R94 – நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R94 (page 8)

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து

CHRIST OUR PASSOVER

“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே, ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1 கொரிந்தியர் 5:7, 8 பஸ்கா என்பது இஸ்ரயேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான நிழல்களில் ஒன்றாக இருந்தது மற்றும் அவர்களது மிகப் பரிசுத்தமான பண்டிகைகளில் ஒன்றாகவும் அவர்களால் எப்போதும் அனுசரிக்கப்பட்டும் வந்தது. எகிப்தின் முதற்பேறானவர்கள் மீது பத்தாவது வாதை கடந்து வந்தபோது, தங்களின் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலை நினைவுகூரும் வண்ணமாக அவர்கள் பஸ்காவை ஆசரித்து வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் அந்நிகழ்வினுடைய ஆண்டு நிறைவு நாளின்போது, முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியன்று, ஓர் ஆட்டுக்குட்டியை அடித்து அதை நினைவுகூர்ந்தார்கள். அவர்கள் நிழலை மாத்திரமே கண்ணோக்கினார்கள்; அப்போஸ்தலர்கள் வாயிலாக பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டிருக்கும் நாமோ இதற்கான நிஜம், “தேவனுடைய ஆட்டுக்குட்டியென” – “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்டிருக்கின்றார்” என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. நமது ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் நம்மீது தெளிக்கப்படவில்லையெனில், மரணம் நம்மீது கடந்துவருகின்றதாய் இருக்கும், ஆனால் அவருக்குள் நமக்கு ஜீவன் இருக்கின்றது.

நிழலான ஆட்டுக்குட்டியானது, முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியன்று மரணத்திற்குள்ளாக்கப்பட்டதுபோன்று, நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியானவரும் அதே நாளில் மரணத்திற்குள்ளாக்கப்பட்டார். வேறொரு நாளில் சம்பவிப்பது என்பது நிழலின் நிறைவேறுதலாக இராது; ஆனபடியாலே லூக்கா 22:7-ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடி சம்பவித்தது. அவர்கள் நிழலான ஆட்டுக்குட்டியைப் புசித்ததுபோல, நாமும் நம்முடைய ஆட்டுக்குட்டியைப் புசிக்கின்றோம். அதேநாளில்தானே, இயேசு அப்போஸ்தலர்களுக்கு, தம்முடைய பிட்கப்படுகிற சரீரத்திற்கும் மற்றும் சிந்தப்படுகிற இரத்தத்திற்குமான அடையாளச் சின்னங்களைக்கொடுத்து, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார், அதாவது இனிமேல் என்னை உங்களது ஆட்டுக்குட்டியாக எண்ணி, இந்தப் பண்டிகையை ஆசரியுங்கள் என்றார்.

இதைச் செய்துவருவது, அதாவது பஸ்காவை நினைவுகூருவதும், நமது கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்திற்கான அடையாளங்களைப் புசிப்பதும் பிட்ஸ்பர்காகிய (Pittsburgh) இங்குள்ள நம்மில் அநேகருடைய வழக்கமாக, பல வருடங்கள் காணப்பட்டு வருகின்றது மற்றும் இது பரிசுத்தமான இன்பத்திற்கும், ஐக்கியத்திற்குமுரிய தருணமாகவே எப்போதும் இருந்துள்ளது மற்றும் குறிப்பாக அவ்வாறாகவே இவ்வருடமும் இருந்தது. நாங்கள் மார்ச் 24-ஆம் தேதியன்று இரவில் (தாராளமான இடவசதியின் காரணமாக எப்போதும்போல் சகோதரர் கான்லீ மற்றும் அவரது துணைவியின் வீட்டில் கூடினோம்; மற்றும் புளிப்பில்லாத அப்பத்தைச் சேர்ந்து புசித்தோம் – அது அடையாளப்படுத்தும் சத்தியத்தையும் புசித்தோம்; அதாவது இயேசு புளிப்பற்றவர் (பாவமில்லாதவர்), பரிசுத்தமானவர், குற்றமற்றவர், மாசில்லாதவர் ஆவார் மற்றும் அப்பமாகிய அவரை ஒரு மனுஷன் புசித்தானானால், என்றென்றைக்கும் மரியாமல் இருப்பான் எனும் சத்தியத்தையும் புசித்தோம். பவுலோடுகூட நாங்களும், “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே, ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று கூறினோம். கிறிஸ்துவை எங்களுக்குள் நாங்கள் பெற்றிருந்தபடியால், “ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே, முதற்பேறானவர்களின் சபை முழுவதும் (சீக்கிரத்தில்) கடாட்சிக்கப்படுவார்கள் மற்றும் கடந்துபோகப்படுவார்கள் என்பதை நாங்கள் தெளிவாகப்பார்த்தோம் மற்றும் “இனி உலகத்திற்குச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு விழித்திருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டோம்.

நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், அவர் பிட்கப்பட்டதுபோல பிட்கப்படவும், அவர் மாம்சத்தை மரிக்கப்பண்ணினதுபோன்று, மாம்சத்தைச் சிலுவையில் அறைந்திட்டதுபோன்று மரிக்கவுந்தக்கதாக நாமும் எவ்வாறு அதே அப்பத்தின் பாகமாகக் காணப்படுகின்றோம் என்பதையும் நாம் வாசிக்கின்றோம். “நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16, 17) இன்னுமாக அந்த அப்பத்தின் பாகமாக நாம் நம்மைக் கருதவும், நாம் பிட்கப்படவும் வேண்டுமானால், முதலாவதாகப் பாவமறியாத நம்முடைய ஆண்டவர்போன்று நாம் காணப்படத்தக்கதாக, பாவமென்னும் “பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போட வேண்டும்,” என்பதையும் நாங்கள் கண்டோம்.

போஜனம் புசித்தப் பிற்பாடு, நாங்கள் பாத்திரத்தை திராட்சரசத்தை எடுத்தோம். அதை நாங்கள் பருகினபோது, அது பஸ்கா இராப்போஜன நிழலில் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதையும், மாறாக அது சந்தோஷம் மற்றும் ஜீவனுக்கான அடையாளமாக இருந்தது என்பதையும் நினைவுகூர்ந்தோம். போஜனத்திற்கு பின்பு, அவர் பாத்திரத்தை எடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்று கூறினார்; மேலும் கசப்பான கீரைகளுடன் (உபத்திரவங்களுடன்) ஆட்டுக்குட்டியைப் புசிக்கும் தற்கால இரவுவேளை கடந்துபோன பிற்பாடு, நமது கர்த்தர் “உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று கூறி புதிய ஜீவனையும், புதிய சந்தோஷங்களையும் கொடுப்பார் என்று நாங்கள் உணர்ந்துகொண்டோம். இப்பொழுதும் மற்றும் இங்கும்கூட, பரதீசின் அந்தச் சந்தோஷங்களுடைய ஒரு முன்னனுபவம் உள்ளதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். இவ்வாறாக நமது பண்டிகையின் திராட்சரசமானது, இராஜ்யத்தின் சந்தோஷங்களுக்கு நிழலாக இருக்கின்றது; அப்போது “இராப்போஜனத்திற்குப் பின்பு,” நாம் நம்முடைய பிதாவின் இராஜ்யத்தில் கர்த்தரோடுகூட நவமானதாய்ப் பானம்பண்ணுவோம்.