R57B – யோசேப்பு மற்றும் கிறிஸ்து – சகோதரர் ஜெ. எச். பி.

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R57B

யோசேப்பு மற்றும் கிறிஸ்து - சகோதரர் ஜெ. எச். பி.

JOSEPH AND CHRIST

“ஆதியாகமம் புஸ்தகத்தில் பதிவு பண்ணப்பட்டுள்ளதான யாக்கோபினுடைய குமாரனாகிய யோசேப்பின் வரலாறானது, கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகும். ஓர் உண்மை கதை என்று இதை எடுத்துக்கொண்டு, சிலர் மாத்திரமே இதை விரும்புகின்றவர்களாய் இருக்கின்றனர். கட்டுக்கதைகளைப் பார்க்கிலும், சத்தியமே விநோதமாய்ப் பார்க்கப்படுகின்றது. வாலிபர்களும், முதியவர்களுமாகிய அநேகர் இந்தச் சரித்திரத்தைச் சுவாரசியத்துடன் வாசித்துள்ளனர் என்பதும், அழியாப்பலனைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதும் உறுதியே. யோசேப்பினுடைய முன்மாதிரியான நடத்தையானது, வியந்து பாராட்டப்படுவதற்கும், பின்பற்றுவதற்கும் பாத்திரமானதாய்க் காணப்படுகின்றது.

தேவனுடைய காரணங்கள் தொடர்புடைய விஷயத்திலும், வளர்ச்சியினுடைய ஆரம்பக்கட்டங்களில் காணப்பட்டதான அவரது ஜனங்கள் தொடர்புடைய விஷயத்திலுமான யோசேப்பினுடைய தொடர்பானது முக்கியமானதாகும். மனிதன் மற்றும் ஜனங்களுடைய காரியங்களை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடுகின்றதான தேவனுடைய வழிநடத்துதலுக்கு உதாரணமாய்க் காணப்படும் விஷயத்திலும், எப்படி மனிதன் தனது சுயநலத்திற்காக நாடுகின்றான் மற்றும் அதில் ஓரளவுக்கு அவன் ஜெயம் அடைவதும், எனினும் அவனது திட்டங்கள் முறியடிக்கப்படுவதும், தீமையாய்க் காட்சியளித்த காரியம் நன்மையான காரியமாக மாற்றப்படுவதும் குறித்து எடுத்துக் காட்டப்படுகிற விஷயத்திலும், யோசேப்பினுடைய வரலாறு மிகவும் குறிப்பிடத்தக்கதாய்க் காணப்படுகின்றது. அநேக காரணங்களுக்காக, யோசேப்பினுடைய சரித்திரமானது அநேகரால் நியாயமாய் விலையேறப்பெற்றதாய்ப் பார்க்கப்படுகின்றது; ஆனால் நமக்கோ யோசேப்பினுடைய விஷயத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகக் காணப்படுவது, அதன் உருவகமான தன்மையே (ஞான அர்த்தங்களே) ஆகும். வேதாகமத்திலுள்ள வரலாற்றினுடைய இந்த அம்சமானது, அநேகரால் பார்க்க தவறப்பட்டதும், சிலரால் மறுக்கப்பட்டதும், அதிகமதிகமாய்த் தெரியவருகின்றது. இச்சம்பவம் உண்மையானதாக இருப்பினும், இதன் ஆவிக்குரிய முக்கியத்துவமானது பார்க்கப்படும்போது, இதனோடு ஒப்பிடுகையில், சொல்லர்த்தமான சம்பவம் முக்கியத்துவம் அற்றதாகத் தோன்றும் என்றே நாங்கள் நம்புகின்றோம். பெரியது, சிறியதை மங்கச் செய்துவிடுகின்றது, மற்றும் மாம்சமானதைக் காட்டிலும் ஆவிக்குரியது பெரியதாகக் காணப்படுகின்றது. மேலும் இது உண்மையாக இருக்கையில், ஆவிக்குரியவைகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், எழுத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை, காரணம் அதன் ஆழமான முக்கியத்துவமாகும், அதுவும் எழுத்துக்களை மாத்திரமே பார்க்கக்கூடியவர்களைக் காட்டிலும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்; அதாவது (உதாரணத்திற்கு) ஏற்றக்காலத்தில் மாம்ச சரீரத்திலிருந்து, ஆவிக்குரிய சரீரத்திற்கு மாறுவதற்கு எதிர்நோக்கியிருக்கும் மனுஷர்கள், மாம்சீக சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஏனெனில் இந்த மாம்ச சரீரமே, உயர்வானதற்குரிய படிக்கல்லாக இருக்கின்றது; அதுவும் ஆவிக்குரியவற்றைப் புறக்கணித்துக்கொண்டு, “”நாளை நாம் மரித்துப்போய்விடுவோம் என்பதினால், புசித்து, குடிப்போம் வாருங்கள்”” எனும் இன்பவாத கொள்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களைக் காட்டிலும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது போலாகும். யோசேப்பின் வரலாற்றினுடைய பொதுவான அம்சங்களானது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் பணியைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம். நிழலைப் பொறுத்த விஷயத்தில், அதன் ஒவ்வொரு “”சிறு எழுத்தும், எழுத்தின் உறுப்பும்” நிறைவேறும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம், ஆனால் உருவகம் விஷயத்தில், நாம் பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமான காட்சியைக் காணலாம். இதற்கு, உருவகம் என்று குறிப்பிடப்படும் ஆபிரகாமின் இரண்டு மனைவிகளும், அவர்களுடைய குமாரர்களாகிய ஈசாக்கு மற்றும் இஸ்மயேல் விஷயம் உதாரணமாய்க் காணப்படுகின்றது (கலாத்தியர் 4). இவர்களுடைய ஜீவியத்தின் அம்சங்கள் அனைத்தும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இவர்களது சரித்திரத்தின் உண்மைகளுக்கும் மற்றும் இரண்டு எருசலேம்கள் தொடர்புடைய உண்மைகளுக்கும் இடையே மிகவும் குறிப்பிடத்தக்கதான தொடர்புகள்/ஒற்றுமைகள் காணப்படுகின்றன; மற்றும் இவைகள் மீதே பவுல் கவனம் செலுத்துகின்றார். நாம் இணைகளை உருவாக்கிடுவதற்கோ அல்லது யோசேப்பினுடைய ஜீவியத்தின் ஏதேனும் அம்சங்களை இணையாகப் பயன்படுத்திக்கொண்டு இதற்கு இணையான விஷயம் காணப்பட வேண்டும், அதற்கு இணையான விஷயம் காணப்பட வேண்டும் என்று கூற முயற்சிப்பதற்கோ நாம் நோக்கம் கொண்டிருக்கவில்லை; ஆனால் கிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்தப்பட்டிருப்பவைகளை அடிப்படையாகப் பயன்படுத்தி, நாம் இணைகளைக் கண்டுபிடிக்கின்றோம் மற்றும் இவைகளை விளக்கங்களாகக்கொண்டு, சத்தியத்தை உறுதிப்படுத்துகின்றோம். ஆனால் இந்த ஒற்றுமைகளானது, சுவிசேஷத்தின் திட்டத்தைப் போட்ட அதே தேவனுடைய மனதானது/தேவன், தமது ஏவுதலினால் எழுத்தாளர்களைக் கொண்டு யாருடைய வரலாறுகளை பதிவு பண்ணினாரோ, அவர்களின் ஜீவியங்களைக் கண்காணித்துள்ளார் என்பதற்குப் பலமான சாட்சியமாகக் காணப்படுகின்றது என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஒற்றுமைகளினுடைய பல அம்சங்களானது, பல காலங்களாகப் பார்க்கப்படவில்லை என்ற உண்மையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், அந்தச் சாட்சியம் பலமாய்க் காட்சியளிக்கின்றது. துணிந்து, அறைகூவல் விடுகின்றதான அவநம்பிக்கை என்பது நிலவும் இந்தக் காலக்கட்டத்தில், சீஷர்களுடைய விசுவாசமானது உற்சாக மூட்டப்படத்தக்கதாக வெளிக்கொண்டு வரும்படிக்கு, புதைத்துவைக்கப்பட்ட பொக்கிஷங்களாக இந்த ஒற்றுமைகளினுடைய அம்சங்களானது காணப்படுகின்றன. “”கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (மத்தேயு 11:15). இவைகள் கிறிஸ்தவனுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும்போது, நமது இரட்சகருடைய வாழ்க்கை மற்றும் பணியின் அநேக அம்சங்களை, யோசேப்பின் ஜீவியத்தில் பார்ப்பதற்குக் கிறிஸ்தவன் சிரமப்படுவதில்லை.

யோசேப்பு யாக்கோபினுடைய மிகுந்த பிரியத்திற்குரிய குமாரனாகக் காணப்பட்டார்; “”இஸ்ரயேல் தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்தார்”” (ஆதியாகமம் 37:3). இதனிமித்தமாகவும், யோசேப்பு பாவத்தைக் கண்டனம் பண்ணினதாலும், (தனக்கு) வரவிருக்கிற மகிமையைப் பற்றிச் சொப்பனங்கள் கண்டதினாலும், யோசேப்பை அவரது சகோதரர்கள் பகைத்தார்கள். இதுபோலவே தமது தகப்பனுடைய நேசகுமாரனாகக் காணப்பட்ட இயேசுவும், யூதர்களுடைய பொல்லாப்பைக் கண்டனம் பண்ணினதினாலும், தாம் அவர்களுடைய இராஜாவாய்ப் பிறந்து வந்துள்ளார் என்று அவர் உரிமை பாராட்டிக்கொண்டதினாலும், அவர் தம்முடைய சகோதரர்களாகிய யூதர்களால் பகைக்கப்பட்டார். இரண்டு பேர் விஷயத்திலும் வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே காணப்பட்டது. யோசேப்பினுடைய சகோதரர்களுடைய அரிக்கட்டுகளானது, யோசேப்பின் கட்டுக்கு முன்பாக வணங்கினது பற்றின தனது சொப்பனத்தை, தனது சகோதரர்களிடம் கூறினபோது, அவர்கள் “”நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ?” என்றார்கள். “”இவன் எங்கள்மேல் இராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லை;”” “”இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே இராஜா இல்லை” என்று இயேசுவின் சகோதரர்கள் கூறினார்கள் (ஆதியாகமம் 37:8; லூக்கா 19:14; யோவான் 19:15). இரண்டு பேரின் விஷயத்திலும் (சகோதரர்களின்) தீய எண்ணங்கள் மிகவும் கடுமையானதாகிப்போனதால், மரணத்தீர்ப்புத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு பேரும் குழிக்குள் இறங்கினார்கள் மற்றும் இருவரும் மரணத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். யோசேப்பு உண்மையில் மரிக்கவில்லை என்பது உண்மைதான்; இன்னொரு தருணத்தில் இயேசுவுக்கு அடையாளமாய்க் காணப்பட்ட ஈசாக்கும் உண்மையில் மரிக்கவில்லை மற்றும் “”ஆபிரகாம் ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்”” என்றும், “”மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்”” என்றும் கூறப்பட்டுள்ளது (எபிரெயர் 11:17,18). குழி என்பது கிறிஸ்து இறங்கிச் சென்றதான மரணநிலைக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றது. யோசேப்பு மரித்துப்போனவராகக் கருதப்பட்டார் மற்றும் அவரது உயிர்த்தெழுதலும் அடையாள நிலையிலேயே காணப்பட்டது; ஆனால் கிறிஸ்துவின் மரணமும், உயிர்த்தெழுதலும் நிஜமாகவே நிகழ்ந்ததாய் இருந்தது.

இருவருடைய விஷயத்திலும், சம்பவங்கள் ஒரே மாதிரி வரிசையில் நடைபெறவில்லை; ஆனால் இருவரும் கடுமையாய்ச் சோதிக்கப்பட்டனர் மற்றும் (சோதனையை) எதிர்க்கவும் செய்தனர்; இரண்டு பேருமே ஒரு குறிப்பிட்டக் காலம் வரைக்கும், வேலைக்காரனுடைய ஸ்தானத்தில் காணப்பட்டனர் மற்றும் இழிவாய், அவமானமாய் நடத்தப்பட்டனர்; இருவருமே தங்களுடைய பாடுகளின்போது, தேவ தயவு பெற்றார்கள் மற்றும் இருவருடைய வாழ்வின் நோக்கங்கள் அற்புதகரமான நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. இருவருக்குமே அவர்களது சத்துருக்கள் சில “”வெள்ளிக்காசுகளை” விலையாக நிர்ணயித்தனர் மற்றும் இருவருமே மகிமையான வெற்றியை அடைந்து, வல்லமையின் வலது பாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். பார்வோன் தனது இராஜ்யத்தின் வல்லமை அனைத்தையும், யோசேப்பின் கரங்களில் ஒப்படைத்தார்; “”நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்”” (ஆதியாகமம் 41:40-43).

அதுமுதல் பார்வோன் எதைச் செய்தாலும், அதை யோசேப்பின் வாயிலாகவே செய்தார் மற்றும் எகிப்தினுடைய ஆசீர்வாதத்தை அடைவதற்கான ஒரே வழி, மத்தியஸ்தராகிய யோசேப்பின் மூலம் ஆகும். கிறிஸ்துவும் தேவனுடைய வலது பாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்பட்டார் மற்றும் அவர், “”பிதாவோடுகூட அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்தார்” மற்றும் பரலோகத்திலும், பூமியிலும் அவருக்குச் சகல அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது; “”இயேசுவின் நாமத்துக்கு வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்குச் செய்யப்பட்டது;”” “”தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்”” என்றும், “”அவர் அனைவருக்கும் கர்த்தர்” என்றும், “”அவர் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கின்றார்”” என்றும், “”அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றும் அவரைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

யோசேப்பினுடைய வேலையின் மிகவும் பிரம்மாண்டமான ஓர் அம்சம், தேவையான ஆகாரத்தை அளித்ததாகும் மற்றும் ஆகாரத்திற்காக வேறு எங்கும் செல்ல முடியாது; ஆகவே இது கிறிஸ்துவின் வேலையானது, ஜீவன்அளிப்பதாகும் என்பதைத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றது. “”ஜீவ அப்பம் நானே””, “”நானே சத்தியம்;”” “”மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”” “”நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது.”” “”ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று பேதுருவோடுகூட நாமும் சொல்லுகின்றோம். எகிப்தியர்கள் எப்படித் தங்கள் மாம்ச ஜீவனுக்கான ஆதரவுக்காக, யோசேப்பைச் சார்ந்திருந்தார்களோ, அப்படியே அழியாமைக்காகவும், நித்தியமான ஜீவனுக்காகவும் நாம் கர்த்தர் இயேசுவை முழுக்க சார்ந்திருக்கின்றோம் என்பதை நமது வாசகர்கள் அனைவரும் உணர்ந்துகொள்வார்களாக. கிறிஸ்துவில் மாத்திரமே நித்திய ஜீவன் என்பதே சுவிசேஷத்தினுடைய சாரமாக இருக்கின்றது. முதல் மனிதன் அதைப் பெற்றிருக்கவில்லை மற்றும் பெற்றிராததால் அதை இழக்கவுமில்லை. அவன் மாம்சமானவன்; மாம்சம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, தோல்வியடைந்தது மற்றும் இதனால் இரண்டாம் மனிதனுடைய தேவை உணர்ந்துகொள்ளப்பட்டது. ஆகாரம்/அப்பம் வேண்டுமானால், யோசேப்பிடம் பசியுடையவர்கள் விண்ணப்பம் பண்ணினது/ வேண்டிக்கொண்டது போன்று, நாமும் அதற்காக வேண்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வோமாக. “”அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிப்பார்”” (எபிரெயர் 11:6). ஓ! பசியுள்ளவர்களே, அவரது விலையேறப்பெற்ற சத்தியத்தைப் புசித்துத் திருப்தியடையுங்கள். யோசேப்பு தனது இளம் பிரயாயத்தில் கண்ட சொப்பனங்களை நாம் கவனிக்கத்தவறிட வேண்டாம். யோசேப்பை வெறுத்தவர்களும், அவரை ஒதுக்கித்தள்ளினவர்களுமாகிய அவரது சகோதரர்கள் இறுதியில் யோசேப்பிடம் ஆகாரத்திற்காக வந்தார்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் அவருக்கு முன்பு பணிந்து கொண்டார்கள். அவர்களால் புறக்கணிக்கப்பட்டவரும், மரித்துப்போனவராக எண்ணப்பட்டவருமான யோசேப்பு, அவர்களது இரட்சகராகவும், உபகாரியாகவுமானார். அவர்கள் (அடையாளமாக) தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்த்து, துக்கமடைந்தனர் மற்றும் வெட்கமடைந்தனர், ஆனால் யோசேப்போ அவர்களைப்போஷித்து, அவர்களை மன்னிக்கவும் செய்தார்; “”என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும், அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க, உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும், தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” (ஆதியாகமம் 45:5-8). தேவனுடைய இரக்கம் போற்றப்படுவதாக!

யூதர்களின் வீட்டைக் கிறிஸ்து பாழாகி போகவிட்டபோது, அது நித்தியக் காலத்திற்குமல்ல மாறாக, “”கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று அவர்கள் சொல்லுமளவேயாகும்”” (மத்தேயு 23:39). திரும்பக்கொடுத்தலின் வரவிருக்கும் நாட்களில் கர்த்தர் கூறுவதாவது, “”நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சகரியா 12:10). ஆம், யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் சகோதரனைக் கண்டுபிடித்தபோது துக்கித்து, அவமானம் அடைந்ததுபோன்று, கிறிஸ்துவை இழிவுப்படுத்தின அவரது சகோதரர்கள், அவருக்கு முன்பாக விண்ணப்பிக்க நிற்கும்போது, துக்கிப்பார்கள் மற்றும் தங்களைக் குறித்து வெட்கமடைவார்கள். ஆனால் அது நம்பிக்கையின்மையினால் இல்லாமல், மாறாக செய்த தவறுக்காக வருந்துவதின் நிமித்தமான துக்கித்தலாகும் மற்றும் இது நீண்ட காலமாய்த் தொலைந்து போனவரும், இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டவருமான சகோதரனால் தங்களுக்குக் காண்பிக்கப்படும் தயவின் ஆவியினாலேயே ஏற்பட்டதாகும். அவரை இராஜாவாகவும், ஜீவன் அளிப்பவராகவும் காண்பார்கள் மற்றும் அவர் அவர்களைப் பராமரிப்பார். அவர்கள் தங்களையே அவரிடத்தில் ஒப்புவித்துவிடுவார்கள் மற்றும் அவர் அவர்களுக்கு வீட்டையும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பார். இப்படியாக யோசேப்பு அநேக விதங்களில் கிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்றார் என்பதையும், இவ்வாறாக யுகங்களைப் பற்றின தேவனுடைய திட்டம் குறித்த நம்முடைய கண்ணோட்டம் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதையும் நாம் காண்கின்றோம்.

உண்மையில், தேவன் நல்லவராய் இருக்கின்றார் மற்றும் “”அவர் கிருபை என்றுமுள்ளது.”” “”அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்” என்று நாமும் சொல்லுகின்றோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாதவைகளை, அவரால் வெளிப்படுத்த முடியும் மற்றும் “”தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.”” மற்றும் அவரது திட்டம் மற்றும் அன்பு பற்றி அவர் நமக்குக் கொடுத்துள்ள கண நேரக்கண்ணோட்டத்திற்கும் அவருக்கு ஸ்தோத்திரம். “”அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே” நாம் ஒருவரையொருவர் அன்புகூருகின்றோம் (1 யோவான் 4:8). “”அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால், நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்”” (1 யோவான் 4:19). “