R1268 – இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R1268 (page 3)

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது

YE ARE CHRIST'S!

“(இரண்டு பத்திகள் மட்டும்)
R1271 : page 5

“”யோசேப்பினுடைய அனுபவங்கள்”” – SUB HEADING

யோசேப்பின் சகோதரர்கள் அவரை அடிமைத்தனத்திற்குள்ளாக விற்றுப்போட்டார்கள் மற்றும் பிற்பாடு அவரை எகிப்தனைத்திற்கும் அதிகாரியாக அவர்கள் கண்டபோது, தங்கள் குற்றத்திற்குரிய தண்டனைக் குறித்து மிகவும் பயமடைந்தார்கள். ஆனால் அவர்களது பயங்களை அமைதிப்படுத்தும் வண்ணமாக யோசேப்பு, “என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்று கூறினார் (ஆதியாகமம் 45:5). ஆனால் யோசேப்பின் சகோதரர்கள் புரிந்த குற்றத்திற்கான பொறுப்பைச் சர்வவல்லமையுள்ளவர்மேல் சாற்றும் விதத்தில், இவ்வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று நாம் கூறுகின்றோம். பரிசுத்த ஆவியினால் நிறைந்து ஸ்தேவான், அவர்கள் செய்த காரியம் தேவனால் ஏவப்படாமல், மாறாக அவர்களது பொறாமையினாலேயே ஏவப்பட்டது என்று குறிப்பிடுகின்றார் (அப்போஸ்தலர் 7:9) மற்றும் இப்படி ஸ்தேவான் குறிப்பிட்டக் காரியமானது, யாக்கோபு 1:13,16-ஆம் வசனங்களுக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது. அப்படியானால் யோசேப்பு பேசினதில் தவறுள்ளது என்ற முடிவிற்கு நாம் வரலாமா? இல்லை; யோசேப்பும், ஸ்தேவானும், இரண்டுபேரும் கூறியவைகள் சரியே. யோசேப்பின் சகோதரர்கள் பொறாமையினால் நிறைந்திருந்தார்கள் மற்றும் யோசேப்பைக் கொன்றுபோடுவதற்கு முன்பே திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்களில் ஒருவருடைய மனதில் பயம் கிரியைப் புரிய தேவன் பண்ணினார், மற்றும் அந்த ஒருவர் கொடுத்திட்ட ஆலோசனையின் பேரில், பொறாமை கொண்டிருந்த அந்தச் சகோதரர்கள் வேறு வழிமுறையைத் தெரிவு செய்து, யோசேப்பை அடிமையாக விற்றுப்போட்டனர். இப்படியாகப் பார்க்கையில் தேவனுடைய பங்கானது எந்த விதத்திலும் யோசேப்பினுடைய சகோதரர்களின் நல்லது, கெட்டதுமான நடத்தைச் சார்ந்த பொறுப்பினை மாற்றிடவில்லை; அதே சமயம் தீமையான எண்ணத்தையும் உருவாக்கிக் கொடுக்கவுமில்லை; அது தீமையான எண்ணத்தை, வேறொரு திசையில் திருப்பி மாத்திரமே விட்டது (அதாவது யோசேப்பைக் கொன்றுபோடுவதற்குப் பதிலாக, அவரை விற்றுப்போடச் செய்தது); இப்படி நிகழ்வது என்பது அவருடைய ஊழியக்காரனாகிய யோசேப்பு தொடர்புடையதான தேவனுடைய திட்டத்திற்கு எதிராகவும் காணப்படப்போவதில்லை. மனிதனுடைய நல்ல மற்றும் கெட்ட குணலட்சணங்களைக் குறுக்கிடாமல், தேவனுடைய வல்லமையானது, காரியங்களை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடுகின்றது என்பதற்கான உதாரணமாகவே இச்சம்பவம் அமைகின்றது. இப்படியாகவே யோசேப்பினுடைய காரியங்கள் அனைத்திலும் நடைப்பெற்றது. யோசேப்பு சிறையிலிருந்து, பார்வோனுடைய சிங்காசனத்திற்குக் கொண்டுபோகப்பட்ட விஷயத்தில், யோசேப்பு சிறைக்கு அனுப்பப்பட்டதற்குக் காரணமாக இருந்த, போத்திபாருடைய மனைவியினுடைய குற்றமானது, தேவனுடைய ஏவுதலினாலேயே நடந்தது என்று வாக்குவாதம் பண்ணப்படக் கூடாது. மாறாக போத்திபாருடைய மனைவியும், யோசேப்பினுடைய பொறாமை கொண்ட சகோதரர்களும் இல்லாமலேயே, யோசேப்பை எகிப்தினுடைய சிங்காசனத்தினிடத்திற்குத் தேவனால் பல நூறு வழிகளில் கொண்டு வர முடியும். இயல்பாய் நடந்துகொண்டிருந்த சம்பவங்களைத் தேவன் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போட்டுப் பயன்படுத்தினார்; இப்படியாக யாருடைய சித்தங்களையும் குறுக்கிடாமல், நன்மைக்கு ஏதுவான அவரது சித்தம் நடந்தேற்றப்பட்டது.

ஆகவே “மனிதனுடைய கோபம் (பாவம் செய்த, விழுந்துபோன சந்ததியின் பண்புகளே ஒழிய, மாறாக அவர் ஏவி, மனிதர்மேல் திணிக்கும் பண்புகளல்ல) தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை அவர் அடக்குவார்” என்று பார்க்கின்றோம். தேவனுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எதிரான தீமையான மனிதர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தேவனால் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடப்பட்டுள்ளது என்றும், அவரை அன்பு கூர்ந்து, அவருக்கு ஊழியம் புரிகின்றவர்களைச் சில விதங்களில் பரீட்சிப்பதற்கு (அ) வேறு ஆசீர்வாதங்களை வழங்கிடுவதற்குத் தேவனால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் எதிர்க்காலத்தில் அனைவருக்கும் தெளிவாய் வெளிப்படுத்தப்படும் மற்றும் அவரது ஞானம் மற்றும் நற்பண்புகளை வெளிப்படுத்துவதின் மூலம், தற்காலத்தின் மனிதனுடைய கோபமானது, அப்போது தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும்.