Q429:1 – இராஜ்யம் – இராஜ்யத்தின் சுதந்திரர்கள்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

Q429:1

இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்

KINGDOM--Heirs of the Kingdom.

கேள்வி (1916)-1- இராஜ்யத்தின் சுதந்திரர்களாகப் போகிறவர்கள் எந்த மாபெரும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும்படி எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்?

பதில் – (1) நீதியினைக் குறித்தச் சரியான, முழுமையான உணர்ந்துகொள்ளுதல் ஆகும் மற்றும் உங்களை அன்புகூருவதுபோன்று அயலார்களை அன்புகூருதலாகிய பொன்னான பிரமாணம் முன்வைக்கும் காரியங்களுக்கு இசைவாய் வர பிரயாசம் எடுப்பதன் வாயிலாக நீதியினைக் குறித்த அந்த உணர்ந்துகொள்ளுதலை வெளிப்படுத்துவதாகும். (2) மேலும் அன்பு, அனுதாபம், மனதுருக்கம், இரக்கம் குறித்த படிப்பினைகளாகும். நம்மைக் குறித்து, நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் கிரியைகள் குறித்து நாம் எவ்வளவுதான் கடுமையாய், இம்மியும் பிசகாமல் காணப்பட்டாலும்கூட, நாம் மற்றவர்கள் விஷயத்தில் இம்மியும் பிசகாத எதிர்ப்பார்ப்பினைக் கொண்டிருக்கக்கூடாது; மாறாக நமது இரட்சகர் போன்று, அவர்கள் கொடுக்கப்பிரியப்படும் எதையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு விருப்பமுடையவர்களாய் நாம் காணப்பட வேண்டும். இது (3) கிறிஸ்துவோடு பாடுபடுவதை, அவரது பாடுகளில் ஐக்கியம் கொண்டிருத்தலைக் குறிக்கின்றதாயிருக்கும். இது நமது கர்த்தரோடுகூட, வரவிருக்கும் அவரது இராஜ்யத்தில் இராஜாக்களென, ஆசாரியர்களென, நியாயாதிபதிகளென, நாம் செய்யவிருக்கும் வேலைக்கு நம்மைப் பொருத்தமானவர்களாக மற்றும் தகுதியானவர்களாக்க விலையேறப்பெற்றப் படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வதைக் குறிக்கின்றதாயிருக்கும்.

மகிமையின் சபையாக இருக்கப்போகின்றவர்கள் யாவரும், தேவனுடைய அன்பான குமாரனின் சாயலாக வேண்டுமென்று தங்கள் இருதயங்களில் கிறிஸ்துவின் நிருபத்தினை எழுதப்பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று தேவன் முன் குறித்துள்ளார் எனப் பரிசுத்த பவுல் அடிகளார் எழுதிட்டபோது, இவர் கிறிஸ்துவின் குணலட்சணங்கள் நம் இருதயங்களில் பதியப்பெற்றிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுதினவரானார் (ரோமர் 8:28-30). இவர்களது சரீரங்களானது எவ்வளவுதான் பூரணமற்றவைகளாக இருப்பினும், இவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப காணப்படும் விஷயங்களில் எவ்வளவு பூரணமற்றவர்களாக இருப்பினும், அந்தக் கொள்கைகள் திவ்விய நியமங்களின்படியானவைகளாகக் காணப்பட வேண்டும். கொள்கைகளை நிறைவேற்றும் விஷயத்தில் பாடுபடுவதில் மகிழத்தக்கதாக, அந்தக் கொள்கைகளுடன் நாம் இணக்கமாய்க் காணப்பட வேண்டும்.”