R5430 – நீதி – நியாயம் – கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R5430 (page 100)

நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்

JUSTICE--RIGHTEOUSNESS--THE FOUNDATION OF CHRISTIAN CHARACTER

“பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.”” “”அதற்குச் சாமுயேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.””
(நீதிமொழிகள் 21:3; 1 சாமுவேல் 15:22)

இந்த வார்த்தைகளானவை தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகிய யூதர்களிடம் பேசப்பட்டவையாகும். இஸ்ரயேல் ஜாதியார் தேவனுடன் ஒரு விசேஷித்த உறவுக்குள்ளாக வந்துள்ளனர். சீனாய் மலையில் இவர்கள் தேவனுடன் ஓர் உடன்படிக்கைக்குள் பிரவேசித்தவர்களாக, நீதியையும், நியாயத்தையும் செய்வதாகத் தங்களை ஒப்புக்கொடுத்திருந்தனர். இதுவே தேவனுடைய எதிர்ப்பார்ப்பாகும். ஆனால் பலிகள் கர்த்தருக்கு விசேஷமாய்ப் பிரியமானவைகள் என்று எண்ணிவிடும் தன்மையும் நிலவினது. சிலர் தாங்கள் எவ்வளவுதான் அநீதியானவர்களாய்க் காணப்பட்டாலும், தங்களால் பலியினை ஏறெடுத்து, அதைச் சரிச்செய்துவிட முடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் இப்படியாக இல்லை என்று தேவன் சுட்டிக்காண்பித்துள்ளார். அவரது நியாயப்பிரமாணங்கள் கோரிக்கையாய்க் காணப்பட்டது மற்றும் இதுவே அனைத்திற்கும் முன்பாகக் கடந்துவர வேண்டும்; ஆனால் வெற்றி முதலானவைகளுக்கான நன்றியறிதலாகச் செலுத்தப்படும் இந்த விசேஷித்த பலிகளானது சிலாக்கியங்களாகவும், தானாய் மனமுவந்து ஏறெடுக்கப்படும் காணிக்கைகளாகவும் இருக்கின்றது. நியாயப்பிரமாணமானது தேவனுக்கு முழுவதும் உண்மையாய் இருத்தலைக் கேட்கின்றதாய் இருக்கின்றது.

இஸ்ரயேல் தேவனோடு, அவரது ஜனங்களெனக் கொண்டிருந்த உறவானது, நியாயப்பிரமாணத்தின் அடிப்படையினாலானதாகும். இந்த நியாயப்பிரமாணம் நீதியையும், நியாயத்தையும் உள்ளடக்கிக் காணப்பட்டது. இதன் கட்டளைகளுக்கு ஏற்ப இஸ்ரயேலர்கள் முதலாவதாகத் தேவனுக்கும், பின்னர் மனுஷருக்கும் காரியங்களைச் செய்திட வேண்டும். அவர்கள் களவு செய்யக்கூடாது, கொலை செய்யக்கூடாது, பிறர் பொருட்களை இச்சிக்கக்கூடாது. இதில் பொன்னான பிரமாணத்தின் சாரமும், பொருளும் உள்ளடங்குகின்றது.

நீதி செய்வது என்பது சரியானதை, நீதியானதை, நேர்மையானதைச் செய்வதாகும்; நியாயம் செய்வது என்பது மனதில் நீதியான (கணிப்புகளை) தீர்மானங்களை வழங்குதலாகும். நீதியாய்த் (கணிப்பதாகும்) தீர்மானிப்பதாகும். ஒருவன் தன் சக மனிதனுடனான தனது தொழில் ரீதியிலான நடவடிக்கைகளில் மிகவும் நீதியோடு செயல்படுகிறவனாய்க் காணப்படலாம். அவன் ஒரு ரூபாயிலும்கூட யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையுள்ளவனாய் இருக்கக்கூடும்; எனினும் அவன் தன் மனதில் மற்றவர்களைக் குறித்த மிகவும் இரக்கமற்ற, அன்பற்ற கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கக்கூடும்; மேலும் மற்றவர்களைக் குறித்து மிகவும் அநீதியான விஷயங்களைச் சொல்லக்கூடும். ஞானியினுடைய இந்த ஆலோசனை என்பது அநீதி செய்வதற்கு எதிராக மாத்திரமல்லாமல், தவறான எண்ணங்களைக் கொண்டிருத்தலுக்கும் எதிராக எச்சரிக்கின்றதாய் இருக்கின்றது. நம்முடைய மனங்களுடைய (கணிப்புகளும்) தீர்மானங்களும், நம்முடைய கிரியைகளும், நீதியின் கொள்கைகளுக்கு இசைவாகக் காணப்பட வேண்டும். [R5430 : page 101]

மற்றவர்களை நாம் நியாயந்தீர்த்திட முடியாது – SUB HEADING

உறுதியான நிரூபணங்கள் இல்லாமல், யாரையும் குறித்துப் பாதகமான விதத்தில் நாம் கணித்திட, நியாயந்தீர்த்திட, தீர்மானித்திடக்கூடாது. அவர்கள் சரியானதையே செய்ய முயன்றுகொண்டிருப்பதாகக் கூறுவார்களானால், நாம் முடிகிற மட்டும் அவர்களது உண்மையினை அங்கீகரித்திட வேண்டும். நாம் அவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைத்திடக்கூடாது; ஏனெனில் நம்மால் அவர்களது இருதயங்களைக் கணித்திட/நியாயந்தீர்த்திட முடியாது. நமது கர்த்தர் அவரது நாட்களில் சிலரை மாய்மாலக்காரர்கள் என்று அழைத்தார்; அவருக்கு இருதயங்களை அறியக்கூடிய மேலான வல்லமை உண்டு மற்றும் நமக்கு அந்த வல்லமை கிடையாது. நாம் மற்றவர்களது நோக்கங்களை நியாயந்தீர்த்திடக்கூடாது. அவர்கள் அறிக்கையிடும் காரியங்களுக்கு அப்பாற்பட்டு நாம் சென்றுவிடக்கூடாது, ஏனெனில் அப்படிச் செய்ய நாம் இயலாதவர்களாவோம்.

புறம்பான கிரியைகளைச் சிலசமயம் தவறானது அல்லது சரியற்றது என்று நாம் நியாயம் தீர்ப்பது உண்டு; ஆனால் நாம் இருதயங்களை நியாயந்தீர்க்க முற்படக்கூடாது; இதில் கணிப்புத் தவறுவதற்கு வாய்ப்புள்ளது. நம்முடைய ஒவ்வொரு கிரியையிலும், வார்த்தையிலும், எண்ணங்களிலும் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளுவதற்கு நாடும்படிக்கு நாம் நம்மையே ஒப்புக்கொடுத்துள்ளோம் மற்றும் ஒருவேளை நாம் பலிசெலுத்தும் விஷயத்தில் மிகவும் அதிகமான வைராக்கியத்தினை வெளிப்படுத்தினவர்களாகவும், அதேசமயம் நீதியின் பிரமாணத்தினை மீறுகிறவர்களாகவும் இருக்கும் நிலைமையைவிட, ஒருவேளை நாம் பலிசெலுத்தாதவர்களாகக் காணப்பட்டு, பொன்னான பிரமாணத்துடன் நம் உறவைத் தக்கவைத்துக் கொண்டவர்களாக மாத்திரம் இருக்கும் நிலைமையிலேயே – தேவன் மிகவும் பிரியப்படுவார் என்பதை நாம் நினைவில் வைப்போமாக. இப்பிரமாணமானது நாம் நம்மை அன்புகூருவதுபோன்றே நம் அயலார்களை அன்புகூர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றதாய் இருக்கின்றது. “”எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்று அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13-ஆம் அதிகாரத்தில் அன்பைக்குறித்து நமக்கு நினைப்பூட்டுகின்றார்.

கிறிஸ்துவின் சீஷர்களாகிய நமக்கான சரியான காரியம், நம் நடக்கையில் பொன்னான பிரமாணத்தினை நாம் கைக்கொள்வதும், நம் எண்ணங்கள் மற்றும் நம் உதடுகள் குறித்துக் கவனம் கொண்டிருப்பதுமாகும்; மேலும் நாம் பெற்றிருக்கும் யாவற்றையும் தொடர்ந்து கர்த்தருக்குப் பலியாக ஏறெடுக்க வேண்டும். ஆனால் கீழ்ப்படிதல், நீதி முதலாவதாக வரவேண்டும்; ஏனெனில் இதையே தேவனுடைய நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்க்கின்றதாய் இருக்கின்றது. தியாகமான அன்பினை வளர்த்திடும் விஷயத்தில் முன்னேறுவதற்கு முன்னதாக, நாம் நீதி, நியாயத்திற்கான ஓர் அன்பினைப் பெற்றிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் தயாளனாய் இருப்பதற்கு முன்னதாக, அவன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற பழமொழி காணப்படுகின்றது. இது புதுச்சிருஷ்டியின் அங்கத்தினர்களென யாவரிடத்திலும் கண்டிப்பான நீதியினைக் கைக்கொள்ளும் காரியம் தொடர்பான இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வதற்கும், தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் முற்றிலும் அவசியமானதாய்க் காணப்படும் இப்பண்பினை அவர்கள் அன்றாடம் நடைமுறைப்படுத்துவதற்கும் – தேவனுடைய பிள்ளைகளை ஏவுகின்றதாயிருக்கின்றது; ஏனெனில் இப்பண்பே கிறிஸ்தவ குணலட்சணம் அனைத்தின் அஸ்திபாரமாய்க் காணப்படுகின்றது.

கண்டிப்பான நீதியின் இப்பிரமாணத்தினைக் கிரியையிலும், வார்த்தையிலும், சிந்தையிலும் பூரணமாய்க் கைக்கொள்வது என்பது விழுந்துபோன மாம்சத்தில் நம்மால் முடியாததேயாகும். ஆனால் அப்படி முடிந்தமட்டிலுமாகச் செய்ய நாம் ஜெபத்தோடு பிரயாசம் எடுக்க வேண்டும். வேண்டுமென்றே இல்லாத மற்றும் தவிர்க்க இயலாத குறைவுகளையெல்லாம், கிறிஸ்துவின் புண்ணியமானது ஈடு செய்திடும். குணலட்சணத்தின் இந்த அஸ்திபாரத்தினை நன்கு போட்டவர்களாய் இருப்பவர்கள் மாத்திரமே சரியாய் முன்னேறுகிறவர்களாய் இருப்பார்கள். நீதிக்குறித்த தவறான கருத்துக்கள் எனும் அஸ்திபாரத்தின் அல்லது அநீதியின் மீது கட்டப்பட்ட அன்பானது ஏமாற்றுத்தனமானதாகும் மற்றும் அது கர்த்தருடைய வார்த்தைக் குறிப்பிடுகிறதும், உண்மையான சீஷத்துவத்திற்கான நிரூபணமாக அவரால் எதிர்ப்பார்க்கப்படுகிறதுமான அன்பல்ல. தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது கிரியையிலும், வார்த்தையிலும், சிந்தையிலும் நீதியாய்க் காணப்படுவதற்கு முயல்வதாகும்.”