R5425 – சீஷத்துவத்திற்கான விலை

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R5425 (page 90)

சீஷத்துவத்திற்கான விலை

THE COST OF DISCIPLESHIP

“கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு இறுதியாகக் கூறினார். அவருடைய பின்னடியார்கள் அனைவரும் இந்த வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க வேண்டும். இவ்வார்த்தைகளை அசட்டைப் பண்ணுகிறவன், இவ்வார்த்தைகளைக் கொடுத்திட்டவரை அசட்டைப் பண்ணுகிறவனாய் இருந்து, நிச்சயமாய்க் கிடைக்கப்பெறும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுகிறவனாய் இருப்பான். ஆனால் உலகத்தாரைப் பொறுத்தமட்டில், “அவர்கள் காதுகளிருந்தும் கேளாதவர்களாகவும், கண்ணிருந்தும், காணாதவர்களாகவும்” இருப்பார்கள். நம்மையும், இயேசுவின் பின்னடியார்கள் அனைவரையும் அளப்பதற்கான அதே கொள்கைகளின் அடிப்படையில் நாம் உலகத்தாரைக் கணிக்கக்கூடாது. உலகத்திற்கான உயர்ந்த அளவுகோல்/கொள்கை பொன்னான சட்டமாக இருக்கின்றது. கிறிஸ்தவனுக்கான உயர்ந்த அளவுகோல் / கொள்கை சுயத்தைப் பலிச் செலுத்தி, எல்லாம் இழந்து, தேவ சித்தம் செய்வதாகும்.