R5368 (page 381)
“I.B.S.A-இன் அன்புக்குரிய நண்பர்கள் சபையாருக்காக மூப்பர்களை மற்றும் உதவிக்காரர்களைத் தாங்கள் தேர்ந்தெடுப்பது தொடர்புடைய விஷயத்திலும் மற்றும் கர்த்தருடைய நாமத்தில் தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்கள் தொடர்புடைய விஷயத்திலும் பொறுப்புணர்வினை முறையாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அநேகமாகப் பாராளுமன்ற பிரமாணங்களைக் குறித்து வெகு சிலரே நன்கு அறிந்தவர்களாய் இருப்பதினால், சபைகூட்டங்கள் தொடர்புடைய விஷயத்தில் பாராளுமன்ற பிரமாணங்களை நடைமுறைப்படுத்துவது என்பது அன்பற்றதாகவும், ஞானமற்றதாகவும் காணப்படும் என்று ஏற்கெனவே நாம் கருத்துத் தெரிவித்திருந்தோம். பாராளுமன்ற பிரமாணங்களானது உண்மையில் நல்லவைகளாகவும், ஞானமானவைகளாகவும் மற்றும் பொதுவாய் நன்மை பயக்கிறதாகவும் காணப்படுகின்றது. பாராளுமன்ற பிரமாணங்களின் ஆவியானது, எல்லாவிடத்திலும் பொருந்தக் கூடியதாகும்; காரணம் அவைகள் அனைவருடைய நலனுக்கடுத்தவைகளைப் பாதுகாத்தல் எனும் பொன்னான பிரமாணத்தின் அடிப்படையிலும் மற்றும் குறைந்தபட்ச பிணக்குடனும், தாமதத்துடனும் காரியங்களைச் செய்யும் விதத்திலும் இயற்றப்பட்டவைகளாகும்.
கர்த்தருடைய ஜனங்களைப் பொறுத்தமட்டில், அன்பானது எப்போதுமே முதன்மையான இடத்தினைப் பெற்றிருக்க வேண்டும். அன்பானது எப்போதுமே பொன்னான பிரமாணத்திற்கு இசைவாக இருப்பினும், அது நேர்மையான நீதிக்கும் மேலாகச் செய்திடுவதற்கு எப்போதும் சுயாதீனம் உடையதாய் இருக்கின்றது. ஆகையால் கர்த்தருடைய சகோதரர்கள் யாவரும் கொள்கை உட்படாத விஷயத்தில், மற்றவருடைய நலனுக்காகத் தங்கள் சிறு விருப்பங்களை விட்டுக்கொடுத்துவிடுவதற்கு முற்றிலும் விருப்பமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். அன்பும், சந்தோஷமும், சமாதானமும் ஒவ்வொரு சபையிலும் மேலோங்கிக் காணப்பட வேண்டும். [R5369 : page 381] இவைகள் சார்புடைய யாவும் மற்றும் தேவனுக்கும், அவரது வார்த்தைகளுக்கும் உண்மையாய் இருத்தலுக்கு முழு இசைவுடன் காணப்படும் யாவும் ஆதரிக்கப்பட வேண்டும்.”