R3369 – கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3369 (page 155)

கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்

HOW AND WHY CHRIST WAS CRUCIFIED

மாற்கு 15:22-39

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” 1 கொரிந்தியர் 15:3

விக்டர் கிஹோ என்பவர், “வாட்டர்லூ* என்பது, அண்டசராசரத்தினுடைய முறைமையை மாற்றிப்போட்டதாகக் காணப்படுகின்றது” என்று எழுதியுள்ளார். [*வாட்டர்லூ என்பது ஒரு மாபெரும் யுத்தம் நடைப்பெற்ற இடத்தின் பெயர்]. இன்னொருவர் மேற்கூறப்பட்டுள்ள வாக்கியத்தினைத் திருத்தம் செய்து, பின்வருமாறு குறிப்பிடுகின்றார் “கல்வாரி என்பது அண்டசராசரத்தினுடைய முறைமையை மாற்றிப் போட்டதாகக் காணப்படுகின்றது.” நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டதான சம்பவமானது, அனுதாபத்தைத் தூண்டுகிற ஒன்றாய்க் காணப்பட்டு, நம்முடைய ஆத்துமாக்களில் அனுதாபத்தைத் தூண்டுகின்றது மற்றும் நம்முடைய ஆதார வசனத்தினுடைய நோக்கத்தினை நாம் உண்மையாய் உணர்ந்துகொள்ளும் தருணம் முதல், நம்மில் பிரதி அன்பினையும் உருவாக்குகின்றதாய் இருக்கின்றது. இதே அளவுக்கு மற்றவர்களும் கூடக் கொடூரமாய் மரித்துள்ளனர் மற்றும் சிலர் தானாக முன்வந்து, பதட்டமின்றி மரணத்திற்குள் கடந்து சென்றும் உள்ளனர். எனினும் கைதி முற்றிலும் குற்றமற்றவராகவும், மரணத்தண்டனைக்கு முற்றிலும் பாத்திரமற்றவராகவும் காணப்பட்ட முதல் சம்பவம் கர்த்தருடைய மரணத்தின் சம்பவமுமேயாகும்; ஆகையால் இந்த ஒரே சம்பவத்தில் மாத்திரமே, மரிக்கும் காரியம், முற்றும் முழுமையாக தானாய் முன்வந்து மரித்த காரியமாய்க் காணப்பட்டது மற்றும் இவர் ஒருவேளை மரிக்க விருப்பமற்று இருந்தால், இவர் ஒருவர் மாத்திரமே மரிப்பதற்கான அவசியமில்லாமலும் இருந்திருப்பார்.

சிலுவை – சுமத்தலுக்கான உதாரணம்

சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகளைச் சுவிசேஷகர்கள், மிகவும் சிறிய வித்தியாசங்களுடன் விவரித்துள்ளனர் மற்றும் அந்தப் பல்வேறு உண்மையான வாக்கியங்களை நாம் ஒன்றாய்த் தொகுத்துப் பார்த்திடும்போது, முழுச் சம்பவமும் நமக்கு முன் தெளிவாகுகின்றது. யூதர்களுடைய கேடுவிளைவிக்கும் எண்ணங்களையும், கோரிக்கைகளின் கூக்குரல்களுமான கொந்தளிப்புகளையும் எதிர்க்க முடியாத காரணத்தினால், பிலாத்து இயேசுவை மரிக்க ஒப்புக்கொடுப்பதற்குச் சம்மதித்தப் பிற்பாடு, பிலாத்துவாகிய தேசாதிபதியின் அரண்மனையிலிருந்து, நூற்றுக்கு அதிபதி, மூன்று ரோமப் போர்ச்சேவர்களுடன், இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக்கு, அவரைக் கல்வாரிக்குக் கொண்டு சென்றார். வழக்கத்தின்படியே இச்சம்பவத்திலும், கைதியே தமது சொந்த சிலுவையைச் சுமந்து சென்றார் மற்றும் இது சுமப்பதற்குக் கடினமானதாகவே நிச்சயமாய் இருந்திருக்கும். நமது கர்த்தரினால், சிலுவையினுடைய பாரபளுவினைத் தாங்கமுடியாத போது, வழியில் போய்க்கொண்டிருந்த நாட்டுப்புற வாசியாகிய சீமோன், இயேசுவுக்கு உதவிச் செய்யும்படிக்குப் பலவந்தம் பண்ணப்பட்டார். லூக்கா 23:26-என்ற வசனத்தின்படி, சீமோன் முழுமையாகச் சிலுவையைச் சுமந்து செல்லாமல், மாறாக பொதுவாய் இழுத்துச் செல்லப்படும் சிலுவையினுடைய பின்பாகத்தைச் சுமந்ததன் மூலம், சீமோன் இயேசுவுக்கு உதவினவராகவே காணப்பட்டார் என்பதாகத் தெரிகின்றது.

போதகருடைய பாரச்சுமையைக் கண்டு, அவருக்கு உதவிப் புரிந்திடுவதற்கு ஓடிவருவதற்குப் [R3370 : page 155] பதிலாக, பேதுருவும், யோவானும், யாக்கோபும் எங்கே போய்விட்டார்கள்? என்று நாம் எண்ணுவதுண்டு. சிலுவையைச் சுமந்து, போதகருக்கு உதவிப் புரிந்திடுவதற்கெனச் சீமோனுக்குக் கிடைத்த சிலாக்கியத்தின் மீது நமக்கு ஆசையிருக்குமானால், கர்த்தருடைய சகோதர சகோதரிகளில் அநேகர் தினந்தோறும் அடையாளமானச் சிலுவைகளைச் சுமந்துகொண்டிருக்கின்றனர் என்பதையும், அவர்களுக்கு உதவிப் புரிதல் என்பது நமக்கான சிலாக்கியம் என்பதையும், கர்த்தருடைய உண்மையுள்ள பின்னடியார்களுக்குப் பண்ணப்படுகின்ற எந்தச் சேவையையும், அவர் தமக்கே பண்ணப்பட்டதாகக் கருதுவதற்குக் கர்த்தர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதையும் நினைவில்கொள்வோமாக. ஆனால் உதவிக் கரம் நீட்டுவதற்குரிய சிலாக்கியத்தினை எந்தச் சகோதரனும் காணவில்லையெனில், பாரம் சுமப்பவர்கள், இருதயத்தில் சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தர் தேவையை அறிந்தவராக, தேவையான உதவியை அனுப்பி வைப்பார். சில சமயம் வற்புறுத்தலினால், வந்த உதவியாகவும் (இயேசுவின் விஷயத்தில் போர்ச்சேவகர்கள் உதவியளித்தது போன்று) உலகப் பிரகாரமானவர்களுடைய அனுதாபத்தின் காரணமான உதவியாகவும் கூடக் காணப்படலாம். மரத்தினாலான சிலுவையானது, நமது கர்த்தருக்கு மிகவும் பளுவான பாரமாகக் காணப்படாததுபோன்று, உலகத்தாரால் பார்க்க முடியாத சிலுவைகளை அவருடைய பின்னடியார்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்; ஆனால் இதனை “சகோதர சகோதரிகள்” புரிந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றனர். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலாத்தியர் 6:2).

அனுதாபம் கொண்ட யூத ஸ்திரீகள், அருகே அழுதுகொண்டே நடந்துவந்து கொண்டிருந்தார்கள். அநேகமாக இவர்கள் மத்தியில் நமது கர்த்தருடைய தாயாகிய மரியாளும், பெத்தானியாவின் மார்த்தாளும், மரியாளும் மற்றும் மகதலேனா மரியாளும் காணப்பட்டிருக்க வேண்டும். விவரங்கள் நமக்குக் கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த ஸ்திரீகளின் அனுதாபமானது குறிப்பிடத்தக்க விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வியாதியஸ்தர்கள் முதலானவர்களைக் குணமாக்கின விஷயத்தில் கர்த்தருடைய சத்துவம் பயன்படுத்தப்பட்டு, குறைந்துபோனதினால் மாத்திரமல்லாமல், இன்னுமாக அவர் இரா முழுவதும் உணவும், உறக்கமும் மற்றும் மிகவும் கடுமையான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையின் கீழும் காணப்பட்டதின் நிமித்தமாகவும், நமது கர்த்தர் பெலவீனமாயும், வலுவிழந்தவராகவும் இருந்தபோதிலும், அவர் மன அமைதியினால் நிறைந்து காணப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்படுகிற நாளினுடைய ஒன்பதாம் மணி வேளையாக அப்போதிருந்தது மற்றும் அவர் பிலாத்துவின் அரண்மனையிலிருந்து, கல்வாரி வரையிலும், சுமார் முக்கால் மைல் தூரம், தமது சிலுவையினுடைய சுமையினைக் களைப்புடன் சுமந்து வந்துள்ளார். கொல்கொதாவிற்கு அருகாமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களினால் இவ்விடத்திற்கு வழங்கப்பட்டதான இப்பெயரின் அர்த்தமாவது, “கபால” (மண்டை ஓடு) ஸ்தலமாகும்;” ஏனெனில் இவ்விடத்திலுள்ள மலையினுடைய அந்தக் குறிப்பிட்ட சரிவானது, மண்டை ஓட்டினுடைய வடிவத்திலும், நிறத்திலும் காணப்பட்டது; பாறையினுடைய இருள்நிறைந்த பிளவுகளானது, கண் குழிகள் போலும், மூக்குக் குழி முதலியவைகள் போலும் காட்சியளித்தன.

கசப்பு என்று அழைக்கப்படுகின்ற, கசப்பான வெள்ளைப்போளம் கலந்த திராட்சரச பானம் கொடுக்கப்பட்டதான காரியமானது, பொதுவாய் எண்ணிக் கொள்ளப்படுவது போன்று, அவமதிப்பான காரியமாய் இராமல், மாறாக இரக்கம் காட்டும் காரியமாகும். பாடுபடுபவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், வலியினுடைய உணர்வுகளைக் குறைப்பதற்கான நோக்கத்திற்கென்று பெண்கள் கூட்டமானது, வலியைக் குறைக்கும் கசப்பான மருந்துகள் கலந்த, புளிப்பான திராட்சரசத்தை எடுத்துச் சென்றனர் மற்றும் அவல நிலைக்குள்ளான பரிதாபத்திற்குரியவர்கள் அனைவருக்கும், அவர்களது கொடுமையான பாடுகளைக் கொஞ்சமேனும் குறைக்கத்தக்கதாக, இந்த மருந்தை அளிப்பது என்பது வழக்கமாய் இருந்தது. நமது கர்த்தர் ரசத்தை ருசிபார்த்தார் என்பதாக நமக்கு மத்தேயு தெரிவிக்கின்றார்; அது என்னவென்று அறிந்துகொள்வதற்கு (அ) தமக்குக் கொடுக்கப்பட்ட [R3370 : page 156] பானத்தின் வாயிலாகக் காண்பிக்கப்பட்டதான இரக்கத்தினை தாம் உணர்ந்துகொண்டதற்கான அடையாளமாகக் காணப்படத்தக்கதாக, அவர் அநேகமாக ருசிபார்த்திருக்கலாம். பிதாவின் ஞானமும், அன்பும், நீதியும் தமக்காக ஆயத்தம் பண்ணியுள்ளதும் மற்றும் தம்முடைய உண்மைக்கும், கீழ்ப்படிதலுக்குமான பரீட்சையாகக் காணப்படத்தக்கதாக தம்மீது கடந்துவரத்தக்கதாக, பிதா அனுமதித்துள்ளதுமான பாடுகளையும், வலியையும் முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினவராக, கர்த்தர் பானத்தைப் பருகுவதற்கு மறுத்துவிட்டார். சிலுவையில் அறையப்படும் காரியமானது மிகவும் கடுமையான உபத்திரவமாகக் காணப்பட்டிருக்க வேண்டும். சிலுவையானது தரையில் போடப்பட்டிருக்க, அதன் மீது கைதி நீட்டிக் கிடத்தப்பட்டு, ஆணிகளானது கைகளிலும், பாதங்களிலும் அறையப்படுகின்றது; சிலுவையானது முரட்டுத்தனமான மனிதர்களால் தூக்கப்பட்டு, பாறையில் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள குழிக்குள் நிற்கப்பண்ணும் காரியமானது, மிகவும் கடுமையான நேரமாகக் காணப்பட்டது. நமது கர்த்தரினால் அனுபவிக்கப்பட்டதான கொடிதான பாடுகளைக் குறித்த விவரங்களையோ, கருத்துகளையோ சுவிசேஷகர்கள் பதிவு செய்திடாதது சரியான காரியமே மற்றும் அதைக் குறித்த விவரங்களை நாமும் சுவிசேஷகர்கள் போன்று தவிர்த்துவிடுவது ஏற்றக் காரியமாய் இருக்கும்; எனினும் நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கிக் கொண்டவருக்கு, நம்முடைய பாவங்களுக்கான மீட்பின் கிரயத்தை அவர் கொடுக்கையில், அது அவருக்கு எத்தகைய பாடுகளைக் கொண்டுவந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கையில், நமக்கு இருதயம் வலிக்கவே செய்கின்றது. காரியங்களைத் தெளிவாய்க் கிரகித்துக்கொள்கிறவன், கர்த்தருக்காகவும், அவருடைய காரணங்களுக்காகவும் ஏதாகிலும் பாடுபடுவதற்கு மிகவும் விருப்பமுள்ளவனாய் இருந்து, இப்படியாகத் தனக்குத் தேவனுடைய குமாரனால் செய்யப்பட்டதான மாபெரும் காரியங்கள் குறித்த தன்னுடைய உணர்ந்து கொள்ளுதலையும், தனது அன்பையும் பிரதியுபகாரமாகக் காட்டுகின்றவனாய் இருப்பான். “அவரோடுகூடப் பாடுபடுவதற்கு” அனுமதிக்கப்படவில்லை எனில், அதை நாம் இழப்பாகவே கருதிட வேண்டும், ஏனெனில் அவரோடுகூடப் பாடுபடாமல், “அவரோடுகூட நாம் ஆளுகைச் செய்திடுவதற்கு” நம்மால் எதிர்ப்பார்த்திட முடியாது.

இரண்டு தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறின

மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட நபருடைய உடைமைகள், தண்டனையை நிறைவேற்றிட்டப் போர்ச்சேவகர்களுக்கான ஆதாயமாகக் கருதுவது வழக்கமாக இருந்தது மற்றும் இயேசுவின் விஷயத்திலோ அவருடைய வஸ்திரங்களை, அதாவது அவரது மேல் அங்கியை, அவரது தலைப்பாகையை, பாதரட்சைகளை மற்றும் கச்சைகளைப் போர்ச்சேவகர்கள் ஆளுக்கு ஒன்று கிடைக்கத்தக்கதாக, பங்குபோட்டு, யார் எதை எடுக்க வேண்டுமென்று சீட்டினால் முடிவெடுத்தார்கள். மீதியாக கழுத்து முதல், பாதம் வரையுள்ளதும், “தையல் இல்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாய் இருந்ததுமான” அவரது அங்கி (அ) உள் அங்கி காணப்பட்டது. இதை அவர்களால் தங்கள் அனைவருக்கும் கிடைக்கத்தக்கதாகப் பங்குபோட முடியாததினால், “அவரது உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள்” (சங்கீதம் 22:18; யோவான் 19:23,24).

சிலுவையில் அறையப்படுதலானது, யூதருடைய நேரத்தின்படி மூன்றாம் மணி வேளையில் அல்லது நம்முடைய நேரத்தின்படி ஒன்பது மணிக்கு நடைப்பெற்றது. அவருடைய தலைக்கு மேலாக, அவர் மீதான குற்றச்சாட்டானது மூன்று பாஷைகளில் எழுதிப்போடப்பட்டிருந்தது; அதாவது ரோமின் அதிகாரப்பூர்வமான மொழியாகிய இலத்தீனிலும், அக்காலக்கட்டத்தினுடைய உயர்தர இலக்கிய மொழியாகக் காணப்பட்ட கிரேக்கிலும் மற்றும் யூதர்களுடைய மொழியாகிய எபிரெயத்திலும் எழுதிப்போடப்பட்டிருந்தது. இயேசுவைக் குற்றஞ்சாட்டுகையில், அவர் தம்மை, யூதருடைய இராஜா என்று உரிமைப் பாராட்டிக்கொண்டார் என்று பிரதான ஆசாரியர்கள் விசேஷித்த அழுத்தம் கொடுத்துச் சாட்டின குற்றச்சாட்டினுடைய அடிப்படையிலேயே, குற்றச்சாட்டு எழுதிப்போடப்பட்டிருந்தது. பிலாத்து எழுதிப்போட்ட வார்த்தைகளுக்கு, முதன்மைவகித்த யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்றும், அதை மாற்றி எழுதப்படுவதற்குப் பிரயாசம் எடுத்தார்கள் என்றும், “நான் எழுதினது எழுதினதே” என்று பிலாத்துக்கூறி மறுத்துவிட்டார் என்றும் நாம் அறிவோம். “இவர் தன்னை யூதர்களுடைய இராஜா என்று உரிமைப் பாராட்டிக்கொண்ட வஞ்சகர்” என்று எழுதப்படுவதற்கு யூதர்கள் விரும்பினர், ஆனால் தேவ வழிநடத்துதலின்படி, “இயேசு, யூதருடைய இராஜா” என்ற உண்மையான பட்டப்பெயரே, அவருடைய தலைக்கு மேலாக எழுதிப்போடப்பட்டது. இதைக் காட்டிலும் அவர் மேலானவர் என்றும், தேவ வழிநடத்துதலின்படி அவர் உலகத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர் என்றும், அவர் உலகத்தினுடைய இராஜாவாக நிச்சயமாய் இருப்பார் என்றும், அவர் ஏற்கெனவே பரிசுத்தவான்களுடைய இராஜாவாக இருக்கின்றார் என்றும், யூதர்கள் அல்லாத நாம் அறிந்து களிகூருகின்றோம்.

எப்படி அந்த இரண்டு கள்வர்களுக்கும் அதே நேரத்தில் மரணத்தண்டனைக் கொடுக்கப்பட்டது என்பது பற்றின விவரங்கள் பதிவுகளில் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இந்தத் தீர்ப்புப் பெற்றவர்களாக, சில காலம் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்றும், இயேசுவுக்கு மரணத்தண்டனையை நிறைவேற்றும் அதேவேளையில், இவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றிடுவதற்குப் பிரதான ஆசாரியர்கள் யோசனைத் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் நாம் அனுமானிக்கின்றோம். தங்கள் போக்கிலுள்ள அநீதியை மறைப்பதற்கும் மற்றும் நடவடிக்கைகள் அனைத்திலும் நீதி காணப்படுவது போன்று காட்டுவதற்குமான எண்ணம் அவர்களுக்குக் காணப்பட்டிருந்திருக்க வேண்டும் அல்லது சட்டத்தினால் கொடுக்கப்படும் பாதுகாப்பினை இழந்தவர்கள் கூட்டத்தாரில் ஒருவராக இயேசுவை ஆளாக்கி, அவரை இழிவுப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். எப்படியாக இருப்பினும், இது தேவனால் முன் அறியப்பட்டு, தீர்க்கத்தரிசியால் முன்னறிவிக்கப்பட்டிருந்தது; “அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்” (ஏசாயா 53:12).

நாமோ, அவர் தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவர் என்று எண்ணினோம்

சிலுவையின் அருகாமையில் அப்போஸ்தலனாகிய யோவானும், இயேசுவின் தாயும், அவரை அன்புகூர்ந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர்; இவர்கள் அவரது அவமானங்களையும், பாடுகளையும் கண்டபோது, இவர்களது இருதயங்களானது, அனுதாபத்தினால் நொறுங்கினது மற்றும் சம்பவங்களின் அவசியத்தினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் நின்றார்கள். கொல்கொதாவின் வழியில் போக்கும் வரத்தும் எப்போதும் காணப்படுவதினால், பிரயாணிகள் போக்கும் வரத்துமாக இருக்க, அநேகமாக சிலர் விருதாவாகவும் அங்கு நின்றிருந்திருக்க வேண்டும். அநேகமாக இவர்கள் மத்தியில் இயேசுவையும், அவரது அற்புதங்களையும் குறித்து அநேகம் கேள்விப்பட்டவர்களாய் இருந்த அநேகர், இயேசு உரிமைப் பாராட்டிக்கொண்ட விஷயங்கள் போலியானவைகள் என்றும், அவரது அற்புதங்கள், பரிசேயர்களால், பிசாசுகளின் பிரபுவாகிய பெயல்செபுலின் வல்லமையினால் உண்டானவை என்று கூறப்பட்டதுபோலவே, உண்டான வஞ்சனைகள் என்றும் இப்பொழுது நம்பினார்கள். ஒருவேளை கர்த்தர் கூறினதுபோலவே, அவர் தேவனுடைய வல்லமையினாலேயே கிரியைகளைப் புரிந்திருப்பாரானால், அவர் தமது சத்துருக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கமாட்டாரே என்ற கோணத்தில் இவர்கள் யோசித்தார்கள்; ஏனெனில் ஒருவன் தன்னுடைய சிநேகிதனுக்காக தானாய் முன்வந்து ஜீவன் கொடுப்பான் என்ற விஷயம் இவர்களுக்கு ஒருபோதும் உதிக்கவில்லை, இன்னுமாக கர்த்தருடைய மரணத்திற்கான நோக்கம் அல்லது அவசியம் குறித்த காரியங்கள் கொஞ்சமேனும் இவர்களுக்குள் தோன்றவுமில்லை.

இதைப்போன்றதான தவறு, கர்த்தருடைய பின்னடியார்கள் தொடர்புடைய விஷயத்தில், உலகத்தாரால் செய்யப்படுகின்றது. யாருக்குக் கவலைகளும், சோதனைகளும், துன்புறுத்துதல்களும், வறுமையும் காணப்படுகின்றதோ, அவர்கள் தெய்வீகக் கோபத்திற்கு/வெறுப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று உலகத்தார் எண்ணுகின்றனர். ஆகையால்தான் நமது கர்த்தரைக் குறித்து அப்படியாகத் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது மற்றும் அது அவருடைய சபையின், அதாவது அவரது ஒட்டுமொத்த சரீரத்தின் விஷயத்திலும் உண்மையாகவே உள்ளது… “நாமோ, அவர் தேவனால் அடிப்பட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவர் என்று எண்ணினோம்” மற்றும் நாம் அவர் குறித்து வெட்கப்பட்டோம். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இராஜ்யத்தினுடைய கனங்களுக்கு ஆயத்தமாகுவதற்கு அவசியமான அனுபவங்களை, அவர்களுக்கு அனுமதிப்பதின் மூலம், அவர்கள் மீதான தேவனுடைய தயவானது வெளிப்படுகின்றது என்று உலகத்தாரால் புரிந்து கொள்ள முடியாது.

துன்மார்க்கரில் ஒருவனும் உணரான்

நமது கர்த்தர் மரிப்பதற்கு முன்னதான கடைசி சில நாட்களில் பேசிட்டதான வார்த்தைகளானது, சிலரால் நினைவுகூரப்பட்டது. அதுவும் ஒன்றில் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது அல்லது துணிந்து தவறாய்க் குற்றஞ்சாட்டிக் கேலிப்பண்ணப்பட்டது. அவர்களுடைய ஆலயத்தை இடித்துப்போடுவதாக அவர் பேசவில்லை, மாறாக ஆலயத்தை அவர்கள் [R3370 : page 157] இடித்துப்போடுவார்களானால், அது மூன்று நாட்களுக்குள்ளாக (நிஜத்தில்) மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றே அவர் கூறியிருந்தார். ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பது வருடங்களானது மற்றும் நமது கர்த்தருடைய வார்த்தைகளை அவர்கள் டாம்பீகமான பேச்சாகக் கருதினார்கள் மற்றும் சிலுவையிலிருந்து இறங்கிவருவதன் மூலம், அவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவது, அவருக்கு மிகவும் இலகுவானதாய் இருக்கும் என்றார்கள். அவர் இப்படியாகச் செய்யாத காரியமானது, அவர் முன்னமே சொன்னதும், செய்ததுமானவைகள் அனைத்தும் போலி என்பதற்கான ஆதாரம் என்பதாகக் கருதப்பட்டது. உணர்வுகள் மிக்க மனமுடைய நமது கர்த்தருக்கு, இப்படியாகப் போலித்தனம் என்று குற்றஞ்சாட்டுவது, மிகவும் கடுமையான பாரமாக, அவருடைய இருதயத்திற்கு இருந்திருக்க வேண்டுமென்று நம்மால் உணரமுடிகின்றது; எனினும் அவர் அதைப் பொறுமையாய்ச் சகித்தார். ஓ! இயேசு சிலுவையிலிருந்து இறங்கிவராமலும், நம்முடைய பாவங்களிலேயே நம்மை விட்டுவிடாமலும், முழு உலகத்தையும் மீட்காத நிலையிலேயே விட்டுவிடாமலும் இருந்ததற்காக நாம் மிகவும் மகிழ்கின்றோம்!

சிலுவை மட்டும் கைதியை, பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் பின் தொடர்ந்தனர்; அவர் தங்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவலில், முக்கிய அலுவல்களையெல்லாம் அவர்கள் தள்ளிவிட்டுதான், அவரைப் பின்தொடர்ந்து சென்றிருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. அவர்கள் சாதாரண ஜனங்களைக் காட்டிலும் அதிகமாய்க் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களாய் இருந்தனர், எனினும் தங்களது போக்கை நியாயப்படுத்திடுவதற்கு நாடினார்கள். மிகவும் விநோதமாக அவர்கள், “இவர் மற்றவர்களை இரட்சித்தார்” என்பதை ஒப்புக்கொண்டார்கள் மற்றும் இயேசு தம்மைத்தாமே இரட்சித்துக்கொள்ளவில்லை என்ற உண்மையானது, அவர்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது மற்றும் இயேசு தமக்கும், யேகோவா தேவனுக்குமான தொடர்பு பற்றி உரிமைப் பாராட்டிக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் போலி என்பதற்கான தீர்க்கமான ஆதாரமாய் இருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அவருடைய இரத்தப்பழி தங்கள் மீதும், தங்களுடைய பிள்ளைகள் மீதும் காணப்படுவதில் அவர்கள் திருப்தியடைந்தார்கள். பரிதாபத்திற்குரிய மனிதர்கள்! அவர்கள் தங்களையே ஞானியென்று எண்ணிக்கொண்டார்கள், எனினும் இவைகளெல்லாம் சம்பவித்தக் கொஞ்ச நாட்களுக்குப் பிற்பாடு, அப்போஸ்தலனாகிய பேதுரு, இந்தக் காரியங்கள் அனைத்தும் அறியாமையில் செய்யப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்” (அப்போஸ்தலர் 3:17) என்பதாக பேதுருவின் வார்த்தைகள் காணப்படுகின்றது. இவர்களும், பெரும்பான்மையான மனுக்குலமும் பாக்கியசாலிகள், ஏனெனில் நம்முடைய ஆண்டவராம் கர்த்தர் கோபமுள்ளவர் என்று சொல்லப்பட்டுள்ளது போன்று, அவர் கோபம் கொள்ளவில்லை; மாறாக அவர் “நீடிய பொறுமையும், பூரண கிருபையும் (இரக்கமும்)” கொண்டிருந்தார். இதற்கு இசைவாகவே, கர்த்தரைச் சிலுவையில் அறைந்துபோட்டவர்கள், இறுதியில் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்த்து, துக்கிப்பார்கள் என்றும், “கர்த்தர் அவர்கள்மேல் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவார்; அப்பொழுது அவர்கள் புலம்புவார்கள்” என்றுமுள்ள மகிமையான தீர்க்கத்தரிசனம் காணப்படுகின்றது.

அவர் வையப்படும்போது, பதில் வையாமல் இருந்தார்

வையப்பட்டதான சூழ்நிலையின் கீழான நமது கர்த்தருடைய பொறுமையை, அப்போஸ்தலன் நமக்கு மாதிரியாகச் சுட்டிக்காண்பிக்கின்றார். அவர் வையப்படும்போது, பதில் வையாமல் இருந்தார். தம்மைக் துன்புறுத்துபவர்களைக் குத்தும் விதமான அநேகம் உண்மையுள்ள விஷயங்களை வைத்து நமது கர்த்தரால் பதில் கொடுத்திருக்க முடியும். அவரது பொறுமைக்கான இரகசியமானது, [R3371 : page 157] பிலாத்துவினிடத்திலான அவரது வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரம் இராது” எனும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதே கருத்துதான், “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” என்ற வார்த்தைகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோலவே கர்த்தருக்கான நம்முடைய அர்ப்பணமானது எந்தளவுக்கு முற்றும் முழுமையானதாகக் காணப்படுகின்றதோ மற்றும் “நீதிமானுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்” என்பதை நாம் எந்தளவுக்கு உணர்ந்து கொள்கின்றோமோ, அந்தளவுக்கு நாம் பொறுமையுடனும், கோபங்கொள்ளாமலும், வைதலையும், துன்புறுத்துதல்களையும் ஏற்றுக்கொள்ள முடிகிறவர்களாக இருப்போம் (சங்கீதம் 37:23).

இயேசுவோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டவர்களில் ஒருவனும் அவரை வைதான்; ஒருவேளை இருவரும் வைதிருக்கலாம்; ஆனால் ஒருவன் மாத்திரமே அநேகமாக வைதிருக்க வேண்டும்; மற்றவன் கொஞ்சம் நேரம் அமைதியாய்க் காணப்பட்டு, பிற்பாடு இன்னொரு சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோன்று, இயேசுவின் சார்பாகப் பேசினான். மிகவும் பிரகாசமாய் விடிந்த காலை வேளையானது, மிகவும் மந்தாரமானது மற்றும் ஆறாம் மணி நேரம் (மதியம் 12) முதல், ஒன்பதாம் மணி நேரம் (3 மணி) வரையிலும், காணப்பட்ட அந்தகாரம் இயேசு மரித்தபோது நன்கு தெரியும் விதத்தில் காணப்பட்டது.

இயேசுவினுடைய அனுபவங்களுடைய இறுதிக் கட்டத்தில், மாலை 3 மணியளவில், அவர் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; இப்படி அவர் கூப்பிட்டக்காரியமானது, அவரிடத்தில் இன்னும் சத்துவம்/சக்தி இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் சத்தமிட்டார். கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில், அவர் பிதாவுக்குப் பிரியமாய்க் காணப்படுகின்றார் என்ற உறுதியைப் பெற்றுகொண்ட நேரமுதற்கொண்டு, இரவிலும், காலையிலுமான அனுபவங்கள் அனைத்தின் மத்தியிலும், நமது கர்த்தர் மிகவும் சாந்தத்துடனும், மன அமைதியுடனும் காணப்பட்டார். அவருடைய அனுபவங்களினுடைய இறுதிகட்டங்களின் போது, ஏன் இப்படியாக அவருடைய இருதயத்திற்கும் மற்றும் பிதாவுக்கும் இடையில், இவ்வளவு இருளான ஒரு மேகம், ஒரு நிழல் காணப்பட வேண்டும். வேறெந்த நேரங்களிலும் தேவைப்படாத அளவுக்கு, பிதாவுடைய நேசமும் பிரியமுமான குமாரனுக்கு ஆறுதலும், பலமும், பிதாவுடைய அன்பும், தயவும் உள்ளது என்பதான தெளிவான உணர்ந்துகொள்ளுதல் தொடர்ந்து காணப்படுவதும் அவசியமான ஒரு தருணத்தில், இப்படி மேகம் இடையே வருவதற்கு ஏன் பிதா அனுமதித்திட வேண்டும்? இக்கேள்விக்கு, ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார் என்பது குறித்துப் பார்க்கையில், நாம் பதிலளிப்போம்.

இத்தருணத்தில்தான், “தாகமாயிருக்கிறேன்” என்று நமது கர்த்தர் கூறினார் மற்றும் கடற்காளான் புளிப்பான திராட்சரசத்தில் தோய்க்கப்பட்டு ஈசோப்புத் தண்டில் மாட்டி, அவரது உதடுகளினிடத்தில் நீட்டப்பட்டது (யோவான் 19:29). இதை அவர் கொஞ்சம் ஏற்றுக்கொண்டார் இம்மாதிரியான சூழ்நிலைகளில், அவரது காயங்கள், அவரது இரத்தத்தில் கடுமையான ஜூரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மீண்டுமாக இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டார். அவர் என்ன கூறினார் என்பது மாற்குவினால் பதிவுச் செய்யப்படவில்லை. ஆனால் இயேசு, “பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை – என் ஜீவனை ஒப்புவிக்கிறேன்” என்று கூறினதாக லூக்கா பதிவுச் செய்துள்ளார். இது அவர் தேவனிடத்தில் கொண்டிருந்த விசுவாசமானது முழுமையானது என்பதையும், அவருடைய பிரதான எண்ணம் ஜீவனைப் பற்றியதாக இருந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. அவர் தம்முடைய ஜீவனை, பிதாவின் ஏற்பாட்டிற்கு இசைவாக, மிகவும் உண்மையுடனும், மிகவும் பெருந்தன்மையுடனும் ஒப்புக்கொடுத்துள்ளார். அவரை மரணத்திலிருந்து எழுப்புவதாகிய பலனை, பிதா அவருக்கு வாக்களித்திருந்திருக்கின்றார்; அந்த வாக்குத்தத்தத்தில் குமாரன் விசுவாசம் கொண்டிருந்தார் மற்றும் தம்முடைய மரணத்தருவாயில், குமாரன் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

முடிந்தது

நமது கர்த்தருடைய மரணத்தின்போது, பல விஷயங்கள் நடந்ததாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது; சிலுவைக்கு அருகாமையில் காணப்பட்ட நிலப்பகுதியை, பூமியதிர்ச்சியானது அசையப்பண்ணினது மற்றும் எருசலேமிலுள்ள ஆலயத்தில், பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரித்திட்டதான மாபெரும் திரைச்சீலையானது கிழிந்தது; அதுவும் தேய்மானத்தின் காரணமாகக் கிழிவது போன்று கீழிலிருந்து, மேல் கிழியாமல், மாறாக மேலிருந்து, கீழாகக் கிழிந்து, இப்படியாக இக்காரியம் தெய்வீக வல்லமையினுடைய வெளிப்படுத்தல் என்பதைச் சுட்டிக்காட்டினது. இந்தத் திரைச்சீலையானது, அறுபது அடி நீளம் கொண்டதாகவும், முப்பது அடி அகலம் கொண்டதாக, நான்கு அங்குலம் பருமன் கொண்டதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இது “வெண்மை, சிவப்பு மற்றும் இரத்தாம்பரம் நிறங்கள் கொண்ட அருமையான பாபிலோனிய கலைவேலைபாடு கொண்டதென” ஜோசபஸ் அவர்கள் விவரித்துள்ளார். இந்தத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது என்பது, பரலோகத்திற்கும், உலகில் பரலோக நிலைமையில் காணப்படுகிறவர்களுக்கும் இடையில் வழி திறக்கப்படுவதை அடையாளமாய்த் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்து தம்முடைய மாம்சத்தைப் பலிச் செலுத்தினதின் வாயிலாக, திரையின் வழியாய் நமக்குப் புதியதும், ஜீவனுமான மார்க்கத்தை உண்டுபண்ணினார். உண்மை விசுவாசிகளானவர்கள், இப்பொழுது பரிசுத்த ஸ்தலத்திலோ (அ) இரண்டு அறைகளிலுள்ள முதலாம் பாகத்திலோ ஆசாரியர்களாய், இயேசுவின் [R3371 : page 158] அங்கத்தினர்களாகக் காணப்படுபவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இங்குக் குத்துவிளக்கினுடைய வெளிச்சத்தின் மூலமாகவும், பொன் மேஜையிலுள்ள அப்பத்தின் மூலமாகவும், பொன் தூபபீடத்தில் நாம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதான சுகந்த தூபவர்க்கங்கள் மூலமாகவும் நமக்குத் தேவனுடன் ஐக்கியம் காணப்படுகின்றது மற்றும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து நம்மால் விசுவாசத்தினால், திரைக்கு அப்பால் பார்க்க முடிகின்றது; தேவனை அன்புகூருகின்றவர்களுக்கும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும், அதாவது தலையும், சரீரமுமான கிறிஸ்துவுக்கு அவர் வைத்துள்ளதான பரலோக ஆசீர்வாதங்களையாகிலும் கணநேரம் நோக்கமுடிகின்றது.

ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்

அனைவருடைய மனங்களிலும், மற்றும் கர்த்தருடைய பின்னடியார்களென அறிக்கைப் பண்ணிக்கொண்டவர்களில் குற்றம் கண்டுபிடிப்பவர்களுடைய மனங்களிலும் நமது கர்த்தர் கல்வாரியில் பாடுபடுவதும், மரிப்பதும் ஏன் அவசியமாய் இருந்தது? என்ற காரியமானது, கிறிஸ்தவம் தொடர்புடைய விஷயத்தில் மிகவும் புதிரான காரியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. தேவன் இவைகளை அவசியமாக்கியுள்ளபடியால் இவைகள் இன்றியமையாதவைகளாகக் காணப்படும் விதத்தில் தேவன் தம்முடைய திட்டத்தை ஏற்படுத்தி உள்ளபடியால், இவைகள் அவசியமானவைகளாயின என்று நாம் பதிலளிக்கின்றோம். அவரால் இன்னொரு விதத்தில் இரட்சிப்பிற்கான திட்டத்தைத் தீட்டியிருக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை, ஏனெனில் அனைத்துக் காரியங்களுமே அவருடைய கரங்களில்தான் இருந்தது, ஆனால் அவர் சிறந்த திட்டத்தையே தெரிந்தெடுத்துள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையேயாகும். மேற்குறிப்பிடப்பட்டுள்ளக் கேள்விக்குப் பதிலைத் தன்னுடைய சொந்த மனதில் தீர்வுக்காணவோ (அ) மாம்ச மனதினுடைய மனுஷீகக் கோட்பாடுகளின்/தத்துவங்களின் அடிப்படையில் தீர்வுக்காணவோ முயற்சிப்பவன் எவனும், தவறு செய்கிறவனாய் இருப்பான். இக்காரியம் தொடர்புடைய விஷயத்தில், பரத்திலிருந்து வரும் ஞானத்திற்குச் செவிசாய்ப்பதே பாதுகாப்பான மற்றும் சரியான ஒரே போக்காக இருக்கும்.

தேவனுடைய வார்த்தைக்கு நாம் செவிக் கொடுக்கும்போது, அவர் ஆதிமுதல் முடிவுவரை அறிந்தவராய் இருக்கின்றார் என்றும், அவருடைய திட்டமானது, அவரது பண்புகளாகிய ஞானம், நீதி, அன்பு மற்றும் வல்லமை தொடர்புடைய விஷயத்தில், மனிதர்களுக்கு மாத்திரமல்லாமல், தூதர்களுக்கும்கூட, அசுத்தமானவர்களுக்கு மாத்திரமல்லாமல், பரிசுத்தமானவர்களுக்கும்கூடப் படிப்பினைகளாகக் காணப்படத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நாம் புரிந்துகொள்கின்றோம். தெய்வீகத் திட்டமானது முழுமையாய் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, தெய்வீக ஏற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டதான ஞானம், அன்பு, நீதி மற்றும் வல்லமையினுடைய நீளங்களையும், அகலங்களையும், உயரங்களையும் மற்றும் ஆழங்களையும் அனைவரும் காண்பார்கள். தற்காலத்திலோ சொற்பமானவர்கள் மாத்திரமே காணமுடிகின்றவர்களாய் இருக்கின்றனர்; “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங்கீதம் 25:14).

தம்முடைய சொந்தத் தீர்ப்பை, தம்மால் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்த நிலையிலேயே தேவன் பாவத்திற்கான தண்டனையாக மரணத்தை அறிவித்தார்; ஆதாம் பாவம் செய்வார் என்றும், அவரும் அவரது முழுக்குடும்பமும் மரணத்தீர்ப்பின் கீழ்க் காணப்படுவார்கள் என்றும் அறிந்தவராகவே இப்படியான தீர்ப்பைத் தேவன் அறிவித்தார். ஆதாமுக்கும், இக்காரியங்களைப் புரிந்துகொள்ளும் அனைவருக்கும், மனுக்குலத்திற்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதாகவே தோன்றும்; காரணம் முதலாவதாகத் தேவனால் தம்முடைய தீர்ப்பினை இரத்துச் செய்திட முடியாது மற்றும் இரண்டாவதாக இந்தத் தீர்ப்பானது மனிதனிடத்திலிருந்து ஜீவனைப் பிடுங்கிப்போட்டதின் வாயிலாக, அனைத்தையும் பிடுங்கிக் கொண்டதாக இருக்கின்றது. தேவன் தமது நோக்கத்தில் ஒரு பதிலாளை/மாற்றாளைக் கொண்டிருப்பார் என்பது மனிதனுடைய எண்ணத்தில் தோன்றவில்லை; ஒருவேளை அவனுக்கு இப்படியாகத் தோன்றியிருந்தாலும், அவன் தனது சக மனிதர்கள் மத்தியில் நோக்கிப்பார்க்கும் போது, அவனால் ஆதாமுக்குப் பதிலாளாகக் காணப்படுவதற்குப் பாத்திரமான யாரையும் காணமுடியாது; ஏனெனில் விழுகையின் காரணமாக மனிதர்கள் சுதந்தரித்துக் கொண்டவைகளின் விளைவாக, அனைவரும் பாவிகளாகவே இருக்கின்றனர். தேவன் ஆதாமினுடைய விழுந்துபோன சந்ததியை ஏறெடுத்துப் பார்க்கையில், அவர்கள் தங்களுடைய தண்டனையினின்று தப்பித்துக்கொள்வதற்கான வழியை, முயன்று அளிக்குமளவுக்கு, பிரமாணத்தை மீறினவர்களிடத்தில் (மனுக்குலத்திடத்தில்) அவ்வளவுக்கு அனுதாபங்கொள்வார் என்றும் மனிதன் ஒருபோதும் எண்ணிப்பார்த்திருக்கவேமாட்டான். ஆதாமுக்கு ஒரு மாற்றாளைத் தேவன் அருளுவது என்பது, இன்னொரு மனிதனை, அதாவது ஆதாமுக்கு எல்லா விதத்திலும் சரிசமமான ஒரு மனிதனைச் சிருஷ்டிப்பதையோ அல்லது விழுகைக்கு முன்னதாகக் காணப்பட்ட ஆதாமின் சுபாவ நிலைக்கொத்த நிலைக்கு, ஏதோ ஒரு பரிசுத்தமான ஜீவியை மாற்றுவதையோ குறிப்பதாக இருக்கும். சர்வ வல்லமையுள்ள தேவன் இந்தளவுக்குத் தம்முடைய மனித சிருஷ்டிகளினுடைய நலனில் அக்கறைக்கொண்டிருப்பார் என்றும் மனிதன் எண்ணிப்பார்த்திருந்திருக்கவேமாட்டான். இன்னுமாக ஆதாமைப் போன்று இன்னொரு மனிதனைத் தேவன் சிருஷ்டிப்பது என்பது மீறுதலை இருமடங்காக்குவதாக மாத்திரமே இருக்கும் என்றும் மனிதன் சிந்திக்கக்கூடும்; இன்னுமாகத் தேவன் ஏதோ ஒரு மகிமையான ஆவியின் ஜீவியை, மனித நிலைமைகளுக்குள் மாற்றுவது என்பது, நீதிக்கு முரண்பாடானதாக, அதாவது பரிசுத்தமற்ற மற்றும் பாவமுள்ளவர்களுடைய நலனுக்காக, ஒரு பரிசுத்தமுள்ள மற்றும் கீழ்ப்படிதலுள்ளச் சிருஷ்டியைத் தண்டிப்பதாக மனிதனுக்குத் தோன்றக்கூடும்.

ஆனால் இதோ தேவன் ஏற்பாடு பண்ணியுள்ள திட்டத்தில், அவரது ஞானமும், அவரது அன்பும் மற்றும் நீதியும் வெளிப்படுகின்றது. தேவன் ஆதாமுக்கு ஈடுபலியை அருளினதின் வாயிலாக, ஆதாமின் சந்ததிக்கும் அருளினார்; விழுந்துபோன ஆதாமுக்கும், அவரில் ஜீவனை இழந்துபோனவர்களுக்கும் தேவன் ஒரு பரிபூரண மனிதனை மீட்பராக அருளினார், எனினும் தேவன் யாருக்கும் அநீதி செய்யவில்லை. மனிதனுடைய மீட்பராகப்போகிறவர், இந்த வேலையிலுள்ளதான பாடுகள் மற்றும் இழப்புகள் நிமித்தமாக மிகுந்தநன்மையை/ அநுகூலங்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில், தேவன் திட்டத்தை ஏற்பாடு பண்ணினவரானார். ஒருவேளை தேவன் இந்தக் கோரிக்கையினை, பரலோக சேனைகள் அனைவரிடமும் பொதுவாய் வைத்திருப்பாரானால், அநேகர் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிவதற்கும், பிதா தங்களுக்கு எதைத் தருவது சிறந்ததாக இருக்கும் என்று எண்ணி, தரச் சித்தமாய் இருக்கும் எந்த ஆசீர்வாதத்திலும், பலனிலும் நம்பிக்கைக்கொள்வதற்கும் ஆயத்தமாயும், விருப்பமாயும் காணப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை; ஆனால் பிதா அந்த வாய்ப்பினை அனைவருக்கும் பொதுவாய் வைக்கவில்லை; அது ஒருவருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது.

தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்

பரம சேனைகளில் ஒருவராக, பிதாவுடைய ஒரே பேறானவர் காணப்பட்டார்; இவர் ஆதியில் வார்த்தை என்று அழைக்கப்பட்டார் மற்றும் இவர் பிதாவோடு இருந்தார் மற்றும் இவர் தேவனாகவும் (அ) வல்லமையுள்ளவராகவும் இருந்தார் மற்றும் இவர் தேவனால் அனைத்துத் தூதர்களையும், மனிதர்களையும் சிருஷ்டிப்பதில் கருவியாகப் பயன்படுத்தப்பட்டார். இவருக்கே, அனைவரிலும் உன்னதமான இவருக்கே, மாபெரும் பலி ஏறெடுப்பதற்கும், பிதாவின் அன்பின் மீதும், பிதாவின் வல்லமையின் மீதுமான விசுவாசத்திற்கான மாபெரும் பரீட்சைக்கும், அதாவது வேலை முடிவடையும்போது இவரை மகிமைப்படுத்தி, மீண்டும் ஜீவனுக்குள் பிதா கொண்டுவருவார் என்ற விசுவாசத்திற்கான மாபெரும் பரீட்சைக்குமான வாய்ப்புப் பிதாவினால் முதலாவதாக முன்வைக்கப்பட்டது. ஒரே பேறானவர் ஏற்கமுடியாது எனத் தெரிவித்திருக்கலாம் மற்றும் இப்படியாகத் தெரிவித்திருப்பாரானால், அந்த வாய்ப்பானது, அடுத்த நிலையில் கனத்திலும், மகிமையிலும், வல்லமையிலும் தூதர்கள் மத்தியில் காணப்படுபவரிடம் சென்றிருக்கும். ஆனால் ஒரே பேறானவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக மனுக்குலத்திற்காக பிதாவுடன் உடன் வேலையாளாய்க் காணப்படுவதற்கான வாய்ப்பானது ஒரே பேறானவரால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் வேலையைக் கையில் எடுத்தார்; அவர் பரலோகப் பிரகாரங்களைத் துறந்து, பரலோக நிலைமைகளையும், ஆவிக்குரிய சரீரம் முதலானவைகளைத் துறந்தார்; அவர் மரியாளின் கருவுக்குள்ளாக மாற்றப்பட்டார் மற்றும் ஏற்றக்காலத்தில் அவர் மனுஷர்கள் மத்தியில் மனுஷனாக, “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவானார்.”

நியாயப்பிரமாணத்தின்படி, முப்பதாம் வயதாகிய ஏற்ற வயதில், அவர் தம்மை மரணம் பரியந்தமான முழுமையான அர்ப்பணிப்புச் செய்துகொண்டார் மற்றும் இதனை அவர் [R3371 : page 159] ஞானஸ்நானத்தின் மூலம் அடையாளப்படுத்தினார். மூன்றரை வருடங்களாக மரணம் அவருக்குள் நிகழ்ந்துகொண்டேவர, கல்வாரியில் அவர், “முடிந்தது” என்று சத்தமாய்க் கூப்பிட்டார். இப்படியாக மனிதனாகத்தக்கதாக அவர் தம்மை முதலாவதாக மகா பெரிய விதத்தில் தாழ்த்தினதாவது, ஓர் ஆயத்தப்படியாகவே காணப்பட்டது; ஆனால் ஆதாமுக்காகப் பதிலாளாக அவர் தம்மையே பலியாகக் கொடுத்தக் காரியமானது, மூன்றரை வருட காலங்கள் கொண்டதாகவும், சிலுவையில் அவரது மரணத்தின்போது நிறைவடைந்ததாகவும் இருந்தது. இங்கு அவர் உலகத்தை மீட்பது தொடர்புடைய விஷயத்தில், பிதா அவருக்குக் கொடுத்திருந்ததான வேலையை நிறைவேற்றி முடித்தார். அவருடைய ஜீவனானது, ஆதாமுக்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமாக இருந்தது மற்றும் ஆதாமுடைய பெலவீனங்களையும், அவருடைய பூரணமின்மைகளையும் உலகம் சுதந்தரித்துக் கொண்டதன் காரணமாக, உலகம் ஆதாம் மூலமாய் ஜீவனை இழந்துள்ளபடியால், நீதியாகவும், சட்டப்பூர்வமாகவும், உண்மையாகவும் கிறிஸ்துவின் மரணமானது, ஆதாமை மாத்திரம் மீட்டுக்கொள்ளாமல் இன்னுமாக மனுக்குலத்தின் உலகத்தையும் மீட்டுக்கொண்டுள்ளது. ஆதாம் பாவியான காரணத்தினால் அவருக்குத் தேவனுடனான ஐக்கியம் துண்டிக்கப்பட்டப்படியினால், ஆதாமுக்குப் பதிலாளாகிய நமது அருமை மீட்பரும், தாம் மரிப்பதற்கு முன்னதாக, இதுபோன்றதான அனுபவத்தைக் கொஞ்சம் நேரம் அனுபவிக்க வேண்டியவராய் இருந்தார். இது அவருக்கு மிகவும் கடினமான வேளையாய் இருந்தது மற்றும் அவர், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சத்தமாய்க் கூப்பிட்டார்.

ஏற்ற வேளையில் அவர் மரணத்திலிருந்து, ஓர் ஆவியின் ஜீவியாக உயிர்த்தெழுப்பப்பட்ட போது, அவருக்கான பிதாவின் வாக்குறுதி நிறைவேறினது; ஏற்ற வேளையில் அவர் நமக்காக, [R3372 : page 159] அதாவது அவரது பலியினுடைய புண்ணியத்தில் ஒவ்வொரு விசுவாசியும் பங்கடையத்தக்கதாக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படிக்குப் பிரவேசித்தார். இந்த வேலையானது, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது மற்றும் அர்ப்பணம் பண்ணும் விசுவாசிகள் ஒவ்வொருவரும், கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள் மற்றும் அவருக்குள், அவரது சரீரத்தினுடைய அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த விசுவாசிகளானவர்கள், தங்கள் சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுத்து, இப்படியாகக் கிறிஸ்துவினுடைய பாடுகளில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான சிலாக்கியத்தினைப் பெற்றுக்கொள்கின்றவர்களாகுகின்றனர். சீக்கிரத்தில், முழுப் பாவ நிவாரண பலிச் செலுத்துதல்களும் நிறைவடைந்திடும், சீக்கிரம் அது முடிவடைந்துவிடும்; சீக்கிரத்தில் “அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; அவரோடேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம்” என்ற வாக்குத்தத்தமும் நிறைவேறும். இவைகள் நிறைவேறும் காலத்தில் மீட்பின் வேலையானது, பெரியளவில் நடைபெறும். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் கடைசி அங்கத்தினர்கள், அவரோடுகூடப் பாடுபட்டு முடிந்தவுடனே, அவர் விசுவாசிகள் அல்லாத மீதமுள்ள மனுக்குலம் சார்பாக, நீதி – முழுமையாய்ச் சந்திக்கப்பட்டக் காரியங்கள் செயலாக்கத்தில் கொண்டு வரப்படும் மற்றும் உலகத்திற்கு எதிரான தண்டனையானது, சாபமானது, இப்படியாக இரத்துச் செய்யப்படும்; இது விசுவாசத்தின் வாயிலாக அல்ல; இன்னுமாக விசுவாசம் காட்டுகிறவர்களுக்காக மாத்திரமும் அல்ல; மாறாக விசுவாசம் பொருட்படுத்தப்படாமலேயே இரத்துச் செய்யப்படும்.

பலன்கள் – மகிமையான விளைவுகள்

பின்னர் உலகத்தைச் சீர்த்தூக்கும் வேலை ஆரம்பமாகும். அதாவது கல்லறைக்குள் போகாதவர்களையும், கல்லறைக்குள் ஏற்கெனவே சென்றுள்ளவர்களையும் படிப்படியாகவும் சீர்த்தூக்கிவிடும் வேலை ஆரம்பமாகும். சிறையின் கதவுகள் திறக்கப்படும், கைதிகள் அனைவரும் வெளிவருவார்கள்; தீர்க்கத்தரிசி கூறியுள்ளது போன்று, அவர்கள் அனைவரும் பரீட்சைக்கெனக் கடந்துவருவார்கள் (ஏசாயா 61:1). ஆதாமின் முதல் குற்றத்தின் அடிப்படையிலோ, அவர்கள் ஆதாம் மீது வந்த தண்டனையினுடைய தாக்கத்தின் காரணமாக செய்திட்டவைகளின் அடிப்படையிலோ அல்லாமல், மாறாக அவரவருடைய சொந்தப் பொறுப்பேற்குதலின் (கிரியைகளின்) அடிப்படையில் ஜீவனுக்கான ஒரு புதிய பரீட்சையில் காணப்படுவார்கள். ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் என்பது, அவரவர் பெற்றிருக்கும் குணலட்சணம் மற்றும் பலத்தினுடைய அடிப்படையிலேயே ஆகும்; அது ஒரு நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்து, ஒவ்வொரு சுதந்தரிக்கப்பட்ட அபூரணங்களுக்கும், பெலவீனங்களுக்கும் முழுச்சலுகைக் கொடுக்கின்றது மற்றும் உலகத்திடமிருந்து, மனுக்குலத்தால் செலுத்த இயன்றவைகளை மாத்திரமே எதிர்ப்பார்க்கின்றது.

மனுக்குலத்தின் உலகமானது சீர்த்தூக்கப்படுவதும், தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையின் காரணமாக ஏதேனில் தொலைந்துபோன அனைத்தின் விஷயத்திலும் படிப்படியாக பின் திரும்புவதற்கான வாய்ப்பினை ஒவ்வொருவருக்கும் அருளப்பெறுவதும், பரதீசும் திரும்பிக்கொடுக்கப்படுவதுமே விளைவுகளாகக்காணப்படும். இருதயத்தில் கீழ்ப்படிதலுள்ளவர்கள், கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கும், இந்த ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு நித்திய காலமும் தொடர்வதற்கும் பாத்திரவான்களாய்க் கருதப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் வேறான மனம் கொண்டவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டு போவார்கள்.

இப்படியாகப் பார்க்கும்போது, நமது கர்த்தராகிய இயேசுவின் மரணமானது, மனிதன் மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அவசியமாயுள்ளது; நம்முடைய ஆதார வசனமானது குறிப்பிடுவது போன்று, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். நமக்கான மரணத் தண்டனையை இயேசு சந்திப்பதன் வாயிலாக, தேவன் நீதியுள்ளவராகவும், அதேசமயம் இயேசுவில் விசுவாசம் கொள்பவனை நீதிமானாக்குகிறவராகவும் விளங்கும்படிக்கும் மற்றும் அவனை மரணத்தீர்ப்பிலிருந்து விடுதலைப் பண்ணவும் இயேசு மரித்தார். நமது கர்த்தருடைய மரணமானது, இன்னொரு காரணத்திற்கும் அவசியமாய் இருந்தது; அதை அப்போஸ்தலன் விவரிக்கின்றார். அது என்னவெனில் ஆயிரவருட யுகத்தில் உலகத்தை நியாயந்தீர்க்கப்போகிறவர் அக்காலத்தில் பரீட்சையில் காணப்படப்போகும் மனுக்குலத்தின் உலகத்தாரிடம் அனுதாபம்/பரிவிரக்கம் முழுக்கக்கொண்டவராகக் காணப்படுவதும், பாவத்தினாலும், பெலவீனத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு உதவிச் செய்ய முடிகிறவராகவும், உதவ விரும்புகிறவராகவும் காணப்படுவதும், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற அவர் மனுக்குலத்தின் மீது இரக்கம் கொண்டவராகவும் காணப்படுவதும் அவசியமானதாகும். அக்காலத்தில் மகா இராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் காணப்படும் கர்த்தராகிய இயேசு மாத்திரமல்லாமல், சபையுங்கூட, அதாவது இராஜரிக ஆசாரியத்துவத்திலும், நியாயந்தீர்க்கும் விஷயத்திலும் அவருடைய உடன் சுதந்தரர்களாக இருக்கும் சபையுங்கூட, தங்களால் நியாயந்தீர்க்கப்படுகிறவர்களிடம், பரீட்சிக்கப்படுகிறவர்களிடம், தாங்கப்படுகிறவர்களிடம், உதவப்படுகிறவர்களிடம், சீர்த்தூக்கிவிடப்படுகிறவர்களிடம் அனுதாபம்/பரிவிரக்கம் கொண்டிருக்க முடிகின்றவர்களாய்க் காணப்படுவார்கள்.

தேவன் வடிவமைத்துள்ளதான திட்டமானது, ஞானமானதாகவும், கற்பனைச் செய்து பார்க்க முடிந்ததிலேயே சிறந்தாகவும் காணப்படுகின்றது என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் மரணத்தீர்ப்பிலிருந்து மனிதனின் மீட்பை மரணம் மாத்திரமே சாத்தியமாக்குமே ஒழிய, வேறெதுவும் இல்லை என்றும், நாம் புரிந்துகொள்கின்றோம்; இன்னுமாக பிதா கிறிஸ்துவுக்குக் கொடுத்தது போன்றதான இவ்வளவு உயர்வான கனமும், மேன்மையும், பொறுப்பும் ஒப்படைக்கப்படும் விஷயத்தில், இவைகள் ஒப்படைக்கப்படும் அந்நபர் கடுமையானப் பரீட்சைகளைப் பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் வேறெதுவும் தகுதியாய் இராது என்றும் நாம் புரிந்துகொள்கின்றோம். சபையை மகிமையில் கொண்டுவருவதற்கும், அடுத்ததாக உலகத்தைப் பரீட்சைக்குள்ளாக்குவதற்கும் என்று இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களின் வாயிலாகப் பூரணப்படுத்துவதும் பிதாவுக்கு ஏற்றதாய் இருந்தது என்றும், பிதாவுக்கு அடுத்ததாக அண்டசராசரத்தில் பிரதானமானவராய்க் காணப்பட்டவரும், தெய்வீகச் சுபாவத்திலும், மகிமையிலும், கனத்திலும் பங்கடையப் பண்ணுவதன் மூலம், இன்னும் பெரியவராய் ஆக்கிடுவதற்கான பிதாவின் நோக்கத்திற்குரியவருமானவர், சகல சிருஷ்டிகளுக்கும் முன்பாக, பிதாவுக்கான அவரது முழுமையான நேர்மை/உண்மை நிரூபிக்கப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதும் ஏற்றதாய் இருந்தது என்றும் நாம் காண்கின்றோம்; மற்றும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் பாடுபட்டபோது நிரூபித்தார். இதன் விளைவாக, “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:9-11).