R4567 – பொன்னான பிரமாணம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R4567 (page 73)

பொன்னான பிரமாணம்

THE GOLDEN RULE

மத்தேயு 7:1-12

‬‎””ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கத்தரிசனங்களுமாம்.”” (மத்தேயு 7:12)

“”அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும், ஒருகாலும் பேசினதில்லை.” பொன்னான பிரமாணத்தின் போதனைக்குக் கொஞ்சம் சமமானதாகக் கண்பூசியஸ் அவர்களின் பின்வரும் கொள்கையின் வார்த்தைகள் இடம்பெறுகிறது; “”மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாது என்று எண்ணுகின்றீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதிருங்கள்”” என்பதே கண்பூசியஸ் அவர்களின் வார்த்தைகளாகும். இவரின் வார்த்தைகள் பிரமாண்டமான போதனையாக இருப்பினும், இது மேம்பட்டதாகக் காணப்படும் பொன்னான பிரமாணத்திற்கு மிகவும் கீழானதேயாகும். கிறிஸ்தவர்கள் என்பவர்கள் எதிர்மறையான இயல்புள்ளவர்களாய் (negative) இராமல், ஆக்கப்பூர்வமானவர்களாய்க் (positive) காணப்பட வேண்டும். அவர்கள் மற்றவர்களுடைய standards/கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்களாக மாத்திரம் காணப்படாமல், மாறாகக் கொள்கைகளை உடையவர்களாய் இருத்தல் வேண்டும்; ஜனங்கள் முன்னிலையில் இவர்கள் கர்த்தருடைய கொள்கைகளை உயர்த்திப்பிடித்துக் காட்டிட வேண்டும். “”மனுஷீக பிரமாணங்களுடைய எல்லைக்குட்பட்டுக் காணப்படுவதற்கு நாங்கள் பிரயாசப்படுவோம்” என்று இயேசுவின் பின்னடியார்கள் கூறிடாமல், மாறாக “”எங்களால் கூடுமானமட்டும் திவ்விய பிரமாணத்திற்கு இசைவாய் ஜீவித்திடுவோம். மனுஷீக பிரமாணம் என்பது பெரும்பான்மையான விழுந்துபோன மனுஷர்களின் நியமமாக இருக்கின்றதே ஒழிய, அவைத் திவ்விய நியமம் அல்ல என்று நாங்கள் கருதுகின்றோம்”” என்றே கூறிட வேண்டும்.

தேவனுக்கான மற்றும் நம்முடைய அயலாருக்கான நம்முடைய அன்பின் அடிப்படையில் நாம் சோதிக்கப்படுவோம் என்று நம்முடைய இரட்சகர் நமக்குத் தெரிவிக்கின்றார். கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தின் வாயிலாக தேவன் நம்முடைய கடந்த காலங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பை அருளியுள்ளார் மற்றும் இப்பொழுதோ தம்முடைய பிள்ளைகள் மற்றவர்களிடத்தில் இரக்கம், பரிவு, மன்னிப்புப் பாராட்டுவதற்கான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கு நோக்கம் கொண்டுள்ளார். ஆகையால் மற்றவர்களுக்கு நாம் எந்தளவுக்குக் கருணைக் காண்பிக்கின்றோமோ, அவ்வளவாய் நம்முடைய பெலவீனங்கள் மற்றும் குறைவுகள் விஷயத்தில் தேவனுடைய கருணையினை நாம் எதிர்ப்பார்த்திட முடியும் என்று அவர் நம்மிடம் தெரிவிக்கின்றார். இதில் நீதியின் கொள்கை அடங்குகின்றதாய் இருக்கின்றது. மற்றவரிடத்தில் பரிவும், மன்னிப்பும் பாராட்டும் யார் ஒருவனும், அன்பினைத் தன்னில் மேலோங்கின நிலையில், ஆளும் நிலையில் பெற்றிருக்கின்றான் என்பதை நிரூபிக்கின்றவனாய் இருப்பான். “”அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது.”” ஆகையால் இவர்கள் ஏதோ பூரணர்களாய் இருப்பதுபோன்று கையாளப்படுவர்; காரணம் மற்றவர்களிடத்திலான இவர்களது நடத்தையானது இவர்களது இருதயங்கள் சரியாய் இருக்கின்றது மற்றும் அன்பினால் ஆளுகை செய்யப்படுகின்றது என்பதற்குச் சான்று பகர்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இருதயத்தின் காரணமாய் இராமல், மன்னிக்கப்படத்தக்கதான மாம்சத்தின் பெலவீனங்களே இவர்களது மீறுதல்களினால் உண்டாகும் பூரணமின்மைகளுக்குக் காரணமாய் இருக்கின்றது என்பதற்கும் சான்றுபகர்கின்றதாய் இருக்கின்றது.

இந்தக் கண்ணோட்டத்தின்படி நோக்கம், உள்நோக்கம் முதலியவைகள் விஷயத்தில், கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவரையொருவர் நிதானிக்க வேண்டும்? நிச்சயமாகவே மிகவும் இரக்கத்தோடே நிதானித்திட வேண்டும்! அவர்கள் எப்படி ஒருவர் இன்னொருவருடைய பிரயாசங்களைப் பார்த்திட வேண்டும்? நிச்சயமாகவே மிகவும் தயவோடே பார்த்திட வேண்டும்! ஒரு சகோதரனிடத்தில் காணப்படும் குறையினை அவர்கள் எப்படிப் பார்த்திட வேண்டும்? இவர்களது அனுதாபமானது சகோதரனுடைய குறைவை இவர்களது கணிப்பில் சிறியதாக்கிட வேண்டும் இவர்களது சொந்த அபூரணங்கள் இவர்களுக்கே பெரியதாய்த் தெரிந்திட வேண்டும். நிச்சயமாகவே இப்படிப்பட்டவன் சகோதரனுடைய கண்ணில் தொல்லைக்கொடுத்துக்கொண்டிருக்கும் துரும்பை அல்லது சிறிய குறைவை நீக்கிடுவதற்கென்று சகோதரனுக்கு உதவுவதைப் பார்க்கிலும், தன் சொந்த கண்களிலுள்ள உத்திரத்தை எடுத்துப் போடுவதில் மிகவும் அக்கறையாய் இருப்பான். ஆகையால் தொடர்ச்சியாய்க் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பவன், அதாவது மற்றவர்களில் பெரிய குறைகளைக் காண்பவனும் மற்றும் தன்னில் எந்தக் குறைகளையும் காணாதவனுமானவன் தன் குறைகளுக்குக் குருடனாய் இருக்கிறான் அல்லது மாய்மாலக்காரனாய் இருக்கின்றான் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இதுவே ஆண்டவருடைய வார்த்தைகளாய் இருக்கின்றன.

நாம் வேற்றுமைகளைக் கண்டறிய வேண்டும். அனைவரும் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர் அல்ல, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல. மற்றவர்களில் சிலர் அதிகமாயும், சிலர் குறைவாயும் கீழ்த்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். ஆகையால் பல்வேறு தரப்பட்ட ஜனங்களை நாம் கையாளும்போது, நம்முடைய மார்க்கத்தின் மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் பரிசுத்தமான காரியங்களை, இவைகளை உணர்ந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாத நிலைமையில் காணப்படுவோருக்கு முன்வைத்திடுவதை [R4568 : page 74] நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் சினமடைந்து, நமக்குப் பாதகம் பண்ணிடுவார்கள். மாறாக சத்தியத்தை முன்வைக்கும் விஷயத்தில் நாம் சர்ப்பத்தைப்போல் வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப் போலக் கபடற்றவர்களாகவும் காணப்பட வேண்டும். கேட்கும் செவிகளை உடையவர்களுக்குத் தேவகிருபையினுடைய ஐசுவரியங்களை நாம் அறியப்பண்ணிட வேண்டும்.

அர்ப்பணம் பண்ணியுள்ள இயேசுவின் பின்னடியார்கள் யாவரும், தங்களுக்குத் தேவையானவைகளை அதாவது தேவனுடைய வார்த்தைகளில் உண்மையுள்ளவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை வேண்டிக்கொள்ளத்தக்கதாக, கிருபையின் சிங்காசனத்திடத்திற்கு அவருடைய நாமத்தில் தாராளமாய் வந்திடலாம். நாம் அவைகளை நாடித் தேடிட வேண்டும் மற்றும் அவைகளை நாம் கண்டடைவோம். நாம் தட்டும்போது, திவ்விய ஆசீர்வாதங்கள் நம்முன் திறக்கப்படும்.

இந்தக் கொள்கையானது எவ்வாறு விழுந்துபோன மனுஷர்கள் மத்தியில் நிலவுகின்றது என்று நாம் பார்த்திடலாம். எந்த ஒரு தகப்பனிடத்திலாவது மீன் கேட்கப்பட்டால், அவர் சர்ப்பத்தைக் கொடுப்பாரோ? அப்பம் கேட்கப்பட்டால் கல்லைக்கொடுப்பாரோ? நிச்சயமாக இல்லை! அப்படியானால் நமது பரம பிதாவைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தம்மிடத்தில் வேண்டிடும் பிள்ளைகளுக்கு அவர் அருளிடுவதற்கு அதிகம் விருப்பமுள்ளவராய் இருப்பாரல்லவா? உண்மையில் நாம் கேட்காமலேயே அநேகம் ஆசீர்வாதங்களை நமக்குக் கொடுத்திருக்கின்றார்; ஆனால் நாம் வேண்டிக்கேட்டுக்கொள்வது வரையிலும் அவர் தம்முடைய உச்சிதமான தயவுகளில் சிலவற்றைத் தராமல் வைத்திருக்கின்றார் காரணம் இப்படியாக அவர் நம்மை அவரிடத்தில் நெருங்கப்பண்ணி, அவர் நமக்கு அருளவிருக்கின்றதான ஆசீர்வாதங்களுக்கு நம்மை இன்னும் அதிகமாய் ஆயத்தம்பண்ணுகின்றார்.

பிதா விசேஷமாய்க் கொடுக்க விரும்பும் நல் ஈவானது, அவரது பரிசுத்த ஆவியை அருளும் காரியமே என்று வேறொரு இடத்தில் ஆண்டவர் நமக்குத் தெரிவித்துள்ளார். இதுவே மிகவும் முக்கியமானதாகும்; ஏனெனில் நாம் பரிசுத்த ஆவியினை உடையவர்களாய் இருந்தால் மாத்திரமே, தேவன் மற்றும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மனதினை, குணங்களை நாம் அடைந்தால் மாத்திரமே, நாம் அழைக்கப்பட்டிருக்கின்றதான மகிமையான ஆயிரவருட இராஜ்யத்தில் ஓர் இடத்தினைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்களாய் இருப்போம். சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை, சகோதர சிநேகம் – அன்பின் வாயிலாக அவரது பரிசுத்த ஆவியானது நம்மில் வெளிப்படுகின்றதாய் இருக்கின்றது.

“”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கத்தரிசனங்களுமாம்”” (மத்தேயு 7:12) என்பதே நம்முடைய பாடத்திற்கான ஆதார வசனமாகும். தேவனுடைய பிரமாணத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையும், இந்தப் பொன்னான பிரமாணத்தில் சுருக்கமாய்க் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் கிறிஸ்தவனுக்கு இன்னொரு விஷயமும் அதாவது கர்த்தருடைய “”புதிய கட்டளையும்”” காணப்படுகின்றது. மீட்பரின் இராஜ்யத்தில் அவரோடுகூட உடன்சுதந்தரத்தை அடைவதற்கு, நம் மீட்பர் நம்மை அன்புகூர்ந்தது போன்று – சுயத்தைப் பலிசெலுத்தி மரிக்குமளவுக்கு அன்புகூர்ந்தது போன்று, நாமும் “ஒருவரையொருவர் அன்புகூர்ந்திட வேண்டும்.”” “”நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கின்றோம்”” (1 யோவான் 3:16).

ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் நம்முடைய வாசகர்கள் அனைவரும் பொன்னான பிரமாணத்தினைக் கடைபிடிப்பதற்கு ஒருவேளை தீர்மானிப்பார்களானால், நாம் மகிழ்வுறுவோம்; ஆனால் நம்மால் அப்படி எதிர்ப்பார்த்திட முடியாது, ஏனெனில் அவர்கள் யாவரும் தேவனுக்கு முழுமையாய் அர்ப்பணம் பண்ணினவர்களாய் இருப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்த்திட முடியாது. கர்த்தர் விஷயத்திற்கும், கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்தின் அறிவுரைகள் விஷயத்திற்குமான முழுமையான அர்ப்பணிப்பில் குறைவு என்பது, இந்தப் பொன்னான பிரமாணத்திற்கு இசைவாய் ஒரே சீராய் ஜீவித்திட எந்தவொரு மனுஷனுக்கும், மனுஷிக்கும் உதவுவதாய் இராது. மாபெரும் போதகரின் உதவும் கிருபையினால் மாத்திரமே, அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்தில் இப்பிரமாணம் நிலைக்கொள்ள முடியும். ஆகையால் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் இந்தப் பிரமாணத்தினையும், “”புதிய கட்டளையையும்” பின்பற்றிடவும், மற்றவர்கள் தங்களை அர்ப்பணம் பண்ணிடவும் நாம் வலியுறுத்துகின்றோம்.