாத்திரமே சங்காரம் பண்ணப்பட்டனர். ஆகையால் இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மாத்திரமே தப்புவிக்கப்பட்டனர் (அ) கடந்துபோகப்பட்டனர். ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தினால் பாதுகாக்கப்பட்டவர்களாகிய இந்த முதற்பேறானவர்களைக் கர்த்தர் விசேஷமாக தம்முடையவர்கள் என்று குறிப்பிடுகின்றார்; மற்றும் இவர்களைப் பிரித்து விசேஷித்த, சொந்த ஜனங்களென வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக் கோத்திரங்களிலுமுள்ள முதற்பேறானவர்களுக்குப் பதிலாக லேவிக் கோத்திரமானது கர்த்தரினால் எடுத்துக்கொள்ளப்பட்டது; இந்தக் கோத்திரத்தினை விசேஷமாய்த் தம்முடையவர்களென அவர் ஏற்றுக்கொண்டார் மற்றும் இவர்கள் நிழலில் விசுவாச வீட்டாரை அடையாளப்படுத்துகின்றவர்களாய்க் காணப்பட்டனர். இந்த விசுவாச வீட்டாரிலிருந்து, அடுத்ததாக நமது பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்துவுக்கும், அவரது சரீரமாகிய சபை எனும் உடன் ஆசாரியர்களாகிய ஆசாரியக் கூட்டத்தாருக்கும் நிழலாய்க் காணப்படும் ஓர் ஆசாரியக் குடும்பத்தினர் தெரிந்தெடுக்கப்பட்டனர். ஆகையால் இப்படியாய்க் காரியங்களைத் தெளிவாய்ப்பார்க்க முடிகின்றவர்களால், பஸ்காவானது விசுவாச வீட்டாருடன் மாத்திரமே தொடர்புடையதெனக் கண்டுகொள்வார்கள். இதற்கு இசைவாகப் பார்க்கையில் ஆட்டுக்குட்டியினைப் புசிக்கும் காரியத்திற்கு நிஜமான கர்த்தருடைய இராப்போஜனமானது, உலகத்திற்காக ஏற்படுத்தப்படாமல், விசுவாச வீட்டாருக்கென்று முழுமையாகவும், தனிப்பட்ட விதத்திலும் நிறுவப்பட்ட ஒன்றாய்க் காணப்படுகின்றது.
நிழலில் ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதையும், அதன் இரத்தமானது வீட்டினுடைய நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்கப்படுவதையும், அதன் மாம்சமானது, கசப்பான கீரைகளுடன் புசிக்கப்படுவதையும் காண்கையில், இவைகளின் நிஜத்தைப் பார்க்கையில், கிறிஸ்துவே நிஜமான ஆட்டுக்குட்டி என்றும், அவரது இரத்தம் நம்முடைய இருதயங்களில் தெளிக்கப்படும்போது, நம்மைத் துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாக்கி, நாம் கடந்துபோகப்பட்டோமென, நாம் தப்புவிக்கப்பட்டோம் என, அவரது இரத்தத்தின் வாயிலாக நமக்கு ஜீவன் அருளப்பட்டதென நமக்கு உறுதியளிக்கிறது என்றும் நாம் காண்கின்றோம். இந்தத் தெளிக்கப்படுதலானது, விசுவாசத்தின் மூலமான நம்முடைய நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் ஆட்டுக்குட்டியினைக் கசப்பான கீரைகளுடன் புசித்தல் என்பது நிஜத்தில் நம்முடைய அர்ப்பணித்தலையும், கிறிஸ்துவில் நம்முடைய பங்கெடுத்தலையும், அவரது பாடுகளில் நமது பங்கெடுத்தலையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது; கசப்பான கீரைகள் குறிக்கின்றதான சுயத்தை வெறுத்தல்களானது, பசியைத் தூண்டிவிடுகிறதாய் இருந்து, அதிகமதிகமாய் ஆட்டுக்குட்டியில் பங்கெடுப்பதற்கு நம்மை ஊக்குவிக்கின்றதாய் இருக்கின்றது. [R3750 : page 100] சாட்சியினை நம்புபவர்கள் அனைவரும், விலையேறப்பெற்ற இரத்தத்தினை விசுவாசிக்கின்ற அனைவரும் கடந்துபோகப்பட்டவர்களாய் இருக்கின்றனர் மற்றும் இவர்கள் இன்னுமாகத் தேவனைப் பணிந்துகொள்வதற்கும், அவருக்கு ஊழியம் செய்திடுவதற்கும் விரும்புகின்றவர்களும், தேவனை அன்புகூருபவர்களுக்குமான ஜனங்கள் அனைவருடைய பொதுவான விடுதலைக்காகக் காத்திருக்கவும் செய்கின்றனர். இப்படியாக விசுவாசிக்கின்றவர்கள் தங்களைத் தற்காலத்தில் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் கருதி, மேன்மையான பரம தேசமாகிய, பரம கானானை எதிர்நோக்கினவர்களாகக் காணப்பட்டனர். இக்காரியங்கள் அனைத்தும் நிழலான இஸ்ரயேலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; ஏனெனில் அந்தப் பஸ்கா இரவில் ஆட்டுக்குட்டியைப் புசிக்கையில், அவர்கள் கையில் தடிப் பிடித்துக் கொண்டவர்களாகவும், பிரயாணத்திற்கென அரைக் கட்டிக்கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். இதுபோலவே இன்றுள்ள கர்த்தருடைய உண்மையுள்ள ஜனங்களானவர்கள் தங்களை அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும், நிரந்தரமான இடமற்றவர்களாகவும் உணர்ந்து மேலானவைகளை நாடுபவர்களாகக் காணப்பட வேண்டும்.
நாம் மேலே குறிப்பிட்டிருப்பவைகளே, கர்த்தருடைய இராப்போஜனம் என்றும், இயேசுவின் இறுதிவிருந்து சடங்கு (Communion, Eucharist) என்றும் பொதுவாய் அழைக்கப்படுகின்றதும், காவல் கோபுரத்தின் (Watch Tower) வாசகர்களால் நினைவுகூருதல் (Memorial) என்று அறியப்பட்டிருக்கின்றதுமான நமது கர்த்தருடைய மரணத்தினை நினைவுகூரும் ஆசரிப்பிற்கான அடிப்படையாக இருக்கின்றதெனக் கிறிஸ்தவ ஜனங்கள் அனைவரும் ஓரளவிற்கு அடையாளம் கண்டுகொண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். பெரும்பான்மையான கிறிஸ்தவ ஜனங்களுடைய பிரச்சனை என்னவெனில், அவர்களுடைய வேத ஆராய்ச்சியில் போதுமானளவுக்கு ஆராய்ச்சியும், விடாமுயற்சியும் இல்லாமையே ஆகும்; மற்றும் இதன் காரணமாக இவ்விஷயத்திலும், மதம் சார்ந்த அனைத்துக் காரியங்களிலும் தங்களது விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் ஏறக்குறைய குழப்பமுடையவர்களாகவும், தெளிவற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் போதியாமல், பெரும்பாலும் மனிதர்களுடைய பாரம்பரியங்களையே போதிப்பதினாலும்; உலகத்திற்கே பிரதானமாய்ப் பிரசங்கம் பண்ணுகிறவர்களாய் இருந்து, கடந்துபோகப் பட்டவர்களாகிய, அதாவது மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்துபோனவர்களாகிய, அதாவது தேவனுடைய குடும்பத்திற்குள்ளாகப் புத்திரர்களென ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகிய – முதற்பேறானவர்களின் சபைக்குப் பிரசங்கம் பண்ணாதவர்களாக இருந்ததினாலேயே, இவர்களது ஊழியமானது, குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவானதாக நமக்குத் தோன்றுகின்றது.
நமது கர்த்தருடைய பலியை, நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலாகப்பார்ப்பது தொடர்புடைய விஷயத்தினாலான தெளிவற்ற கண்ணோட்டமானது நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்குரிய ஆசரிப்பிற்கான ஏற்றக்காலம் தொடர்புடைய விஷயத்திலுள்ள குழப்பத்தில் நன்கு வெளிப்படுகின்றது. கிறிஸ்தவ மண்டலத்தை நாம் பார்க்கையில், புராட்டஸ்டண்டினர் இந்த ஆசரிப்பை, நினைவுகூருதலை, பரவலாய் ஆசரிக்கின்றனர். ஆனால் அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்காமல், மற்றும் ஆண்டுநிறைவு நாளினைப் பொருட்படுத்தாமல் ஏதோ நிழலான பஸ்காவிற்கும், நாம் ஆசரிக்கும்படிக்கு நமது கர்த்தரினால் கட்டளையிடப்பட்டதான நிஜத்திற்கும் தொடர்பு இருப்பதை அறியாதவர்கள்போல, ஆசரித்து வருவதை நாம் காண்கின்றோம். ஆகையால் சிலர் இராப்போஜனத்தை நான்கு மாதத்திற்கு ஒருமுறை என்றும், சிலர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்றும், சிலர் மாதத்திற்கு ஒருமுறை என்றும், சிலர் வாரந்தோறும் என்றும் ஆசரிக்கின்றனர்; கடைசியில் குறிப்பிடப்பட்டவர்கள் தவிர மீதமானவர்கள் அனைவரும் இவ்வாசரிப்பின் காரியத்தினை விருப்பத்திற்கு ஏற்ப, வசதிக்கேற்ப செய்கிற காரியமாய்க் கருதி, இந்த விசேஷித்த மற்றும் சரியான வருடந்தோறுமான ஆசரிப்பை, ஆசரிக்காமல் காணப்படுகின்றனர். சீஷர்கள் (Disciples) என்ற கிறிஸ்தவ பிரிவிலுள்ள நமது சகோதரர்கள் வாரந்தோறும் ஆசரிக்க வேண்டுமென விடாப்பிடியாய்க் காணப்படுகின்றனர்; இதற்குக் காரணம் என்னவெனில் இவர்கள் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கு ஞாபகார்த்தமாய்க் கூடினதான வாரக்கூடுகைகளில், அவர்கள் அப்பம் பிட்டதாக” வாசிக்கின்றனர். கொள்கைகள் எதையும் நிதானித்துப்பார்க்காமல் [R3750 : page 101] இராப்போஜனத்தின் ஆசரிப்பானது, கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் அப்பம் பிட்கப்படுதலை மாத்திரமே குறிக்குமென இவர்கள் முடிவிற்கு வந்துவிட்டனர்.
ஆனால் நமது கர்த்தர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு அப்பம் பிட்கும் நிகழ்வினால் தம்மை பல்வேறு தருணங்களில் – எம்மாவு என்னும் கிராமத்திலும், மீண்டுமாக மேல்வீட்டறையிலும் வெளிப்படுத்தினதை ஆதித் திருச்சபையினர் நினைவுகூர்ந்ததினால், அவர்களுக்கும், நம் அனைவருக்கும் எல்லாமுமாகக் காணப்பட்ட அந்த உயிர்த்தெழுதலினாலான சந்தோஷங்கள் மீண்டும் மீண்டுமாக நினைப்பூட்டப்படுவதற்கென வாரத்தினுடைய முதல்நாளில் ஒன்றுகூடுவதில் மகிழ்வுற்றனர் என்று நாம் காண்கின்றோம். பொது மாநாடுகள் நிறைவடைகையில் நாம் கொண்டிருப்பதான அன்பின் விருந்துகள் (அ) சாதாரணமான உணவைப்பார்க்கிலும் மேலான ஒன்றை அவர்கள் உண்டதாக எந்தக் கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. இப்படியாக ஆதித் திருச்சபையினர் செய்ததினால், நமது பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றார் என்பதினால் மற்றும் தேவனுடைய இரக்கத்தினால் தெளிக்கப்பட்ட அவரது இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் வாயிலாக நாம் கடந்துபோகப்பட்டுள்ளோம் என்பதினால் ஆதித் திருச்சபையினர் வாரத்தின் முதல் நாளில் பஸ்காவை ஆசரித்ததாகவும் எந்தக் குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இப்படியாக அப்பம் பிட்குதலை அவர்கள் கர்த்தருடைய இராப்போஜனமாகக் கருதினதாகவும் குறிப்பிடப்படவுமில்லை; கர்த்தருடைய நினைவுகூருதலின் இராப்போஜனத்தில் அப்பத்துடன்கூட முக்கியமான அம்சமாகத் திகழும் பாத்திரம் குறித்தும் குறிப்பிடப்படவுமில்லை.
நமது கர்த்தருடைய நினைவுகூருதலுக்கான வருடந்தோறுமான ஆசரிப்புத் தொடர்புடைய விஷயத்தில் இந்த அஜாக்கிரதையின் ஆரம்பமானது எளிமையாக அடையாளம் கண்டுகொள்ளப்படலாம். ஆதித் திருச்சபையானது இதை வருடந்தோறும் ஆசரித்தது மற்றும் வருடந்தோறுமான இந்த ஆசரிப்பானது பழமைமிக்க கிறிஸ்தவ சபைகளால், ரோமன் கத்தோலிக்கர்கள், கிரேக்க கத்தோலிக்கர்கள், எபிஸ்கோப்பிலர்கள் முதலானவர்களால் இன்னமும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது; இவர்கள் அனைவரும் புனித வெள்ளியை, கிறிஸ்துவாகிய நம்முடைய பஸ்காவின் இந்த அடிக்கப்படுதலின் நினைவுகூருதலாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் இவர்கள் இக்காரியங்கள் அனைத்தினுடைய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியத்துவங்களைப் பெரிதும் பார்க்கத் தவறிப்போனவர்களானார்கள். மூன்றாம் நூற்றாண்டினுடைய காலப்பகுதியில் உள்ளே நுழைந்த மிகவும் கடுமையான தப்பறையாகிய பூசைப் பலியானது, வருடந்தோறும் ஆசரிக்கப்பட வேண்டிய நினைவுகூருதலிலும், இதில் நினைவுகூரப்படுகின்றதான மாபெரும் பலியிலும் மையம் கொள்ளவேண்டிய விசேஷித்த கவனத்தை அதன்பால் ஈர்த்துவிட்டதாய்க் காணப்படுகின்றது. பூசை பலியில், அதை ஏறெடுக்கும் குருவானவர் மூன்று புனிதமான இலத்தீன் வார்த்தைகளை உச்சரித்து அப்பம் மற்றும் திராட்சரசம் மீது அற்புதம் புரிவதால், அவைகள் மாறி, இயேசுவின் மாம்சமாகவும், இரத்தமாகவும் உண்மையில் ஆகிவிடுகிறதாம். இப்படியாகப் பூசை பலியை ஏறெடுக்கும் குருவானவர் புதிதாய்க் கிறிஸ்துவைப் பலிச்செலுத்துவதாகவும், பாவிகளுக்காக ஏறெடுக்கப்படும் பூசையில், தனிப்பட்ட பாவங்களுக்கெனக் குருவானவர் புதிய பாவநிவாரண பலியைச்செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இப்படியாக மனுக்குலத்தினுடைய இருதயங்களானது, பாவங்களுக்கான ஒரே பாவநிவாரண பலியினின்று, அதாவது ஒரே தரம் மற்றும் என்றென்றுமாக விசுவாசிகள் அனைவரையும் கடந்துபோகப் பண்ணினதுமான ஒரே பாவநிவாரண பலியினின்று திசைத் திருப்பப்பட்டு, தங்கள் பார்வைகளைக் குருமார்கள், பூசை மற்றும் ஆசிர்வாதங்கள் மற்றும் தீர்த்தம் முதலானவைகள் மீது ஈர்க்கப்பெற்றவர்களாய்க் காணப்படுகின்றனர். இதைக் கர்த்தர் தம்முடைய வார்த்தைகளில், தம்முடைய சபையில், தம்முடைய ஆலயத்தில் “பாழாக்கும் அருவருப்பு” ஸ்தாபிக்கப்படும் என்று கூறி குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை (தானியேல் 11:31). மில்லேனியல் டாண் (Millennial Dawn), தொகுதி-III, அத்தியாயம்-III,IV.
ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து வந்ததான புராட்டஸ்டண்டினர்கள், மதம் சார்ந்த தங்கள் ஆதிக் கருத்துக்களை ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திடமிருந்து பெற்றிருக்கின்றபடியால், ரோமன் கத்தோலிக்க அமைப்பினுடைய தப்பறைகளில் பல இவர்களிடத்திலும் ஒட்டிக்கொண்டிருப்பதிலும், தேவனுடைய வார்த்தைகளினுடைய அநேக ஆவிக்குரிய போதனைகளினுடைய ஆழமான முக்கியத்துவம் தொடர்புடைய விஷயங்களில் தங்கள் புரிந்துகொள்ளுதலின் கண்களைக் குருடான நிலையில் இவர்கள் பெற்றிருப்பதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது இப்பாடத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதனையின் விஷயத்திலும் கூட உண்மையாய் இருக்கின்றது. நமது கர்த்தருடைய, அப்போஸ்தலர்களுடைய, மோசேயினுடைய, தீர்க்கத்தரிசிகளினுடைய, சபைக்கான பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட போதகர்களுடைய போதனைகளை நாம் தெளிவாய்ப்பார்க்கத்தக்கதாக, “இருண்ட யுகங்களுடைய” தப்பறைகளினின்று நமது மனங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே நாம் அனைவரும் வாஞ்சிக்க வேண்டிய காரியமாய் இருக்கின்றது.
பஸ்கா தொடர்புடையதான வேதவாக்கியங்களின் பதிவும், இதற்குப்பதிலாக நிறுவப்பட்டதும், இதற்கான நிஜமாக அவரது சீஷர்கள் அவரை நினைவுகூருவதுமான கர்த்தருடைய இராப்போஜனம் தொடர்புடையதுமான வேதவாக்கியங்களின் பதிவு அனைத்தும் வேளைப்பற்றின நுணுக்கமான விவரத்தைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அதாவது பல்வேறு கிறிஸ்தவ பிரிவினர்களின் பொதுவான வழக்கத்தின்படி காலையிலோ, மதியத்திலோ, பிற்பகலிலோ ஆசரிக்கப்படாமல், சாயங்காலத்தில் அது ஆசரிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. நமது கர்த்தரும், அவரது அப்போஸ்தலர்களும் நீசான் மாதம் 14-ம் நாள் ஆரம்பமாகுவது வரையிலும் பஸ்காவிற்கென உட்காரவில்லை. இதுபோலவே தங்களை விசுவாச வீட்டாரின் அங்கத்தினர்களென, முதற்பேறானவர்களுடைய சபையின் அங்கத்தினர்களென அடையாளங்கண்டுகொள்பவர்கள் அனைவரும் இந்த விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் ஆண்டவருடைய வழிக்காட்டுதலைப் பின்பற்றிடுவதற்கு ஜாக்கிரதையாய் இருந்திட வேண்டும். இதில் ஆசீர்வாதமும், அர்த்தமும் காணப்படுகின்றன. அவர் ஆசரித்ததான அதே இரவில், அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதான அதே இரவில், அவர் அப்பத்தை எடுத்து, அதைப்பிட்டு, தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார். நாம் இன்னமும் அதே இரவில் காணப்படுகின்றோம் மற்றும் அந்த அப்பத்தைப் புசித்தலும், அந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணுதலும், கர்த்தருடைய சீஷர்கள் மத்தியில் இன்னும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நீசான் மாதம் 14-ம் தேதியே இவ்வாசரிப்பிற்கான சரியானவேளை என்ற விஷயத்திலும், இஸ்ரயேலர்கள் அனைவரும் இதே நாளில்தான் சரியாய் ஆசரிக்க வேண்டுமென்ற விஷயத்திலும் நமது கர்த்தர் தெளிவாய் இருந்தார். மேலும் சரியாய் மாதத்தினுடைய ஆரம்பத்தைக் கணிப்பதில் அவ்வளவுக்கு நுணுக்கம் இருப்பதில்லை. (சந்திரனுடைய படிப்படியான நிலையின்) சந்திர கலையின்/ moon phase அடிப்படையில் யூதருடைய காலக்கணக்கீட்டின் முறைமை காணப்படுவதினால், அக்கணக்கீடு, நம்முடையதிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும் மற்றும் இதனால் அவர்களது மாதத்தினுடைய துல்லியமான ஆரம்பத்தைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமம் காணப்படுகின்றது. விசேஷமாக இளவேனிற் சம இரவு பகல் நாள் தொடர்புடையதாகவும், யூதர்களின் விஷயத்தில் இன்னொரு நிழலானது, பஸ்கா அறுவடையின் காலத்தில் வரவேண்டுமெனக் குறிப்பிடுவது தொடர்புடையதாகவும், இக்கணக்கீடு கணக்கிடப்படுவதால் மிகுந்த சிரமம் காணப்படுகின்றது. இவ்விஷயங்களையெல்லாம் அறிந்திருப்பவர்கள் அனைவரும், வாக்குவாதமும், கருத்துவேறுபாடும் இல்லாமல், சந்திர காலக்கணக்கீட்டின்படி, அறுவடைக் காலத்திற்கு இணக்கமாக யூதர்களுடைய வருடத்தின் ஆரம்பத்திற்கான தேதியினை முடிவு செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்று ஒத்துக்கொள்வார்கள். ஒரு தேதியை புதிய வருடத்தின் ஆரம்பத்திற்கான தேதி எனவும், ஒரு தேதியை அவ்வருடத்தினுடைய 14-ஆம் தேதி எனவும் நிர்ணயிக்கும் வேலையினை உடைய வேதப்பாரகர்களால் ஜனங்களுக்காகத் திர்மானிக்கப்படும் தேதியானது கர்த்தருடைய கண்ணோட்டத்தின்படி, நினைவுகூருதலுக்காய் நிறுவப்பட்ட தேதியாகுகின்றது. வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், வேதபாரகர்கள் ஒருநாள் முந்தியோ (அ) பிந்தியோ ஒரு தேதியை நிர்ணயித்தார்களா என்பது ஒரு காரியமல்ல; ஒன்றுபோல்/வேறுபாடற்ற தேதி காணப்பட வேண்டும் மற்றும் முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியானது மாறுபாடற்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும்.
இன்றும் காரியங்கள் இப்படியாகவே காணப்படுகின்றது. யூத காலத்தின்படி முதல் மாதத்தின், முதலாம் தேதியினுடைய கணக்கிடுதலை உறுதிப்படுத்தும் விஷயத்தில் எவ்விதமான பதட்டமடைதலோ அல்லது சிறியதைப் பெரிதாக்கி பார்த்தலோ அவசியமில்லை; மாறாக ஒரே நாளில் சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்னர் அனைவரும் நினைவுகூருதலை ஆசரிப்பதிலும் மற்றும் எந்தநாள் நீசான் மாதத்தின் 14- ஆம் தேதியாக ஆசரிக்கப்பட வேண்டும் என்பதிலும் சரியாய் [R3750 : page 102] இருப்பதே அவசியமானதாகவும், ஏற்றதாகவும் உள்ளது. ஜனவரி மாதம் 15-ஆம் தேதியினுடைய நம்முடைய வெளியீட்டில் நீசான் மாதத்தினுடைய முதலாம் தேதியை, இளவேனிற் சம இரவு பகல் நாளுக்குப் பின்வரும் அமாவாசை நாளைத் திட்டவட்டமாய் நிர்ணயிக்கும் விஷயத்தில் சிரமமுள்ள வருடங்களில் இவ்வருடமும் ஒன்றென நாம் சுட்டிக்காண்பித்திருந்தோம். இதற்கு நாம் முக்கியத்துவம் செலுத்துவதில்லை; நினைவுகூருதலை ஏப்ரல் 8-ஆம், ஞாயிறு இரவில் ஆசரிப்பதற்கு நாம் பரிந்துரைக்கின்றோம். இது யூதருடைய கடைப்பிடிப்பிற்கு இசைவானதாகவும், நீசான் 15-ஆம் தேதியாகிய ஏப்ரல் 9-ஆம் தேதியன்று பௌர்ணமி வருகின்றது என்ற உண்மைக்குப் பொருந்துகின்றதாகவும் காணப்படுகின்றது. நினைவில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு: (1) அது வருஷத்தினுடைய இளவேனிற் காலத்தில், கிட்டத்தட்ட பஸ்கா காலத்தில் இருக்க வேண்டும்; (2) தேதியானது வேறுபாடற்று ஒன்றுபோல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; (3) ஆதியில் எகிப்தில் நிறுவப்பட்டதற்கு இசைவாகவும், பின்னர் நமது கர்த்தரால் நிறுவப்பட்டதான நினைவுகூருதலுக்கு இசைவாகவும் சாயங்காலத்தில் ஆசரிக்கப்பட வேண்டும்.
[R3751 : page 102]
மேற்கூறினவைகளுக்கு இசைவாக, கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றதான நேரத்தில், அலிகெனியிலுள்ள (Allegheny) சபையார், நமக்காக அடிக்கப்பட்டதான நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் மரணத்தினை நினைவுகூரும்படிக்கு ஒன்றுகூட வேண்டுமென்றிருக்கின்றனர். அதே காலப்பகுதியில் உலகமெங்கும் காணப்படும் அங்கங்களுடைய சிறுசிறு கூட்டத்தினர் ஆசரித்ததாகச் செய்திகளைப் பின்னர்த் தெரிந்துகொள்வோம் என்றும் நாம் நம்புகின்றோம். பார்வோன் மற்றும் எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்ததான விடுதலையை, நினைவு கூர்ந்திடுவதற்கென நாம் யூதர்களைப்போன்று ஒன்று கூடிடவில்லை, மாறாக நிஜமான இஸ்ரயேலர்களெனச் சாத்தானுடைய வல்லமையினின்றும், பாவத்தினுடைய ஆளுகையினின்றும் தப்பிடுவதற்கு நாடுகின்றோம். சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியையும், கசப்பான கீரைகளையும் புசிப்பதற்காகவும், எகிப்தில் நடந்த கடந்துபோகுதலை நினைவுகூருவதற்காகவும் நாம் ஒன்றுக்கூடாமல், மாறாக தேவ ஆட்டுக்குட்டியானவரின் மரணத்தினை நமது பஸ்கா என்று அடையாளம் கண்டுகொள்வதற்கும், நினைவுகூருவதற்கும், அவரையும், அவர் கொடுத்த சத்தியங்களைப் புசிப்பதற்கும், நமக்காக அவர் கையளித்ததான ஜீவிக்கும் உரிமைகளை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களென நாம் ஒன்று கூடுகின்றோம்.
இன்னுமாக, நமது கர்த்தரினால் விவரிக்கப்பட்டுள்ளதுபோன்று, புளிப்பில்லாத அப்பத்தினை, நமக்காகப் பிட்கப்பட்டதான அவரது மாம்சத்தினுடைய தூய்மையை அடையாளப்படுத்துகிறதற்காகவும், திராட்சப்பழரசத்தை நமக்காகச் சிந்தப்பட்ட அவரது இரத்தத்ததை அடையாளப்படுத்துகிறதற்காகவும் மாத்திரமாக நாம் பயன்படுத்தாமலும், அப்போஸ்தலனுடைய விளக்கத்தின் வெளிச்சத்தில், அந்தப் பெரிய அப்பத்தின் ஒரு பாகமெனக் கிறிஸ்துவோடுகூடப் பிட்கப்படுவதும், அந்தப் பெரிய பாத்திரத்தின் ஒரு பாகமென அவரது பாடு மற்றும் மரணம் எனும் பாத்திரத்தில் ஐக்கியம்கொள்வதும் நம்முடைய சிலாக்கியத்தின் பாகமாக இருக்கின்றது என்று புரிந்துகொள்கின்றோம். இந்த இரண்டு கண்ணோட்டத்திலிருந்து, முதலாவதாக கடந்துபோகப்பட்டவர்கள் என்ற நிலையிலும், இரண்டாவதாக இனிவரும் காலத்தில் தெய்வீகத் தயவையும், தேவனுடைய புத்திரர்களுக்குரிய சுயாதீனத்தையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் பாவம் மற்றும் சாத்தானுடைய அடிமைத்தனத்திலிருந்து வெளியே வழிநடத்தும் மாபெரும் வேலையில் அவரோடுகூட நாம் பங்கடையத்தக்கதாக, பலியில் அவரோடுகூட இணைந்துகொண்டவர்கள் என்ற நிலையிலும், கர்த்தருடனான நம்முடைய உறவைப் பார்க்கின்றோம். நமக்கு அருளப்பட்டதான சிலாக்கியமானது, எத்துணை பிரமாண்டமாய் உள்ளது! அப்போஸ்தலன் பின்வருமாறு சொல்லியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை …
வானத்திலிருந்து இறங்கிவந்ததும், நமக்காகப் பிட்கப்பட்டதுமான இந்த அப்பத்தைப் புசித்தல் என்பது நாம் வருடந்தோறும் ஒன்றுகூடுகிறதான விசேஷதருணத்திற்குரியது மாத்திரமல்ல. நமது கர்த்தருடைய கட்டளையின் பேரில் வருடந்தோறுமான ஒன்றுகூடுதலானது, அவர் இல்லாத இரவு முழுவதுமான, அவர் தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதான காலை வரையிலுமான நமது அனுபவங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. பண்டிகையை இப்படியான விசேஷித்த விதத்தில் மற்றும் நினைவுகூரும் விதத்தில் வருஷத்திற்கு ஒருமுறை மாத்திரம் நாம் ஆசரிக்காமல், நாளுக்குநாள், ஒவ்வொரு மணி நேரமும் தேவ ஆட்டுக்குட்டியைப் புசிக்க வேண்டும்; விசுவாசத்தினால் அவரது தகுதிகளை, புண்ணியங்களை உணர்ந்து, நமதாக்கிக்கொள்ள வேண்டும்; கிருபையிலும், அறிவிலும், அன்பிலும், ஆவியின் கனிகள் மற்றும் கிருபைகள் அனைத்திலும் வளர்ந்திட வேண்டும். “நீங்கள் இதைச் செய்யும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்பதான ஆண்டவருடைய வார்த்தைகளானது, கட்டளையான விதத்தில் காணப்பட்டது என்பதை நாம் நினைவுகூருகின்றோம். நம்முடைய கர்த்தருடைய மரணத்தை நினைவுகூரும் இந்த வருடாந்தர ஆசரிப்பில், நாம் என்ன செய்கின்றோம் என்பது குறித்து, இனிமேல் நம்முடைய மனங்களில் எவ்வித சந்தேகங்களும் காணப்படாது; கிறிஸ்து நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியென அடிக்கப்பட்டார் என்பதை நாம் உணர்ந்துகொண்டபடியால், நாம் பண்டிகையை ஆசரிக்கின்றோம். ஆண்டுநிறைவு நாளைப்போல், வேறெந்த ஒரு வேளையும் மிகவும் ஏற்றதாய்க் காணப்படாது. அது சூரியக்காலத்தின்படியோ (அ) சந்திரக்காலத்தின்படியோ கணக்கிடப்பட்டாலும் சரி, வாரத்தினுடைய நாட்களுக்கு ஏற்பவோ (அ) மாதத்தினுடைய நாட்களுக்கு ஏற்பவோ கணக்கிடப்பட்டாலும், அது சந்தேகத்திற்கிடமின்றி வருடாந்தரமான ஆசரிப்பேயாகும்; நாம் அதைச் செய்யும் போதெல்லாம், ஒவ்வொரு வருடமும் அதைச் செய்யும்போதெல்லாம், வருடந்தோறும் அதன் ஆண்டுநிறைவு நாளில் அதைச் செய்யும்போதெல்லாம் நாம் நிழலை நினைவுகூர்ந்து ஆசரிக்காமல், மாபெரும் நிஜமாகிய இயேசு எனும் நமது மீட்பரை நினைவுகூர்ந்தே ஆசரிக்கின்றவர்களாய் இருக்கின்றோம்.
வரவிருக்கும் நினைவுகூருதலின் ஆசரிப்பானது அனைவருக்கும் மிகவும் நன்மை மற்றும் நலம் பயக்கின்ற ஒன்றாய்க் காணப்படும் என்று நாம் நம்புகின்றோம். எவரும் இச்சிலாக்கியத்தினைக் கவனிக்கத்தவறாமல் இருப்பதற்கு நாம் வலியுறுத்துகின்றோம் மற்றும் கர்த்தரையும், அவரது பலியினுடைய சுத்திகரிக்கும் வல்லமையையும், நாம் அவரிடத்தில் பண்ணியுள்ளதான அர்ப்பணிப்பையும் குறித்து உணர்ந்த நிலையில் உத்தம இருதய நோக்கத்துடன் பங்கெடுக்கும் அனைவருக்கும், இந்தப் பண்டிகையை ஆசரித்ததின் விளைவாகவும், இந்த யுகத்திற்கும், அடுத்துவரும் யுகத்திற்குமான திட்டம் அனைத்தும் மையம் கொண்டுள்ளதான மாபெரும் மைய உண்மையினை நினைவுகூர்ந்ததின் விளைவாகவும், விசேஷமான ஆசீர்வாதம் கடந்துவரும் என்றும் நாம் உறுதியளிக்கின்றோம்.
இந்த நினைவுகூருதலுக்காக மாநாடுகளில் பல்வேறு கூட்டமான கர்த்தருடைய ஜனங்கள் கூடிடுவதுபோன்று கூடாமல், சிறுசிறு கூட்டத்தினராகக்கூடி ஆசரிப்பது சிறந்தது என்பதை அருமையான நண்பர்கள் நினைவில்கொள்ளும்படி நாம் வலியுறுத்துகின்றோம். கர்த்தரும், அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தனியாகக் கூடினார்கள் மற்றும் இதை ஒவ்வொரு குடும்பமும் தனியாய்க் கூடிக்கொள்ளும் யூதருடைய வழக்கத்தின்படியே செய்தார்கள். ஆகையால் கர்த்தருடைய ஜனங்களுடைய ஒவ்வொரு சிறு கூட்டமும் ஒரு குடும்பமாக, சகோதரக்கூட்டத்தாராகக் காணப்படுகின்றனர். புளிப்பில்லாத அப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லையெனில், சோடா ரொட்டிகளை/பிஸ்கோத்துகளை (Soda Biscuits) எளிதில் பெற்றுக்கொள்ளலாம்; இது புளிப்பற்ற சிறு அப்பமாகும், அதாவது காடிச்சத்து (yeast)/புளிப்புச் சேர்க்காமல் உண்டுப்பண்ணப்பட்ட அப்பமாகும். திராட்சப்பழச்சாறு (grape juice) கிடைக்கவில்லையெனில், உலர்ந்த திராட்சைகளானது, நீருடன் வேகவைக்கப்பட்டு இப்படியாக திராட்சப்பழரசம் (fruit of the vine) தயாரிக்கப்படலாம் அல்லது எவரேனும் விரும்பினால் புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தை (wine) பயன்படுத்திக் கொள்ளலாம். நமது கர்த்தர் எதைப் பயன்படுத்தினார் என்பதை நாம் உறுதிச்செய்வது என்பது கூடாத காரியமாகும். (fermented liquor) புளிப்பேற்றப்பட்டதான பானமானது, மதுபானத்தின் (strong drink) விஷயத்தில் அடங்கி கிடக்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டு, இப்படியாக இதைப் பானம்பண்ணுகிறவர்களுக்கு இது கண்ணியாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, நாம் புளிப்பேற்றப்படாத திராட்சப்பழ ரசத்தையே (unfermented fruit of the vine) நம் சார்பில் பறிந்துரைக்கின்றோம். ஒவ்வொரு சிறுகூட்டத்தாரும் கூடுகையில், எங்குமுள்ள கர்த்தருடைய அருமையான ஜனங்களிலுள்ள மற்றவர்கள் அனைவரையும் ஜெபத்தில் நினைவுகூர்ந்து, மிகவும் ஏற்கத்தக்க விதத்திலும், மிக முழுமையான விதத்திலும் பாடுகள், பலி, மரணம் எனும் அவருடைய பாத்திரத்தில் பங்கெடுப்பதற்கும், அவருடைய சரீரமாகிய ஒரே சபையின், ஒரே ஜீவனின் அங்கத்தினர்களென அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும் நமக்கு உதவுகின்றதான கர்த்தருடைய ஆவியானது, அதிகமதிகமாக நம் அனைவருடைய இருதயங்களில் அருளப் பெறுவதற்கு அவரிடம் வேண்டிக்கொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
தங்களுடைய அர்ப்பணிப்பை ஞானஸ்நானத்தின் வாயிலாக அடையாளப்படுத்த விரும்புகிறவர்களின் சௌகரியத்திற்காக, அலிகெனியிலுள்ள (Allegheny) பைபிள் ஹவுஸ் சேப்பலில் (Bible House Chapel) வைத்து, ஏப்ரல் 8-ஆம் தேதி ஞாயிறன்று, காலை 10 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை நடைப்பெறும். எல்லாவிடங்களிலுமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய (ஒவ்வொரு) சிறுசபைக்கூட்டத்தாரும், ஞானஸ்நானத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திடுவார்கள் என்பதில் ஐயமில்லை மற்றும் மாலையில் நடைப்பெறவிருக்கின்றதான நினைவுகூருதலில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, ஞானஸ்நான ஆராதனைக்கான ஏற்பாட்டினை விரும்புகின்றவர்கள், கூடுமானவரை முன்கூட்டியே இங்குத் தங்களது விருப்பங்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
சிலுவையின் அருகில்
இயேசுவே, சிலுவையின் அருகே என்னை வைத்தருளும்;
அங்கே ஒரு விலையுயர்ந்த நீரூற்று உள்ளதுவே,
குணமாக்கும் ஓடை அனைவருக்கும் இலவசமாகவே
கல்வாரி மலையிலிருந்து பாய்கின்றதே.
சிலுவையினருகே நடுங்கிய ஆத்துமாவை
அன்பும், இரக்கமும் கண்டதுவே. அங்குப்
பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் என்னைச்
சுற்றி அதன் ஒளியை சிதறவிட்டதே.
நதிக்கு அப்பால் இருக்கும் பொன்னான கரையை
நான் நெருங்கும்வரை, சிலுவையினருகே
விழித்திருந்து காத்திருப்பேனே! ஆம், எப்போதும்
நம்பிக்கையுடனும் எதிர்ப்பார்ப்புடனுமே.
சிலுவையை, ஆம் சிலுவையைக் குறித்தே
எப்போதும் மேன்மைப் பாராட்டிடுவேனே.
நதிக்கு அப்பால் இளைப்பாறுதலை அடையும்வரை
எந்தன் ஆன்மா காத்திருக்குமே.
– விடியல் துதிப்பாடல்கள், #135