R2893 – இரக்கமுள்ள யோசேப்பு

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R2893 (page 327)

இரக்கமுள்ள யோசேப்பு

JOSEPH THE MERCIFUL

“ஆதியாகமம் 45:1-15

“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” ரோமர் 12:21

மனிதர்களுடைய காரியங்களிலுள்ள தெய்வீகப் பராமரிப்புப் பற்றின விஷயமே இப்பாடத்தினுடைய சாராம்சமாகும். யோசேப்பு எகிப்தினுடைய பார்வோனுக்கு அடுத்த நிலையில் ஒன்பது வருடங்கள் காணப்பட்ட பிற்பாடு, அவருக்கு முப்பத்தொன்பது வயதாய் இருந்தது. பரிபூரண விளைவுள்ள ஏழு வருடங்கள் கடந்துபோய்விட்டன் எகிப்தின் தானியக் களஞ்சியங்களானது, திரளான தானியங்களினால் நிரம்பியிருந்தது மற்றும் உரைக்கப்பட்டப்படி வந்திட்ட ஏழு வருட பஞ்ச காலத்தில், இரண்டு வருடங்களும் கடந்துபோய்விட்டன. யோசேப்பு தன்னுடைய தகப்பனோடும், சகோதரர்களோடும் தொடர்புகொள்வதற்கு எவ்விதமான முயற்சியும் எடுத்துக்கொள்ளாததுபோன்று தோன்றுகின்றது; இதற்குக் காரணம், அந்நாட்களில் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகள் மிகவும் சிறிய அளவிலேயே இருந்ததினால் இருக்கலாம்; இன்னுமாக தொடர்பு கொள்ள முற்படாததற்குக் காரணம், யோசேப்பு சில வருடங்களாக தெய்வீகப் பராமரிப்பானது, தனது காரியங்களை வழி நடத்திக்கொண்டுவருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டு வந்தார் என்றே நாம் மிகக் குறிப்பாய் எண்ணுகின்றோம். யோசேப்பு தன்னுடைய இளம் வயதில் தனக்கு வந்திட்டச் சொப்பனங்களை நினைவில் வைத்திருந்தார் மற்றும் அவைகள் இப்பொழுது நிறைவேறி வருவதையும் அவரால் காணமுடிந்தது. ஆகவே தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டிருக்கும் அக்காரியத்தை, யோசேப்பு தெய்வீக மேற்பார்வையின் கீழாகவே விட்டுவிட்டார். யோசேப்பு பஞ்சத்தைக் குறித்தும், அது எவ்வாறு பாலஸ்தீனியாவையும் பாதிக்கும் என்பது குறித்தும், எவ்வாறாக தனது தகப்பனையும், சகோதரர்களையும், அவர்கள் குடும்பங்களையும், மந்தைகளையும் பாதிக்கும் என்பது குறித்தும் சிந்தித்திருந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. சுற்றுப்புறங்களிலுள்ள மற்ற ஜனங்கள் தானியம் வாங்குவதற்கென எகிப்துக்கு வருவதுபோல, எபிரெயர்களும் எகிப்துக்கு வருவார்கள் என்று யோசேப்பு எதிர்பார்த்திருந்திருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை; எபிரெயர்கள் பஞ்சகாலத்தினுடைய, இரண்டாம் வருஷத்தின் முடிவில் எகிப்துக்கு வரவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்கள்.

பிரதான அதிகாரியினுடைய அனுமதியில்லாமல், அந்நிய நாட்டினர்களுக்குத் தானியங்கள் விற்பனை செய்வதைத் தடைப்பண்ணுகிற கட்டளைகள் ஏதேனும் இருந்திருக்க வேண்டுமென்று நாம் அனுமானிக்கின்றோம்; ஆகையால்தான் யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம் விவரங்கள் சொல்லத்தக்கதாக, யோசேப்பின் முன்னிலையில் கொண்டு வரப்படுவதற்கான கட்டாயத்துக்குள்ளானார்கள். யோசேப்பு தனது சகோதரர்களைப் பரீட்சிக்கத்தக்கதாக, அவர்களை வேவுகாரர்கள், அதாவது அயல்நாட்டின் இரகசியமான தூதர்கள் என்று கூறி, முதலாவதாக சிறையில் அடைக்கும் சம்பவமானது, தடைப்பண்ணும் கட்டளைப் பற்றின நம்முடைய மேற்கூறிய அனுமானத்திற்கு ஆதரவளிக்கின்றது; அதாவது தானியம் விஷயத்தில் எகிப்தின் செல்வச் செழிப்பை அறிந்துகொண்டு, எகிப்தின் மீது தாக்குதல் பண்ணத் திட்டம்போடும் அயல் நாட்டாரின் வேவுக்காரர்களென யோசேப்பு, தன் சகோதரர்களைக்கூறிச் சிறையில் அடைத்தார். இது யோசேப்பு தனது சகோதரர்களுடைய வீட்டுச் சூழ்நிலைகள் குறித்தும், தனது தகப்பனைக் குறித்தும், எகிப்திற்கு வந்திருந்த தன்னுடைய சகோதரர்கள் மத்தியில் காணப்படாத தன்னுடைய தம்பியாகிய பென்யமீனைக் குறித்தும் திட்டவட்டமாய் விசாரிப்பதற்கு வாய்ப்பை அளித்தது. பஞ்சம் தொடரும் என்பதினால், அவர்கள் மீண்டுமாக எகிப்துக்கு வரவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகக் காணப்படுவார்கள் என்பதை யோசேப்பு நன்கு அறிந்தவராக, சிமியோனை எகிப்திலே பிணைக் கைதியாக வைத்து, அவர்கள் மீண்டும் வருகையில், பென்யமீனை அழைத்து வருவதன் முலம், அவர்கள் சொல்லிய வார்த்தைகளின் உண்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு இறுதியாக அருளினார். இந்த அனுபவங்களானது, அந்தப் பத்துச் சகோதரர்களுக்கும் விலையேறப்பெற்ற படிப்பினையாக இருந்தது மற்றும் இந்த அனுபவங்களானது, யோசேப்பின் விஷயத்தில் அவர்கள் கடந்த காலத்தில் செய்த தவற்றை, அவர்களுடைய மனங்களுக்கு நினைப்பூட்டினது, ஏனெனில் தங்களுக்கான இந்தப் பிரச்சனையை, தங்களுக்கான தண்டனையென அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரையொருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான். யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்” (ஆதியாகமம் 42:21-23).

யோசேப்பு கடின இருதயமுடையவரல்ல, மாறாக தன்னுடைய சகோதரர்களை நடத்தும் விஷயத்தில் ஞானமாய் நடந்துகொண்டார். எந்த ஒரு காரியத்தையுங்கூட அவர் பழிவாங்கும் நோக்கத்தில் செய்யவில்லை. யோசேப்பு, தேவனுடைய கண்ணோட்டத்தையே கொண்டிருந்தார்; அதாவது தீமை செய்பவர்கள், பாவத்தினுடைய பாவ தன்மையினை மனதில் முற்றிலுமாக உணர்ந்துகொள்ளத்தக்கதாக, தீமை செய்பவர்கள் மீது கொஞ்சம் தண்டனை வருவது சரியானதே என்ற தேவனுடைய கண்ணோட்டத்தையே, யோசேப்பும் கொண்டிருந்தார். இவ்வாறாகவே பிள்ளைகளுடைய பெற்றோர்களும், பாதுகாவலர்களும், பிள்ளைகள் தவறு செய்தமைக்கான, நியாயமான, மிதமான தண்டனையை அவர்களுக்குக் கொடுக்கும் விஷயத்தில், பெற்றோர்கள் தங்களது அன்பும், அனுதாபமும் இடையூறாக இருந்திட அனுமதிக்கக்கூடாது. மாறாக யோசேப்பின் விஷயத்தில் காணப்பட்டதுபோலவே, தண்டனைக் கொடுக்கும் விஷயமானது, அனுதாபத்தினாலும், அன்பினாலும்தான் இயக்கப்பட வேண்டும்; அதாவது சரியான வாய்ப்பையும், அதிகளவிலான ஆசீர்வாதத்தையும் திட்டமிடுகிறதாகவே காணப்பட வேண்டும்.

அவர்களது தானியங்கள் தீர்ந்துபோய், தானியம் தேவை என்ற நிலை வந்தபோது, இரண்டாம் முறையாக தானியம் வாங்கத்தக்கதாக, பென்யமீனை தன்னுடைய சகோதரர்களோடுகூட, எகிப்துக்குப்போக அனுமதிப்பதற்கு இறுதியில் யாக்கோபு ஒத்துக்கொண்டார்; அதுவும் பென்யமீன் இல்லாமல் தான் வீடு திரும்புவதில்லை என்று யூதா வாக்களித்த பிற்பாடே, பென்யமீனை அனுப்புவதற்கு யாக்கோபு சம்மதித்தார். யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பினுடைய வீட்டிற்கு இரண்டாம் முறையாக வந்ததும், தாங்கள் முந்தின தருணத்தில் சொல்லியிருந்த பென்யமீனோடு வந்ததும், அவர்கள் மிகவும் கிருபையாய் உபசரிக்கப்படுவதற்கும், சிமியோன் விடுவிக்கப்படுவதற்கும் போதுமானதாய் இருந்தது. சகோதரர்கள் பதினொரு பேரும் எதிர்பார்த்திராத விதத்தில், அதிபதியாகிய யோசேப்புடன் விருந்துண்ண வரவேற்கப்பட்டார்கள். சகோதரர்கள் அவரவர் வயதின்படியே பந்தியைச் சுற்றி, ஏதோ ஒருவிதமான ஏற்பாட்டினால் அமர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, யோசேப்பின் சகோதரர்கள் ஆச்சரியமடைந்தனர்; இன்னுமாக அதிபதியானவருடைய விசேஷித்த அக்கறைக்கான ஆதாரமாக, பென்யமீனாகிய தங்களது இளைய சகோதரனுக்கு, ஐந்து மடங்கு போஜனத்தில் பங்குகள் கொடுக்கப்பட்டதினிமித்தமும் ஆச்சரியமடைந்தார்கள். தங்களுக்குக் கிடைத்திட்ட இந்த அதிர்ஷடத்தைக் குறித்து அவர்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை; அவர்கள் தங்கள் வீட்டை நோக்கிப் பிரயாணிக்க ஆயத்தமாகுகையில், பின்வருமாறு தங்களுக்குள்ளாக எண்ணியிருந்திருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை; அதென்னவெனில், “நாம் முந்தினமுறை எகிப்துக்கு வந்திருந்தபோது, நமக்கு வந்தப் பிரச்சனைகளை நமக்கான தண்டனைகள் என்றும், அதைத் தேவனே அருளினார் என்றும் எண்ணினோம்; ஆனால் நாம் ஒற்றர்களாக எண்ணப்பட்ட சம்பவம் தற்செயலாய் நடந்த ஒன்றுதான். பாருங்கள் நாம் இப்பொழுது செழித்தோங்குகின்றோம்.”

ஆனால் அவர்கள் கொஞ்சந்தூரம் போவதற்குள்ளாகவே, அவர்களை அதிபதியின் ஊழியர்கள் தொடர்ந்து பிடித்தார்கள்; அந்த ஊழியர்கள் திருட்டு நடந்துள்ளது என்றும், அதிபதியினுடைய விலையேறப்பெற்ற வெள்ளிப் பாத்திரம், அதாவது எகிப்தியர்களால், “புனிதமான பாத்திரம்” என்று அழைக்கப்படும் வெள்ளிப்பாத்திரம் காணவில்லை என்றும் அவர்களுக்கு அறிவித்தார்கள். யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தாங்கள் அப்படியான காரியங்களைச் செய்யும் மனிதர்களல்ல என்றும், தாங்கள் முற்றிலுமாகப் பரிசோதனைப் பண்ணப்படலாம் என்றும் கூறினார்கள். ஒவ்வொருவரின் சாக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாகப் பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் பாத்திரமானது பென்யமீனுடைய சாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது; கொஞ்சம் முன்பு மகிழ்ந்திருந்த யோசேப்பின் சகோதரர்கள், இப்பொழுது தாங்கள் சமீபத்தில் அனுபவித்த உபசரிப்புகளைக் கொடுத்திட்ட எகிப்தின் அதிபதியினிடத்திற்கு, கைதிகளாக [R2893 : page 328] திரும்பக்கொண்டுவரப்பட்டார்கள். அநேகமாக அவர்கள் மீண்டுமாக யோசேப்பினுடைய காரியத்தை நினைவுகூர்ந்து, “நாம் கடந்துபோய்விட்டது என்று எண்ணின பொல்லாப்பு, நம்மை இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது” எனத் தங்களுக்குள்ளாகச் சொல்லயிருந்திருக்க வேண்டும். இது நேர்மையினுடைய முக்கியத்துவத்தையும், நீதியின் உருளைச் சக்கரங்கள் சில சமயம் மெதுவாக அரைத்திட்டாலும் அது நிச்சயமாகவும், நன்கும் அரைக்கும் என்ற கருத்தையும் அவர்களது மனதில் பதிய வைத்திட உதவும் நல்ல படிப்பினையாகக் காணப்பட்டது என்பதில் ஐயமில்லை.

பென்யமீன் தன் சகோதரர்களோடு சேர்ந்து, தான் பாத்திரத்தைத் திருடவில்லை என்று மறுத்தார்; மற்றச் சகோதரர்கள் பென்யமீன் கூறினதை நம்பினார்களோ, இல்லையோ, பென்யமீன் மீது விசேஷமாய்ப் பழிச்சுமத்தப்படாதபடிக்குப் பெருந்தன்மையுடன் பழியை அனைவரும் பகிர்ந்துகொண்டார்கள். சகோதரர்கள் அனைவரின் சார்பிலும் யூதா பின்வருமாறு பேசினார்: “என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தைத் தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும், நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள்”. தங்களுடைய அக்கிரமத்தின் விவரத்தைப்பற்றி அவர்கள் யோசேப்புக்கு விவரித்துக் கூறவில்லை என்றாலும், தங்களது அக்கிரமம் என்ன என்பது பற்றி அவர்கள் தங்கள் மனதில் நன்கு அறிந்திருந்தனர். தன்னிடத்தில் தனது சகோதரர்கள் காண்பித்திருந்த அதே பொல்லாப்பான மற்றும் பொறாமையான பண்புகளை, அவர்கள் இன்னமும் எவ்வளவு கொண்டிருக்கின்றனர் என்பதை யோசேப்பு அறிய விரும்பி, மற்றவர்கள் அனைவரும் போய்விடலாம் என்றும், பென்யமீனை மாத்திரம் தான் அடிமையாக வைத்துக்கொள்ளப் போகின்றார் என்றும் அறிவித்தார். யோசேப்பினுடைய தந்திரம் பலித்தது மற்றும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவருடைய சகோதரர்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளனர் என்றும், குணலட்சணங்களை வளர்த்தியுள்ளனர் என்றும், இதனால் அவர்கள் இப்பொழுது தங்களுடைய தகப்பனுக்காகவும், அவர்களில் ஒருவர் மற்றொருவருக்காகவும் அனுதாபம் கொண்டுள்ளனர் என்றுமுள்ள உண்மையும் வெளியானது. யோசேப்பின் விஷயத்தில் அவர்கள் கொண்டிருந்த தவறான நடக்கையானது தொடரப்படாமல், மாறாக அதைக் குறித்து அவர்கள் மனவருத்தமே அடைந்திருந்தனர். யூதா சூழ்நிலைகள் அனைத்தையும், யோசேப்புக்கு, துபாசியின் வாயிலாக (மொழிபெயர்ப்பாளனின்) விவரித்தார்; பென்யமீன் மீது யாக்கோபு கொண்டுள்ள அன்பையும், யோசேப்பு மரித்துவிட்டதாக எண்ணி யாக்கோபு அடைந்த துக்கத்தையும், யாக்கோபு தனது குடும்பத்தின் மீது கொண்டுள்ள அக்கறையையும் யூதா மிகவும் தீவிரமாய்க் காண்பித்தப்படியினால், யோசேப்பினால் தனது உணர்வுகளை அடக்கக்கூடாமற்போயிற்று. தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது என்பதை யோசேப்பு உணர்ந்துகொண்டு, இப்படியான சந்தர்ப்பத்தில் தனது சகோதரர்கள் அதிகம் தர்மசங்கடத்திற்கு ஆளாகாதபடிக்கு, அனைத்து எகிப்தியர்களையும் அறையிலிருந்து வெளியேறும்படிக்குக் கட்டளையிட்டார்; பின்னர்த் தான்தான் அவர்களது சகோதரனாகிய யோசேப்பு என்று சுருக்கமாகவும், அனுதாபத்துடனும்/ அன்புடனும் அவர்களுக்கு விளக்கினார்.

தாங்கள் ஒருவேளை, யோசேப்பு காணப்படும் அதிகாரமுள்ள ஸ்தானத்தில் இருந்திருந்தால், தங்களுக்கு எதிராக தீமை செய்திருக்கும் ஒருவரை, தாங்கள் எவ்வாறு பழிவாங்க நாடியிருப்பார்கள் என்பதை யோசேப்பின் சகோதரர்கள் எண்ணிப்பார்த்தப்போது, அவர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் யோசேப்போ, அவர்களுக்கு எதிராக தான் எவ்விதமான இரக்கமற்ற உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவர்களிடத்தில் தான் இரக்கமாய் இருக்கின்றார் என்றும், மன்னித்துவிட்டார் என்றும் அவர்களைச சீக்கிரமாய் நம்பவைத்தார். இம்மாதிரியான சூழ்நிலைகளில், யோசேப்பினால் வெளிப்படுத்தப்பட்டதான ஆவி, சுபாவப்படியான மாம்சீக மனுஷனினால் மாத்திரமல்லாமல், “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய்ப் புதுச் சிருஷ்டிகளாய் இருப்பவர்களாலும்” பின்பற்ற தகுந்த ஒன்றாகும். இம்மாதிரியான காரியங்களில் பரந்த மனப்பான்மையுள்ளவர்களாகவும், அன்பானவர்களாகவும், மன்னிக்கிறவர்களாகவும் கர்த்தருடைய ஜனங்கள் இருப்பதற்குப்பதிலாக, குறுகிய மனப்பான்மையுடையவர்களாக இருப்பதை அடிக்கடி காண்கின்றோம். எபிரெய மொழியிலேயே தன்னுடைய சகோதரர்களிடத்தில் இப்பொழுது பேசிக்கொண்டிருந்த யோசேப்பு தன்னுடைய வார்த்தைகளினால் மாத்திரமல்லாமல், முன்பு நடந்த சம்பவங்கள் பற்றின தனது அறிவின்படி, தான்தான் அவர்களுடைய சகோதரன் என்று அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளத்தக்கதாக, “நான் யோசேப்பு” என்றும், “எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” என்றும் திரும்பத்திரும்ப எடுத்துக்கூறினார். யோசேப்பு இவைகளை மிகவும் இரக்கத்துடன் பேசினப்படியாலும், அவருடைய வார்த்தைகளிலும், கிரியைகளிலும் கோபமும், வன்மமும் முற்றிலுமாக இல்லாதிருந்ததினாலும், அவர்கள் நம்பிக்கைக்கொண்டு, யோசேப்பு கிட்டவரும்படிக்கு அழைத்ததற்கு இணங்க, யோசேப்பிற்கு அருகே வந்தார்கள்.

அநேக கிறிஸ்தவர்கள் ஒருவேளை யோசேப்பினுடைய ஸ்தானத்தில் காணப்பட்டு இருந்திருப்பார்களானால், தங்களது சகோதரர்களைத் தவறாய்க் கணித்துவிடுவதன் மூலமும், தங்கள் சகோதரர்களிடம், அவர்களின் தவறைத் திரும்பவும் கூறிப் பிரசங்கம் பண்ணிவிடுவதன் மூலமும் மேலும் தங்களது வல்லமையின் கீழ் அச்சகோதரர்கள் காணப்படுவதினால் எப்படியெல்லாம் தங்களால் அவர்களைத் துன்பப்படுத்த முடியும் என்றும், மற்றும் இப்படியாக முடியும் என்றாலும், தாங்கள் அவர்களை இப்படியாகத் துன்பப்படுத்துவதில்லை என்றும் கூறிவிடுவதன் மூலமும், இந்த மாபெரும் பாடத்தினுடைய முழுத் தாக்கத்தையும், தங்களது சகோதரர்களிடத்தில் கெடுத்துப்போட்டு விடுவார்கள். ஆனால் இப்படியாக நடந்து, தாக்கத்தைக் கெடுத்துப்போட முடியாதளவுக்கு, யோசேப்பு மிகவும் ஞானமுள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும் காணப்பட்டார். இப்படியாக நடந்துகொள்ளாமல் மாறாக, “என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்” என்றே யோசேப்பு கூறினார். சுபாவத்தின்படியான ஒரு மனுஷன் (யோசேப்பு), இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய ஆவியை, இவ்வளவுக்குப் பெற்றிருப்பது என்பது ஆச்சரியமே; யோசேப்பு சுபாவத்தின்படியான மாம்ச மனுஷன்தான் என்பதையும் நாம் அறிவோம்; பெந்தெகொஸ்தே [R2894 : page 328] நாள்வரை, நம் சந்ததியிலுள்ள எவர்மேலும், பரிசுத்த ஆவி பொழியப்படவில்லை. இது முற்பிதாக்களுடைய குணலட்சணத்தைப் பற்றிய ஒரு குறிப்பையும் அளிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது ஆதியில் மனிதன் கொஞ்சம் குரங்கிற்கு மேற்பட்டவனாகவும், கரடுமுரடான மற்றும் காட்டுமிராண்டித்தனமான இயல்புகளை உடையவனாகவும் இருந்தான் என்ற பரிணாமக் கொள்கைக்கு எதிரான ஒரு குறிப்பையும் அளிக்கின்றதாய் இருக்கின்றது.

“ஜீவரட்சணை செய்யும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்ற சொற்ப வார்த்தைகளின் மூலம் யோசேப்பு, ஒரு மாபெரும் பிரசங்கத்தைத் தன்னுடைய சகோதரர்களுக்குப் பண்ணினார்; அதாவது, “நீங்கள் செய்திட்ட தவறான காரியத்தை, தேவன் இவ்விதமாய் நன்மைக்கு ஏதுவாக மாற்றிப்போட்டு, அதிலிருந்து ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தார்”; . இப்படியாகக் காரியங்களை, தான் புரிந்துகொள்வதற்கு, அவர்கள்தான் காரணம் என்று யோசேப்பு தெரிவித்தார். அவர்களது செய்கைகளைக் கர்த்தர் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போட்டார் என்பதினால், அவர்களது செய்கை/நடக்கை சரியானது (அ) ஏற்றது ஆகாது; கர்த்தர் அவர்களது செய்கைகளை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போட்டக் காரியமானது, யோசேப்பு மீதும், யாக்கோபின் வீட்டார் மீதுமான தெய்வீக வல்லமையே, தெய்வீக ஞானமே, தெய்வீகப் பராமரிப்பே அனைத்துக் காரியங்களையும், அதாவது தீமையான விஷயங்களையும், தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போட்டுள்ளது என்பதை மாத்திரம் நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது. சகோதரர்களுடைய இந்த அனுபவங்கள் வாயிலாகவும், யோசேப்பின் சிறிய பிரசங்கத்தின் வாயிலாகவும், யோசேப்பின் சகோதரர்களுக்குக் கிடைத்திட்டதான படிப்பினையானது, அச்சகோதரர்களுக்கு எத்துணை மாபெரும் படிப்பினையாகவும், மனதிலிருந்து மாறவே செய்யாததாகவும் எவ்வளவாய்க் காணப்பட்டது என்பதை நம்மால் சொல்ல இயலாது;

ஆனால் நமக்கு எதிராய் வேண்டுமென்றே பாவம் செய்தவர்களிடத்தில் இரக்கம் காட்டுதல் தொடர்புடைய விஷயத்தில், தேவனுடைய ஜனங்கள் அனைவருக்கும் இங்கு மாபெரும் படிப்பினை உள்ளது; இன்னுமாக நம்முடைய ஜீவியத்தின் காரியங்கள் தொடர்புடைய விஷயத்திலுள்ள தெய்வீகப் பராமரிப்பைக் கவனித்தல் மற்றும் கண்டுபிடித்தல் பற்றின மாபெரும் படிப்பினையும் இங்குள்ளது. நாம் தெய்வீகப் பராமரிப்புகளைக் கவனிக்கிறவர்களாக மாத்திரம் இராமல், “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்” என்று சொல்லப்பட்டிருக்கிறதுபோன்று, தெய்வீகப் பராமரிப்பின் மீது நம்பிக்கையும் வைக்க வேண்டும் (நீதிமொழிகள் 3:6).

யோசேப்பு தன்னுடைய அனுபவங்களினால், தனக்குள் அதிகளவிலான சுயமேட்டிமையை வளர்த்துவதற்கு அனுமதித்திருக்க முடியும். தான் அதிர்ஷ்டம் உள்ளவன் அல்லது தான் இயல்பாகவே அறிவுமிக்கவன், எளிதில் கவருபவன், சாதுர்யவான் என்றும், இத்தன்மைகளே தனது வெற்றிக்கான காரணம் என்றும், இதுவே தன்னுடைய தகப்பன் தன்னை விசேஷமாய் நேசித்ததற்கான காரணம் என்றும், இக்காரணங்களினாலேயே, தான் அடிமையாக விற்கப்பட்டபோது, தான் செல்வமிக்க நல்ல எஜமானால் வாங்கப்பட்டார் என்றும், தன்னுடைய இந்தத் திறமைகளினால்/சிறப்பு அம்சங்களினால்தான், போத்திபாருடைய இல்லத்தில் உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்றும், இந்தத் தன்னுடைய சிறப்பு இயல்புகளினாலேயே, தான் சிறைச்சாலையிலுங்கூட உயர்வு பெற்றார் என்றும், தன்னுடைய கூரிய அறிவாற்றலினால், தன்னால் சொப்பனங்களுக்கு வியாக்கியானம் கொடுக்க முடிந்தது என்றும், தான் அனைத்து விஷயங்களிலுமே மற்றவர்களைக் காட்டிலும் மிஞ்சிக் காணப்பட்டார் என்றும், மற்றவர்களும் இவைகளை அறிந்திருந்தார்கள் என்றும், இவ்வாறாக இயல்பாகவே தான்தான் உயர் ஸ்தானத்தை அடைந்தார் என்றும், சிலர் எண்ணிக்கொள்வதுபோன்று, யோசேப்பாலும் தனக்குள் சிந்தித்திருக்க முடியும். ஒருவேளை யோசேப்பு மேற்கூறியபடி தற்பெருமையும், கர்வமும் கொண்டிருந்திருப்பாரானால், அது அவருடைய வீழ்ச்சிக்கு நேராகவே வழி நடத்தியிருக்கும் என்பதும், தேவன் தொடர்ந்து யோசேப்பை ஆசீர்வதித்து, முன்னேற்றமடைய மற்றும் வளம்பெறச் செய்திருக்க மாட்டார், என்பதும் நமக்கு நிச்சயமே. இன்னுமாக ஒருவேளை மேற்கூறியபடி யோசேப்பு, பெருமை மற்றும் தற்பெருமையின் ஆவியை வளர்த்தி இருப்பாரானால், அவருடைய சகோதரரிடத்திலான நடக்கையானது, பதிவு செய்யப்பட்டுள்ள காரியங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்திருக்கும் என்பதிலும் நமக்கு நிச்சயமே. அவர் மேற்கூறிய பெருமையின் ஆவியை ஒருவேளை கொண்டிருந்திருப்பாரானால், தனது சகோதரர்களிடம் தனது அதிகாரத்தை விளங்கப்பண்ணுவதற்கெனத் தன்னைக் குறித்து அவர்களிடத்தில் பெருமையடித்துக்கொண்டு, அவர்களை மோசமாய் நடத்தி, தன்னை ஓர் அற்ப மனுஷனாகக் காண்பித்திருப்பார்; அதாவது [R2894 : page 329] யோசேப்பினுடைய சரியான நடத்தையானது அவரை ஒரு மாபெரும் மனிதனாகக் காண்பித்தது, ஆனால் அவர் ஒருவேளை பெருமையடித்துக்கொண்டிருப்பாரானால் அவர் தன்னை வெகு அற்பத்தனமான மனிதனாக வெளிப்படுத்தியிருப்பார். யோசேப்பு ஒரு மாபெரும் மனிதனாவார் மற்றும் அவரது மகத்துவமானது, எகிப்து இராஜ்யத்தினுடைய பொருளாதாரத்தின் விஷயத்திலுள்ள அவரது நிர்வாகத்தில் மாத்திரம் வெளிப்படாமல் விசேஷமாக அவர் தேவனைச் சார்ந்திருந்த விஷயத்திலும், தன்னுடைய கொள்ளுத் தாத்தாவாகிய ஆபிரகாம், தாத்தாவாகிய ஈசாக்கு மற்றும் தனது தகப்பனாகிய யாக்கோபு மூலமான தெய்வீக வாக்குத்தத்தமும், ஆசீர்வாதமும் ஏதோ ஒரு விதத்தில் தன்மீதும் காணப்படுகின்றது என்பதையும், இந்தத் தெய்வீகத் தயவினாலேயே, காரியங்கள் இவ்வாறாக நடைப்பெற்று வருகின்றது என்பதையும் பற்றி அவர் உணர்ந்துகொண்ட விஷயத்திலுந்தான் யோசேப்பினுடைய மகத்துவம் வெளிப்படுகின்றது.

இந்தச் சம்பவத்திலிருந்து, ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததி விலையேறப்பெற்றப் படிப்பினைகளை எடுத்துக்கொள்ளலாம். பூமிக்குரியதாகவும், உலகப் பிரகாரமானதாகவும் காணப்பட்ட தனக்கான அனைத்து ஆசீர்வாதங்களையும், கர்த்தரே கொடுக்கின்றார் என்று யோசேப்பு ஒப்புக்கொள்வது ஏற்றக் காரியமாக இருக்குமானால், ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததியார், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பிதாவின் கரத்திலிருந்து பெற்றுக்கொண்டார்களென ஒப்புக்கொள்வதும், கிடைத்த ஒவ்வொரு இரக்கத்திலும், ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகளிலும், கர்த்தருடைய பராமரிப்பின் கரமே காணப்படுகின்றது என அடையாளம் கண்டுகொள்வதும் எவ்வளவு அதிகமாய் ஏற்றக் காரியமாகக் காணப்படும். இந்த ஆவிக்குரிய சந்ததியினர், “அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது” என்று ஒப்புக்கொள்வதற்கும், இதை உணர்ந்துகொள்வதற்கும் எப்போதும் விழிப்பாய்க் காணப்படுவார்கள். தேவனுடைய ஆவிக்குரிய பிள்ளைகளில் சிலர், பெருமிதம் கொள்வதையும், கர்த்தரிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டதான, தேவனுடைய தயவும், சத்திய அறிவும், அவர்களுடைய சொந்த முயற்சியினால் அடையப்பெற்றது எனப் பேசுவதையும், அதாவது தெய்வீகத் திட்டத்தைக் கண்டுபிடித்ததில், தங்களுக்கும் கொஞ்சம் கனம் சேரும் என்பது போன்று பேசுவதையும், நாம் சிலசமயம் காணும்போது, வருத்தமடைகின்றோம்.

இன்னுமாக ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள், யோசேப்பைக் காட்டிலும், மிகவும் இரக்கமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். யோசேப்பினால், தன்னுடைய சகோதரர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும், வந்த துன்புறுத்தல்களைக் தெய்வீகச் செயல்பாட்டின் நிகழ்வுகளாகப் பார்க்க முடிந்ததானால், அதாவது வரவிருக்கின்ற ஆசீர்வாதங்கள் மற்றும் உயர்த்தப்படுதலுக்கு, தன்னை ஆயத்தப்படுத்துவதற்காக, அந்தத் துன்புறுத்துதல்களைக் கர்த்தர் பயன்படுத்துகின்றார் என யோசேப்பினால் பார்க்க முடிந்ததானால், ஆவிக்குரிய இஸ்ரயேலனும் தனக்கான ஏமாற்றங்கள் என்பது, தேவனால் நியமிக்கப்பட்டவைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமல்லவா? (his disappointments as God’s appointments) இன்னுமாக ஆவிக்குரிய இஸ்ரயேலன், தெளிவான விசுவாசக் கண்களுடன், தனது ஆவிக்குரிய முன்னேற்றங்களின் அநேகக் காரியங்களானது, உலகம் மற்றும் கள்ளச் சகோதரர்களிடமிருந்ததான துன்புறுத்துதல்களின் விளைவாகவே வந்துள்ளது என்பதைப் பார்க்க முடிகின்றவனாய்க் காணப்பட வேண்டுமல்லவா? இன்னுமாக யோசேப்பைப் போன்று, ஆவிக்குரிய இஸ்ரயேலனும், தேவன் தன்னை ஆவிக்குரியவற்றில் உயர்த்துவதற்கும், தன்னைப் புதுச் சிருஷ்டியென, தேவனுடைய சுதந்தரரென, தனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுடன் உடன் சுதந்தரவாளியெனப் பூரணப்படுத்துவதற்கும் அவர் பயன்படுத்த சித்தம் கொண்டுள்ள பல்வேறு கருவிகளாகிய இந்த உலகம் மற்றும் கள்ளச் சகோதரர்களை மிகுதியான அகமகிழ்வுடன் கண்ணோக்க வேண்டுமல்லவா? இப்படியாக ஆவிக்குரிய இஸ்ரயேலன் நிச்சமாய்க் காணப்பட வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றங்கள் என்பது கர்த்தரால் உண்டானதேயொழிய, நம்மால் அல்ல என்பதை நாம் கண்டுகொள்ளாதபடிக்கு, நமக்குத் தடையாய் இருக்கும் காரியங்கள், தாழ்மையின்மையும், தெய்வீகப் பராமரிப்பின் மீதான நம்பிக்கையின்மையுமாகும்; இன்னுமாக நம்மைத் துன்புறுத்துகிறவர்களிடத்திலும், நம்மை இழிவாய் நடத்தினவர்களிடத்திலும், நாம் பொறுமையாயும், இரக்கமாயும் அனுதாபமாயும், அன்பாயும் இருப்பதற்கு, நமக்குத் தடையாய் இருக்கும் காரியங்கள், கர்த்தருடைய ஆவி இன்மையும், இரக்கத்தினுடைய ஆவி இன்மையும் மற்றும் நம்மை ஆவிக்குரியவற்றில் கட்டியெழுப்புவதற்கெனத் தேவனால் பயன்படுத்தப்படும் கருவிகள் சகோதரர்களாகவோ அல்லது உலகத்தாராகவோ இருப்பினும், அவர்கள் மீது அனுதாபங்கொள்ள வேண்டும் என்பதைச் சரிவரப் பார்க்கத் தவறிப்போனதுமாகும்.

பின்னர் யோசேப்பு தேவனுடைய பராமரிப்பையும், பரிபூரணமான விளைவுள்ள ஏழு வருஷத்தையும், ஏழு வருடகால பஞ்சத்தையும் குறித்து விவரித்தார்; மேலும் தேவன் எவ்வாறு அனைத்துக் காரியங்களையும் மேற்பார்வையிட்டு நடத்துகின்றார் என்றும், இக்காரியங்கள் மூலம், தேவன் ஆபிரகாமின் சந்ததியை ஆதரித்தார் என்றும் விவரித்து, “ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்” என்று கூறினார். நமக்கு ஆசீர்வாதங்கள் கடந்துவந்த, பொல்லாப்பான கருவிகளுக்கு, நாம் கீர்த்தியைச் செலுத்திடக் கூடாது; ஒருவேளை அப்படிக் கீர்த்திச் செலுத்துவோமானால், நாம் தீமையை நன்மை என்று சொல்லுகிறவர்கள் ஆகிவிடுவோம்; மாறாக நாம் கீர்த்தியை/கனத்தைத் தேவனுக்கே செலுத்துகிறவர்களாய்க் காணப்பட வேண்டும், ஏனெனில் தீமையான நோக்கத்துடன் செய்யப்பட்ட காரியத்தையும், தீமையையே கொண்டிருந்த காரியத்தையும், பூலோக தளத்திற்கு மேலான தெய்வீக ஞானமானது, நம்முடைய நன்மைக்கு ஏதுவாக மாற்றிப்போடும் ஆற்றல் கொண்டிருந்ததினாலேயே ஆகும். நாம் தேவனுடைய காருண்யத்தைப்பற்றின பாடங்களைக் கற்று வரவர, அவருடைய ஞானம், வல்லமை மற்றும் அன்பு பற்றியும் நாம் கற்று வரவர, நம்முடைய நன்மைக்கு ஏதுவாய் நடந்துகொண்டு வருகின்றது என நம்மால் பார்க்க முடிந்த காரியங்களில் கர்த்தரிடத்தில் நம்பிக்கைக்கொள்ள முடிகின்ற நிலையை நாம் அடைவது வரையிலும் மாத்திரமல்லாமல், முற்றிலும் இருள் நிறைந்ததாகவும், எந்த நன்மையும் வரமுடியாது என்பது போல் தோன்றும் காரியங்களிலுங்கூட, கர்த்தரிடத்தில் நம்பிக்கைக்கொள்ள முடிகின்ற நிலையை நாம் அடைவது வரையிலும், நமது விசுவாசமானது பலம் மேல் பலமடைந்து வருகின்றதாய் இருக்கும்; இவ்வாறாக நாம் அவரது தடையங்களைக் காணமுடியாதபோதிலும், அவர்மேல் நம்பிக்கைக் கொள்கின்றவர்களாய் இருப்போம். இதுவே விசுவாசமாகும்; விசுவாசம் தேவனுடைய ஈவாகும்; கர்த்தருடைய கிருபையான வாக்குத்தத்தங்களானது, சரியான விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உணர்ந்துகொள்ளப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்படும்போது, விசுவாசமானது வளர்த்தப்பட்டு, போதுமான வளர்ச்சியை அடைகின்றது.

கர்த்தருடைய வேளை வரட்டும் என்று பொறுமையுடன் காத்திருந்த யோசேப்பு, இருபது வருடங்களாக தனது தகப்பனுடைய முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க, இப்பொழுது தனது சகோதரர்களுடைய அரிக்கட்டுகளானது, தன்னுடைய அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்பதான தன்னுடைய முதலாம் சொப்பனத்தின் நிறைவேறுதலைக் கண்டபடியால், தன்னுடைய இரண்டாம் சொப்பனம் நிறைவேறக்கூடிய தருணமாகிய தன்னுடைய தகப்பனை மீண்டுமாகப் பார்ப்பதற்குரிய கர்த்தருடைய வேளை வந்துள்ளது என்பதையும் உணர்ந்துகொண்டார். இதற்கு முன்புவரையிலும் பொறுமையுடன் காணப்பட்ட யோசேப்பு, இப்பொழுது துரிதப்பட்டார், ஏனெனில் வேளை வந்துவிட்டது; ஆகவே யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை நோக்கி, “நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம்” (ஆதியாகமம் 45:9) என்றார். பெருமையின் காரணமாக, யோசேப்பு தனது ஸ்தானத்தின் மகிமைகளை/கனங்களைத் தனது சகோதரர்களுடைய மனதில் பதிய வைத்திட முற்படாமல் மாறாக, யாக்கோபினுடைய எச்சரிப்பான தன்மையானது, அவர் கோசேன் நாட்டினுடைய நன்மைகளை அடையும் விஷயத்தில், அவருக்குத் தடையாக இருந்துவிடாதபடிக்கு, தனது சகோதரர்கள் தங்கள் தகப்பனாகிய யாக்கோபிற்கு முழு நிச்சயத்தைக் கொடுக்கத்தக்கதாக யோசேப்பு தனது அதிகாரத்தையும், அவர்களைப் பராமரிப்பதற்கான தனது வல்லமையையும் குறித்து, தனது சகோதரர்களுக்கு நிச்சயமளிக்கவே இவற்றைக் கூறினார். யோசேப்பினுடைய சகோதரர்களும், தகப்பனும், யோசேப்பினுடைய அரியணையிலும், அதிகாரத்திலும் பங்கடையும்படிக்கு அழைக்கப்படாமல், மாறாக யோசேப்பினுடைய அதிகாரத்தின் மூலமாய்க் கடந்துவரும் ஆசீர்வாதங்கள் அனைத்திலும் பங்கடைவதற்கே அழைக்கப்பட்டனர். இப்படியே ஆயிரவருட யுகத்தின்போதும், யோசேப்பினால் அடையாளப்படுத்தப்படும் தலையும், சரீரமாகிய கிறிஸ்து வல்லமை மற்றும் மகிமையின் சிங்காசனத்தில் காணப்படும்போது, அதாவது பரம பிதாவின் சிங்காசனத்தில் காணப்படும்போது, பூமியிலே தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்போது, உண்மையான பரலோக அப்பத்திற்காக, நித்திய ஜீவனுக்காகப் பசி கொண்டிருப்பவர்கள் வந்து, அதைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அழைக்கப்படுவார்கள். பூமிக்குரிய வகுப்பாரில் எவரும், இராஜ்யத்தின் கனங்களில் பங்கடையும்படிக்கு அழைக்கப்படுவதில்லை, காரணம் இராஜ்ய வகுப்பார் அப்போது நிறைவடைந்திருப்பார்கள். ஆனால் பூமிக்குரிய வகுப்பார், இராஜாதி இராஜாக்கள் மற்றும் கர்த்தாதி கர்த்தர்களின் கீழ், மனதிலும், ஒழுக்கத்திலும், சரீரத்திலும் இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களையும், பலத்தையும் மற்றும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அழைக்கப்படுவார்கள்.

யோசேப்பும், அவரது சகோதரர்களும் விடைப்பெற்றுக்கொண்ட சம்பவம் தாக்கம் நிறைந்ததாய் இருந்தது; இப்பொழுது தங்களுக்கு (எகிப்தில் முதல் முறை வந்தபோது) நடந்திட்ட முந்தின சம்பவத்தின் அனுபவங்கள் மற்றும் பென்யமீனுடைய சாக்கில் காணப்பட்ட வெள்ளிப் பாத்திரத்தின் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள்; இந்த அனைத்துச் சம்பவங்களும், யோசேப்பு தங்கள் மீது கொண்டிருந்த அன்பையும், அனுதாபத்தையும் வெளிப்படுத்துவதற்கு வழி நடத்தியது என்று அவர்கள் கண்டுகொண்டார்கள்; யோசேப்பு பென்யமீன் மீதான தனது விசேஷித்த அன்பை வெளிப்படுத்தும் வண்ணமாக, பென்யமீனை முதலாவது முத்தஞ்செய்து, சந்தோஷத்தினால் அழுதார் மற்றும் இப்படியே மற்றச் சகோதரர்களுக்குச் செய்து, அவர்களை வழியனுப்பி வைத்தார். பாசத்திற்கு, அன்பிற்கு வல்லமை/சக்தி உள்ளது; அதனால் அன்புடன்கூடிய பாசம் வெளிப்படுத்தப்பட வேண்டும், இல்லையேல் அதன் ஆற்றல் உணரப்பட முடியாது. அநேக பெற்றோர்களிடத்திலும், கணவன்மார்களிடத்திலும், மனைவிமார்களிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் [R2894 : page 330] காணப்படும் பிரச்சனை என்னவெனில், அவர்கள் தாங்கள கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதேயாகும். பெருமை (அ) பயம் (அ) வேறெதாகிலும் காரியமானது, அவர்கள் ஒருவரோடொருவர் மனம்விட்டு வெளிப்படையாகப் பேசமுடியாத வண்ணம் தடையாகக் காணப்படுகின்றது. இங்குள்ள யோசேப்பினுடைய மாதிரியானது, பின்பற்றத் தகுந்த ஒன்றாகும். அவருக்குத்தான் தீமைச் செய்யப்பட்டது; அவர்தான் இப்பொழுது அதிகாரத்திலும் காணப்படுகின்றார்; கௌரவமும் யோசேப்புக்குத்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் சகோதரர்களை முத்தஞ்செய்வதற்கும், தன்னைத் தாழ்த்துவதற்கும், யோசேப்புதான் அதிகம் தன்னைத் தாழ்த்தியிருக்க வேண்டும். யோசேப்பின் சகோதரர்கள் இதை உணர்ந்துகொண்டார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. இப்படியாக மிக உயரிய ஸ்தானத்தில் காணப்படும் தங்களது சகோதரன் இப்படியான ஒரு பாசத்தை வெளிப்படுத்தின காரியமானது, அவர்களது இருதயத்தைத் தொட்டிருக்கும் என்பதிலும், அது அவர்களுடைய வாழ்நாட்கள் முழுவதும், அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாய்க் காணப்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. இப்படியாகவே நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் விஷயத்திலும், நமது அன்பையும், இரக்கமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும்போது, இதனால் அவர்களும் அன்பைப் பரிமாறிக்கொள்வதோடு மாத்திரமல்லாமல், இதனால் அவர்களுக்கும் நன்மை உண்டாகுகின்றது; நமது பாசத்தை நாம் அடக்கிக்கொள்வோமானால், அன்பில் உணர்வுகளற்ற நிலைமையே காணப்படும் மற்றும் அன்பில் இப்படியான உணர்வற்ற நிலைமை என்பது மற்றவர்களைப் பாதிப்பதோடல்லாமல், நம்மையும் பாதிக்கின்றதாய் இருக்கும், அதாவது ஜீவியத்தினுடைய மகிழ்ச்சியின் ஊற்றுகள் அனைத்தையும் அழித்துப்போடுகின்றதாய் இருக்கும்.

[R2895 : page 330]
“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” என்ற வசனத்தை நினைவில் கொள்வோமாக (ரோமர் 12:21). இந்த ஆலோசனைக்கு யோசேப்பு மாதிரியாக விளங்குகின்றார். யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடைய பொல்லாப்பான நடக்கை தன்னை மேற்கொள்வதற்கும், தன்னைப் பொல்லாதவனாகவும், கசப்புடையவனாகவும் மாற்றுவதற்கும் அனுமதியாமல் இருந்தது மாத்திரமல்லாமல், இன்னுமாக தன்னுடைய அன்பினாலும், தன்னுடைய இரக்கத்தினாலும், தனது பரிவினாலும், தனது பெருந்தன்மையினாலும், அவர்களது தீமையான தன்மைகளையும், சுபாவங்களையும் மேற்கொண்டார் மற்றும் அதினால் ஏற்பட்டதான தாக்கம், அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் நன்மைக்கு ஏதுவாகவே அமைந்தது. இப்படியான ஒரு நடக்கையைக்கொண்டிருப்பது, யோசேப்பைக் காட்டிலும், அதிகமாக நமக்கே கடமையாய் உள்ளது. யோசேப்பு இதை எவ்விதமான புறத்தூண்டுதலும் இல்லாமல், இயல்பாகவே செய்தார்; நமக்கு நமது கர்த்தர் மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களுடைய மாதிரியும், கட்டளைகளும்/போதனைகளும் மற்றும் பரிசுத்தத்தின் ஆவியினுடைய ஜெநிப்பித்தலும் காணப்படுகின்றது. “நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும், தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்” (2 பேதுரு 3:11).