R3804 – பொன்னான சட்டம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R3804 (page 202)

பொன்னான சட்டம்

THE GOLDEN RULE

“காயமடைந்த மனுஷனுக்கு இரக்கம் பாராட்டின சமாரியன், உண்மையில் அம்மனுஷனுக்கு அயலானாய் இருக்கின்றான்; ஆனால் அம்மனுஷனுக்கு இரக்கம் காட்டிட மறுத்த ஆசாரியனும், லேவியனும் அம்மனுஷனுடைய அயலானாகக் கருதப்படக்கூடாது; ஆகவே, அம்மனுஷன் காயம் ஆறின பிற்பாடு, தனக்கு உதவின சமாரியனுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும். சமாரியனுக்கு ஊழியம் புரிவதில், தன்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுத்திடவும் விரும்பி காணப்பட்டிட வேண்டும். ஆனால் அயலான் போன்று செயல்படாத மற்ற இருவரையும் அம்மனுஷன் தன் அயலானாகக் கருதக்கூடாது மற்றும் தன்னில் அன்புகூருவது போன்று அவர்களையும் அன்புகூர முற்படக்கூடாது” என்று கர்த்தருடைய ஜனங்களில் சிலர் கூறி, மேற்கூறப்பட்டுள்ள நியாயப்பிரமாணத்தின் இந்தக் கோரிக்கையிலும், இதற்கான கர்த்தருடைய உவமையிலுள்ள விளக்கத்திலும் காணப்படும் முக்கியத்துவத்தை/அழுத்தத்தைத் தட்டிக்கழித்துவிடுகின்றனர்.

இப்படியாகக் கூறுவது என்பது நமது கர்த்தருடைய வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதாக இருக்கும் என்று நாம் பதிலளிக்கின்றோம். உண்மையில் யூதர்கள் மத்தியில் பரவலாய் இருந்த இந்த ஓர் எண்ணத்தை எதிர்க்கவே கர்த்தர் நாடினார்; ஏனெனில் அயலார்களுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்றும், சத்துருக்களிடம் வெறுப்புடன் காணப்பட வேண்டும் என்றும்தான், யூதர்கள் மத்தியில் பழமொழியாகக் காணப்பட்டது. அயலான் என்னும் வார்த்தையானது அருகாமையில் காணப்படுபவர்களைக் குறிப்பதினால் அன்பிலும், உணர்விலும், விசுவாசத்திலும், சமய பிரிவிலும் அருகாமையில்/நெருக்கமானவர்களாகக் காணப்படுபவர்கள்தான் அயலான் எனப் பொருத்திப் பார்க்கும் பழக்கத்தில் வேதபாரகரும், பரிசேயரும் காணப்பட்டனர். ஆகையால் பரிசேயன் ஒருவன் இன்னொரு பரிசேயனையும், வேதபாரகன் ஒருவன் இன்னொரு வேதபாரகனையும், ஒரே குலம் எனும் சுயநலமான ஆவியில் ஒருவரையொருவர் அயலான் என்று கருதி, மகிழ்ச்சியுடன் ஊழியம் புரிவான்; இன்னுமாக வேறு வகுப்பாரிலுள்ள மற்றவர்களை ஏறக்குறைய எதிரிகளாகக் கருதிக்கொண்டு, ஒன்றில் அவர்களை அன்பு செய்யாமல் கடந்து செல்வான் அல்லது ஒருவேளை அவர்கள் தன்னை எதிர்க்கும் பட்சத்தில், அவர்களைப் பகைப்பவனாய்க் காணப்படுவான்.

இதைக் காட்டிலும் மேலான ஒரு கண்ணோட்டத்தைக் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறிய இக்கருத்தை எதிர்க்கும் நமது கர்த்தருடைய வார்த்தைகளை நாம் நினைவுகூருகின்றோம். “”உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராய் இருப்பீர்கள்” (மத்தேயு 5:43-45). நண்பர்களிடத்தில் மாத்திரமல்லாமல், சத்துருக்களிடத்திலும் இந்த ஓர் அன்பின் அளவுகோலை எட்டாத/அடையாத எவரும், தேவனால் அவருடைய பிள்ளைகளெனக் கருதப்பட முடியாது.

நமது கர்த்தருடைய சீஷர்களாய் இருக்கும் அனைவரையும் ஆளவேண்டிய தெய்வீகச் சித்தத்தின் முழு விவரமாகிய பொன்னான சட்டத்தை நமது கர்த்தர் உருவாக்கினார். நமக்கு இரக்கம் பாராட்டியுள்ளவர்களையே நாம் சகோதர சகோதிரிகளென அன்புகூர வேண்டுமெனப் பொன்னான பிரமாணம் கூறவில்லை. நமது கர்த்தர், “”உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே” என்று கூறினதன் மூலமாக இம்மாதிரியான சுயநலமான அன்பைக் கண்டித்தார் (லூக்கா 6:32). நமக்காகத் தங்களுடைய ஜீவியங்களை ஆபத்துக்குள்ளாக்கியவர்களை, நாம் நமது அயலார்களென அன்புகூர வேண்டும் என்று இந்த உவமை போதிப்பதாக விளக்கம் அளிப்பது என்பது, நம்முடைய ஆண்டவருடைய போதனைகளைவிட மிகவும், மதிப்பு இறங்கின விளக்கமாய் இருக்கும் மற்றும் இப்படி எண்ணுவது என்பது பாவிகளுடைய பொதுவான எண்ணங்களுக்கு ஒத்ததாக இருக்கும் என்று ஆண்டவர் கூறியுள்ளார்.

மீட்பருடைய பின்னடியார்களாய் இருக்கும் நாம், மிகவும் உயர்வான (கொள்கை) அளவுகோலைக் கொண்டிருக்க வேண்டும்; கஷ்டமான நிலைமையிலும், நமது உதவி தேவைப்படும் நிலைமையிலும் இருக்கும் ஒவ்வொருவரையும், நம்முடைய அயலானாக நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; அதாவது ஒருவேளை நாம் இப்படியாக ஒரு கஷ்டமான நிலைமையில் காணப்படும்போது அவன் / அவள் நமக்குச் செய்திட, நாம் எதையெல்லாம் விரும்புகின்றோமோ, அவற்றை நாமும் அவனுக்கு/அவளுக்குச் செய்யத்தக்கதாக ஆயத்தமாய் இருக்கும் அளவுக்கு அவன் / அவள் மீது அனுதாபத்துடன்கூடிய / இரக்கத்துடன் கூடிய அன்புகொண்டிருக்க வேண்டும். எந்தளவுக்கு அன்பின், இரக்கத்தின், ஒத்துழைப்பின், பெருந்தன்மையின், இரக்க உணர்வின் இந்த உயர்வான கொள்கையானது, நமது இருதயங்களைக் கட்டுப்படுத்தி, நம்முடைய நடத்தைகளை ஆளுகின்றதோ, அவ்வளவாய் நாமும் நிச்சயமாய்த் தேவனைப்போன்று அதிகமாயும், கிறிஸ்துவைப்போன்று அதிகமாயும் காணப்படுவோம்; காரணம் நன்றியற்றவர்கள் மீதும் கூடத் தேவன் இரக்கமுள்ளவராக இருக்கின்றார் என நமது அருமை மீட்பர் குறிப்பிட்டுள்ளார்.