R5231 – பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு

No content found

R5231 (page 136)

பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு

DWELLING TOGETHER IN UNITY

ஆதியாகமம் 43

“தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்.” 1 யோவான் 2:10

எகிப்திலிருந்து வாங்கிவந்த தானியங்கள் தீர்ந்து போய்க்கொண்டிருக்கையில், தானியங்களை இன்னுமாக வாங்கிவரும்படிக்கு, யாக்கோபு தனது குமாரர்களை வற்புறுத்தினார். ஆனால் தங்கள் இளைய சகோதரனாகிய பென்யமீன் தங்களோடுகூட வராததுவரையிலும், தங்களால் போகமுடியாது என்று அவர்கள் உறுதியாய் மறுத்துவிட்டனர். சகோதரர்களில் ஒருவராகிய யூதா, பென்யமீனுக்கு உத்தரவாதமானார். இறுதியில் யாக்கோபு சம்மதித்து, “அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் (சிமியோனையும்), பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக் நானோ பிள்ளையற்றுப்போனவனைப்போல் இருப்பேன்” என்று கூறி, அவர்களோடுகூடத் தேன், கந்தவர்க்கங்கள் முதலான காணிக்கைகளையும், இரட்டிப்பாய்ப் பணத்தையும் மற்றும் பென்யமீனையும் அனுப்பிவைத்தார் (ஆதியாகமம் 43:14).

அவர்களை மீண்டுமாக எதிர்ப்பார்த்தவராக யோசேப்பு காணப்பட்டார் மற்றும் இம்முறை தன்னுடைய சமுகத்திற்கு முன்பாக அவர்களுக்கு விருந்து பரிமாறும்படிக்குக் கட்டளையிட்டிருந்தார். அவர்களோ பயத்தில் காணப்பட்டார்கள், ஏனெனில் அவர்கள் முன்பு வந்துபோனபோது, அவரவர் பணம், அவரவர் சாக்கின் வாயில் வைக்கப்பட்டிருந்தது. யோசேப்பினுடைய வீட்டின் வாசற்படியில், அவர்கள் வந்து யோசேப்பினுடைய விசாரணைக்காரனைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் இக்காலங்களில் எகிப்தில் (அ) வேறு தேசங்களில் அநேகமாகக் கொடுக்கப்படும் பதிலில் இருந்து, மிகவும் வித்தியாசமான ஒரு பதிலைப் பெற்றுக்கொண்டார்கள்; அதாவது “அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்” (ஆதியாகமம் 43:23). பின்பு விசாரணைக்காரன் அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளும்படிக்கும், புத்துணர்வு அடையும்படிக்கும் அவர்களுக்குத் தண்ணீரும், அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனமும் கொடுத்து, அவர்களுக்கு மதிய உணவை ஆயத்தம் பண்ணினான்.

யோசேப்பு எகிப்திய பிரபு என வஸ்திரம் தரித்தவராக உள்ளே வந்தார். அவர்கள் தரைமட்டும் குனிந்து, வணங்கி, காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அவர்களது தகப்பன் குறித்தும், அவர்களது இளைய சகோதரனாகிய பென்யமீன் குறித்தும் யோசேப்பு அன்பாய் விசாரித்தார். அவர் மிகவும் ஆழமான உணர்ச்சி வசத்திற்கு உள்ளானப்படியால், சந்தோஷத்தின் கண்ணீர்களைச் சிந்தும்படிக்கு, அவர் கொஞ்சம் நேரம் தனியே போவதற்கான கட்டாயத்திற்குள்ளானார். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக, திரும்பிவந்தார் மற்றும் போஜனம் தொடர்ந்தது. யோசேப்பின் பதினொரு சகோதரர்களும் அவரவரின் வயதின்படி அமர்த்தப்படும்படிக்கு ஏற்கெனவே கட்டளையிட்டிருந்த பிரகாரம் அமர்த்தப்பட்டிருந்தனர் மற்றும் தனது தனி மேஜையிலிருந்து யோசேப்பு தனது பதினொரு சகோதரர்களுக்கும் போஜனத்தைப் பங்கிட்டு அனுப்பினார். இப்படியாக தாங்கள் அமர்த்தப் பண்ணப்பட்டிருப்பதினிமித்தம் அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள் மற்றும் போஜனத்தில் தங்கள் இளைய சகோதரனாகிய பென்யமீனுக்கு ஒரு பங்கு கிடைப்பதற்குப் பதிலாக, ஐந்து மடங்கு பங்கு, விசேஷித்த தயவிற்கு/அன்பிற்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அதிகம் ஆச்சரியமடைந்தார்கள்.

குழந்தைகளுக்கும், முதிர்ச்சியடைந்த மனமுடையவர்களுக்கும் இக்கதையானது மிகவும் எளிமையானதாகவும், மிகவும் உருக்கமானதாகவும், மிகவும் அருமையானதாகவும் காணப்படுகின்றது. கதை அமைப்பானது, உண்மை நிகழ்வு என்று உறுதிப்படுத்துமளவுக்கு மிகவும் இயற்கையாகவும் மற்றும் தேவனுடைய புத்தகத்தில் ஒருவர் எதிர்ப்பார்க்கக்கூடியவைகளுக்கு முழு இசைவுடன் காணப்படுமளவுக்கு மிகவும் வஞ்சனையற்றதாகவும் அமைந்துள்ளது.

“கற்பிக்கப்பட்ட ஆவிக்குரிய பாடம்”

மேசியாவிற்கு யோசேப்பு நிழலாகக் காணப்படுகின்றார் என்று உணர்ந்துள்ள வேதமாணவர்கள், ஒரே தாய்க்குப் பிறந்தவரும், யோசேப்பினுடைய இளைய சகோதரனாகவும் காணப்படுகின்றவருமான பென்யமீனும், ஒரு நிழலாக இருக்கின்றார் என்று கருதுகின்றனர். ஆபிரகாமின் மனைவிகள் பல்வேறு உடன்படிக்கைகளுக்கு நிழலாய் இருக்கின்றதுபோல, யோசேப்பு மற்றும் பென்யமீனுடைய தாயாகிய ராகேலும், பலியின் உடன்படிக்கையாகிய விசேஷித்த உடன்படிக்கைக்கு நிழலாய் இருக்கின்றாள் என்று வேதமாணவர்கள் கருதுகின்றனர்; இந்தப் பலியின் உடன்படிக்கையானது, இந்தச் சுவிசேஷ யுகத்தில் செயல்படுகின்றதாகவும், இரண்டு வெவ்வேறான பரிசுத்தவான்கள் அடங்கின வகுப்பினர்களைக் கொண்டுவருகின்றதாகவும் காணப்படுகின்றது. பரிசுத்தவான்கள் அடங்கின இந்த இரண்டு வகுப்பார்களுக்கு யோசேப்பு மற்றும் பென்யமீன் நிழலாய்க் காணப்படுகின்றனர்.

மேசியாவாகிய இந்த உயர்ந்த வகுப்பினர் யோசேப்பில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்; இவ்வகுப்பினர் இந்தச் சுவிசேஷ யுகத்தின் உண்மையுள்ள தேவனுடைய ஜனங்களை உள்ளடக்கினவர்களாகக் காணப்படுகின்றனர்; அதாவது இயேசு மற்றும் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்கள் அனைவரையும் உள்ளடக்கின வகுப்பினராகும். யோசேப்பைப் போன்று, இந்த வகுப்பினர் இறுதியில் சாம்ராஜ்யத்தின் சிங்காசனத்தை அடைந்து, பார்வோன் அடையாளப்படுத்தும் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகருக்கு அடுத்த நிலையில், அண்டசராசரத்தின் இராஜாவாகுவார்கள். இந்தப் பார்வோனே யோசேப்பை மரணம் எனும் சிறைச்சாலையிலிருந்து வெளியே எடுத்து, வல்லமையிலும், மகா மகிமையிலும், தனக்கடுத்த நிலையில் உயர்த்தி வைத்தார்.

பரிசுத்தவான்களாகிய கிறிஸ்தவர்களை உள்ளடக்கின இந்த இரண்டு வகுப்பாரும், இந்தச் சுவிசேஷ யுகத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும், மேலான வகுப்பார் யோசேப்பினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் மற்றும் கீழான வகுப்பார் பென்யமீனால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்றும் சமீபக் காலங்கள் வரைக்கும், வேதத்தின் மாணவர்கள் அறியாதவர்களாகவே காணப்பட்டனர். பென்யமீன் எனும் பெயருடைய அர்த்தம் “என் வலது கரத்தின் மகன்” என்பதாகும். பெனொனி என்ற பெயரானது, அவரைப் பெற்றெடுக்கையில் மரித்துப்போன அவரது தாயார் சூட்டின பெயராகும் மற்றும் இதன் அர்த்தம், “என் உபத்திரவத்தின் மகன்” என்பதாகும்.

ராகேல் நிழலாய்க் காணப்படுகின்ற இந்த விசேஷமான உடன்படிக்கையானது, இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சபையாகிய மேசியாவைப் பெற்றெடுப்பதும், மற்றும் இன்னொரு வகுப்பாரைப் பெற்றெடுப்பதும் மற்றும் அதன் பிற்பாடு இல்லாமல் போவதை, அதாவது பிள்ளைப் பெற்றெடுக்காமல் இருப்பதும், இங்குள்ள நிஜமான பாடமாகக் காணப்படுகின்றது. இரண்டாவது வகுப்பார் உபத்திரவப்படும் பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுகின்றனர் மற்றும் இவர்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு முன்னதாக, “மிகுந்த உபத்திரவத்திலிருந்து வருவார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னுமாக இந்த வகுப்பார் யோசேப்பு நிழல்படுத்தும் அதிக கனமுடைய வகுப்பாரைக் காட்டிலும், மிகவும் அதிகமான எண்ணிக்கையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறு மந்தை – “”திரள் கூட்டம்”

இந்தக் கண்ணோட்டத்தைத் தெளிவாக முன்வைப்பதற்கு நாம் வெளிப்படுத்தல் 7- ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டுகின்றோம். இங்குத் தங்கள் நெற்றிகளில் முத்திரிக்கப்பட்டவர்களென 1,44,000 பேர் காணப்படும் காட்சி ஒன்று கொடுக்கப்படுகின்றது. இவர்களும், வேறொரு இடத்தில் சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவருடன் நிற்பவர்களாகவும், வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாமல், தாங்கள் மாத்திரமே பாடமுடிந்தவர்களாகவும் காணப்படுகின்றவர்களும் ஒரே வகுப்பாரே ஆவர் (வெளிப்படுத்தல் 14:1-3). இன்னுமாக இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன், கண்ணாடிக்கடலின்மேல் நிற்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர் (வெளிப்படுத்தல் 15:2,3). இப்படியாக பல்வேறு விதங்களில் இந்த வகுப்பார் உண்மையுள்ளவர்களும், பரிசுத்தவான்களுமான சிறு மந்தையுமானவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்; இந்தச் சிறு மந்தையினருக்கே, அதாவது தங்கள் கர்த்தரும், மீட்பருமானவருடன் உடன் சுதந்தரர்களாய் இருக்கப்போகிறவர்களுக்கே, பிதா ஆயிர வருட இராஜ்யத்தைக்கொடுக்க பிரியமாய் இருக்கின்றார்.

வெளிப்படுத்தல் 7:4-இல் இவர்கள் இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்தும், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்து பன்னீராயிரம் பேர் வருபவர்களாய் இருக்கின்றனர் எனவும் நாம் வாசிக்கின்றோம். இதன் அர்த்தமாவது, மாம்சீக இஸ்ரயேலர்கள் கர்த்தரைப் புறக்கணித்து, அவரைச் சிலுவையில் அறைந்துபோடுவார்கள் என்பதைத் தேவன் ஏதோ அறிந்திராதவர் போன்று, அவர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முழு எண்ணிக்கையானவர்களும் மாம்சீக இஸ்ரயேலர்கள் மத்தியிலிருந்து எடுக்கும்படிக்கு ஆதியிலேயே அவர் திட்டம் பண்ணியிருந்தார் என்பதாக இருக்கின்றது என்று வேதமாணவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இஸ்ரயேலானது பிரதான ஆசீர்வாதத்தை அடையாது என்றும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அதை அடைவார்கள் என்றும், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சேர்க்கப்படுவது நிறைவேறுவது வரையிலும் மீதமான இஸ்ரயேல் தேசத்தார் தற்காலிகமாகக் குருடாக்கப்பட்ட நிலையில் காணப்படுவார்கள் என்றும் தேவன் முன்னமே அறிந்திருந்தபோதிலும், இஸ்ரயேலரை அடிப்படையாகக் கொண்டே திட்டம் போடப்பட்டது (ரோமர் 11:7, 25-33 (refs2)).

இஸ்ரயேலர்களில் அநேகர் சுற்றியுள்ள தேசங்களில் சிதறிக்காணப்பட்டாலும், அவர்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பினப்பிற்பாடு, அனைத்துக் கோத்திரமும், அதாவது முழுத்தேசமும், பாலஸ்தீனியாவினால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பது வேதவாக்கியங்களுடைய பதிவுகளிலிருந்து உறுதியாய்த் தெரிகின்றது. ஆகவே இயேசு தம்முடைய வேலை, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்காகக் காணப்பட்டது என்று குறிப்பிட்டார் மற்றும் அப்போஸ்தலர்களும் இப்படியாகவே குறிப்பிட்டார்கள். அழைப்பைக் கேட்டு, அதற்கு செவிக்கொடுத்து, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகவும், தேவனுடைய புத்திரர்களாகவுமான யூத பரிசுத்தவான்கள் பல்வேறு கோத்திரங்களிலிருந்து வந்தவர்களாகவும், சில கோத்திரங்களிலிருந்து அதிகமாயும் மற்றும் சில கோத்திரங்களிலிருந்து கொஞ்சமாயும் வந்தவர்களாகவும் காணப்பட்டனர். இவர்கள் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பேரில், அநேகராய்க் காணப்பட்டனர்.

ஆனாலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை நிறைவடைவதற்குப் போதுமான பரிசுத்தவான்கள் இல்லை. ஆகவே தெய்வீகக் கிருபையினால் செய்தியானது, புறஜாதிகளினிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது; கொர்நேலியு எனும் புறஜாதியே, முதலாவது கிறிஸ்தவராக மாறினார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தேவனுடைய அழைப்பிற்குச் செவிக்கொடுத்த புறஜாதிகள், ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, உத்தம இஸ்ரயேலர்களென, ஆபிரகாமினுடைய சந்ததியின் ஆவிக்குரிய அங்கத்தினர்களென, தேவனால் ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களுக்கு ஏற்ப முதலாம் உயிர்த்தெழுதலுக்கு, தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்களுடன் சுதந்தரர்களெனக் கருதப்பட்டனர்; [R5232 : page 137] மாம்சீக இஸ்ரயேலர்கள் இன்னமும் தேவனுடைய அடுத்த வாக்குத்தத்தங்களுக்குச் சுதந்தரவாளிகளாகவே காணப்படுகின்றனர்.

இப்படியாகவே தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முத்திரையிடுதலானது கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகளாக நடைப்பெற்று வருகின்றது. யூதர்கள் மற்றும் புறஜாதியார்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக 1,44,000 பேர், தேவனுக்கான ஆசாரியர்களாகவும் மற்றும் இராஜாக்களாகவும், ஆட்டுக்குட்டியானவருடைய பின்னடியார்களாகவும், இராஜ்யத்தில் கிறிஸ்துவுடனான உடன் சுதந்தரர்களாகவும் காணப்படுவார்கள். பன்னிரண்டு கோத்திரங்களிலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 12,000 பேர் இந்தப் பணிக்கென்று நியமிக்கப்படுதலானது, இந்தியாவில் பிரிட்டிஷ் படைப்பிரிவுக்கான வீரர்கள் தேர்வுச் செய்யப்படும் விதத்திற்கு ஒத்த தேர்ந்தெடுக்கப்படுதலாய் இருக்கும் என்று நாம் புரிந்துகொள்கின்றோம். இதற்கான பெயர்ப்பதிவு மாபிரிட்டனிலிருந்து முழுவதுமாக நடைபெறுகிறது, ஆயினும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர் – அவர் எந்த நகரம் (அ) தேசம் என்ற பாகுபாடில்லாமல் – எந்தப் படைப்பிரிவில் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதோ, அதில் அங்கத்தினராக இணைக்கப்படலாம்.

“இவைகளுக்குப் பின்பு நான் பார்த்தபோது”

உண்மையுள்ளவர்களாகிய 1,44,000 பேர் முத்திரையிடப்பட்ட சம்பவம் பற்றின பதிவிற்குப் பிறகு, அதே அதிகாரத்தில் திரள்கூட்டம் குறித்தும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான (சிறுமந்தையினர் போன்று எண்ணிக்கையின் விஷயத்தில் முன்குறிக்கப்படாத) திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வெளிப்படுத்தல் 7:9,10).

தெரிந்துகொள்ளப்பட்ட இராஜாக்களும், ஆசாரியர்களுமானவர்களுக்கான வாக்குத்தத்தமானது, சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும் ஆசீர்வாதமாக இராமல், மாறாக சிங்காசனத்தில் இருக்கும் ஆசீர்வாதமாக இருப்பது பற்றியதாகவே காணப்படுகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டும். இன்னுமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜெயங்கொள்ளுதலானது குருத்தோலைகளின் மூலமாகக் காண்பிக்கப்படாமல், மாறாக மகிமையின் கிரீடத்தினால் காண்பிக்கப்படுகின்றது. இவைகளனைத்தும் குருத்தோலைப் பிடித்தவர்களாகச் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும் இந்தத் திரளான கூட்டத்தினர், மேசியாவின் சிங்காசனத்திலும், மகிமையிலும் பங்கடையும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய, மணவாட்டி வகுப்பாரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் திரள்கூட்டத்தினர் வேறொரு இடத்தில் அடையாள வார்த்தையில் “கன்னிகைகள்” என்றும், மணவாட்டியின் பின்செல்லும் மணவாட்டியினுடைய தோழிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் மணவாட்டியுடன் அரமனைக்குள், மகா இராஜாவின் சமுகத்தில் செல்வார்கள், ஆனால் இவர்கள் மணவாட்டிகளாகக் காணப்படுவதில்லை (சங்கீதம் 45:14,15).

இந்தத் திரள் கூட்டத்தினரைக் குறித்து வெளிப்படுத்துபவராகிய யோவானுக்கு விவரிக்கப்பட்டது; “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்” (வெளிப்படுத்தல் 7:14,15).

இங்குச் சிறு மந்தையினர் “தேவனுடைய ஆலயம்” என்றும், ஜீவனுள்ள கற்கள் என்றும் குறிப்பிடப்படுவதையும், இந்தத் திரள் கூட்டத்தினரோ அந்த ஆலயத்தில், அதாவது சபைக்குள்ளாகவும் மற்றும் சபையின் மூலமும் தேவனுக்கு ஊழியஞ்செய்வார்கள் என்றும் குறிப்பிடப்படுவதையும் வேதமாணவர்கள் கவனிக்கின்றனர். மகா உபத்திரவத்தின் காலத்தில், தங்களது வஸ்திரத்தை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுக்கும் இந்த வகுப்பார், மணவாட்டியிடமிருந்து வேறுபட்ட வகுப்பினராகவே கண்டிப்பாக இருக்க வேண்டுமென்பதையும் வேதமாணவர்கள் கவனிக்கின்றனர், ஏனெனில் மணவாட்டிகளோ, இராஜாவின் முன்னிலையில் கறைதிறையற்றவர்களாக தாங்கள் நிற்கத்தக்கதாக, தங்கள் வஸ்திரங்கள் உலகத்தினால் கறைப்படாதபடிக்குக் காத்துக்கொள்பவர்களாகவும், விழிப்பாய் இருப்பவர்களாகவும் இருப்பார்களென விவரிக்கப்பட்டுள்ளது.
“”உபத்திரவப்படும் இரண்டு வகுப்பார்””

கிறிஸ்துவைத் தலையாகப் பெற்றுள்ள சிறு மந்தையினர், அதாவது இராஜரிக ஆசாரியக்கூட்டத்தினர், அதாவது தெரிந்துகொள்ளப்பட்ட சபையானது நிச்சயமாய் உபத்திரவங்களின் வழியாகவே செல்கின்றவர்களாய் இருப்பார்கள். ஆகவேதான் அவர்களைக் குறித்து, “அநேக உபத்திரவங்களின் வழியாய் இராஜ்யத்தில் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமென்று” எழுதப்பட்டுள்ளது. கர்த்தர்கூட மிகுதியான உபத்திரவங்கள், அவமானம், பாடுகள் மற்றும் மரணத்தின் ஊடாய்க் கடந்து சென்றார் என்று நாம் அறிவோம். அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்களாகிய அப்போஸ்தலர்கள் மற்றும் மற்றவர்களின் விஷயத்திலும் இப்படியாகவே இருந்தது என்பதையும் நாம் அறிவோம். எனினும் இவர்கள் வேதத்தில் உபத்திரவப்படும் வகுப்பார் என்று விவரிக்கப்படுவதில்லை.

ஏனெனில் இவர்களது மகா விசுவாசத்தின் காரணமாக, இவர்கள் தங்களுடைய உபத்திரவங்களில் களிக்கூருவதற்கு முடிகின்றவர்களாகவும், இந்த உபத்திரவங்கள் அனைத்தும் மகா மேன்மையான நித்திய கன மகிமையை உண்டுபண்ணுகிறதை அறிந்து, உபத்திரவங்களை மகிழ்ச்சியுடன் கருதிக்கொள்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் உபத்திரவங்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர், ஏனெனில் காண்கிறவைகள் அனைத்தும் தற்காலிகமானவைகள் என்று இவர்கள் கருதிக்கொள்கின்றனர். தேவனை அன்புகூருகின்றவர்களுக்கு அவர் வைத்துள்ள நித்தியமானவைகளை, கண்கள் காணாதவைகளை இவர்கள் விசுவாசத்தின் கண்கள் மூலம் பார்க்கின்றனர்.

உபத்திரவப்படுகின்ற பரிசுத்தவான்கள் (திரள் கூட்டத்தினர்) தங்கள் நேர்மையில் குறைவுபட்டவர்களாய் இராமல், தங்கள் வைராக்கியத்தின் விஷயத்தில் குறைவுப்பட்டவர்களாய் இருப்பார்களென வேதவாக்கியங்களில் பல்வேறு விதங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்த உபத்திரவப்படுகின்ற பரிசுத்தவான்களானவர்கள் பலிக்கான தங்கள் வாக்குறுதிகளில் முன்னேறிச் சென்று நிறைவேற்றிடுவதற்குத் தவறிவிடுகின்றவர்களாகவும், உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனுக்கு எதிரான யுத்தத்தில் வீரர்களாய் இருப்பதற்குத் தவறிவிடுகின்றவர்களாகவும் காணப்படுவார்கள். “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளாகுதல்” என்று வேதவாக்கியங்கள் கூறுவதுபோன்று இவர்கள் தாங்கள் பண்ணின உடன்படிக்கைத் தொடர்புடையதான பலியின் அனுபவங்கள் குறித்து அச்சங்கொண்டவர்களாக, மாம்சத்திற்கும், சமுதாயத்தின் வழக்கங்களுக்கும் அடிமைத்தனத்திற்குள்ளானவர்களாகக் காணப்படுவார்கள் (எபிரெயர் 2:15).

இந்தக் காரணத்தினிமித்தமாக, இவர்கள் தேவனால், அவரது நேசகுமாரனுடைய சாயலை உடையவர்களாகவும், குமாரனுடைய கனம், மகிமை மற்றும் அழியாமையில் பங்கடைவதற்குப் பாத்திரவான்களாகவும் ஏற்றுக்கொள்ளபட முடியாது. எனினும் கர்த்தர் மிகவும் இரக்கமுடையவராகக் காணப்பட்டு, தம்மிடத்திலான இவர்களது நேர்மையைக்குறித்துப் பரீட்சிக்கின்றவராய் இருப்பார். இவர்களில் அநேகர் இறுதியில் உண்மையுள்ளவர்கள் என்றும், நேர்மையுள்ளவர்கள் என்றும் நிரூபிக்கப்படும்போது, இவர்கள் தாங்கள் இராஜ்யத்தில் உடன் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வதற்கென அழைக்கப்பட்ட, அந்த உடன்சுதந்தரத்தை இழந்துபோனாலுங்கூட, இவர்கள் நித்திய ஜீவன் அருளப்படும்படிக்கு, கர்த்தர் செய்வார். “உங்களுக்கு உண்டான அழைப்பினாலே, நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்” (எபேசியர் 4:4).

இந்த வகுப்பார் (திரள் கூட்டத்தினர்) சுவிசேஷ யுகம் முழுவதும் உருவாகிக் காணப்பட்டாலும், இந்த யுகத்தினுடைய முடிவின்போது, உலகத்தின்மீது வரவிருக்கின்ற உபத்திரவக் காலம் தொடர்புபடுத்தியே இந்த வகுப்பார் விசேஷமாய் வேதவாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, இவர்கள் (திரள் கூட்டத்தினர்) மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் “அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும்” என்று பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிட்டுள்ளார். பொன்னினாலும், வெள்ளியினாலும், விலையேறப்பெற்ற கற்களினாலும் கட்டியிருப்பவர்கள் (சபை) பரீட்சையில் நிலைநிற்பார்கள் என்றும் பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிடுகின்றார்; மேலும் இப்படியாகக் கட்டியிருப்பவர்களின் விஷயத்தில், அந்நாளின் அக்கினியானது, அவர்களுக்கு உபத்திரவத்தைக் கொடுக்காது, அதாவது அவர்களது விசுவாச கட்டிடத்தை அழித்துப்போடாது. பின்னர் பவுல் திரள் கூட்டத்தினரை விவரிக்கும் விதத்தில், மற்றவர்கள் மரம், புல், வைக்கோல் முதலியவற்றால் சரியற்ற நிலையில் கட்டியிருக்கின்றார்கள் என்றும், அந்நாளின் அக்கினியானது, இப்படியான சரியற்ற வேலைப்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போடும் என்றும் கூறியுள்ளார். இப்படியாக உண்மையான அஸ்திபாரத்தின் மீது, சரியற்ற விதத்தில் அவர்கள் கட்டியிருந்தாலும், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், அதுவும் அக்கினியில் அகப்பட்டுத்தப்பினது போலிருக்கும் என்று குறிப்பிடுகின்றார்; அதாவது மகா உபத்திரவக் காலத்தில் இரட்சிக்கப்பட்டவர்களாக, மகா உபத்திரவத்தின் மூலம் தேவனுடைய தயவைப் பெற்றுக்கொள்பவர்களாக மற்றும் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையவில்லையென்றாலும், நல்லதொரு உயிர்த்தெழுதலில் பங்கடைபவர்களாக இருப்பார்கள் என்ற விதத்தில் குறிப்பிடுகின்றார். ஏனெனில் “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்று நாம் வாசிக்கின்றோம் (வெளிப்படுத்தல் 20:6).

“பென்யமீனுடைய ஐந்து மடங்கு பங்கு”

யோசேப்பு தனது வெகுமதிகளை வழங்கும்போது, தனது சகோதரர்கள் அனைவருக்கும் அதிகமாய்க் கொடுத்தார். ஆனால் தனது தாயின் குமாரனாகிய, தனது சொந்த சகோதரனான பென்யமீனுக்கு, யோசேப்பு ஐந்துமடங்கு பங்குகொடுத்தார். யோசேப்பு, மேசியாவிற்கும், அவரது இராஜரிக வல்லமைக்கும், மகிமைக்கும் நிழலாய் இருப்பது தெளிவாய்த் தெரிகின்றபடியால் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்கு வழங்கின ஆசீர்வாதங்களானது, மேசியா, மாம்ச பிரகாரமான தமது சகோதரர்களாகிய மாம்சீக இஸ்ரயேலர்கள் மீது அருளும் கடாட்சங்களைக் குறிக்கின்றது. அதாவது எகிப்தியர்கள் அடையாளப்படுத்தும் ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கு மேசியாவின் ஆளுகையானது அருளவிருக்கும் பொதுவான ஆசீர்வாதத்தோடுகூட, மாம்சீக இஸ்ரயேலர்கள் மீதுங்கூட மேசியா கடாட்சம் அருளுவதைக் குறிக்கின்றது என்பதாக வேதமாணவர்களுக்குத் தெரிகின்றது.
இந்த நிழலில், உபத்திரவத்தின் மகனாகிய பென்யமீன், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலான திரள் கூட்டத்தின் வகுப்பாருக்கு நிழலாய் இருக்கின்றார்; மீதமான உலகத்தைக் காட்டிலும், உயர்வான தளத்திற்கும், உயர்வான நிலைமைக்கும், உயர்வான ஆசீர்வாதத்திற்கும் மகா உபத்திரவத்திலிருந்து கடந்துவரும் திரள் கூட்டத்தாருக்குப் பென்யமீன் நிழலாய் இருக்கின்றார். சபை போன்று பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள இவர்கள், ஒருவேளை ஜீவன் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரவான்களாய் இருப்பார்கள் என்றால், இவர்களுங்கூட ஆவியின் ஜீவிகளாகக் காணப்படுவார்கள். நிஜமான யோசேப்பை விற்றுப்போட்ட சகோதரர்களும் யோசேப்பினால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.