R1639 – யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R1639 (page 109)

யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்

JOSEPH SOLD INTO EGYPT

“ஆதியாகமம் 37:23-36

“நீங்களோ எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ அதை நன்மையாக முடியப் பண்ணினார்.” ― ஆதியாகமம் 50:20

முற்காலத்திலுள்ள தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களில் சிலருடைய ஜீவியங்களில் நடைபெற்ற, நன்மைக்கு ஏதுவாய்க் காரியங்களை மாற்றியமைக்கும் தேவனுடைய வழி நடத்துதல்களைக் காணும் போது, அவர்களில் நம்முடைய விசுவாசத்திற்கான மாபெரும் தூண்டுதலைக் கண்டடைய முடிகின்றது; முற்பிதாக்களின் மாதிரியான ஜீவியங்களில், தேவனுக்கான நமது பக்திவைராக்கியத்திற்கும் மற்றும் அவரது ஊழியங்களுக்கான நமது உண்மைக்கும் தூண்டுதலைக் கண்டடைகின்றோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு… இவர்கள் எத்துணை அருமையாய்த் தேவனோடு சஞ்சரித்திருக்கின்றனர்! இருளான வேளைகளிலும் மற்றும் பிரகாசமான வேளைகளிலும் எவ்வளவுக்கு எளிமையாகவும் மற்றும் குழந்தைகள் வைத்திருப்பது போன்றதாகவும் இவர்களது விசுவாசம் காணப்பட்டிருந்தது! இவர்களது பக்தி எத்துணை உள்ளார்வத்துடனும், உண்மையுடனும் காணப்பட்டிருந்தது!

முந்தின பாடத்தில், யாக்கோபினுடைய முதிர்வயதில், அவரது பிரியமான குமாரனாகக் காணப்பட்ட (கடமை உணர்வுமிக்க, 17-வயது வாலிபனான) யோசேப்பைப் பற்றியும், அவரது தீர்க்கத்தரிசனமான சொப்பனங்கள் பற்றியும், அவரது சகோதரர்கள் அவரிடத்தில் கொண்ட பொறாமைப் பற்றியும் நாம் பார்த்தோம். இந்தப் பாடத்தில், எவ்வாறு அந்தப் பொறாமையும், பகைமையும், அதனதின் கனிகளைக் கொண்டு வந்தது என்று நாம் பார்க்கப் போகின்றோம். ரூபன் மற்றும் யூதா தவிர, மற்றபடி அனைவரும் யோசேப்பினுடைய ஜீவனைக் கொன்று போடுவதற்கு விருப்பமாய் இருந்தார்கள்; ஆனாலும் இந்த இருவர் நேரடியாக மீதியானவர்களை எதிர்ப்பதற்குத் துணியவில்லை, ஆகவே வெவ்வேறு ஆலோசனைகளைப் பரிந்துரைத்தவர்களாகக் காணப்பட்டார்கள். யோசேப்பை ரூபன் குழிக்குள் போடப்பண்ணினார் மற்றும் இந்தக் குழியினின்று யோசேப்பை இரகசியமாய்க் காப்பாற்றிவிடுவதற்கு ரூபன் நோக்கம் கொண்டிருந்தார், ஆனால் மற்றவர்களோ இந்தக் குழியில் யோசேப்பு பட்டினிக் கிடந்து சாக வேண்டும் என்ற முடிவில் காணப்பட்டார்கள். ஆனால் காப்பாற்ற வேண்டுமென்ற தனது நோக்கத்தை ரூபன் நிறைவேற்றுவதற்கு முன்னதாக, எகிப்துக்குப் போய்க் கொண்டிருக்கிற வாணிகர் கூட்டத்தினரிடம் யோசேப்பை விற்றுவிடலாம் என்ற யோசனையை யூதா முன் வைத்துவிட்டார் மற்றும் இந்த ஆலோசனைக்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, அவர்கள் தங்கள் இளைய சகோதரனை விற்றுத் தள்ளிவிட்டு, கிடைத்த பணத்தைத் தங்களுக்குள்ளாகப் பங்கு போட்டுக் கொண்டார்கள். இப்படியாக விற்றுப்போட்டது குறித்து ரூபனுக்குத் தெரிவிக்கப்படவில்லை மற்றும் இவரும், யோசேப்பு மரித்துப் போய்விட்டார் என்றெண்ணி, தன்னுடைய தகப்பனாருடைய துக்கத்தில் பங்கடைந்தார்.

யூதாவினுடைய நோக்கம், இரண்டு நோக்கமாகக் காணப்படுகின்றது; முதலாவதாக யூதா தன்னுடைய மனசாட்சியைச் சாந்தப்படுத்தத்தக்கதாக, இரண்டு தீமைகளிலேயே குறைவான தீமையைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய சகோதரனுடைய இரத்தப்பழிக்கு ஆளாகுவதைத் தவிர்த்துக்கொண்டார், எனினும் யோசேப்பைத் துரத்தித் தள்ளிவிடும் நோக்கத்தினை, அதுவும் தங்களுக்குக் கொஞ்சம் (பணம்) இலாபம் கிடைக்கும் விதத்தில் துரத்தித் தள்ளிவிடும் நோக்கத்தினை நிறைவேற்றிவிடுவதற்கு ஆவலுள்ளவராய்க் காணப்பட்டார். பின்னர் மீதி எட்டுப் பேரோடுங்கூடத் தன்னுடைய தகப்பனாரிடத்தில் பொய்ச் சொல்வதற்கும் மற்றும் யோசேப்பு மரித்து விட்டார் என்று நம்பப்பண்ணுவதற்கும் விருப்பமுள்ளவராய் இருந்தார். இரண்டு தீமைகளிலுமே, குறைவான தீமையைத் தேர்ந்தெடுத்த யூதா இப்படித் தேர்ந்தெடுப்பது நன்மையானது / நல்லது என்று கருதியிருக்கலாம், ஏனெனில், “நம்முடைய சகோதரனைக் கொன்றுபோடுவோம்” என்பதும், “நம்முடைய சகோதரனை விற்றுப் போடலாம்” என்பதுமான கருத்துக்கள் / ஆலோசனைகள் மிகவும் வேறுபட்ட வித்தியாசம் கொண்டவையாக இருக்கின்றது. இப்படியாகவே பெரிய தீமைகளை, சிறிய தீமைகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதன் மூலம் அல்லது தங்களை மற்றவர்களுடன், அதாவது வேதவாக்கியங்களில் முன் வைக்கப்பட்டுள்ள உண்மையான பரிசுத்தத்துடனும், நற்பண்புகளின் பூரண அளவுகளுடனும் ஒப்பிடுவதற்குப் பதிலாக, இழிவான பண்புகளுடைய மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மனிதர்கள் பெரும்பாலும் வஞ்சிக்கப்படுகின்றனர்.

தனது பிரியமான குமாரன் மரித்துப்போய்விட்டான் என்பதாக எண்ணப்பட்ட இந்த இழப்பு என்பது, யாக்கோபுக்கு மற்றும் ஒரு கடினமான சோதனையாக இருந்தது. யோசேப்பின் சந்ததி வழியில் தான் தெய்வீக உடன்படிக்கையின் நிறைவேறுதலானது எதிர்பார்க்கப்பட்டது. யோசேப்பு யாக்கோபினுடைய பிரியமான மனைவியாகிய ராகேலின் மூத்த குமாரனாகவும், யாக்கோபினுடைய இருதயத்திற்கு ஏற்றவராகவும், தேவனுக்கான பயபக்தியையும் மற்றும் நீதியின் மீதான அன்பையும் கொண்டவராகவும் காணப்பட்டார். பலவருண அங்கியானது, யாக்கோபினுடைய யோசேப்பின் விஷயத்திலான அந்த நம்பிக்கையின் வெளிப்படுத்துதலாய் இருந்தது மற்றும் இந்தத் தனது நம்பிக்கையைத் தனது குடும்பத்தாரும் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலும் மற்றும் குடும்பத்தாரும் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவும், யாக்கோபு இந்தத் தனது நம்பிக்கையை, தனது குடும்பத்தாரிடமிருந்து மறைப்பதற்கு நாடவில்லை. ரூபன் யாக்கோபினுடைய முதல் மனைவியாகிய லேயாளின் மூத்த குமாரனாக இருந்தபடியால், சகோதரர்கள் அனைவரின் மத்தியிலும், ரூபனே யோசேப்புக்கு எதிராகப் பொறாமைக்கொள்வதற்கு அநேகம் காரணங்களை உடையவராக இருக்கின்றார். “யோசேப்பு உயிரோடிருக்கிறான்” எனும் நற்செய்தியை யாக்கோபு பெற்றுக்கொள்வதற்கு முன்பு வரையிலும், யாக்கோபு 23-வருடங்களாகிய நீண்ட காலம், தனது பிரியமான குமாரனுடைய இழப்பை அனுபவித்தவராகக் காணப்பட்டார். எனினும் யாக்கோபு தேவனுடைய வாக்குத்தத்தங்களை உண்மையுடன் / விசுவாசத்துடன் பற்றிக்கொண்டவராகவும், இஸ்ரயேலின் ஆறுதலுக்காகக் காத்துக்கொண்டிருந்தவராகவும் மற்றும் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாகக் காணப்படுகின்ற சாந்தம் மற்றும் பொறுமை எனும் பண்புகளைத் தாழ்மையுடன் வளர்த்துக் கொண்டவராகவும் காணப்பட்டார்.

யோசேப்பின் விஷயத்திலுங்கூடச் சோதனையானது மிகவும் கடுமையானதாகவே காணப்பட்டது. பிரியமுள்ள குமாரனாகவும், அபிமான குமாரனாகவும், தன்னுடைய தகப்பனாருடைய வீட்டில் அன்பாய் வளர்க்கப்பட்ட குமாரனாகவும் இருந்த அவர், திடீரென அந்நிய மற்றும் புறஜாதியான தேசம் ஒன்றில், அடிமை ஸ்தானத்திற்கு மாற்றப்பட்டார். இதனோடுகூட அவரது சகோதரர்களிடத்திலிருந்து அவர் அடைந்திட்ட இரக்கமற்ற கொடூரம் மற்றும் கொலைப்பாதகத்திற்கு ஏதுவான பகைமை அடங்கின கசப்பான அனுபவங்களும் அவருக்கு இருந்தது; இன்னுமாக அவரது தகப்பன் அடையப்போகின்ற வேதனைகள் பற்றின எண்ணங்களும், தனிமையும் இருந்தது; இன்னுமாக அக்காலத்தில் அந்நிய தேசங்களுக்கிடையே சாலைகளோ, தந்தியோ, அஞ்சல் ஏற்பாடுகளாகிய தொடர்புக்கான ஏற்பாடுகளோ இல்லாதிருந்ததினால் மற்றும் அடிமையாகிய தனக்கு நேரமோ (அ) பணமோ இல்லாமல் இருப்பதினால், தன்னால் மீண்டுமாக தன்னுடைய தகப்பனுடைய முகத்தைக் காணவோ (அ) தகப்பனிடமிருந்து ஏதாகிலும் செய்தி கேட்கவோ முடியும் என்ற எவ்விதமான நம்பிக்கையும் இல்லாதவராகக் காணப்பட்டார்.

இது நிச்சயமாகவே 17-வயதுள்ள ஓர் இளம் வாலிபனுக்குக் கடினமான அனுபவமாக இருந்திருக்கும்; யோசேப்பு தனது குழந்தைப் பருவத்தின் இடத்தையும், பூமியில் தனக்குப் பிரியமானவர்கள் என்றிருந்தவர்கள் அனைவரையும் அவர் விட்டுப்பிரிந்தபோது, [R1639 : page 110] இம்மாதிரியான வேதனையுள்ள சந்தர்ப்பத்தில் இருக்கையில், தனது தகப்பனார் அனைத்தையும் விட்டு ஏசாவிடமிருந்து ஓடினபோது, தெய்வீக வாக்குத்தத்தங்கள், சத்தியம் மற்றும் நீதியின் கொள்கைகள் எனும் கோலைத் தன்னுடன் எடுத்துக்கொண்டது போன்று, இத்தகைய தகப்பனுடைய செல்வாக்கின் கீழ் வளர்ந்த யோசேப்பும் செய்தார் மற்றும் தான் தேவனுக்கு உண்மையாயும், நேர்மையாயும் காணப்பட வேண்டுமென்றும், தான் என்னென்ன சூழ்நிலைகளிலெல்லாம் வைக்கப்பட்டாலும் தன்னுடைய நேர்மையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் யோசேப்பு முடிவெடுத்தார். அந்தோ பரிதாபம்! இந்த நாட்களிலும் சரி, அந்த நாட்களிலும் சரி எத்தனை வாலிபர்கள்தான் இப்படிப்பட்டதான நல்ல தீர்மானங்களை, மிகவும் சாதகமான சூழ்நிலைகளின் கீழ் இருந்தபோதாகிலும் கூட எடுத்துக்கொள்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர்? இந்த வயதில்தான் இளமைப்பருவத்திற்கே உரிய ஏளனச் செயல்களில், மனம்போன போக்கில் ஈடுபட வேண்டும் என்று பொதுவாக எண்ணிக்கொள்கின்றனர், ஆனால் இப்பொழுது விதைத்துள்ளவைகளுக்கு, தாங்கள் கசப்பான ஓர் அறுவடையைப் பின்னர் அறுக்க வேண்டியிருக்கும் என்பதையும் பொதுவாக மறந்துவிடுகின்றனர்.

தேவனால் இந்தத் துன்பமான சூழ்நிலைகளின் எப்பாகத்தையாகிலும் தடைப்பண்ணி இருக்கவும் மற்றும் குறுக்கிட்டிருக்கவும் முடிந்திருக்கும் என்றபோதிலும், அவர் அப்படிச் செய்யாமல், மாறாக ஒவ்வொருவரும் தீமைக்கு அல்லது நன்மைக்கு ஏதுவான தங்கள் தங்கள் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதித்தார் என்று நாம் பார்க்கின்றோம்; எனினும் இவைகள் அனைத்திற்கும் மேலாக, தேவனுடைய பரந்த மனப்பான்மையுடன் கூடிய திட்டங்களுக்கு உதவியாகவும் மற்றும் அவரது உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கான விசேஷித்த ஆசீர்வாதங்களுக்காகவும், இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் மிகவும் ஆச்சரியமான விதத்தில், மாற்றிப்போட்டக் காரியத்தில், நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடும் அவரது வழி நடத்துதலை நம்மால் காணமுடிகின்றது. உதாரணத்திற்கு யோசேப்பு தன்னுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத்தக்கதாக தனியே விடப்பட்டபோதும், புதியதும், அக்காலகட்டத்தில் மிகுந்த முன்னேற்றமும், நாகரிகமும் அடைந்ததாகக் காணப்பட்டதுமான தேசத்துடன் தொடர்புக்குள் வந்தபோதும், அவர் புதியதும், விலையேறப்பெற்றதும், வேறு எவ்விதத்திலும் பெற்றுக்கொள்ள முடியாததுமான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டார் மற்றும் புருஷனுக்குரிய பலத்தையும், தைரியத்தையும், சாமர்த்தியத்தையும், உறுதியான குணலட்சணத்தையும், வளர்த்தியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்; இன்னுமாக குடும்ப அங்கத்தினர்கள் அனைவரிடமிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட காரியமானது, தேவனுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதற்கும், தேவனுடைய வல்லமையின் மீது சார்ந்திருப்பதற்கும் அவரை வழிநடத்தினது.

தேவனுடைய வழிநடத்துதலின்படி, யோசேப்பு எகிப்து தேசத்தில், இஸ்ரயேலர்கள் அனைவருக்குமான முன்னோடியானார்; இந்த எகிப்து தேசத்தில் தான், தேவன் இஸ்ரயேல் தேசம் முழுவதற்கும் அவசியமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான அனுபவங்களை, நானூறு ஆண்டுகளுக்கு, அந்தக் காலக்கட்டத்தின் உயர்ந்தபட்ச நாகரிக நிலையுடன் தொடர்புக்குள் கொண்டுவந்து கொடுப்பதற்கு, அதுவும் அடிமை நிலையின் தாழ்மையான சூழ்நிலைகளின் கீழ்க் கொடுப்பதற்குத் திட்டம் பண்ணியிருந்தார்; இப்படியான தாழ்மையான சூழ்நிலைகளின் கீழ் அனுபவங்களைக் கொடுப்பது என்பது அவர்களைத் தாழ்மையாக்கிவிடும் மற்றும் தேவன் மீது சார்ந்திடுவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திடும். இந்த எகிப்து தேசத்தில் இஸ்ரயேல் ஜனங்களின் சந்ததியினர் தூய்மையாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்களாகவும் காக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் அடிமைகளாக இருந்தபடியினால், அவர்களால் எகிப்தியர்களுடன் கலப்புத் திருமணம் செய்துகொள்ள முடியாது. எகிப்து தேசத்தில் காணப்பட்ட இஸ்ரயேலர்கள் மூலமாக, எகிப்தியர்கள் மாத்திரமல்லாமல், இவர்கள் மூலமாக மற்றத் தேசத்தார்களும், உண்மை தேவனுடைய குணாதிசயம் மற்றும் வல்லமைக் குறித்துக் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த முற்பிதாக்களின் விஷயத்திலான தெய்வீக வழிநடத்துதல்களை நாம் கவனிக்கையில், குணலட்சணத்தை வளர்த்துவது மற்றும் எதிர்க்கால நன்மைக்கென்று சந்தர்ப்ப சூழ்நிலைகள் வனையப்படும் விஷயத்திலுமான முற்பிதாக்களினுடைய அனுபவங்களின் முக்கியத்துவமானது, அவர்களது இறுதி / முடிவு பலன்களை நாம் பார்க்கும் பொழுதுதான், நமக்கு நன்கு வெளிப்படுகின்றது என்ற உண்மைகளிலிருந்து, நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த மிகவும் விசேஷமான பாடம் கிடைக்கப்பெறுகின்றது; ஆனால் அவர்களோ இந்த அனுபவங்கள் வாயிலாக கடந்துபோகுகையில், அவர்களால் தேவனது அன்பான நோக்கங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்த போதும், அவர்கள் தேவனுடைய வழிநடத்தும் கரங்களை நம்பி, விசுவாசத்துடன் நடக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள்.

ஈசாக்குக்குப் பதிலாக தேவன் ஆட்டுக்குட்டியை ஏற்பாடு பண்ணுவார் என்று ஆபிரகாமினால் அறிந்துகொள்ள முடியாது; ஆகையால் அவர் தனது குமாரனைக் கொன்று போடத்தக்கதாகக் கத்தியைத் தூக்குமளவுக்குத் தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஆபிரகாமின் பங்காக இருந்தது. ஏசா தன்னைச் சமாதானத்துடன் சந்திப்பார் என்றும், தேசத்தின் நன்மையை அனுபவிக்க தன்னையும் அனுமதிப்பார் என்றும் யாக்போபினால் அறிந்துகொள்ள முடியாது; கர்த்தர் கட்டளையிட்டபோது, அவர் எழுந்து, தன்னுடைய வீட்டாரையும் கூட்டிக்கொண்டு, தன்னுடைய உடைமைகளையும் எடுத்துக்கொண்டு, ஏசாவைச் சந்திக்கப்போக வேண்டியது யாக்கோபினுடைய பாகமாக இருந்தது. தன்னுடைய சகோதரர்களைத் தேடும்படிக்குத் தனது தகப்பன் வீட்டைவிட்டு வந்த போது, தன் மீது கடந்து வந்திட்ட வேதனையான சூழ்நிலைகள் அனைத்தும், எவ்வாறு தனக்கும், தன்னுடைய தகப்பன் வீட்டார் அனைவருக்கும் மற்றும் எகிப்துக்கும் மாபெரும் நன்மைக்கு ஏதுவாக மாறும் என்று யோசேப்பினால் அறிந்துகொள்ள முடியாது; ஆனால் தெய்வீகச் சத்தியம் மற்றும் நீதியின் கொள்கைகளைத் [R1640 : page 110] தன்னுடன்கூட எகிப்துக்குக் கொண்டு செல்வதும், தேவனுக்கேற்ற குணங்களுக்கான சிறந்த மாதிரியாகக் காணப்படுவதும், போத்திபாரின் வேலைக்காரனாக, தன்னால் முடிந்தமட்டும் தன்னுடைய வேலைகளை உண்மையாய்ச் செய்ய வேண்டியதும் யோசேப்பினுடைய பங்காக இருந்தது. தனது தந்தையாகிய யாக்கோபு போன்று, யோசேப்பும் விசுவாசம் மற்றும் கடமையின் பாதையில் நடந்தபோது, தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை அருள முடிந்தது; மேலும் அவர்களுடைய உண்மையின், விசுவாசத்தின் மற்றும் தாழ்மையின் ஆசீர்வாதமான பலனை நம்மால் இறுதியில் காணமுடிகின்றது.

அவர்களைப் போலவே நாமும் ஒரு வேளை அனைத்துச் சூழ்நிலைகளிலும், அதாவது இருளான நேரங்களிலும், வெளிச்சமான நேரங்களிலும், அமைதியான நேரங்களிலும், புயலான நேரங்களிலும் நமது உண்மையை நிரூபிப்போமானால், நம்முடைய ஜீவியத்தின் கடந்தகால அனுபவங்களுங்கூட மேற்கூறியபடி, நித்திய காலங்களினுடைய வெளிச்சத்தில் பார்க்கப்படும் / காட்சியளிக்கும். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் அனுபவங்களினால் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; ஆகையால் முற்பிதாக்களினுடைய சிறந்த மாதிரிகளினாலும் மற்றும் அனைத்தையும் நன்மைக்கேதுவாய் நடந்தேற்றினதில் வெளிப்பட்ட தேவனது அன்பு, பராமரிப்பு மற்றும் ஞானத்தினாலும் மற்றும் இப்படியாகவே நமக்கும் நடைபெறும் என்று அவர் வாக்களித்துள்ளதாலும் நாம் தைரியம் கொண்டு, நாம் நம்மைப் பொறுமையுடனும், சாந்தத்துடனும் தேவனிடம் ஒப்புக்கொடுப்போமாக! “