R1657 (page 159)
யாத்திராகமம் 12:1-14
“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” – 1 கொரிந்தியர் 5:7
பஸ்கா என்ற வார்த்தையானது, கடந்துபோகப்படுதலை அல்லது உபத்திரவத்திலிருந்து கடாட்சிக்கப்படுதலைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது. கடைசி வாதை எகிப்தின்மீது கடந்துவந்தபோது, சங்காரத்தூதன் எகிப்தின் முதற்பேறானவர்களோடுகூட, இஸ்ரயேலின் முதற்பேறானவர்களும் சேர்ந்து சங்காரம் பண்ணப்படாதபடிக்கு, இஸ்ரயேலர்களின் வீடுகள் அனைத்தும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அடையாளம் போடப்பட்டிருந்தது. இந்த முதற்பேறானவர்கள் பிற்பாடு, மோசேயினுடைய லேவியெனும் ஆசாரிய கோத்திரத்தினால் அடையாளப்படுத்தப்பட்டனர் மற்றும் இந்த ஆசாரியத்துவத்தின் மூலமாகவே இஸ்ரயேல் முழுவதும், தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள் கொண்டுவரப்பட்டார்கள். (யாத்திராகமம் 13:2; எண்ணாகமம் 3:11-13) சுவிசேஷயுக சபையானது, இதற்கான நிஜமாகக் காணப்படுகின்றது. இவர்கள் மாத்திரமே ஜனங்கள் அனைவரிலும், இப்பொழுது நித்தியமான மரணத்திற்குரிய இரண்டாம் மரணத்திற்குரிய அபாயத்தில் – காணப்படுகின்றனர்; ஏனெனில் இவர்களே போதுமானளவுக்கு அறிவைப் பெற்றவர்களாய் இருக்கின்றனர்; அதாவது இவ்வறிவை இவர்கள் ஒருவேளை புறக்கணித்தாலோ (அ) தவறாய்ப் பயன்படுத்தினாலோ, இரண்டாம் மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்படுமளவுக்குப்போதுமான அறிவைப் பெற்றவர்களாய் இருக்கின்றனர்.
இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள், இப்பொழுது விசுவாசத்தினால் கிறிஸ்துவில், “தெளிக்கப்பட்ட இரத்தத்தின்” கீழ் – நமக்காக அடிக்கப்பட்ட நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவினுடைய இரத்தத்தின்கீழ் நிலைத்திருப்பவர்களை அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய புண்ணியத்தினால், ஜீவனுக்குப் பாத்திரமானவர்களாகக் கருதப்படுவதினால், இவர்கள் விடுவிக்கப்படுவார்கள், கடாட்சிக்கப்படுவார்கள், கடந்துபோகப்படுவார்கள். ஆனால் எவரேனும் ஒருவேளை இந்த மறைவிடத்தின் கீழ் நிலைத்திராவிட்டால், நிழலான ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினுடைய பாதுகாப்பை விட்டு, இஸ்ரயேலின் முதற்பேறானவர்களில் யாரேனும் ஒருவர் துணிந்து வெளியேறும் பட்சத்தில் மரித்துப்போவதுபோலவே, நிச்சயமாய் மரிக்க வேண்டியிருக்கும். நிழலானது நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை இப்படியாக எத்துணை அழுத்தத்துடன் தெளிவாய்க் காட்டுகின்றது!
நிழலான பஸ்காவை நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்குரிய நிழலான ஆசரிப்பானது, இதன்பின் தொடர்ந்து இஸ்ரயேலால் ஆசரிக்கப்பட்டது. இதை நமது கர்த்தரும், அவருடைய சீஷர்களும், அனைத்து யூதர்களும் செய்ய வேண்டியது போன்று, நீசான் மாதம், 14-ஆம் தேதியில் ஆசரித்தார்கள். இந்தப் பஸ்கா போஜனத்திற்குப் பிற்பாடு, இதனிடத்தில் கர்த்தருடைய [R1657 : page 160] இராப்போஜனமானது ஏற்படுத்தப்பட்டது; அதுவும், நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஜீவியத்தின் கடைசி இரவன்று அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே இரவன்று – அவர் சிலுவையில் அறையப்பட்ட அதே நாளன்று ஏற்படுத்தப்பட்டது; யூதர்களுடைய நாளானது, சூரியன் மறைவிற்குப் பின்னான மாலைவேளையில் துவங்குகின்றதாய் இருக்கின்றது. பஸ்காவானது யூதர்களுக்கு எப்படியாகக் காணப்பட்டதோ, அப்படியே இந்த வருடாந்தர நினைவுகூருதலும்கூட கிறிஸ்துவின் பின்னடியார்களுக்குக் காணப்பட வேண்டும். இவர்கள் கிறிஸ்து இயேசுவை, தங்களது ஆட்டுக்குட்டியெனப் பார்க்கவேண்டும் மற்றும் அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமான தங்களது நீதிமானாக்கப்படுதலில் களிகூர வேண்டும். இஸ்ரயேலர்கள் செய்ததுபோன்று இவர்களும் அதை வருடந்தோறும் ஆசரித்திட வேண்டும், ஆனாலும் நிழலின் காரியமாக இராமல், மாறாக நிஜத்தினுடைய நினைவுகூருதலாக இப்பொழுது இவர்கள் ஆசரித்திட வேண்டும். அவருக்கு ஒப்பான சாயலில், மரணத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது வரையிலும், பஸ்கா காலங்கள் வரும்போதெல்லாம் “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றபடியால் – பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.”
உனக்கு முன்பாக அவமானத்தின் பாதையில் தனித்துப் பயணித்தாரே,
அடிகள்தனை தலைப்பணிந்தே ஏற்றுக்கொண்டாரே,
ஆழ்ந்த துக்கம், வலி, வேதனை, எப்படியிருக்கும் என்பதையும் அறிவாரே,
முடிவில்லா உபத்திரவங்களை நீடிய பொறுமையுடன் சகிப்பதை அவர் அறிவாரே,
மரணத்தின் ஆழமான பாத்திரத்திலுள்ள கசப்பனைத்தையும் பருகிற்றாரே,
அவருக்கென்று ஒரு துளி இரத்தத்தையும் வைத்துக்கொள்ளவில்லையே,
எல்லா இரத்தத்தையும் நமை மீட்டெடுக்கவே சிந்திவிட்டாரே,
ஒளியின் இராஜ்யத்தில் உன்னை மகிமைக்குக் கொண்டுவரவே,
உனக்காகவே, உனக்கு முன்பே, அவர் போரிலே வெற்றிச் சிறந்தாரே.
– Songs of the Nightingale, p. 127