R936 (page 8)
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுக்குட்டியென, நமது கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குமான அடையாளங்களாகிய அப்பம் மற்றும் திராட்சரசம் நிறுவப்பட்டதற்கான ஆண்டு நிறைவுநாளை ஏப்ரல் 7-ஆம் தேதி, மாலை அன்று பிட்ஸ்பர்கில் (Pittsburgh) காணப்படும் சபையார் ஆசரித்தார்கள். கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 150 பேர் ஆகும் மற்றும் இதில் அநேகமாக நாற்பது பேர் அருகாமையிலுள்ள பட்டணங்களிலிருந்தும், சிலர் நியூயார்க் (New York), ஓகியோ (Ohio) மற்றும் விஸ்கான்சின் (Wisconsin) போன்ற தொலைத் தூரப்பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர். அது எப்போதும்போல மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற தருணமாகவே காணப்பட்டது.
நாங்கள் சுருக்கமாக அடையாளங்களாகிய அப்பம் மற்றும் திராட்சரசத்தின் அர்த்தத்தினையும், அது அடையாளப்படுத்துகின்றதான நமது மீட்பருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குமான முக்கியத்துவத்தையும், மதிப்பையும் மீண்டுமாகச் சிந்தனை செய்து பார்த்தோம். மாம்சத்தைப் புசிப்பது என்பது, ஆதாமுக்காகவும், அவரது சந்ததி அனைவருக்காகவும் நமது கர்த்தரினால் பலி செலுத்தப்பட்டதான பரிபூரண மனுஷீகத்தையும், அதன் உரிமைகள் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்வதையும், நம்முடையதாக்கிக்கொள்வதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்று நாங்கள் பார்த்தோம். நமது கர்த்தர், “உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்று கூறினபோது, அவர் “என்னுடைய பலியை ஏற்றுக்கொண்டு மனுக்குலத்தின் சார்பில் இலவசமாய்க் கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய உரிமைகளையும், பரிபூரணங்களையும் (புசிப்பதன் மூலம்) தங்களுடையதாக்கிக்கொள்வது வாயிலாக, உலகமானது (இழந்துபோய்விட்டதான) பரிபூரண மனுஷீக சுபாவத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என் பரிபூரண (புளிப்பற்ற) மனுஷசுபாவத்தைப் பலிசெலுத்துகின்றேன் (அ) கொடுத்துவிடுகின்றேன்” என்ற அர்த்தத்திலேயே கூறினார் என்று நாங்கள் பார்த்தோம். (யோவான் 6:51)
இப்படியாக அப்பமானது, சீர்ப்பொருந்தப்படுகிற யாவருக்குமானது என்றும், சுவிசேஷயுகத்திலும் சரி, ஆயிரவருட யுகத்திலும் சரி ஒருவன் அப்பத்தினால் நன்மையடைவதற்கும் முன்னதாக அதை ஏற்றுக்கொண்டிட வேண்டும் மற்றும் ஜீரணித்திட வேண்டும் (தன்னுடையதாக்கிட வேண்டும்) என்றும் நாங்கள் பார்த்தோம். இழந்துபோனவைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் அனைவரும் ஈடுபலியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இப்படியாக அதன் பலனாகிய (நிஜமான (அ) கருதப்பட்ட நிலையிலுள்ள) திரும்பக்கொடுக்கப்படுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆட்டுக்குட்டியினுடைய மாம்சத்தைப் புசிக்கும் அனைவரும், அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுவதில்லை என்று நாங்கள் பார்த்தோம். பஸ்கா நிழலில் வீட்டினுடைய நிலைக்கால்களும், நிலையின் மேற்சட்டங்களும், ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தினால் தெளிக்கப்பட்டன; இப்படியாகவே மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசிக்கிறவர்கள் அனைவரின் (அவரது புண்ணியங்களில் பங்கெடுத்து, நீதிமானாக்கப்படுபவர்களின்) விஷயத்திலும் காணப்படுகின்றது; இவர்கள் அனைவரும் இரத்தத்தினை, அதாவது முழு உலகத்திற்கும் பாவமன்னிப்புண்டாகும்படிக்கு, அனைவருக்குமாக சிந்தப்பட்ட விலையேறப்பெற்ற ஜீவனை அடையாளங்கண்டுகொண்டு, சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் “பாத்திரத்தில்” பானம் பண்ணிடுவதற்காக (ஜீவனைப் பலிச்செலுத்திடுவதில் பங்குகொள்வதற்கான) சிலாக்கியமானது சுவிசேஷயுகத்தில் மாத்திரமே அருளப்படுகின்றது. (மாற்கு 10:38) இது “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக” நிறைவேற்றிடுவதற்கும், பின்வரும் அவரது மகிமையில் பங்கடைதலாகிய பலனைப் பெற்றுக்கொள்வதற்குமான இந்த யுகத்திற்குரிய சிலாக்கியமாக (அ) வாய்ப்பாக இருக்கின்றது. ஆகையால் மாம்சத்தை (அப்பத்தை) புசிப்பது என்பது, மனுஷீக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் அனைத்திற்குமான நீதிமானாக்கப்படுதலைக் குறிப்பதுபோல, இரத்தத்தை (திராட்சரசத்தை) பானம்பண்ணுவது என்பது, நமது கர்த்தரோடுகூட அவரது பலியில் நமது பங்கெடுத்தலையும், அவரோடுகூட மரிப்பதையும், அவரது பாடுகளில் நமது பங்கெடுத்தலையும் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்படுதலையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
இது உண்மையானால், அப்பம் புசித்தப் பிற்பாடு, திராட்சரசம் கொடுக்கப்படும் காரியமும், அப்பத்தைப் புசித்தவர்களுக்கு மாத்திரமே இரசம் கொடுக்கப்படும் காரியமும் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கின்றது. இக்காரியமானது அனைத்து வேதவாக்கியங்களுக்கு இசைவாகப் போதிப்பது என்னவெனில்: (மற்றவர்கள் அல்ல, மாறாக) தேவ ஆட்டுக்குட்டியானவருடைய பலியிலும், புண்ணியத்திலுமுள்ள விசுவாசத்தினால், பாவங்கள் அனைத்திலிருந்தும் நீதிமானாக்கப்பட்டவர்கள் மாத்திரமே, தங்கள் (நீதிமானாக்கப்பட்ட) மனுஷீகத்தைச் சிலுவையில் அறைந்திடுவதற்கும், இந்த யுகத்தில் கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் பங்கடைவதற்கும், பின்தொடரும் ஆயிரவருட யுகத்திலும், நித்திய காலமும் அவரது மகிமையில் பங்கடைவதற்கும் அழைக்கப்படுகின்றனர் என்பதாகும்.
அவரது மாம்சத்தைப் புசிக்கிறவர்கள் (அவரது புண்ணியங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்பவர்கள் – நீதிமானாக்கப்பட்டவர்கள்) மற்றும் அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுபவர்கள் (தங்கள் நீதிமானாக்கப்பட்ட மனுஷீகத்தை அவரது ஊழியத்தில் பலியாகக் கொடுப்பதன் வாயிலாக, அவரது பலியில் அவரோடுகூடப் பங்கெடுப்பவர்கள்) மாத்திரமே “கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்தின்” அங்கத்தினர்களென, “மெய்யான திராட்சச்செடியின்” அங்கத்தினர்களென, அவரில் நிலைத்திருப்பார்கள் (யோவான் 6:56). இப்படியானவர்கள் மாத்திரமே (வசனம் – 53) தன்னில்தானே ஜீவனுடையவர்களாய் ஆகமுடியும்; அதாவது எதையும் சார்ந்திராத ஜீவனை, அழியாமையைப் பெற்றுக்கொள்ள முடியும் (மிலேனியல் டாண், தொகுதி – 1, அத்தியாயம் – 10 பார்க்கவும்).
மீதமான மனுக்குலத்தார் “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவினால்” பலி செலுத்தப்பட்ட உரிமைகளைப் புசிப்பதன்மூலம் (சொந்தமாக்கிக்கொள்வதன் மூலம்) சார்ந்திருக்கும் ஜீவனை அடைவார்கள்; இது விருப்பமுள்ளவர்களுக்கும், கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கும் நித்திய காலமும் அருளப்படும்.
இவர்கள் அனைவரும் முதலாவதாகக் கர்த்தரைப்பற்றியும், அவர் செலுத்தின பலிபற்றியும், அது அளித்ததான நீதிமானாக்கப்படுதலையும், திரும்பக்கொடுத்தலையும் பற்றியுமான அறிவிற்குள்ளாகக் கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் பின்னர் அதில் இலவசமாய்ப் பங்கெடுத்து, ஜீவிக்கலாம். இப்படியானவர்களைக் குறித்து (“பாத்திரத்தில்” பங்கெடுக்காமல்) “இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” என்றும், “என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்,” அதாவது ஜீவன் அளிப்பவராகிய கிறிஸ்துவைச் சார்ந்துள்ளவர்கள் அனைவருக்கும் சார்ந்திருக்கும் ஜீவன் அருளப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. வித்தியாசம் என்னவெனில் இப்பொழுது தெரிந்தெடுக்கப்படுகின்றதான சுவிசேஷசபையானது, கிறிஸ்துவின் சரீரமானது, தலையானவரோடுகூட அழியாமையை உடையவர்களாய் இருப்பார்கள்; தன்னில்தானே ஜீவனுடையவர்களாய் இருப்பார்கள் மற்றும் உலகத்திற்கு ஜீவன் கொடுக்கிற ஆதாரமாய் இருப்பார்கள்; உலகமானது இந்த ஊற்றண்டைக்கு ஜீவனுக்காக வந்து, இதனால் ஜீவிப்பவர்களாய் இருப்பார்கள்.
“இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளையும் நாம் கவனிக்கின்றோம் (1கொரிந்தியர் 11:27,29). இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்துவின் பலியானது தங்களுடைய பாவங்களுக்கானது என்று அடையாளங்கண்டுகொள்ள தவறும் அனைவரும், இந்த அடையாளங்களைப் புசிப்பது என்பது, “இவரது இரத்தப்பழியானது எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று யூதர்கள் சத்தமிட்டப்போது, பழிக்கு ஆளானதுபோல, இவர்களும் அவரைக் கொன்றவர்கள் என்ற பழிக்கு ஆளானவர்களாய் இருப்பார்கள். யூதர்கள் தங்களைக் குற்றமில்லாத இரத்த (மரணத்திற்கான) பழிக்குள்ளாக்கினதுபோன்று, இப்பொழுது கர்த்தருடைய சரீரமும், இரத்தமும் தங்களுக்கான ஈடுபலியென்று நிதானித்தறியாமல், அடையாளங்களைப் புசிப்பவர்களும், அவரது இரத்தம் எங்கள்மேல் இருப்பதாக என்றும் சொல்லுகிறவர்களாய் இருப்பார்கள். கர்த்தருடைய சரீரமும், இரத்தமும் தங்களுக்கான ஈடுபலி என்று அடையாளம் கண்டுகொள்ளாதவர்கள் அனைவருக்கும், இதில் பங்கெடுப்பது என்பது, அவரது சரீரத்தைப் பிட்டதிலும், அவரது இரத்தத்தைச் சிந்தினதிலுமான குற்றத்தில் பங்குள்ளவர்களாகத் தீர்க்கப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; இது இவர்களுக்கு மன்னிப்பை – பாவங்களுக்கான மன்னிப்பைப் பேசாது.
பின்வந்த அடுத்த நான்கு நாட்களும், முழுக்க கூட்டங்களுக்காகவே செலவிடப்பட்டது; இந்தக் கூட்டங்களில் பல்வேறு சுவாரசியமான தலைப்புகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன; அவைகளையெல்லாம் நம்மால் இங்கு மீண்டுமாகப் பதிவு செய்திட முடியாது. இந்தக் கூட்டங்களானது, தொலைவிலிருந்து வந்தவர்களுக்கு விசேஷித்ததாகவும், மிகவும் சுவாரசியமானதாகவும் காணப்பட்டது மற்றும் இவர்கள் தேவனுடைய வார்த்தையிலுள்ள பலமான ஆகாரத்தினாலும், ஆராயப்பட்டதான மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தத்திலிருந்து வடிக்கட்டி, எடுக்கப்பட்டதான சந்தோஷம் மற்றும் நம்பிக்கை எனும் நவமான திராட்சரசத்தினாலும் பெலப்படுத்தப்பட்டு, புத்துயிர் அடைந்து, தங்கள் தங்கள் பணிக்குத் திரும்பிச் சென்றனர் என்று நாம் விசுவாசிக்கின்றோம்.
இவர்களது இந்த ஒரு வருகையின்போது, கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றதான ஒன்பது சகோதர சகோதரிகள், “மரணம் வரையிலுமான (ரோமர் 6:3,4) தங்களது அர்ப்பணிப்பை அடையாளப்படுத்திடுவதற்கு, நமது கர்த்தர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்பவும் (மாற்கு 16:16), அப்போஸ்தலர்கள் கட்டளையிட்டதற்கு ஏற்பவும் (அப்போஸ்தலர் 10:48) மரணத்திற்குள்ளான உண்மையான ஸ்நானத்திற்கு ஒப்பாக, தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு, வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களது பெயர்கள் பின்வருமாறு: சகோதரன் மற்றும் சகோதரி ஏ. பௌவென், சகோ. ஜெ. மேசன், சகோ. தோஸ்.ஆர்.ஜாக்சன், சகோதரி ஜெ. விரோ, சகோதரி எம். ஜெ. வேக்நர், சகோதரி எம். தாம்சன் மற்றும் சகோதரி கார்சன் மற்றும் மிட்செல்,
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை, அனைத்துத் திசைகளிலுமுள்ள சசோதர சகோதரிகள் நினைவுகூர்ந்துள்ளார்கள் என்பதை நாங்கள் பெற்றுக்கொண்டதான அநேக கடிதங்களானது காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. சில இடங்களில், அதிகமான எண்ணிக்கையில் கூடியிருக்கின்றனர், வேறு சில இடங்களில் ஒன்று (அ) இரண்டுபேர் கூடியிருக்கின்றனர். “இதைச் செய்யுங்கள்” என்று கர்த்தர் சொன்னதைக் கர்த்தருடைய சரியான நோக்கத்திலும், கர்த்தருடைய பலியானது தங்களுடைய பாவங்களுக்கானதாகும் என்று உணர்ந்த நிலையிலும், அவரோடுகூட உள்ள தங்களது அர்ப்பணிப்புக் குறித்து உணர்ந்த நிலையிலும் செய்தவர்கள் அனைவரும் நிச்சயமாய் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இதே சாட்சியினை நாங்கள் பெற்றுக் கொண்டதான, அநேக கடிதங்கள் தெரிவிக்கின்றது. நாங்கள் இங்கே கூடினபோது, உங்களை நினைவுகூர்ந்தோம்; மேலும் உங்கள் கடிதங்களும், நீங்கள் எங்களை மறக்காமல், நினைவுகூர்ந்ததைத் தெரியப்படுத்தினது. “சரீரத்தினுடைய” அங்கத்தினர்கள் அனைவரிடத்திலுமான இந்தப் பரஸ்பர அக்கறையானது சரியானதாகும் மற்றும் இது எப்போதும் நம்முடைய இருதயங்களைச் சந்தோஷப்படுத்துகின்றது.