R3972 (page 108)
“ஆதியாகமம் 39:20-23; 40:1-15
“ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” ― வெளிப்படுத்தல் 2:10
யோசேப்பினுடைய சோதனைகள் மற்றும் சிரமங்கள் பற்றின கதையானது, பரிதாபத்தை மிகவும் தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது; எனினும் அனைத்துக் காரியங்களிலும் கர்த்தருடைய ஆசீர்வாதமானது, யோசேப்போடு கூடவே இருந்தது என்பதையும், யோசேப்பு உண்மையாய் அவ்வனுபவங்களுக்கு இணங்கினார் என்பதையும், யோசேப்பினுடைய அனுபவங்களானது, அவருக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மாறாக மிகுந்த அளவில் அவருக்கு அனுகூலமாகவே காணப்பட்டது என்பதையும் நாம் காண்கின்றோம். நாம் அனுபவிக்கும் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களுக்கெல்லாம் நெடுங்காலத்திற்கு முன்னதாகவும் மற்றும் பரம சுபாவத்திலும், இராஜ்யத்தின் மகிமையிலும் பங்குகொள்ளத்தக்கதாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான அழைப்புக்குரிய மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாகவும் யோசேப்பு வாழ்ந்தவராக இருந்தபோதிலும், ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட மாபெரும் வாக்குத்தத்த உடன்படிக்கையிலுள்ள தேவனுடைய இரக்கம் பற்றின மங்கலான வெளிப்படுத்துதலை உடையவராக மாத்திரம் யோசேப்பு காணப்பட்டப்போதிலும், அவருடைய உண்மை தன்மையும், அவருடைய பொறுமையுடன் கூடிய சகிப்புத் தன்மையையும் இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகிய தேவனுடைய புத்திரர் வீட்டாருக்கு அருமையான படிப்பினையாக திகழ்கின்றது. யோசேப்பினால் இவ்வளவு பொறுமையுடனும், உண்மையுடனும் சகித்துக்கொள்ள முடிந்தது என்றால், மிகவும் அதிகமாய்க் கிருபைப் பெற்றவர்களாகிய நம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லலாகுமா? யோசேப்பினுடைய வெற்றிக்கான இரகசியமானது, நம்முடைய வெற்றிக்கான இரகசியமாகவும் இருக்கின்றது, அதாவது “நமக்கு நிலையும், உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” என்று அப்போஸ்தலனால் குறிப்பிடப்படும் ஆபிரகாமின் உடன்படிக்கையை, விசுவாசத்தின் மூலமாக தளரா உறுதியுடன் பிடித்துக்கொள்வதே வெற்றிக்கான அந்த இரகசியமாகும் (எபிரெயர் 6:19). இப்பாடத்தைப் பார்ப்பது என்பது, கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களுக்கென்று, அவர் அனுமதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் சந்தர்பங்களின் கீழ், அவர்கள் ஒவ்வொருவரும இன்னும் அதிகமாய்ப் பொறுமையாகச் சகித்துக்கொள்ளத்தக்கதாகவும், உண்மையுள்ளவர்களாய்க் காணப்படத்தக்கதாகவும், உற்சாகமூட்டுகிறதாகவும், தூண்டுகிறதாகவும் காணப்படும்.
இருபது வெள்ளிக்காசுகளுக்கு யோசேப்பின் சகோதரர்கள் அவரை விற்றுப்போட்டதான, இஸ்மயேலர்களான வியாபாரிகளோ, அவரை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கு அவர் அக்காலத்தினுடைய வழக்கத்தின்படி, திறந்த வெளிச் சந்தையில் விற்பனைக்காக நிறுத்தப்படப்போகின்றார். பரிதாபத்திற்குரிய அந்த வாலிபனின் வேதனையை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகின்றது. தான் மரித்துப்போகும்படிக்குத் தனது சகோதரர்கள் தன்னைப் போட்ட குழியினின்று யோசேப்பு விடுவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, அவர்கள் உண்மையில் இருதயத்தில் மனம் வருத்தம் கொள்ளாமல், மாறாக தங்களது கொலைப் பாதகமான பொறாமையின் வடிவத்தை மாத்திரமே மாற்றியுள்ளனர் என்று உணர்ந்து கொண்டார். யோசேப்பு தன்னுடைய தகப்பனுடைய குடியிருப்புகளிலிருந்து, வெகுத்தொலை தூரங்களுக்குச் செல்லும் பழக்கமற்றவராகக் காணப்பட்டபடியால், (இம்மாதிரியான தருணங்களில்) 17-வயது வாலிபனுக்கு ஏற்பட்டிருக்கும் அதைரியத்தை / சோர்வை நாம் விவரித்துக் காட்டுவதைக் காட்டிலும், நன்கு கற்பனை செய்து நாம் புரிந்துகொள்ளலாம்; மேலும் யோசேப்பு அக்காலக்கட்டங்களில் நாகரிகத்திற்கு மையமான, எகிப்து நகரத்திற்கு வந்து, மேய்ப்பனின் குமாரனாகிய தனக்கு முற்றிலும் புதியதாகக் காணப்பட்ட வியத்தகு காரியங்களைக் கண்டபோது, தன்னை யார் விலைக்கு வாங்கப் போகிறார் மற்றும் தன்னுடைய எதிர்கால ஜீவியம் என்னவாக இருக்கும் என்பவைகள் பற்றின கவலைகள் மற்றும் சந்தேகங்களினால் அவருடைய இருதயம் நிரம்பிக் காணப்பட்டது. யோசேப்பு தேவனிடத்திலான விசுவாசத்தை இழந்துபோகத்தக்கதாகவும், அதாவது ஏன் தனது இரக்கமற்ற சகோதரர்களிடம், தான் இரக்கத்திற்காக கெஞ்சும்படிக்கு விடப்பட வேண்டுமென்று யோசிக்கத்தக்கதாகவும், ஏன் தான் அடிமையாக்கப்பட்டு, தன்னுடைய தகப்பன் வீட்டினின்று பிரிக்கப்பட வேண்டுமென்று யோசிக்கத்தக்கதாகவும், யோசேப்பு அப்போது கடந்துவந்த அனுபவங்களில் அநேகம் வாய்ப்புகள் இருந்தது. எனினும் தேவன் மீதான விசுவாசத்தை யோசேப்பு கைவிட்டதாக நமக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, அவர் எகிப்திலுள்ள ஐசுவரியமான பிரதானியாகிய போத்திபார் என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டார். இந்த மனிதனுடைய வீட்டில், ஊழியக்காரனாகக் காணப்பட்ட யோசேப்பு, சிறியதும், பெரியதுமான தன்னுடைய பொறுப்புகளில் உண்மையுள்ளவராகக் காணப்பட்டார் மற்றும் தன்னுடைய எஜமானின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலையிலும், உயர் கணிப்பிலும் அதிகமாய் வளர்ந்தார் மற்றும் அவரது 22-ஆம் வயதில், அவரது எஜமானுடைய வீட்டின் காரியங்கள் எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கப்பட்டார். யோசேப்பு எகிப்துக்கு வந்து பத்து வருடங்களான போது, அதாவது 27 வயதானவராய் இருக்கையில், அதாவது வாலிப வயதில் காணப்பட்டபோது, அவர் தனது எஜமானுடைய மனைவியின் அன்பை, வேண்டுமென்றே இல்லாமல், தன்பால் ஈர்த்துக் கொண்டவரானார்; ஆனால் எஜமானின் மனைவி தனது அன்பை வெளிப்படுத்தின போது, யோசேப்பு தேவனுக்கான உண்மையின் காரணமாகவும், தனது எஜமானுக்கான உண்மையின் காரணமாகவும், விடாப்பிடியாய் எதிர்த்தவராய்க காணப்பட்டார்.
யோசேப்பினுடைய ஒழுக்கத்திற்கான சோதனை குறித்து முனைவர் பிலேக்கி அவர்கள் குறிப்பாய்க் கூறியுள்ளது பின்வருமாறு: ‘ஒவ்வொரு நாளும் தொடர்ந்து காதல் கலைகளில் வல்லவளாகிய வீட்டு எஜமானி, அவளது திறமையினாலும், காம உணர்வுகளினாலும் செய்ய முடிந்த சகல கவர்ச்சிகளுடன், வலைவீச வந்து கொண்டிருந்தபோது, அது சாதாரணமான சோதனையாக இருந்திருக்காது என்று நாம் நம்புகின்றோம். அடிமையாகிய தான், இத்தகைய உயர் ஸ்தானத்தில் காணப்படும் ஸ்திரீயின் அன்பைத் தன்பால் ஈர்த்துள்ளதைக் குறித்த எண்ணத்தினால், யோசேப்புகூட எப்படி தாக்கத்திற்குள்ளாயிருக்க வேண்டும் என்றும், மற்றும் அவளது செல்வாக்கின் மூலமாகச் சுதந்திரத்தைத் தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் கிடைக்கப்பெறும் பிரகாசமான எதிர்காலத்தில், தன்னுடைய சொப்பனங்கள் நிறைவேறும் என்பதான காட்சிகள் எவ்வாறு அவர் முன் நிழலிட்டிருக்கும் என்றும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது.”
போத்திபாருடைய மனைவியின் நடக்கையானது, அன்பு எவ்வாறு கசப்பான பகையாக மாறும் என்பதற்கான உதாரணமாக விளங்குகின்றது. அவள் தனது உறுதியினிமித்தமாக, யோசேப்பை அவரது வஸ்திரத்தைப் பிடிப்பதன் மூலம் பிடித்தாள், ஆனால் அவரோ வஸ்திரத்தை விட்டுவிட்டு நழுவிப் போய்விட்டார் மற்றும் அப்போது அவளது சீற்றமும், சினமும் கசப்பானது. அவளோ அந்த வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன்னுடைய கணவனிடம், அவரது அபிமான வேலைக்காரன் தன்னைத் தவறு செய்வதற்கு இணங்க வைத்திட முயற்சித்தான் என்றும், தான் சத்தமிட்டுக் கூப்பிட்டபோது, அவன் தன்னுடைய வஸ்திரத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டான் என்றும் கூறினாள். யோசேப்பின் விஷயத்தில் இக்காரியமானது எத்தகைய ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது! யோசேப்பு தன்னுடைய எஜமானுடைய கண்களுக்கு முன்பாக மாத்திரமல்லாமல், தான் 10-வருடங்களாக தங்கியிருந்த வீட்டில் பழகினவர்கள் அனைவருக்கும் முன்பாகவும், இப்படியாக அவமதிப்பிற்கு உள்ளாகத்தக்கதாக ஏன் கர்த்தர் அனுமதித்தார்? யோசேப்பினுடைய நல்லொழுக்கமானது, இவ்வளவுக்குப் பொல்லாப்பாய்ப் பேசப்படுவதற்கு ஏதுவாகக் கர்த்தர் அனுமதித்தது ஏன்?
இது அநேகமாக யோசேப்பிற்கு மர்மமான தெய்வீகச் செயல்பாடாகவே தோன்றியிருக்கும், எனினும் தெய்வீக வழிநடத்துதலானது எப்படி அவரைக் கைவிடவில்லை என்றும், மாறாக இந்த அனுபவத்தின் மூலம் நீதி, பொறுமை, அனுபவங்கள், உண்மைத் தொடர்பாக யோசேப்பிற்கு இன்னமும் போதனைகள் கொடுப்பதற்கும், யோசேப்பு அரியணையில் பெற்றுக்கொள்ளப்போகின்ற இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களுக்கு அவரை ஆயத்தப்படுத்துவதற்கும் என்று கர்த்தருடைய வழிநடத்துதல்கள் ஆயத்தமாய் இருந்தது என்றுமுள்ளவைகளை நாம் பின் நடைபெறும் சம்பவங்களின் வெளிச்சத்தில் காணமுடிகின்றது. இந்த ஆவிக்குரிய யுகத்தினுடையவர்களாகிய நமக்கான பாடம் தெளிவானதாகவும், மிகவும் கவனத்தை ஈர்க்கின்றதாகவும் காணப்படுகின்றது; யோசேப்பினுடைய உண்மையற்ற தன்மையின் காரணமாக, கர்த்தர் இந்தச் சோதனையை அவர் மேல் வரப்பண்ணவில்லை. இதுபோன்று நம்மீது ஒருவேளை சோதனைகளும், சிரமங்களும் வருவதற்கு அனுமதிக்கப்படும்போது, இதற்கான காரணம் நம் சார்பிலான உண்மையற்ற தன்மையும், கர்த்தரிடமிருந்து வருவதான தண்டனையும் ஆகும் என்பதாகாது. அவருடைய வழிநடத்துதலின்போது, அவரை நம்மால் காணமுடியாத போதும், வழியினுடைய முடிவை நம்மால் காணமுடியாதபோதும், நாம் கர்த்தரை விசுவாசிப்பதற்கென்று ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய்க் கற்றுக்கொண்டிருக்கின்றோமல்லவா? நம்மால் வழியினுடைய முடிவைக் காணமுடியுமானால், அங்கு விசுவாசத்திற்கு இடமிருக்குமா? எதிர்காலத்தினைப் பற்றின அறிவு நமக்கு இல்லாத காரியமே, தற்காலத்தில் விசுவாசத்திற்கான பலமாய் இருக்கின்றதல்லவா?
[R3973 : page 109]
மகா ஸ்பர்ஜன் அவர்கள் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், “சில குறிப்பிட்டப் பாவங்களோடு போராடும் விஷயத்தில், விலகியோடுவதைக் காட்டிலும் வெற்றிக்கொள்வதற்கு வேறு எந்த வழியும் இருப்பதில்லை. முற்காலத்தில் இயற்கையை வழிபடுபவர்கள், பேஸிலிஸ்க் எனும் பாம்பைக் குறித்து அதிகம் எழுதியுள்ளனர்; இந்தப் பாம்பானது, தனது கண்களின் பார்வையினால் நபர்களை / விலங்குகளை அசைய முடியாதபடிக்கு நிறுத்தி, சுலபமாகக் கொன்று போடுகின்றது; இதுபோலவே பொல்லாப்பினுடைய ஒரு பார்வையே நம்மைக் கவலைக்கிடமான அபாயத்திற்குள்ளாக்குகின்றது;” இந்தக் கருத்திற்கு இசைவாகவே அப்போஸ்தலன், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு” என்று தீமோத்தேயுவுக்கு எழுதியுள்ளார். இயேசுவின் மாதிரியானது, பூமிக்குரிய வகை சார்ந்த பிரகாசமான நம்பிக்கைகளையும், வாய்ப்புகளையும் விட்டுவிடுமளவுக்கு நீதியின் கொள்கைகளுக்கு உண்மையாய் இருத்தல் தொடர்புடையக் காரியத்தில், நம் அனைவருக்கும் அருமையானப் பாடமாகக் காணப்படுகின்றது. சோதனையிலிருந்து விலகியோடுதல் குறித்த இந்தப் பாடத்தை நாம் கற்றுக்கொள்கையில், நாம் மற்றுமொரு பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, ஏனெனில் யோசேப்பினுடைய எஜமானாகிய போத்திபார் யோசேப்பின் மீது மிகவும் கோபமடைந்தபோது, நடந்தக் காரியங்களை விவரிப்பதன் மூலம் போத்திபாரின் மனைவியை அவமானப்படுத்துவதற்கு முயற்சிக்காமல், குற்றச்சாட்டை மாத்திரமே மறுதலித்தவராக யோசேப்பு காணப்பட்டது பதிவுகளிலிருந்து தெரிகிறது. பேசும் காரியம் உண்மையாக இருப்பினும், தீமை பேசுதலைத் தவிர்ப்பதற்காக, நமக்கு எத்தகைய சிறந்த மாதிரி / உதாரணம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது!
அந்த ஸ்திரீயினுடைய பொல்லாப்பை வெளிப்படுத்துவது என்பது நீதியான காரியமாகவே இருந்தாலும், அப்படிச் செய்வது என்பது அவளைப் பாதிப்பிற்குள்ளாக்குவது மாத்திரமல்லாமல், அவள் மீதான போத்திபாருடைய பாசத்தின் விஷயத்தில், அது சரி பண்ணமுடியாத பலமான அடியாகக் காணப்பட்டு, இப்படியாக அவள் மீதான எஜமானின் நம்பிக்கைக் குலைந்துபோய், அவரது குடும்பத்தைப் பிரித்துவிடும் என்று யோசேப்பினுடைய பெருந்தன்மையான இருதயம் அநேகமாக யோசித்திருக்க வேண்டும். இம்மாதிரியான சூழ்நிலைகளின் கீழ்ப் பொறுமையாய்ச் சகிப்பதற்கான விருப்பம் என்பது, உயர்தரமான மற்றும் தலைச் சிறந்த குணலட்சணத்திற்குரிய வியக்கத்தக்க ஓர் உதாரணமாகும் / விளக்கமாகும். இப்படிப்பட்ட ஒரு மனுஷன் நிச்சயமாய் அரியணைக்குத் தகுதியானவனே; ஆனால் இன்னும் இல்லை. காரணம் யோசேப்புக்கு நியமிக்கப்பட்ட உயர்த்தப்படுதலுக்கு ஆயத்தமாகுவதற்கு முன்னதாக, அவருக்குத் தேவன் இன்னும் வேறே அனுபவங்களை வைத்திருந்தார். இப்படியாகவே நம் விஷயத்திலுங்கூடக் காணப்படும்; அதாவது நமது கர்த்தரும், மீட்பருமானவருடன் அவரது மாபெரும் வேலையில் பங்கடையத்தக்கதாக, ஆயிர வருட இராஜ்யத்தினுடைய சிங்காசனத்திற்கு, நம்மைத் தேவன் அழைத்திருக்கின்றார்; ஆனால் முதலாவதாக நாம் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கப்பட வேண்டும் மற்றும் கர்த்தர் நாடும் அப்பேர்பட்ட பாத்திரங்களின் வளர்ச்சிக்குப் பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மைக்கான பரீட்சைகளும், அடிகளும், சோதனைகளும் அவசியப்படுகின்றது.
ஒரு பாறை கட்டி (Rock candy) என்பது முழுக்க நிலக்கரியாக இருக்கின்றது மற்றும் ஒரு வைரம் என்பது முழுக்க நிலக்கரியாக இருக்கின்றது, எனினும் இவைகளுக்கிடையே வித்தியாசமுள்ளது, அதுவும் வைரமானது அதிகளவில் கெட்டியாகவும், திடமாகவும், திண்ணமாகவும், படிகமாகியுமுள்ள காரியத்திலேயே முக்கியமாய் வித்தியாசமுள்ளது. இதுபோலவே கிறிஸ்துவுக்குள்ளான புதுச் சிருஷ்டிகளுடைய நிலைகளுக்கிடையே வித்தியாசம் உள்ளது. ஒரு காலத்தில் நாம் “கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக” மாத்திரமே இருந்தோம், ஆனால் நாம் பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மையின் வாயிலாகவும், கர்த்தருடைய அறிவுரைகள் மற்றும் தேவனிடமிருந்துவரும் ஒழுங்குபடுத்துதல்கள் வாயிலாகவும் நாம் உண்மையாய்க் காணப்படுவோமானால் நாம் கர்த்தரிலும், அவரது சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்பட்டிருக்க வேண்டும்; “கிறிஸ்துவுக்குள் குழந்தைகள்” என்பது பாறை கட்டி (Rock candy) வடிவில் காணப்படும் நிலக்கரிக்கு ஒத்த நிலையாகும், ஆனால் உபத்திரவம் எனும் சூளையில் வளர்ந்துள்ள முதிர்ந்த கிறிஸ்தவனோ, வைரத்திற்கு ஒத்த நிலையில் காணப்படுகின்றான். இங்குக் கர்த்தர் நம்முடைய பரீட்சை காலத்தின் நிறைவாகிய சுவிசேஷ யுகத்தினுடைய முடிவில், தம்முடைய இரண்டாம் வருகையின்போது, தம்முடைய “சம்பத்தை” சேர்ப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள அவருடைய வாக்குறுதியை நாம் நினைவுகூருகின்றோம்.
இப்படியான ஒரு குற்றச்சாட்டின் கீழ்க் காணப்படும் தன்னுடைய அடிமையை, போத்திபாரின் ஸ்தானத்தில் காணப்படும் எந்த ஓர் அதிகாரியும் அக்காலகட்டத்தில், மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்திருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இப்படியாகச் செய்யப்படுவதற்குப் பதிலாக, யோசேப்பு சிறையில் கைதியாக வைக்கப்பட்டக் காரியத்திலிருந்து, தனக்கு உண்மையாய்ப் பத்து வருடங்கள் வேலை புரிந்திட்ட மனிதன், தனக்கு நம்பிக்கைத் துரோகம் புரிந்துள்ளதான குற்றச்சாட்டை போத்திபார் முழுவதும் நம்பாதது தெரிகின்றது. முற்காலங்களில் காணப்பட்ட சிறைச்சாலை என்பது, நாகரிகமான தேசங்களில் காணப்படும் நவீன / நாகரிகமான சிறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய்க் காணப்பட்டது. இந்தச் சிறையைக் குறிப்பிடுகையில், யோசேப்பு இதைக் “கிடங்கு” என்று குறிப்பிடுகின்றார் (ஆதியாகமம் 40:15); இது எபிரெயத்தில் “குழி” என்று அழைக்கப்படுகின்றது மற்றும் கிழக்கத்திய தேசங்களிலுள்ள சிறைகளைப்பற்றி ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார்:-
“நாங்கள் லீவண்டில் அநேகம் சிறைச்சாலைகளைப் போய்ப் பார்த்தோம்; நாங்கள் அங்குச் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அசுத்தங்களையும், காற்றோட்டமற்ற நிலைமையையும், அதிகளவிலான எலிகளையும், பூச்சிகளையும், புழுக்களையும், கைதிகளுடைய பாதங்கள் கட்டப்படுகின்ற இரக்கமற்ற தொழுவங்களையும் பார்த்தோம். நல்லொழுக்கமுள்ள யோசேப்பிற்காக நாம் அனுதாபம் கொள்கின்றோம்; யோசேப்பு காய்ரோ என்று தற்போது காணப்படும் பட்டணத்திலுள்ள காவல் கிடங்கில் போடப்பட்டதாகப் பாரம்பரியமானது தெரிவிக்கின்றது; இந்தக் கிடங்கின் இருளும், அருவருப்புகளும், தொற்று நோய்களும் நிறைந்த நடைப்பாதைகளின் சுவர்களில் கைதிகள் விலங்கிடப்பட்டிருப்பார்கள்.”
சிறையிலுள்ள யோசேப்பின் அனுபவங்களானது, சங்கீதக்காரனால் குறிப்பிடப்படுகின்றது; “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது” சங்கீதம் 105:18.
இந்தப் புதிய அனுபவமானது, யோசேப்பினிடத்தில் எத்தகைய ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தினது? யோசேப்பு சோர்வடைந்துவிட்டாரா, தளர்ந்துபோய்விட்டாரா, மனங்கசந்து போனாரா? இதுதான் நல்லொழுக்கத்திற்கான பலன் என்றால், நான் தீயொழுக்கமுள்ளவனாக மாறிவிடுகின்றேன் என்று யோசேப்பு தனக்குள்ளோ (அ) மற்றவர்களிடத்திலோ கூறிக் கொண்டாரா? இந்த அனுபவத்தை அனுமதிப்பதற்காக, அவர் கர்த்தருடைய செயல்பாடுகளுக்கு எதிராக அதிருப்திக்கொண்டாரா? அல்லது அவர் பொறுமையுடன் ஒப்புக்கொடுத்தவராகவும், கர்த்தரை நம்பினவராகவும் காணப்பட்டாரா? இந்த அனுபவங்கள் அனைத்திலும் யோசேப்பு, உண்மை கிறிஸ்தவனுக்கும், பரிசுத்தவானுக்குமான சரியான நடக்கைக்கான தலைச்சிறந்த மாதிரியாகக் காணப்படுகின்றார். இந்தத் தீமையைக் கர்த்தர் அனுமதித்ததற்கான காரணம் தொடர்புடைய விஷயத்திலுள்ள குறைவான வெளிச்சத்திலேயே யோசேப்பு உண்மையுள்ளவராகக் காணப்பட்டாரானால், மிகவும் பெரிதான வெளிச்சத்தினாலும், அறிவுரைகளினாலும், வேதவாக்கியங்களிலுள்ள யோசேப்பு மற்றும் மற்றவர்களுடைய சிறந்த மாதிரிகளினாலும், நம்முடைய சொந்த அனுபவங்களின் பாடங்களினாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நம்மிடம், நியாயமாய்க் கர்த்தர் எவ்வளவாக எதிர்ப்பார்ப்பார்; நாம் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும், தேவபக்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பெற்றுள்ளவர்களும், நமக்கான பரீட்சைகளும், சிரமங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் மற்றும் இவைகள் எப்படி நம்மை இராஜ்யத்திற்காகவும் மற்றும் அதன் மகிமையான வேலைகளுக்காகவும் ஆயத்தமாக்குகின்றன என்பது பற்றின விளக்கத்தையும் பெற்றுள்ளவர்களுமாகிய நாம் வெட்கத்தின் நிமித்தமாவது, யோசேப்பினுடைய அளவுக்காகிலும் காணப்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். யோசேப்பின் பரீட்சைகளும், சிரமங்களும் அவருக்குள் எப்படிக் குணலட்சணத்தை வளர்த்தினது என்பதையும், அவர் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு தருணங்களிலும் மேற்கொண்டுவந்தபோது, அவர் எப்படிப் பலமடைந்துகொண்டு வந்தார், அதாவது அவரது குணங்கள் உறுதியடைந்தது என்பதையும் நம்மால் உடனடியாகக் கண்டுகொள்ள முடிகிறதல்லவா? ஆ! இவர் “முற்பிதாக்களில்” ஒருவராகக் காணப்பட்டு, சபை மகிமையடைந்தப் பிற்பாடு, தலையும், சரீரமும் அடங்கின கிறிஸ்துவின் வழிநடத்துதல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஒட்டுமொத்த மனித குடும்பத்தை ஆளுவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் மற்றும் தூக்கிவிடுவதற்குமென, பூமியெங்கும் பிரபுக்களாக வைக்கப்படுபவர்களில் ஒருவராகக் காணப்படுவார். தம்முடைய ஊழியங்களுக்காக அருமையானப் பாத்திரங்களைத் தெரிந்தெடுப்பது எப்படி என்பதை மாத்திரமல்லாமல், இன்னுமாக இந்தப் பாத்திரங்களை வளர்த்துவதும், நிரூபிப்பதும் மற்றும் பரீட்சிப்பதும் மற்றும் தம்முடைய ஊழியத்திற்காகவும், அவர்களது ஆசீர்வாதங்களுக்காகவும் அவர்களைப் பலப்படுத்துவதும் எப்படி என்பதையும் கர்த்தர் நன்கு அறிவார்.
“ கர்த்தர் அவனோடே இருக்கிறார் ” – SUB HEADING
தொழுவங்களில் கால்கள் கட்டப்பட்டிருந்ததான யோசேப்பின் அனுபவங்களானது, கொஞ்சங்காலமே நீடித்தது. யோசேப்பிற்கு எதிராக என்ன குற்றச்சாட்டுக் காணப்பட்டாலும், இவர் சாதாரணமான பண்புகளும், திறமைகளும் உடையவரல்ல என்று சிறைக்காப்பாளன் உணர்ந்து [R3973 : page 110] கொண்டான். யோசேப்பு தேவனுக்குக் கொண்டிருந்த பயபக்தியும் மற்றும் கடமையின் விஷயத்தில் அவர் கொண்டிருந்த உண்மையும், அவரை மதிப்புமிக்க மனிதனாக்கிற்று மற்றும் யோசேப்பின் கரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக சில பொறுப்புகளை ஒப்புவிப்பதில் சிறைக்காப்பாளன் திருப்தியடைந்தான். பதிவுகளின்படி யோசேப்பின் சொந்த அனுபவங்களானது, அவர் மற்றக் கைதிகளினிடத்தில் இரக்கம் கொண்டவராக இருக்கச் செய்திற்று; தன்னுடைய சொந்த அனுபவங்களின் காரணமாக, அவரால் மற்றக் கைதிகளினுடைய துக்கங்களையும், அவமானங்களையும் உணர்வுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எகிப்தின் அதிகாரியென யோசேப்பு அதிகமாய்ப் பயனுள்ளவராகக் காணப்படத்தக்கதாக, அவரைத் தகுதிப்படுத்துவதற்குரிய சிறந்த படிப்பினைகளை யோசேப்பு கற்றுக்கொண்டுவந்தார். இந்தக் காரியங்கள் அனைத்திற்குமான இரகசியமானது, “கர்த்தர் அவனோடே இருக்கிறார் மற்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார்” என்ற சுருக்கமான சில வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 39:3).
கர்த்தருக்காக எவ்வளவேனும் பயபக்திக்கொண்டிருப்பவர்கள், அதற்கேற்ப ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; அதிகப்படியான விசுவாசம், அதிகப்படியான பயபக்தி, அதிகப்படியான கீழ்ப்படிதல் என்பவைகள், இருதயத்திலும், ஜீவியத்திலும் அதிகப்படியான ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகின்றதாகவும், குணலட்சணங்கள் இயல்பாக எப்படியிருப்பினும், அதற்கு அதிகப்படியான வலிமையூட்டுதலையும், உறுதியடைதலையும் கொண்டு வருகின்றதாகவும், இயல்பாகவே அந்த நபர் எவ்வளவு ஒழுங்கில்லாதவராகக் காணப்பட்டாலும், அவருக்கு அதிகப்படியான தெளிந்த புத்தியுள்ள ஆவியைக் கொண்டுவருகின்றதாகவும் காணப்படும். இந்த அனைத்து விஷயங்களிலும் கர்த்தருடைய வார்த்தைகளின் அறிவுரைகளை (அ) அவரது வாக்குத்தத்தங்களின் உற்சாக மூட்டுதலையும், தெளிந்த புத்தியுள்ள ஆவியின் வழிநடத்துதலையும் கொண்டிருப்பவர்களாகிய நாம் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம். நாம் எந்தளவிற்கு இவைகளைப் பயன்படுத்தி, சரியான குணலட்சணங்களை வளர்த்திக் கொள்கின்றோமோ, அவ்வளவாய் நாம் இறுதியில் பலனை அடைந்து, “போதும், மேலே வா; நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்லும் ஆண்டவருடைய குரலை நாம் கேட்போம்.
“கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதுச் சிருஷ்டிகளாகிய” நாம் கர்த்தருக்கு உண்மையாய் (அதாவது சகோதர சகோதரிகளுக்கும், சத்தியத்திற்கும், நீதிக்கும் எல்லாவிதத்திலும் உண்மையாய் இருத்தலை உள்ளடக்கின விதத்தில் கர்த்தருக்கு உண்மையாய்) இருக்க வேண்டும் என்பதாக ஆதார வசனத்தில் இடம்பெறும் புத்திமதியை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இந்த உண்மையாயிருத்தல் என்பது பரீட்சிக்கப்பட வேண்டும், சோதிக்கப்பட வேண்டும், நிரூபிக்கப்பட வேண்டும், அதுவும் ஜீவியத்தின் முடிவுவரையிலும், நாம் மரணம் என்னும் சிறைச்சாலைக்குள் கடந்துபோவது வரையிலுமாகும். “மரணப்பரியந்தம் உண்மையாயிரு, அப்போது ஜீவக்கிரீடத்தை உனக்குத் தருவேன்.” நாம் சேவிக்கின்ற கர்த்தரானவர் சிறையின் கதவுகளைத் திறக்கவும், அவரது இராஜ்யத்தின் மகிமையிலும், கனத்திலும் மற்றும் அழியாமையிலும் பங்கடையத்தக்கதாக, நம்மை முதலாம் உயிர்த்தெழுதலில் கொண்டுவருவதற்கும் வல்லமைக் கொண்டவராகவும் மற்றும் சித்தமும் உள்ளவராகவும் இருக்கின்றார். அல்லேலூயா, எத்துணை ஓர் இரட்சகர்! எத்தகைய ஓர் இரட்சிப்பு! எத்தகைய ஒரு ஜனங்களுக்கு இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன! இத்தகைய கருத்துக்களானது, நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்துவதற்கு நாம் நாடும்படிக்கு நம்மை ஏவுகின்றது; இதுவே தெய்வீக நோக்கமாகவும் காணப்படுகின்றது.
“ சிறைச்சாலையில் தழைத்தோங்குதல் ” – SUB HEADING
சிறைச்சாலையின் தலைவனோ சிறைச்சாலையின் பராமரிப்பை யோசேப்பினுடைய கரங்களில் விடுவதில் மனநிறைவுடன் காணப்பட்டார். யோசேப்பின் தலைமையின் கீழ்க் கிடங்குச் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் மற்றும் அந்தக் கிடங்கில் முன்பு நிலவிவந்த பைத்தியக்காரரின் விடுதிக்கொத்த நிலைமைக்கு நேர்மாறாக, அந்த இருள் மூடியிருந்த சுவர்களின் மத்தியில், கொஞ்சம் சமாதானம் நிலவியிருக்கும் என்பதையும் நம்மால் நன்கு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஞானம், இரக்கம், பொறுமை, கனிவு ஆகிய அனைத்தும் தேவைப்பட்டிருக்கும் மற்றும் செயல்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் நமக்கு நிச்சயமே. மேலும் இப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதான சிறைச்சாலையானது, சிறையிலுள்ள கைதிகளுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்ததோடுகூட, யோசேப்பினுடைய சொந்த இருதயத்திலும் ஆசீர்வாதத்தை, [R3974 : page 110] அதாவது வளர்ச்சியைக் கொண்டுவந்தது; நாம் மற்றவர்களுடைய வருத்தங்களை ஆற்றுவதற்கு முயற்சிக்கும்போது, நமக்குச் சந்தோஷமும், சமாதானமும் எப்போதும் கடந்துவருகின்றது.
யோசேப்பு எப்படிச் சிறையிலுள்ள கைதிகளுடன் நடந்துகொண்டார் என்பது பற்றின ஒரு காட்சி, இப்பாடத்தில் கொடுக்கப்படுகிறது; கைதிகளைக் கொடூரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடத்துவதற்குப் பதிலாக, அவர் ஒரு நாள் காலை அன்று, கைதிகளில் இருவர் வழக்கத்திற்கு மாறாக துக்கமுகத்தோடே இருப்பதைக் கவனிக்குமளவுக்கு, அவர் கைதிகளுடைய நலனுக்கடுத்தவைகளைக் கவனித்தவராய் இருந்தார்; அவர் அவர்களை நோக்கி கனிவோடே, “உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன?” என்று கேட்டார். அவர்கள் சொப்பனங்கண்டிருந்தார்கள் மற்றும் தங்களது சொப்பனங்களானது, இனி வரவிருக்கின்ற துன்பத்தை முன்னறிவிக்கின்றது என்ற பயத்தினால் கலங்கிப்போயிருந்தனர். யோசேப்போ: “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்” (ஆதியாகமம் 40:8). யோசேப்பினுடைய உண்மைக்கும், குணலட்சணத்தினுடைய உறுதிக்குமான இரகசியமானது, அவர் தேவனிடத்தில் விசுவாசங்கொண்டிருந்தார், அதாவது தேவன் யோசேப்பினுடைய கொள்ளுத்தாத்தாவாகிய ஆபிரகாமிடத்தில் பண்ணினதும், அவரது தாத்தாவாகிய ஈசாக்கிடத்தில் உறுதிபண்ணினதும், மீண்டுமாக அவரது தகப்பனாகிய யாக்கோபிடத்தில் உறுதிபடுத்தப்பட்டதும், தான் சுதந்தரவாளியாகக் காணப்படுகின்றதுமான மகா வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கையில் விசுவாசங்கொண்டிருந்தார் என்ற உண்மையில் அடங்கி உள்ளது. ஜீவியத்தில் ஒவ்வொரு புயலின் போதும், மந்தாரமான மேகம் ஆளும் போதும், ஜீவியத்தைச் சீராக வைத்துக்கொள்ளுவதற்கு, விசுவாசத்திற்கு எத்தகைய ஆற்றல் காணப்படுகின்றது!
சொப்பனங்களில் ஒன்றுக்கு மிகவும் நன்மையான அர்த்தம் காணப்பட்டது மற்றும் சீக்கிரத்தில் விடுதலைப் பெற்று இராஜாவின் தயவிற்கு மீண்டுமாகக் கடந்துவரப்போகிறவரை நோக்கி யோசேப்பு, தன்னையும், அவர் சிறையில் காணப்படும்போது தான் அவரைப் பரிவாய் நடத்தினதையும் அவர் நினைவுகூரவும், தன் சார்பாக, தான் கிடங்கிலிருந்து விடுவிக்கப்படத்தக்கதாக இராஜாவிடம் நல் வார்த்தைகளைப் பேசும்படிக்கு வேண்டிக்கொண்டார். இந்தக் காரியத்தை நாம் விவரிக்கையில், யோசேப்பு தன்னுடைய சகோதரர்களையோ அல்லது போத்திபாரின் மனைவியையோ குறைக்கூறாமல், தான் சிறையில் இருப்பதற்கான காரணத்தை, “நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை” என்று மாத்திரம் கூறினதை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. யோசேப்பினுடைய நோக்கங்களுக்கு ஆதரவு கிடைக்கத்தக்கதாக, அவர் எவரையும் பற்றிப் பழிதூற்றுவதற்கு அவசியமில்லை, மற்றும் அதை அவர் தவிர்த்துவிட்டார். நம்முடைய சந்ததி மூவாயிரம் வருடங்களுக்கு முன்னதாக குரங்குகளாகவோ (அ) காட்டுமிராண்டிகளாகவோ இல்லையென்பதற்கு இங்கு நாம் எத்தகைய ஓர் ஆதாரத்தைப் பெற்றிருக்கின்றோம். குரங்காகவோ (அ) காட்டுமிராண்டியாகவோ இருப்பதற்குப் பதிலாக, (பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்னதாக… சுவிசேஷ யுகத்திற்கு முன்னதாக எவர் மேலும் வராத) பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பிக்கப்படுதலை அடைந்திராத இந்தச் சுபாவ மனுஷன் (யோசேப்பு) எழுத்தின் வடிவிலோ (அ) வாய் மொழியாகவோ எந்த அறிவுரைகளையும் பெற்றிராமல் இருந்த போதிலும், தீமைப் பேசத்தக்கதாகக் கடுமையாய்ச் சோதனைக்குள்ளாக்காத விதத்தில் காணப்படும் அளவிற்கு, வியக்கத்தக்க விதத்தில் பெருந்தன்மையையும், அன்பையும் வளர்த்தியுள்ளவராகக் காணப்படுகின்றார்.
கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்களும், பாவத்தினின்றும், தீமையான கிரியைகள் அனைத்தினின்றும் திரும்பியுள்ளதாக அறிக்கைப் பண்ணியுள்ளவர்களும், தீமைப் பேசுதல் என்பது மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகளுக்குச் சம்பந்தப்பட்டது என்று நன்கு அறிந்துள்ளவர்களுமான அநேகரை, யோசேப்புப் பற்றின இந்தச் கதையானது வெட்கத்திற்குள்ளாக்குகின்றது. அன்பே பிரதானமானது என்றும், அன்பு தீங்கு நினையாது என்றும், நீடிய சாந்தமும், தயவும் உள்ளது என்றும், எளிதில் சினமடையாது என்றும், கர்த்தர் நம்மை அன்புகூர்ந்தது போன்று, ஒருவரையொருவர் நாம் அன்புகூர வேண்டிய கர்த்தருடைய ஜனங்களின் மத்தியில் மாத்திரம் இந்த அன்பு காண்பிக்கப்படாமல், இன்னும் நம்முடைய அயலார்களிடத்திலுங்கூடக் காண்பிக்கப்பட வேண்டும், அதாவது நாம் நம்மை அன்புகூருவது போன்று, நம்முடைய அயலார்களை அன்புகூர வேண்டும் என்றும், இதையும் தாண்டி நம்முடைய சத்துருக்களிடமும் அன்புகூர்ந்து, அவர்களுக்கு நம் உதவித் தேவைப்படும் பட்சத்தில், அவர்களை உடுத்துவிக்கவும், போஷிக்கவும் வேண்டும் என்றும் உள்ள அறிவுரைகளை நம்முடைய கர்த்தரிடமிருந்தும், அப்போஸ்தலர்களிடமிருந்தும் யோசேப்பு பெற்றிருக்கவில்லை. உபத்திரவத்தில் பொறுமையுடன் சகித்திருத்தல், இன்னுமாக விசுவாசமும், இரக்கமும், கனிவும், பொறுமையும், பரிவும் நிறைந்த நிலையில் காணப்படுதல் என்ற படிப்பினையை யோசேப்பிடமிருந்து பெற்றுக் கொண்டதற்காக, தேவனுக்கு நன்றி. இந்தக் குணலட்சணங்கள் அனைத்தையும் வளர்த்தும் விஷயத்தில், மனதிற்கு எத்தகைய பங்குள்ளது. ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களினால் முன் வைக்கப்பட்ட நம்பிக்கைகள் ஒருவேளை யோசேப்பிற்கு இல்லாதிருந்தால் அவரும் பெரும் பான்மையான மனுக்குலத்தாரைப் போன்று நற்குணங்கள் அற்றவராகவும், சோர்வடைந்தவராகவுமே காணப்பட்டிருந்திருப்பார். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” என்று அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளது போன்று, நாமும் அதே வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாக இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்வோமாக (கலாத்தியர் 3:16,29)