R1645 – யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R1645 (page 124)

யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்

JOSEPH FORGIVING HIS BRETHREN

ஆதியாகமம் 45:1-15

“உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள் அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.” – லூக்கா 17:3
யோசேப்பிற்குத் தீமை செய்திட்ட அவரது சகோதரர்களை அவர் கையாண்ட விதத்தில் யோசேப்பினுடைய ஞானம் மற்றும் பெருந்தன்மையான குணலட்சணங்கள் மிகவும் பிரகாசமாய் மீண்டுமாகப் பிரகாசிக்கின்றது. எங்கும் நிலவியிருந்த பஞ்சத்தினிமித்தம் அந்தச் சகோதரர்கள் தானியம் வாங்கும்படிக்கு எகிப்துக்கு வந்திருந்தபோது, யோசேப்பு அவர்களை அடையாளங் கண்டுகொண்டார், ஆனால் யோசேப்பினுடைய புதிய ஸ்தானத்திற்குரிய மாற்றம் அடைந்துள்ள சூழ்நிலையின் காரணமாக, அவரை அவர்களால் அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை. யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, அவர்களை விட்டுப் பிரிந்தபோது தாடியில்லாதவராகவும், 17-வயதானவராகவும் காணப்பட்டார்; ஆனால் இப்பொழுதோ அவர்கள் அவரை 40 வயதுள்ள மனிதனாகவும், இராஜரிக வஸ்திரங்கள் தரித்தவராகவும், தங்களால் புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியைப் பேசுபவராகவும் கண்டார்கள்.
ஒருவேளை யோசேப்பு பழிவாங்கும் சிந்தை உடையவராக இருந்திருப்பாரானால், இதுவே பழிவாங்குவதற்குரிய அவருக்கான வாய்ப்பாகும். இப்பொழுது யோசேப்பு அதிகாரத்தில் காணப்படுகின்றார் மற்றும் அவர்களோ அவரது இரக்கத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். ஒருவேளை யோசேப்பினுடைய கணிப்பை, அவரது தாராள மனப்பான்மையானது மேற்கொண்டிருக்குமானால், அவர் தனது தயவுக்குள்ளாக ஒரு சத்துருக்களின் கூட்டத்தாரையே பெற்றவராக இருப்பார் மற்றும் இதனால் சமாதான குலைச்சலும், தனது வாழ்க்கை, பிரயோஜனப்படுவதற்கு இடைஞ்சலும் ஏற்பட்டிருக்கும் மற்றும் அவர்களது தீமையான பண்புகளை இன்னும் தூண்டிவிடுவதாகவும், வளர்த்திவிடுவதாகவும் இருந்திருக்கும். ஆனால் யோசேப்பு உணர்வுகளில் சீரான நிலைக்கொண்ட மனிதனாகக் காணப்பட்டார், ஆகையால் அவர் இந்த எல்லைக்கோ (அ) அந்த எல்லைக்கோ மிஞ்சிப் போகவில்லை. அவரது நடவடிக்கையானது, அவர் மன்னிக்கும் சிந்தையை மாத்திரமல்லாமல், ஜாக்கிரதையாயிருக்கும் சிந்தையைப் பெற்றிருந்ததையும் மற்றும் சரியான சூழ்நிலைகளின் கீழ் அவர் மன்னிப்பைக் காட்டுவதற்கு ஆயத்தமாய் இருந்தார் என்பதையும் காண்பிக்கிறது.

ஆகையால் அவர்களது தற்போதைய மனப்பாங்கு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்படிக்கும் மற்றும் கடந்த காலங்களின் அனுபவங்களானது, அவர்களில் எந்த விதமான மாற்றத்தையாவது கொண்டுவந்திருக்கிறதா என்பதை உறுதிபடுத்தும்படிக்கும் மற்றும் தனது தகப்பன் பற்றியும், தன்னுடைய சொந்த ஒரே சகோதரனாகிய பென்யமீன் பற்றியும் தகவல்கள் அறிந்துகொள்ளும்படிக்கும் யோசேப்பு முதலாவதாகக் கடுமையாய் நடந்துகொள்வதன் மூலமாக ஞானமாய் அவர்களைக் கையாண்டார். தனது தந்தையும், பென்யமீனும் இன்னும் உயிரோடிருப்பதை யோசேப்பு சீக்கிரமாய் அறிந்துகொண்டார் (ஆதியாகமம் 42:13); ஆனால் தன்னை யார் என்று மறைத்துக்கொண்டு, அவர்களிடம் கடுமையாய் நடந்துகொள்வதன் மூலமாக, அவர்கள் தங்கள் வயதான தகப்பனிடத்திலும், பென்யமீனிடத்திலும், ஒருவரோடொருவர் எத்தகைய மனப்பான்மையைத் தற்போது கொண்டிருக்கின்றனர் என்பதைப் பரீட்சிக்கும்படிக்கு யோசேப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்; மேலும் அவர்களை யோசேப்பு பரீட்சித்தப் பிற்பாடு, அவர்களிடத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் கண்டுகொண்டார்; யோசேப்பினை இழந்துபோனதன் காரணமாக, தங்கள் தந்தை பென்யமீனுக்காகக் கொண்டிருக்கும் உணர்வுகளின் நிமித்தமாக, தங்கள் தகப்பனுக்காக அவர்கள் மன்றாடிக் கேட்டுக்கொண்டதிலும் மற்றும் யோசேப்பினுடைய இடத்தில் இப்பொழுது தகப்பனின் பிரியமான குமாரனாகக் காணப்படும் பென்யமீனிடத்தில் அவர்கள் பாசத்துடன் இருந்ததிலும், அவர்கள் தங்கள் இளமைபிராயத்தில் கொண்டிருந்த கசப்பான பகைமையையும், பொறாமையையும் மேற்கொண்டுவிட்டனர் என்பதைக் காண்பித்தவர்களாய் இருந்தனர்.

யோசேப்பின் விஷயத்தில் தாங்கள் முன்பு நடந்துகொண்டதைக் குறித்து, தங்கள் குற்றத்தினை ஒருவரோடொருவர் தங்கள் சொந்த மொழியில் ஒப்புக்கொண்டதையும் யோசேப்பு கேட்டார் மற்றும் ரூபனுடைய வார்த்தைகளையும் அறிந்துகொண்டார் (ஆதியாகமம் 42:21,22). பின்னர்ச் சூழ்நிலைகளானது, பென்யமீனை அவரது தகப்பனிடத்திற்கு மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக பரிதாபத்துடன் யூதா மன்றாடுவதற்கும், பென்யமீனுக்குப் பதிலாக யோசேப்பினுடைய அடிமையாக இருக்கும்படிக்குத் தன்னை யூதா கையளிக்கும் காரியத்திற்கும் வழிநடத்தினது (ஆதியாகமம் 44:18-34); இன்னுமாக தங்களது முந்தைய பாவங்களைத் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டவர்களாகவும், தங்கள் மீது தற்போது வந்திருக்கிற இன்னலானது, தங்களுக்குரிய தண்டனையாக தேவனிடமிருந்து வந்துள்ளதாக உணர்ந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். தங்கள் தந்தையாகிய யாக்கோபு குறித்தும், யோசேப்பு குறித்தும் அவர்கள் கூறிய அனைத்தும், அவர்கள் பாவத்தை நினைத்து மனம் வருந்தியுள்ளதையும், இருதயம் மாற்றம் அடைந்துள்ளதையும் நிரூபிப்பதாய் இருந்தது.

இது யோசேப்பிற்குப் போதுமானதாய் இருந்தது; தவறுகளுக்காக வருத்தம் கொள்ளுதலையும், உண்மையான இருதய மாற்றத்தையுந்தான் யோசேப்பு எதிர்பார்த்தார் மற்றும் இவைகள் வெற்றிகரமாகவும், ஞானமாகவும் நிரூபிக்கப்பட்டபோது, அதற்குமேல் அவரால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை (ஆதியாகமம் 45:1); உண்மையாய் மன்னிக்கும் அவரது இருதயமானது, இப்பொழுது இரக்கத்தினால் பொங்கி வழிந்தது மற்றும் அவர் சத்தமாய் அழுது, தனது சகோதரர்களை அணைத்து, முத்தம் கொடுத்தார் மற்றும் அவர்கள் மீது தனது திரளான தயவை அளவில்லாமல் பொழிந்தார் மற்றும் அவர்கள் தங்களைத் தாங்களே மன்னித்துக்கொள்ளும்படிக்கும் மற்றும் மிகவும் இலவசமாகவும், முழுமையாகவும் மன்னிக்கப்பட்டுள்ள தங்களது கடந்தகால பாவங்களை மறப்பதற்கு அவர்கள் நாடும்படிக்கும் வேண்டிக்கொண்டார். யோசேப்பின் பிரியத்திற்குரிய சொந்த சகோதரனும், மற்றச் சகோதரர்களின் குற்றத்தில் எந்தப் பங்கும் கொண்டிராதவருமான பென்யமீன், அன்பின் விசேஷித்த சில அன்பளிப்புகளைப் பெற்றிருக்க வேண்டும்; இவ்விஷயம் இப்பொழுது சீர்ப்பொருந்தியுள்ள சகோதரர்களிடத்தில் எவ்விதமான பொறாமையையும் தூண்டவுமில்லை. அவர்கள் இந்த நற்செய்தியை அறிவிப்பதற்காக மாத்திரமல்லாமல், தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலையின் காரணமாக, யோசேப்பிற்கு எதிராக தாங்கள் செய்த பாவத்தை யாக்கோபினிடத்தில் தெரிவிப்பதற்குமென, அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்க வேண்டும்.

மீதி சம்பவம் மிகவும் சுவாரசியமானதாகும்; யாக்கோபிற்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்ட போது, அவர் யோசேப்பினால் அனுப்பப்பட்ட அன்பளிப்புகளையும், எகிப்திலிருந்து வந்த வண்டிகளையும் பார்ப்பது வரையிலும், அவரால் நம்பமுடியவில்லை; அன்பளிப்புகளையும், வண்டிகளையும் பார்த்த பிற்பாடு, யாக்கோபு, “என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்” (ஆதியாகமம் 45:28). பின்னர் இரவில், “நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்பட வேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். [R1645 : page 125] நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்” என்று சொல்லி கொடுக்கப்பட்ட தரிசனத்தின்படியான தேவனுடைய விசேஷித்த கட்டளையின் பேரில், நீண்ட அந்தப் பிரயாணம் மகிழ்ச்சியுடன் ஆரம்பமானது; (ஆதியாகமம் 46:3,4). பின்னர் அவர்களின் சந்தோஷமான சந்தித்தல் நடைபெற்றது மற்றும் யோசேப்பினுடைய மகிமை மற்றும் வல்லமையை யாக்கோபு கண்டுகொண்டார் மற்றும் இவைகள் அனைத்திற்கும் மேலாக யாக்கோபிற்கும், யோசேப்பிற்கும் மற்றும் சகோதரர்களுக்கு இடையிலான அன்பு பரிமாற்றங்கள் நிகழ்ந்தன் பின்னர்ப் பார்வோனைச் சந்தித்தலும், அவரின் தயவைப் பெற்றுக்கொள்ளுதலும் நிகழ்ந்தன் பின்னர் யோசேப்பு மற்றும் பார்வோனின் அன்பான பராமரிப்பின் கீழ், அவர்கள் எகிப்து தேசத்தில் குடியேறினர்; இங்கு யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாருடன், தன்னுடைய மரணம் வரையிலும், தனது வயோதிப நாட்களை 17- வருடங்களாக மகிழ்ச்சியாய்க் கழித்தார்.

கர்த்தருக்குப் பிரியமானவர்களில் ஒருவருடைய ஜீவியத்திலுள்ள கர்த்தருடைய வழிநடத்துதல் பற்றின இந்த அருமையான கதையிலிருந்து, தேவன் மீது நம்பிக்கையாய் இருத்தல் மற்றும் அவருக்கு ஊழியம் புரிவதில் வைராக்கியமாயும், உண்மையாயும் இருத்தல் எனும் விலையேறப்பெற்றப் படிப்பினைகளை நம்மால் காணமுடிகின்ற மற்றும் எடுத்துக்கொள்ள முடிகின்ற அதேவேளையில், ஆழ்ந்து சிந்திக்கின்ற வாசகர்களால், இக்கதையானது தமது ஜனங்களின் மற்றும் உலகத்தின் இரட்சகராக இருக்கும் கிறிஸ்துவுக்கு நிழலாய் இருப்பதைக் கவனிக்க தவறப்படுவதில்லை.

பிரதான ஆசீர்வாதமானது, விசேஷமாய் இளைய குமாரனுக்கு வரும் காரியத்திற்கு, யாக்கோபைப்போன்று, யோசேப்பும் மற்றுமொரு உதாரணமாய்க் காணப்படுகின்றார்; இதுபோலவே பிரதானமான தெய்வீக ஆசீர்வாதமும், கிறிஸ்துவுக்கு, அதாவது மூத்தவர்களாகிய யூதர்களுக்கென்று இல்லாமல், சுவிசேஷ சபையாகிய சரீரத்திற்கும், தலைக்கும் வரப்போகின்றது. ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் பங்கடைவது தொடர்புடைய விஷயத்தில், யாக்கோபின் புத்திரர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளப்பட்டாலும், யோசேப்பு தலை மற்றும் சரீரம் அடங்கின கிறிஸ்துவுக்கு நிழலாய் விசேஷமாய்த் தெரிந்தெடுக்கப்பட்டார்; இந்தக் கிறிஸ்து மூலமாகவே, ஆபிரகாமின் மாம்சீக சந்ததியினருக்கு ஆசீர்வாதம் கடந்துவரும் மற்றும் இவர்கள் பின்னர்ப் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்கள்.

மாம்சீக இஸ்ரயேலர்களாகிய தனது சகோதரர்களால் பகைக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு, கிறிஸ்து, தம்முடைய சத்துருக்களால், அதாவது யூத தேசத்தின் தமது சகோதரர்களால் பகைக்கப்பட்டு, விற்கப்பட்டதற்கு முன்சித்தரிப்பாகக் காணப்படுகின்றார்; இந்த யூதர்களிடத்திலேயே கிறிஸ்து யோசேப்பைப் போன்று வந்தார், ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; (30-வெள்ளிக்காசுகள் என்பது அடிமைக்கான விலையாக இருந்தது (அ) 20-வெள்ளிக்காசுகள் என்பது இருபது வயதிற்குக் கீழான அடிமைக்கான விலையாக இருந்தது). யோசேப்பு மூன்று வருடங்கள் சிறையில் காணப்பட்டது என்பது, நமது கர்த்தருடைய 3-வருட ஊழிய காலத்தினைச் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது அவரது ஞானஸ்நானத்தைப் பின்தொடர்ந்த வருடங்களாக இருந்தது; அந்தக் காலங்களில் கர்த்தர் தினமும் மரித்துக்கொண்டிருந்தவராகவும், தம்முடைய ஜீவனை மற்றவர்களுக்காக ஒப்புக்கொடுத்து வந்தவராகவும் காணப்பட்டார்; யோசேப்பு மூன்று வருடங்கள் சிறையில் காணப்பட்ட காரியமானது, கர்த்தர் கல்லறையில் காவல் வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குக் கூட இணையாக எடுத்துக்கொள்ளலாம்; சிறைச் சாலையினின்று வெளியே வந்த யோசேப்பு, இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் மிகவும் உயர்த்தப்பட்டதுபோலவே, கல்லறையினின்று வந்த கர்த்தரும், உன்னதமானவரின் வலது பாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்பட்டார் மற்றும் இராஜ்யத்தின் சகல அதிகாரங்களும்/வல்லமைகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

யோசேப்பிற்கு முழுப்பொறுப்பும் கையளிக்கப்பட்டது மற்றும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கும், அனைவருக்குமென்று உணவைச் சேர்த்து வைப்பதற்குமென்று அவர் தனது வல்லமையைப் பயன்படுத்திக் கொண்டார். இதுபோலவே கிறிஸ்துவிடமும் முழுப்பொறுப்பும் கையளிக்கப்பட்டது; அவர் அனைவருக்கும் கர்த்தர் ஆவார் மற்றும் அனைவருக்கும் நித்திய ஜீவனை அளிப்பதற்குப் போதுமான அனைத்துக் கிருபைகளையும் அவர் வைத்து வைத்திருக்கின்றார். கிறிஸ்துவினுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரமான தாழ்மையும், பாவத்திற்கு மனம் வருந்துதலையும் கொண்டுள்ள இருதயத்தை உடையவர்களைக் கிறிஸ்து தம்முடைய சகோதரர்கள் என்று, உரிமையாக்கிக்கொள்வதற்கு வெட்கப்படவில்லை. அவர்களைத் தமக்குச் சொந்தமானவர்கள் என்று தம்முடைய பிதாவின் முன்னிலையிலும், பரிசுத்த தூதர்கள் அனைவரின் முன்னிலையிலும் உரிமைப்பாராட்டிக்கொள்வதற்குக் கிறிஸ்து வெட்கப்படுவதுமில்லை. இக்காரியமும் யோசேப்பு தனது தகப்பனையும், சகோதரர்களையும் கையாண்ட விஷயத்தில் அருமையாய் முன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேய்ப்பர்கள் என்பவர்கள் எகிப்தியர்களுக்கு அருவருப்பானவர்கள் என்பதை யோசேப்பு அறிந்திருந்தபோதிலும், தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் இராஜாவின் முன்னிலையில் கொண்டு செல்வது குறித்து யோசேப்பு வெட்கம் கொள்ளவில்லை. பின்னர்ப் பஞ்சக் காலத்தில் யோசேப்பு தானியங்களை (ஜீவனை) பயன்படுத்தி, பார்வோனுக்கு நிலங்களையும், ஜனங்களையும், அவர்கள் பெற்றிருந்த அனைத்தையும் வாங்கிக்கொண்டார் (ஆதியாகமம் 47:14-25).

விளைவில் ஐந்தில் ஒரு பங்கு மத்திய அரசாங்கத்தின் வலிமையூட்டுதலுக்காகக் கொடுக்கப்படத்தக்கதாக நிலங்களை வாங்கினதும், இப்படியாக மற்றச் சீமான்களின் சிறிய செல்வாக்கினைத் தகர்ப்பதற்கும் மற்றும் எகிப்து தேசத்தை, பலமான தேசமாக திடமாக்குவதற்குமான இந்த அரசியல் திட்டமானது, கிறிஸ்துவின் வேலைக்கான, சிறந்த நிழலாய்க் காணப்படுகின்றது. ஆயிர வருட யுகத்தின்போது விரும்புகின்றவர்கள் அனைவருக்கும் கிறிஸ்து (தம்மை, தம்முடைய புண்ணியத்தை) நித்திய ஜீவனுக்கான அப்பத்தைக் கொடுப்பார், ஆனால் இச்சந்தர்ப்பத்தில் பார்வோன் நிழல்படுத்தும் தேவனுக்கு, அனைவரும் தங்களுடைய அனைத்தையும் மாற்றாகக் கொடுத்தாக வேண்டும். பார்வோனால் உயர்த்தப்பட்ட ஊழியக்காரனும், பிரதிநிதியுமான [R1646 : page 125] யோசேப்பு அநேகருக்கு ஜீவன் கொடுத்தது (அ) அநேகருடைய ஜீவனைக் காப்பாற்றினது போன்று, தேவனுடைய பிரதான ஊழியக்காரனாகிய கிறிஸ்துவும் அனைவருக்காகவும் ஜீவனளித்துள்ளார் மற்றும் அந்த ஜீவனை, இராஜாவுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம் காட்டுதல் எனும் அதே நிபந்தனைகளின் பேரில் அனைவருக்கும் முன்வைக்கின்றார்.

யோசேப்பு தவறிழைத்த தனது சகோதரர்களைப் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடத்தின விஷயத்தில், நமது உயர்த்தப்பட்டுள்ள கர்த்தர் இயேசு, தமது முந்தைய சத்துருக்களைக் கையாளும் விதம், எத்துணை அருமையாய் மீண்டுமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே தலைச்சிறந்த பண்பாகக் காணப்படும் அன்பானது, இம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளிப்படுகையில் அது வியப்பாய்ப் பார்க்கப்பட்டு, பாராட்டப்படுகின்றது. தனக்கு 23-வருடங்களுக்கு முன்னதாக அவர்கள் செய்திட்ட பாவங்களுக்கு எதிராக, அவர்களை நியாயமாய்த் தண்டிக்கும் விதத்தில், தான் என்ன செய்திருக்க முடியும் என்று கூட யோசேப்பு பேசவில்லை. தன்னுடைய சகோதரர்களைப் பரீட்சித்துப்பார்த்து, அவர்கள் தங்கள் இருதயத்தில் மாற்றம் அடைந்துள்ளனர் என்றும், பாவத்தை நினைத்து மனம் வருந்துகின்றனர் என்றும் கண்டுகொண்ட பின்னர், யோசேப்பு தன்னை உண்மையுள்ள, அன்புள்ள மன்னிக்கும் நண்பனாகவும், சகோதரனாகவும் வெளிப்படுத்தினார். தான் இப்படி உயர்த்தப்பட்டதற்கான காரணம், தன்னுடைய ஞானம் (அ) ஒழுக்கம்/நற்பண்புகள் என்றோ பெருமையடித்துக்கொள்ளாமல், மாறாக அனைத்துக் கனத்தையும், தேவனுடைய நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போடும் வழிநடத்துதலுக்கே சாற்றினார். தனக்கு முன் அவர்கள் அனைவரும் வணங்கினதில் நிறைவேறின, தனது தீர்க்கத்தரிசனமான சொப்பனங்களைக்கூட யோசேப்பு தனது சகோதரர்களுக்கு நினைப்பூட்டவில்லை.

அவர் அவர்களை மன்னித்து, பஞ்சத்திலிருந்ததான தற்போதைய விடுதலைக்கான அனைத்து மகிமையையும் தேவனுக்குச் செலுத்தும் வண்ணமாக, “என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். [R1646 : page 126] தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும், அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” என்று கூறினார் (ஆதியாகமம் 45:5-8). எத்துணை எளிமையாகவும், அருமையாகவும் காணப்படுகின்றது! இப்படியே கிறிஸ்துவும் பாவத்திற்கான மனம்வருந்தும் தமது சத்துருக்களை மன்னிப்பார். தேவனே அவர்களைத் தவறுசெய்ய வைத்தார் என்று யோசேப்பு கூறவில்லை; யோசேப்பு அவர்களது பாவத்தைத் தெளிவாய்க் குறிப்பிட்டார் அதாவது, “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்” (ஆதியாகமம் 50:20,21).

கிறிஸ்துவும் மனிதர்களுடைய பாவங்களை அவர்களுக்கு முன்பாக வரிசைப்படுத்துவார் என்றும், யோசேப்பின் சகோதரர்கள் போன்றே மனிதர்களும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் நிந்தனையைச் சுமக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது (சங்கீதம் 50:21,22; எசேக்கியேல் 16:61-63; 1 யோவான் 1:9 (refs3)). ஆனால் கிறிஸ்துவினுடைய மன்னிக்கும் அன்பிலுள்ள சந்தோஷங்களினாலும், அவரது தயவுகளிலுள்ள ஆசீர் வாதங்களினாலும், நிந்தனையின் வலி மாற்றப்படும் மற்றும் நீதியின் கனிகளைக் கொணர்வதும், நம்பத்தகுந்த குணலட்சணங்கள் உருவாகும்போதும், உண்மையான மனிதனுக்குரிய சிறப்புகளும்/உயர்ந்த குணங்களும், உண்மையான மதிப்பும் மீண்டும் சீர்ப்பொருத்தப்படும்/ காணப்படும்.

யோசேப்பினுடைய விஷயத்தில் தேவனுடைய ஜனங்கள் அனைவருக்குமான அவரது வாக்குத்தத்தமாகிய, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்பது வலியுறுத்திக் காண்பிக்கப்படுகிறது (ரோமர் 8:28; சங்கீதம் 1:1-3,6 (refs2)). தேவனுடைய ஜனங்கள் இந்தத் தெய்வாதீனமான மேற்பார்வையை உணர்கையில், மிகவும் தாழ்மையுள்ளவர்களாகவும், விசுவாசமுள்ளவர்களாகவும் ஆக்கப்படுவதோடு, ஜீவியத்தின் திடீர் மாற்றமான சூழ்நிலைகளின் நிமித்தமும், மற்றவர்களின் தவறான நடத்தைகளின் நிமித்தமும், தங்களைத் தாங்களே நடத்திக் கொண்டு, ஜீவியத்தின் போராட்டங்களில் போராடிக்கொண்டிருக்கும் (சாதாரண) ஜனங்கள் போன்று மன வேதனையோ, எரிச்சலோ அடைவதில்லை. குணலட்சணத்திலும், விசுவாசத்திலும் மற்றும் தேவனுக்கான அர்ப்பணிப்பிலும் நேர்மை கொண்டிருத்தலும், ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலுமான தேவனுடைய பராமரிப்பையும், வழிகாட்டுதலையும் உணர்ந்துகொள்ளுதலும் மற்றும் எவர்களுடைய தவறுகள் மூலம் நமக்கான சோதனைகளும், அனுபவங்களும் கடந்துவருகின்றதோ, அவர்களிடத்தில் அன்பைக்கொண்டிருத்தலுந்தான், தேவனுடைய உண்மையான பிள்ளைகள் அனைவரிடத்திலும் எதிர்பார்க்கப்படும் சரியான மனப்பான்மையாகக் காணப்படுகின்றது.