Q286:3 – பொன்னான பிரமாணம் – தவறான விளக்கம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

Q286:3

பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்

GOLDEN RULE--Wrong Construction.

“கேள்வி (1909)-3- ஒருவன் தனக்குத் தன் சகோதரன் என்ன செய்யக்கூடாது என்பானோ, அதையே அவன் தன் சகோதரனுக்குச் செய்யக்கூடாது என்பதாகப் பொன்னான பிரமாணத்திற்கு விளக்கம் கொடுக்கப்படலாமா?

பதில் – இல்லை. பொன்னான பிரமாணமானது எதிர்ப்பார்ப்பவைகளுக்கும் அதிகமாய்ச் செய்வதற்கு அது தடைவிதிக்கும் என்று நான் கருதுகிறதில்லை. ஒருவேளை தாங்கள் ஒரு கிறிஸ்தவன் என்றால், நீங்கள் அதிகமாகவே செய்ய வேண்டும். பொன்னான பிரமாணம் என்பது அனைவருக்கும் பொருந்தும், ஆனால் கிறிஸ்தவனுக்கு வேறொரு பிரமாணம் காணப்படுகின்றது. “”புதிதான கட்டளையைக் கொடுக்கிறேன்” என்று இயேசு உலகத்தாரிடமோ, யூதர்களிடமோ சொல்லாமல், சீஷர்களிடமே சொன்னார்; “”நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்று சீஷர்களிடமே சொன்னார். ஒருவேளை இயேசு நம்மைப் பொன்னான பிரமாணத்தினுடைய அடிப்படையில் மாத்திரம் அன்புகூர்ந்திருந்தாரானால், அவர் நமக்காக மரித்திருக்கவே மாட்டார்; ஆனால் அவர் அதிகமாகவே செய்திட்டார் மற்றும் அவரது பின்னடியார்களென நீங்களும், நானும் ஒருவர் இன்னொருவருக்காய் அதிகமாய்ச் செய்திட வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கின்றார்.”