R2785 – இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2785 (page 102)

இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை

I FIND NO FAULT IN THIS MAN

லூக்கா 23:13-26

வெளிவேஷமான நியாயவிசாரணையும், போலித்தனமான நீதியைச் செயல்படுத்திய பிற்பாடு, பரிசேயர்களும், வேதபாரகர்களும், பிரதான ஆசாரியர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும், ஊழியர்களும், கூச்சலிட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தாரும் அதிகாலைப்பொழுதில் இயேசுவைப் பிலாத்துவினிடத்திற்கு இழுத்துச் சென்றார்கள் (யோவான் 18:28). ஆனால் அங்குச் சென்ற அவர்கள், முற்றத்திலேயே நின்றுவிட்டார்கள். அநேகமாக இயேசு, விசாரணை அறைக்குள் தனிமையில் அரண்மனையின் காவலாளரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். யூதர்கள் உள்ளே பிரவேசிப்பதைத் தவிர்த்தனர். ஏனெனில், ஒருவேளை அவர்கள் பிரவேசித்தால், அது அவர்களைச் சம்பிரதாய முறைப்படி தீட்டுப்படுத்தி, அன்றைய நாள் இரவில், அன்று ஆரம்பிக்கவிருக்கும் பஸ்கா பண்டிகையை அநுசரிப்பதையும் தடுத்துவிடும் என்பதினாலேயாகும். இது எத்தகைய ஆச்சரியமான கலவையைக் கொண்டுள்ளது. அதாவது அசுத்தம் மற்றும் சுத்தத்தின் கலவையை நமக்குக் காட்டுகின்றது! குறைவான முக்கியத்துவமுடைய காரியங்களிலுள்ள ஒரு சிறு எழுத்திற்கும், ஓர் எழுத்தின் உறுப்பிற்கும் அவர்கள் எவ்வளவு சரியாகச் செயல்படுகின்றனர். ஆனால், தெய்வீக நியாயப்பிரமாணத்தினுடைய உண்மையான சாரமாகிய அன்பு மற்றும் இருதயத்தில் தூய்மை தொடர்பான அனைத்துக் காரியங்களுக்கும் முற்றிலுமாகப் புரிந்துகொள்வதில் எவ்வளவாய்த் தவறிவிட்டனர்! ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நாமோ, இம்மாதிரியாக நீதியின் மீது அன்பு இல்லாமலும், முழுமையாகப் பரிசுத்தமில்லாமலும், கெட்ட இருதயம் உடைய நிலையிலும், வெளித்தோற்றமாக மதரீதியான சடங்காச்சாரங்களை அநுசரிப்பதும், வெளித்தோற்றமாகச் சடங்காச்சாரமான விஷயங்களில் ஜாக்கிரதையும், உண்மையும் காட்டுவதுமான விஷயங்கள் நமக்குள் வளராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவோம். உண்மையைச் சொல்லப்போனால், யூதர்கள் மத்தியில் காணப்பட்ட இந்தப் பிரதான ஆசாரியர்கள் தங்கள் மதத்திற்கடுத்த வெளித்தோற்றமான அநுசரிப்புகளில் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருப்பினும், இவர்கள் தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி பார்க்கும்போது, இருதயத்தில் கொலைப்பாதகம் கொண்டவர்களாக இருந்தனர். நாம் இவர்களைப்போன்று இல்லாமல் இருப்போமாக.

யூதர்கள், தங்கள் இனத்தான் ஒருவனை ரோம தேசாதிபதி முன்பு குற்றம் சாட்டுவது அரிதான காரியமாகும். ரோமர்களிடமிருந்து தங்கள் தப்பிதங்களை மறைத்துக்கொள்வதும், தாங்கள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது முடிந்தளவுக்கு இரக்கம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதுமே இவர்களுடைய வழக்கமாய் இருந்தது. பிலாத்து தங்கள் கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புக்கொண்டு, இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிடுவார் என்றே இஸ்ரயேல் தேசத்தின் இந்தப் பிரதானமான மனுஷர்கள் துணிவுடன்/நம்பிக்கையுடன் எண்ணினார்கள். ஆனால், பிலாத்து (தன் முன் கொண்டுவரப்பட்ட) இவ்வழக்குத்தொடர்பான விவரங்கள் குறித்து விசாரித்தபோது அல்லது ஒரு யூதனை அவனுடைய இனத்தாரின், குறிப்பாக அவன் இனத்தின் தலைவர்களின் கோபத்தினின்று விசேஷமாகப் பாதுகாக்கும் பொருட்டு நியாயம் வழங்க விரும்பினவராக விசாரித்தபோது, அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். “ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியேவந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்குப் பிரதியுத்திரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்” (யோவான் 18:29-31). இவ்வசனப்பகுதியில், பிலாத்துவின் கேள்வியும், யூதர்களின் பதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோம அரசாங்கமானது, மரணத் தண்டனை அளிப்பதற்கான அதிகாரத்தை யூதர்களின் ஆலோசனை சங்கத்தாரிடமிருந்து எடுத்துவிட்டது. மேலும், இயேசுவுக்கு மரணத்தண்டனை அளிக்கப்பட வேண்டுமேயொழிய, வேறு குறைவான தண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதே அவர்களுடைய மனங்களில் காணப்பட்டது.

நியாயத்தை விசாரிக்காமல், பிலாத்து தங்கள் குற்றச்சாட்டிற்கு உடனடியாகச் சம்மதம் அளித்துவிடுவான் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்புத் தோல்வியடைந்தது. ஆகவே, இப்பொழுது வேறுவிதத்தில் அவர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கவேண்டும். அதாவது, ஒரு குற்றச்சாட்டை அவர்கள் உருவாக்க வேண்டும். மேலும், அக்குற்றச்சாட்டானது, ரோம தேசாதிபதியிடம் முறையிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறியதே குற்றம் என்பதின் அடிப்படையில் காணப்பட்ட அவர்களுடைய குற்றச்சாட்டானது, பிலாத்துவின் கணிப்பில் ஒன்றிற்கும் உதவாததாய்க் காணப்படும் என்று அவர்கள் நன்கு அறிந்திருந்ததினால், இயேசுவை அநீதியான விதத்தில் தேவதூஷணம் பேசியவர் என்று குற்றஞ்சாட்டினதற்குப் பிற்பாடு பிலாத்துவின் முன்பு மூன்று புதிய குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். அவை பின்வருமாறு, (1) இயேசு, சமாதானத்தைக் குலைத்துப்போட்ட கலகவாதி, (2) இயேசு, ரோமர்களின் வரி வாங்கும் விஷயத்தில் குறுக்கிட்டவர், (3) இயேசு, தம்மை இராஜா என அறிவித்ததினால் இராயனுக்கு எதிரானவர் என்பவைகளேயாகும்.

அவ்வழக்கின் உண்மை நிலையைப் பிலாத்து உடனடியாகக் கிரகித்துக் கொண்டார். அதாவது, “பிரதான ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவை ஒப்புக்கொடுத்து” (மத்தேயு 27:17), அவரைக் குற்றஞ்சாட்டினார்களே ஒழிய, இராயன் மற்றும் இராயனுடைய அரசாங்கத்தின் மீதான எந்தவிதமான புதிதாய் உதித்த அன்பினால் இவைகளைச் செய்யவில்லை என்று கிரகித்துக்கொண்டார். குற்றஞ்சாட்டும் திரளான கூட்டத்தாரை முற்றத்திலேயே விட்டுவிட்டு பிலாத்து, இயேசு நின்றுகொண்டிருந்த விசாரணை அறைக்குள் சென்று, “நீர் யூதருடைய இராஜாவோ?’ என்று கேள்வி கேட்டார் (யோவான் 18:33). கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ காணப்படாமல், புறஜாதி மனுஷனாகக் காணப்பட்ட பிலாத்துவுக்குக் காரியங்கள் முழுவதும் மிகவும் கேலிக்கூத்தாக இருந்திருக்க வேண்டும். மேலும், பிலாத்துவின் கணிப்பைப் பொறுத்தமட்டில் உலகமெங்கும் காணப்படும் பல்வேறு தேசங்களின் கற்பனைகளுடன்கூடிய நம்பிக்கைகளுடன் மேசியாவைக் குறித்த யூதர்களின் சகல நம்பிக்கைகளும் நகைப்பிற்குரியதாயும்/அர்த்தமற்றதாயும் காணப்பட்டது. பிலாத்து தனக்கு முன்பு நிற்பவர் குறிப்பிடத்தக்கவர்/உயர்வானவர் என்று உணர்ந்துகொண்டார். இன்னுமாக, இயேசுவின் பதில் அதிக தடுமாற்றத்தை உண்டுபண்ணினது. ஏனெனில், இயேசு தம்முடைய இராஜ்யம் தற்காலத்திற்கு உரியதாகவும், தற்கால ஒழுங்குகளை உடையதாகவும் இராமல் எதிர்க்காலத்திற்கு உரியதாகவும், இந்தச் சத்தியம் குறித்த சாட்சி கொடுக்கவே தாம் வந்துள்ளதாகவும் பிலாத்துவிடம் கூறினார். பிலாத்து தன்னால் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனைகளுக்குள் தான் ஆழமாகக் கடந்துசெல்வதை உணர்ந்தவராக சடுதியாக, “சத்தியமானது என்ன?” என்ற கேள்வி கேட்டு சம்பாஷணையை நிறுத்தினார். பதிலை எதிர்பார்க்காததுபோன்று அல்லது பதிலுக்காகக் காத்திராததுபோன்று, “சத்தியமாவது என்ன?” என்று கூறினார். அதாவது, “ஆம், ஆம் நாம் சத்தியம், நீதி, நேர்மை என்பதான வார்த்தைகள் பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றோம். ஆனால், இவைகளை எங்குப் பார்க்க முடிகின்றது? இவைகளின் அர்த்தம் தான் என்ன? எது சரி? (எது சரியல்ல?) என்று யாரால்தான் தீர்மானிக்க முடிகின்றது? நீர் நேர்மையாக இருக்கின்றீரா? அல்லது ரோமின் பிரதிநிதியாக அதிகாரத்தில் இருக்கும் நானாவது நேர்மையாக இருக்கின்றேனா? அல்லது உம்முடைய மரணத்தைக் கோரிக்கொண்டிருக்கும் அந்த யூதர்களாவது நேர்மையாக இருக்கின்றார்களா? எது உண்மை? இது நாம் இன்னும் தொடர்ந்து விவாதிப்பதற்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கின்றது” எனச் சொல்வதுபோன்று இக்கேள்வியைக் கேட்டார்.

பிலாத்து தான் விசாரணைப் பண்ணின, சாந்தமும், தாழ்மையுமுள்ள அம்மனிதனிடமிருந்து ரோம சாம்ராஜ்யத்திற்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்று தன் மனதில் தெளிவாகப் புரிந்துகொண்டார். மேலும், இயேசு நிச்சயமாக ஆட்சிக்கு எதிராக குழப்பம் பண்ணுகிறவரல்ல என்றும், எவ்விதத்திலும் புரட்சியாளர் இல்லையென்றும் பிலாத்து அறிந்துகொண்டார். இன்னுமாக, இயேசு உலகத்திற்கு எவ்விதமான பாதிப்புகளையும் உண்டாக்குபவரல்ல என்றும், தாம் பரலோகத்திலிருந்து வந்தவர் என்பது பற்றியும், அவருடைய இராஜ உரிமை பற்றியதுமான இயேசுவினுடைய போதனைகள் ஒருவேளை ஆதாரமற்றவைகளாகக் காணப்பட்டாலும், இவருடைய இப்போதனைகள் எல்லாம் சமநிலையில் காணப்படாத மனதின் நிலையினால் உண்டானவைகளாய் இருந்தாலும், இயேசு எவ்விதத்திலும் ரோமிற்கு தொல்லை கொடுப்பவர் அல்ல என்றும், பிலாத்து உணர்ந்து கொண்டார். ஆகவே, “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்ற வார்த்தைகளைக் கூறினார் (லூக்கா 23:4). பிலாத்துவின் தீர்மானமே அவருடைய நாட்கள் முதல் இன்றுவரையிலும் உலகத்தில் பல்வேறு மதவேறுபாடுகளுடன் காணப்படும் கனமுடைய [R2785 : page 103] மற்றும் நியாயமான மனதையுடைய சகல நபர்களுடைய தீர்மானமாகவும் காணப்படுகின்றது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும், கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கிக்கொண்டு திரியும் பெயரளவிலான அவருடைய பின்னடியார்களுக்கு எதிராகவே காணப்படுகின்றது. அதாவது, கர்த்தருடைய பின்னடியார்கள் எனத் தங்களை அறிவித்தும், அவரைப் பின்பற்றாமலும், அவருடைய போதனைகளுக்கு எதிராக பல வழிகளுக்குள் கடந்து போனவர்களுக்கு எதிராகவே காணப்படுகின்றது. இத்தகையவர்கள் கர்த்தருடைய புனிதமான நாமத்திற்குக் கனவீனத்தையே கொண்டுவந்துள்ளனர். ஆனால், பிலாத்துவுடன் சேர்ந்து இன்றைய உலகமும், இயேசுவைக் குறித்து, “இந்த மனுஷனிடத்தில் யாதொரு குற்றத்தையும் நாங்கள் காணவில்லை” என்று அறிவிக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், கர்த்தருடைய ஆசீர்வாதமான வாக்கியங்களில் பலவற்றை மேற்கோள் காட்டிட உலகம் விரும்புகின்றது. இன்னுமாக, கர்த்தர் கூறின நீதியின் கோட்பாடுகள் அருமையானவைகள் என அறிவித்துள்ள அநேகர், அவருடைய கோட்பாடுகளின்படி வழிநடத்தப்பட விருப்பமற்றவர்களாய் இருந்தாலும், அவர் கூறின நீதியின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஓர் அரசாங்கம் கட்டியெழுப்பப்பட விருப்பமுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

பிலாத்துவின் தீர்மானத்தினால் யூத மத தலைவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். ஆகவே, குற்றச்சாட்டுகளைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்து, இயேசுவின் போதனைகள் ஜனங்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் காணப்பட்டது என்றும், அவருடைய போதனைகள் கலிலேயாவில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இப்பொழுதோ இயேசு எருசலேமுக்கும்கூட வந்துவிட்டார் என்றும், உள்ள காரியங்களை நிரூபிக்க முயற்சி செய்தனர். உண்மைதான், மத சம்பந்தமான காரியங்களில் கர்த்தருடைய போதனைகள் புரட்சிகரமானவைகள்தான். ஆனால், இயேசு அரசியல் ரீதியிலான கலவரத்தை வளர்த்தக்கூடியவர் எனப் பிலாத்து புரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் முன்வைத்த அரசியல் புரட்சி தொடர்பான குற்றச்சாட்டானது தவறாகும். மேலும், இது கர்த்தருடைய அனைத்துப் பின்னடியார்களும் கவனிக்க வேண்டிய நல்ல கருத்தாகும். அதாவது நாமும், நமது கர்த்தரைப் போன்று உண்மையாய்த் தொழுதுக்கொள்ளுதல், கர்த்தருக்கு இருதய பூர்வமான கீழ்ப்படிதல் முதலிய விஷயங்கள் தொடர்பாக, தேவனுடைய ஜனங்கள் (கிறிஸ்தவர்கள்) மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் பொறுப்பைப் பெற்றிருக்கின்றோம். ஆனால், நமக்கும் நமது கர்த்தர் போன்று அரசியல் புரட்சிகள் தொடர்பான விஷயங்களுடன் எவ்விதமான தொடர்பும் இல்லை. இப்படிப்பட்ட காரியங்கள் (அதாவது, அரசியல் புரட்சிகள்) கர்த்தருக்குரிய நாளிலும், வழியிலும் வருமென நாம் அறிவோம். ஆனால், அவர் எப்படி மாம்சத்திற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் காணப்பட்டாரோ, அதுபோலவே, நாமும் அவ்வாயுதங்கள் கொண்டு யுத்தம் பண்ணுகிறதில்லை. மேலும், அவர் செய்ததுபோன்று நாமும் தேவன் தமக்குரிய வேளையிலும், விதத்திலும் ஸ்தாபிக்கப்போகின்ற இராஜ்யத்திற்காகக் காத்திருக்க வேண்டும். அதாவது, “புறஜாதிகளின் காலங்கள்” நிறைவடைவதற்கு நாம் காத்திருக்கின்றோம். நிறைவடையும்போது, தேவன் ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி மற்றும் [R2786 : page 103] ஏற்பாடுபண்ணியிருந்தபடி இவ்வுலகத்தின் இராஜ்யங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு இடம் விட்டுக்கொடுக்கும். மேலும், தேவனுடைய இராஜ்யமானது, இவ்வுலகத்தின் இராஜ்யங்களை ஒதுக்கித் தள்ளிவிடும். மேலும், இந்த இராஜ்யத்தில்தான் நாம் கர்த்தருடைய கிருபையினால் பங்கடைவோம் என நாம் விசுவாசிக்கின்றோம்.

கலிலேயா என்ற வார்த்தையைக் கேட்டபோது, இயேசுவுக்கு அநீதி செய்யாமலும், அல்லது யூதர்களுடைய அதிகாரிகளின் பகையைத் தேவையின்றி எழுப்பிவிடாமலும் இருப்பதற்கு ஏதுவாக தனது சிக்கலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான யோசனை பிலாத்துவின் மனதில் தோன்றியது. ஆகவே, இவ்வழக்கை அப்போது எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதிடம் ஒப்படைத்துவிடுவதன் மூலம் பிரச்சனை ஓய்ந்துவிடும் என்று அவர் எண்ணினார். இந்த ஏரோதுதான் யோவான்ஸ்நானனை சிரைச்சேதம் பண்ணினவர் ஆவார். மேலும், இயேசுவின் பிறப்பின்போது, குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் குமாரனாகவும் இந்த ஏரோது காணப்பட்டார். மேலும், இந்த ஏரோது இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, இயேசு அநேகமாக மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த யோவான்ஸ்நானனாக இருக்கக்கூடும் என்று யூகம் பண்ணினவராகவும் காணப்பட்டார். “ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு” (லூக்கா 23:8). ஏரோது, இயேசுவிடம் அநேகம் கேள்விகள் கேட்டபோதும், எவ்விதமான பதிலையும் பெற்றுக்கொள்ளவில்லை. நமது கர்த்தர் அங்குத் தம்மைப் பாதுகாப்பதற்காகவோ, தம்முடைய வாதத்தை முன்வைப்பதற்கோ நம்முடைய பாவங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ முயலாமல், முற்றிலும் மாறாகவே காணப்பட்டார். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவரிடத்தில் நிலவின அமைதியானது ஞானமுள்ளதும், மகா மேன்மையுள்ளதுமான ஒருமுறையாகும். கைத்திறனால் வித்தைக்காட்டுபவர்போல் இயேசு செய்து தன்னை மகிழ்ச்சியடையப்பண்ணுவார், அதாவது தனக்கு வேடிக்கைக் காட்டுவார் என ஏரோது எதிர்ப்பார்த்தார். ஆனால், இராஜாவாகிய தனது கேள்விகளும், ஆர்வமும் (இயேசுவினால்) புறக்கணிக்கப்பட்டபோது, அவருக்கு ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், ஏரோதும் அவருடைய அரசபையாரும் கொஞ்சம் வேடிக்கைக்காணத்தக்கதாக இயேசுவின் இராஜரிகம் சம்பந்தமான கொள்கைகளை ஏளனம் செய்வதற்கும், அவரைக் கிண்டலாக வணங்குவதற்கும், அவரை அவமானப்படுத்துவதற்குமான வாய்ப்பு ஏரோதின் போர்ச்சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஏரோது, இயேசுவை நியாயம் விசாரிக்கும்படிக்கு அவரைப் பிலாத்துவிடமே திருப்பி அனுப்பினார்.

நியாயம் வழங்க வேண்டுமெனக் கூக்குரலிட்டுக் கொண்டும், இயேசுவின் மரணத்திற்கு ரோம சட்டப்படி அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் கீழ்த்தர மக்கள் கும்பலும், யூதர்களின் பிரதானமானவர்களும், மீண்டுமாகப் பிலாத்துவின் அரண்மனை முற்றத்திற்கு வந்து நிரம்பினார்கள். பிலாத்துவோ வெளியே வந்து இயேசுவினிடத்தில் எந்தக் குற்றத்தையும் தன்னால் காணமுடியவில்லை என்று அறிவித்தார். இன்னுமாக, இயேசுவுக்கு எதிரான கூக்குரல் மற்றும் கலகத்தினிமித்தமாக இயேசுவை வாரினால் அடிக்கும்படிக்கு ஒப்புக்கொடுக்கின்றார் என்றும், இப்படியாக, தான் இவ்வழக்கை முடிவிற்குக் கொண்டுவருகின்றார் என்றும் பிலாத்து அறிவித்தார். இயேசுவை வாரினால் அடிப்பது என்பது, பிலாத்துவின் சார்பில் இரக்கம் பாராட்டுவதாக இருந்தது. மேலும், இப்படி இயேசுவை அடிப்பதன் மூலம் குற்றம் சுமத்துபவர்களின் இரத்தப்பழி வாங்கும் கூச்சலை திருப்திச் செய்துவிடலாம் எனப் பிலாத்து எதிர்பார்த்தார். ஆனால், இம்முயற்சியானது, பயனற்றதாகிவிட்டது. மேலும், இம்முயற்சியானது நமது கர்த்தருடைய பாடுகளைக் கூட்டுவதாக மாத்திரமே காணப்பட்டது. அவரை சிலுவையில் அறையும்!” என்று மக்கள் கூட்டம் அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டார்கள். பிலாத்துத் தப்பித்துக்கொள்வதற்கென அடுத்து கையாண்டவிதமானது, வருடந்தோறும் இக்காலக்கட்டத்தில் கைதிகளில் ஒருவனை அவர்களுக்காக விடுவிப்பது வழக்கமாய் இருந்தபடியால், இம்முறையில் இயேசுவை விடுவித்து, அவர்களை இரண்டு விதத்தில் திருப்தி செய்யப்போவதாக பிலாத்து அறிவித்தார். இரண்டுவிதம் என்னவெனில், (1) முதலாவதாக இயேசுவைக் குற்றவாளியென்று ஒப்புக்கொள்ள கருதுவதாகும். (2) இரண்டாவதாக குற்றவாளியாகிய அவரை, வருடந்தோறும் கடைப்பிடிக்கும் வழக்கத்தின்படி விடுதலை செய்துவிடுவதாகும். ஆனால், பக்தியுள்ளவர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணிக்கொண்ட அவர்களுடைய இருதயத்தில் கொலைபாதகமே இருந்தது. அவர்களுடைய இருதயங்களில் காணப்பட்ட சுயநலத்தினிமித்தம் அவர்கள் இரக்கத்திற்கும், நீதிக்கும் குருடர்களாய் இருந்தார்கள். காரணம், இயேசுவும் அவருடைய போதனைகளும் ஜனங்கள் மத்தியில் அவர்களுடைய மதிப்பையும், அவர்களுடைய போதனைகளின் மதிப்பையும் குறைத்துப்போட்டதின் அடிப்படையிலேயே இயேசுவுக்கு எதிரான பகைமை அவர்களிடத்தில் உண்டாயிற்று.

இதுவரையிலும் செய்யப்பட்ட ஒவ்வொரு பாவத்திற்கும், ஒவ்வொரு குற்றத்திற்கும் அஸ்திபாரமாக சுயநலம் காணப்படுகின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சுதந்தரித்துக்கொண்டதன் காரணமாக நம்மிடத்தில் காணப்பட்டு, இரகசியமாக வளர்கின்ற இப்பாவத்திற்கு எதிராக விசேஷமாக கர்த்தருடைய ஜனங்களென நாம், நம்மைப் பாதுகாத்துக்கொள்வோமாக. இந்தப் பாவமானது, அழிக்கப்பட வேண்டும். வேருடன் ஒழிக்கப்பட வேண்டும். மேலும், நம்முடைய இருதயங்களையும், ஜீவியங்களையும் ஆளும் சக்தியாக இப்பாவத்திற்குப் பதிலாக, அன்பு நிலைநாட்டப்பட வேண்டும்; அதாவது தீங்கு நினையாத, மேன்மை பாராட்டாத, மற்றவர்களின் நலனையும் தியாகம் செய்து ஆதாயம் தேடிக்கொள்ளாத அன்பை நிலை நாட்ட வேண்டும். மேலும், இந்தப் பரிசேயர்களும், வேதபாரகர்களும், ஆசாரியர்களும் வேண்டுமென்றே அறிந்துகொண்டே துணிகரத்துடன் தேவனுடைய குமாரனைச் சிலுவையில் அறைந்தார்கள் என நாம் எண்ணியும்விடக்கூடாது. அவர்களுக்கு அவ்வளவு தைரியம்கிடையாது! மாறாக, அப்போஸ்தலர் கூறுகிற பிரகாரம் அறியாமையினாலே செய்தார்கள் எனப் பார்க்கின்றோம் (அப்போஸ்தலர் 3:17; 1 கொரிந்தியர் 2:8). மேலும், இதனை நாம் மன்னிக்க முடியாத அறியாமை அல்லது கொஞ்சம் மன்னிக்க முடிகின்ற அறியாமை என்று சொல்லலாம். ஏனெனில், இந்த அறியாமை தவறான அபிப்பிராயம் காரணமாக உண்டானதாகும்; தவறான அபிப்பிராயம் கொள்ளும் இத்தன்மையானது, சுயநலத்தின் விளைவுகளாக/கனிகளாகக் காணப்படுகின்றது.

[R2786 : page 104]

முயற்சிகளும், காரியங்களும் பயனற்றதாய்ப் போகின்றன என உணர்ந்த ஆசாரியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எல்லாவிதமான அழுத்தத்தைப் பிலாத்துவின் மேல் போட வேண்டியிருந்தது. ஆகவேதான் பிலாத்து, ஒருவேளை இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்கவில்லையெனில், பிலாத்து ரோம அதிகாரத்திற்கு எதிராய் உள்ள துரோகிக்கு நண்பனாக உள்ளார் என்றும், பிலாத்துச் சக்கரவர்த்திக்குச் சத்துருவாகிவிட்டார் என்றும், ரோமிலுள்ள இராயனிடத்திற்குச் சென்று பிலாத்துவைக் குறித்துப் புகார் செய்வோமெனத் தெரிவித்தார்கள். இது மிகவும் அபாயகரமான வாதமாகும். இதனை பிலாத்து உணர்ந்து கொண்டார். இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டானது, யூதர்களின் பிரதானமான அதிகாரிகளால் கையெழுத்திட்டு ரோமுக்கு அனுப்பப்படுமாயின், அக்குற்ற பத்திரத்திற்கு நிச்சயமாக மதிப்பு/கவனம் கொடுக்கப்படும் என்றும், ரோமின் அதிகாரிகள் ஏன் யூதர்களின் பிரதான அதிகாரிகளை எதிர்த்தும், புரட்சியைக் கிளப்ப அனுமதித்தும், ஓர் ஏழையான, சாதாரணமான மனுஷனின் ஜீவன் பாதுகாக்கப்பட வேண்டும்? என யோசிப்பார்கள் என்றும் பிலாத்து உணர்ந்து கொண்டார். ஆகவே, யூதர்கள் போக்கிலேயே விட்டுக்கொடுத்து விடுவதுதான் நியாயமான மற்றும் சரியான ஒரே வழியாக இருக்குமெனப் பிலாத்துத் தீர்மானித்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அவர்கள் (யூதர்கள்) தன்னைக் கட்டாயப்படுத்திச் செய்விக்கக்கூறும் இந்த மரணத் தீர்ப்புக்கான கட்டளையில் தனக்கு ஒப்புதல் இல்லை என்பதை அடையாளமாகக் காட்டும் விதத்தில் அவர்களுடைய பார்வைக்கு முன்பாக பிலாத்து தனது கரங்களைக் கழுவினார். “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்” (மத்தேயு 27:24-25).

பிலாத்து ஒரு யூதனாகவோ அல்லது கிறஸ்தவனாகவோ இராமல், புறஜாதி மனுஷனாக இருக்கிறபடியினால், மற்றவர்களைப்போன்று இவரை நாம் குற்றம் சாட்டமுடியாது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆயினும், பிலாத்து நீதியை விரும்பி அதனை வழங்க முயற்சித்து நாடின மனுஷனாவான் என நாம் பாராட்டவே வேண்டும். மேலும், எவ்விதமான அரசியல் செல்வாக்குகள் இல்லாத நபரை உடனடியாக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, (மத) அதிகாரிகளின் புகழ்ச்சியையும், தயவையும் பெற்றுக்கொள்வது சுலபமாக இருந்தபோதிலும், பிலாத்து எதிரிடையான அலைபோன்ற செல்வாக்குகளை எதிர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் எடுத்த பிற்பாடே, அநீதிக்கு இயேசுவைப் பிலாத்து ஒப்புக்கொடுத்த மனுஷனேயாவான் என்று நாம் அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அப்போஸ்தலர்கள், பிலாத்துவையோ அல்லது அரசியல் அதிகாரிகளையோ குறிப்பிடாமல், யூதர்களையும் அவர்களுடைய தலைவர்களையுமே இச்சம்பவங்களுக்கான பொறுப்பாளிகள் என்று தெரிவிப்பதை நாம் கவனிக்க வேண்டும் (அப்போஸ்தலர் 2:23). மேலும், “எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் இவனுடைய இரத்தப்பழி வரட்டும்” என்று யூதர்கள் வேண்டிக்கொண்ட ஜெபம் (தேவனால்) கேட்கப்பட்ட காரியமானது, கடந்த 18 நூற்றாண்டுகளாக வரலாற்றில் நடந்த சம்பவங்களை நாம் பார்க்கையில், தேவனும் இச்சம்பவங்களுக்கு யூதர்களையே பொறுப்பாளிகளாகக் கருதினார் என்பது உறுதியாகின்றது. இந்தக் குற்றம் செய்த நபர்களுக்கு எதிரான தெய்வீகக் கோபத்தின் நிமித்தமாக, இவர்கள் நித்திய நித்திய காலமாக பிசாசுகளால் சித்திரவதை படுத்தப்படுவார்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் எங்குமே குறிப்பிடாததற்குத் தேவனுக்கு நன்றி. மாறாக, அப்போஸ்தலர் தெரிவிக்கின்ற பிரகாரமாக இந்தத் தேசம் மற்றும் ஜனங்கள் மீது வந்த உச்சக்கட்ட உபத்திரவங்கள்/பிரச்சனைகளே இவர்கள் மீது விளங்கின தேவனுடைய கோபமாய்க் காணப்படுகின்றது (1 தெசலோனிக்கேயர் 2:16). சீக்கிரத்தில் இந்தக் கோபம் மாற்றப்படப்போகின்றது. மேலும், “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள்” என்ற வசனங்களின் காரியங்கள் ஆரம்பிக்கும் காலமும் வந்துவிட்டது (ஏசாயா 40:1-2).

இயேசு இப்பொழுது சிலுவையில் அறைவதற்கு ஆயத்தம் பண்ணும்படிக்குப் பிலாத்துவின் சேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்களோ இரக்கமற்ற விதத்திலும், கொடூரமாகவும் நடந்துகொண்டு போதகரின் துன்பமான சூழ்நிலைகளில் புகுந்து விளையாடினார்கள். அவருக்கு இராஜ வஸ்திரம் தரிப்பித்து, முள்ளினால் உண்டுபண்ணின கிரீடத்தைச் சிரசில் வைத்து, அவர் உண்மையில் யார் என்றோ? அவர் எப்படிப் பரிசுத்தமான சீயோன் மலையில் இராஜாவாக வீற்றிருக்கப்போகின்றார் என்றோ, எப்படி அவருடைய செங்கோலுக்கு முன்பாக சகல முழங்கால்களும் மண்டியிடும் என்றோ, எப்படி எல்லா நாவும் அவரை அறிக்கைப் பண்ணும் என்றோ கொஞ்சம் கூட யோசிக்காமல்/நினைத்துப்பார்க்காமல் அவர் தம்மை இராஜா என்று கூறின காரியத்தினிமித்தம் அவரை இகழ்ந்தார்கள். இப்படியெல்லாம் இயேசுவுக்குச் செய்தவர்கள் ஒருநாளில் விழிக்கும்போது – அதாவது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது – மேசியா தமது சத்துருக்களுக்கும் கூட இரக்கம் காட்டுகின்றார் என்றும், தங்களுக்கும் பூமியின் குடிகள் அனைவருக்கும், தேவனையும், அவரது நீதி எதிர்பார்க்கும் காரியங்கள் குறித்த அறிவிற்குள் வருவதற்கும், ஒருவேளை கீழ்ப்படிதல் காட்டினால், நித்தியஜீவன் பெற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பையும் அருளும் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்கான வழியை அவருடைய மரணமானது திறந்துவிட்டது என்றும், உணரும்போதும் – ஆச்சரியம் அடைவார்கள்!

இதற்கிடையில்தான் பிலாத்துவின் மனைவி இயேசுவைக் குறித்து, தான் கண்ட சொப்பனம் பற்றியும், அவரை மரணத் தீர்ப்புக்கு ஒப்புக்கொடுப்பதில் தலையிட வேண்டாம் என்ற புத்திமதியையும் கூற ஆள் அனுப்பினாள். ஆகவே, பிலாத்து மீண்டும் கடைசி முயற்சி எடுக்கும் விதத்தில் இராஜவென ஏளனம் செய்யப்பட்டு, இரத்தாம்பர சிவப்பு வஸ்திரம் தரிப்பித்து, முள்கிரீடம் சூட்டப்பட்டுள்ள இயேசுவை வெளியே கொண்டுவந்து, “இதோ, இந்த மனுஷன்!” என்று கூறி ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தினார். அதாவது, பிலாத்து பின்வரும் காரியங்களைச் சொல்வதுபோன்று அவரின் இந்த வார்த்தைகளும், செயல்பாடுகளும் காணப்பட்டது. அது என்னவெனில்: “உங்கள் இனத்தில் மாத்திரமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்திலேயே சிறந்தவராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் காணப்படும் இந்தக் குற்றமற்ற மனிதனைக் கொன்றுபோடும்படியாகவோ, யூதர்களாகிய நீங்கள் நாடுகின்றீர்கள்? கடைசியாக, ஒருமுறை இம்மனிதனை நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கையில், உங்கள் இருதயமும், மனமும் உருகாதோ? உங்கள் மதத்தின் விஷயங்களையும் சொல்லப்போனால், அனைத்து மதங்களின் விஷயங்களையும் அறியாத ரோமானியனாகிய நானே இம்மனுஷன் மேல் பரிதாபமும், இரக்கமும், நியாயம் வழங்க வேண்டுமென எண்ணுகின்றபோது, பூமியிலேயே மிகுந்த மத நம்பிக்கைகொண்ட ஜனங்கள் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் இவ்வளவு இரக்கமற்ற நிலையில் இருக்க கூடுமோ? இதோ இந்த மனுஷன்! இம்மனுஷன் சிலுவையில் அறையப்பட வேண்டுமென இன்னமும் நீங்கள் வற்புறுத்துவீர்களோ?” உடனே, ஆசாரியர்கள் இயேசு ரோம பேரரசுக்கு சத்துருவாக இருப்பதினிமித்தம் மாத்திரம் சாக வேண்டுமென தாங்கள் கூறாமல், இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று போதித்து யூதர்களால் தேவதூஷணம் பேசினவர் என்று குற்றம் சாட்டப்பட்டபடியாலும், இப்படிப்பட்டவரை அழிக்க வேண்டுமெனத் தேவன் நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டுள்ளபடியாலும், இயேசு சாகவேண்டுமெனக் கூக்குரலிட்டார்கள்.

இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறியிருக்கின்ற விஷயத்தைப் பிலாத்துக் கேட்டமாத்திரத்தில் மிகவும் பயந்து இயேசுவோடு மீண்டும் ஒரு உரையாடல் செய்வதற்கு முயன்றார். ஆனால் இயேசுவின் பதிலோ, “பரத்திலிருந்து உமக்கு அதிகாரம் கொடுக்கப்படாதது வரையிலும் உமக்கு என்மீது அதிகாரம் இல்லை” என்பதாய் இருந்தது. பிலாத்துவினால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. தாம் மரிக்க வேண்டும் என்பது தெய்வீக ஏற்பாடு என இயேசு தாமே அறிவித்து ஒப்புக்கொண்டார். பிலாத்து மரணத்தீர்ப்புக்குக் கையெழுத்திட்டார் (யோவான் 9:4-11).

நமது கர்த்தர் தமக்குச் சம்பவிக்கும் யாவும் பிதாவின் அனுமதியினாலானது என்று கூறின வார்த்தைகளிலிருந்து நமக்கு ஒரு படிப்பினை உள்ளது. அவருடைய சரீர் அங்கங்களாகிய நாமும், தெய்வீகக் கண்காணிப்பின் கீழ்க் காணப்படுகிறதினால் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கையில் நம்முடைய ஜீவியத்தின் சகல விஷயங்களும் நன்மைக்கு ஏதுவாகவே நடத்தப்படும் என்ற நிச்சயம் நமக்கு அருளப்பட்டுள்ளது. இதுவே, இவ்வாழ்க்கையில் பல்வேறு சோதனைக்கிடமான சந்தர்ப்பங்களில் நம்முடைய நம்பிக்கைக்கான அடித்தளமாக இருக்கின்றது. இதுவே, சகல புத்திக்கும் எட்டாத சமாதானத்தை நம்முடைய இருதயங்களை ஆளும்படிக்கு அருளுகின்றது. [R2786 : page 105] மேலும் இதுவே நாம் நம்முடைய சுயத்தைத் தாழ்த்தித் தேவனுடைய சித்தத்திற்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கவும் உதவுகின்றது. மேலும் இதுவே உபத்திரவங்களானது தெய்வீக வழிநடத்துதலின் கீழ்ச் சரியான விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமாயின், அவைகள் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை நமக்குள் உண்டாக்கும் என்ற அறிவினிமித்தம் உபத்திரவங்களில் நாம் சந்தோஷங்கொள்ளவும் உதவுகின்றது (2 கொரிந்தியர் 4:17).