R4816
கர்த்தருடைய பிள்ளைகளில் சிலரால் பொன்னான பிரமாணமானது முழுமையாய்ப் புரிந்துகொள்ளப்படுகிறதில்லை; இப்பிரமாணம் அடையாளப்படுத்தும் நியாயப்பிரமாணத்தின் காரியத்திற்கு அப்பால் இவர்கள் சென்று, பலிசெலுத்தும்படிக்கு நாடுகின்றனர். பொன்னான பிரமாணம் என்பது சக மனுஷனிடத்தில் நீதியாய் நடந்துகொள்வதாகும்; நீங்கள் விரும்புவதும், உங்கள் உரிமையென நீங்கள் உரிமைபாராட்டுவதுமான அதே சுயாதீனத்தினைச் சக மனுஷர்களுக்கும் கொடுப்பதாகும். சக மனுஷர்கள் உங்களுக்கு எவ்விதத்திலெல்லாம் தடைவிதிக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அவ்விதத்திலெல்லாம் நீங்கள் அவர்களுக்கும் தடைப்பண்ணாதிருங்கள். இது வெறுமனே நீதியையே குறிக்கின்றதேயொழிய, பலிசெலுத்துதலை அல்ல என்பதைப் பரிசுத்தவான்கள் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். இது தேவனுடைய கட்டளையாகும் – அவரது சிங்காசனத்தின், அவரது ஆளுகையின் ஆதாரமாகும். இதைவிட வேறு எந்தப் பாடமும் சபைக்கு மிக அவசியமாய் அநேகமாய்க் காணப்படுவதில்லை. இப்பிரமாணம் இல்லத்திலும், சபையிலும் தொடர்ந்து மீறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. தயவிற்கு முன்னதாக நீதி; பலிசெலுத்துவதற்கு முன்னதாகப் பொன்னான பிரமாணம் என்பதே நிச்சயமாய்த் தேவ ஒழுங்காய்க் காணப்படும் மற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும், அவருக்குப் பிரியமானவர்களாகவும் காணப்படுபவர்கள் யாவரும் இவ்விஷயத்தில் தங்களைக் கவனித்துக்கொள்வதில் கவனமாய் இருப்பார்கள்.