R5740 (page 234)
“கைப்பிரதிகளின் மேல் விலாசத்தை ஒட்டுவதையும் அல்லது கர்த்தருடைய ஊழியங்களில் இக்காலக்கட்டத்தில் அனுமதிக்கப்படும் எந்த ஒரு வேலையையும் சிலாக்கியமாக நாம் கருத வேண்டும். “”நான் போதகம் பண்ணுவதற்குத்தான் போவேன்” என்று யாராவது சொல்வாரானால், கர்த்தர் வழியைத் திறந்து, சந்தர்ப்பத்தைக் கொடுப்பாரானால் செய்யுங்கள். ஒரே நாளில் போதிக்க அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தால் ஒருவருக்கோ அல்லது பத்துப் பேருக்கோ அல்லது ஆயிரம் பேருக்கோ போதிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்குப் போதிக்க எந்தச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்றால், கைப்பிரதிகளின் மேல் விலாசம் ஒட்டுகிற வேலையைச் செய்யலாம். இப்படியாகத் தபால்காரர்தான் படிக்கக்கூடிய வீட்டிற்கு அதை எடுத்துச்செல்கிறார் என்றாலும், படிக்கக்கூடிய விஷயங்களை, மற்றவர்கள் கையில் கிடைக்கும்படிச் செய்வதில் நீங்கள் ஒரு கருவியாக இருக்கலாம். அல்லது நமது வேலை சமயற்கூடத்தில் அல்லது வீட்டின் வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும், அதைக் கர்த்தருக்கென்று நினைத்துச் செய்வோமானால் அது அவருக்கான ஊழியமாகிடும். அவர் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யும் சந்தர்ப்பத்தை நமக்கு அன்பாகத் தருகிறார்.
ஆகையால் நாம் என்ன செய்தாலும், அதை நாம் கர்த்தருக்கென்று செய்கிறோம்; அவருக்காக, அவர் விரும்புவதுபோல நாம் செய்கிறோம். நாம் சந்தோஷத்தை உணரும்படியாகக் காரியங்களை நோக்கக்கூடிய ஒரு வழி இருக்கிறது. நாம் அவ்வப்போதாவது நம்மைக் கேட்க வேண்டிய நல்ல கேள்வி என்னவெனில்: நான் எதைத் தேடுகிறேன்? இதைச் செய்வதில் என் நோக்கம் என்ன? யாருக்காக நான் செய்கிறேன்? என்பதேயாகும். [R5740 : page 235] நாம் கர்த்தருக்காக வேலை செய்து அவரைச் சந்தோஷப்படுத்த முயற்சிப்பதாலும், சிறிய காரியங்களில் ஊழியம் செய்வதில் நன்றி கூறுவதின் ஆவியை வளர்ப்பதினாலும், பெரிய காரியங்களுக்கு நாம் பாத்திரவான்கள் என்பதை நிரூபிப்போம். வீட்டில் நமது சிக்கனத்திலும், நம்மைச் சுற்றிலும் இருக்கிற மற்றவர்களைக் கவனிப்பதிலும் கர்த்தருக்கு உண்மையான ஊழியத்தைச் செய்வதிலுமுள்ள நமது விருப்பத்தை வெளிப்படுத்துகிறோம். அதிகமாய்ச் சண்டைச்சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள் அல்லது வீட்டில் சண்டைச்சச்சரவுகளை உண்டுபண்ணுபவர்கள் தாங்கள் முழுமையாகத் தகுதியுள்ளவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார்கள். வீட்டைச் சுற்றி மற்றவர்களைத் தொந்தரவு செய்யும்விதத்தில் விசிலடிக்கிறவர்களும் அல்லது அதிகாலையில் எழுந்திருந்து, அதிக சத்தம் போட்டு மற்றவர்கள் ஓய்வெடுக்க முடியாதபடி செய்பவர்களும் அல்லது இரவு நேரத்தில் மிகவும் காலதாமதமாக வந்து சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு தனது அறைக்குப் போகிறவர்களும், பொன்னான பிரமாணத்தைக் கடைப்பிடிக்கவும், மற்றவர்களது உரிமைகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை மெய்ப்பிக்கிறார்கள். கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக நமது நடத்தைகள் அனைத்திலும் முதலாவதாக — நீதியின் கொள்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களது உரிமைகள் என்னென்ன என்பதையும், அந்த உரிமைகளில் நாம் அத்துமீறுகிறோமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்வதாக நாம் கண்டால், நாம் நீதியின் பிரமாணத்தை மீறுகிறோம் என்பதை அறியலாம். வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பச் சூழ்நிலையிலும் நீதி முதலாவது வரவேண்டும்; அதன்பிறகு முடிந்தமட்டும் இரக்கமும், தயையும் உள்ளவராக நாம் இருக்கலாம்.