R5770
தற்காலத்தில் நாம் எங்கு நோக்கினாலும் அனைத்துப் பாவங்களுக்கும் சுயநலமே ஊற்றாக இருக்கிறதைத் தெளிவாகக் காணலாம். பேராசைதான் சுயநலமாக, பாவமாக இருக்கிறது. அனைவரும் பாவிகளாயிருப்பதினால் இது எங்கும் பரவியிருக்கிறது. நமது சட்டங்கள், நமது நீதியான உரிமைகளில் நம்மைப் பாதுகாக்க நாடுகிறது; எனினும் பொன்னான பிரமாணத்தினை அநீதியாக மீறுகிறவர்களிடமிருந்து நம்மைப் தற்காப்பதிலும், நமது உரிமைகளைப் பத்திரப்படுத்துவதிலும் நாம் பெரும்பாலும் தோல்வியே அடைகிறோம். அனைவருக்கும் பாடம் என்னவென்றால், தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்ளுகிறவர்களிடமிருந்து பொன்னான பிரமாணத்திற்குக் குறைவானது எதுவும் தேவனுடைய பார்வையில் ஏற்புடையதல்ல என்பதாகும். அனைவருக்குமான காரியங்களில் நீதியின்படியும், பொன்னான பிரமாணத்தினுடைய கோரிக்கையின்படியும் நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டியவர்களாயிருக்க, நாம் மற்றவர்கள் எப்பொழுதும் நீதியையும், பொன்னான பிரமாணத்தினையும் செய்திடவேண்டுமென்று எதிர்ப்பார்க்கக்கூடாது என்பது இரண்டாவது பாடமாகும். தேவனுக்கும், அவரது ஆளுகைக்கும் புறம்பாய்க் காணப்படும் தேசங்கள் மற்றும் ஜனங்கள் மத்தியில் தேவனுடைய பிள்ளைகள் தங்களை அவருடைய பிரதிநிதிகளாகவும், ஸ்தானாபதிகளாகவும் கருதிக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் நீதியுள்ளவர்களாயும், தயாள குணமுடையவர்களாயும், “அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவர்களாயும்” இருக்க வேண்டும். அவர்களுடைய பரலோகப் பிதா தயாளமுள்ளவராகவும், நீதியுள்ளவராகவும் இருக்கிறதுபோல, அவருடைய பிள்ளைகளும் அவரது குணலட்சணத்தை உடையவர்களாகவும், நீதி சம்பந்தமான எல்லாவற்றிலும் உதவுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.