R5722 (page 205)
“அதிகாரி என்பவன் தனது ஜனங்களுடைய ஊழியக்காரனாய்க் காணப்பட வேண்டும் என்றும், இப்படி அதிகாரி உண்மையாய்ச் செயல்பட்டால், அவனது இராஜ்யபாரம் நீடித்திருக்கும் மற்றும் அவரது ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்றுமுள்ள விதத்தில் ஞானிகள் இராஜாவாகிய ரெகோபெயாமுக்கு வழங்கிட்ட ஆலோசனைகளை அனைவருமே ஒத்துக்கொள்வோம். இராஜா பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை – அதாவது ஒருவேளை ஸ்தானம் மாற்றப்பட்டிருப்பின் ஜனங்கள் தன் ஸ்தானத்திலும், தான் ஜனங்களுடைய ஸ்தானத்திலும் காணப்பட்டிருந்தால், அவர்கள் தனக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்ப்பாரோ, அதையே அவரும் இப்பொழுது இராஜாவாக அவர்களுக்குச் செய்திட வேண்டும் என்பதை அவர்களது ஆலோசனை சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்தவ மார்க்கத்தின் மகா தலையானவரினால் கொடுக்கப்பட்டதான பொன்னான பிரமாணமானது, கடைபிடிக்க முடியாத ஒன்று எனப் புறக்கணிக்கப்பட்டு, தள்ளப்பட்டது; ஆனால் அது கடைபிடிக்க முயற்சிக்கவேபடவில்லை என்றுதான் நாங்கள் சொல்லுவோம். அதிகாரமுடையோர் ஜனங்களைக் கையாளும் விஷயத்தில் பொன்னான பிரமாணத்தினைச் செயல்படுத்துவதற்கு எப்போதுமே அஞ்சினவர்களாய்க் காணப்படுகின்றனர். பொன்னான பிரமாணத்திற்கு ஒத்த ஏதோ சிலவற்றைச் செய்வதாக அரசியல் கட்சிகள் பறைச்சாற்றுகின்றனர், ஆனாலும் அதிகாரத்திற்கு வரும்போதும், வாய்ப்பைப் பெற்றிருந்தும், சூழ்நிலைகள் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளும் காரியத்தினைச் சாத்தியமற்றதாக்குகிறது என்று சொல்லி, அப்பிரமாணத்தினைப் பயன்படுத்த மறுத்துவிடுகின்றனர்.
எனினும் சீக்கிரத்தில் பொன்னான பிரமாணமானது உலகளவில் பிரயோகிக்கப்படும் மற்றும் இந்த ஒரேயொரு பிரமாணத்தின் வாயிலாகத்தான் மனுஷஜாதிக்கான சந்தோஷம் அடையப்படக்கூடும் என்பது நிரூபிக்கப்படும். இதுவே வேதாகமத்தின் வாக்குத்தத்தமாய்க் காணப்படுகின்றது அதாவது – மேசியாவின் இராஜ்யமானது, உலகத்திற்குப் பொன்னான பிரமாணத்தின் அடிப்படையில் ஆயிரவருடங்களில் கட்டாயமாய்ப் பாடம் புகட்டுகின்றதாய் இருக்கும் என்று வேதாகமம் கூறுகின்றதாய் இருக்கின்றது. தீர்க்கத்தரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் கர்த்தரும் பொன்னான பிரமாணம் கைக்கொள்ளப்படும் என்று சாட்சி பகருகின்றனர் – அது நித்தியமான நீதியினையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவந்திடும்; மேலும் தேவனுடைய பிரமாணத்திற்கு இசைவாய் வருபவர்கள் மீது தேவ தயவு காணப்பட்டு, இறுதியில் அவர்கள் பாவம், வியாதி, வலி, மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகமும் மகிமையான மனுஷீக பூரணத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள்; பொன்னான பிரமாணத்தின்படி செயல்பட மறுப்பவர்கள் அழிக்கப்படுவார்கள்.”