R5232 – யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R5232 (page 138)

யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்

LESSONS LEARNED BY JOSEPH'S BRETHREN

ஆதியாகமம் 44-ஆம் அதிகாரம்

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.” யாக்கோபு 5:16.

யோசேப்பைக் கொன்றுபோடுவதற்குத் திட்டம்பண்ணி, பிற்பாடு அவர் சாகும்படிக்கு, அவரைக் குழியில் போட்டுவிட்டு, பின்னர் அவரை அடிமையாக அவரது சகோதரர்கள் விற்றுப்போட்டபோது மிகவும் கடின நெஞ்சம் உடையவர்களெனத் தோன்றின அளவுக்கு, அவர்கள் கடின இருதயம் உடையவர்கள் இல்லையென்பதை இந்தப் பாடமானது நமக்குக் காட்டுகின்றது. நம்முடைய இளமைப் பிராயங்களில் நம்மில் அநேகருக்குக் கற்பிக்கப்பட்டதான முழுச்சீர்க்கேடு குறித்த உபதேசமானது, நம்முடைய சொந்த குணலட்சணங்களுடைய விஷயங்களிலும், மற்றவர்கள் தொடர்புடைய நம்முடைய அனுபவங்களின் விஷயங்களிலும் மீண்டும், மீண்டுமாக தவறென நிரூபித்துக்காட்டப்பட்டுள்ளது. அனைவரும் முழுமையாய்ச் சீரழிந்துவிட்டனர் என்று கருதுபவன், தவறான கண்ணோட்டத்திலேயே தனது சக மனிதனை அணுகுபவனாக இருப்பான்; சீரழிவு குறித்த எண்ணம் உடையவன், சீரழிவையே எதிர்ப்பார்த்து நோக்குபவனாக இருந்து, சீரழிவையே கண்டுபிடிப்பவனாக இருப்பான் மற்றும் அவன் எந்த நல்லவற்றையும் எதிர்ப்பார்த்து நோக்காததினால், அவன் நல்லவற்றைப்பார்க்க தவறுகிறவனாகிறான்.

மனிதர்கள் அனைவரும் சீர்க்கெட்டுப் போயுள்ளனர் என்றும், எவரும் பூரணர் இல்லையென்றும், ஒருவர் கூடப் பூரணர் இல்லையென்றும், அனைவரும் பாவஞ்செய்துள்ளனர் என்றும், அனைவரும் ஆதி பாவத்தினுடைய விளைவில் பங்கடைந்துள்ளனர் என்றும், இதன் காரணமாக அனைவரும் தகப்பனாகிய ஆதாமினுடைய பரிபூரணத்தில் விளங்கின தேவமகிமையின் விஷயத்தில் தேவமகிமை அற்றவர்களாகியுள்ளனர் என்றுமுள்ள வேதவாக்கியங்கள் அடிப்படையிலான கூற்றுச்சரியானதேயாகும். பரிபூரணமாய்க் காணப்படும் ஒன்றுடன்தான் தேவன் தொடர்புவைத்துக்கொள்வார் என்றும், தமது சொந்த பூரணத்திற்கு முழு இசைவுடன் காணப்படுபவர்களுக்கு மாத்திரமே, தேவனால் தமது கிருபையையும், நித்திய ஜீவனையும் அருளமுடியும் என்றும் உள்ளதுதான் வேதவாக்கியங்களின் கருத்தாக இருக்கின்றது. ஆகையால் விழுகையின் காரணமாக அனைத்து மனிதர்களும் பாவிகளானப்படியால், அனைவருக்கும் மீட்பு தேவையாய் உள்ளது மற்றும் ஒப்புரவாகுதலும் தேவையாயுள்ளது.

இப்படியான ஒப்புரவாகுதலுக்குரிய வாய்ப்பானது, இந்தச் சுவிசேஷ யுகத்தில் சொற்பமானவர்களுக்கு வருகின்றதாய் இருக்கின்றது மற்றும் இவர்களுக்கு மாத்திரமே வருகின்றது. இவர்கள் இருதயத்திலும், சித்தத்திலும், நோக்கத்திலும் பூரணமாய்க் காணப்பட வேண்டும் மற்றும் தங்கள் குறைவுகள் அனைத்திற்குமான மூடலாக, கிறிஸ்துவினுடைய புண்ணியத்தை விசுவாசத்தின் மூலம் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தேவன் இவர்களது மாம்சத்தின் வேண்டுமென்றே இல்லாத பெலவீனங்களைப் பொருட்படுத்தாமல், இவர்களைப் புதிய சிருஷ்டிகளென ஏற்றுக்கொள்கின்றார். இப்படியாக கிறிஸ்துவின் மூலம், அர்ப்பணம் பண்ணப்பட்ட விசுவாசிகளாகிய உண்மை சபை மாத்திரமே, தேவனுடைய குமாரர்களென எண்ணப்படுகின்றனர் மற்றும் கையாளப்படுகின்றனர் மற்றும் தேவனுடைய குமாரர்களுக்குரிய சிலாக்கியங்களையும், ஜெபத்தில் பிதாவுடனான ஐக்கியத்தையும் பெற்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் அனைத்துமே இவர்களது உயர்ந்த பட்ச நன்மைக்கு ஏதுவாய் நடந்தேறும் என்று உத்தரவாதம் அளிக்கின்ற தெய்வீக மேற்பார்வையை, இவர்கள் தங்கள் காரியங்களில் பெற்றவர்களாய் இருக்கின்றனர். [R5233 : page 138] எனினும் இவர்களும் தேவனைப் பார்க்கப்போவதற்கு முன்பாகவும், தேவன் இவர்களுக்காக வைத்திருக்கும் மகிமையானக் காரியங்கள் அனைத்தினிடத்திற்கு முழுமையாய்க் கொண்டு சேர்ப்பதற்கு முன்பாகவும், முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் பூரணப்படுத்தப்படுவது அவசியமாய் இருக்கின்றது.

உலகத்தார் நீதிமானாக்கப்படும் காரியமானது முற்றிலும் வேறான விதத்தில் ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது. அதற்கான வேளையானது, வேதவாக்கியங்களின்படி, வரவிருக்கின்ற யுகமாக இருக்கின்றது. அப்போது மேசியாவின் இராஜ்யமானது, சாத்தானின் செல்வாக்கைக் கட்டிப்போட்டு, சாபத்தை அகற்றிப்போட்டு, சாபத்திற்குப் பதிலாக முழுச்சந்ததிக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றதாய் இருக்கும். இப்பொழுது உண்மையுள்ளவர்களைக் கையாளுவது போன்று, அக்காலத்தில் விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்களைத் தேவன் கையாளுவதில்லை. மாறாக அந்த ஆயிரம் வருஷங்களில் அவர்கள் மாபெரும் மத்தியஸ்தரின் பொறுப்பில் விடப்படுவார்கள் மற்றும் நீதிமானாக்கப்படுவார்கள் அல்லது உண்மையில் நீதிமானாக்கப்படுவார்கள். விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்கள் ஆதாமினுடைய ஆதி பூரணத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு, மாபெரும் போதகரினால் முழுமையாய்க் கற்பிக்கப்பட்டுக் காணப்படுபவர்கள். ஆயிர வருடத்தின் முடிவில், பிதாவின் முன் நிறுத்தப்படுவதற்கும், அவரால் குமாரர்களென ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஆயத்தமாய் இருப்பார்கள். இதற்கிடையில் ஒப்புரவாகுவதற்குரிய விருப்பமும், வாஞ்சையும் இல்லாதவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவார்கள். நாம் இங்கு வலியுறுத்த விரும்பும் கருத்தென்னவெனில், தேவன் எங்குமே மனிதன் முழுமையாகச் சீர்க்கேடு அடைந்துவிட்டான் என்று சொல்லவில்லை, மாறாக சிறிய அளவிலான பூரணமின்மையைக்கூட அவரால் சகித்துக்கொள்ள முடியாது என்றுதான் அவர் சொல்லியுள்ளார். ஆகையால் அநேகமோ (அ) கொஞ்சமோ, நம் குறைவுகள் அனைத்தும், தவறுகள் அனைத்தும், நம் ஒவ்வொருவருக்காகவும், மாபெரும் மீட்பராகிய, திரும்பக்கொடுப்பவராகிய இயேசுவின் மூலம் நிறைவாக்குவது தெய்வீக ஏற்பாடாக இருக்கின்றது; மாபெரும் மீட்பரானவருடைய பலி மற்றும் உதவி இல்லாமல், பூரணமடைவதும், பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கூடாத காரியமாகும்.

“யோசேப்பின் சகோதரர்கள் உருக்கமான இருதயம் உடையவர்கள் ஆவர்”

யோசேப்பு கொண்டிருந்த விசுவாசமும், அவரது அனுபவங்களும், அவருக்குள் பிரமாண்டமான/உயரிய குணலட்சணங்களையும், நிறைவான பரிவிரக்கத்தையும் மற்றும் தேவனுக்கான முழுமையானக் கீழ்ப்படிதலையும் உருவாக்கியது என்பதை நம்முடைய இப்பாடம் காண்பிக்கின்றது. ஆனால் வித்தியாசமான ஒருமுறையில், யோசேப்பினுடைய பத்துச் சகோதரர்களும் தவறுகளின் நிமித்தமான மன உளைச்சலுக்குள்ளானவர்களாகி மிகவும் பரிவிரக்கம் உடையவர்களாகவும், மிகுந்த சகோதர சிநேகம் உள்ளவர்களாகவும், தங்கள் தகப்பனாகிய யாக்கோபிற்கு மிகவும் உண்மையுள்ளவர்களாகவும் மாறினார்கள். ஜீவியத்தின் அனைத்து அனுபவங்கள், அதாவது கசப்பான மற்றும் இனிமையான அனுபவங்கள், நமது சரியான கிரியைகள் மற்றும் தவறுகள் ஆகிய அனுபவங்கள் அனைத்தின் பலன்களானது, நம்மைத் திருத்துவதற்கும், நமக்கு உதவியாக இருப்பதற்கும் ஏதுவாய்க் காணப்படத்தக்கதாக, தெய்வீக மேற்பார்வையின் கீழ்த் திட்டம் பண்ணப்பட்டுள்ளது. இப்படியான எந்த ஆசீர்வாதத்திற்கும், தேவன் மீது நம்பிக்கை என்பது அவசியமானதாகும். யோசேப்பினுடைய நம்பிக்கையைக் குறித்து நாம் பார்த்திருக்கின்றோம் மற்றும் இன்றைய பாடமானது அவரது சகோதரர்கள் வித்தியாசமானவர்களாய்க் காணப்பட்டாலும், இன்னமும் சர்வவல்லவரை அங்கீகரித்தவர்களாகவும், அவருக்கான பயபக்தியைக் கொண்டவர்களாகவும், அவர் அனைத்துத் தீமையான கிரியைகளுக்கும் நியாயமான கைமாறு அளிப்பவர் என்று உணர்ந்துகொண்டவர்களாகவும் அவர்கள் காணப்பட்டார்கள் என்பதை நமக்குக் காண்பித்துத் தருகின்றதாய் இருக்கின்றது.

யோசேப்பு ஏற்பாடு பண்ணினதும், பென்யமீன் ஐந்து மடங்கு பங்கு பெற்றுக்கொண்டதுமான, விருந்துக்குப் பிற்பாடு, பதினொரு சகோதரர்களும், தங்கள் அனுபவங்கள் நிமித்தமாகவும், எகிப்திய அதிகாரியிடம் கிடைத்த தயவினிமித்தமாகவும் மகிழ்ச்சியுடன், வீடுகளுக்குத் திரும்பப் புறப்பட்டார்கள் என்று பார்க்கின்றோம். தங்கள் தகப்பனாருக்காக அவர்கள் கொண்டிருக்கும் இரக்கத்தையும், தங்கள் இளைய சகோதரன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்புடன்கூடிய அக்கறையையும் சோதித்துப்பார்க்க விருப்பம் கொண்டவராக, அவர்கள் புறப்படுவதற்கு முன்னதாக, யோசேப்பு தனது வெள்ளிப்பாத்திரத்தை பென்யமீனுடைய சாக்கின் வாயிலே போட்டு, அனுப்பும்படிக்குக் கட்டளையிட்டிருந்தார். கானானை நோக்கி வெகுதூரம் போவதற்கு முன்னதாக யோசேப்பு தனது வீட்டிலிருந்து வேலைக்காரர்களை அவர்களிடத்தில் அனுப்பி கேட்கச் சொன்னதாவது, “நீங்கள் உங்களுக்கு உதவியவருக்கு இப்படி மோசம் செய்தது என்ன? ஏன் நீங்கள் அவரது வெள்ளிப்பாத்திரத்தை எடுத்தீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகிகள்/ஏமாற்றுக்காரர்கள்!” அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்கள் வசத்தில் ஒருவேளை பாத்திரம் கண்டுபிடிக்கப்படுமானால், தாங்கள் அனைவருமே தானாகவே அடிமைகளாகிக் கொள்வார்கள் என்றும் கூறினார்கள். யோசேப்பு கட்டளையிட்டிருந்த பிரகாரம், பாத்திரத்திற்கான தேடுதல் மூத்த சகோதரனிடத்தில் தொடங்கப்பெற்று, பென்யமீனுடைய சாக்கோடு முடிவுபெற்றது. பென்யமீனுடைய சாக்கில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த வேதனையில், அவர்கள் அனைவரும், மீண்டும் அரமனைக்குத் திரும்பி நடந்தார்கள்.

மீண்டுமாக யோசேப்பு கடினமாக நடந்துகொண்டு, அவர்கள் தங்கள் சுயநலத்தை வெளிப்படுத்துவதற்கும், பென்யமீனைக் கைவிட்டுவிடுவதற்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத்தக்கதாக அவர்களைக் கடிந்துகொண்டார். மீண்டுமாக அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து, தாங்கள் யோசேப்பினுடைய அடிமைகளாக இருப்பதற்கு விரும்புவதையும் தெரிவித்தார்கள். ஆனால் யோசேப்போ, “அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாக இருப்பதாக் எவன் (பென்யமீன்) வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாய் இருப்பான்; நீங்கள் உணவுகளோடு, உங்கள் குடும்பங்களிடத்திற்கும், உங்கள் தகப்பனிடத்திற்கும் திரும்பிச் செல்லுங்கள் மற்றும் எகிப்தின் சலுகைகளையும் நீங்கள் தொடர்ந்து அனுபவித்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இந்தக் கட்டளையானது, அவர்களைப் பரீட்சிக்கும் என்று யோசேப்பு அறிந்திருந்தார். பென்யமீனை அடிமையாக விட்டுவிட்டு, தாங்கள் அடிமைத்தனத்தினின்று தப்பித்துக்கொண்டு, தங்கள் சொந்த குடும்பங்களினிடத்திற்குச் சென்றுவிடுவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா? யோசேப்பின் விஷயத்தில், அதாவது அவரை அடிமையாக விற்றுப்போட்டபோது, அவர்களிடமிருந்த அதே கல்லான இருதயந்தான், இன்னமும் அவர்களிடத்தில் காணப்படுகின்றதா? யோசேப்பின் விஷயத்தில் நடந்தது போலவே, இப்பொழுதும் அவர்கள் தங்கள் பரிதாபமான தகப்பனாருடைய சந்தோஷத்தையும், நலனையும் அலட்சியப்படுத்தப் போகின்றார்களா?

பாதுகாப்பாய்ப் பென்யமீனைத் திரும்பக் கொண்டுவருவதாக தனது தந்தையினிடத்தில் உத்தரவாதம் அளித்து வந்திருந்த யூதா, யோசேப்பிடம் வேண்டுகோள் வைத்தார். பென்யமீன் எப்படி எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டார் என்பதையும், எப்படித் தங்கள் முதிர்வயதான, பரிதாபமான தகப்பன் பென்யமீன் மீது அன்பு வைத்திருக்கின்றார் என்பதையும், தான் எப்படிப் பென்யமீனை மீண்டும் திரும்பக் கொண்டுவருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார் என்பதையும் யூதா விளக்கினார். தான் அடிமையாக வைக்கப்படுவதற்கும், தனது சகோதரனாகிய பென்யமீன் போகும்படிக்கு அனுமதிக்கப்படுவதற்குமான கெஞ்சுதலுடன் யூதா மன்றாடினதாவது, “இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்” (ஆதியாகமம் 44:33,34).

இருதயம் மாற்றம் அடைந்துள்ளதற்கான ஆதாரங்கள் யோசேப்பிற்கும், நம் அனைவருக்கும் இங்குத் திருப்திகரமாய் இருக்கின்றது. பாவத்தை விரும்புபவர்கள் பாவத்தில் களிக்கூருவது போன்று, நீதியை விரும்புகின்ற அனைவரும் நீதியில் களிக்கூருகின்றவர்களாய்க் காணப்படுவார்கள். இப்படியான ஒரு மாற்றத்தை நாம் இந்த மனிதர்களிடத்தில் உணர்ந்துகொள்ளும்போது, நாம் அவர்களுக்காக மாத்திரம் களிக்கூராமல், அவர்களது அனுபவங்களானது கொடுக்கின்ற பொதுவான படிப்பினைகளின் நிமித்தமாகவும் களிக்கூருகின்றோம். தற்காலத்தின் பாவங்களில் பெரும்பான்மையானவைகள், கீழ்த்தரமான நடத்தைகளில் பெரும்பான்மையானவைகள், கொடூரங்களில் பெரும்பான்மையானவைகள், சுதந்தரிக்கப்பட்ட பெலவீனங்கள் மற்றும் போதிய அனுபவம் இல்லாமையின் காரணமாகவே நிகழ்கின்றன என்ற நம்பிக்கையில் நாம் காணப்படுகின்றோம். நாம் நம்மைப் பற்றியும் மற்றும் ஒருவருக்கொருவரையும் நன்கு, ஆழமாய் மற்றும் தெளிவாய்ப் புரிந்துகொள்வோமானால், எத்தகைய ஒரு பெரிய மாற்றமே நடந்திருக்கும் என்று நாம் நமக்குள்ளே சொல்வதுண்டு.

ஜீவியத்தின் அன்றாட அனுபவங்களானது, நம்முடைய இரக்கத்தன்மையை விரிவாக்கி, இப்படியாகக் குணலட்சணத்தை வளர்க்கின்றதல்லவா? இது உண்மையாய் இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். அனைத்துக் கொள்கைகளின் விஷயத்திலும் மறுப்பிற்கிடமான காரியங்கள் உண்டு என்பதில் ஐயமில்லை என்றாலும், நம்முடைய சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும், அவ்வப்போதாகிலும் நல்லதும், உண்மையானதும், தூய்மையானதும், சிறந்ததுமானவைகளை உணர்ந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுமளவுக்குப் போதுமான தேவ சாயலானது இன்னமும் ஒவ்வொரு அங்கத்தினனிலும் காணப்படவே செய்கின்றது என்பதே நம்முடைய நம்பிக்கையாய்க் காணப்படுகின்றது. அவன் பாவத்தினாலும், சுயநலத்தினாலும் சூழப்பட்டிருக்கின்றபடியினாலேயே, இந்தத் தேவனுக்கொத்த உணர்வுகளானது, மிகவும் அபூர்வமாய்ச் செயல்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தற்கால அனுபவங்களின் கீழாக நூறு வருடங்கள் கொடுக்கப்பட்ட பிற்பாடு, புதியதாய் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கொடுக்கப்பட்டால், கிட்டத்தட்ட அனைவருமே அனுபவங்களினால் மிகவும் பலனடைந்து, தெளிந்த மனதுடன் வாழ்பவர்களாகவும், நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்று யூகிப்பது நியாயமாய்த் தோன்றுகின்றது. கிட்டத்தட்ட அனைவருமே மிகவும் பெருந்தன்மை உடையவர்களாகவும், மிகவும் நீதியாயும் காணப்படுவார்கள் என்று எண்ணுகின்றோம். ஆட்சேபம்/மறுப்புகள் இருக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்கின்றோம். தற்கால சூழ்நிலைகளின் கீழ் மனித ஜீவியத்தை (மரணத்தின் மூலம் கால) வரையறைக்குள்ளாக்கும் தெய்வீக ஏற்பாடானது, மிகவும் ஞானமான காரியம் என்ற கருத்தை நாங்கள் தெரிவிப்பதை யாரும் தடைப்பண்ணிட முடியாது.

மனித குடும்பத்தின் அங்கத்தினர்கள் சிலர் சுயநலமான தன்மைகளை மாத்திரம் வளர்க்கின்றவர்களாகவும், மிகவும் அரிதாக நல்ல தன்மைகளை/உணர்வுகளைச் செயல்படுத்துகின்றவர்களாகவும் இருக்கின்றனர். இப்படியான நபர்களை, ஒரு நூற்றாண்டிற்கு மேலாக வாழ அனுமதிப்பது என்பது, தங்கள் சக மனிதர்களைச் சுயநலத்துடன் அடிமைப்படுத்துவதற்குரிய வாய்ப்புகளை இவர்களுக்கு அதிகம் கொடுக்கின்றதாய் இருக்கும். “நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி” என்றுள்ள ஞானியினுடைய வார்த்தைகளின் அடிப்படையில், தேவன் நம்முடைய சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் விலையேறப்பெற்றப் பாடங்களைக் கொடுப்பதற்கு ஞானமும், வல்லமையையும் கொண்டவராக இருக்கின்றார் (நீதிமொழிகள் 14:34).

“மனிதர்கள் எப்போது பயனடைவார்கள்?”

ஆனால் சிலர் பின்வருமாறு கேட்கலாம்: “ஜீவியத்தின் சோதனைகளும், அடிகளும், அதாவது விவேகமான அடிகளும், மனிதனுக்குப் பாவத்தினுடைய தீங்கையும், நீதியிலுள்ள ஞானத்தையும் குறித்துக் கற்பிக்கின்றது என்று ஒத்துக்கொள்கின்றோம்; மேலும் யோசேப்பின் சகோதரர்களைப் போன்று, நமது சந்ததியாரும் ஏற்றவேளைகளில் இந்த மாபெரும் பாடம் தொடர்புடையதானச் சிலவற்றைக் கற்றுக்கொள்வார்கள் என்பதையும் ஒத்துக்கொள்கின்றோம், ஆனால் இயேசுவின் அடிச்சுவடுகளில், சுயத்தைப் பலிச்செலுத்தும் உடன்படிக்கையின் கீழ் நடந்து செல்லும் பரிசுத்தவான்களாகிய சிலர் மாத்திரமே, இராஜ்யத்தின் மகிமையான பலனில் பங்கடைபவர்களாய் இருப்பார்களானால், நமது சந்ததியினர் இப்படியான பாடம் கற்றுக்கொள்வதிலுள்ள பயன் என்ன? நமது சந்ததியில் பரிசுத்தவான்கள் தவிர மீதமுள்ளவர்களுக்கான நம்பிக்கை அனைத்தையும், மரணம் முற்றுப் பெறச் செய்யுமானால், இவர்கள் எப்படித் தங்கள் அனுபவங்களினால் பயனடைவார்கள்? பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக மரித்துப்போகின்றவர்கள் அல்லது பரிசுத்தவான்கள் ஆகாதவர்கள் அல்லது தேவனுடைய இராஜ்யத்திற்குத் தகுதியாகுவதில் தவறுகின்றவர்கள் விஷயத்தில் ஜீவியத்தின் பாடங்கள் எப்படி உபயோகப்படும்?”

வேதத்தின் போதனைகள் தொடர்புடைய விஷயத்தில் நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம் என்பதே பதிலாகும். நாம் மரணத்தில் நித்திரைக்குள்ளாகும்போது, இரட்சிப்படைவதற்கான நம்பிக்கை அனைத்தும் முற்றுப்பெறுகின்றது என்று வேதாகமம் எங்குமே தெரிவிப்பதில்லை. சபை வகுப்பார் தொடர்புடைய விஷயத்தில், மரணமானது தகுதிக்காண் தேர்விற்கு அவர்கள் உட்படுத்தப்படும் காலத்தை முற்றுப்பெறச் செய்கின்றது. ஆனால் இப்படியாக உலகத்தாரின் விஷயத்தில் இருப்பதில்லை. சபை, உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பொதுவான மனுக்குலத்திற்கு முன்னதாகவே, நித்திய ஜீவன் அல்லது நித்திய மரணம் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட விசேஷித்த வகுப்பாராய் இருக்கின்றனர் என்று அப்போஸ்தலன் காண்பித்துத் தருகின்றார். இவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பார்களானால், இவர்கள் நித்தியமான ஜீவனை மாத்திரம் அல்லாமல், மனித தளத்தைக் காட்டிலும் உயர்வான தளத்தில் அந்த ஜீவனைப் பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள். இவர்கள் ஆவிக்குரிய ஜீவிகளாக, பூரணத்தை உயிர்த்தெழுதலில் அடைகின்றவர்களாய் இருப்பார்கள்.

இந்தச் சபை வகுப்பாருக்கே, ஒருவேளை அவர்கள் துணிகரமாய்ப் பாவஞ்செய்யும் பட்சத்தில், மரணமானது அனைத்தையும் முற்றுப்பெறச் செய்திடும் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காண்பிக்கும் விதத்தில், “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” என்று கூறியுள்ளார் (ரோமர் 8:13). இவ்வசனத்தில் இடம்பெறும் “சாவீர்கள்” மற்றும் “பிழைப்பீர்கள்” என்பதானது சபையைக் குறிக்கின்றதே ஒழிய, உலகத்தாரையல்ல.

மீண்டுமாக, “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்புர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” என்றும், “ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்” என்றும் அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார் (எபிரெயர் 10:26,27; 6:4-6 (refs2)).

இந்த வேதவாக்கியங்களும், சபைக்கு மாத்திரமே விசேஷமாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது, ஏனெனில் சபை மாத்திரமே இப்பொழுது/தற்காலத்தில் பரீட்சையின் கீழ்க் காணப்படுகின்றனர். உலகமானது பரீட்சைக்கு உட்படுத்தும் காலமானது, அடுத்த யுகத்திலாகும். கிறிஸ்துவினுடைய ஆயிரவருட காலமானது, உலகத்திற்கான ஆயிரவருட நியாயத்தீர்ப்பு நாளாகக் காணப்படுகின்றது. அப்போதுதான் மனுக்குலம் அனைவரும் நித்திய ஜீவனுக்குப் பாத்திரமானவர்களா அல்லது இல்லையா என்று முடிவு பண்ணப்படுவார்கள். பாத்திரமானவர்கள் என்று கண்டுகொள்ளப்படுகின்ற அனைவரும் இறுதியில் பூரணப்படுத்தப்பட்டு, நித்திய ஜீவன் எனும் தெய்வீக ஆசீர்வாதத்தை அருளப்பெறுவார்கள். உலகத்தினுடைய நியாயத்தீர்ப்பின்/ பரீட்சையின் [R5234 : page 139] நாளில் அபாத்திரர்கள் என்று கண்டுகொள்ளப்படுபவர்கள், ஜீவன் பெறுவதற்கு அபாத்திரர்கள் என்று தீர்க்கப்பட்டு, இரண்டாம் மரணம் எனும் தண்டனை வழங்கப்படுவார்கள்.

தற்கால ஜீவியத்தின் நல்லதும், கெட்டதுமான அனுபவங்களானது, உலகத்தினுடைய எதிர்கால பரீட்சையில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் எவருக்கும் அது காரியங்களை நிர்ணயிக்கின்றதாய் இருக்காது. தற்காலத்தின் வாய்ப்புகளையும், அறிவையும் தவறாய்ப் பயன்படுத்துவதினால், சிலர் தவறாய்ப் பயன்படுத்தினதற்கேற்ப அநுகூலங்கள் அற்றவர்களாய் எதிர்கால ஜீவியத்திற்குள்ளும், அதன் நியாயத்தீர்ப்புகளுக்குள்ளும் பிரவேசிக்கின்றவர்களாய் இருப்பார்கள். அவர்களுக்கான அநுகூலமற்ற நிலை என்பது தற்காலத்தின் தவறுகளுக்கான அடிகளாகவும், சிட்சைகளாகவும் இருக்கும். தற்கால ஜீவியத்தினுடைய சிரமங்கள் மற்றும் சோதனைகளினால் சரியாய்ப் பயிற்சியளிக்கப்பட்டவர்களோ, யோசேப்பின் சகோதரர்கள் போன்று, இவைகளினால் மிகவும் இரக்கமுடையவர்களாகவும், மிகவும் அன்புடையவர்களாகவும், மிகவும் சாந்தமானவர்களாகவும், மிகவும் நேர்மையானவர்களாகவும் ஆக்கப்படுகின்றனர்; இப்படியாக இவர்கள் மேசியாவின் இராஜ்யமாகிய மகா நியாயத்தீர்ப்பின் நாளினுடைய பரீட்சைகளில் பிரவேசிப்பதற்கு நன்கு ஆயத்தம் பண்ணப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள்.

யோசேப்பை எகிப்தின் அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போட்ட அவரது சகோதரர்களுக்கு, யோசேப்பு நியாயாதிபதியாக இருந்ததுபோன்று, கிறிஸ்துவாகிய இயேசுவும், சபையும் உலகத்திற்கான நியாயாதிபதிகளாகக் காணப்படுவார்கள்; “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” என்று அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளார் (1 கொரிந்தியர் 6:2).

தனது சகோதரர்கள் தனக்கு முற்காலத்தில் செய்த காரியங்களின் அடிப்படையில் யோசேப்பு நியாயந்தீர்க்காமல், மாறாக தற்போது அவர்களிடத்தில் காணப்பட்ட இருதயத்தினுடைய நிலைமையின் அடிப்படையில் நியாயந்தீர்த்ததுபோலவே, எதிர்காலத்திலுள்ள உலகத்தாரின் நியாயத்தீர்ப்பானது, முற்காலங்களிலுள்ள அவர்களின் தவறான இருதய நிலையைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், மாறாக நியாயத்தீர்ப்பின் காலகட்டங்களின்போதுள்ள அவர்களுடைய இருதய நிலைமையே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றதாய் இருக்கும். எனினும் நீதியின் கொள்கையும் தொடர்ந்து செயல்படுகின்றதாய் இருக்கும்; பாவம் செய்பவர்கள் கஷ்டம் அநுபவிப்பார்கள். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்புக்குச் செய்த தவறுகள் நிமித்தம் கஷ்டம் அநுபவித்தார்கள் மற்றும் அவர்கள் தங்களுக்கு வந்த பல்வேறு உபத்திரவங்களை, தாங்கள் பல வருடங்களுக்கு முன்பாகச் செய்திருந்த மாபெரும் பாவத்துடன் சம்பந்தப்படுத்தி பார்த்தவர்களாகவே காணப்பட்டனர். இப்படியாகவே மனுக்குலத்தின் விஷயத்திலும் காணப்படும். ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு மீறுதலும் நீதியான பலனைப் பெற்றுக்கொள்ளும், ஆனால் அநீதியான பலனையோ, நித்தியமான சித்திரவதையோ பெற்றுக்கொள்வதில்லை.

மனுக்குலத்தின் நல்ல கிரியைகளும், தீமையான கிரியைகளும், அவர்களது குணலட்சணத்திலும், மனப்பான்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாய்க் காணப்படுகின்றது மற்றும் அந்தக் குணலட்சணமும், மனப்பான்மையும் மரணம் எனும் நித்திரையில் தொலைந்துபோவதில்லை. தங்கள் பிரேத குழிகளில் காணப்படுகின்ற அனைவருக்கும் ஓர் உயிர்த்தெழுதல் உள்ளது. அவர்கள் அனைவரும், மனுஷகுமாரனுடைய சத்தத்தைக் கேட்டு, தங்கள் தங்கள் வரிசையின்படி வெளிவருவார்கள். பரிசுத்தவான்கள் உலகத்திற்கான நியாயாதிபதிகளாகக் காணப்படத்தக்கதாக, ஆயிரவருட யுகத்தின் ஆரம்பப் பகுதிகளில், ஜீவனுக்கான பூரணத்திற்குள் கடந்து வருவார்கள். பரிசுத்தவான்கள் அல்லாதவர்களும், சத்திய அறிவிற்குள்ளாகக் கொண்டுவரப்படத்தக்கதாக, (மரணத்திலிருந்து) கொண்டுவரப்படுவார்கள். அனைவரும் தங்கள் கடந்த காலத்தின் கிரியைகள் மற்றும் கற்றுக்கொண்ட படிப்பினைகளினால் நன்மை அடைவதற்கும், மேசியாவினுடைய இராஜ்யத்தின் மகிமையான ஒளியினாலும்/ வெளிச்சத்தினாலும் நன்மை அடைவதற்கும் வாய்ப்புப் பெற்றுக்கொள்வார்கள்; மேசியாவினுடைய இராஜ்யத்தின் இந்த மகிமையான வெளிச்சமானது, அனைத்து அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும், இருளையும் அகற்றிப்போட்டு மற்றும் நித்திய ஜீவனிடத்திற்கும், தேவனிடத்திலான ஐக்கியத்திற்கும் [R5234 : page 140] திரும்பிவருவதற்கான வழியில் வெளிச்சம் வீசுகின்றதாய் இருக்கின்றது.

நம்முடைய பாடத்தின் ஆதார வசனமானது, சரீரப்பிரகாரமான சொஸ்தமாக்குதலைக் குறிப்பதாகச் சிலரால் கருதப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைகளானது, ஆவிக்குரிய குணமாக்குதலை விசேஷமாய்க் குறிக்கின்றது என வேறுசிலர் புரிந்துகொண்டுள்ளனர். இந்த ஆவிக்குரிய குணமாக்குதல்களைக் குறித்துச் சங்கீதக்காரன், “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்” என்று குறிப்பிடுகின்றார் (சங்கீதம் 103:3,4). தங்கள் பாவங்களைத் தங்களிடமிருந்து மறைத்து, கர்த்தரிடமிருந்தும் மறைப்பதற்குச் சிந்திப்பவர்கள் மகா தவறு செய்கின்றவர்களாக இருக்கின்றனர் மற்றும் இப்படிப்பட்டவர்கள் எந்த முன்னேற்றமும் அடைவதில்லை.