R1942 – நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1942 (page 42)

நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்

THE MEMORIAL OF OUR LORD'S DEATH

புறமத மண்டலத்தார் மற்றும் ஆச்சாரமான பெயரளவிலான கிறிஸ்தவ மண்டலத்தாருடையவைகளிடமிருந்து வேறுபடுத்திப்பார்க்கையில், உண்மை சபையினுடைய நினைவுகூருதல்களானது சொற்பமானதாகவும், எளிமையானதாகவும் காணப்படுகின்றன. அநேக உபவாசம் மற்றும் பண்டிகை நாட்களையும், வாரங்களையும் பெற்றிருப்பதற்குப்பதிலாக, நாம் மூன்று நினைவுகூருதல்களை மாத்திரம் பெற்றிருக்கின்றோம்; அவை:

(1) ஞானஸ்நானம்; இது ஏற்கெனவே நீதிமானாக்கப்பட்ட மனுஷீக சித்தத்தை, கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய சித்தத்திற்குள் மரிக்கப்பண்ணுவதற்கும், அடக்கம் பண்ணுவதற்குமான அடையாளமாகும்.

(2) நினைவுகூருதல் இராப்போஜனம்; இது நமது கர்த்தருடைய சரீரமானது சொல்லர்த்தமாகவே பிட்கப்பட்டதையும், அவரது இரத்தம் சிந்தப்பட்டதையும் (கல்வாரியில், “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவென” அவரது மரணத்தையும்) மற்றும் நாம் அவரோடேகூடப் பிழைத்திருக்கத்தக்கதாக, “அவரோடேகூட மரிக்கத்தக்கதாகவும்”, நாம் அவரோடேகூட மகிமையடையத்தக்கதாக, “அவரோடேகூடப் பாடுகளைச் சகிக்கத்தக்கதாகவுமான” நம்முடைய உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

(3) இன்று ஞாயிறு என்று பொதுவாய் அழைக்கப்படுகின்றதான வாரத்தினுடைய முதல்நாளானது, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான நினைவுகூருதலாகும்.

நமது கர்த்தர் இந்த மூன்று அருமையான, ஆனால் எளிமையான நினைவுகூருதல்கள் அனைத்தையும் நிறுவினார். அவரது ஞானஸ்நானமானது, யூதர்களுக்கென்று மாத்திரம் பிரசங்கிக்கப்பட்டதான “மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானமாகிய” யோவானின் ஞானஸ்நானத்திலிருந்து வேறுபட்டதாயிருக்கின்றது; ஏனெனில் நமது கர்த்தர் மனந்திரும்புவதற்கு எந்தப் பாவங்களையும் பெற்றிருக்கவில்லை. அவரது ஞானஸ்நானமானது புதிய ஒழுங்கின்படியான முதல் ஞானஸ்நானமாய்க் காணப்படுகின்றது; மற்றும் இது ஏற்கெனவே பிதாவினால் அங்கீகரிக்கப்படும் நிலையாகிய நீதிமானாக்கப்பட்ட மனுஷீகத்தின் சித்தத்தினுடைய மரணத்தையும், தேவனுடைய சித்தத்திற்கு முழுமையான ஒப்புக்கொடுத்தலையும், முழுமையான கீழ்ப்படிதலையும், முழுமையான அர்ப்பணிப்பையும்* அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது. (*”ஞானஸ்நானமும், அதன் அர்த்தமும்” எனும் ரீபிரிண்ட்ஸ் 1539 பார்க்கவும்]. இது யோவானுடைய ஞானஸ்நானத்தின் இடத்தை எடுத்துக்கொண்டது (அப்போஸ்தலர் 19:3-5).
நினைவுகூருதல் இராப்போஜனத்தையும், ஞானஸ்நானத்தையும், எந்த விதத்தில் நமது கர்த்தர் நிறுவினாரோ, அதைப்போலவே வாரத்தினுடைய முதல் நாளின் காரியத்தையும் நமது கர்த்தர் நிறுவினார்; அதாவது கட்டளையின் மூலமாய் அல்ல, மாறாக மாதிரியின் மூலம் நிறுவினார். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், உடனே வாரத்தினுடைய முதல்நாளில் சீஷர்களைச் சந்தித்தார்; கல்லறை அருகே மரியாளையும், சீமோன் பேதுருவையும், எம்மாவூருக்குப்போன இருவரையும், மேல்வீட்டறையில் பத்துச் சீஷர்களையும் சந்தித்தார் (யோவான் 20:1,14,19; லூக்கா 24:13-31,34,36). பின்னர் ஒரு வாரம் காத்திருந்து, மீண்டுமாக எட்டாம்நாளில் அவர்களுக்குத் தோன்றினார்; இந்த எட்டாம்நாள் என்பது அநேகமாக ஏழாம்நாளைப் பின்தொடரும் நாளாகும், அதாவது வாரத்தினுடைய முதல்நாளாகும் (யோவான் 20:26). இப்படியான நிகழ்விற்கான எதிர்ப்பார்ப்புகளைச் சீஷர்கள் கொண்டிருந்திருக்கின்றனர் மற்றும் ஒன்றுகூடி இருக்கின்றனர் மற்றும் அவரை அறிந்துகொள்ளத்தக்கதாகத் தங்களுடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டதையும், அதுவும் “அப்பம் பிட்குதல்” தொடர்புடையதாய் இருந்தது என்பதையும் அவர்கள் நினைவு கூர்ந்தவர்களாக, பின்னர் முதல் நாள்தோறும் அவர்கள் கூடிக்கொண்டது மாத்திரமல்லாமல், “அப்பம் பிட்குதல்” என்று அழைக்கப்படுகின்றதான எளிமையான உணவை ஒன்றுகூடிப் புசிக்கவும் செய்தனர். இந்த “அப்பம் பிட்குதலை” நம்முடைய நாட்களில், சிலர் கடைசி இராப்போஜனத்தினுடைய நினைவுகூருதலின் ஆசரிப்பு என்று தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளனர். இரண்டுமே முற்றிலும் வேறானவைகளாகும்; ஒன்று மரணத்திற்கான நினைவுகூருதலாகவும், மற்றொன்று சந்தோஷத்தோடு உயிர்த்தெழுதலைக் கொண்டாடுதலுமாகும். வாரத்தினுடைய முதல்நாளானது, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான மற்றும் வெளிப்படுத்துதலுக்கான, ஐக்கியத்திற்கான நினைவுகூரும்நாளாக மாத்திரம் மதிக்கப்படாமல், மீண்டுமாக பெந்தெகொஸ்தே நாளின் தெய்வீகத் தயவானது அதே நாளில் பாராட்டப்பட்டபடியால், அந்நாள் பரிசுத்த ஆவி பொழியப்பட்டதற்கும் நினைவுகூருதலானது. (அப்போஸ்தலர் 2:1; 20:7; 1 கொரிந்தியர் 16:2)

யூதருடைய பஸ்கா இராப்போஜனத்தின் இடத்தில் இடம்பெறத்தக்கதாக, நமது கர்த்தர் நினைவுகூருதல் இராப்போஜனத்தை நிறுவினார். இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள், எகிப்தின்மீது வந்த கடைசி வாதையினின்று விடுவிக்கப்பட்டதற்கும் மற்றும் பின்னர் முழு இஸ்ரயேல் ஜாதியும் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்பட்டதற்கும் நினைவுகூருதலாக ஒவ்வொரு யூதருடைய வருடந்தோறும், முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று, பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலானது செய்யப்பட வேண்டும். நமது கர்த்தர்தாமே, ஆட்டுக்குட்டியினுடைய நிஜமாவார். அவரது சபை, தப்புவிக்கப்பட்ட இஸ்ரயேலின் முதற்பேறானவர்களுக்கு நிஜமாவார்கள்; மேலும் தேவனை அன்புகூருகின்றவர்கள் அனைவரும் சாத்தான் கீழுள்ள பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படப்போகின்றதான, வரவிருக்கும் “திரும்பக்கொடுத்தலானது,” இஸ்ரயேல் ஜாதியாருடைய விடுதலைக்கான நிஜமாகும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதுமான பலியை செலுத்தின தேவ ஆட்டுக்குட்டியின் மாம்சத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றதான புளிப்பில்லா அப்பம் மற்றும் திராட்சரசமுள்ள நினைவுகூருதல் இராப்போஜனமானது, முதற்பேறான சபையானவளின் நினைவில் அவள் வாங்கப்படுவதற்கெனக் கொடுக்கப்பட்ட விலையினை எப்போதும் ஞாபகம் வைப்பதற்கும், கிறிஸ்துவினுடைய பாடுகளில் ஐக்கியம் கொள்வதற்கு தன்னை அவள் ஒப்புக்கொடுப்பதற்கு உறுதியளிப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ளதாய்க் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 10:16,17; 11:26). ஆகையால் இது நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே இரவில், (எபிரெய நாளானது மாலை 6 மணி முதற்கொண்டு, அடுத்த மாலை 6 மணி என்று கணக்கிடப்படுவதால்) அவர் சிலுவையில் அறையப்பட்டதான அதே நாளில் நிறுவப்பட்டது.
நீசான் 15-ஆம் தேதி துவங்குகின்றதும், ஒரு வாரம் நீடிக்கின்றதுமான பஸ்கா [R1943 : page 42] பண்டிகையினைக் கொண்டாடுவது நமது கர்த்தருடைய நோக்கமாயிராமல், மாறாக நீசான் மாதம் 14-ஆம் தேதியன்று தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதல் ஒன்றை நமக்குக் கொடுப்பதே அவரது நோக்கமாய் இருந்தது. (நினைவுகூருதல்) அது ஆதித் திருச்சபையாருக்குக் களிகூருதலுடைய பண்டிகையாக இருப்பதற்குப்பதிலாக, துக்கமும், திகைப்புமுள்ள தருணமாய்க் காணப்பட்டது. இயேசுதாமே “ஆழ் துயரம் கொண்டிருந்தார்” (மத்தேயு 26:38; திருவிவிலியம்)
இந்த நினைவுகூருதலானது, பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதற்கான நிஜத்தினை நினைவுகூரும் ஆசரிப்பு என்று காண்கையில், இது இதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிக்கப்படுவதே ஏற்றதாயிருக்கும் என்று நம்மால் காணமுடிகின்றது; இது மாதந்தோறும், காலாண்டுதோறும், வாரந்தோறும் (அ) நாள்தோறும் ஆசரிக்கப்படாமல், வருடந்தோறும் ஆசரிக்கப்படவேண்டும் என்றும், அதுவும் வருடத்தினுடைய எந்த ஒரு காலப்பகுதியில் நமது கர்த்தர் மரித்தாரோ மற்றும் எப்போது அவர் நினைவுகூருதலை நிறுவினாரோ, அதே காலப்பகுதியில் ஆசரிப்பது ஏற்றது என்றும் நம்மால் காணமுடிகின்றது. இதுவே ஆதித் திருச்சபையாருடைய வழக்கமாய் இருந்தது; இவர்கள் இதற்கான தேதியை, யூத காலக்கணக்கீட்டு முறைமையின்படி கவனித்தவர்களாய் இருந்தார்கள். இதிலிருந்து முதலாவதாக திசைமாறியது, ரோம கண்காணியினுடைய தலைமையின் கீழுள்ள சபைகள் ஆகும்; மற்றும் நீசான் மாதம் 14- ஆம் தேதியானது (வாரத்தின்) ஏதோ ஒருநாளாக இருக்க, இவர்கள் இதற்குப்பதிலாக, அதற்கு அருகாமையிலுள்ள வெள்ளியை, இதற்கு என்று ஏற்படுத்தி, நியமித்து, ஆசரித்தனர். இதுவே “புனித வெள்ளிக்கான” ஆரம்பமாகும் மற்றும் இதனைத் தொடர்ந்துவரும் மூன்றாம் நாளானது பஸ்கா ஞாயிறு என்று அழைக்கப்பட்டது மற்றும் பிற்பாடு இது “ஈஸ்டர் ஞாயிறு” என்று அழைக்கப்பட்டது. பின்னர் (கி.பி. 325-இல்) நைஸ் மாநாட்டின் கட்டளையினாலும் மற்றும் பிற்காலத்தில் போப் கிரிகோரி XIII அவர்களால் ஆண்டுக்குறிப்பேட்டில் (calendar) பண்ணப்பட்ட திருத்தத்தினாலும், கத்தோலிக்க திருச்சபைகள் என்று அழைக்கப்படுகின்றதானது, ஒப்பந்தத்திற்குள் வந்து, “புனித வெள்ளிக்கும்,” “ஈஸ்டர் ஞாயிறுக்குமான” தேதிகளை வருடந்தோறும் நிர்ணயிக்கிறவர்களானார்கள்.

“பூர்வப் பாதைகளை” கடந்த 20 வருடங்களாக நாடி தேடிக்கொண்டிருக்கின்ற நாம் நினைவுகூருதல் இராப்போஜனத்தை, நமது கர்த்தரினாலும், அப்போஸ்தலர்களினாலும் அங்கீகரிக்கப்பட்டதான எபிரெய காலக்கணக்கிடுதலின்படி கணக்கிடப்படும், அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரித்து வந்துள்ளோம் (எரேமியா 6:16). எபிரெய காலக்கணக்கிடுதல் முறைமையானது எளிமையான மற்றும் சுலபமான ஒன்றாகும். அவர்கள் தங்கள் வருடத்தினுடைய துவக்கத்தினை (தங்கள் முதலாம் மாதமாகிய நீசான் மாதத்தின் துவக்கத்தினை) இளவேனிற் சம [R1943 : page 43] இரவு பகல் நாளின்/Spring Equinox அமாவாசையன்று பெற்றிருக்கின்றனர் மற்றும் 14-ஆம் தேதி இரவு, 6 மணிக்கு (6pm) அவர்களது பஸ்கா பண்டிகையினுடைய முதல்நாளாகிய 15- ஆம் தேதியானது துவங்குகின்றது (யாத்திராகமம் 12:2).

இந்த வருடம் சம இரவு பகல் நாளின் அமாவாசையானது (அ) நீசான் மாதமானது மார்ச் 15-ஆம் தேதி ஆரம்பமாகின்றது; ஆகையால் இதன் 15-ஆம் நாள் (அ) எபிரெயர்களுடைய பஸ்கா வாரத்தினுடைய துவக்கமானது 29-ஆம் தேதியாக இருக்கின்றது. பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதும், “தேவ ஆட்டுக்குட்டியாகிய” நமது கர்த்தருடைய மரணத்தின் ஆண்டு நிறைவு நாளுமாகிய நீசான் 14-ஆம் தேதியானது மார்ச் 28-ஆம் தேதியாகக் காணப்பட்டு, எபிரெய கணக்கிடுதலின்படி 27- ஆம் தேதி சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பமாகின்றதாய் இருக்கின்றது. நமது கர்த்தர் நினைவுகூருதலை முந்தின மாலையில் நிறுவினதால், நாமும் அவ்வாறே ஆசரிக்கின்றோம்.

இந்த வழக்கத்தின் பிரகாரமாக, அலிகெனியிலுள்ள (Allegheny) சபையார், மார்ச் 27-ஆம் தேதி, மாலை 8 மணிக்கு, மனுக்குலம் அறிந்துள்ள மாபெரும் நிகழ்வினை நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்கென ஒன்றுகூடிக்கொள்வார்கள். நம்முடைய ஆராதனையைப் பொறுத்தமட்டில் அது மிக எளிமையானதாகக் காணப்படும் மற்றும் அதில் துதி சாற்றுதல், ஜெபம், ஆசரிக்கப்படும் அடையாளங்களின் மற்றும் நிஜங்களின் அர்த்தங்களை மீண்டுமாகச் சிந்தித்துப்பார்த்தல், மற்றும் பஸ்கா அப்பமும் (புளிப்பில்லாத அப்பம்), திராட்சப்பழரசமுமாகிய (fruit of the vine) அடையாளங்களில் பங்கெடுத்தல் நடைபெறும். [திராட்சப்பழரசத்தின் விஷயத்தில் (fruit of the vine), நாம் wine/திராட்சரசத்திற்குப்பதிலாக புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றை (grape juice) அல்லது உலர் திராட்சரசத்தைத் தேர்ந்தெடுக்கின்றோம்; ஏனெனில் முந்தய காலங்களில் மது பழக்கம் உள்ளவர்களுக்கு, நாம் இது சோதனையாய் அமையாதபடிக்குத் தவிர்த்திட வேண்டும்; (wine) “திராட்சரசம்தான்” திராட்சப்பழரசமாக இருக்குமே ஒழிய (fruit of the vine), வேறு எதுவுமல்ல என்று கருதுகிறவர்களுக்கு ஒரு கரண்டியளவு திராட்சரசம் (wine) சேர்த்துக்கொள்ளலாம். புளிப்பற்ற அப்பமானது எபிரெய குடும்பங்களிடமிருந்து எளிதாய்ப் பெற்றுக் கொள்ளப்படலாம்; இப்படிப் பெற்றுக்கொள்ள முடியவில்லையெனில் புளிப்பற்ற அப்பமாகிய சோடா ரொட்டி (அ) மாவு மற்றும் தண்ணீர்கொண்டு செய்த சாதாரணமான ரொட்டியைப் (soda crackers or water crackers) பயன்படுத்திக்கொள்ளலாம்].
இந்த ஒரு தருணத்தினுடைய விசேஷ அம்சமானது, தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதான அடையாளங்களினுடைய அர்த்தத்தினை உணர்ந்து, புரிந்துகொள்ளுதலின் மூலமாகக் கர்த்தரோடுகூட உள்ள இருதய ஐக்கியமாகும். அந்த அடையாளங்களானது நமது மீட்பருடைய பலியை அடையாளப்படுத்துகின்றது என்று மாத்திரமல்லாமல், அவரது சரீரத்தின், சபையின் அங்கத்தினர்களென, நீதியினிமித்தமான பாடுகளில் அவரோடுகூட ஐக்கியம் கொண்டிருப்பதற்கான நம்முடைய சிலாக்கியத்தையும், அதாவது அதிலுள்ள நம்முடைய தனிப்பட்ட பங்கெடுப்பையும் அடையாளப்படுத்துகின்றது என்றும் உணர்ந்து, புரிந்துகொள்ளப்பட வேண்டும். “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?” (1 கொரிந்தியர் 10:16,17). பொருத்தமான ஸ்தோத்திரபாட்டுடன் முடிவுசெய்து, சம்பாஷணைகளைத் தவிர்ப்பதற்கும், இவ்விதமாய் நினைவுகூரப்பட்டதான மாபெரும் நிகழ்வு தொடர்புடைய எண்ணங்களினால், “ஐக்கியத்தினை” தொடர்ந்து நீடிப்பதற்கும், நமது கர்த்தரை கெத்செமனேக்கும், அடுத்தநாளில் கல்வாரிக்கும் சிந்தனையில் தொடர்வதற்கும் நாம் நாடுகின்றோம் மற்றும் இதற்கிடையில் அவருக்கு நம்முடைய அன்பைக் காட்டுவதற்கு எவ்வளவு கொஞ்சமே நம்மால் முடிகின்றது என்று யோசித்துப்பார்த்து, அவரது ஊழியத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒவ்வொரு சிறுசிறு செல்வாக்குகளையும் பயன்படுத்திடும் விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருப்பதற்கு மிகவும் வைராக்கியமாய்க் காணப்படுவோம் என்று உறுதி எடுக்க நாடுகின்றோம்.
“விலையேறப்பெற்ற இரத்தத்தில்” விசுவாசமுள்ள நண்பர்கள் எவரும், எங்களோடு கூடிடுவதற்கு உள்ளன்போடு வரவேற்கப்படுவார்கள். எனினும் சகோதர சகோதரிகள் அதிக எண்ணிக்கையிலுள்ள கூட்டத்தாருடன் ஒன்றுகூடும் சிலாக்கியங்களை அனுபவிக்கத்தக்கதாக, தங்கள் சொந்த ஊர்களிலுள்ள சிறிய எண்ணிக்கையிலான கூட்டத்தாரை முடிந்தமட்டும் விட்டுச்செல்ல வேண்டாமென்று நாம் அறிவுரைக் கூறுகின்றோம். இரண்டு (அ) மூன்றுபேர் கர்த்தருடைய நாமத்தில் கூடிக்கொள்ளும்போது, அவர் அவர்களை ஆசீர்வதிக்கின்றார். கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள சகல அங்கத்தினனுடைய நலனுக்காக ஒவ்வொருவனும் தன் சொந்த விருப்பங்களைத் தியாகம் செய்திடுவதற்கு முழுக்க விருப்பமுள்ளவனாக இருப்பானாக. மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தின்படி மற்றவர்களுக்காகப் பிட்கப்படும்போது, பலன்கள் எப்போதும் ஆசீர்வாதமாய் இருக்கும்.
கர்த்தருடைய அன்புக்குரிய மந்தையிலுள்ள அனைவரும், அலிகெனியிலுள்ள (Allegheny) எங்களையும் மறந்துபோகாமல், உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள் மற்றும் நாங்களும் உங்கள் அனைவரையும் நினைத்துக்கொள்வோம்.
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

பிசாசின் தந்திரங்களுக்கு எதிராக ஒவ்வொருவனும் ஜாக்கிரதையாய் இருப்பானாக. நமது கர்த்தருடைய பாடுகளுக்கான ஆண்டு நிறைவு நாளை மாத்திரமல்லாமல், யூதாசினுடைய துரோகத்திற்கும், போலி முத்தத்திற்கும், “நானோ?” என்ற கேள்விக்குமான ஆண்டு நிறைவு நாளினையும் நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்த்தரோடும், அவருடையவர்களாய் உண்மையில் காணப்படுவோர்களோடும் ஐக்கியம் கொண்டிருக்கத்தக்கதாக, ஒவ்வொருவனும் தனது இருதயமானது, கர்த்தரிடத்திலும் “அவரது சரீரத்தின்” ஒவ்வொரு அங்கத்தினர்களிடத்திலும் அன்பும், ஈடுபாடுமுள்ள மனப்பான்மையில் காணப்படுகின்றதா என்று ஆராய்ந்துப்பார்ப்பானாக. வேறே மனப்பான்மை காணப்படுமாயின், சாத்தான் “உட்புகும்” அபாயம் காணப்படுகின்றது (லூக்கா 22:3). அப்படியான “அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாய் இருக்கும்” (மத்தேயு 12:45; லூக்கா 11:26).