R2469 – மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2469 (page 119)

மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்

THE GREAT HIGH PRIEST ARRAIGNED

யோவான் 18:15-27

“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” யோவான் 1:11

அனைத்துச் சீஷர்களும் தப்பி ஓடிவிட்டார்கள் என்று கூறப்பட்டிருப்பினும், பேதுருவும், யோவானும், சிறிது இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தார்கள் என யோவான் சுட்டிக்காட்டுகின்றார். போதகர் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையானது, அவர்களை தங்களுடைய வீட்டிற்குச் செல்லவிடாமல், போதகருக்கு என்ன சம்பவிக்கின்றது என்று இறுதிவரை அறிந்துக்கொள்ளவும், காணவும் ஏவிற்று. போதகருக்கு எதிராகக் கூறப்படும் அத்தகைய மாபெரும் விநோதமான பேச்சுகளை, காரியங்களை எதிர்த்து அவருக்கு உதவிசெய்ய அவர்கள் பலமற்றவர்களாக இருந்தார்கள். மேலும், உதவி பெற்றுக்கொள்வதற்குப் போதகரே மறுத்துவிட்டதால், அவருக்கு உதவிபுரிய அவர்களுக்குப் பலமும் இல்லாமல் போயிற்று என்றாலும், அவரை இன்னமும் அன்பு செய்வதில் அவர்கள் பலமற்றுப்போகவில்லை. பிரதான ஆசாரியனுடைய அரண்மனையோடு ஏதோ ஒருவிதத்தில் பழக்கப்பட்டிருந்த யோவான், தனக்கு மாத்திரமல்லாமல், பேதுருவுக்கும் சேர்த்து, உள்ளே செல்வதற்கான அனுமதியை உடனடியாகப் பெற்றுக்கொண்டார்.

ஆனால், இந்தத் தயவுகளும், சிலாக்கியங்களும் பேதுருவுக்கு பரீட்சைகளாக மாறி, அவர் கர்த்தரை மறுதலிப்பதற்கு ஏதுவாக நடத்தவும் செய்துவிட்டது. இன்றும் இப்படியாகவே சில கர்த்தருடைய பின்னடியார்களின் விஷயத்திலும் காணப்படுகின்றது. கர்த்தருடைய பின்னடியார்கள் தனியாகவோ அல்லது தாங்கள் கொண்டிருக்கும் அதே விலையேறப்பெற்ற விசுவாசத்தில் உள்ளவர்களோடு இருக்கையில், அவர்கள் கர்த்தரை அறிக்கைப் பண்ணுவதிலும், அவருக்கு ஊழியம் புரிவதிலும் மிகவும் தைரியத்துடனும், துணிவுடனும் காணப்படுவார்கள். ஆனால், ஒருவேளை தற்செயலாக அவர்கள் அரண்மனைகளுக்குள்ளாகவோ (அ) பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாரின் பிரதான ஆசாரியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் காணப்பட நேரிடுகையில், சத்தியம் அறிந்திராத அந்தச் சமுதாயத்தார் மத்தியில் அனுபவித்திருந்த சிலாக்கியங்களிலிருந்து புறம்பாக்கிப் போடப்படுவார்களோ என்று கருதி, போதகரைக் குறித்து வெட்கம் அடைந்தவர்களாக, அவரை அறிக்கைச் செய்ய அச்சம் அடைகின்றனர். பரிதாபத்திற்குரிய பேதுரு பின்வருமாறுக் கூறியிருந்தால் அவருக்கு நலமாயிருக்கும், “ஆம், நான் அவர் சீஷரில் ஒருவன்தான். என்னைப்போன்ற அவருடைய சீஷர்கள் உங்கள் மத்தியில் காணப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்று நான் புரிந்துக்கொள்ளுகிறதினால், நான் வெளியே போய்விடுகின்றேன்.” இப்படி அவர் கூறியிருந்திருப்பாரானால், சகல நீதியான மனுஷர்களுடைய கண்களுக்கு முன்பாகவும், அவருடைய நடத்தை மிகவும் பாராட்டுவதற்கு ஏதுவாகவும், நேர்த்தியானதாகவும் காணப்பட்டிருந்திருக்கும். இன்னுமாக எத்துணை ஆசீர்வாதங்களையும், இது அவருக்குக் கொண்டுவந்திருக்கக்கூடும்!

சரியான முறையைக் கடைபிடிக்கத் தவறின பேதுருவை, அவரது தவறான முறையானது, இன்னும் அதிகம் சோதனைக்குரிய சூழ்நிலைக்கு அவரைப் பிற்பாடுகொண்டு போயிற்று. எப்படியெனில், பேதுரு காதை வெட்டின மனுஷனுடைய உறவினன், அவரை நோக்கி, “நான் உன்னை அவனுடனேகூட தோட்டத்திலே காணவில்லையோ?” (யோவான் 18:26) என்று கேள்வி கேட்டபோது ஏற்பட்டது. சூழ்நிலைகள் பரிதாபத்திற்குரிய பேதுருவுக்கு மிகவும் நெருக்கம் கொடுக்க ஆரம்பித்தது. கேட்கப்பட்ட இக்கேள்வியானது, பிரதான ஆசாரியனின் முற்றத்தில் இருப்பதற்கான கனத்தையும், சிலாக்கியத்தையும், குளிர் காய்வதற்கான நெருப்பையும் விட்டுச்செல்லும் இழப்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பை உடைய கேள்வியாகும். இயேசுவைக் காக்கும்படிக்குப் பட்டயத்தைப் பயன்படுத்தினவன் என்ற தனது அடையாளத்தைக் குறித்ததாக இக்கேள்வி அமைந்தது. மேலுமாக, அதே இடத்தில் ஆண்டவரோடு கூடத் தானும் கைதுச் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுவதற்கான சம்பவங்களைக் கொண்டுவருவதற்கு ஏதுவான கேள்வியாகவும், அக்கேள்வி காணப்பட்டது. தவறுதலாக எடுத்து வைக்கப்பட்ட ஓர் அடியானது, இயல்பாகவே இன்னொரு தவறான அடியை எடுத்து வைக்கவே நடத்துகின்றதாய் இருக்கின்றது. இப்படியாகவே இரண்டாம் முறை கேட்கப்பட்ட கேள்விக்கு, இப்பொழுது இயேசுவின் சார்பாக, தான் உண்மையை அறிக்கைச் செய்துவிட்டால் அது, தான் பொய்யன் என்பதற்கான வெளிப்படையான சாட்சியாக அமைந்து, தன்னைக் கைதுச் செய்துவிடக்கூடிய சூழலாகவும் அமைந்துவிடும். ஆகவே தன்னைக் காக்கும்பொருட்டு, தான் மீண்டும் பொய்ச்சொல்வதோடல்லாமல், மீண்டும் ஆண்டவரை மறுதலிப்பதோடல்லாமல், தன்னைக் குற்றஞ்சாட்ட முற்படுபவர்கள் முன்பாக காரியங்களை மிகவும் உறுதியாய் நிலைப்படுத்தும் வண்ணமாக, தனக்கு இயேசுவைத் தெரியாது என்று கூறவும், சபிக்கவும், சத்தியம் பண்ணவும் முடிவெடுத்தார்.

பாவம் பேதுரு! நமது கர்த்தர் பேதுருவிடம் சாத்தான் அவரை புடமிட விரும்புகின்றான் எனக்கூறின பிரகாரம், பேதுரு இக்கட்டத்தில் மிகவும் கடுமையாகப் புடமிடப்பட்டார். பேதுரு, பெலன் கொண்டு, மனம் வருந்தி, தன்னுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட காரியமானது ஓர் அற்புதம் போன்று தோன்றுகின்றது. பேதுரு இப்படியாக மறுதலிப்பார் என்று கூறினதுடன் கூட, அவருக்காக ஜெபம் பண்ணினதாகவும் அறிவித்திருந்த நமது கர்த்தருடைய ஜெபமானது அதன் பலனைக் கொடுத்தது என நமக்குக் காட்டுகின்றது. ஏனெனில், பேதுரு இப்படியாக மறுதலித்த பிற்பாடு சேவல் கூவினதைக் கேட்டு, “சேவல் கூவுவதற்கு முன்னரே என்னை நீ மூன்று தரம் மறுதலிப்பாய்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தார். வெளிப்படுத்த முடியாத அளவு உணர்வுகளோடு, பேதுரு இப்பொழுது தன் நிமித்தமாக பிரதான ஆசாரியனின் இடத்தைவிட்டு வேகமாக வெளியேறினார். மனங்கசந்து அழுது, கர்த்தருடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி, அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

இதில் நமக்கு ஒரு பாடம் உள்ளது. என்னவெனில், பேதுரு எந்த விஷயத்தில் பெலம் உள்ளவராக இருந்தாரோ, அவ்விஷயத்தில்தான் அவர் வீழ்ச்சியும் அடைந்தார். பேதுரு இயல்பாகவே தைரியமுள்ள மனுஷன்தான். தன் தைரியத்தைக் குறித்துப் பெருமையும் அடித்துக் கொண்டார். [R2469 : page 120] ஆயினும், தைரியம் இல்லாமையினால் வீழ்ச்சியும் அடைந்தார். “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்ற வார்த்தைகள், எவன் ஒருவன் தன்னை பலமுள்ளவன் என்று எண்ணுகின்றானோ, அவன் உண்மையில் பலவீனனாய் இருக்கின்றான் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இதற்கு உதாரணமாக, பேதுருவின் விஷயம் காணப்படுகின்றது (2 கொரிந்தியர் 12:10). நமக்கு ஒரு தந்திரமான சத்துரு இருக்கின்றான் என உணர்ந்து/நினைவில் கொண்டு, நம்மிடம் இன்னின்ன பலமுள்ள தன்மைகள் காணப்படுகின்றன என்பதான நம்முடைய அனுமானங்களிலிருந்து விசேஷமாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் அனைவரும் கற்றுக்கொள்வோமாக. எந்த விஷயத்திலும் நம்மிடம் காணப்படும் நம்முடைய பலவீனங்களை, குறைகளை நாம் உணர்ந்துக்கொண்டு, ஒவ்வொரு விஷயத்தையும் விழிப்பாய்க் கவனித்து, நமக்கு உதவி செய்யும், நம்முடைய மாபெரும் இரட்சிப்பின் அதிபதியைச் சார்ந்து நிற்கிறவர்களாகக் காணப்பட வேண்டும்.

யோவான், சம்பவத்தின் சகல அம்சங்களையும் பதிவு செய்யவில்லை. பேதுரு சபித்ததையும், சத்தியம் பண்ணுவதையும் குறிப்பிடுவதை அவர் தவிர்த்துவிட்டார். பேதுருவை பற்றிக் கர்த்தர் கூறின அக்காரியமானது நிறைவேறிவிட்டது என்று கண்டிப்பாகக் காட்ட வேண்டிய அவசியமில்லாத, அச்சம்பவங்களை, சகோதரனாகிய பேதுருவின் மீதான அன்பினிமித்தம் பதிவு செய்யாமல் விட்டுவிட யோவான் ஏவப்பட்டார். பேதுரு சபித்ததையும், சத்தியம் பண்ணினதையும் குறித்த விஷயங்களை மாற்கு, பதிவு செய்கின்றார். மாற்கு எழுதின சுவிசேஷமானது, பேதுருவினால் சொல்லப்பட, அது மாற்கினால் எழுதப்பட்டது என்று எண்ணப்படுகின்றது (மாற்கு 14:66-72).

இயேசு, பிரதான ஆசாரியனால் விசாரணை செய்யப்பட்டார். மேலும், அக்கூட்டத்தார் தீமையையும், கொலை பாதகத்தையும் இருதயத்தில் கொண்டிருந்தாலும், நீதிமுறையை வெளித்தோற்றத்திற்காகிலும் கைக்கொள்ள வேண்டும் எனக் கட்டுண்டவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால், ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர்கள் மத்தியில் காணப்பட்ட பிரதான ஆசாரியனும், அவனோடு கைக்கோர்த்துள்ளவர்களும், இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்கள் என்று பல பதிவுகள் நமக்குக் காட்டுகின்றது. காரணம், ஜனங்கள் மத்தியில் இயேசுவுக்குக் காணப்பட்ட செல்வாக்கானது, அவர்களுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. அதாவது, இயேசுவினுடைய போதனைகள், அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றதாகவும், அவர்களின் மாய்மாலம், மதவெறி மற்றும் வஞ்சனைகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றதாகவும் காணப்பட்டது. பிரதான ஆசாரியனின் கேள்விகளுக்கு நமது கர்த்தர் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். அதேசமயம் அவர் எந்தக் குறிப்பிட்ட விரிவான விளக்கங்களும் கொடுக்க மறுத்தும் விட்டார். மேலும், அவர் தாம் போதித்தவைகளை, சுட்டி மாத்திரமே காட்டினார். இவ்விதமாக ஒரு யூதனாக அவருக்கு இருந்த உரிமையின் மீதே, அவர்களது கவனத்தைத் திருப்பினார். கர்த்தருடைய பதில் சரியானதும், நியாயமானதுமாக இருக்கின்றது. அவர் நியாயமான காரணம் இல்லாமல் கைதுச் செய்யப்பட்டார். மேலும், நீதிபதியோ இப்பொழுது ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும்படிக்கு அவரிடத்தில் தேடுகின்றான். கைதுச் செய்யப்படுவதற்கு முன்பு, கைதுச் செய்யப்படுவதற்கான காரணங்கள் ஏதாகிலும் காட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மாத்திரமே ! நமது கர்த்தர் சுட்டிக்காட்டினார்.

இயேசுவைத் தன்னுடைய கைகளினால் அறைந்து, பிரதான ஆசாரியனுக்கு இப்படியா தகாத வார்த்தைகளைக் கொண்டு உத்தரவு கொடுப்பது என்று இயேசுவைக் கடிந்துக்கொண்ட சேவகன், இவ்விஷயத்தில் வேண்டுமென்றே அநீதியாக நடந்துக்கொண்டான் என்று நாம் எண்ண வேண்டியதில்லை. மாறாக, பிரதான ஆசாரியனின் ஸ்தானம் மற்றும் நியாயத்தீர்ப்பை, தான் வைராக்கியத்துடன் ஆதரிக்கின்றேன் என்று தன்னைக் காண்பிக்க வேண்டும் என்ற விருப்பமே, அவனிடத்தில் தாக்கம் கொண்டு, விழுந்துபோன மனுஷனாகிய அவனுடைய சரியற்ற மனதின் மீதும் தாக்கம் கொண்டு, பொல்லாப்பு இல்லாதவற்றில், பொல்லாப்பு/தீமை இருப்பது போன்று கற்பனை செய்து கொள்ளும்படி அவனை ஏவிற்று என்றே நாம் எண்ணுகின்றோம். இச்சூழ்நிலையானது, மலைப் பிரசங்கத்தின்போது, “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு,” என்று நமது கர்த்தர் பேசின வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கின்றது (மத்தேயு 5:39). சொல்லர்த்தமாக நமது கர்த்தர் தம்முடைய மறு கன்னத்தை அடிக்கிறவனிடத்தில் திருப்பிக்காட்டி, இக்கன்னத்திலும் அடி என்று கூறவுமில்லை. தாம், கன்னத்தில் அறையப்பட்டதை அமைதலுடன் ஏற்றுக்கொள்ளவுமில்லை. [R2470 : page 120] தாம் பேசினது தவறல்ல என்ற விஷயத்தை திருத்தம் செய்துகொள்வதற்கு ஏற்ற முயற்சியாகிலும் எடுக்கப்படாதது வரையிலும், அவர் தம்முடைய நன்னடத்தையும், சரியான வார்த்தையும், தவறாய்ப் பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளவுமில்லை/விரும்பிக்கொள்ளவுமில்லை. ஆகவேதான், தம்மை அடித்தவனிடம், தாம் எவ்விதத்தில் தகாததாய்ப் பேசினேன் என்று காட்டும்படிக் கேட்டுக்கொண்டார். மேலும், ஒருவேளை அவனால் தகாததைச் சுட்டிக்காட்ட முடியவில்லையெனில், தன்னால் சுட்டிக்காட்ட முடியாத தகாததற்காக அநீதியுடன் அடித்ததற்கான தன்னுடைய தவறை அவன் ஒப்புக்கொள்ள வேண்டும் என யோசனைக்கூறினார்.

இந்த உதாரணத்தின் வெளிச்சத்தில் மறு கன்னத்தைக் காண்பித்துக்கொடு என்ற கட்டளைக்கான அர்த்தம் என்னவெனில், கர்த்தருடைய ஜனங்கள் தீமையைத் தீமையினால் எதிர்க்கக்கூடாது என்பதும், மாறாக, தீமைக்குப் பதிலாக தீமை செய்வதைக் காட்டிலும், அவர்கள் அதிகமான தீமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். அதேசமயம் அவர்கள் தீமையை, நன்மையினால் எதிர்க்க வேண்டும். போதகர் செய்தது போன்று, தீமை செய்தவர்களுக்கு நட்பு முறையில் அறிவுரை கூற வேண்டும். அதாவது, வாக்குவாதம் வரும் காரியங்களில் தீமை செய்பவர்கள், சரி எது, தவறு எது என்று காணத்தக்கதாக, அன்புடனும், நிதானத்துடனும் முயற்சி செய்ய வேண்டும் என்று கர்த்தருடைய ஜனங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனும், அன்னாவின் மருமகனாகிய காய்பாவிற்கு முன்பாக, யூதர்களால் நமது கர்த்தர் விசாரணை செய்யப்பட்டார். இதே காய்பாதான், ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவராகவும் காணப்பட்டார், “ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கத்தரிசனமாய்ச் சொன்னான்” (யோவான் 11:50-53).

மாபெரும் சத்தியங்கள் எப்படி, இரண்டு எதிரெதிரான கண்ணோட்டங்களில் பார்க்கப்படக்கூடும் என்பதற்கான உதாரணமாக மேற்கூறப்பட்ட வசனங்கள் விளங்குகின்றது. காய்பாவின் தீர்க்கத்தரிசனம் மிகவும் உண்மையே. மேலும், இத்தீர்க்கத்தரிசினம் கர்த்தருடைய வார்த்தைகள் அறிவித்த சகல விஷயங்களுக்கும் மிகவும் இசைவாகக் காணப்படுகின்றது. இத்தீர்க்கதரிசனமானது, தேவன் எப்போதும் பயன்படுத்துவதில் பழக்கமுடைய கருவிகளில் (ஆசாரிய ஊழியன் ஸ்தானம்) ஒன்றின் மூலமாகவே அனுப்பப்பட்டது. ஆனால், அந்த ஸ்தானத்தில் காணப்பட்ட மனுஷனோ, தேவனுக்கு இருதய அளவில் இசைவில்லாதவனும், தெய்வீகத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு இசைவில்லாதவனும், பொல்லாத செய்கையைத் தூண்டினவனாகவும், அச்செய்கைக்குக் கூட்டாளியாகவும் காணப்பட்டான். இப்படி இருப்பினும் இவைகள் அனைத்தும் தெய்வீக ஏற்பாடு மற்றும் முன்னறிவிற்கு இசைவாகவே நடந்துக் கொண்டிருந்தது.

தெய்வீகச் சத்தியத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்புடைய விஷயங்களில் இங்குச் சகல கர்த்தருடைய ஜனங்களுக்கும் ஒரு படிப்பினை காணப்படுகின்றது. நாம் சில குறிப்பிட்ட விஷயங்களை அறிந்திருப்பது மாத்திரம் போதாது, நாம் கர்த்தருக்கு இருதய அளவிலும் இசைவுள்ளவர்களாகவும் காணப்பட வேண்டும். இல்லையெனில், நாம் காய்பா போன்று காணப்படுவோம். அதாவது, கர்த்தருடைய திட்டம் நிறைவேற உதவியாய் இருப்போம். ஆனால், தெய்வீகத் திட்டத்தின் நிறைவேறுதலில் இன்னமும் செயலாற்றுகிறவர்களாய் இருப்பினும், நம்மையும், மற்றவர்களையும் கூடச் சாபத்திற்குள்ளாக்குவதற்கு ஏதுவாக தவறான நிலையில் காணப்படுகிறவர்களாகிவிடுவோம். வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருப்பவர்களும், சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களும், இன்னும் அதிகமதிகமாய் வெளிச்சத்திலும், ஆண்டவரின் அடிச்சுவட்டிலும் நடப்பதற்கு நாடி, யூதாஸ், பேதுரு மற்றும் காய்பாவின் விஷயங்களில் விளங்கும் தீமையின் உதாரணங்கள் என நாம் கண்டவைகளைக் கவனமாக தவிர்த்துவிடவேண்டும்.

யூதர்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட விசாரணை, மூன்று பாகங்களை உடையதாய் இருந்தது, அவை பின்வருமாறு:

(1) (மத) சட்டப்படி பிரதான ஆசாரியனாக இருந்த அன்னாவுக்கு முன்பாக நடத்தப்பட்ட விசாரணையானது, முற்றிலும் அதிகாரப் பூர்வமற்றதாகும். இவன் இயேசுவைக் கட்டுண்டவராக, ரோமர்களின் அதிகாரத்தின்படியான பிரதான ஆசாரியனாகியவனும், ஆலோசனை சங்கத்தின் [R2470 : page 121] தலைவனுமாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்புவித்தான். இந்தக் காய்பாவினுடைய விசாரணை அறையானது அநேகமாக அதே அரண்மனையில், பேதுரு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்த நடைபாதையின் குறுக்கே காணப்பட்டிருந்திருக்க வேண்டும்.

(2) காய்பாவிற்கு முன்பு நடந்த தொடக்க விசாரணையானது, வெள்ளிக்கிழமை காலை அன்று இரண்டு அல்லது மூன்று மணிக்குள்ளாக நடந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்படுகின்றது. ஏனெனில், யூதருடைய விசாரணை மன்றம் (அ) ஆலோசனை சங்கத்தாரின் அங்கங்கள், இயேசு கைதுச் செய்யப்பட்டவுடனே, செய்தி அனுப்பப்பட்டு வரவழைக்கப்பட்டனர். விடியும் வேளையில், ஐந்து மணியளவு நடத்தப்படப்போகும் சம்பிரதாயப்படியான கூட்டத்தில், இயேசு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் என்று கூறத்தக்கதாக எக்குற்றங்களைச் சொல்ல வேண்டும் எனத் தொகுப்பதற்கும், முடிவெடுப்பதற்கும், அவரை விசாரிப்பதற்குமே இந்தத் தொடக்க விசாரணை நடத்தப்பட்டது. யூதர்களின் பிரமாணம்/சட்டப்படி, இரவில் விசாரணை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது (லூக்கா 22:66-71).

(3) விடியலில் ஆலோசனை சங்கத்தார் முன்பு நடத்தப்பட்ட, சம்பிரதாயப்படியான விசாரணையானது வெறும் ஓர் ஆச்சாரம் (அ) நாடகமேயாகும். இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற தீர்மானமானது, அவரைக் கைதுச் செய்வதற்கு வெகுகாலம் முன்னதாகவே அவர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்க, இரண்டு காரணங்களினிமித்தமாக காரியங்கள் துரிதமாக்கப்பட்டது. (a) தங்களால் தொகுக்க மாத்திரமே முடிந்திருந்த பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, இயேசுவுக்காக பொது ஜனங்கள் போராடுவார்கள் என்று பெரிய ஸ்தானங்களில் காணப்பட்ட யூதர்கள் அஞ்சினார்கள். (b) பஸ்கா அண்மையில் இருப்பதினால், அதற்கு முன்னதாக அவர் கொல்லப்பட வேண்டுமென்று விரும்பினார்கள். ஆ! அவர்களுடைய இருதயத்தின் பொல்லாத விருப்பங்களை, அவர்கள் செயல்படுத்த தேவன் அனுமதித்துள்ளார் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. மேலும், இவ்விதமாக (பஸ்கா) நிழல்களும், தீர்க்கத்தரிசனங்களும் அந்நாளில் நிறைவேறினது.

இதிலும், தேவனுடைய ஜனங்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது. அதென்னவெனில், நாம் நீதியை ஆச்சாரமாக கடைப்பிடிப்பது போதாது. இன்னுமாக தெய்வீகத் திட்டத்தைத் தந்திரமாக வெல்ல முடியாது (அ) அதன் நிறைவேறுதலைத் தடை பண்ணவும் முடியாது என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வது மாத்திரம் போதாது. பழிவாங்குதலின் நாளிலும், அனைத்தும் வெளியரங்கமாக்கப்படும் நாளிலும்தான், அநேகர் தாங்கள் கனமோ (அ) இலாபமோ இல்லாமல் தேவனுடைய நோக்கங்களுக்காகப் பணி புரிந்துள்ளனர் என்று உணர்ந்துக்கொள்வார்கள். அதாவது, அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, குற்றவாளி எனத் தீர்க்கப்படும் வழிமுறையில் தாங்கள் தேவ நோக்கங்களுக்காக பணி புரிந்துள்ளனர் என்று உணர்ந்துக் கொள்வார்கள். மாபெரும் எதிராளியான சாத்தானுங்கூட தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் எதிராக தன்னால் பண்ணப்பட்ட விஷயங்களானது, தெய்வீக ஞானம் மற்றும் தெய்வீக வல்லமை மற்றும், “மனுஷனுடைய கோபம் தமது மகிமையை விளங்கப்பண்ணும்” படிக்குச் செய்பவர்மூலம் நன்மைக்கு ஏதுவாக மாற்றப்பட்டது என்று இறுதியில் காண்பான். (சங்கீதம் 76:10). ஆயினும், இதனால் அவனுக்கு எவ்வித பாராட்டோ, ஆசீர்வாதமோ வருவதில்லை.

நீதியின் விஷயத்தை ஆச்சாரமாகக் கடைபிடிப்பதை விட, நாம் அதிகமாய்ச் செய்ய வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். நம்மிடத்தில் நீதியின் ஆவி, அதாவது, நீதியின் மீது அன்பு காணப்பட வேண்டும். அதாவது, தேவனுடைய சித்தம் எது என்று அறிந்து, அதைச் செய்வதற்கான உண்மையான வாஞ்சை காணப்பட வேண்டும். இல்லையேல், யூதர்கள் நீதியுள்ளவரைக் குற்றவாளி எனத் தீர்த்துக் கொலைசெய்து போட்டதுபோன்று, நாமும் நீதியின் ஆச்சாரமான கடைப்பிடிப்புகளினால், அவருடைய “சகோதரரை” குற்றம் தீர்த்து, காயப்படுத்துகிறவர்களாக இருப்போம். தேவன் பேரிலும், நீதியின் பேரிலும் அன்பு கொண்டிருப்பது என்பது, கர்த்தருக்கு இருதயம் முழுமையாய் அர்ப்பணம் பண்ணப்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. “நல்லது, உத்தமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று ஆண்டவர் கூறுவதைக் கேட்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடி அவருடைய சித்தத்திற்கு முழுமையாய்ச் சுயத்தை அர்ப்பணிப்பது, கர்த்தருக்கு முழுமையாய்த் தத்தம் செய்வதே சரியானதும், பாதுகாப்பானதுமான வழியாக இருக்கின்றது (மத்தேயு 25:23).

காலை மூன்று மணி அளவில், நடந்த விசாரணைக்கும், நமது கர்த்தருக்கு எதிரான செல்வாக்கு மிக்க சத்துருக்கள் காலை ஐந்து மணி அளவில் நடந்திட்ட சம்பிரதாய முறையிலான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் கூட்டத்திற்கும் இடையிலேயுள்ள நேரத்தில்தான், மூன்று சுவிசேஷகர்களால் பதிவு செய்யப்பட்டபடி, அவர் இரண்டு மணி நேரமளவும் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டார் (மத்தேயு 26:67,68; மாற்கு 14:65; லூக்கா 22:63-65). கீழான/தாழ்வான மனமுடையவர்கள் தங்களைக் காட்டிலும் பிரதானமானவர்களை, அவர்களின் இக்கட்டான நேரங்களில் கேலி செய்து மகிழ்ச்சிக் கொள்வார்கள் என்ற உண்மைக்கு உதாரணமாக, “சேவகர்கள் இக்கேலி வேலைகளைச் செய்தார்கள்” என்பது அமைகின்றது. இந்தச் சேவகர்களும், தங்களுடைய எஜமான்களாகக் காணப்படும், பிரதான ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர்களின் அதே சிந்தையை/ஆவியை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இவர்கள் முரட்டுத்தன்மையும், மடமையானவர்களாகவும் (அறிவில்லாமல்) காணப்பட்டப்படியினால் இவர்களுடைய செயல்பாடுகள், முறைகள் கொடூரமாகக் காணப்பட்டது. மாறாக, கிறிஸ்துவின் ஆவியாகிய அன்பின் ஆவியானது, கல்வியறிவு உடையவர்களிடத்திலோ (அ) அறிவில்லாதவர்களிடத்திலோ காணப்படும்போது, அது அன்பின் ஆவியாகவும், சாந்தம், அனுதாபம் மற்றும் இரக்கத்தின் ஆவியாகவே காணப்படுகின்றது. அவர்களுடைய கனிகளினால், அவர்களுடைய ஆவி இன்னது என்று அறியப்படும். “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோமர் 8:9).