R1635 – பொறாமை மற்றும் விரோதம்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R1635 (page 93)

பொறாமை மற்றும் விரோதம்

ENVY AND DISCORD

“ஆதியாகமம் 37:1-11

“நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள்.” – ஆதியாகமம் 45:24

திரளான சந்ததி குறித்து ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் பண்ணப்பட்ட வாக்குத்தத்தமானது, மெதுவான விகிதத்தில் நிறைவேறி வருவது இங்குக் குறிப்பிடத்தக்க விதத்தில் கவனிக்கப்படலாம். ஆபிரகாம் அழைக்கப்பட்டது முதல் இத்தருணம் வரை இரண்டு நூற்றாண்டுகள் ஆகியுள்ளது; எனினும் அவரது சந்ததியினர் குறைவானவர்களாகவே காணப்பட்டனர். யாக்கோபிற்கு இப்பொழுது 109-வயதாக இருந்தது; அவருக்கு 12-குமாரர்களும், ஒரு குமாரத்தியும் காணப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் நற்குடிப்பிறப்பை உடையவர்களாகவும், ஆசையாய் எதிர்பார்க்கப்பட்டவர்களாகவும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாகவும், தேவனிடமிருந்து வந்த அன்பளிப்புகளாகக் கருதப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர் (ஆதியாகமம் 29:32-35; 30:6-13, 17-24 (refs3)); மேலும் இவர்கள் தேவனையும், அவரது வாக்குத்தத்தங்களையும் பயபக்தியுடன் கருதுவதற்குக் கற்பிக்கப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நல்ல தாக்கங்களுக்கும் மேலாக, சில அநுகூலமற்ற தாக்கங்களும் கூடக் காணப்பட்டது; அவை பின்வருமாறு…. (1) குடும்பத்தில் சமாதானத்திற்கும், ஒருமைபாட்டிற்கும் மற்றும் அன்பிற்கும் வழிவகுக்காத பல மனைவிகள் கொண்ட குடும்பம் மற்றும் நான்கு மனைவிகளின் பிள்ளைகள், இப்படியான ஒரு குடும்ப ஏற்பாடானது, தேவனுடைய ஏற்பாட்டின்படியாக இருக்கவில்லை, ஆனாலும் அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளதுபோன்று, “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்” (அப்போஸ்தலர் 17:30). (தேவனுடைய பிரமாணம் பற்றின நவம்பர் 1, ‘92-இன் நமது பாடத்தைப் பார்க்கவும்). (2) இவர்கள் ஒழுக்கமற்ற அஞ்ஞானி ஜனங்களுடன், ஆரானிலும், சீகேமிலும் பழக்கம் கொண்டிருந்தார்கள். (3) இவர்களது மேய்ப்பன் வாழ்க்கையும் மற்றும் பெரிதான மந்தைகளைப் பராமரிப்பதுமான விஷயங்களும் இவர்களை வீட்டிலிருந்து தூர விலகியிருக்க வேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்திற்று மற்றும் இதன் காரணமாக நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவாய்ச் செலவிடுவதற்கு அதிகளவில் ஓய்வு வேளை கிடைத்தது.

இங்கு நமக்கு அறிமுகப்படுத்தப்படும் யோசேப்பின் அனுபவமானது, அப்போதுள்ள உயர்ந்த பட்ச நாகரிகம் மற்றும் உலகம் கற்றுக்கொண்டுள்ள விஷயங்கள் தொடர்பாக, இஸ்ரயேல் ஜனங்களுக்கு அவசியமான அனுபவங்களை, எகிப்தில் கொடுத்த தெய்வச் செயலின் காரணமான ஏற்பாட்டிற்கான துவக்கமாகக் காணப்பட்டது. எகிப்தில் அவர்கள் 400 ஆண்டுகளாக, பயிற்சியளிக்கும் விசேஷித்த சூழ்நிலையின் கீழ்க் காணப்பட்டனர்; மற்றும் அங்கிருந்து அவர்கள் தாழ்மை பற்றியும், தேவனுடைய அன்பு மற்றும் வல்லமையின் மீதான விசுவாசம் பற்றியுமான முக்கியமான பாடங்களைக் கொஞ்சம் கற்றுக்கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

பதினேழு வயதானவரும், அறிவுக்கூர்மையுள்ளவரும், யாக்கோபினுடைய முதிர்வயதின் குமாரனாக இருந்தபடியாலும், மிகவும் மாதிரியான குமாரனாகக் காணப்பட்டபடியாலும், யாக்கோபின் விசேஷித்த அபிமானத்தைப் பெற்றுக்கொண்டவருமான யோசேப்பு, அவரது சகோதரர்களுடைய பொறாமையின் காரணமாகவும், தனது வஞ்சனையற்ற தன்மையின் காரணமாகவும், தனது சகோதரர்களுடைய கோபத்திற்கு/வெறுப்பிற்கு ஆளானார். யோசேப்பின் மூத்த சகோதரர்களோ, தங்கள் இளைய சகோதரனும், சிறந்த எதிர்காலமுள்ள சகோதரனுமாகிய யோசேப்பின் மீது தங்கள் தகப்பன் கொண்டிருக்கும் அன்பில் பங்குகொள்வதற்குப்பதிலாக, யோசேப்பின் மீது பொறாமைகொண்டு, யோசேப்போடு சமாதானமாய்ப் பேசக்கூடாதவர்களாய்ப் போனார்கள். அவர்களது பொறாமையானது, துரிதமாய் உண்டுபண்ணிக்கொண்டிருந்த துர்க்குணத்தைக் குறித்து அறியாதவராகவும், கபடமற்றவராகவும் யோசேப்பு காணப்பட்டார் மற்றும் அவர்கள் செய்தவைகளைக் கண்டு ஆச்சரியமடைந்தவராகவும், அவர்களது தவறான நடக்கைகளை அறிந்தவராகவும், அவர் காரியங்களை வீடு திரும்பும்போது, தனது தகப்பனிடத்தில் தெரிவிப்பவராகவும் காணப்பட்டார்.

யோசேப்பு கபடற்றவராகவே தனது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சொப்பனங்களைக் குறித்து அவர்களிடத்தில் கூறினார்; அநேகமாக அதன் அர்த்தத்தை யோசேப்பு புரிந்துகொள்ளாதவராகவே காணப்பட்டிருந்திருக்க வேண்டும், ஆனால் யோசேப்பு எதிர்காலத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் காணப்படப்போவதையே அச்சொப்பனங்கள் குறிக்கின்றன என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள்; இந்தச் சொப்பனத்தின் காரியமும் மற்றும் யோசேப்பின் மீதான தகப்பனின் விசேஷித்த கடாட்சம் பற்றி அவர்கள் அறிந்திருந்த காரியமும், யோசேப்பு எதிர்காலத்தில் உயர் ஸ்தானத்தில் காணப்பட்டுவிடுவார் என்று அவர்களை அச்சங்கொள்ளச் செய்தது மற்றும் அப்படியொரு காரியத்தை/கருத்தை அவர்களால் ஜீரணிக்கவும் முடியவில்லை. ஆகவே யோசேப்பை அப்புறப்படுத்துவதற்கான திட்டம் போடப்பட்டது. பொறாமையும், பகைமையுமானது, கொலைப்பாதகத்தின் சிந்தை மற்றும் நோக்கம் சார்ந்த அவர்களது கசப்பான கனியை வேகவேகமாய் முழுவளர்ச்சியடையச் செய்தது. யாக்கோபின் புத்திரர் அனைவரும் இப்படியாக தங்கள் இயல்புகளை வெளிப்படுத்துவதற்குத் தேவன் அனுமதித்தப்போதும், தம்முடைய நோக்கங்களுக்கு உதவியாக அவர்களது நடக்கையை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடுவதற்கும் ஆயத்தத்துடன் தேவன் காணப்பட்டார். இப்படியாகவே நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடுகின்ற [R1635 : page 94] தேவனுடைய செயல்பாடானது, எப்போதும் மனிதனுடைய சுயாதீனத்துடன் இசைந்தே செல்லுகின்றதாய் இருக்கின்றது.

யாக்கோபினுடைய முதல் மனைவியின், முதல் குமாரனாகிய ரூபன் ஏற்கெனவே பிரதான ஆசீர்வாதத்தை இழந்துபோயிருப்பதினால், யாக்கோபு யோசேப்பிற்குக் கொடுத்த பலவருண அங்கியானது, அவரது இரண்டாம் மனைவியின் மூத்த குமாரனாகிய யோசேப்பிற்கு, அவர் பிரதான ஆசீர்வாதத்தை அருளச் சித்தமாய் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது என்றும் அந்தச் சகோதரர்களானவர்கள் உணர்ந்துகொண்டார்கள் (ஆதியாகமம் 49:4).

பஞ்சத்தினுடைய உச்ச நிலையின்போது, யோசேப்பின் தந்தையும், சகோதரர்கள் அனைவரும், அவருக்குக் கனம் செலுத்திடுவதற்கும், அவரது தயாளத்தை அனுபவிப்பதற்குமென எகிப்துக்கு வரும்போது, அவர் காணப்படப்போகின்றதான உயர் ஸ்தானம் பற்றின தீர்க்கத்தரிசனமானவைகளாகவே யோசேப்பினுடைய சொப்பனங்கள் காணப்பட்டன. இந்தச் சொப்பனங்களானது, யோசேப்பினுடைய மனதில் ஏற்படுத்தின தாக்கமானது, அவர் வல்லமை மற்றும் செல்வாக்கின் அரியணைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக, அவர் எகிப்தில் கடுமையான சோதனைகள் மற்றும் பரீட்சைகளின் மத்தியில் காணப்பட்டபோது, அவருக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் கொடுத்ததாகக் காணப்பட்டது.
யோசேப்பினுடைய சகோதரர்கள் கொண்டிருந்த பொறாமையானது, ஆபிரகாமுக்குத் தேவனால் பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு இசைவாக இறுதியில் நன்மைக்கு ஏதுவாய் மாற்றப்பட்டாலும், அது அவர்கள் மீது கடுமையான அனுபவங்களையும் மற்றும் கசப்புகளையும் கொண்டுவந்ததாயிருந்தது. பொறாமை என்பது விழுந்துபோன சுபாவத்திற்கே உரிய கனிகளில் ஒன்றாகும்; பொறாமை மோசமானதும், சகல துர்ச்செய்கைகளுக்கும் நேராய் நிச்சயமாய் வழி நடத்துகின்றதுமாய் இருக்கின்றது; இது சரிசெய்யப்படவில்லையெனில் இறுதியில் மரணத்திற்கும் வழிநடத்திவிடும்.”