OV369 – BUSINESS IDEALS

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

OV369, 370

BUSINESS IDEALS

“கிறிஸ்தவ தொழிலதிபர் (business man) என்பவன், சிலவிதங்களில் அவனது அயலானால் கவனித்துப் பின்பற்றப்படுகின்றான். ஆனால் இது விஷயத்தில் அவன் பொறுப்பே மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஒரு தொழிலதிபருக்கான கொள்கை, பொன்னான பிரமாணமாகும். “”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12) என்பது அவன் வாங்குகிற காரியத்திற்கும், அவன் விற்கிற காரியத்திற்கும், அவனது தொழிலாளர்கள் மற்றும் அவனது வாடிக்கையாளர்களுடனான அவனது நடவடிக்கைக் காரியத்திற்கும் பொருந்தும். இது அவன் விளம்பரம் இடும் காரியங்களையும், தன் தொழிலாளர்கள் முன் அவன் வைக்கும் கொள்கை காரியங்களையும் உள்ளடக்கும்.

பொன்னான பிரமாணமானது பொது ஜனங்களால் அதிகமதிகமாய் உணரப்பட்டு வருகின்றது என்றும், அதைக் கைக்கொள்பவர்கள் அதிகமதிகமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம். இது வேறு பிரமாணத்தைக் கைக்கொள்ளும் அவர்களது அயலார்களைக்காட்டிலும், அவர்களை ஐசுவரியவான்களாக்கிடும் என்று நாங்கள் சொல்லவில்லை. “”உங்கள் அயலான் உங்களுக்கு என்ன செய்வான் என்று நீங்கள் நம்புகின்றீர்களோ, அதையே நீங்கள் உங்கள் அயலானுக்குச் செய்யுங்கள்; ஆனால் அவன் செய்வதற்கு முன்னதாக நீங்கள் செய்யுங்கள்” என்பதே மற்றவர்களுடைய பிரமாணத்தின் வார்த்தைகளாய் இருக்கின்றது. ஆனால் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்வதினால் ஐசுவரியம் வருகின்றதோ, இல்லையோ தனது இருதயத்தைக் கர்த்தருக்குக் கொடுத்துவிட்டு, தேவனுடைய புத்திரனாகியுள்ள தொழிலதிபர், பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும். அவன் இதற்கும் அதிகமாய் அன்பின் அடிப்படையில் செய்யச் சிலாக்கியம் பெற்றிருப்பினும், இதற்குக் குறைவாய் அவன் செய்யக்கூடாது.

இக்கொள்கையானது அவனது தொழில்முறைமையை மாத்திரமல்லாமல், அவன் விற்கும் பொருட்களின் அம்சத்தினையும்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்தவ தொழிலதிபரின் கடையில் குப்பையான மற்றும் பாதகமான பொருட்கள் காணப்படக்கூடாது.

பொன்னான பிரமாணத்திற்குக் குறைவான எதையும், எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் செய்யக்கூடாது என்று உண்மை கிறிஸ்தவன் நினைவில்கொள்ள வேண்டும். தனது பிள்ளைகள், தனது கோழிகள், தனது நாய்கள் முதலானவைகள், தனது அயலானுக்குரிய உரிமைகளில் தலையிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். தான் ஒருவேளை கஷ்டத்திலிருந்தால், அப்போது தன் அயலான் தனக்குச் செய்வதை, தானும் கஷ்டத்திலிருக்கும் அயலானுக்குச் செய்திட வேண்டும் என்று அதே பொன்னான பிரமாணம் எதிர்ப்பார்க்கின்றதாய் இருக்கின்றது. “”நன்மை செய்யுங்கள், கடன்கொடுங்கள் மற்றும் பிரதிபலன் எதிர்ப்பார்க்காதிருங்கள்”” என்பது கிறிஸ்தவனில் மாதிரியாக்கப்பட வேண்டும்; அதுவும் தன் நாணயத்தைக் கெடுக்கிறதும், தன் சொந்தக் குடும்பத்திற்கான கடமைகளில் கடுமையாய்க் குறுக்கிடுகிறதுமான விதத்தில், தான் கடன்கொடுக்கக்கூடாது எனும் புரிந்துகொள்ளுதலுடன் செய்யப்பட வேண்டும். இன்னுமாகத் தேவையான சந்தர்ப்பங்களின்போதே கடன்கொடுக்கப்பட வேண்டும். அயலான் பிரதிபலன் செய்வான் என்பதற்காக ஒருவன் அயலானாய்ச் செயல்படாமல், மாறாக தேவனுடைய வார்த்தையிலிருந்து அயலானாய்ச் செயல்படுவதற்குரிய உயரிய கொள்கைகளைப் பெற்றிருப்பதினாலும், தெய்வீக எதிர்ப்பார்ப்பிற்கு இசைவாக ஜீவிப்பதற்கும், யாவருக்கும் நன்மை செய்யவும், விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு நன்மை செய்ய நாடுவதற்கும் விரும்புவதினாலும் ஒருவன் அயலானாய்ச் செயல்பட வேண்டும். நம் நாட்களில் பொதுவாய்க் காணப்படும் சமுக காரியங்களின் விஷயங்கள் சிலவற்றிற்குச் செலவழிப்பதற்கென்று கிறிஸ்தவனுக்கு நேரம் கிடையாது. அவன் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமானவருக்குப் பிரதிநிதியும், ஸ்தானாபதியும் ஆவான். “