R1640 – யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R1640 (page 111)

யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்

JOSEPH RULER IN EGYPT

“ஆதியாகமம் 41:38-48

“என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்.” 1 சாமுயேல் 2:30

எகிப்தில் யோசேப்பு தனது புதியதும், சோதனை நிரம்பியதுமான சூழ்நிலைகளில் நல் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருப்பதாகக் காண்கிறோம். அனைத்திலும் நீதியானவைகள் எவை என்று பார்ப்பதற்கும், நீதியின்படி கிரியைப் புரிவதற்கும் முடிவெடுத்திருந்த யோசேப்பு, தேவனில் விசுவாசம் கொண்டு, தனது அனைத்துப் பொறுப்புகளிலும், அவைகள் பிடித்தமான/இன்பமான (அ) பிடித்தமில்லாத/இன்பமில்லாத பொறுப்புகளாக இருப்பினும், அவைகளில் மகிழ்ச்சிக் கொண்டவராகவும், உண்மையுள்ளவராகவும் காணப்பட்டார். இப்படியாக அவர் நடந்திட்டபோது, அவர் அறிவு நுட்பத்தின்படி இப்படிச் செய்யாமல், மாறாகக் கொள்கையின் அடிப்படையிலேயே செய்தார், ஏனெனில் அவர் நீதியை விரும்பினவராகவும், நீதியுள்ள தேவனுடைய அங்கீகரிப்பை விரும்பினவராகவும் காணப்பட்டார்.

அவரது உண்மைத்தன்மையானது, வெகு சீக்கிரத்தில் அவரது எஜமானுடைய நம்பிக்கையை வென்று தந்தது; “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும், தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்” (ஆதியாகமம் 39:3,4). இப்படியாக யோசேப்பு பத்து வருடங்களாக உண்மையுடன் ஊழியஞ்செய்து வந்த பிற்பாடு, அவர் தவறாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் போடப்பட்டார்; “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.” (சங்கீதம் 105:17,18); தெளிந்த மனசாட்சியுடனும் மற்றும் தெய்வீக அங்கீகரிப்புப் பற்றின உணர்வுடனும், யோசேப்பு இந்தச் சூழ்நிலையின் மத்தியிலும் தன்னாலான நல் முயற்சிகளை ஏறெடுப்பதற்குத் தீர்மானம் பண்ணினார்; சிறையிலுங்கூட, “கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்” (ஆதியாகமம் 39:21); அந்தக் கிடங்கிலுங்கூட விடுதலைப் பெறுவதற்குரிய எவ்விதமான நம்பிக்கையும் இல்லாதிருந்தபோதும், அவர் தேவனுக்கும், மூன்று வருடங்கள் அங்குள்ள பொறுப்புகளுக்கும் உண்மையுள்ளவராகக் காணப்பட்டார்; ஆனால் இந்தப் பயிற்சியின் மற்றும் பரீட்சையின் மூலம் நிரூபிக்கப்படுதலின் நோக்கங்கள் நிறைவேறினவுடன், தேவன் யோசேப்பிற்கு முன்னதாக திறந்த கதவுகளை முன் வைத்தார். தேவன் யோசேப்பைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கவில்லை, மாறாக மற்றவர்களுக்கு யோசேப்பு இரக்கத்துடன் உதவிபுரியும் வழியின் வாயிலாகவே, தேவன் அவரை வெளியே நடத்தினார்.

யோசேப்பு எங்கே இருந்திட்டாலும், எவ்விதமான சூழ்நிலைகளில் காணப்பட்டாலும், அவர் நீதியானவைகளையே/சரியானவைகளையே செய்தார் மற்றும் சூழ்நிலையைச் சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொண்டார் மற்றும் சிறு விஷயங்கள் அனைத்திலும் அவர் கொண்டிருந்த உண்மையானது, அவர் பெரிய விதங்களில் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக அவரை ஆயத்தப்படுத்தினது. அவர் ஜீவியத்தின் அனுபவங்களினால் சரியான விதங்களில் பயிற்றுவிக்கப்பட்டார். நன்றியுடையவர்களிடத்திலும், நன்றியற்றவர்களிடத்திலும் இரக்கமாயிருந்தார் மற்றும் அற்பமானவர்களிடத்திலும், மதிப்புமிக்கவர்களிடத்திலும் பெருந்தன்மையுடன் யோசேப்பு காணப்பட்டார்; தான் மற்றவர்களிடத்தில் அனுபவித்த அநியாயமும், கொடூரமான நடத்துதலும், தன்னுடைய இருதயத்தினைக் கடினப்படுத்துவதற்கு யோசேப்பு அனுமதித்திடவில்லை. மேலும் இந்த அனைத்து நடத்தைகளிலும், அவர் தேவனிடத்தில் அவிவிசுவாசம் கொண்டதாகவோ (அ) முறையிட்டதாகவோ எவ்விதமான அறிகுறிகளையும் நம்மால் காண இயலவில்லை. அவருடைய சோதனையின்போது, அவர் தேவனுடன் நெருங்கிக் காணப்பட்டவராகவும், தேவனை அவரால் தடயம் காணமுடியாதபோது அவரில் விசுவாசம் வைத்து, தேவனுடைய கிருபைகளின் வெளிப்படுத்துதல்களில் ஆறுதல் அடைந்தவராகவும் மாத்திரம் காணப்பட்டார்.

சிறையில் காணப்பட்ட பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகியின் சொப்பனங்களுக்கான அர்த்தத்தைத் தேவன் யோசேப்பிற்குக் காண்பித்தபோது, இந்தக் கிருபை தேவனிடத்திலிருந்து வந்தது என்று யோசேப்பு அடையாளங்கண்டுகொண்டார் மற்றும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டுமாகச் சுதந்தரத்திற்கான திறந்த கதவினைத் தன்னால் காண முடிவதாக யோசேப்பு எண்ணினார். ஆனால் நன்றி மறந்த பானபாத்திரக்காரனோ தனக்கு நன்மை செய்த இந்த உபகாரியை மறந்துபோனான் மற்றும் யோசேப்பு இரண்டு வருடங்களாகக் கைதியாகவே காணப்பட்டார். பின்னர்க் கதவு திறந்தது, இம்முறை சுதந்திரத்திற்காக மாத்திரமல்லாமல், கனத்திற்கும், முன்னேறுவதற்குமாய்க் கதவு திறந்தது மற்றும் யோசேப்பும் பிரவேசிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார். வருவதாக உரைக்கப்பட்டதான பஞ்சம் தொடர்புடைய விஷயத்தில் பார்வோனுக்கு, யோசேப்பு கொடுத்த ஞானமான வழிமுறை பற்றின ஆலோசனையானது, தேவனிடத்திலான அவரது விசுவாசத்திற்கான சாட்சியமாக மாத்திரம் இல்லாமல், இன்னுமாகக் கூர்மையான, சுறுசுறுப்பான வியாபார சிந்தைக்குமான சாட்சியமாகவும் காணப்படுகின்றது. இப்படியாக மனிதர்கள் தங்கள் விசுவாசத்தின்படி உடனடியாகவும், தயக்கமில்லாமலும் செயல்பட வேண்டுமென்று யோசேப்பு கற்றுக்கொடுக்கின்றவராய் இருக்கின்றார்; மேலும் எகிப்தின் எதிர்க்காலத்தை அச்சுறுத்தும் அபாயங்கள் ஊடாக, அத்தேசத்திற்கு வழிகாட்டும்படிக்கு யோசேப்பு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது மகா செயலாற்றல் திறமையை வெளிப்படுத்தினார் மற்றும் இங்கும் தனது உண்மையைக் காண்பித்தார். இந்த விஷயத்தில் அவர் இவைகளில் (இத்திறமைகளில்) கொஞ்சத்தைத் தன்னுடைய தகப்பனாரிடமிருந்து சுதந்தரித்துக்கொண்டவராய் இருந்தார்; ஆனால் பெரும்பான்மையானது இவரது சொந்த ஆற்றலாகவும், குணலட்சணத்தின் வலிமையாகவும் காணப்பட்டது. கனத்திற்கும், பயனாகுவதற்கும் வழிநடத்தக்கூடிய திறந்த கதவுகள் அனைத்துமே, ஒருவேளை அக்கதவுகளுக்குள் பிரவேசிப்பதற்கும் மற்றும் அக்கதவுகளானது வழிநடத்தும் வேலைகளை வெற்றிகரமாய் நடத்துவதற்குமான ஆற்றலையும், குணலட்சணத்தினுடைய வலிமையையும் நாம் பெற்றிராவிட்டால், பிரயோஜனமற்றதாகவே இருக்கும். தேவனுடைய கண்ணோட்டத்திலான வெற்றிகரமான ஜீவியம் ஒன்றை ஜீவிப்பதற்கு, உண்மைத்தன்மையும், குணலட்சணத்தில் தூய்மையும், பெருந்தன்மையுடன் கூடிய நோக்கம், ஆற்றல், துணிவு, திறமைகள், பயபக்தி மற்றும் சுயக்கட்டுப்பாடு அனைத்தும் அவசியமாய் இருக்கின்றது.

யோசேப்பு இராஜாவுக்கு அடுத்ததாக, எகிப்தினுடைய சிங்காசனத்தில் இரண்டாம் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டக் காரியமானது, அவரது உண்மைக்கான முழுப்பலனாகச் சிலரால் கருதப்படலாம். ஆனால் யோசேப்பு அப்படியாக நிச்சயமாய்க் கருதிக்கொள்ளவில்லை. அவர் இன்னமும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை மதிப்பவராய் இருந்தார்; அவர் அடிமையின் நிலையினின்றும், சிறைச்சாலையிலிருந்தும், இராஜ அரியணைக்கு உயர்த்தப்பட்டதின் நிமித்தமாக அவரது தலை பெருமையினால் உப்பிக்கொள்ளவில்லை/ பெருமிதங்- கொள்ளவில்லை, மாறாக உண்மையான மனிதனுக்குரிய அம்சமாகிய அதே சீரான பெருந்தன்மையுடனும், அடிமையாகவும், தகப்பன் வீட்டில் சகோதரனாகவும் காணப்பட்டபோது கொண்டிருந்த அதே ஆற்றலுடனும், உண்மையுடனும் மற்றும் திறமையுடனும், தனது புதிய வேலையை அமைதியாய் யோசேப்பு நடத்திக்கொண்டிருந்தார். துன்பம் என்னும் பயிற்சியின் கீழ் நீண்ட காலமாக தேவனுடன் யோசேப்பு பழகிவந்த காரியமானது, அவரைத் தாழ்மையுள்ளவராய் ஆக்கிற்று மற்றும் அவரது ஆயத்தமாய் இருந்த இருதயத்தில், குணலட்சணங்கள் அருமையாய் வளர்ந்தன. ஆனால் எகிப்தினுடைய சிங்காசனத்தை அடைவது என்பது ஒருபோதும் யோசேப்பினுடைய குறிக்கோளின் இலக்காக இருக்கவில்லை; ஏனெனில் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு போன்று யோசேப்பும் பரம தேசத்தை, தேவனுடைய இராஜ்யத்தை எதிர்நோக்கியிருந்தார். அங்கேதான் அவருடைய பொக்கிஷம் இருந்தது மற்றும் அங்கேதானே அவருடைய இருதயம் இருந்தது மற்றும் அங்கிருந்தே அவர் தனது சிறந்த ஜீவியத்திற்கான தூண்டுதலைப் பெற்றுக் கொண்டார் மற்றும் எகிப்தினுடைய சிங்காசனமானது, மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பதற்குரிய சிலாக்கியங்களுக்காக மாத்திரமே யோசேப்பினால் மதிக்கப்பட்டது.