R5216 – துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R5216 (page 109)

துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்

AFFLICTED, YET A COMFORTER

“ஆதியாகமம் 40 மற்றும் 41-ஆம் அதிகாரங்கள்

“தாழ்மையுள்ளவர்களுக்கோ தேவன் கிருபை அளிக்கிறார்.” ― 1 பேதுரு 5:5

யோசேப்பு பழைய ஏற்பாட்டின் காலங்களிலுள்ள முன்மாதிரியான வாலிபன் என்று சொல்லப்படலாம். சில விஷயங்களில் அவர் அனைத்துக் காலங்களுக்குரிய முன்மாதிரியாகக் காணப்படுகின்றார், எனினும் வித்தியாசம் உள்ளது. யோசேப்பு ஆவியினால் ஜெநிபிக்கப்படுவதற்குரிய காலங்களுக்கு முன்னதாக வாழ்ந்தவர், ஆகையால் அவர் கிறிஸ்தவனாய் இராமல், சுபாவத்தின் படியான மனுஷனாக மாத்திரமே காணப்படுகின்றார். அவர் வேதாகமங்கள் வருவதற்கு முன்னதான காலங்களிலும், பிரசங்கங்கள் பண்ணப்படுவதற்கும், ஓய்வுநாள் பள்ளிகள் நடத்தப்படுவதற்கும் முன்னதான காலங்களிலும் வாழ்ந்தவர் ஆவார். அனைத்து ஜனங்களும் யாக்கோபின் சந்ததியார் வழியாக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வாக்களித்துள்ள ஆபிரகாமின் தேவனிடத்தில் ஒரு பலமான விசுவாசத்தை யோசேப்பு தனது தந்தையினிடத்திலிருந்து சுதந்தரித்துக்கொண்டவராக இருந்தார். யாக்கோபின் குடும்பத்திலுள்ள ஓர் அங்கத்தினனாகிய யோசேப்பு, தேவனிடத்தில் பயபக்திக் கொண்டிருந்து, தாழ்மையுடனும், உயர் பண்புகளுடனும் வாழ்வதற்கு நாடினார். தேவனிடத்தில் அவர் கொண்டிருந்த உண்மையும், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசமும், அவரது ஜீவியத்தில், அனைத்துக் காரியங்களிலும் அவரை வழிநடத்திடுவதற்கும், வழிகாட்டிடுவதற்கும் உரிய சுக்கானாகக் காணப்பட்டது. தேவனுக்குப் பிரியமாய் இருக்க வேண்டும் மற்றும் அவரது அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே, யோசேப்பு அனைத்துக் காரியங்களையும் செய்தார்.

இன்று போல் அன்றும், இப்படிப்பட்டதான உண்மைத்தன்மை என்பது அநேகமாக அபூர்வமானதாகவே இருந்தது மற்றும் யோசேப்பினுடைய உண்மையின் பலனாக, யோசேப்பு தனது எஜமானுடைய வீட்டில், உயர் ஸ்தானத்திற்கு, அதாவது விசாரணைக்காரனாகப் பணி உயர்த்தப்பட்டார். அவரது கடமை உணர்ச்சியானது, அவரை ஜாக்கிரதையாய் இருப்பதற்கும், ஞானமாய் இருப்பதற்கும், விவேகத்துடன் இருப்பதற்கும் / சிக்கனத்துடன் இருப்பதற்கும் வழிநடத்தினது மற்றும் அவரது எஜமான் அனைத்தையும் யோசேப்பின் பொறுப்பில் விட முடிந்தது மற்றும் விட்டார். யோசேப்பைப் போன்றுள்ள வாலிபர்கள் இன்று எங்கும் மிகவும் மதிக்கப்படுகின்றனர்; ஆம் அப்படிப்பட்டவர்கள் உலகத்தினுடைய வரலாற்றின் அனைத்துக் காலக்கட்டங்களிலும், நம்பிக்கைக்குப் பாத்திரமான மனிதர்களாக, உண்மையுள்ள மனிதர்களாக, விவேகமுள்ள மனிதர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். யோசேப்பின் விஷயத்தில் இந்தப் பண்புகளுக்குத் தேவனிடத்திலான விசுவாசம் மற்றும் தேவபக்தி மற்றும் தேவனுக்குக் கடமைபட்டிருப்பதைப் பற்றின உணர்ந்துகொள்ளுதல் ஆகியவை காரணமாகுகின்றது.

ஆனால் யோசேப்பு இப்படியாகச் செழித்தோங்கிக் காணப்படுகையில், பெருந்துன்பம் அவர் மேல் கடந்துவந்தது. யோசேப்பு கொள்கைகளுக்கு உறுதியாய் இருந்ததான விஷயமானது, அவரது எஜமாட்டியைக் கோபப்படுத்தியது. அவள் அவரைத் தவறாய்க் குற்றஞ்சாட்டினாள்; மற்றும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் அவர் அவரது எஜமானும், உபகாரியுமானவருக்குத் துரோகம் எனும் வெறுக்கத்தக்க குற்றம் புரிந்தவராகக் காண்பிக்கப்பட்டார். எனினும் அவர் குற்றமற்றவராக இருந்தார்; ஆனால், தான் குற்றமற்றவர் என்பதை யோசேப்பும், தேவனும் மாத்திரமே அறிந்திருந்தனர். யோசேப்பு தவறு செய்தாரா (அ) இல்லையா என்று கேள்வி எழுப்பப்படாத அளவுக்கு, எதிராளி குற்றம் பற்றின விபரங்கள் அடங்கின சாட்சியத்தை மிகவும் பலமானதாகக் காண்பித்துக்கொண்டாள். மனித பெலவீனத்தினுடைய இந்தத் தன்மையைக் கவிஞனான ஷேக்ஸ்பியர் (Shakespeare) அவர்கள், பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார்: “நரகத்தைவிட பெண்ணிற்கு ஏற்படும் வெறுப்பின் நிமித்தமான சீற்றமே பெரிது.”

நீதியின் பாதையில் நடப்பதற்கு நாடுகின்ற ஒருவருடைய ஜீவியம் இவ்வளவு கொடிதான தீமைக்குள்ளாவதற்குத் தேவன் அனுமதித்தது என்பது எத்துணை விநோதமாய்த் தோன்றுகின்றது! ஏன் இந்தத் தீமை தன் மீது வந்தது என்று யோசேப்பு கேள்வி எழுப்புவதையும், “தீமை செய்கிறவர்கள் திடப்படுகின்றார்களே, அவர்கள் தேவனைப் பரீட்சைப் பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே, நீதியாய் நடக்க நாடுபவர்கள் துன்பப்படுகின்றார்களே” என்று தீர்க்கத்தரிசியுடன் கூடச் சொல்லுவதையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது (மல்கியா 3:15).

தன்னை எகிப்தின் சிறைக்குக் கொண்டுபோன தெய்வீக வழிநடத்துதலிலுள்ள ஞானத்தைக் குறித்துக் கேள்வி கேட்பதற்கும், தன்னை எகிப்தில் அடிமையாக விற்கப்படுவதற்கு அனுமதித்திட்ட அதே தெய்வீக வழிநடத்துதலிலுள்ள ஞானத்தைக் குறித்துக் கேள்வி கேட்பதற்கும், யோசேப்பு தன்னை அனுமதித்திடவில்லை என்பது உறுதியே. தேவன் மீதான அவரது விசுவாசம் பரீட்சையில் நிலைநின்றது. பூமிக்குரிய நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள் அனைத்தினின்றும் தான் தள்ளப்பட்டுள்ளதை, அதாவது உலகத்திற்கு மரிக்க வைக்கப்பட்டுள்ளதைக் கண்டபோது, அவர் பலம் கொண்டவரானார். சர்வ வல்லமையுள்ளவர் மீதான விசுவாசத்தை அதிகமாய் வளர்த்திக் கொண்டார் மற்றும் என்ன நடந்தாலும் தான் நீதியாயும், கலக்கமுறாமலும், பயபக்தியாயும் வாழ வேண்டுமென மிகவும் தீர்மானமாய்க் காணப்பட்டார். சிறைச்சாலையிலுங்கூட அவரது உண்மைத்தன்மையும், அறிவும் மற்றும் பொதுவான நற்குணங்களும் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டது. யோசேப்பு சிறைச்சாலையின் தலைவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மனிதனாகவும், உதவியாளனாகவுமானார். இப்படிப்பட்டதான (நல்ல) குணங்கள், எவ்வளவுதான் தவறாய்த் தூற்றப்பட்டாலும், திரித்துக்கூறப்பட்டாலும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்டாலும், இக்குணங்களை உடையவர்களிடத்தில் நெருங்கி பழகுபவர்களால், இவர்களது பண்புகள் உணர்ந்துகொள்ளப்பட்டுப் பாராட்டப்படும். இக்காரியம் அன்றுபோல், இன்றும் உண்மையாகவே இருக்கின்றது.

“சுயம்பாகி மற்றும் பானபாத்திரக்காரனுடைய சொப்பனங்கள்”

முற்காலங்களிலுள்ள சிறைச்சாலை விதிகளானது இக்காலங்களில் இருப்பதைப்போல், முறையாக இருப்பதில்லை. யோசேப்பு வருடக்கணக்காகச் சிறையில் காணப்பட்டார் மற்றும் அவர் அநேகமாக மறந்துபோகப்பட்டுள்ளார் மற்றும் ஒரு வேளை அவரது வழக்கானது, அதிகாரிகளுடைய கவனத்திற்குக்கொண்டு வருவதற்கென ஏதேனும் நிகழவில்லையெனில், அவர் வருடக்கணக்காக சிறையிலேயே இருந்திருக்க வேண்டியிருந்திருக்கும். யோசேப்பிற்கு இருபத்தெட்டு வயது இருக்கும் போது, இரண்டு உயர் பணியாளர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள், ஏனெனில் அவர்களது நடத்தையின் விஷயத்தில் பார்வோன் ஏதோ அதிருப்தியடைந்து இருந்தார். இவர்களில் ஒருவர் இராஜாவினுடைய காரியத்தரிசியும், பானபாத்திரக்காரனும் ஆவார்; மற்றவர் இராஜாவினுடைய சமையல் சார்ந்த விஷயங்களுக்குரிய சுயம்பாகிகளின் தலைவன் ஆவார்.

சிறையின் பொதுவான மேற்பார்வையாளரான யோசேப்பு, இந்த மனிதர்களைக் கண்டு, அவர்கள் முகங்களில் துக்கம் / கலக்கம் தெரிவதைக் கவனித்து, அவர்களை இரக்கத்துடன் விசாரித்தார். எத்துணை சிறந்த மாதிரி! மனச்சோர்வுடன் காணப்படுவதற்கும் மற்றும் தன் நிலைமையைக் குறித்துப் புலம்பித் திரிவதற்கும் பதிலாக, யோசேப்பு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் மற்றும் தனக்கு முன்பாக தேவன் இறுதியாக வழியைத் திறந்து வைப்பதற்குரிய சில சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தார். இப்படிப்பட்ட உயர்ப் பண்புகளை உடையவர், பிரச்சனையில் இருக்கும் மற்றவர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளைப் பேசிடுவதற்கு நேரத்தை உடையவராக எப்போதும் காணப்படுவார். இது இன்றுள்ள உலகப்பிரகாரமான மனிதனுக்கு எத்துணையான மாதிரியாகக் காணப்படுகின்றது! யோசேப்பைக்காட்டிலும் அநேக விதத்தில் அதிக [R5216 : page 110] அநுகூலங்களைப் பெற்றவனாகக் காணப்படுகின்ற இன்றைய கிறிஸ்தவனுக்கும், யோசேப்பு எத்துணை மாதிரியாக விளங்குகின்றார்.

நம்முடைய இனமானது, பரிணாம வளர்ச்சியின் மூலமாக, விலங்குகளிலிருந்து தோன்றி வருகின்றது என்று நம்மிடம் சொல்லுகிறவர்களும் மற்றும் இதன் காரணமாகக் கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்தவரும், ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து 2000 வருடத்திற்குப் பின்பாக வாழ்ந்தவருமான யோசேப்பு, கிட்டத்தட்ட ஒரு விலங்காகவே, அதாவது குரங்கிலிருந்து சில விஷயங்கள் மாத்திரமே நீக்கப்பட்ட நிலையிலுள்ள விலங்காகவே இருந்திருக்க வேண்டுமென்று மறைமுகமாகச் சொல்லுகிறவர்களும் உண்டு. ஆனால் அவருடைய அனுபவங்கள் சார்ந்த நன்னெறியை குறிப்பிடுவதற்கு முயற்சிக்காமல், அவைகளை உண்மை தகவல்களாக மாத்திரம் பதிவு செய்கிற முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தையே, யோசேப்பைப் பற்றின இந்தச் சிறிய பதிவில் நாம் காண்கின்றோம்.

அந்த இரண்டு இராஜ கைதிகளும், சொப்பனங்களினால் கலங்கியிருக்கின்றார்கள் என்பதை யோசேப்பு அறிந்தபோது, அச்சொப்பனங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்தார். ஒரு சொப்பனத்தின் அர்த்தமானது நம்பிக்கையூட்டுகின்றதாகவும், மற்றொரு சொப்பனத்தின் அர்த்தமானது, நம்பிக்கையிழக்கச் செய்கின்றதாகவும் காணப்பட்டது. இன்னும் மூன்று நாட்களுக்குள்ளாக, பானப்பாத்திரக்காரன், இராஜாவினுடைய தயவை மறுபடியும் பெற்றுக் கொள்வான் என்றும், இன்னும் மூன்று நாட்களுக்குள்ளாக சுயம்பாகி தூக்கிலிடப்படுவான் என்றும் யோசேப்பு அறிவித்தார். தான் சுதந்திரம் அடையப்போகிற விஷயத்தில் தனக்கும் கடமை இருப்பதை உணர்ந்தவராக யோசேப்பு, தன்னால் மிகவும் உற்சாகமூட்டப்பட்டவரும், தன்னால் நண்பன் போன்று நடத்தப்பட்டவருமான பானப்பாத்திரக்காரனிடம் வேண்டிக்கொண்டார்; அதாவது பானப்பாத்திரக்காரன் விடுதலையாகும் போது, ஆறுதலளித்த தன்னை நினைவுகூர வேண்டும் என்றும், தன்னுடைய வழக்கு விசாரிக்கப்படத்தக்கதாகவும், கூடுமானால் தான் விடுதலைப் பண்ணப்படத்தக்கதாகவும், தன்னுடைய வழக்கை அதிகாரிகள் முன் கொண்டு செல்லத்தக்கதாக, தனக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்றும் பானப்பாத்திரக்கானிடம் யோசேப்பு வேண்டிக்கொண்டார்.

ஆனால் அந்தோ பரிதாபம்! கடின இருதயமே காணப்பட்டது! பானப்பாத்திரக்காரன் தனது சிறை நண்பனான யோசேப்பைப் பற்றி முழுவதுமாக இரண்டு வருடங்கள் மறந்து போய்விட்டான்! பார்வோனின் சொப்பனமானது, பானப்பாத்திரக்காரனுக்கு, யோசேப்பை நினைவில் கொண்டு வந்தது; ஏனெனில் எகிப்தினுடைய சாஸ்திரிகள் எவராலும் பார்வோனுடைய சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லக்கூடாமல் போயிற்று. தான் மறந்துபோனதைப் பானப்பாத்திரக்காரன் ஒப்புக்கொண்டு, தனக்கும், சுயம்பாகிக்கும் சிறையில் உண்டான சொப்பனம் பற்றியும், அங்கிருந்த அருமையான வாலிபனான யோசேப்பு பற்றியும், யோசேப்பு எப்படித் தேவனால் அருளப்பட்டதான வல்லமையினால் சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினது பற்றியும், யோசேப்பு சொன்ன அர்த்தத்தின்படியே நடந்தது என்பது பற்றியும், இராஜாவிடம் விளக்கினான்.

அந்த இரண்டு வருடங்களில் யோசேப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் காணப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தன் வழக்கில் சில மாற்றங்கள் ஏற்படுமென ஏக்கத்துடன் காத்திருந்திருக்க வேண்டும் என்பதிலும் சந்தேகமில்லை. தேவன் மீதான விசுவாசத்தில் பெலவீனமடைந்து போவதற்குப் பதிலாக, அவர் கர்த்தரை மிகவும் உண்மையாய்ப் பற்றிக்கொண்டிருந்திருப்பார் என்பதிலும், தனது அனுபவங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்று உணர்ந்துகொண்டிருப்பார் என்பதிலும் நமக்கு ஐயமில்லை. இந்த அனுபவங்கள் நன்மைக்காகவே காணப்பட்டது; ஏனெனில் யோசேப்பு முப்பது வயதாய் இருக்கும் போது, அதாவது முற்காலத்தினுடைய பிரமாணத்தின்படியாக, அவர் புருஷனுக்குரிய வயதை அடைந்திருக்கையில், பார்வோன் தனது சொப்பனங்களுக்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கென, யோசேப்பை வரவழைத்தார், மற்றுமாக யோசேப்பிற்கு மிக உயர்வான வெகுமதியை அளித்தார்.

“பார்வோனுடைய சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லப்பட்டது”

பார்வோன் தனது இரண்டு சொப்பனங்களையும் விவரித்தார். முதலாம் சொப்பனத்தில் பார்வோன் ஏழு ஆரோக்கியமான மற்றும் பலமுள்ள பசுக்களைக் கண்டார் மற்றும் பிற்பாடு ஏழு அவலட்சணமும், கேவலமுமான பசுக்களையும் கண்டார்; வாழ்நாட்களிலேயே, அவர் கண்ட இந்தப் பசுக்கள் தான் (மிகவும்) அவலட்சணமாய் இருந்தது. இந்தச் சொப்பனத்தில் கேவலமான பசுக்கள், அந்தப் புஷ்டியான பசுக்களைப் பட்சித்துப்போட்டது; புஷ்டியானதைப் பட்சித்தப் பிற்பாடும், அந்தக் கேவலமான பசுக்கள் புஷ்டியாய்க் காணப்படவில்லை. இரண்டாம் சொப்பனத்தில் இராஜா நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து, பூமியில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டார்; பிற்பாடு சாவியானதும், ஒன்றிற்கும் பயனற்றதுமான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்ததையும் கண்டார். சாவியான கதிர்கள் செழுமையான கதிர்களை விழுங்கிப்போட்டது; செழுமையானதை விழுங்கிப்போட்ட பிற்பாடும் சாவியான கதிர்கள் செழுமையாய்க் காணப்படவில்லை.

வாலிபனான யோசேப்பு உடனடியாகச் சொப்பனங்களுக்கான அர்த்தத்தைத் தெரிவித்தார்; ஆனால் அர்த்தத்தைத் தெரிவிப்பதற்கு முன்னதாக, அர்த்தமானது தன்னிடமிருந்து வராமல், தேவனிடமிருந்து வருகின்றதென மிகத் தெளிவாக யோசேப்பு இராஜாவிடம் தெரிவித்தார். இப்படியாக யோசேப்பு, “உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள்” மற்றும் “அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” என்ற வேதவாக்கியங்களினுடைய போதனைகளுக்கு எடுத்துக்காட்டானார் (நீதிமொழிகள் 3:6; சங்கீதம் 37:4).

இரண்டு சொப்பனங்களுமே ஒரே காரியத்தைத்தான் குறிக்கின்றதென யோசேப்பு விவரித்தார்; அதாவது இரண்டு சொப்பனங்களுமே எகிப்து தேசத்தில் ஏழு வருடங்கள் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் என்பதையும், இந்த வருடங்களைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் கொண்டதும், செழிப்பான வருடங்களினுடைய விளைவுகள் அனைத்தையும் முழுமையாகத் தீர்த்துப்போடுகின்றதுமான பஞ்சம் வரும் என்பதையும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது என்று விவரித்தார். இந்தத் தகவலைப் பார்வோன் பயன்படுத்திக்கொள்வதற்குத் தேவன் சித்தம் கொண்டுள்ளார் என்ற யோசனையை யோசேப்பு பார்வோனுக்குத் தெரிவித்தார் மற்றும் பரிபூரணமான ஏழு வருடங்களின், செழுமையான தானிய விளைவுகள் அனைத்தையும் வாங்குவதற்கும், ஏழு வருட பஞ்சகாலத்தின் பயன்பாட்டிற்கென அதைச் சேமித்து வைப்பதற்குமென, இராஜாவுக்கு விசேஷமான ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என்றும் யோசேப்பு பரிந்துரைத்தார்.

பார்வோன் மிகவும் விவேகத்துடன் சம்மதித்தார் மற்றும் தனது ஜனங்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களுக்காகப் பணிபுரிவதற்குரிய தனது விருப்பத்தையும், தனது பரந்த மனப்பான்மையையும் பார்வோன் வெளிப்படுத்தினவராக, பூரண விளைவின் வருஷங்களுடைய திரளான தானியங்களை வாங்கிடுவதற்கும், காரியங்களின் முழுப்பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கும் மற்றும் பின்னர் வரும் பஞ்சத்தின் காலங்களில், சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்களைச் செலவு செய்வதைக் கவனித்துக்கொள்வதற்கும் என்று யோசேப்பையே உடனடியாக நியமித்துவிட்டார்.

இப்படியாக யோசேப்பு சிறையிலிருந்து பதினான்கு வருடங்களுக்குரிய ஒப்பந்தத்திற்குள் நுழைந்தார். பொய்யான குற்றச்சாட்டினால் அடைந்திட்ட பாடுகளிலிருந்து, யோசேப்பு திடீரென அந்நாட்களிலுள்ள மாபெரும் சாம்ராஜ்யத்தில், பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள உயர் அதிகாரத்திற்கு அடியெடுத்து வைத்தார். யோசேப்பின் வெற்றியிலும், உயர்த்தப்படுதலிலும், தேவனுடைய கரம் இருக்கவில்லை என்று யாராகிலும் சொல்லக்கூடுமோ? நிச்சயமாய் இல்லை! யோசேப்பினுடைய துன்பமான அனுபவங்களில், தெய்வீகத் தயவு காணப்படவில்லை என்றும் நாம் [R5217 : page 110] அனுமானித்துவிடக்கூடாது. மாறாக யோசேப்பிற்கு வந்த துன்பத்தினாலான பாடங்களானது, அவர் பார்வோனின் வாய்க்கருவியாக, இராஜ்யம் எங்கும் அடையப்போகின்ற அடுத்துவரும் அனுபவங்களுக்குரிய ஆயத்தங்களாக மாத்திரமே காணப்பட்டது என்பதில் நமக்கு நிச்சயமே.

யோசேப்பின் அனுபவங்களானது, இயேசுவுக்கும், அவரது பின்னடியார்களாகிய சபைக்கும் நிழலாய்க் காணப்படுகின்றதை நாம் மீண்டுமாக நினைப்பூட்டப்படுகின்றோம். தாழ்மை மற்றும் பொறுமை எனும் பண்புகளானது, அன்பு மற்றும் உண்மை / நேர்மைக்கு நெருங்கின தொடர்புடையவையாக இருக்கின்றது என்று வேதாகமம் நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதைப் பரிசுத்தவானாகிய பவுல் பின்வரும் வார்த்தைகளைக் கூறுவதன் மூலம், நமக்கு நினைப்பூட்டுகின்றார், “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே” (எபிரெயர் 12:6-8).

இப்படியாகவே இயேசுவின் விஷயத்திலும், உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அனைவரின் விஷயத்திலும், இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள இயேசுவின் பின்னடியார்கள் அனைவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. இப்படியாகவே அர்ப்பணிக்கப்பட்ட சபை அங்கத்தினர்கள் அனைவரின் விஷயத்திலும் காணப்படும். இந்தப் பாத்திரங்களைக் கர்த்தர் இயேசு அன்புகூருகின்றபடியால், இவர்களைப் பரீட்சிப்பதற்கும், சோதிப்பதற்கும், சிட்சிப்பதற்கும் பாத்திரவான்களாகக் கருதுகின்றார். இந்தப் பரீட்சைகளும், சோதனைகளும், சிட்சைகளும், பிதாவானவர் இயேசுவையும், அவரது சகோதரராகிய சபையையும் அழைப்பித்துள்ள கனம், மகிமை, அழியாமைக்குரிய ஸ்தானத்திற்கும், மாபெரும் பொறுப்பிற்கும் தகுதிப்படுத்திடுவதற்கு இவர்களுக்கு அவசியமானதாய்க் காணப்படுகின்றது.

“துன்பத்தின் முக்கியத்துவம்”

யாக்கோபு தனது குமாரனாகிய யோசேப்பிற்காகக் கொண்டிருந்த விசேஷித்த அன்பானது, பாரபட்சத்தில் அதாவது பலவருண இராஜ அங்கியின் மூலம் வெளிப்பட்டது. தெய்வீக வழிநடத்துதலானது, ஒருவேளை குறுக்கிட்டு, யோசேப்பை அவரது தகப்பனுடைய கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக எடுக்கவில்லையெனில், யாக்கோபு அவரது இந்தக் குமாரனைச் சீரழித்துப் போட்டிருந்திருப்பார். அநேக தகப்பன்மார்கள், அதிலும் விசேஷமாக ஐசுவரியமான தகப்பன்மார்கள் இது போன்ற தவறுகளைச் செய்திருக்கின்றனர். ஆகவேதான் ஐசுவரியவான்களின் குமாரர்கள் தங்கள் தகப்பன்மார்களுக்கு மதிப்புச் சேர்ப்பவர்களாய் எப்போதும் காணப்படுவதில்லை.

ஆனால் மாபெரும் பரம பிதாவானவர், இப்படிப்பட்டதான தவறுகளைச் செய்வதில்லை. பரீட்சைகள், சிரமங்கள் என்பது, தேவனுடைய ஜனங்களுக்கு, அவர்கள் தேவனோடு கொண்டிருக்கும் உறவிற்கும், அவர்கள் மீதான அவரது அன்புடன் கூடிய பராமரிப்பிற்குமான அடையாளங்களாக இருக்கின்றது என்று தேவனுடைய ஜனங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தெய்வச் செயலான பராமரிப்பானது வரையறைக்கு உட்பட்டது என்பது உண்மையே; “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்” (2 தீமோத்தேயு 2:19). அவரது விசேஷித்த கையாளுதலானது, அவரது அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜனங்களுடன், அதாவது அவருடன் ஓர் உடன்படிக்கைக்குள் பிரவேசித்தவர்களுடன், அதாவது அவரது ஊழியக்காரர்களாகவும், அவரது பிள்ளைகளாகவும் ஆகியுள்ளவர்களுடன் காணப்படுகின்றது. இவர்களுக்கு மாத்திரமே, “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்ற வாக்குத்தத்தம் உரியதாகக் காணப்படுகின்றது (ரோமர் 8:28).

இந்த விசேஷித்த அழைப்பானது, இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள சபைக்குக் குறிப்பாகப் பொருந்துகின்றதாய் இருப்பினும், இன்னொரு விதத்தில் அழைப்பு என்பது ஆபிரகாம் காலம் முதலான எபிரெயர்களுக்கும் கூடப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. தேவனுடன் உடன்படிக்கை உறவில் காணப்படுகின்ற அந்த எபிரெயர்களிலேயே, யோசேப்பு காணப்படுகின்றார். இதுவே ஆபிரகாம் குடும்பத்தார் அல்லாத மற்றக் குடும்பத்து வாலிபர்களோடு தேவன் தொடர்பு கொள்ளாமல், மாறாக யோசேப்புடன் தொடர்பு கொண்டதற்கான காரணமாகும். இஸ்ரயேலர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தபடியால், அவர்கள் அநேக கடுமையான அனுபவங்களுக்குள் சென்றவர்களானார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். அவர்கள் ஒருவேளை தேவனுடனான உடன்படிக்கையின் உறவிற்குள் வரவில்லையெனில், இந்த அனுபவங்கள் அநேகவற்றிலிருந்து அவர்கள் தப்பியிருந்திருப்பார்கள். ஆனால் ஓரு வேளை அவர்கள் சோதனைகளுக்கும், [R5217 : page 111] சிரமங்களுக்கும் தப்பியிருந்திருப்பார்களானால், அவர்கள் சில சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும் அடையாமல் போயிருந்திருப்பார்கள். அவர்களை ஆயத்தப்படுவதற்கென வந்திட்ட துன்பங்களைக் காட்டிலும், தேவன் அருளும் ஆசீர்வாதங்கள் எப்போதும் அதிகமானதாகக் காணப்படுகின்றது.

“யூத மற்றும் கிறிஸ்தவ தெரிந்துகொள்ளுதல்கள்”

இது யூத ஜனங்களும், பிற்பாடு கிறிஸ்தவர்களும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக, தேவன் தெரிந்து கொண்ட ஜனங்களாக, ஆபிரகாமின் சந்ததியாக, மாம்சீக மற்றும் ஆவிக்குரிய சந்ததியாகக் காணப்படுகின்றனர் என்று வேதாகமம் தெரிவிப்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. இரண்டு பேருக்குமே, மற்ற ஜனங்களுக்கு அருளப்படாத தேவ ஆசீர்வாதங்கள் காணப்படுகின்றன; மற்றும் இருவரின் விஷயத்திலும் சோதனையான அனுபவங்களானது, தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அழைக்கப்பட்டதான எதிர்க்கால மகிமைகளுக்கு அவர்களைத் தகுதியாக்குகின்றதாய் இருக்கின்றது.

தெரிந்தெடுக்கப்படாதவர்களுக்கும் கூடத் தேவன் மாபெரும் ஆசீர்வாதங்களை வைத்திருக்கின்றார். மேசியாவினுடைய ஆளுகையின் ஆயிர வருடங்களின் போது, பரிசுத்தவான்களாகிய தெரிந்துகொள்ளப்பட்ட சபையானது, தேவனுடைய மாபெரும் இராஜ்யத்தில் மேசியாவின் உடன் சுதந்தரர்களாக இருந்து, பூமியின் மீதான ஆளுகையை எடுத்துக்கொள்வார்கள். எபிரெயர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்களுங்கூட அப்போது, கிறிஸ்தவ சபையுடன் இணைந்து, இன்னொரு வேலை பாகத்தில் பயன்படுத்தப்படுவார்கள்; இவர்கள் இருவரில் சபையானது, பரலோகத் தளத்தில் காணப்படுவார்கள், மற்றவர்களோ பூமிக்குரிய தளத்தில் காணப்படுவார்கள். இந்த இரண்டு இஸ்ரயேலர்கள் வாயிலாக தேவ ஆசீர்வாதங்களானது சகல ஜாதியார்கள், பாஷைக்காரர்கள், கோத்திரத்தார்கள் மீது பொழியப்படும்.

இந்த இரண்டு வகுப்பாருடைய காரியங்களைத் தவிர, வேறு எவருடைய காரியங்களையும் தேவன் விசேஷமாய் மேற்பார்வையிடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த மனித குடும்பத்தின் மீதும், துன்பத்தினாலான பெரும் படிப்பினைகள், பொதுவான விதத்தில் வருவதற்குத் தேவன் அனுமதித்திருக்கின்றார் என்று நாம் காண்கின்றோம். தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பார்களுக்கான விசேஷித்த சோதனைகளும், சிரமங்களும், அவர்களுக்கு விசேஷித்த ஆசீர்வாதங்களை அருளுவதற்கும், தேவனுடைய பிரதிநிதிகளென அவர்களைத் தகுதிப்படுத்திடுவதற்கும் நோக்கம் கொண்டிருந்தது போன்று, உலகத்தின் மீது வருகின்றதான பொதுவான உபத்திரவங்களுங்கூட, பாவம் மற்றும் மரணம் தொடர்பான அனுபவங்கள் அனைத்தையும் கொடுப்பதன் மூலமும், பாவத்தினுடைய மோசமான பாவத் தன்மையை அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதன் மூலமும், அனைத்து ஜனங்களுக்கும் உதவிகரமான பொதுவான படிப்பினைகளை அருளுகின்றதாய் இருக்கின்றது.

மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் போது, சாத்தான் கட்டப்படும் போது, நீதியின் ஆளுகை ஆரம்பமாகும் போது, சாபம் அகற்றப்படும் போது, ஆசீர்வாதங்கள் பொழியப்படும் போது, அப்போது துக்கம், கண்ணீர், அழுகை, மரணம் தொடர்பான படிப்பினைகள் அனைத்தும் விலையேறப் பெற்றதாய்க் காணப்படும். எதிர்காலத்தில் தேவன் அருளும் மாபெரும் ஆசீர்வாதங்களை அவர்கள் தற்காலத்தினுடைய தீமைகளுடனும், துக்கங்களுடனும் ஒப்பிட்டுப்பார்த்து, தேவன் அருளின மாபெரும் ஆசீர்வாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்வார்கள். மேலும் இந்தத் துக்கங்கள், கண்ணீர்கள் அனைத்தும், தேவனுடைய பிரமாணங்களை மீறினதன் காரணமாகவும், அவரது கட்டளைகளைப் புறக்கணித்ததன் காரணமாகவும் ஏற்பட்டதென மனுக்குலம் போகப்போக முற்றும், முழுமையாகக் கற்றுக் கொள்கையில், இந்தப் பாடம் ஒரு போதும் மறக்கப்படுவதில்லை என்பதில் நிச்சயமே.

உபத்திரவத்தின் ஏர் எங்கெல்லாம் உழுதிருக்கின்றதோ, அங்கெல்லாம் அது பயிரிடப்படாத நிலத்தை உழுது, தெய்வீகச் சத்தியம் மற்றும் கிருபை எனும் விதை தூவப்படுவதற்கென ஆயத்தப்படுத்தியுள்ளது. மேசியாவின் அனுகூலமான ஆளுகையாகிய அடுத்த யுகமானது, தேவன் பற்றின அறிவு மற்றும் அவரது மகிமையான குணலட்சணம், திட்டம் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளுதல் எனும் விதைகளை விதைப்பதற்கான காலமாகும். வேதவாக்கியங்கள் தெரிவிப்பது போன்று, விளைவுப்பலன்கள் மகிமையானதாய்க் காணப்படும். சத்திய அறிவு அனைவருக்கும் வழங்கப்படும் நாட்களில், மற்றும் நீதியாய் நடப்பதற்கு உதவி வெளிப்படையாய்க் கொடுக்கப்படும் நாட்களில், ஆசீர்வாதங்கள் வேண்டாம் என்று துணிந்து மறுப்பவர்களும், நீதிக்குப் பதிலாகப் பாவத்தைத் தெரிந்து கொள்பவர்களும் தவிர, மற்றப்படி அனைவருமே இந்த ஆசீர்வாதங்களில் நித்திய காலமும் பங்கு கொள்பவர்களாய்க் காணப்படுவார்கள். “