R5571 (page 334)
“பூமியைச் சூழ்ந்து மூடிக்கொண்டுவரும் மகா உபத்திரவக் காலத்தின் சோதனைகளிலிருந்தும், இன்னல்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று ஒருவரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். “”முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமாயும், இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும்”” பரத்திலிருந்து வரும் ஞானம் என்று அப்போஸ்தலனால் தெரிவிக்கப்படும் ஞானத்தினைப் பயன்படுத்துவதன் வாயிலாக, சூழ்நிலைகளை நல்லதாக்க முற்படுவதே சிறந்த வழியாகும். ஒருவன் எந்தளவுக்குப் பரம ஞானத்தின் இந்தப் பரிந்துரைகளைக் கைக்கொள்கின்றானோ, அவ்வளவாய் அவன் தேவ தயவைப் பெற்றுக்கொள்வான் என்பதில் நமக்கு நிச்சயமே. அந்தத் தயவானது, அவனுக்குச் “”சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும்”” என்று உறுதிபடுத்துகின்றதாய் இருக்கின்றது.
தன் வழிகாட்டுதலுக்குக் கீழ்க்காணப்படுபவர்களுக்கு எந்தவொரு பெற்றோராலும் அல்லது ஆலோசகராலும் கொடுக்க முடியும் மிகவும் விலையேறப்பெற்றப் படிப்பினைகள் – முதலாவதாகப் பொன்னான பிரமாணமாக இருக்கும் முற்றும் முழுமையான நீதியினை மனதில் ஆழப்பதிய வைப்பதாகும் – இதற்குக் குறைவான எதையுமல்ல; இரண்டாவதாகப் பொன்னான பிரமாணத்தினால் அடையாளப்படுத்தப்படும் நீதியோடுகூட, இரக்கம், மனதுருக்கம், அனுதாபம், உதவிபுரியும் ஆவி தொடர்பான படிப்பினைகளாகும். இது விஷயத்தில் மூன்றாம் பாடம் சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை தொடர்பாக இருக்க வேண்டும். நான்காம் பாடம் அனைத்திலும் சிக்கனமாய் இருத்தல் ஆகும் – வீணாக்குவதைத் தவிர்ப்பதாகும் தனக்கு அவசியப்படாத ஒன்று வேறொருவருக்கு அவசியப்படலாம் என்ற உணர்ந்துகொள்ளுதலாகும்.
இப்படிப்பினைகளைக்குறித்துக் குறிப்பிடுகையில், நமது வாசகர்கள்கூட ஆவிக்குரிய, பரம உணவு காணப்படும் கர்த்தருடைய பந்தியில் போஷிக்கும் தேவப் பிள்ளைகளாகக் காணப்படுகின்றனர். என்று நாம் கூறுகின்றோம். மேலும் இவர்கள் தங்கள் குடும்பங்களைக் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இசைவாகப் பயிற்றுவிப்பதன் மூலம் தங்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்க நாடுகின்றவர்களாய் இருக்கின்றனர்.
பொன்னான பிரமாணம் என்பது கர்த்தருடைய ஜனங்களினால் அங்கீகரிக்கப்படும் மிகவும் lowest standard/கீழ்த்தள நியமமே/அடிப்படையான நியமமே என்பதையும் மற்றும் இது எவ்வகையான அன்பிற்கும் முன்னதாகவே வருகின்றது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.”