R5225 – விதைத்தலும், அறுத்தலும்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R5225 (page 125)

விதைத்தலும், அறுத்தலும்

THE SOWING AND THE REAPING

ஆதியாகமம் 42-ஆம் அதிகாரம்

“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். ― கலாத்தியர் 6:7

யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்களின் கதையைப் பார்க்கவிருக்கின்றோம். பொறாமையினால் ஏவப்பட்டதினிமித்தம் தங்கள் சகோதரனுக்குச் செய்திட்ட கொடூரங்கள் பற்றின ஞாபகங்களானது, எவ்வாறு தீமை செய்தவர்களைப் பல வருடங்களாகக் கஷ்டப்படுத்திக் கொண்டுவந்தது என்பது பற்றி இன்றைய பாடமானது விளக்கப்போகின்றதாய் இருக்கின்றது. நம்முடைய ஆதார வசனமானது, தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களுக்கு மாத்திரமல்லாமல், பொதுவான மனுக்குலத்திற்கும்கூட ஒரு பொதுவான கொள்கையாக அமைகின்றது. துணிகரமாயும், அறிந்து உணர்ந்த நிலையிலும், எவராகிலும் விதைக்கப்படுகின்ற எதுவும், நல்லது (அ) தீயதான அறுவடை ஒன்றைக் கொண்டுவரும்.

பஞ்சமானது உலகத்தின் அந்தப் பாகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டது. பாலஸ்தீனியாவையும், எகிப்தையும் உள்ளடக்கின நிலையில் பஞ்சம் காணப்பட்டது. எகிப்தில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும், அங்குத் தானியங்கள் உள்ளது என்றும், மிதமான விலைகளில் தானியங்கள் அங்கு விற்பனை பண்ணப்படுகின்றது என்றும், தானியங்கள் எகிப்தில் முன்னமே சேகரித்து வைக்கப்பட்டன என்றுமுள்ளதான செய்தி பரவியது. சொந்தமாகத் தனித்தனி குடும்பங்களைப் பெற்றிருந்த தனது குமாரர்களை நோக்கி, எகிப்துக்குப் போய்க் கோதுமையை விலைக்கு வாங்கி வரும்படிக்கு யாக்கோபு கட்டளையிட்டார்.

இவர்கள் எகிப்தியராய் இராமல் அந்நியர்களாய் இருந்தபடியால், இவர்கள் யோசேப்பினிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்; யோசேப்பு இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. யோசேப்பு துபாசி வழியாய் இவர்களிடத்தில் பேசி, இவர்கள் சேனையோடு வந்து கோதுமையைத் திருடிப்போகத்தக்கதாக, எகிப்தில் எவ்வளவு கோதுமை காணப்படுகின்றதெனப் பார்ப்பதற்கு வந்திட்ட வேவுகாரர்களாக இருக்கின்றார்களா என்று வினாவினார். இவர்கள் தங்கள் நிலவரத்தை உண்மையாய் விவரித்தார்கள். யோசேப்பு தனது தந்தையைக் குறித்தும், தனது இளைய சகோதரனாகிய பென்யமீனைக் குறித்தும் விசாரித்துக் கொண்டார். இறுதியில் இவர்களில் ஒருவரைச் சிறையில் அடைத்து, மீதமானவர்களைத் தானியங்களுடன் அனுப்பி வைத்தார்; அதுவும் இவர்களுக்கு இன்னும் தானியம் தேவைப்படும் என்றும், இவர்கள் தங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவந்து, தாங்கள் வேவுகாரர்கள் இல்லை என்று நிரூபிக்கும் பட்சத்தில், பஞ்சம் முடிவது வரையிலும் திரளான தானியங்களை வாங்கிச் செல்லலாம் என்றும் இவர்களுக்குப் புரியவைத்து அனுப்பினார். அதுவரையில் சிமியோன் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார்.

இந்தச் சகோதர்களுடைய குற்ற மனசாட்சியானது, தங்களுக்கு வந்திட்ட பல்வேறு அனுபவங்களை, முற்காலத்தில் தாங்கள் செய்திட்ட தவறுகளுடன் சம்பந்தப்படுத்த ஆரம்பித்தது. “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்” (ஆதியாகமம் 42:21,23). யோசேப்பு அவர்களை விட்டு அப்புறம் போய் அழுதார். அவருடைய இருதயமானது, கடினமானதாக இருக்கவில்லை. இன்னும் வரவிருக்கின்ற வருடங்களில் அவர்களுக்கு நன்மை பயக்கின்றதான ஒரு படிப்பினையை மாத்திரமே யோசேப்பு அவர்களுக்குக் கொடுத்தவராய்க் காணப்பட்டார்.

மேசியாவின் இராஜ்யமானது, அதன் ஆசீர்வாதங்களைப் பொழியும்போது, நிஜமான யோசேப்பாகிய மேசியாவும், ஜனங்களிடத்தில் மகா உபத்திரவக் காலத்தின்போது யோசேப்பைப் போன்று கடுமையாகப் பேசிடுவார் என்றும், என்ன சம்பவிக்கப்போகின்றதோ என்று கவலைக்கொள்ளவும், மிகுந்த மனவேதனை அடையவும் அனுமதித்திடுவார் என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படியாகக் கர்த்தர் கடுமையாகக் காணப்படும் வேளைகளில், அவரது இருதயமானது, தவிக்கும் சிருஷ்டியின் மீது முழுக்க அன்பும், அனுதாபமும் கொண்டிருக்கும்; இந்தத் தவிக்கும் சிருஷ்டிக்காகவே அவர் ஏற்கெனவே மரித்திருக்கின்றார் மற்றும் இவர்களுடைய நலனுக்காகவே அவரது இராஜ்யமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. மேசியாவின் ஆளுகையினுடைய ஆரம்பத்தின் போது காணப்படும் உலகத்தின் மீதான உபத்திரவக் காலமானது, கர்த்தர் அருளுவதற்குச் சித்தங்கொண்டுள்ள ஆசீர்வாதங்களுக்காக, மனுக்குலத்தின் இருதயங்களை ஆயத்தம் பண்ணுகிறதற்காகவே என்பது நிச்சயமே.

அநேகம் அடிகள் மற்றும் கொஞ்சம் அடிகள்

யாக்கோபின் பத்துக்குமாரர்களும் தங்கள் கோதுமை தானியத்துடன் திரும்பிவந்த போது, அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் அனைத்தையும், தங்கள் தகப்பனிடத்தில் கூறினார்கள். ஏன் தங்களுடன் சிமியோன் காணப்படவில்லை என்பதையும், சிமியோன் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கின்றார் என்பதையும் விவரித்தார்கள். இன்னுமாகக் கோதுமைக்கான பணம் வாங்கப்படாததைக் கண்டபோது, அவர்கள் திகைத்துப் போனார்கள். அவர்கள் விலையாகச் செலுத்தியிருந்த பணமானது, தங்கள் ஒவ்வொரு சாக்கிலும் திருப்பிச் செலுத்தப்பட்டிருந்தது/ வைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் அவர்களுக்கு விநோதமாகக் காணப்பட்டது மற்றும் அந்தச் சகோதரர்களின் மனங்களின் கவனமானது அவர்களது சகோதரனாகிய யோசேப்பின் விஷயத்தில் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னதாகச் செய்திருந்த குற்றத்தின் மீது திரும்பினது. யோசேப்பிற்குக் குற்றம் புரிந்தது முதல், இதுவரைக்கும் இடைப்பட்ட வருடங்களில், தங்கள் சகோதரனுக்குத் தாங்கள் செய்தது போன்று எத்தகைய ஓர் உபத்திரவத்தை நீதியுள்ள தேவன் தங்களிடத்தில் அனுமதிக்கப்போகின்றார் என்பது தொடர்புடையதான பயம் கலந்த அனுமானங்கள் மற்றும் துக்கங்கள் எனும் கதிர்களை அவர்கள் அநேகந்தரம் அறுத்தார்கள்.

இந்தக் கொள்கையானது பொதுவாய் அங்கீகரிக்கப்படுமானால், அதாவது ஒவ்வொரு மீறுதலுக்கும், நீதியான பலனுண்டு! எனும் தேவ வார்த்தையினுடைய உண்மைத் தன்மையை அனைவரும் உணர்ந்துகொள்வார்களானால், ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கும் அது எவ்வளவு நன்மை பயக்கின்றதாய் இருக்கும். பரவிக்கிடக்கும் மிகவும் தவறான உபதேசங்களுடைய மூடுபனியில், நாம் நீதியைப் பற்றின மேற்கூறப்பட்டுள்ள உணர்ந்துகொள்ளுதலையும், தவறு செய்தமைக்கான நீதியான தண்டனைப்பற்றின எதிர்ப்பார்த்தலையும் இழந்துபோயுள்ளோம். இந்தத் தவறான உபதேசமானது, அனைத்துப் பாவங்களுக்கும் ஒரே ஒரு தண்டனையைச் சாற்றுகின்றது, அதுவும் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத தண்டனையை, அதாவது நித்திய சித்திரவதையைச் சாற்றுகின்றது. எத்தனை சொற்பமானவர்கள் மாத்திரமே, இந்த உபதேசத்தை நம்புகின்றார்கள் அல்லது அதனால் உண்மையாய்த் தாக்கத்திற்குள்ளாகிக் காணப்படுகின்றார்கள் என்பது முதலாவது கவனிக்கப்படத்தக்கதாகும்! இவ்வுபதேசத்தின் இரக்கமற்ற தன்மையானது, இதை நம்பத் தகாததாக்குகின்றது மற்றும் தேவன் முன்னறிவித்துள்ள உண்மையான தண்டனைகளைப் பற்றின சரியான கண்ணோட்டத்திலிருந்து மனதைத் திசைத்திருப்பிவிடுகின்றதாய் இருக்கின்றது.

இந்த முதலாம் முரண்பாடு மற்றும் இதன் தீமையான பலனோடுகூட, இன்னும் காணப்படும் முரண்பாடுகள் பின்வருமாறு: சபையில் அங்கத்துவம் வகிப்பதன் மூலமாக, நித்திய சித்திரவதைக்குத்தப்பி, கொஞ்சம் குறைவான சித்திரவதையை அடையலாம் என்று நமது கத்தோலிக்க நண்பர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்றானது, புரோட்டஸ்டாண்டினரைக் காட்டிலும் மிகவும் நியாயமானதாகத் தோன்றுவதினால், இந்த இரண்டு தீங்குகளிலும், இது குறைவான தீங்காய் இருக்கின்றதென அநேகர் ஏற்றுக்கொள்கின்றனர். மரணத்திற்குக் கொஞ்சம் முன்னதாக, “தேவனே என்னை மன்னியும்!” என்று ஓர் ஆணோ (அ) பெண்ணோ கூறி உடனடியாகப் பரதீசுக்குச செல்வார்கள் என்பதும், பாவங்களுக்கான அனைத்துத் தண்டனைகளிலிருந்தும் தப்பிக்கொள்வார்கள் என்பதும் புரோட்டஸ்டாண்டின் கூற்றாகக் காணப்படுகின்றது. இந்தக் கூற்றுகள் அனைத்தும் பாதகமானதாகவும், முரண்பாடானதாகவும் காணப்படுகின்றதென நாம் கூறுகின்றோம். வேதவாக்கியங்களுடைய கூற்றானது, பிரசங்கிக்கப்பட்டு, விசுவாசிக்கப்படுமாகில், அது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் நமக்கு நிச்சயமே.

வேதவாக்கியங்களினுடைய கூற்றானது, நம்முடைய ஆதார வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது; “மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்.” மனுஷன் ஒருவேளை கொடுமை செய்வதற்கான விருப்பத்தை, வஞ்சகமான வார்த்தைகளை, அநியாயத்தை, சுயநலத்தை, தீமை பேசுதலை, பழித்தூற்றுதலை விதைப்பானானால், இதற்கான அறுப்புக் காலத்தையும் அவன் நிச்சயமாய்க் கொண்டிருப்பான் மற்றும் அவன் விதைத்திருந்ததான விருப்பங்களுக்கு இசைவான பலன்களைச் சேகரித்துக்கொள்வான்.

தெய்வீக ஏற்பாட்டினை மேம்படுத்துவது/மாற்றி அமைப்பது என்பது மனுக்குலத்தினால் இயலாத ஒன்றாகும். ஆகையால் அனைத்துக் கிறிஸ்தவ ஜனங்களும் நீதியைக் குறித்தும், தேவனுடைய அன்பைக் குறித்தும் உலகத்திடம் சொல்வதற்குப் புதிதாய் ஆரம்பிக்க வேண்டும்; பாவத்திற்கு எதிரான தேவனுடைய நீதியான தண்டனை மரணம் என்றும், ஆனாலும் கிறிஸ்துவினுடைய ஆயிரவருட மேசியா ஆளுகையின்போது இந்தத் தண்டனையினின்று விடுவிக்கப்படுவதற்குக் கிறிஸ்து மூலமாய்த் தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும் உலகத்திடம் சொல்வதற்கு ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய ஆயிரவருட ஆளுகையின்போது, ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கமும், தேவனுடன் ஒப்புரவாகிடுவதற்கும், தந்தையாகிய ஆதாமின் பாவத்தினால் இழந்து போகப்பட்டதான தேவசாயலுக்கும், ரூபத்திற்கும் மீண்டுமாகச் சீர்ப்பொருந்திடுவதற்குமான முழு வாய்ப்பை அருளப்பெற்றுக்கொள்வார்கள்.

ஆனால் இதற்கிடையில் ஒவ்வொரு மனிதனும் தனது ஒவ்வொரு கிரியை, வார்த்தை மற்றும் எண்ணம் தொடர்புடைய விஷயத்தில் பொறுப்பாளியாகக் காணப்படுகின்றான். அவன் எந்தளவுக்கு வெளிச்சத்திற்கும், அறிவிற்கும், பொன்னான சட்டத்திற்கும் எதிராகப் பாவம் செய்கின்றானோ, அவ்வளவாய் அவன் தன் குணலட்சணத்தைச் சீரழிக்கின்றவனாய் இருக்கின்றான் மற்றும் இப்படியாக தேவசாயலுக்கும், ரூபத்திற்குமான திரும்பிவருதலுக்குரிய தனது வாய்ப்பினைச் சிரமம் நிறைந்த ஒன்றாக்குகின்றான். யாரொருவனுடைய மனசாட்சியானது மிகவும் சீரழிந்து போய்க் காணப்படுகின்றதோ, அவன் தனது போக்கினின்று திரும்புவதற்கான தனது வழியினை மிகவும் சிரமமானதாகவும், செங்குத்தானதாகவும் (ஏறுவதற்குக் கடினமானதாகவும்) இருப்பதை உணருவான்.

இந்தத் திவ்விய பிரமாணத்தின்படி, ஆயிர வருட அரசாட்சியின்போது, இன்று கிறிஸ்தவ தேசங்கள் என்று அழைக்கப்படும் தேசங்களிலுள்ள ஜனங்களைக் காட்டிலும், அந்நிய ஜனங்கள், பெரும்பாதையான வழியில் நடந்துச்செல்வதற்கு மிகவும் ஆயத்தமாய்க் காணப்படுவார்கள். கிறிஸ்தவ தேசங்கள் என்று அழைக்கப்படும் தேசங்களிலுள்ள ஜனங்கள் மிகுந்த வெளிச்சம், மிகுந்த சிலாக்கியம், மிகுந்த வாய்ப்பு உடையவர்களாய் இருந்து, மாபெரும் அறிவிற்கு எதிராய்ப் பாவம் புரிந்தவர்களாய் இருந்து, தங்கள் மனசாட்சிகளை மிக ஆழமாய் மழுங்கச் செய்துவிட்டவர்கள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களிலுள்ள சிலரைக் குறித்தே, “நரகாக்கினைக்கு (இரண்டாம் மரணத்திற்கு) எப்படித் தப்பித்துக்கொள்வார்கள்?” என்று இயேசு குறிப்பிட்டுள்ளார்.

யாக்கோபின் நரைமயிர்கள் ஷீயோலுக்குள் இறங்குதல்

கோதுமை அடுத்தமுறை வாங்க வேண்டுமானால், பென்யமீனும் செல்ல வேண்டும் என்பதைப் பாவப்பட்ட வயதான யாக்கோபு கேட்டபோது, இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்து, இது ஒருக்காலும் நடக்காது என்று கூறினார். யோசேப்பும் மரித்துவிட்டார் மற்றும் இப்பொழுது அவரது [R5226 : page 126] இளைய குமாரனாகிய பென்யமீனையும் அவர் இழந்துபோக நேரிட்டால், அந்தத் துயரமானது, அவரது நரைமயிரை வேகமாய் ஷீயோலுக்கு, அதாவது கல்லறைக்கு, அதாவது மரண நிலைக்குக் கொண்டுபோய்விடுவதாக இருக்கும்.

நம்முடைய பொதுவான ஆங்கில வேதாகம மொழியாக்கத்தில், இந்த ஷீயோல் எனும் வார்த்தையானது, அடிக்கடி hell, pit மற்றும் grave என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. முற்காலங்களில் இந்த மூன்று ஆங்கில வார்த்தைகளுமே, ஒரே பொருளை உடையவைகளாகக் காணப்பட்டது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் தான் உருளைக்கிழங்குகளைப் புதைப்பதைப் பற்றிக்கூறுகையில், புதைப்பதற்கு “helling” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவான். இந்த வார்த்தையானது, மனுக்குலம் தொடர்புடையதாகப் பயன்படுத்தப்படுகையில், சிலசமயம் சவக்குழி (grave) எனும் வார்த்தைப் பயன்படுத்தப்படுகின்றது. ஷீயோல் எனும் வார்த்தையானது 66 முறைகள் வேதாகமத்தில் இடம்பெறுகின்றதாய் இருக்கின்றது மற்றும் இவ்வார்த்தையானது பாதிக்கு மேற்பட்ட இடங்களில் குழி (pit) என்றும், பாதாளம் (grave) என்றும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

ரிவைஸ்டு (Revised) மொழியாக்கம் ஆயத்தமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வேலையில் ஈடுபட்டிருந்த கல்வி அறிவுள்ள மனிதர்கள், ஷீயோல் எனும் வார்த்தையினை, (சவக்குழி எனும் அர்த்தத்தில்) hell என்று மொழிப்பெயர்த்திடுவதற்கு மறுப்புத் தெரிவித்தவர்களாய் இருந்தனர், ஏனெனில் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அவ்வார்த்தையானது அதன் ஆதி அர்த்தத்தைப் படிப்படியாக இழந்துபோய், அக்கினியும், சித்திரவதையும் உள்ள இடம் எனும் அர்த்தத்தை உடையதாக மாறிவிட்டது. இப்படியான அர்த்தம் எதுவும் எபிரெய வார்த்தைக்கான ஷீயோலுக்கு இல்லாதிருப்பதினால், இந்த மொழிப்பெயர்ப்பாளர்கள், இப்படியான அர்த்தத்தில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பதற்கு மறுத்தனர். இந்த உண்மைகள் பற்றின விஷயத்தை இவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர், பின்னர் இவ்வார்த்தையானது என்னவாக மொழிப்பெயர்க்கப்பட வேண்டும் என்பதில் வாக்குவாதம் எழும்பினது. அனைவருமே ஒன்றுபோல் ஷீயோலை, grave (அ) tomb (பாதாளம்) எனும் ஆங்கில வார்த்தையாக மொழிப்பெயர்க்கும் விஷயத்தில், இப்படிச் செய்வது என்பது சில கிறிஸ்தவ ஜனங்களுக்கு அடிப்படைகளில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதுபோன்று தோன்றுமென அஞ்சி, இப்படியாக மொழிப்பெயர்க்கப்படுவதற்குச் சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.

இறுதியாக இந்த வாக்குவாதத்தை முடித்துவைப்பதற்கான சமாதான ஏற்பாடாக, நமது பொது (common) மொழியாக்கத்தில் எங்கெல்லாம் ஷீயோல் என்ற வார்த்தையும் மற்றும் அதற்கு இணையான கிரேக்க வார்த்தையாகிய ஹேடிசும், hell என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் எபிரெய வார்த்தையான ஷீயோல் (அ) கிரேக்க வார்த்தையான ஹேடிசுக்கும் மாற்று வார்த்தை போடப்பட்டு, மொழிப்பெயர்க்காமல் விட்டுவிடப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது; ஒருவேளை ஏதேனும் ஜனங்கள் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பார்களானால், பரவாயில்லை. ஒருவேளை எவரும் கண்டுபிடிக்கவில்லையெனில், அவர்கள் அறியாமையிலேயே இருந்து, ஷீயோல் மற்றும் ஹேடிஸ் என்பது சித்திரவதை ஸ்தலத்தைக் குறிப்பதாகவே எண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. நமது பேப்டிஸ்ட் (Baptist) நண்பர்கள் சமீபத்தில் இதைப்போன்றதான சிரமத்தைச் சந்தித்தவர்களாகக் காணப்பட்டு, ஷீயோல் மற்றும் ஹேடிசை (கீழ் உலகம்) “under world” என்று மொழிப்பெயர்த்தனர். ஆம் இந்த வார்த்தையானது பாதாளத்தை, கல்லறையை, மரண நிலைமையைச் சுட்டிக்காட்டுவதாகத்தான் உள்ளது மற்றும் இவ்வார்த்தையில் எவரும் குற்றமும் கண்டுபிடிக்க முடியாது.

யாக்கோபு தனது நரைமயிர்கள், பாதாளத்திற்கு (ஷீயோலுக்கு) இறங்குவதாகக் கூறினபோது, தான் நித்தியமான சித்திரவதைக்குள் போவதாக தனது குமாரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனும் அர்த்தத்தில் கூறவில்லை என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியமில்லை. அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெளிவாய் உள்ளது. அவர் பின்வரும் அர்த்தத்தில் கூறினார்: அதாவது, “என் குமாரர்களே, எனக்கு இப்பொழுது மிகவும் வயதாகிவிட்டது மற்றும் தலைமயிர் நரைத்துவிட்டது, மற்றும் நான் என்னுடைய இந்த இளைய குமாரனையும் இழப்பது என்பது, என்னுடைய மரணத்தைத் துரிதப்படுத்துகின்றதாய் இருக்கும்; அதாவது என் நரைமயிர்களை ஷீயோலுக்கு, கல்லறைக்குக்கொண்டு செல்வதாக இருக்கும்” என்பதேயாகும். யாக்கோபினுடைய நரைமயிர்கள் எங்கே செல்லும் என்று யாரும் கேள்வி கேட்க அவசியமில்லை. யாக்கோபின் நரைமயிர்கள் இறுதியில் ஷீயோலுக்குச் சென்றன, ஆயினும் துக்கத்தின் காரணமாக அல்ல. யாக்கோபினுடைய முதிர்வயதானது, அவரது குமாரர்களுடனான ஐக்கியத்தின் காரணமாகவும், யோசேப்பைத் தேவன் எகிப்தினுடைய அதிபதியாக மிகவும் உயர்வாய் உயர்த்தி வைத்துள்ளார் என்ற உணர்ந்துகொள்ளுதலின் காரணமாகவும் மிகவும் மகிழ்வுடன் காணப்பட்டது.

நம்முடைய ஆதார வசனத்தினுடைய படிப்பினை

பரிசுத்தவானாகிய பவுல், நாம் இதுவரை பார்த்து வந்துள்ளதான பொதுவான கண்ணோட்டத்தை, அதாவது ஒரு மனுஷன் எதை விதைப்பானோ, அதையே அவன் அறுப்பான் என்பதை முன்வைத்திருந்தபோதிலும், இவ்வார்த்தைகளை அவர் குறிப்பாய்ச் சபையினுடைய அனுபவங்கள் தொடர்புடையதாகவே பயன்படுத்தியுள்ளார் என்பது நிச்சயமே. இவ்வசனத்தினுடைய முன், பின் பாகங்கள் சபைக்கே பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இவ்வசனத்தின் முன், பின் பாகங்களானது தேவனுடைய அர்ப்பணம் பண்ணப்பட்ட ஜனங்களுக்கு நேரடியாகப் பொருந்துகின்றதாய்க் காணப்பட்டு, கிறிஸ்துவுடன் மரிப்பதற்கான அர்ப்பணம் பண்ணுதல் மாத்திரம் போதாது என்று அவர்களுக்கு உறுதிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இன்னுமாக தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார் என்றும், தேவனை ஏமாற்ற முடியாது என்றும், தேவனிடத்தில் விளையாட முடியாது என்றும் உறுதிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. தேவன் நம்முடன் உடன்படிக்கைக்குள் பிரவேசித்திருக்கின்றாரெனில், நாமும் அதற்கு உடன்பட்டிருப்பதே ஏற்புடையதாகும்.

கர்த்தரோடு கிறிஸ்தவர்கள் பண்ணியுள்ள உடன்படிக்கையினை அப்போஸ்தலன் விவரிக்கின்றார். கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும், அங்கீகரிக்கத்தக்கதாகவும் காணப்படுவதற்கு ஏதுவாயும் மற்றும் ஆவியின் ஜீவிகளென, கிறிஸ்துவுக்குள்ளான புதிய சிருஷ்டிகளெனத் திரைக்கு அந்தப் பக்கத்தில் அடையப்பெறும் அழியாக் காரியங்களில் இயேசுவுடன் உடன் சுதந்தரர்களாகுவதற்கு ஏதுவாயும், அனைத்துப் பூமிக்குரிய விஷயங்களையும், நம்பிக்கைகளையும், இலட்சியங்களையும் பலிச்செலுத்திடுவதற்கு உடன்படிக்கைப் பண்ணியுள்ளனர். “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்” என்று அப்போஸ்தலன் குறிப்பிடுகின்றார். ஆகையால் மாம்சத்தினுடைய சித்தத்திற்கென்று மரிப்பதற்கும், மற்றும் தேவனுடைய சித்தத்திற்கென்று பிழைப்பதற்கும் என்று தேவனுடன் இந்த உடன்படிக்கைக்குள் பிரவேசித்துள்ள ஒரு கிறிஸ்தவன், மாம்சத்தின்படி ஜீவிப்பானானால், அதாவது மாம்சத்தினுடைய விருப்பங்களுக்கும், அதன் தூண்டுதல்களுக்கும், அதன் வழிநடத்துதல்களுக்கும், அதன் ஆசைகளுக்கும் இசைவாக ஜீவிப்பானானால், அந்த மனிதனுடைய வழியின் முடிவானது மரணம், அதாவது எருசலேம் நகரத்திற்கு வெளியே கழிவுப்பொருட்களை அழித்துப்போடுகின்றதான கெஹன்னா நெருப்பினால் அடையாளப்படுத்தப்படும் இரண்டாம் மரணமாய் இருக்கும் என்று அப்போஸ்தலன் விவரிக்கின்றார்.

ஆனால் ஒரு மனிதன் ஆவிக்கென்று விதைத்தால் சரியான திசையை நோக்கின ஆரம்பத்தை மாத்திரம் எடுக்காமல், தனது அர்ப்பணத்தின் உடன்படிக்கைக்கு இசைவாக ஜீவிப்பதின் மூலமாக புதுச் சிருஷ்டிக்கு ஏற்றபடி ஜீவித்தானானால், இதற்கேற்ப அறுப்பவனாய் இருப்பான். இதுவரையிலும் வாழ்ந்ததிலேயே சிறந்த தேவ ஜனங்களாகக் காணப்பட்டவர்களில் சிலர், மாம்சத்தினுடைய சோதனையின் கீழ் ஏறக்குறைய கடுமையான பிழைகளைச் செய்திருக்கின்றனர். ஆனால் பாவத்திற்குள் இடறிவிழுதல் என்பது மாம்சத்திற்கேற்ப ஜீவித்தலாகாது; இது மாம்சத்திற்கேற்ப ஜீவித்தலுக்கான ஆரம்பமாக மாத்திரமே காணப்படும். தனது பாவம் மற்றும் பெலவீனம் காரணமான அனுபவங்களைச் சரியாய்ப் பெற்றுக்கொள்கின்றதான ஆத்துமாவானது, குணமடைந்து, பரலோகக் கிருபையின் சிங்காசனத்தினிடத்திற்குத் திரும்பி, இயேசுவின் நாமத்தில் இரக்கத்தை அடைந்து மற்றும் எதிர்க்காலத்தின் போதான, தேவைக்குக் கிருபையைக் கண்டடைகின்றதாய் இருக்கும். ஆனால் இந்த வாய்ப்புகளும், சிலாக்கியங்களும் பயன்படுத்தப்படவில்லையெனில், மற்றும் மாம்சத்திற்கேற்ற ஜீவிய போக்கானது தொடரப்படுமாகில், விளைவு மரணமாகவே இருக்கும்.

ஆகையால் நீதியாய் ஜீவிப்பதற்கும், சுயத்தைப் பலிச் செலுத்தும் ஜீவியம் ஜீவிப்பதற்கும் ஆரம்பிப்பது மாத்திரம் போதாது; ஒரு தவறு செய்த பிற்பாடு நீதியான பாதைக்கு நேராய்த் திரும்புவது என்பதும், மனம் வருத்தத்திற்கான சில கண்ணீர்களைச் சிந்துவது என்பதும் மாத்திரம், ஒருவர் குணமடைவதற்குப் போதாது. ஆனால் நாம் ஆவிக்கேற்றப்படி ஜீவித்து, ஆவியினால் மாம்சத்தின் கிரியைகளை அழித்துப்போடுவோமானால், அப்பொழுது நாம், உண்மையுள்ளவர்கள் அனைவருக்கும் தேவனால் வாக்களிக்கப்பட்டுள்ளதான நித்திய ஜீவனை அடையலாம். ஆவிக்கேற்றப்படி ஜீவிப்பது என்பது ஒரு மாபெரும் ஒப்பந்தமாகும் மற்றும் நாம் தவறில் விழுந்துவிடாதபடிக்கும், தேவனுடைய வாக்குத்தத்திலுள்ள இந்த விலையேறப் பெற்றவைகளை நாம் நழுவ விட்டுவிடாதபடிக்கும், இந்தத் தற்கால ஜீவியத்தின் கவலைகளினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும் அமிழப்பட்டுப்போகாதபடிக்கும், நம்முடைய விசுவாசம் பெலவீனமடைந்து, நாம் வழியிலே வலுவிழந்து போகாதபடிக்கும், காணப்படத்தக்கதாக தொடர்ச்சியான விழிப்பும், ஜெபமும் அவசியப்படுகின்றதான ஓர் ஒப்பந்தமாகும்.

பின்வரும் எண்ணத்தை நம்முடைய மனங்களுக்கு முன்பாக நாம் தெளிவாய்க் கொண்டிருப்பது அவசியமாகும்; அதாவது ஒவ்வொரு கிரியையும், வார்த்தையும், சிந்தனையும், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய ஜீவியத்தின், இறுதி விளைவுகள் மீது அதன் தாக்கத்தை கொண்டிருந்தாலும், எந்த ஒரு கிரியையும், எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு சிந்தனையும் மாத்திரமே நன்மைக்கு ஏதுவானதையோ (அ) தீமைக்கு ஏதுவானதையோ தீர்மானிக்க காரணமாய் அமைந்துவிடாது. நாம் எந்தளவுக்கு நேர்மையாய்க் காணப்படுகின்றோமோ, எந்தளவுக்கு உண்மையுள்ளவர்களாய்க் காணப்படுகின்றோமோ, அப்போது நாம் குறைவான இடறிவிழுதல்களை உடையவர்களாய் இருப்போம் மற்றும், நம்முடைய மீட்பரைப்போன்று அதிகமாய்க் காணப்படுவோம் மற்றும் நம்முடைய பலனும் பிரகாசமானதாய்க் காணப்படும், ஏனெனில், “மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.

உலகத்தார் தங்கள் ஒவ்வொரு நன்மை மற்றும் ஒவ்வொரு தீமையான கிரியைகளானது, மேசியாவின் இராஜ்யத்தினுடைய ஒழுங்குகளின் கீழான ஜீவன் (அ) மரணத்திற்கான தங்களது பரீட்சைத் தொடர்புடைய விஷயத்தில் தாக்கம்கொண்டிருப்பதை அக்காலத்தில் அறிந்துகொள்வார்கள். கிறிஸ்துவோடுகூடப் பிழைக்கத்தக்கதாகவும், கிறிஸ்துவுடன் மரிக்கத்தக்கதாகவும், அவரோடுகூடப் பாடுபடத்தக்கதாகவும், உடன்படிக்கைக்குள் பிரவேசித்திருக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும், தனது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு கிரியையும், மாபெரும் விளைவுகளுடன் சம்பந்தம் உடையதாய்க் காணப்படுகின்றது என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போஸ்தலர் கூறுவதுபோன்று, இவர்கள் தேவனுக்குப் பிரியமானவைகளை அறிய நாடுவதற்கும், அவைகளைச் செய்திடுவதற்கும் மற்றும் உயர்வான பலனை அடைந்திடுவதற்குமென்று, ஞானத்துடனும், கவனத்துடனும், ஜீவியத்தில் நடந்துகொள்ளுதல் வேண்டும்.
ஆமென்!