R2589 (page 73)
“மத்தேயு 7:1-14
“”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.””
“ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”” (7:12). இவ்வசனத்தில் இடம்பெறும் “”ஆதலால்”” என்ற வார்த்தையானது இவ்வசனத்திற்கும், இப்பாடத்தில் நாம் முன்பு பார்த்துள்ள விஷயங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. இவ்வசனத்தின் காரியங்களானது, நாம் எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவாய் மற்றவர்களுடைய நோக்கங்களைத் தவறாய் நியாயம் தீர்த்துக்கொண்டு, அவர்களிடத்தில் (கைகளிலும், பாதங்களிலும்) குத்திக் காணப்படும் சிறு கூர்மையான கண்ணாடித் துண்டுகளை மாற்றிப்போடுவதற்கு மிகவும் கவனமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு முயற்சிகள் எடுப்பதற்கு அநாவசியமாகத் தலையிடுகின்றோம் என்பதை அறிந்துகொள்வதற்குப் பரீட்சையாக அல்லது கோட்பாடாக அல்லது அளவு கோலாகக் காணப்படுகின்றது. ஆகவே இவ்வசனமே, “”பொன்னான பிரமாணமாகும்;” அதாவது இதுவே தேவனுடைய ஜனங்கள் அவர்களுடைய ஜீவியத்தின் அனைத்து விஷயத்திலும் மற்றும் விசேஷமாக அவர்கள் “”சகோதரர்களுடன்” கொண்டிருக்கும் உறவிலும், அவர்கள் “”சகோதரர்களைக்” கையாளும் விஷயத்திலும் பயன்படுத்த வேண்டிய சட்டமாகும். மற்றவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கவோ அல்லது குற்றத்தைத் தேடுவதற்கோ நாம் உந்தப்படும்போதும், மற்றவரைக் குற்றம் சாட்டுவதற்கு அல்லது மற்றவருடைய குறைகளை விமர்சிக்க நாம் உந்தப்படும்போதும் அல்லது அவரை வெறுப்பதற்கு உந்தப்படும் போதும் இப்படி எண்ணுவது அல்லது செய்வது ஏற்புடையதா அல்லது ஏற்புடையதாக இல்லையா என்பதை நாம் அறியும் பொருட்டு, “”ஒருவேளை நான் அந்தச் சகோதரனுடைய இடத்திலும், அந்தச் சகோதரன் என்னுடைய இடத்திலும் இருந்தால், என்னைக்குறித்து அந்தச் சகோதரன் இப்படியாக எண்ணுவதையோ, பேசுவதையோ நான் விரும்புவேனோ?”” என்ற கேள்வியை நம்மிடத்திலேயே நாம் கேட்டுப்பார்க்க வேண்டும்.
இந்தப் பிரமாணம் கவனமாய்ப் பின்பற்றப்பட்டால், இப்பிரமாணம் ஒரு வழிகாட்டியாகக் காணப்படும். கர்த்தருடைய ஜனங்கள் இப்பிரமாணத்தை நினைவில் கொண்டிருந்தும், இதற்குக் கீழ்ப்படிய இருதயத்தில் விருப்பம் கொண்டிருந்த போதிலும், புறங்கூறும் விஷயத்திலும், தீமைப்பேசும் விஷயத்திலும், வதந்திகள் பரப்பும் விஷயத்திலும், தாங்கள் இந்தப் பொன்னான பிரமாணத்தை மீறும் விஷயத்தில், தங்களைக் குற்ற பழியினின்று விலகிக்கொள்வதற்கான காரணத்தைக்காட்ட வாய்ப்புத்தேடுகின்றனர். இந்தக் கர்த்தருடைய பிரமாணத்தைக் கையாளும் விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம். அதாவது, தேவனுடைய வார்த்தைகளை ஏமாற்றுத்தனமாகக் கையாளாதபடிக்கு, அதாவது இந்தப் பிரமாணத்தினுடைய உண்மையான முக்கியத்துவம் தொடர்பான விஷயத்தில், நம்மையே நாம் குருடாக்கி, ஏமாற்றிக் கொள்ளாதபடிக்கு, அதாவது இவ்விதமாய் நம்மையே நாம் ஏமாற்றி, நம்முடைய மனசாட்சியை நாம் சிறைப்படுத்தி, பலவீனப்படுத்தாதபடிக்கு, அதாவது பரிசுத்த ஆவி வேண்டும் என்பதான நம்முடைய ஜெபங்களை நாமே தடைபண்ணிப்போடாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம். ஏனெனில், வழி திறந்திருக்கும் பட்சத்திலேயே பரிசுத்த ஆவியானது நம்முடைய இருதயங்களுக்குள் பாய்ந்து வரமுடியும். இந்தப் பொன்னான பிரமாணத்தை முழுமையாகக் கைக்கொள்ளும்போது மாத்திரமே, வழித்திறந்து காணப்பட முடியும். இந்தப் பொன்னான பிரமாணமும், இந்த அனைத்துப் படிப்பினைகளும் புதியவைகள் போன்று தோன்றுவதற்கான காரணம் – இவைகள் முன்பு இல்லாத அளவுக்கு மாபெரும் போதகரினால், தெளிவான மற்றும் துல்லியமான வெளிச்சத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளதினாலேயாகும். இன்னுமாக, இவைகள் மோசேயினுடைய நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசிகள் வாயிலான தேவனுடைய போதனைகள் ஆகியவைகளின் சாரமாக உள்ளது. “