R5528 – தீமை பேசுதல் என்றால் என்ன?

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R5528 (page 264)

தீமை பேசுதல் என்றால் என்ன?

WHAT IS EVIL SPEAKING?

“அப்போஸ்தலனுடைய கட்டளையானது மிகவும் திட்டவட்டமாயுள்ளது; நாம் யாரைக்குறித்தும் தீமைபேசிடக்கூடாது. அப்படியானால், பரிசுத்த பவுல் இங்கு என்ன அர்த்தத்தில் பேசியுள்ளார்? எம்மனுஷனுக்கும் எதிராக தீமையான நோக்கத்தில், நாம் எதையும் பேசிடக்கூடாது என்ற அர்த்தத்தில் கூறுகின்றாரா? அல்லது நோக்கம் என்னவாக இருப்பினும் சரி, தீமை பேசாதே எனும் அர்த்தத்தில் கூறுகின்றாரா? என்ற கேள்விகள் எழும்புகின்றன. தவறான நோக்கத்தோடு, தவறான எண்ணத்தோடு தீமை பேசுதல் என்பது, மிகக் கொடிதான குற்றமாக, விசேஷமாகத் தேவனுடைய பிள்ளைக்கு இருக்குமென நாம் நிச்சயமாய் அறிவோம் என்று நாம் பதிலளிக்கின்றோம். ஆனாலும் உங்களது நோக்கம் என்னவாக இருப்பினும் சரி, யாரைக்குறித்தும் தீமை பேசாதிருங்கள் எனும் அர்த்தத்திலேயே அப்போஸ்தலன் கூறியுள்ளார் என்று நாம் எண்ணுகின்றோம். ஒருவேளை இதுதான் அப்போஸ்தலனின் கருத்தாக இருக்குமானால் மற்றும் இதுதான் கருத்து என்பது மறுக்கப்பட முடியாது என்றும், அக்கருத்தானது கர்த்தருடைய ஜனங்கள் அனைவர்மேலும் மிகவும் கண்டிப்பான கட்டளையை வைக்கின்றதாய் இருக்கின்றது என்றும் நாம் நம்புகின்றோம். தீமை பேசுவதற்கான நோக்கம் தீயதாக இருக்குமானால், காரியம் மிக மோசமானதாய் இருக்கும்; ஆனால் நல்லதோ, தீயதோ, “”ஒருவனையும் குறித்துத் தீமை பேசாதிருங்கள்.””

இப்பொழுது தீமை பேசுதல் என்றால் என்ன? என்ற வேறொரு கேள்வியும் எழும்புகின்றது. இவ்விஷயத்திற்கு அநேகம் பாகங்கள் இருக்கின்றன என்று நாம் பதிலளிக்கின்றோம். தீமை பேசுதல் என்பது, கெடுதல் உண்டாக்குகிறதைப் பேசுகிறதாய் இருக்கும்; ஆகையால் எந்த மனுஷனுக்கும் கெடுதல் உண்டாக்கும் எதையும் ஒருவன் பேசிடக்கூடாது. நாம் பொன்னான பிரமாணத்தைப் பொருத்திப் பார்ப்போமானால் இக்கட்டளையினுடைய நீதியும், நியாயமும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளப்படலாம். யாரேனும் நமக்குத் தீமை செய்திட நாம் விரும்புவோமா? யாராவது – நம்மை மரியாதைக் குறைவாகப் பேசுவதை, நம்முடைய தவறுகள் குறித்து விமர்சிப்பதை அல்லது பேசுபவர் நம்மிடத்திலுள்ள தவறு என்று கருதிடும் காரியங்கள் குறித்து அவரால் விமர்சிக்கப்படுவதை மற்றும் இப்படியாக மற்றவர்களுடைய பார்வையில் நம்மை இழிவுப்படுத்திடுவதை – நாம் விரும்புவோமா? கர்த்தருடைய ஜனங்கள் பொன்னான பிரமாணத்தினை ஜீவியத்தின் ஒவ்வொரு காரியங்களிலும் செயல்படுத்திட கற்றுக்கொள்வார்களானால், அது நிச்சயமாய் மிகவும் உதவிகரமாயிருக்கும்.

இந்த விஷயத்தில் மிகுந்த கடமை உணர்சியுள்ள கிறிஸ்தவர்கள் சிலருக்குச் சிரமம் காணப்படுகின்றது. தீமை பேசுதல் எனும் இக்காரியத்தைச் சிந்திக்கையில், என்னுடைய நோக்கம் சரியானதா? என்று சிலர் சிந்திக்கின்றவர்களாய் இருக்கின்றனர். அப்போஸ்தலனுடைய கட்டளைக்கும், மற்றவர்களை இழிவாய்ப் பேசுவதிலுள்ள தங்களது நோக்கத்திற்கும் எச்சம்பந்தமும் இல்லை என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர். நோக்கம் என்னவாக இருப்பினும், நாம் தீமை பேசிடக்கூடாது. எனக்கு நல்ல நோக்கம் காணப்படுகின்றதா அல்லது கெட்ட நோக்கம் காணப்படுகின்றதா? என்பது கேள்வியல்ல; மாறாக நான் தீமை பேசுகின்றேனா? பொன்னான பிரமாணத்திற்கு முரணாக அதாவது என்னைக்குறித்துப் பேசப்படுவதை நான் விரும்பிடாத மற்றவர்களைக் குறித்த எதாவது காரியங்களை நான் பேசுகின்றேனா? என்பதுதான் கேள்வி. இக்கட்டுரையினை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுடைய இருதயங்களிலும், மனங்களிலும் இக்கருத்தினைப் படிப்படியாகப் பதியவைத்திட நாம் விரும்புகின்றோம்.”