2HG 590
“என் அயலகத்தார்கள், நண்பர்கள் மற்றும் சபையிலுள்ள சகோதரர்கள் விஷயத்தில் என் நாவினையும், என் மூளையினையும் பயன்படுத்தும் காரணத்தினால், என் நாவு மற்றும் மூளையின் விஷயத்தில் நான் பொன்னான பிரமாணத்தினைப் பிரயோகிக்கின்றேனா? நான் மற்றவர்களைக் குறித்துக் கிருபையாக அல்லது அற்பமாகச் சிந்திக்கின்றேனா? அவர்கள் விஷயத்தில் அவர்கள் நேர்மையற்றவர்கள், கீழ்த்தரமானவர்கள் அல்லது தூய்மையற்றவர்கள் என்று நான் எப்போதும் கற்பனை பண்ணிக்கொள்கின்றேனா? அவர்களும் என்னைக் குறித்து இப்படியாகக் கற்பனை பண்ணுவதை நான் விரும்புவேனா? இப்படியாக கற்பனைபண்ணும் தன்மையினைக் கொண்டிருக்கும் ஒருவன், அவன் வேதவாக்கியங்களின்படி “”தன் இருதயத்தில் அக்கிரமத்தை” குடிக்கொள்ளச் செய்திருக்கின்றான் என்று தெரிந்திருக்கக்கடவன். இத்தகைய எண்ணங்களானவை சீரிய மனங்களுக்குப் பாத்திரமற்றவைகளென எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் இவ்வெண்ணங்களுக்குப் பதிலாக மற்றவர்கள் விஷயத்தில் இரக்கமான, தயவான, பெருந்தன்மையான உணர்வுகளை வளர்த்திட வேண்டும். நாவின் காரியம் எப்படியாக இருக்கின்றது? “”ஒருவனையும் தூஷியாமலும்” எனும் வேதவாக்கிய விதியினை எப்போதும் கைக்கொள்ளுகிறோமா? அல்லது மற்றவர்கள் குறித்து நாம் அறிந்திருப்பவைகளை அல்லது மற்றவர்களின் மதிப்பைக் குறைத்துவிடும் விதத்தில் நாம் கேள்விப்பட்டவைகளை மற்றவர்களிடத்தில் புறங்கூறி திரிவதில் இன்பம் காணும் அற்பமான தன்மையினை உடையவர்களாக நம்மையே காண்கின்றோமா? இப்படியாக அல்லது பொன்னான பிரமாணத்திற்கு எதிராக இப்படி நமக்கு மற்றவர்கள் செய்ய நாம் விரும்புவோமா?
பேசும் காரியம் உண்மையாக இருப்பினும் அல்லது இல்லாவிட்டாலும், இரக்கமற்ற அல்லது தயவற்ற காரியங்கள் ஏதோ ஒன்றை நாம் பேசிடும் விஷயத்தில், அப்படிப் பேசுவதை நியாயப்படுத்த முற்படுபவர்களாக நம்மையே நாம் காண்கின்றோமா? இப்படிச் செய்துவருகிறோமானால், இது பொன்னான பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரானதென நாம் அடையாளம் கண்டுகொள்கின்றோமா? மேலும் பொன்னான பிரமாணத்திற்கு முரணானவைகளைச் செய்திருக்கிறோம் என்று நாம் அடையாளம் கண்டிருக்கும் விஷயங்களை நியாயப்படுத்திடுவதற்கான நம்முடைய பிரயாசம் என்பது, நம்மைநாம் வஞ்சித்துக்கொள்ள முற்படுவதாக மாத்திரமே இருக்கின்றது என்றும், நமது கர்த்தரை ஏமாற்றிட முடியாது என்றும் நாம் காண்கின்றோமா? “”மோசம் போகாதிருங்கள், தேவன் நம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.”” நீதியானவைகளைச் செய்கிறவன் நீதிமானாயிருக்கிறான். பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளுகிறவன் நீதிமானாவான். பாசாங்குப் பண்ணி பொன்னான பிரமாணத்தினை மீறுகிறவன், புறம்பே அவன் தன்னை நீதிமானாக என்னதான் அறிக்கைப் பண்ணியிருந்தாலும், அவன் இருதயத்தில் அநீதி இருப்பதை வெளிப்படுத்துகிறவனாய் இருப்பான்.
இது விஷயத்தில் “”இருதயத்தின் நிறைவினாலே வாய்பேசும்” எனும் வேதவாக்கியத்தினை நாம் மறந்துவிட வேண்டாம். ஆகையால் ஒருவேளை புறங்கூறுகிறவர்களாக அல்லது ஏதேனும் விதத்தில் பாதகம் பண்ணுகிறவர்களாக அல்லது ஒருவருக்குப் பாதகம் பண்ணும் அல்லது அவரைக் குறித்துப் புறங்கூறும் காரியத்தில் நியாயப்படுத்த முற்படுபவர்களாக நம்மை நாம் காண்போமானால், இது இன்னலுக்கான அறிகுறியாக இருந்து, மனதின் சீர்க்கேட்டினை, அநீதியினை, அநியாயத்தினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். மேற்கூறப்பட்டுள்ள விஷயங்கள் எவற்றிலாவது, நமது எண்ணங்கள் அல்லது வார்த்தைகள் அல்லது கிரியைகள் விஷயத்தில் அநீதி நம்மிடத்தில் காணப்படுமானால், இது ஆண்டவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படிக்கு வந்துள்ள, நாம் மனவேதனை அடைவதற்கு ஏதுவானவையாகும். இது அபாய மணியாகும்! இந்நிலைமையானது சரி செய்யப்படவில்லை எனில், இது இன்னும் மோசமான நிலைமைக்கு, இன்னும் அவபக்திக்கு நேராய் நம்மை வழிநடத்தி, சுபாவத்தின்படியோ அல்லது கிருபையின்படியோ நாம் பெற்றிருக்கும் எதுவும் மாசுப்பட்டு, மாறுபாடானதாகி சீரழிந்துபோய், மதிப்பற்றதாகிவிடும் மற்றும் “”அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்தவும்” மற்றும் கிறிஸ்துவோடுகூட அவரது இராஜ்யத்தில் உடன்சுதந்தரராகும் நிலைக்கு வருகிறதற்கும் தவறிப்போகிறவர்களில் ஒருவராக நிச்சயமாய் நாம் ஆகிவிடுவோம்.
முன் குறிக்கப்பட்டவர்களாகிய தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாவரும் தேவனுடைய நேசகுமாரனுடைய குணலட்சணத்தின் சாயலில் ஒத்திருக்க வேண்டும் அல்லவா? நமது ஆண்டவர் யாவரிடத்திலும் நீதியோடு காணப்பட்டது மாத்திரமல்லாமல், அன்பானவராகவும், சுயத்தைப் பலிசெலுத்தினவராகவும் காணப்பட்டார் அல்லவா? ஆகையால் “”பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாபோன்று இருங்கள்”” எனும் பொன்னான பிரமாணத்தினுடைய வார்த்தைகளை நாம் மறந்துவிட வேண்டாம். ஒருவேளை இந்தப் பிரம்மாண்டமான நியமத்திற்கு இசைவாய் முழுவதுமாய் நம்மால் வாழமுடியாவிட்டாலும், அதை நம் இருதயங்களிலாகிலும் அங்கீகரித்து, முடிந்தமட்டும் சிந்தனையிலும், வார்த்தைகளிலும், கிரியைகளிலும் அதற்கு இசைவாய் நெருக்கமாகக் காணப்படுவோமாக!
2HG765
நம்முடைய சக மனிதர்களை நாம் கையாளும் விஷயம் அனைத்திலும், நீதி அவசியமென்பது பகுத்தறிவுள்ள மனங்கள் யாவருக்கும் ஏற்புடையதாயிருக்கும். அது தேவனுடைய நியாயப்பிரமாணம் முழுவதையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. அந்த நியாயப்பிரமாணத்தின் சுருக்கமாய்க் காணப்பட்டு, நமது கர்த்தரின் அங்கீகரிப்பைப் பெற்ற அந்த வார்த்தைகள், “”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”” (லூக்கா 10:27) என்பதேயாகும். இந்த இரண்டு கோரிக்கைகளிலும் நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசிகளும் முழுமையாய் உள்ளடங்குகிறது. முதலாவதாக நமது சிருஷ்டிகரை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; நமக்கு ஜீவனையும், அதன் ஆசீர்வாதங்கள் யாவையும் கொடுத்தவரை நாம் மகிமைப்படுத்திட வேண்டும்; நமக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியினை உண்டுபண்ணும் அவரது நீதியான கோரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம் உரிமைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென நாம் விரும்புவது போன்று, நாம் மற்றவர்களுடைய உரிமைகளையும் அடையாளம் கண்டுகொள்வது சரியே. பொன்னான பிரமாணம் என்பது வெறும் நீதியே ஆகும். “”நியாயஞ்செய்யுங்கள்” எனும் நமது ஆதார வசனத்தில் இடம்பெறும் வார்த்தை முன்வைக்கும் காரியங்களுக்குக் குறைவானதைச் செய்யும்படிக்கு நாம் கொஞ்சம்கூட அனுமதிக்கப்படுகிறதில்லை. வாருங்கள் சேர்ந்து காரியங்களை நிதானித்துப்பார்க்கலாம். நம்மில் எத்தனை பேர்கள் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும், நமது தேவன் மற்றும் நமது அயலார்கள் விஷயத்தில் – நீதி செய்திருக்கின்றோம்?
குடும்பத்திலிருந்து துவங்கலாம். ஒவ்வொருவனும் தன் பெற்றோர்களிடத்தில், தன் குழந்தைகளிடத்தில், தன் சகோதரரிடத்தில், தன் சகோதரிகளிடத்தில், தன் கணவனிடத்தில், தன் மனைவியினிடத்தில் தன்னால் பேசப்பட்ட வார்த்தைகளையும், தன்னால் செய்யப்பட்ட கிரியைகளையும் ஆராய்ந்துபார்ப்பானாக. ஜீவியத்தில் நமது உறவுகள் அனைவரின் விஷயத்திலும், இப்படி நமக்கு மிக நெருக்கமானவர்களாகவும், மிக அருமையானவர்களாகவும் காணப்படுபவர்களை நாம் நீதியினுடைய கொள்கைகளுக்கு ஏற்ப, பொன்னான பிரமாணத்திற்கு ஏற்ப நடத்துகின்றோமா? அவர்கள் நமக்குச் செய்ய வேண்டுமென்று நாம் விரும்புபவைகளை, நாம் அவர்களுக்கும் செய்கின்றோமா? ஒருவேளை இல்லையெனில், கர்த்தரோடு உறவுகொள்ள துவங்கின பிற்பாடு, அவருக்குக் கனத்தைக் கொடுக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் நாடினபிற்பாடு, குடும்பத்திலும், ஜீவிதத்திலும் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும், ஒவ்வொரு கிரியைகளையும் நாம் கூர்ந்து கவனிப்போமாக மற்றும் எந்தளவுக்கு அவைகள் சரிசெய்யப்படலாம் மற்றும் நீதியாய்க் காணப்படத்தக்கதாகக் கொண்டுவரப்படலாம் என்று பார்ப்போமாக. பெரும்பான்மையான ஜனங்கள் மாம்ச உறவுகளில் மிகவும் நெருக்கமானவர்களிடத்திலும், அருமையானவர்களிடத்திலும் தாங்கள் எவ்வளவு அநீதியாய் நடந்திருக்கின்றனர் என்று கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியடைவார்கள் என்பதில் உறுதியே.
இதோடுகூட உங்கள் அயலார்களின் விஷயங்களில், உங்கள் கூட்டாளிகளின் விஷயங்களில் அன்றாட ஜீவியத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் நீதியாய் அல்லது அநீதியாய் இருந்துள்ளதாவெனக் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் உங்கள் ஸ்தானத்திலும், நீங்கள் அவர்கள் ஸ்தானத்திலும் இருந்திருந்தால், அவர்கள் பேசியிருப்பது சரி என்று ஒருவேளை உங்களால் அங்கீகரிக்கப்படக்கூடிய அதே வார்த்தைகளை, அதே தொனியில் மற்றும் பாவனையில், நீங்கள் அவர்களிடம் பேசுகின்றீர்களா? தொழில் விஷயத்தில் மற்றவர்கள் உங்களிடம் செய்திட்ட எந்தளவுக்கான பேரம் நீதியானது என்று உங்களால் கருதப்படுமோ, அந்தப் பேரத்தைத்தான் நீங்கள் அவர்களிடம் பண்ணுகின்றீர்களா? இல்லையேல் ஒருவேளை நீங்கள் பொருள் வாங்குபவராகவும், அவர்கள் பொருள் விற்பவராகவும் இருந்தால், பொருட்கள் மற்றும் வேலைகளுக்குமான நீதியான கூலியென்று அவர்கள் கேட்க வேண்டுமென உங்களால் கருதப்படும் கூலியினைத்தான் நீங்கள் அவர்களிடத்தில் கேட்கின்றீர்களா அல்லது அதிகமான விலையினைச் சொல்கின்றீர்களா? ஒருவேளை உங்களுக்குத் தோட்டம் ஒன்றிந்தால், அதில் அயலானின் கோழி வந்து நாசம் செய்யாதபடிக்கு அவன் கவனமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புவதுபோன்று, நீங்களும் உங்கள் கோழிகள் உங்கள் அயலானின் தோட்டத்தில் நாசம் செய்யாதபடிக்குக் கவனமாய்க் கவனித்துக்கொள்கின்றீர்களா? உங்கள் அயலான் உங்கள் முகத்தின் முன் புகையினை ஊதக்கூடாது என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் அயலானின் முகத்தில் புகை ஊதவே கூடாது என்றிருக்கின்றீர்களா? உங்கள் இல்லத்தில் அயலான் பிரவேசிக்கையில், அவன் காலைத் துடைத்துக்கொண்டு வரவேண்டும் என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் அயலானின் இல்லத்தில் பிரவேசிக்கையில் காலைத் துடைத்துக் கொண்டு செல்கின்றீர்களா? சகல மனுஷர்களையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் மற்றும் விலங்குகளையும் அன்பாயும், கனிவாயும் நடத்துகின்றீர்களா? அதாவது அவர்கள் உங்கள் ஸ்தானத்திலும், நீங்கள் அவர்கள் ஸ்தானத்திலும் இருந்தால், அவர்கள் எப்படி உங்களை நடத்துவது நீதியாய், நியாயமாய் இருக்குமென நீங்கள் கருதிடும் தகுதியான விதங்களில், அவர்களை நீங்களும் நடத்துகின்றீர்களா? உங்கள் அயலான் உங்களைக் குறித்து இரக்கமாய்ப் பேசவேண்டும் என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் உங்கள் அயலானைக்குறித்து இரக்கமாய்ப் பேசுகின்றீர்களா? அல்லது உங்கள் குறைகளைக் குறித்து அயலான் ஏளனமாய்ப் பேசக்கூடாது என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் உங்கள் அயலானின் குறைவுகளைக் குறித்து ஏளனமாய்ப் பேசாமல் இருக்கின்றீர்களா? ஒருவேளை நீங்கள் உங்களது அயலானின் ஸ்தானத்திலும், அயலான் உங்கள் ஸ்தானத்திலும் காணப்பட்டிருந்தால், உங்களைக் குறித்து அயலான் எக்காரியங்களைப் பேசுவது தகுதியானது என்று நீங்கள் கருதுவீர்களோ, அக்காரியங்களையே உங்கள் அயலானின் விஷயத்திலும் நீங்கள் பேசத்தக்கதாக உங்கள் நாவுகளின் மீது கவனமாய் இருக்கின்றீர்களா?
3HG661,662
நாம் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திற்குள் வந்து, அவரால் கற்பிக்கப்பட வேண்டும் மற்றும் கீழ்ப்படிதலின் வாயிலாக அதிகமதிகமாய்த் தேவனுடைய அருமையான குமாரனின் சாயலை அடைய வேண்டும். உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்வீர்களாக. உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள். தேவனை அல்லது மனுஷனை ஏமாற்றப்பார்க்காதீர்கள். உண்மையானவைகளையே பேசுங்கள். நாம் எப்படி நடந்துகொள்வது? பொன்னான பிரமாணத்தின்படியாகும். மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்புபவைகளை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அநேகர் தங்களை இந்த விலையேறப்பெற்ற கற்களினால்/காரியங்களின் மீதாகக் கட்டியெழுப்பிக்கொள்ளவில்லை. பொன்னான பிரமாணத்திற்குப் பதிலாக உங்கள் கட்டிடத்தில் மரத்துண்டுகள் இருக்குமானால், அவை வெந்துபோகும். நம்முடைய குடும்பங்களை, நமது அயலார்களை, இறைச்சி வெட்டுபவர்களை, ரொட்டி சுடுபவர்களை, அனைவரையும் கையாளும் விஷயத்தில் இந்தப் பொன்னான பிரமாணத்தினை நாம் பயன்படுத்திட வேண்டும். இப்பிரமாணத்தினை அனைத்து விஷயங்களிலும் பயன்படுத்திடுங்கள். ஜீவியத்தில் உங்கள் நடக்கையினை இப்பிரமாணம் கொண்டு அளந்து பாருங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களோ, அதற்கு மாறானதை அல்ல, மாறாக அதையே நீங்கள் எனக்குச் செய்யும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனக்கல்ல, உங்களுக்கே பொறுப்பாளிகளாக இருக்கின்றீர்கள். இங்கே பொன்னான பிரமாணம் கடந்துவருகின்றதாய் இருக்கின்றது. அது திவ்விய பிரமாணத்தினை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இதற்குக் குறைவான எதுவும் தேவனைத் திருப்திப்படுத்துகிறதாய் இருப்பதில்லை. நீங்கள் பொன்னான பிரமாணத்தின்படி ஜீவியாமல் இருந்தால், நீங்கள் கர்த்தரால் அங்கீகரிக்கப்படுபவர்களாகவும், அவரைப் பிரியப்படுத்துகிறவர்களாகவும் காணப்படுவதாகச் சொல்லிக்கொள்ள வேண்டாம். அது ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட வேண்டும். பரிசுத்தவானாகிய யோவான் ஆலயத்தைப் பொற்கோலினால் அளக்கும்படிக்குச் சொல்லப்படுகின்றார். ஆகையால் சபை, இந்தப் பொன்னான பிரமாணத்தினால், பொற்கோலால் அளந்துபார்க்கப்படுகின்றனர். நீங்கள் உங்களையே அளந்துபார்த்துக்கொள்ளுங்கள். இப்படியாகத் தேவன் நமக்குக் கொடுத்துள்ளதான பொன்னான நியமத்திற்கு நெருங்கி, நெருங்கி வருகின்றோம்.
பொன்னான பிரமாணத்திற்கு அப்பால் ஏதேனும் உள்ளதா? ஆம்! அதற்கும் அதிகமாக உங்களால் செய்யமுடியும். ஆனால் அதற்கும் குறைவாய் உங்களால் செய்யக்கூடாது; அது தகுதியாயிராது. எல்லாவிடங்களிலும், எல்லா நேரங்களிலும் பொன்னான பிரமாணத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகமாய் ஒருவரால் என்ன செய்ய முடியும்? மற்றவர்களுடைய நலன்களுக்கு உங்கள் சொந்த உரிமைகளை நீங்கள் விட்டுக்கொடுக்கலாம், உங்கள் சொந்த உரிமைகளை நீங்கள் துறந்துவிடலாம். அதுவே அன்பாகும்; அதுவே பலியாகும். பொன்னான பிரமாணம் முதலாவதாக வருகின்றது; பின்னர்ப்பலி வருகின்றது. பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அநீதி செய்த சம்பவங்கள் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. பொன்னான பிரமாணத்தின் அடிப்படையில் தங்கள் மனைவிகளை நடத்தாமல், ஆனாலும் தங்களைக் கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று கூறிக்கொள்கின்ற கணவன்மார்களின் சம்பவங்கள் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்வது என்பது, நாம் செய்ய வேண்டிய மிக அடிப்படையான காரியமாகும். ஆனால் நீங்கள் சொல்லலாம்: “”இது ஒருபோதும் என் கணவன் விஷயத்தில் செல்லுபடியாகாது; அல்லது இது ஒருபோதும் என் மனைவி விஷயத்தில் செல்லுபடியாகாது.”” அதைத் தேவனிடத்தில் விட்டுவிடுங்கள். தேவன் வழியைச் சுட்டிக்காண்பித்துள்ளார் மற்றும் நாம் நம் சொந்த புரிந்துகொள்ளுதலின்மீது சாராமல், தேவனுடைய சித்தத்தை, தேவனுடைய நியமமாகிய பொன்னான பிரமாணத்தினை நடப்பிக்க வேண்டும். இது என்னுடைய எல்லா நடக்கைகளையும், அனைவருடனான என்னுடைய அனைத்துக் காரியங்களையும் நிர்வகித்திட வேண்டும் மற்றும் அப்போது தேவன் என்னிடத்தில் பிரியம் கொள்வார். இப்படியாக நீங்கள் கிருபையில் வளருவீர்கள்; நீங்கள் அறிவில் வளருவீர்கள். பின்னர் நீங்கள் கேட்கலாம்: “”நான் செய்வதற்கு இன்னும் ஏதேனும் உள்ளதா?”” ஆம்! நீங்கள் பலிசெலுத்திடலாம் என்று பதிலளிக்கிறேன்!
3HG674, 675
தேவன் தம்முடைய ஜனங்கள், உபதேசத்திலுள்ள தப்பறைகளினின்று விலகிக் காணப்படும்படிக்கு விரும்புகின்றார், ஆனாலும் அவர்கள் பாவம், அநீதி, அநியாயம் ஆகியவற்றுடன் இணக்கம் ஏதுமில்லாமல் இருக்கும்படி விசேஷமாய் விரும்புகின்றார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் நீங்களும், நானும் பொன்னான பிரமாணத்திற்கு மிகவும் நேர்மையாய்க் காணப்படத் தேவன் விரும்புகின்றார். இதுவே முதலாம் காரியமாகும் மற்றும் இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வதற்கு, வருடக்கணக்கான அனுபவங்கள் தேவைப்படும். உயர்வாய் மதிக்கப்படுகின்ற சிலரை நான் அறிவேன், ஆனால் இவர்கள் இவ்விஷயத்தில் குறைவுப்பட்டவர்களாய் இருக்கின்றனர். அநேகர் நீதியினைத் தங்கள் ஜீவியத்தில் நடைமுறைப்படுத்துகிறதில்லை.
இவர்கள் தங்கள் குடும்பங்களைக் கையாளும் விஷயத்தில் அநீதியாய் நடந்துகொள்ளுகின்றனர்; கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை அநீதியாய் நடத்துகின்றார்கள் மற்றும் மனைவிகளும் இப்படிச் செய்கின்றார்கள்; பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அநீதியாய் நடத்துகின்றனர் மற்றும் சிலர் விஷயங்களில் பிள்ளைகள் பெற்றோர்களை அநீதியாய் நடத்துகின்றனர்; நீதியை விட அநீதியே இவர்களது பிரமாணமாய்க் காணப்படுகின்றது. நாம் இயேசுவின் பின்னடியார்களாகி, நீதியானது எங்ஙனம் நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கண்டதுமுதற்கொண்டு, அதுமுதற்கொண்டு நாம் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கின்றார் என்பதை அறியத் துவங்குகின்றோம். அதை முதலாவதாக நம் சொந்த குடும்பங்களில், நம் பெற்றோர்களிடத்தில், நம் பிள்ளைகளிடத்தில், நமக்கு ஜீவித துணையானவர்களிடத்தில் நாம் துவங்க வேண்டும். இது நம் ஜீவியத்தின் சிறு காரியங்களிலும்கூட அதன் தாக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கொண்டிருக்கும். அவை அனைத்தையும் விவரிக்க இங்கு நேரம் போதாது. அது வீட்டில் நாம் நடக்கும் விதத்தையும், கதவருகே நம் செருப்புகளை நாம் சுத்தம் செய்யும் விதத்தையும், சொல்லப்போனால் நாம் செய்கிற அல்லது சொல்லுகிற அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும். அது அனைத்து விஷயத்திற்கும், அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். அதை நம் இருதயங்களிலும், ஜீவியங்களிலும் முற்றும் முழுமையாய் நடப்பிப்போமானால், அது நம் ஜீவியங்களில் மாத்திரமல்லாமல், மற்ற அநேகருக்கும்கூட மாபெரும் ஆசீர்வாதங்களாய் விளங்கும். சில சகோதரர்களையும், சகோதரிகளையும் அவர்களது புறம்பான நடக்கையினையும், அவர்களது கடிதங்களையும் வைத்துப் பார்க்கையில், (நான் நியாயந்தீர்க்க முற்படவில்லை) இவர்கள் இது விஷயத்தில் அதிகம் முன்னேறவில்லை என்பதாகத் தோன்றுகின்றது.
பொன்னான பிரமாணத்திற்கும் அதிகமாய் நாம் செய்திடலாம், ஆனால் ஒருபோதும் அதற்குக் குறைவாக அல்ல. அன்புதான் நம்மை அதிகம் செய்யத் தூண்டுகின்றதாய் இருக்கின்றது; அதாவது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விஷயம் போன்றதாகும். அவர் எல்லாத் தருணங்களிலும் பொன்னான பிரமாணத்தினை மீறாமல், அதைக் கைக்கொண்டார். அவர் ஒருபோதும் அதற்குக் குறைவாகச் செய்யவில்லை, மாறாக அதிகமாகவே செய்தார். அவர் தம்முடைய ஜீவனை மற்றவர்களுக்காய்க் கொடுத்திட்டார் மற்றும் இப்படித்தான் நாமனைவரும் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கே நாம் ஈடுபட்டிருக்கின்றோம். இதுவே நம் உடன்படிக்கையாகும். பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளுங்கள்; பின்னர் இதற்கு அதிகமானவைகளைச் செய்யுங்கள். நாம் நம் சகோதரர்களுக்காக நம் ஜீவியங்களைக் கொடுத்துவிட வேண்டும். இதுவே வேதாகமத்தின் கருத்தாகும்.
3HG 729
தேவனுடன் உறவிற்குள்ளாக வரும் யாரும், அன்பினால் ஒரு ஜெநிப்பித்தலை அடைகின்றனர்; ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கின்றார். அன்பு பிறருக்குத் தீமை செய்யாது. ஆகையால் “”அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். தேவனுடைய நியாயப்பிரமாணம், நீதியின் பிரமாணமாய் இருக்கின்றது மற்றும் வேதவாக்கியங்கள் முன்வைப்பது போன்று கர்த்தருடைய ஆவியை, அன்பின் ஆவியினைப் பெற்றுக்கொள்பவர்கள் யாரும், மற்றவர்களுக்கு நீதியையாகிலும் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். நீதிக்கும் அதிகமாய் எந்த நியாயப்பிரமாணமும் எதிர்ப்பார்ப்பதில்லை. நீதிக்கும் அதிகமாய் நாம் செய்கிற எதுவும், நம் சார்பிலான பலியாய் இருக்கும். ஆனால் நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் நம்மால் செய்துவிட முடியாது; ஏனெனில் நம்முடைய மாம்சத்தில் பூரணம் காணப்படுகிறதில்லை. தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு முழு இசைவுடனும் நம்மால் ஜீவித்திட முடியாது. ஆனாலும் நீதிக்கும் குறைவாய் எதுவும் செய்யக்கூடாது என்று நம் சித்தம் காணப்படத்தக்கதாக நம்மால் பார்த்துக்கொள்ளக்கூடும்; மேலும் ஏதேனும் விஷயத்தில் நாம் நீதிக்குக் குறைவாய்ச் செய்திருப்போமானால், ஏதேனும் விஷயத்தில் பொன்னான பிரமாணத்தினை மீறியிருப்போமானால், அது நம் மனவிருப்பத்திற்கு மாறாக நடந்த ஒரு காரியமாகவே இருக்க வேண்டும். பின்னர் மற்றவர்களுடைய உரிமைகளைக் குறுக்கிட்டதான அந்தத் தவறான கிரியையை, வார்த்தையை அல்லது பார்வையைச் சரிப்பண்ணிடுவது வரையிலும் நாம் ஓய்ந்திருக்கக்கூடாது.
யாரேனும், “”இது கடினமானதொரு பிரமாணம்”” என்பீர்களானால், என் அருமை சகோதரனே “”சரியான ஆவியினைத் தாங்கள் பெற்றிராதது வரையிலும், தாங்கள் இராஜ்யத்திற்கு ஒருபோதும் ஆயத்தமாக மாட்டீர்கள்”” என்றே நாங்கள் பதிலளிக்கின்றோம். தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாகிய நீதியின் இக்கொள்கையானது, அவரது குணலட்சணத்தின் ஆதாரமாய் இருக்கின்றது. மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புவோமோ, அதை நாம் மற்றவர்களுக்கும் செய்வதே நீதி செய்தலாகும். எல்லாக் கிரியைகளின் விஷயத்திலும் நம்மால் நீதி செய்ய முடியாவிட்டாலும், அதை நம் மனங்களிலாகிலும் நம்மால் செய்ய இயலும். எல்லா நேரங்களிலும் அப்போஸ்தலனினால் ஒவ்வொரு செய்கையிலும், வார்த்தையிலும் செய்ய முடியாவிட்டாலும், “”என் மனதினாலே, தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு ஊழியஞ்செய்கிறேன்”” என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார் (ரோமர் 7:25).
நாம் நீதியை மீறியிருப்பதை எப்போதெல்லாம் காண்கின்றோமோ, அப்போது மனந்திரும்புவதே தகுதியான பிரயாசமாயிருக்கும் மற்றும் யாருக்குத் தவறு செய்யப்பட்டிருக்கின்றதோ, அவரிடம் தவற்றினை ஒப்புக்கொள்வதே உண்மையான மனந்திரும்புதலாகும். இந்த நடைமுறையானது மிகவும் தாழ்மைக்குள்ளாக்கும்/ சிறுமைக்குள்ளாக்கும் என்பது உண்மையே. ஆனால் இத்தகைய அனுபவங்களானது நமக்கான சிறந்த அனுபவங்களாகும்; ஏனெனில் இவைகளினாலே நமக்குத் தாழ்மை வளர்கின்றது மற்றும் இதன் விளைவாய் நாம் சாந்தத்திலும், தயவிலும் வளர உதவப்படுகின்றோம். இப்படியாக திவ்விய ஏற்பாட்டில் தேவனுடைய ஜனங்கள், அவர்களுக்கு அதிகமதிகமாய்த் தெளிந்த புத்தியுள்ள மனதைக் கொடுக்கும் உதவிகரமான படிப்பினைகளைக் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முந்தைய காலங்களைக்காட்டிலும், இப்பொழுது நன்கு சிந்திக்க முடிபவர்களாயும், அவர்கள் தங்களைக் கட்டியெழுப்ப முடிகின்றவர்களாயும் இருக்கின்றனர். இப்படியாய் இந்த அல்லது அந்தக் குணலட்சணத்தின் தன்மைகளில், தங்கள் பூரணமற்ற மாம்ச தன்மைகளின் காரணமாய்க் குறைவுபட்டிருப்பதைக் காண்கையில், நீதியின் ஆவிக்கு இசைவாய்த் தங்கள் முழுப்பண்புகளையும் இசைவுப்படுத்திக் கொண்டுவருவதற்கு அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். அவர்களின் இருதயங்களில் நடந்துகொண்டிருக்கின்றதான இந்த வேலையானது, அவர்களை இராஜ்யத்திற்குத் தகுதியாக்குகின்றதாய் இருக்கின்றது. (2 பேதுரு 1:5-11)
மிகவும் விசேஷமான ஒரு வகுப்பார் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உடன்சுதந்தரராகக் காணப்படும்படிக்கு தேவன் அழைத்துக்கொண்டிருக்கின்றார். இவர்கள் தகுதியானவர்களெனக் கருதப்படுவதற்கென்று, இவர்கள் கர்த்தருக்கு மிகவும் நேர்மையாய்க் காணப்பட வேண்டும், மற்றவர்களுடைய உரிமைகளைப் புரிந்துகொள்ளும் விஷயத்தில் மிகவும் நீதியாய்க் காணப்பட வேண்டும். நம்முடைய சரீரங்கள் மிகவும் அபூரணமானவைகள் என்று பிதா காண்கின்றார்; ஆனால் நம் தலைகளும், நம் இருதயங்களும் சரியாய்க் காணப்படுமானால், உயிர்த்தெழுதலின்போது, நமக்கு உரிய சரீரத்தினை, ஒரு மகிமையான சரீரத்தினைக் கொடுப்பதாகப் பிதா வாக்களித்துள்ளார். திவ்விய குணலட்சணத்தினை, தேவனுடைய பரிசுத்த ஆவியினை அடையாளப்படுத்தும் நீதியின் அந்தக் கொள்கைகளுக்கு நம் தலைகளானது முழு இசைவாய்க் காணப்படும்போது, நம்மை அவர் பயன்படுத்த முடிகிற நிலைமையில் நாம் காணப்படுவோம்.
புதிய சரீரமானது குணலட்சணத்தினை உருவாக்கிடுவதில்லை, மாறாக குணலட்சணம் வெளிப்படுவதற்கான கருவியாக மாத்திரம் காணப்படும். இப்பொழுது நாம் குணலட்சணத்தினை, நமது கர்த்தரராகிய இயேசு கிறிஸ்துவின் நற்பண்புகளை வளர்த்திக்கொள்ளவில்லையெனில், நாம் மேசியாவின் இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இராஜ்யத்தில் இடத்தினைப் பெற்றுக்கொள்பவர்கள் அனைவரும், தங்கள் ஸ்தானத்திற்குத் தகுதியானவர்களாகக் காணப்படுவார்கள். இந்த வகுப்பாரைக் கண்டுபிடிப்பதற்குத் தேவன் நீண்டகாலம் எடுத்துள்ளார். அவர் எந்தத் தவறும் செய்கிறதில்லை. தெய்வீக அன்பினை வளர்த்துள்ள ஒவ்வொருவரும் உங்களையும், என்னையும் போன்று, நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையிலுள்ள அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர். இவைகள் இரண்டும் ஒன்றே; ஏனெனில் நீதிதான் நியாயம் மற்றும் நியாயந்தான் நீதியாயிருக்கின்றது.
ஆனால் நாம் நீதியை உடையவர்களாய் மாத்திரம் காணப்பட வேண்டும் என்பது தெய்வீகச் சித்தமல்ல; தேவனைப்போன்று காணப்படுவதற்கு நாமும்கூட அனுதாபத்தின் உணர்வுகளையும், இரக்கமான உணர்வுகளையும் மற்றவர்பால் பெற்றிருக்க வேண்டும். தேவன் தமது சிருஷ்டிகளுக்காக இரக்கத்தின் உணர்வுகளைப் பெற்றிருந்தார். ஆரம்பத்திலேயே தகப்பனாகிய ஆதாமின் சிருஷ்டிப்பிற்கடுத்த தம்முடைய திட்டத்தை அறிந்த நிலையிலும், ஆதாமின் கீழ்ப்படியாமைக் காரணமாய்ப் பாவங்கள் நம் மீது வரும் என்பதை அவர் அறிந்த நிலையிலும், நம்முடைய மீட்பிற்காகவும், உலகத்தினுடைய சீர்ப்பொருந்துதலுக்காகவும் மற்றும் சபைக்கான அழைப்பிற்காகவும் தேவன் ஏற்பாடு பண்ணினார். இவை யனைத்தும் நீதியின் கோரிக்கைகளுக்கும் அதிகமான காரியங்களாகும். மனுஷ ஜாதியின் அங்கத்தினர்களுக்குத் தேவனால் நீதிக்குக் குறைவான எதையும் செய்ய முடியாது. நீங்களும், நானும் பொன்னான பிரமாணத்தின்படி செயல்பட வேண்டும் என்று அவர் சொல்வதுபோன்று, அவரும் அனைத்துக் காரியங்களையும் நீதியினுடைய கொள்கைகளுக்கேற்பவே செய்வார்.
நீதி தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய் இருக்கின்றது. அவரது இராஜ்யத்தின் முழு அடித்தளமும் நீதியின் மீது போடப்பட்டுள்ளது. அவர் நீதிக்குக் குறைவானதைச் செய்வதில்லை மற்றும் இதையே அவர் ஒவ்வொரு சிருஷ்டியினிடத்திலும் எதிர்ப்பார்க்கின்றார். முழுமையான நீதிக்குக் குறைவான எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் நீதிக்கும் மேலாக, சகோதர சகோதரிகளுக்காய் ஜீவனைக் கொடுக்குமளவுக்கான அன்பினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதே சபையின் மீதான மாபெரும் பரீட்சையாகக் காணப்படுகின்றது. நீதிக்கும் அதிகமானதைத் தேவன் கேட்கவில்லையென்றாலும், ஒருவேளை நாம் நீதிக்கும் அதிகமானவைகளைச் செய்யவில்லையெனில், நம்மால் இராஜ்யத்தில் ஆளுகை செய்ய முடியாது.
3HG 734
உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனிடமிருந்து பல்வேறு இன்னல்களை நாம் பெற்றிருக்கின்றோம். தேவ சித்தத்தைச் செய்ய நாடுகிற காரியத்தில், நாம் நீதியாய் இருக்க முற்படுவதே முதலாம் காரியமாகும். இதுவே குணலட்சணத்திற்கான அஸ்திபாரமாகும். நம்முடைய முழு இருதயத்தோடு தேவனை அன்புகூருபவர்களாக மாத்திரம் இராமல், நம்மை நாம் அன்புகூருவதுபோல நம் அயலானையும் அன்புகூர வேண்டியவர்களாக இருக்கின்றோம்; மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புவோமோ, அதையே நாம் அவர்களுக்கும் செய்திட வேண்டும். இதுவே பொன்னான பிரமாணமாகும் மற்றும் நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தேவன் எதிர்ப்பார்க்கின்றார் என்றவிதத்தில் இயேசு இதை ஒரு நியமமாக முன்வைத்துள்ளார். நீங்கள் எந்தமட்டும் பொன்னான பிரமாணத்தைக் கைக்கொள்கின்றீர்கள் என்றும், எந்தமட்டும் அது உங்கள் ஜீவியத்தில் தாக்கம் கொண்டுள்ளது என்றும் தேவன் கண்ணோக்குகின்றார். எல்லா மனுஷருக்கும் நீதி செய்யும்படிக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கின்றீர்கள். அன்பிற்கு முன்னதாக நீதி வரவேண்டும். நீதி செய்த பிற்பாடு, பொன்னான பிரமாணத்தைக் கைக்கொண்ட பிற்பாடு, அன்பை குவியுங்கள். ஆனால் நீதிக்கும் குறைவான எதுவும் உங்களால் செய்யப்படக்கூடாது.
இந்தக் காரியங்கள் அனைத்தும் இல்லத்திலிருந்தே துவங்குகின்றது என்று நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகின்றேன். இறைச்சிக்கடைக்காரரிடத்திலும், ரொட்டிக்கடைக்காரரிடத்திலும் ஒரு ரூபாய் விஷயத்தில் கூட நீதியாய் நடந்துக்கொண்டிருப்பினும், தங்கள் சொந்த குடும்பத்தின் அங்கத்தினர்களுடைய விஷயத்தில் அப்படிக் காணப்படாத ஜனங்களை நான் அறிவேன். “”அது எப்படிச் சாத்தியம்?”” என்று நீங்கள் கேட்கலாம். விளக்கிக்கூறினால் உங்களுக்குப் புரியும். இது நிச்சயமாய் உண்மையே. அநேக கணவன்மார்கள் மற்றவர்களிடத்தில் நடப்பித்திடும் நீதியைக்காட்டிலும், தங்கள் மனைவிமார்களிடத்தில் நீதி நடப்பிப்பதில் குறைவுபடுகின்றனர். அநேகம் மனைவிமார்கள் மற்றவர்களிடத்தில் நடப்பித்திடும் நீதியைக்காட்டிலும், தங்கள் கணவன்மார்களிடத்தில் நீதி நடப்பிப்பதில் குறைவுபடுகின்றனர். அநேகம் பெற்றோர்கள் மற்றவர்களுடைய பிள்ளைகளைக் கையாளும் விஷயத்தில் நடப்பித்திடும் நீதியைக்காட்டிலும், தங்கள் சொந்த பிள்ளைகளிடத்தில் நீதி நடப்பிப்பதில் குறைவுபடுகின்றனர். அநேகம் பிள்ளைகள் மற்ற ஜனங்கள் விஷயத்தில் நடப்பித்திடும் நீதியைக்காட்டிலும், தங்கள் சகோதரர்களிடத்தில், சகோதரிகளிடத்தில் மற்றும் பெற்றோர்களிடத்தில் அநீதியாய் நடந்துகொள்கின்றனர். இவை அனைத்தும் தவறாகும் மற்றும் இவைகளைத் தவறு என்று அடையாளம் கண்டுகொள்ளும் நேரத்தில் நம்மைச் சரிசெய்துக்கொள்வது நல்லது. நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “”சூழ்நிலைகளானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுமே. என் கணவனை நான் நீதியோடு கையாண்டால், அதை அவர் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்வாரே அல்லது என் மனைவியை நான் நீதியாய்க் கையாண்டால் அவளுக்கு அது சாதகமாகிப்போய்விடுமே.””
இப்படித்தான் பெரிய நாடுகளின் விஷயத்திலும் காணப்படுகின்றது. அவர்கள் ஒருவரையொருவர் நம்புகிறதில்லை. “”ஜெர்மானியர்கள் நம்மை விழுங்கிவிட ஆயத்தமாயிருக்கின்றனர்” என்று பிரிட்டன் நாட்டினர் கூறுகின்றனர். “”நம்முடைய வளமையைக் கண்டு ஆங்கில வர்க்கத்தினர் பொறாமைபடுகின்றனர்; அவர்கள் நம் இடங்களைக் கைப்பற்றி, மாபெரும் பிரிட்டீஷ் சாம்ராஜ்யமாகிவிடுவர்” என்று ஜெர்மானியர்கள் கூறுகின்றனர். நீங்களும் நானும் தேவனுக்கே பொறுப்பாளிகளாக இருக்கின்றோம். மற்றவர்களைக்குறித்து கவலைப்படாதீர்கள். மற்றவர்களைத் தேவனிடத்தில் விட்டுவிடுங்கள். தேவனுடைய பிரமாணங்களுக்கு இசைவாக நீங்கள் நடந்துள்ளீர்களானால், அதனால் உங்களுக்கு மகா அசௌகரியம்/அநுகூலமற்ற நிலைமை ஏற்பட்டிருக்குமாயின் “”தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” என்று அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார் மற்றும் உங்கள் இருதயத்தில் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாக இருப்பீர்கள். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
தேவன் தெரிந்தெடுத்துக்கொண்டிருக்கின்ற ஜாதியார், நீதியான, பயபக்தியான, அன்பான மற்றும் அவர் சித்தம் செய்வதில் வாஞ்சையுள்ளதான இருதயங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஜெயங்கொள்பவர்கள் அனைவரும், நீதியினுடைய அம்சங்களை உடையவர்களாய் இருப்பார்கள் என்று நான் எண்ணுகின்றேன். நீதி தம்முடைய சிங்காசனத்திற்கு ஆதாரமாய் இருக்கின்றதெனத் தேவன் கூறுகின்றார். வேறு ஏதேனும் அஸ்திபாரத்தினைப் பெற்றிருப்பவர்களை மேசியாவின் அரியணைக்கு அவர் அனுமதிப்பார் என நீங்கள் எண்ணுகின்றீர்களா? நம்மிடத்தில் நீதியானது ஆழமாய்ப் பதியப்பெற்றிருக்கவில்லையெனில், நீங்களும், நானும் கர்த்தருடைய சிங்காசனத்தில் உட்காருவதற்கு அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுகின்றீர்களா?
பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்வது, இறுதியான காரியமா? இல்லை. அன்பான சகோதரனே அது வெறும் துவக்கமே. நீங்கள் இன்னும் தொடர்ந்து முன்னேறி, உங்களால் முடிந்தமட்டும் அன்பை, தியாக அன்பினைப் பெற்றிருக்க வேண்டும். நீதியின் பிரமாணம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்கிறதா என்றும், நீங்கள் பொன்னான பிரமாணத்தின்படிதான் செய்கின்றீர்களா என்றும் உறுதிப்படுத்திக்கொண்டு, பின்னர் அன்பினைக் கட்டியெழுப்புங்கள்/குவியுங்கள்.
3HG 735
“”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”” (மத்தேயு 7:12)
நீதித் தொடர்புடையதான இந்த அறிவுரையைப் பார்க்கிலும், தேவனுடைய அறிவுரையில் வேறு எந்தப் பாகமும் அவருடைய சபைக்கு முக்கியமாக இருந்ததில்லை. தேவன் செய்கிற எக்காரியமும் முழுமையான நீதியின் அடிப்படையினாலானதாகும் மற்றும் அவரைப் போன்றிருப்பதற்கும், அவர் பெற்றிருக்கின்றதும், அவர் நமக்கு விவரித்ததும், வெளிப்படுத்தினதுமான மகா பண்புகளை நம் குணலட்சணங்களில் வளர்த்திக்கொள்வதற்கும், அவர் தம் ஜனங்களை அழைக்கின்றார். நீதி என்பது மிகவும் சாதாரணமான காரியம் என்றும், அதை நடைமுறை வாழ்க்கையில் அனைவருமே அடையாளம் கண்டுகொண்டு பின்பற்றுகின்றனர் என்றும் அநேகர் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் இப்படியாகக் காரியம் இருப்பதில்லை. அநேகர் பின்வருமாறு கேட்பதுண்டு: “”நாங்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றோம் என்றும், நீதியினை நடப்பிப்பது என்பது இயல்பாகவே கிறிஸ்தவர்கள் அனைவருக்குமான கடமை என்றும் உங்களுக்குத் தெரியாததா என்ன? இதற்குப் பதிலாக அன்பினை வளர்த்தி, விருத்திச் செய்யும்படிக்கு எங்களுக்கு ஏன் நீங்கள் அறிவுறுத்தக்கூடாது?”” இதற்கு எங்களது பதில்: “”நீதி எப்போதுமே முந்தி வரவேண்டும்; மனுஷஜாதியிலுள்ள யார் ஒருவருக்கும், மிருக ஜீவனுக்கும்கூட நீதிக்குக் குறைவானதைச் செய்திடுவதற்கு நமக்கு உரிமை இல்லை” என்பதேயாகும்.
இந்தக் கொள்கையினை அடையாளம் கண்டுகொள்ள தவறினதே முழு உலகத்தின் பிரச்சனையாக இருக்கின்றது. நீதி தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய் இருக்கின்றது. இந்த அடிப்படையான கொள்கையின் மீதே நம் குணலட்சணத்தை நாம் கட்டியெழுப்ப விரும்புகின்றார் மற்றும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே அவர் தம் சிருஷ்டிகள் அனைத்தையும் கையாளுகின்றார். நீதியின் இக்கொள்கை அடையாளம் கண்டுகொள்ளப்படாததே, உலகம் பிரச்சனையில் காணப்படுகிறதற்கும், வேத வாக்கியங்கள் உறுதிபடுத்துவது போன்று, மகா உபத்திரவக்காலம் நம் இனத்தின் மீது வருகிறதற்கும் காரணமாயிருக்கின்றது. பொதுவான மனுக்குலத்தில் அன்புகூருவதற்கு எதுவும் இல்லையென்றாலும், ஒவ்வொரு மனுஷனுக்கும் நீதி செய்யப்பட வேண்டும். கிறிஸ்துவின் பின்னடியார்களென, நாமே யாவரிடத்திலும் நீதியினை நடப்பிக்கிற விஷயத்தில் முதன்மை வகிக்கின்றவர்களாகக் காணப்பட வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னதாக, தேவன் எகிப்திலிருந்து இஸ்ரயேலர்களை வெளியே அழைத்துவந்தார். அவர் அவர்களிடத்தில் கூறினதாவது: “”ஆபிரகாமின் சந்ததி உலகை ஆசீர்வதிக்கும் என்று நானூறு வருடங்களுக்கு முன்னதாக நான் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கைப் பண்ணியிருந்தேன். உங்களுக்கு அவ்வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படத்தக்கதாக, அதற்கு நீங்கள் ஆயத்தமாய் இருக்கின்றீர்களா?” அவர்களோ தாங்கள் ஆயத்தமாய் இருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆகையால் அவர் அவர்களைச் சீனாய் மலைக்குக் கூட்டிச்சென்றார்; அங்கு அவர் சொல்லும் எல்லாவற்றையும் தாங்கள் செய்வார்களென அவரோடு ஓர் உடன்படிக்கைக்குள் பிரவேசித்தனர். அவர் அவர்களுக்குப் பத்துக் கற்பனைகளைக் கொடுத்துவிட்டு, “”ஆபிரகாமின் சந்ததியாக, மனுக்குலத்தை ஆசீர்வதிப்பவர்களாக ஆக நீங்கள் விரும்பினால், இந்தக் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்றார்.
அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையானது நீதியின் அடிப்படையினால் மாத்திரமேயானது; அது அவர்களது சத்துருக்களை அவர்கள் அன்புகூரும்படியாகக் கேட்டிடவில்லை. அவர்கள் நீதிசெய்வதற்கேற்ப அல்லது செய்யாமல் இருப்பதற்கேற்ப, உலகத்தை ஆசீர்வதிக்கும் ஆபிரகாமின் சந்ததியாக அவர்கள் கருதப்படுவதற்குத் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள் என்ற திவ்விய தீர்மானம் காணப்படும். ஆனால், அவர்களால் நீதி செய்ய முடியவில்லை, தங்கள் அயலான் தங்களுக்குச் செய்ய வேண்டுமென்று தாங்கள் விரும்புபவற்றை, அவர்களால் அவர்களது அயலானுக்குச் செய்ய முடியவில்லை. இந்தத் தோல்வி, அவர்களது விழுந்துபோன நிலைமையினாலாகும்; காரணம் பாவம் மனுஷீக சுபாவத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது. (ரோமர் 3:20) ஆயிரத்து அறுநூறு வருடங்களாகத் தேவன் அந்த ஜனங்களிடத்தில் பொறுமை காத்தபோதிலும், நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் பலனாகிய நித்திய ஜீவனை, அவர்களில் ஒருவர்கூடப் பெற்றுக்கொள்ளவில்லை. (லேவியராகமம் 18:5; ரோமர் 10:5)
நீதியின் நியாயப்பிரமாண உடன்படிக்கையினைக் கைக்கொள்வது என்பது எளிமையான காரியம் அல்ல. யூதர்கள் கைக்கொள்ளத் தவறினார்கள் என்று நாம் காண்கின்றோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் எந்தப் பூரணமற்ற மாம்சமும் இரட்சிக்கப்படுகிறதில்லை என்று அப்போஸ்தலன் கூறியுள்ளதையும் நாம் அறிவோம். எனினும் “”நியாயப்பிரமாணத்தினை நீங்கள் கைக்கொள்ளாதது வரையிலும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கின்றதான ஆபிரகாமின் சந்ததியாராக நீங்கள் ஆகிடமுடியாது” என்று தேவன் கூறுகின்றார்.
கிறிஸ்துவின் சபையானது, ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாய் இருக்கின்றனர் என்று வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. (கலாத்தியர் 3:8,16,29) ஆகையால் அவர்கள் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ளக் கடமைப்பட்டிருந்தனர். விழுந்துபோன மாம்சத்தில் செய்ய முடியாததை, அவர்கள் செய்ய முடிகின்றவர்களாகத்தக்கதாக, தேவன் சபைக்கு ஒரு விசேஷித்த ஏற்பாடு பண்ணினார்; ஆனால் இப்படியாக அவர் நிழலான ஜனங்களாகிய யூத ஜனங்களுக்குச் செய்திடவில்லை. தம்முடைய நியாயப்பிரமாணத்தினைப் பூரணமாய்க் கைக்கொள்ள முடியாத அளவுக்கு மனுக்குலம் மிகவும் விழுந்துபோயுள்ளது என்பதை அறிந்தவராக, அவர் நம் சந்ததிக்கு உதவும்படியாக தம் குமாரனை உலகிற்கு அனுப்பிவைத்திட்டார். பூரணமானவரும், ஆதாமின் விழுந்துபோன சந்ததியினால் நோய்க்குள்ளாகாதவரும், “”பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமான”” நமது கர்த்தரால் திவ்விய நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள முடிந்தது மற்றும் கைக்கொண்டிட்டார். பின்னர்த் திவ்விய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தவராக, அவர் தம்மையே பலிசெலுத்தும் விதத்தில் கையளித்தார். அவர் பலிசெலுத்திட்டதான ஜீவனானது ஒரு புண்ணியமாகக் காணப்பட்டு, பிதாவினுடைய திட்டத்தின்படி, சுவிசேஷ யுகத்தின் முடிவில் ஆதாம் மற்றும் அவரது சந்ததியினருக்கான ஈடுபலி விலைக்கிரயமென, நமது கர்த்தரினால் கொடுத்துத் தீர்க்கப்படும்.
அந்தப் புண்ணியத்தினை நமது கர்த்தர் பிதாவிடம் (நீதியிடம்) கொடுத்துவிட்டவுடன், முழு மனுக்குலமும் அவரிடத்தில் கொடுக்கப்படுவார்கள்; உடனே அவர் பூமியின் குடிகளை ஆளும் மற்றும் ஆசீர்வதிக்கும் தம் மாபெரும் வேலையினைத் துவங்குவார். நீண்ட இடைவெளிக்கான காரணம், திட்டத்தினுடைய இன்னொரு அம்சமாகும். மனுக்குலத்தினை ஆசீர்வதிக்கும் மாபெரும் எதிர்க்கால வேலையில் கர்த்தரோடுகூடப் பங்கெடுக்கத்தக்கதாக ஒரு சபையினை உலகத்திலிருந்து தெரிந்தெடுப்பது திவ்விய சித்தமாக இருக்கின்றது. ஆகையால் சபை வகுப்பாருக்கு முன்குறிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் மறுரூபமாக்கப்படுவது வரையிலும் அவர் தம் ஆளுகையினைத் துவங்குவதில்லை.
ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியினர் சுபாவத்தின்படியானவர்களல்ல என்பதைக் கவனிப்பது நன்று. ஒரு மனுஷனாகவே எப்போதும் இயேசு காணப்பட்டிருந்திருப்பாரானால், அவரால் உலகத்தினை ஆசீர்வதித்திட முடியாது. அவரால் நல்லதொரு மனுஷீக ஆளுகையைக் கொண்டுவந்திருக்க முடியும், ஆனாலும் மரித்தோருக்கு ஜீவன் கொடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்திருக்காது. மேலும் மரணம் எனும் சாபத்தினையும், அதனோடுள்ள யாவற்றையும் அவரால் ஒருபோதும் ஒழித்துப்போட்டிருக்க முடியாது. ஆகையால் திவ்விய நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்வதற்கும் அதிகமாய் அவர் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது; நீதி ஒருபோதும் கேட்டிடாத ஏதோ ஒன்றினை, அதாவது சுயத்தைப் பலிசெலுத்தும் விதமான ஏதோ ஒன்றினை அவர் செய்ய வேண்டியிருந்தது. நியாயப்பிரமாணத்தினை அவர் கைக்கொண்டிருந்த காரியமானது, இயேசு என்றென்றுமாய் ஜீவிப்பதற்கு அவருக்கு அங்கீகாரம் வழங்கினதாய் இருந்தது; ஒருவேளை அவரது ஜீவனை அவர் ஈடுபலியெனக் கொடுக்காமல், அவர் தம் இராஜ்யத்தினை ஏற்படுத்துவாரானால், அவரால் மனுக்குலத்தினை ஆசீர்வதித்திருந்திருக்க முடியாது; ஏனெனில் பாவிகள் யாவரும், மரண ஆக்கினையின் கீழ்க் காணப்பட்டனர்.
நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொண்டதோடுகூட, இயேசு தம்முடைய சரீரத்தைத் தேவனுக்குப் பரிசுத்தமும், பிரியமுமான ஜீவபலியாக ஒப்படைத்தார் மற்றும் இந்த அவரது பலியின் புத்தியுள்ள ஊழியமானது அன்பினால் ஏவப்பட்டதாகும். பிரமாணத்தினைக் கைக்கொள்வதும், கூடுமானமட்டும் அதன் நியமங்களுக்கு/கொள்கைகளுக்கு இசைவாய் ஜீவிப்பதும் நமது முதலாம் கடமையாகும். கிறிஸ்துவினுடைய கொடியின் கீழ் இணைந்துகொண்டவர்களாகிய நாம், நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதும், அவரது அடிச்சுவடுகளில் மரணபரியந்தம் உண்மையாய் நடப்பதும் நமக்கான கடமையாகும்; இப்படியாகக் கிறிஸ்தவர்களாகிய நாம் மற்ற அனைத்து ஜனங்களைக்காட்டிலும் அதிகமாய்ச் செய்ய வேண்டும். அனைவரும் நீதியின் பொன்னான பிரமாணத்திற்குக் கடமைப்பட்டிருக்கின்றனர்; ஆனால் அன்பினால் நாம் நீதிக்கும் அதிகமான ஏதோ ஒன்றினைச் செய்ய வேண்டும்.
நம்மால் ஒருவேளை முடிந்திருக்குமானால், நாம் சிந்தையிலும், வார்த்தைகளிலும், கிரியைகளிலும் முழுமையாய் நீதியாய்க் காணப்பட்டிருப்போம். ஆனால் அப்படிச் செய்ய நம்மால் கூடாது; ஏனெனில் ஆதாமின் சந்ததியிலுள்ள எவராலும் திவ்விய பிரமாணத்தினைக் கைக்கொள்ள முடியாது. சுயநலமென்பது நமது சுபாவ சரீரத்தில் ஆழப்பதிந்துள்ளதாய் இருக்கின்றது; மற்றும் இதன் காரணமாய் நாம் முழுப்பூரணத்தினை அடைய தவறிவிடுகின்றோம். ஆனால் நாம் தவறினாலும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை; ஏனெனில் யூதர்களுக்கு இருந்ததுபோன்றதான நிலைமை நமக்கு இல்லை. (ரோமர் 8:1) இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது நம்மை அனைத்து அபூரணங்களினின்று சுத்திகரிக்கின்றதாய் இருக்கின்றது; நம்மால் செய்ய முடியாதவைகள் அனைத்தையும் கிறிஸ்துவின் இரக்கமானது மூடிவிடுகின்றதாய் இருக்கின்றது.
ஆனால் அதற்கென்று நம்மால் முடிந்தமட்டும் செய்ய முடிந்ததை நாம் செய்யாமல் இருக்கக்கூடாது. நம் இருதயங்களில் பொன்னான பிரமாணத்தினை நாம் அடையாளம் கண்டுகொள்வோமானால் அதனோடு, நம் எண்ணங்களை இசைவிற்குக் கொண்டுவர நாம் நாடுகிறவர்களாய் இருப்போம். நம் அயலான் நம்மைக்குறித்து எப்படி எண்ணம் கொள்ள வேண்டும், எப்படிப் பேசிட வேண்டும் என்று நாம் விரும்புவோமோ, அப்படியே நாமும் நம் அயலானைக் குறித்து கருணையோடு எண்ணுகிறவர்களாகவும், பேசுகிறவர்களாகவும் இருப்போம். அயலான் நம்மிடத்தில் தயவுபாராட்ட நாம் விரும்புவதுபோன்று, நாமும் அவனிடத்தில் தயவாய் நடந்துகொள்ளுவோம். இக்கொள்கையானது தினந்தோறுமாக யாவரிடத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். ஆரம்பத்தில் இது விஷயத்தில் எவ்வளவு குறைவுகள் இருப்பினும், நாம் நமது கர்த்தராம் இயேசு போன்று அதிகமதிகமாய் ஆகத்தக்கதாக, தேவனுடைய கிருபையின் கிரியையானது நம்மை அதிகமதிகமாய் மறுரூபமாக்கிட வேண்டும்.
மகிமையான அளவுகோல் நியமத்தின் அளவை அடையாவிட்டாலும், நம் இருதயங்களைப் பொறுத்தமட்டில், தேவனுடைய அருமையான குமாரனுக்கொத்த துல்லியமான சாயலானவர்களாகிட வேண்டும். அந்த மகிமையான அளவுகோலினை மாம்சத்தில் இருக்கையில் நம்மால் அடைய முடியாது. நம்முடைய குறைவுகளுக்காய் நாம் தினந்தோறும் தெய்வீக மன்னிப்புக் கேட்க அவசியமாயிருக்கும். ஆனால் இருதயத்தினை ஆராய்ந்து அறிகிறவர், நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்துகொண்டிருப்பதையும், கிருபையிலும், அறிவிலும், தெய்வீக அளவுகோல்/நியமங்கள் முன்வைத்திடும் காரியங்கள் அனைத்திலும் வளர நாம் நாடிக்கொண்டிருப்பதையும் காண்கையில் பிரியம் கொள்வார். இதுவே நமது கர்த்தர் இயேசுவின் தன்மையாகவும் இருந்தது மற்றும் இதே ஆவியினை வெளிப்படுத்தும் யாவரையும் பிதா அன்புகூருவார். பாவத்தின் கீழ்த்தரத்தினை நாம் அடையாளம் கண்டு, தேவனுடைய நீதியின் பாதையில் நடக்கத்துவங்குவது மாத்திரம் போதாது. அவரது ஆவியினை நாம் பெற்றிருப்போமானால், நாம் அவரது குணலட்சணம் குறித்துத் தியானித்து, அவரது தன்மைகளின் சாயலை அடைய நாடுகிறவர்களாய் இருப்போம். அனைவருக்கும் நன்மை செய்ய நாடுகிற யாரும், நீதிக்குக் குறைவானதைச் செய்ய ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்கும் அதிகமாகவே செய்வார்கள். ஆகையாலே “”அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.
நமது கர்த்தர் தம் சபைக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுத்தபோது அது நியாயப்பிரமாணத்தின் காரியம் அனைத்தையும் உள்ளடக்கினதாய் இருந்தது (யோவான் 13:34). யாரெல்லாம் இந்த அன்பினைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்கள் கர்த்தரானவர் பரலோக மகிமையை விட்டு வருகிறதற்கும், தம் ஜீவனை மனுக்குலத்திற்கெனப் பலிசெலுத்திடுவதற்கும் நீதியல்ல, அன்பே அவரை வழிநடத்தினது என்று உணர்ந்துகொள்ளுவார்கள். இந்தப் பலியினை ஏறெடுக்க பிதா குமாரனுக்குக் கட்டளையிடவில்லை. மற்றவர்களுக்காக ஒருவன் தன் நலன்களைப் பலிசெலுத்தும்படிக்குத் தேவன் யாருக்கும் கட்டளையிடவில்லை. நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டம் ஒன்றினைத் தேவன் பெற்றிருந்தார்; அதை நடைமுறைப்படுத்திட குமாரன் விரும்பினால், அவர் வாக்களிக்கப்பட்டுள்ள வெகுமானத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆகையால் பிதா மீதான அன்பின் காரணமாக மரணத்தை, சிலுவைபரியந்தமான மரணத்தினைச் சகித்திட நமது கர்த்தர் மிகவும் விருப்பமாயிருந்தார். பிதாவின் குணங்களை உடையவராய் இருந்தபடியால், அவர் விழுந்துபோன மனுக்குலத்தின் மீது அனுதாபம் கொண்டார். மனுக்குலத்தினை மீட்டுக்கொள்வதற்கும், விரும்புகிறவர்களையும், கீழ்ப்படிகிறவர்களையும், மீண்டும் தெய்வீகத் தயவிற்கும், ஆசீர்வாதத்திற்கும் உள்ளாகக்கொண்டுவருவதற்கும் தேவன் நோக்கம் கொண்டிருந்தார். இந்த வேலையினைச் செய்வதற்கு நமது கர்த்தர் இயேசு ஏங்கினார். இது நீதிக்கும் அதிகமாய்ச் செய்யும் காரியமாகும். தற்கால ஜீவியத்தில் வரும் பாடுகளிலும், எதிர்க்காலத்தின் மகிமை, கனம் மற்றும் அழியாமையிலும் அவரோடுகூடப் பங்கடையத்தக்கதாக, நாம் அவரது தலைமையின் கீழ் இணைந்துள்ளோமெனில், நாம் அன்பின் பிரமாணத்தினைக் கைக்கொள்வதற்கு உடன்படிக்கைப் பண்ணினவர்களாய் இருப்போம். “”அன்பு தன் பிறனுக்குத் தீமை செய்கிறதில்லை.”” “”அன்பானது, மோசேயின் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்வதையும் தாண்டி, அதிகமாய்ச் செய்யும்.”” நீதியின் அடிப்படையிலான அனைத்தையும் அன்பு உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது; அது ஒருவன் தன் அயலானுக்காய், தன் நண்பனுக்காய் மற்றும் தன் குடும்பத்திற்காய்ப் பலிசெலுத்தும்படிக்கு வழிநடத்துகின்றதாய் இருக்கும். இது நீதிக்கும் அதிகமாய்ச் செய்கிற காரியமாகும்.
அன்பிற்கு முன்னதாக நீதி வருகின்றது என்பதைத் தேவ ஜனங்களில் அநேகர் உணராதவர்களாக இருப்பதாகத் தெரிகின்றது. தேவன் நாம் நீதி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றார்; மேலும் நீதிக்கு அதிகமாய்ச் செய்வோம் என்று நாம் ஒத்துக்கொண்டிருக்கும் காரியமானது, நீதி செய்யாமல் நாம் இருக்க அனுமதிக்காது. நம்மைச் சுற்றிலும் அநீதியே உள்ளது. தங்கள் பிள்ளைகளிடத்தில் நீதியாய் நடந்துகொள்ளாத பெற்றோர்கள் இருக்கின்றனர்; இவர்கள் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில், அநேக விதங்களில் தங்களின் இஷ்டப்படியே நடந்துகொள்கின்றனர். பிள்ளைகளை உலகத்திற்குள் கொண்டுவருவதற்கும், குடும்பத்தின் நலனுக்கடுத்தவைகளுக்காக அவர்களை வேலைகளில் ஈடுபட பண்ணுவதற்கும் மாத்திரமல்லாமல், அவர்களுக்கு அடிப்படையான கல்வியைக் கொடுப்பதற்கும், வீட்டில் மத மார்க்கத்திற்கடுத்த பயிற்சியினைக் கொடுப்பதற்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் கடமைப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொருவனும் வீட்டில் தனக்கிருக்கும் உரிமைகள் யாவை என்று அறிந்தவனாகவும், மற்றவர்களுடைய உரிமைகளைக் கவனிக்கிறவனாகவும் காணப்பட வேண்டும்.
நல்ல மனுஷனுடைய பிள்ளையானவன், வீட்டைவிட்டு ஓடுகிறதில்லை; மிக அபூர்வமாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளையானவன் இப்படி ஓடுவான். அநேகம் குடும்பங்களில் பிள்ளைகள் நீதியின் கொள்கைகளின்படி நடத்தப்படுகிறதில்லை. பெரும்பாலும் வளர்ந்துவரும் மகன்கள் மற்றும் மகள்களின் உரிமைகளைப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ளத் தவறினவர்களாக, தொடர்ந்து அவர்களைக் குழந்தைகளாகவே நடத்துகின்றனர். பிள்ளைகள் தங்கள் காரியங்கள் அனைத்திலும் முடிவெடுக்க அவர்களுக்கு உதவும் அளவுக்கான பரந்த அனுதாப மனப்பான்மையினைப் பெற்றோர்கள் வளர்த்திக்கொள்ள வேண்டும். பிள்ளை முதிர்ச்சியடைகையில், அவர்கள் தானாய்ச் சிந்திப்பதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். திடீரெனச் சிந்தனைகள் எல்லையை மீறுகிறது; ஆனால் ஒருவேளை குழந்தைச் சரியாய்ப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால், சரீரம் வளர்கையில், வாலிபன் தானாய் சிந்தித்து, செயல்படுவான்; ஆனாலும் பெற்றோரின் வழிகாட்டுதலை எப்போதும் நாடிடுவான்.
தங்கள் வேலைக்காரர்களின் நியாயமான உரிமைகள் அனைத்தையும் அவர்களுக்குக் கொடுக்கத் தவறிடும் எஜமான்களும் இருக்கின்றனர். உண்மைதான் ஒருவனால், ஒவ்வொருவரும் கேட்கும் அனைத்தையும் அனைவருக்கும் கொடுக்க முடியாதுதான்; ஏனெனில் சில ஜனங்கள் எல்லாவற்றையும் கோரிக்கையாய் வைப்பார்கள் மற்றும் திருப்தியும் அடையமாட்டார்கள். ஆனால் சரியான எஜமானிடம், வேலைக்காரன் தன் உரிமைகளுக்காகக் கேட்க வேண்டிய அவசியமிராது. வேலைக்காரன் தனக்கானவைகளைப் பெற்றுக்கொள்வான் என்று எஜமானே வலியுறுத்துகின்றவராய் இருப்பார்.
தங்கள் நண்பர்களை வழிநடத்தும் நோக்கத்தினையுடைய சில ஜனங்கள் இருப்பார்கள். மற்றவர்கள் என்ன செய்ய மற்றும் எப்படிச் செய்ய வேண்டும் என்று எப்போதும் இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் தன்னடக்கம் உடையவர்களாய் இருந்து, மற்றவர்களுடைய உரிமைகளை மதிக்கின்றவர்களாய் இருத்தல் வேண்டும்; நம் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது. மற்றவர்கள் நம்மிடம் வந்து என்ன செய்ய வேண்டும் மற்றும் எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்கும்போதே, நாம் அவர்களுக்குச் சொல்வதற்கான சரியான தருணமாகும் மற்றும் சொல்வது தகுதியானது என்று நாம் எண்ணவேண்டிய தருணமுமாகும். என்னிடம் அறிவுரை கேட்க ஜனங்கள் வந்தால் நானோ: “”ஒருவேளை நான் உங்கள் நிலைமையில் இருந்திருப்பேனாகில், நான் இன்னின்ன விதமாய்ச் செய்திருப்பேன் என்று எண்ணுகின்றேன்; ஆனாலும் நீங்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும்” என்பேன். இப்படிப் பேசுகையில், நாம் உரிய நபர் மீதே பொறுப்பினை விடுபவர்களாய் இருப்போம்.
நாம் பெற்றோர்களின் கடமைகளைக் குறித்து இதுவரை பேசியிருக்கின்றோம். இப்பொழுது பிள்ளைகளின் கடமைகளைக் கவனிக்கலாம். இப்போது பிள்ளைகளாக இருக்கிற நீங்கள், வயதாகுகையில் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களோ, அதையே உங்கள் பெற்றோர்களுக்கும் இப்பொழுது செய்யுங்கள் என்று பொன்னான பிரமாணம் கூறுகின்றதாய் இருக்கின்றது. பிள்ளைகள் இந்தக் கண்ணோட்டத்தினைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் இது விஷயத்தில் கற்பிக்கப்பட்டிருப்பார்களானால் பெற்றோர் கொடுத்த அன்பு மற்றும் பராமரிப்பிற்கான நன்றியினை, பிள்ளைகள் முதிர்ச்சியடைகையில், பிற்காலங்களில் வெளிப்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில் பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை. பெற்றோர்கள் பின்வருமாறு சொல்வார்கள்: “”தவறான எவ்விஷயத்திலும் திருப்திக்கொள்ளாத அளவிற்கு என் பிள்ளைகள் சிறுபிள்ளைகளாய் இருந்தது முதற்கொண்டு, நீதியின் கொள்கைகளைத் தங்களில் ஆழமாய்ப் பதியப்பெற்றிருக்கின்றனர்.” எஜமான் குறித்துப் பார்த்திருக்கின்றோம், இப்பொழுது வேலைக்காரர் குறித்துப் பார்க்கலாம். எஜமானை வேலைக்காரன் ஸ்தானத்திலும், வேலைக்காரனை எஜமான் ஸ்தானத்திலும் நிறுத்தி இப்பொழுது கற்பனை பண்ணிப்பார்க்கலாம். தன் வேலைக்காரர்களுக்கு அல்லது தன் எஜமானுக்கு நீதியாய்ச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொருவரும் என்ன எண்ணவேண்டும்? சரியான வகை வார்த்தைகள் என்னவாக இருக்கும், சரியான வகை உணர்வுகள் என்னவாக இருக்கும்? இந்நடத்தையானது எஜமான்கள் மற்றும் வேலைக்காரர்களுக்கிடையே மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
ஆகையால் நாம் செய்ய வேண்டிய சரியான / நீதியான காரியம் என்ன என்று நாம் கவனிக்கும்போதும், சரியான / நீதியான காரியங்களைச் செய்வதற்கு நாம் விரும்பும்போதும், நாம் அனைவரோடும், நம் தொழிலில் இணைந்திருப்பவர்களோடும் கொண்டுள்ள கையாளுதல்களில் அதிகமதிகமாய் நீதியாய் நடந்துகொண்டிருப்பவர்களாய் இருப்போம். நாம் பொருட்களை வாங்குபவர்களாகவோ அல்லது விற்கிறவர்களாகவோ இருப்பினும், நீதியான கையாளுதல் ஒன்று உள்ளது. விற்கிறவர்கள் நஷ்டம் அடையும் விதத்தில் அவர்களிடமிருந்து நாம் பொருட்கள் வாங்குவது என்பது தவறான காரியமாகும். நமக்குப் பொருள்கள் விற்பவர் நியாயமான இலாபம் அடைவதில் நாம் திருப்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை நாம் பொருள்களை விற்பவர்களாய் இருப்போமானால் நாமும் நியாயமான இலாபத்தையே எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, அநியாயமாய் அல்ல. பொன்னான பிரமாணம் இக்காரியங்களை நிர்வகித்திட வேண்டும்.
சகோதரர்களுக்காய்த் தங்கள் ஜீவியங்களைக் கொடுத்திட வேண்டும் எனும் கொள்கையின் மீது சுவிசேஷயுகத்தின் முழுச்சபையும் கட்டியெழுப்பப்படுகிறது என்றாலும், தேவனுடைய அருமையான ஜனங்களில் சிலர் ஒருவரையொருவர் கையாளும் விஷயத்தில் நீதியின் கொள்கைகளை அடையாளம் கண்டுகொள்ள தவறிவிடுகிறவர்களாய் இருக்கின்றனர். எப்போதெல்லாம் பிரச்சனை எழும்புகின்றதோ, அப்போதெல்லாம் தவறு நம்முடையதா என்று காணும்படிக்கு நம் சொந்த இருதயங்களையும், நடக்கைகளையும் நாம் விசேஷமாய் ஆராய வேண்டும். இந்தப் பிரச்சனைகள் கிட்டத்தட்ட நீதியின் கொள்கைகளை மீறுவதன் விளைவானவையே ஆகும்.
நீதி தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய் இருக்கின்றது. அவரது ஏற்பாட்டிற்கேற்ப கட்டப்பட்டவர்களாகிய சபையானது, இதே கொள்கையின் மீது கட்டப்பட்டவர்களாய்க் காணப்படுகின்றனர். ஒவ்வொரு அங்கத்தினனும், தன் சொந்த உரிமைகளை விட்டுக்கொடுத்திடலாம், ஆனாலும் மற்றவர்களுடைய உரிமைகளில் குறுக்கிடக்கூடாது. மற்றவர்கள் நம்மிடத்தில் நீதியாய் நடந்துகொள்ளும் போது நாம் மிகவும் சந்தோஷம் கொள்ள வேண்டும்; ஆனாலும் நாம் எங்குமே நம் சொந்த உரிமைகளை வலியுறுத்திக்கொண்டும் இருக்கக்கூடாது. அன்பானது தன் சொந்த உரிமைகள் அநேகவற்றைப் புறக்கணிக்கின்றதாய் இருக்கும். பூமியில் நமது கர்த்தருடைய ஜீவியமானது, தியாகமான ஒன்றாகவே இருந்தது. சபையிலும் அல்லது குடும்பத்திலும் அல்லது தொழிலிலும், மற்றவர்களைச் சுரண்டி பிழைப்பதைக் காட்டிலும், தேவ சித்தத்தைச் நன்கு சிந்தித்துச் செய்திட வேண்டும்.
நாம் இப்படிச் செய்யும்போது, நீதியின் ஆவியினை வளர்த்தி விருத்தியாக்குகின்றோம். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்துகின்றது என்று நாம் காண்கின்றோமா? உதாரணத்திற்கு: தேவனுடைய நியாயப்பிரமாணமானது ஆதியில் ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டது; அந்தப் பிரமாணம் மீறப்பட்டதின் நிமித்தம் தேவனுடைய நீதியானது, மரணத்தண்டனையை அளித்தது. அவர் தம் நியாயப்பிரமாணத்தினை, தம் நீதியினைப் புறந்தள்ளிட மாட்டார், ஆனால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாயிலாக ஆசீர்வாதத்தினைக் கொண்டுவருவார். நீதியினை மீறியல்ல, மாறாக சுயத்தைப் பலிசெலுத்துவதின் வாயிலாக அன்பானது நீதியின்மீது இந்த ஜெயத்தினை அடைந்தது. இப்படியாகவே நாமும் கர்த்தருக்கடுத்த, சத்தியத்திற்கடுத்த மற்றும் சகோதரருக்கடுத்த காரியங்களுக்காக நம்மை நாம் பலிசெலுத்திட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்; மற்றும் இப்படிச் செய்வதன் மூலம், நாம் நம் நலனுக்கடுத்தவைகளைப் பாதுகாக்கின்றவர்களாகவும், கிருபையிலும், அறிவிலும், நமது தேவனுக்கொத்த குணலட்சணத்தின் சாயலிலும் வளர்கின்றவர்களாகவும் இருப்போம்.
ஆமென்!!